புதன், 15 டிசம்பர், 2021

mobile போனுக்கு ஏன் மொபைல் என்று கூறுகிறோம்?

 

ஜெயக்குமார் சந்திரசேகர் :

1. விஷ்ணுவுக்கு ஆதிசேஷன் என்ற 5 தலை நாகம் என்ற கற்பனை உருவத்தை படுக்கையாக வைத்துள்ளனர். அதே போன்று சிவாலயங்களில் லிங்கத்திற்கு 5 தலை நாகம் கவசம் சாத்தப்படுகிறது. இது ஏன்? 5 தலை இல்லாமல் ஒரு தலை போதாதா?

# பத்து தலை, பன்னிரு கரங்கள், பதினெட்டு கண்கள் என்று மிகையாக உருவகம் செய்வதின் மூலம் ஒரு பலசாலி, தேவதை, கடவுள் ஆகிய எவருக்கும் ஒரு மிக வலிமையான சித்தரிப்புக்  கிடைக்கிறது.  அவ்வாறே ஆதிசேஷன் ஐந்து தலையோடு விளங்கி தன் அரிய  ஆற்றலை நமக்கு உணர்த்துகிறார்.

& சில புராணங்கள் ஆதிசேடனுக்கு ஆயிரம் நாவுகள் / ஆயிரம் தலைகள் என்றும், சில புராணங்கள் ஆதிசேடனுக்கு ஏழு தலைகள் என்றும் கூறுகின்றன. எனக்குத் தெரிந்து இரண்டு தலை பாம்பு உண்டு (காணொளியில் காணவும்) இரண்டு தலை சாத்தியம் என்றால், ஐந்து தலைகள் கூட சாத்தியமே. ஆனால், நம்பத் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை! 


2. "சுழன்றும் ஏர்பின்னது உலகம்" என்று வள்ளுவர் கூறுகிறார். ஆகவே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்ற உண்மை கல்லிலேயோக்கு முன்பே தமிழர்களுக்குத் தெரியும் எனக்கொள்ளலாமா? 

# இதை யாரோ ஒருவர் பலமாக, பெருமையுடன் சொல்லி இருப்பார் என்பது உறுதி.

& 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்னும் சொற்றொடரில் கூறப்பட்டுள்ள 'சுழன்றும்' எனும் சொல் - நாம் நினைப்பது போல உலக சுழற்சி பற்றியது அல்ல. 'கடினமானதாக இருந்தாலும் ' என்றுதான் பொருள். 

சுழன்றும் – ஏர்பிடித்து உழும் தொழில் மற்ற தொழில்களைவிட கடினமாயினும்
ஏர்ப்பின்னது உலகம் – உணவின்றி உலகில்லையாதலில், ஏர்பிடிப்போர் பின்செல்லும் இவ்வுலகு 
அதனால் உழந்தும் – அதனாலே கடினமானதாகவே இருந்தாலும்
உழவே தலை – உழவுத் தொழிலே எல்லாதொழிகளிலும் முதன்மையானது.

3. mobile போனுக்கு ஏன் மொபைல் என்று கூறுகிறோம்? அது தன்னைத்தானே நடப்பதில்லையே. அதை நாம் அல்லவா கையில் கொண்டு செல்கிறோம். 

# நாம் மொபைல் ஆக இருப்பினும்  எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய தொலைபேசி என்பதால் பெயர் பொருத்தமாகவே இருக்கிறது.

& automobile கூடத்தான் தானே எங்கும் நகர்ந்து செல்வதில்லை. அதனால், அதற்கு 'ஓட்டோ மொபைல் ' (ஓட்டினால்தான் ஓடும் ) என்று பெயர் மாற்றம் செய்துவிடுவோமா! 

4. Hurricane, Cyclone, Tornado, வித்யாசம் என்ன?

# சூறைக்காற்று, சுழிக்காற்று, ஊழிக்காற்று ஆகியவையே இப்படி ஆங்கிலத்தில் குறிக்கப் படுகின்றன. நிகழும் இடத்தின் தட்பவெப்பம், காற்றின் வேகம், திசை, அழிவின் பரிமாணம் இவற்றில் வேறுபாடு உண்டு.  விவரமாக கூகிளில் பார்த்து அறியவும்.

& Cyclone நாட்டின் கிழக்குப் பகுதியில், கடலிலும் / கடற்கரை பகுதிகளிலும் வீசுகின்ற பலத்த காற்று. இது காற்றழுத்த தாழ்வு நிலையால், மழைக்காலங்களில் ஏற்படுவதால், பலத்த காற்று, பலத்த மழை, அதன் காரணமாக வெள்ள அபாயங்கள் உண்டு. cyclone வந்தால், வைப்புநிதியிலிருந்து சிறு தொகை - (எங்கள் தொழிலகத்தில்) உதவித் தொகையாக கிடைக்கும் ! 

இதே cyclone நாட்டின் மேற்குப் பகுதி கடல் / கடல் சார்ந்த இடங்களில் உருவானால், அதற்கு hurricane என்று பெயர் என்று கூறுகிறார் கூகிள் ஆண்டவர். 

Tornado என்பது cyclone / hurricane என்பதன் ஒரு சிறு அங்கம். ஆனால், நிலப்பகுதிகளில் மட்டுமே உருவாகி, சில நிமிடங்கள் மட்டும் ஆட்டம் போடுகிற சுழல் காற்று. 

= = = = =

எங்கள் கேள்விகள் :

வானுறை தெய்வங்களில், தமிழ் நாட்டு பகுதிகளை கவனித்து, அந்தப் பகுதிக்கான நிகழ்வுகளை நிர்வகிக்கும் கடவுள் ஒருவருக்கு, ஒருநாள் விபரீத யோசனை ஒன்று உதித்தது. தமிழகத்தில் ஆங்காங்கே ஒலிக்கின்ற சில சினிமா பாடல்களைக் கேட்டு (நல்ல வேளை - அவர் முதல் வரியை மட்டும் கேட்டார்,) அதன்படி  நடக்க ஏற்பாடு செய்தார். 

அப்படி அவர் காதில் விழுந்த சில முதல் வரிகள் : 

1) அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் (கேட்டவர் 'திரிஷா')

2) கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் (வேண்டுகோள் விடுத்தவர் எஸ் எஸ் ஆர்)

இந்த வேண்டுதல்களை, கேட்டவர்களுக்கு உடனே கடவுள் அளித்துவிட்டார் என்றால், என்ன ஆகும்? (கவனிக்கவும்: அவர் பாடலின் மற்ற வரிகளைக் கேட்காமல் முதல் வரியை மட்டும் OK செய்துவிட்டார். ) 

உங்கள் கற்பனையில், அதற்குப் பின், என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கும் என்று பட்டியலிடுங்கள். 

படம் பார்த்துக் கருத்து எழுதுங்க :

1)

2) 

3) 


= = = = =

மின்நிலா 82 ஆவது வார இதழ் படிக்க சுட்டி இது 

QR Code :   


= = = = =

125 கருத்துகள்:

 1. எல்லோருக்கும் இனியகாலை வணக்கம்

  நடந்து கொண்டே பேச இயலும்...எங்கு சென்றாலும் (நெட்வொர்க் இருந்தால் பேச முடியும் என்பதால்தான் . அதுவும் நம்ம கூடவே வருமே அதனால் மொபைல்..ஆசிரியர்களின் கருத்து பார்க்க வேண்டும் இனிதான்.

  கருத்து எபியில் மட்டும் போக மாட்டேன் என்கிறது எவ்வளவு முயற்சி செய்தும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேற்றைய பதிவுக்கு துளசியின் கருத்து போட பல முயற்சிகள் செய்து செய்து போக மறுத்தது...இங்கும் பதிவு செய்ய முடியவில்லை இப்போதுதான் சென்றிருக்கிறது.

   கீதா

   நீக்கு
  2. வாங்க கீதா.. வணக்கம். ஏன் அப்படி தகராறு செய்கிறது என்று புரியவில்லை. எனக்கும் அப்படி சில தளங்களிலும், இங்கும் வந்ததுண்டு. ரெப்ரெஷ் செய்தாலோ, தளத்தை மூடி மறுபடி திறந்தாலோ சரியாகி விடும்.

   நீக்கு
  3. எங்கு சென்றாலும் செருப்பு, உடுத்தியிருக்கும் துணிகூட நம்மோடுதான் வரும். என்னா பதில் சொல்றாங்க நம்ம கீதா ரங்கன்க்கா

   நீக்கு
  4. ஸ்ரீராம் நான் மீண்டும் மோடம் ரிஃப்ரெஷ் செய்து கணினியை மூடிவிட்டு மீண்டும் திறந்து போட்டதும் கருத்து பதிந்தது.

   கீதா

   நீக்கு
  5. ஹாஹாஹா நெல்லை அது நம்மோடு ஒட்டி வருவது...இதெல்லாம் எக்ஸ்ற்றா ஃபிட்டிங்க்!!

   மொபைல் அயர்ன் வண்டி, மொபைல் காய்கறி வண்டி, மொபைல் கழிவறை, மொபைல் உணவகம்...அது போல!!!!!!!

   கீதா

   நீக்கு
  6. எனக்கும் அப்படி சில தளங்களிலும், இங்கும் வந்ததுண்டு. ரெப்ரெஷ் செய்தாலோ, தளத்தை மூடி மறுபடி திறந்தாலோ சரியாகி விடும்.

   நீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நாட்களாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் பரிபூரண ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 4. //ஆதிசேஷன் என்ற 5 தலை நாகம் என்ற கற்பனை உருவத்தை// இது கற்பனை அல்ல. யோகத்தின் குறியீடு. ஐந்து புலன்களையும் அடக்கி ஆள்வதைக் குறிப்பது. விவரித்தால் பெரிசாக ஆகிவிடும்.பின்னர் பார்க்கலாம். இதே போல் திரிசூலத்தின் மூன்றிற்கும் உள்ளார்ந்த பொருள் உண்டு.

  பதிலளிநீக்கு
 5. Hurricane, Cyclone, Tornado நல்ல விளக்கம். எஸ்.எஸ்.ஆர் கேட்டது அன்றாடம் நடக்கும் ஒன்றே. இறைவன் எந்த உருவிலாவது தினம் தினம் நம் எல்லோருக்கும் காட்சி அளித்துக் கொண்டே இருக்கிறார். அது ஆட்டோ ஓட்டுநராகவோ, அக்கம்பக்கத்தினராகவோ, முகம் தெரியா அந்நியராகவோ இருக்கக் கூடும்.

  பதிலளிநீக்கு
 6. 1.இன்னிக்கு தனுர் மாத வழிபாடுகள் எல்லாக் கோயில்களிலும் ஆரம்பம் ஆகின்றது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஏன் மார்கழி மாதம் மட்டும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன?
  2. சின்ன வயசில் மார்கழி மாதம் கோயில்களுக்குச் சென்றதுண்டா?
  3. பெரும்பாலும் உண்ணக்கூடிய பிரசாதங்கள் பெருமாள் கோயில், ஆஞ்சநேயர் கோயில் மற்றும் பிள்ளையார் கோயில்களில் மட்டுமே ஏன் கொடுக்கிறார்கள்? எவ்வளவு பெரிய சிவன் கோயிலாக இருந்தாலும் அங்கே விபூதி, குங்குமத்தைத் தவிர்த்துப் பிரசாதம்னு ஏன் பக்தர்களுக்கு விநியோகிப்பதில்லை?
  இப்போதைக்கு இது மட்டும். பின்னர் வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீசா மேடம் அதிகாலையில் எழுந்து மார்கழியில் சிவன் கோவிலுக்குப் போனதே இல்லை போலிருக்கு.

   காலையிலேயே போய், திருவெம்பாவை சேவித்து பொங்கல் வாங்கி வந்திருந்தால் (மார்கழில) இந்தக் கேள்வி கேட்டிருப்பாரா?

   அது போகட்டும்.. பொடி நடையா திருவானைக்கா கோவிலுக்குச் சென்று பிரசாதம் பெற்று வரவும். அதுக்காக, காலைல எழுந்து எபிக்கு வந்து கருத்துகள் போட்டுட்டு சமையல் பண்ணி அப்புறம் போலாம்னு நினைத்தால் அஸ்வின்ஸ் கடைலதான் பொங்கல் கிடைக்கும். சொல்லிட்டேன்

   நீக்கு
  2. ம்ஹூம், மீனாக்ஷி கோயிலிலோ, இம்மையில் நன்மை தருவார் கோயிலிலோ எந்தப் பிரசாதமும் கொடுத்ததில்லை. மேலமாசி/வடக்கு மாசி வீதி நேரு பிள்ளையார், வடக்குக் கிருஷ்ணன் கோயில், மதனகோபால சாமி கோயில் ஆகிய விஷ்ணு கோயில்களிலேயே பிரசாதங்கள். இதற்குக் காரணம் உண்டு. ஆனால் நான் சொல்ல மாட்டேனே! இஃகி,இஃகி,இஃகி!

   நீக்கு
  3. நான் திருவாடானையில் சிவன் கோவிலுக்கு காலை 5 மணிக்குப் போய் (மார்கழியில்) பொங்கல் பிரசாதம் வாங்கிவந்திருக்கிறேன். என் சகோதரர்கள் தூங்கிக்கிட்டிருப்பாங்க. அப்போ என் வயது 4-5 இருக்கலாம். இப்போ அதை நினைத்து ஆச்சர்யப்பட்டுக்கொள்கிறேன்.

   நீக்கு
  4. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்குகிறார்கள் போலிருக்கிறதே?

   நீக்கு
  5. மதுரையில் எனக்குத் தெரிந்து நான் அறிந்தவரை கோயில்பிரசாதம்னு கொடுத்தது இல்லை. லட்டு எல்லாம் இப்போ வந்தது. நான் அறிந்த வரை பிரசாத ஸ்டாலே என் கல்யாணத்துக்கு அப்புறமாத் தான் மதுரையில் வந்தது. மத்தியான வேளைகளில் ஆதரவற்றோருக்கும்/முதியோருக்கும் கல்யாண மண்டபத்தில் வைத்து (பழைய கல்யாண மண்டபம்) பிரசாதம் கொடுப்பார்கள். பார்த்திருக்கேன். அதுக்கும் முன்னால் உண்டக்கட்டி என்னும் சாத உருண்டை மட்டும் கொடுப்பார்களாம்.

   நீக்கு
  6. நமக்குப் பிடிக்குதோ இல்லையோ... கோவிலில் பிரசாத ஸ்டால் இருப்பது மனதுக்கு சந்தோஷத்தை விளைவிக்கும்.

   சிங்கப்பெருமாள் கோவிலில் தோசை மிளகாய்ப்பொடி ரொம்ப நல்லா இருக்குமாம். ஆனால் 9 முறை வாரா வாரம் சென்றபோதும், மனைவி, அங்க வாங்கக்கூடாது, வெளியில் எங்கும் சாப்பிடக்கூடாது என்று சொல்லி வீட்டுக்குக் கூட்டிவந்துவிட்டாள்.

   நல்ல குவாலிட்டியாக சுத்தமான பிரசாத கடைகள் இருப்பதை வரவேற்கலாம்.

   நீக்கு
  7. இந்த மாதிரி மி.பொ. தோசைனு கொடுப்பது பிரசாதமே அல்ல. பிரசாதம்னா நாம வாங்கி வயிறு நிரம்பச் சாப்பிடுவதும் அல்ல. கொஞ்சம் போல் ஒரு துளி கிடைத்ததுன்னா அதுவும் ஆண்டவன் சந்நிதியில் இருந்து வந்தால் அது தான் பிரசாதம். காஞ்சி வரதர் கோயிலில் காலை நேரக் கால வழிபாடு முடிந்ததும் சந்நிதிக்கு வெளியே பட்டாசாரியார் இட்லியைக் கொஞ்சம் கொஞ்சமாக விண்டு எல்லோர் கைகளிலும் போட்டார். அது பிரசாதம். அந்த ருசியும் தனி. அதுவே ஸ்டால்களில் மி.பொ. இட்லி கொடுத்தால் அது பிரசாதம் அல்ல.

   நீக்கு
 7. இதுவரை யாரும் பதிவை முழுதாகப் படிக்காத்தால் நான் 1 எனப் போட்டுத் தொடங்கிவைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் முழுசாப் படிச்சேன். 51 எனப் போடுகிறேன். இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க?

   நீக்கு
  2. //நான் முழுசாப் படிச்சேன். 51 எனப் போடுகிறேன்.// இது கொஞ்சம் ஓவராக இல்லை?

   நீக்கு
  3. அது என்ன? 51 என்றால் கருவறை நிறமா? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

   நீக்கு
  4. //இது கொஞ்சம் ஓவராக இல்லை?// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நம்பர் போட்டால் ஓவரா? 50க்குள் தான் போடணுமானு கூடவே +1 சேர்த்தேன். அது டப்பா? :))))) நம்ம அதிரடி நினைவு வந்துடுச்சு.

   நீக்கு
  5. கேஜிஜி சார்..நிமிஷத்துக்கு ஒன்று மாற்றுகிறார்.

   காலையில் முழுவதும் படித்திருந்தால் 50க்குள் ஒரு நம்பர் பின்னூட்டத்தில் போடுங்க என்று சொல்லியிருந்தார்.

   அப்புறம், காக்காய்க்கு என்ன நிறம் என்று கேட்டிருந்தார். (கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு பாட்டில், கருவறையின் நிறம் கருப்பு என்று சயண்டிஸ்ட் கண்டுபிடித்து பாடல் வரியில் போட்டிருந்தார்)

   இப்போ புதுசா ஏதேனும் மாத்தியிருக்காரா என்பது தெரியலை.

   நீக்கு
  6. ஓஹோ! இரண்டு தரம் மாத்தினாரா? இப்போ வெண்ணையின் நிறம் கேட்டிருக்கார். பாலின் நிறம் என்னமோ அதான் வெண்ணையின் நிறம்.

   நீக்கு
  7. கேள்விகளா !! நான் கேட்டேனா !! எங்கே ??

   நீக்கு
 8. பதில்களுக்கு நன்றி. 

  //கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்.// பிறந்திருக்கிறார் பல முறை. கடைசியாக "கடவுளும் கந்தசாமி பிள்ளையும்" என்ற புதுமைப்பித்தன் சிறுகதையிலும். 

  படக்கருத்துக்கள்:

  1. பல் போனால் சொல் போகும். 
  2. குழந்தை என்றால் எந்த மிருகமும் அடங்கும். மாடு உட்பட. 
  3. செல்வதற்கு ஒரு வழி இருந்தால் திறப்பதற்கு ஒரு வழியும் தானே வரும்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கடைசியாக "கடவுளும் கந்தசாமி பிள்ளையும்" என்ற புதுமைப்பித்தன் சிறுகதையிலும். // புதுமைப்பித்தனின் இந்தக் கதைக்குப் பின்னர் கடவுள் எங்குமே யாருக்குமே மனிதனாகவே தோன்றவில்லையா? ம்ஹூம், ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இல்லை.

   நீக்கு
  2. மன்னிக்கவும். நீங்கள் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கதையைப் படிக்கவில்லை என்று தோன்றுகிறது. படித்துப் பாருங்கள்.


   https://www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/may/20/kadavulum-kandhasamy-pillaiyum-puthumaippitthan-3417343.

   மனிதன் மற்றவர்களுக்கு நன்மை செய்யும்போது தான் கடவுளாகத் தெரிகிறான். ஆனால் கேள்வி அதுவல்ல. கடவுள் மனிதனாக அவதரித்து இருப்பது போன்றது. மனித செயல்கள் யாவற்றையும் செய்வது பற்றியது.

   நீக்கு
  3. புதுமைப்பித்தன் சிறுகதைகள் முக்கியமாய்க் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் பலமுறை படிச்சிருக்கேன். பல ஆண்டுகள் முன்னர் ஏதோ ஒரு தீபாவளி மலரில் கூடப்போட்டிருந்தார்கள். "கடைசியாக" என்று குறிப்பிட்டிருந்ததால் தான் அதன் பின்னரும் நிஜ வாழ்விலேயும் கடவுள் தோன்றி இருக்கார்னு சொன்னேன். உருவங்கள் மாறுகின்றன என்று ஓர் தமிழ்ப் படமே வந்திருக்கு இந்தக் கருத்தில். தினம் தினம் கடவுள் தோன்றிக்கொண்டிருக்கையில் "கடைசியாக" எனச் சொன்னது தான் எனக்கு ஏற்பு இல்லை.

   நீக்கு
  4. 'உருவங்கள் மாறலாம்.'
   அதற்குப் பின் சமீப காலத்தில் : 'அறை எண் 305ல் கடவுள்'

   நீக்கு
 9. இத்தனை பெரிய திமிலோடு இருக்கும் காளைக்கு அருகே பயமில்லாமல் செல்லும் குழந்தை!
  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முதல் படத்திற்குக் கொடுத்த கருத்துரை எங்கே போச்சு?
  என்ன தான் செல்லங்களை வளர்த்திருந்தாலும் இப்படி எல்லாம் கட்டிக்கொள்ளும் அளவுக்கு நான் இருந்ததில்லை. ஹிஹிஹி, ஏற்கெனவே தோலில் அலர்ஜி உண்டு எனக்கு. இது வேறே! :)))) குளிப்பாட்டும் சமயம் மட்டும் நம்மவர் அதைக் குளிப்பாட்ட வேண்டித் தொட்டுக் கொஞ்சி எல்லாம் பண்ணுவார். இல்லைனா காலடியில் உட்காருமே தவிர்த்து மேலே வந்தெல்லாம் உராய்ந்தது இல்லை.

  பதிலளிநீக்கு
 10. அது என்ன? தரையில் பாப்பா போல் மிதியடியா? ஆனால் தரையில் தெரியும் பாப்பாவுக்கு இரு கொம்புகள் தெரிகின்றனவே! எவ்வளவு பெரிய கைப்பிடி? பாப்பாவின் வசதிக்காகவா? தரையில் தெரிவது பாப்பாவின் நிழல் அல்ல. பின்னர் வேறே என்ன அது? போட்டோ ஷாப்பிங்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. twin குழந்தைகளின் சேஷ்டைகள் ! கைப்பிடி எட்டவில்லை என்பதால், ஒரு குழாயை lever extension ஆக பயன்படுத்தி, மற்றொரு குழந்தை மீது நின்று, கதவைத் திறக்க முயற்சிக்கின்றது ஒரு குழந்தை.

   நீக்கு
  2. ஹையோ! பாப்பாவையே இன்னொரு பாப்பா மிதிக்கிறாளா? பாவம், வலிக்குமே! :(((

   நீக்கு
  3. கதவைத் திறக்க, தன்னாலான ஒத்துழைப்பு தரும் மாற்றக் குழந்தை!

   நீக்கு
 11. 1. விஷ்ணுவுக்கு ஆதிசேஷன் என்ற 5 தலை நாகம் என்ற கற்பனை உருவத்தை படுக்கையாக வைத்துள்ளனர். அதே போன்று சிவாலயங்களில் லிங்கத்திற்கு 5 தலை நாகம் கவசம் சாத்தப்படுகிறது. இது ஏன்? 5 தலை இல்லாமல் ஒரு தலை போதாதா?//

  ஜெகே அண்ணா நிஜமாகவே இரண்டு தலை நாகம்/பாம்பு உண்டே. கஞ்சாயின்ட் ட்வின்ஸ்/ சியாமிஸ் ரெட்டையர் போல...,ஆனால் அபூர்வம். மூன்று தலை, ஐந்து தலை கூட இருந்திருக்கிறது. கேரளத்தில் கூட மலைப்பகுதியில் இப்படி ஒன்றைக் கண்டதாகப் போட்டோவுடன் செய்தி வந்ததே.

  கீதா

  பதிலளிநீக்கு
 12. சுழன்றுசுழன்று எத்தொழிலைச் செய்து வருபவராக இருந்தாலும், உலகத்தார் உணவுக்கு உழவரின் பின்னால்தான் செல்லவேண்டும்... உழவே தலை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைக்கும் விளக்கத்திற்கும் நன்றி.

   நீக்கு
  2. "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்" இங்கு அய்யன் உலகம் என்று குறிப்பிடுவது உலகத்தில் வாழும் மனிதர்களைத் தான். அல்லாது பூமியை அல்ல. பூமி என்பது Earth. உலகம் என்பது world and people. இது போன்ற விரிவான விளக்கம் பதிலாக எதிர்பார்த்தேன்.


   Jayakumar

   நீக்கு
  3. பூமி / புவி ஆகிய சொற்கள் குறளில் இல்லை...!

   புத்தேள் உலகம் உண்டு...!!

   நீக்கு
  4. சுழன்றுசுழன்று எத்தொழிலைச் செய்து வருபவராக இருந்தாலும், உலகத்தார் உணவுக்கு உழவரின் பின்னால்தான் செல்லவேண்டும்... உழவே தலை...//

   அதே டிடி!!

   கீதா

   நீக்கு
  5. பூமி என்பது Earth. உலகம் என்பது world and people. //

   அருமையான விளக்கம்.

   கீதா

   நீக்கு
 13. // அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் //

  பஞ்சம் பசி போக்க வேண்டும்...
  இந்த பாலைவனம் பூக்க வேண்டும்...
  சாந்தி சாந்தி என்ற சங்கீதம் -
  சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்...ம்ம்...

  போனவை அட போகட்டும்...
  வந்தவை இனி வாழட்டும்...
  தேசத்தின் எல்லை கோடுகள்
  அவை தீரட்டும்...
  தெய்வங்கள் இந்த மண்ணிலே
  வந்து வாழட்டும்...!?

  புத்தம் புது பூமி வேண்டும்
  நித்தம் ஒரு வானம் வேண்டும்
  தங்க மழை பெய்ய வேண்டும்
  தமிழில் குயில் பாட வேண்டும்...

  பதிலளிநீக்கு
 14. //கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்...//

  கொடுப்பவன் தானே மேல் ஜாதி...
  கொடுக்காதவனே கீழ் ஜாதி...
  படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான் -
  பாழாய்ப்போன இந்த பூமியிலே...

  நடப்பது யாவும் விதிப்படி என்றால்
  வேதனை எப்படி தீரும்...?
  உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் - உலகம் உருப்படியாகும்...
  உலகம் உருப்படியாகும்

  கடவுள் செய்த பாவம் - இங்கு காணும் துன்பம் யாவும்...
  என்ன மனமோ...? {மதமோ...!} என்ன குணமோ...? {பிணமோ...!}
  இந்த மனிதன் கொண்ட கோலம் -
  மனிதன் கொண்ட கோலம்...

  பதிலளிநீக்கு
 15. ஹாவ். D D பாட்டுகளாலேயே பின்னூட்டம் போட்டுவிட்டார். சாதாரணமாக ஓரிரு வரிகளில் முடித்துவிடுவார்.

  "சுழன்றும்" கேள்வி கேட்டது அவருடைய பதிலை எதிர்பார்த்துத்தான். நன்றி 

  பதிலளிநீக்கு
 16. பதில்கள்
  1. அப்போ காலை / மாலை வணக்கம் என்று அவர் சொன்னால், நாம் பதிலுக்கு, மாலை / காலை வணக்கம் என்று சொல்லவேண்டுமா!!

   நீக்கு
  2. அதுக்குத் தானே பொதுவாகக் காலை/மாலை வணக்கம்னு சொல்லிடறேன். காலை இந்தியா மற்றக் கிழக்கு நாடுகள். மாலை யு.எஸ். மற்ற மேற்கு நாடுகள்.

   நீக்கு
 17. //விஷ்ணுவுக்கு ஆதிசேஷன் என்ற 5 தலை நாகம் என்ற கற்பனை உருவத்தை படுக்கையாக வைத்துள்ளனர்.//நம் புராண கதைகள், பாத்திரங்கள் எல்லாம் குறியீடுகள். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிஜமான தேடல் இருந்தால் விடை கிடைக்கும். மற்றவர்கள் என்னதான் விளக்கம் அளித்தாலும் கன்வின்சிங்காக விடை கிடைக்காது.

  பதிலளிநீக்கு
 18. என்னால் முதல் படத்தில் இருப்பது போல் மிருகங்களை கொஞ்சுவும் முடியாது, இரண்டாவது படத்தில் இருப்பது போல் தைரியமாக இத்தனை அருகில் செல்லவும் முடியாது.

  பதிலளிநீக்கு
 19. புராண கால கிருஷ்ணன் தோழர்களின் தோள் மீது ஏறி வெண்ணெய் திருடினானாம். நவீன கிருஷ்ணன் அல்லது கிருஷ்ணி உடன்பிறப்பின் மீது ஏறி பூட்டியிருக்கும் கதவை திறக்க முற்படுகிறானோ(ளோ)?

  பதிலளிநீக்கு
 20. அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் கிடைத்தால் என்ன இது? கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்க ஆள் இல்லை என்போம்.

  பரசுராமன்,ராமன்,கிருஷ்ணன் எல்லாம் கடவுள் மனிதனாக பிறந்ததுதானே??

  பதிலளிநீக்கு
 21. 1) அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் (கேட்டவர் 'திரிஷா')

  2) கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் (வேண்டுகோள் விடுத்தவர் எஸ் எஸ் ஆர்)//

  கடவுள் முதலில் 2 வது பாடலை முதலாகக் கேட்டு பிறந்துவிடுகிறார். அப்புறம் முதல் பாடல் கேட்டதும் யாருமே இருக்கக் கூடாதுனா நாணும் இருக்க முடியாதே இவ்வுலகில் னு கேட்டவரை விட்டுவிட்டு இருப்பிடம் சென்று விடுகிறார்!! மனுஷனா பிறந்தா கஷ்டமோ கஷ்டம்னு அவருக்குத் தெரியாதா என்ன!!! ஸோ ஜாலின்னு முதல் பாடல் கேட்டதும் ஓடிவிட்டார் எஸ்கேப் னு!!!!

  கீதா

  பதிலளிநீக்கு

 22. Hurricane vs. Tornado: What's the difference?


  https://www.youtube.com/watch?v=W0LskBe_QfA

  The World's Deadliest Tornadoes

  https://www.youtube.com/watch?v=jmPPsoyEeIk

  பதிலளிநீக்கு
 23. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 24. நேற்றைய் ஏணிமலைக் கதை இனி வரும் வாரங்களில் எப்படிப் போகுமோ - தெரியாது..

  நேற்றைய பதிவின் தொடர்பாக கருத்துரை ஒன்று மனதில் தோன்றியது... இங்கே பதிவு செய்வதற்குள் இணைய இணைப்பு விடுபட்டுப் போனது..

  அதனை - எனது தளத்தில் வெளியிட்டுள்ளேன்..

  அன்புடன் வருக.. ஆதரவு தருக..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா உங்க கவிதை அட்டகாசம் போங்க!! ஏணிமலை 5 பார்ட்டும் ஒரே கவிதைல!

   கீதா

   நீக்கு
  2. படித்தேன், முழுவதும் படித்தேன்,
   ஒரு படித் தேன் கவிதையில் குடித்தேன்!
   சொன்னேன், அங்கே,
   வந்தேன் இங்கே!!

   நீக்கு
  3. // துரை அண்ணா உங்க கவிதை அட்டகாசம் போங்க!! ஏணிமலை 5 பார்ட்டும் ஒரே கவிதைல!// ஓ ! துரை சார்தான் எழுதுகிறாரா !! இப்போ எல்லாம் தெளிவாகிவிட்டது. நன்றி.

   நீக்கு
 25. படம் 1 - காலைல 50க்குள்ள ஒரு நம்பர் நு ஒரு கேள்வி கேட்டு நான் யோசிக்கறதுக்குள்ள இப்ப வேற கேள்வி கேட்டா நான் கன்ஃப்யூஸ் ஆகி என் தலைய சொறிஞ்சுக்க மாட்டேன்?!

  கீதா

  பதிலளிநீக்கு
 26. படம் 1 - என்ன கலர்? (என் ன்னு சொல்றப்ப என் நாக்கு மேல டச் பண்ணுது ஒழுங்காத்தானே உச்சரிக்கிறேன் இல்ல!! சொல்லுங்க என்ன கலர்?

  கருப்பு

  தப்பு.

  அப்ப நீயே சொல்லு.

  நான் அந்த பெயர் சொல்ல மாட்டேன் நான் அதோட சண்டை. மரத்துல எனக்கு இடம் கொடுக்க மாட்டேனுடுச்சு. கா விட்டுருக்கேன்.

  https://www.youtube.com/watch?v=_m5xge6lOVY

  கலர் மட்டும் சொல்லு பெயர் சொல்ல வேண்டாம்

  சிலது மட்டும் தான் கருப்பு. மத்தது எல்லாம் என் நிறம்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 27. படம் 2 - ஹூம் போயும் போயும் காக்கா கலர் எல்லாம் கேக்கறாங்களே ன்னு இந்த மாடு சொல்லுது! பாருங்க - பாப்பா

  கீதா

  பதிலளிநீக்கு
 28. படம் 3 - காக்கா? அப்படினா என்ன? எனக்கு கக்காதான் தெரியும். இருங்க ரூமுக்குள்ள போய் கம்ப்யூட்டர் தொறந்து காக்கா ன்னா என்னன்னு பாத்துட்டு வந்து சொல்றேன். நான் சொன்னா இவளும் சொன்னா மாதிரிதான்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 29. ஆதிசேஷனா, ஆதிசேடனா?

  ஹாஹ்ஹாஹா. என்று நழுவாமல் விளக்கமான பதிலை நெல்லஒ தான் சொல்ல வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆதிசேடன் - என்பதுதான் தமிழ். வீடணன் - விபீஷணன். விடம் - விஷம்

   இதெல்லாம் ஜீவி சாருக்குத் தெரியும்.

   அடுத்து என்ன கேட்பார்னு தெரியும். பாஷை என்பதற்கு பாடை என்பது தமிழா என்று. தமிழ்ச்சொல் இருந்தால் அதுதான் வரும். மொழி-பாஷை

   நீக்கு
  2. அந்தளவுக்கு போக மாட்டேன். பெரும்பாலும் வடமொழிச் சொற்களை அப்படியே எழுதி விடுவது தான் என் வழக்கம்.

   ஆதிசேஷன் என்பது பெயர்ச் சொல்.
   சேஷன் என்ற பெயரை சிதைக்கக் கூடாது. ஆதிகேசன் என்று
   வேண்டுமானால் எழுதலாம்.

   தொன்மவியலில் சிவபெருமானின் கழுத்தை வளையமாகச் சுற்றியிருக்கும்
   வாசுகியின் சகோதரனாகவும் ஆதிசேஷன் அறியப்படுகிறார்.

   நீக்கு
  3. ஆனால் தமிழிலக்கியத்தில் பெயர்ச்சொல்லாக இருந்தாலும் அதனைத் தமிழ்ப்படுத்திடுவாங்க. நான் நிறைய அந்த மாதிரி பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் வடமொழிச்சொல்லை, தமிழ்ல எழுதுவாங்க. உதாரணம், தேஜஸ்-தேசு, குஸ்த்ரி - குதிரி, வருஷம்-வருடம் இதுமாதிரி நிறையச் சொல்லல்லாம் (நான் சொல்வது ப்ரபந்தத்துல)

   சிலர், புருஷன் என்பதற்கு தமிழில் கணவன் என்று இருந்தாலும், விடாப்பிடியா புருடன் என்று புருடா விடுவாங்க.

   வடமொழி என்று தெரியாமல் தமிழ் என்று (நம்பிக்கொண்டு) நிறைய வார்த்தைகளை உபயோகிப்பாங்க. அதில் ஒன்று (சமீபத்தில் கற்றுக்கொண்டது) ஸ்கலிதம். (அர்த்தம் நழுவி விழுவது)

   நீக்கு
  4. நாராயணன் இராமபிரானாக அவதாரம் கொண்ட பொழுது இந்த ஆதிசேஷன் தான் லஷ்மணனாக ஆருயிர் தம்பியானார்.

   நீக்கு
 30. வணக்கம் சகோதரரே

  இந்த வார கேள்விகள்,பதில்கள் எப்போதும் போல் அருமை.

  இன்று எல்லா கேள்விகளை கேட்டவருக்கும், அதற்கேற்ற பதில்களை தந்தவர்களுக்கும் வாழ்த்துகள். நன்றிகள்.

  ஐந்து தலை ஆதிசேஷன் பாம்பணை மீது பள்ளி கொண்ட பெருமாளை படங்களில் பார்த்தே நமக்கு பழகி விட்டது. இதை விடுத்து தலை ஐந்துக்கும் கீழிருந்தால் நமக்கே ஒரு மாதிரியிருக்கும்.

  மொபைல் போஃன் இல்லாமல் நம்மால் இருக்க முடியாத நிலை வந்து விட்டது. அப்படியே அதை சில சமயம் எப்போதாவது கண்டுக்காமல் விட்டால் கூட, நாம் ஏற்படுத்தி விட்ட ஒலி எழுப்பி மூலம் விடாது குரல் எழுப்பி அது தன்னை நம்மை கையில் எடுக்கும்படி செய்யும் நிலை மாறி, "நான் வந்திருக்கேன்" என்று மா.ப.மாது மாதிரி நம் எதிரில் வந்து நிற்கவும் செய்யுபடியான ஒரு காலம் வரும். யார் கண்டது.?அப்போது அது நடமாடும் போஃனாகி விடும்.

  காலையில் பார்க்கும் போது 50க்குள் ஒரு நம்பர் என்றிருந்தது. சரி... 50 கருத்துரைகள் வருவதற்குள் வந்து அப்போதுள்ள அந்த நம்பரை சொல்லி விடலாம் என்று போனேன். ஆனால்"வெண்ணெய் திரளும் சமயத்தில் பானை உடைந்தால் போல்," வேலைகள் விடாது பிடித்துக் கொண்டதில், ஒரு வழியாக வெண்ணெய் திரட்டி வைத்து விட்டு இங்கு வந்து பார்த்தால்,அதன் நிறமே கேள்வியாக மாறியுள்ளது. ஹா.ஹா.ஹா.

  காலையிலிருந்து வேலைகளையும், விடாது பார்த்து விட்டு, இங்கு வந்து கருத்துரைகளுடன் பதிவையும் மறுபடி படித்துப் பார்த்ததில் கண்கள் மங்கி உள்ளதால் ஒருவேளை "அது" சாம்பல் கலரோ?:) அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் சகோதரரே

  படம் 1."என்னைப் போல் உனக்கும் பல் வரிசை சரியாக இருக்கிறதாவென பார்க்கலாம் என்றால், இப்படி முகத்தோடு முகம் இறுக்கி வைத்து கொஞ்சினால் எப்படி பார்ப்பதாம்.." என்று அந்த செல்லம் செல்லமாக கேட்கிறது.

  படம் 2. "என்னைப் போல் தைரியமானவர்களை இது வரை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?"

  படம்.3. "பூ..இதென்ன பிரமாதம்.. நான் மேலிருக்கும் அக்காவை விட சின்னக் குழந்தை. எப்படியோ பேலன்ஸ் செய்து ஏறி இந்தக் கதவை திறந்து விடுகிறேன் பாருங்கள்.அப்புறம் யார் தைரியசாலியென நீங்களே முடிவு கூறுங்கள்."

  பகிர்வினுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 32. நாங்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்த பொழுது ஒருவர் ஊத்துக்குளி வெண்ணெய் என்று கொண்டு வந்து கொடுப்பார், அது வெள்ளையாக இருக்கும். மற்றபடி ஆவின், அமுல், நந்தினி, மில்கி மிஸ்ட் போன்ற ப்ராண்டுகளின் வெண்ணெய், வீட்டில் நான் எடுக்கும் வெண்ணெய் போன்றவை இளம் மஞ்சள் (க்ரீம்) நிறத்தில் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ?? இதை ஏன் சொல்றீங்க !! இன்னிக்கு காலையிலேயிருந்து என்னென்னவோ கமெண்ட் எழுதி எல்லோரும் ஏன் எங்களைக் குழப்புறீங்க !!

   நீக்கு
 33. இதென்ன வம்சா போச்சு? நீங்கதானே முழுவதும் படித்தால் வெண்ணெய் என்ன நிறம்? என்று எழுதச் சொல்லியிருந்தீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா. ஹா. இதுதான் வெண்ணெய் போல் மழுப்பலான பதில். என் கருத்துரை விளக்கத்தையும் கண்டு கொள்ளவில்லை.

   நீக்கு
  2. ஏணிமலை ஆவி இங்கேயும் தன் கை வரிசையைக் காட்டுகிறதோ? துரை சார் சொல்லுங்க -

   நீக்கு
  3. ஆகா.. ராத்திரி நேரம் ஆவியை வைத்து பயமுறுத்தி பதில் ஏதும் கேட்காமல் வைத்து விடலாம் என நினைக்கிறீர்களா?:) வரும் செவ்வாய் ஏணி வைத்து ஏறி ஆவியை நேரடியாகவே பார்த்தாலும் வராத பயம் இப்போ வந்து விடுமா?:)

   நீக்கு
 34. அப்படி அவர் காதில் விழுந்த சில முதல் வரிகள் :

  1) அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் (கேட்டவர் 'திரிஷா')

  2) கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் (வேண்டுகோள் விடுத்தவர் எஸ் எஸ் ஆர்)

  இந்த வேண்டுதல்களை, கேட்டவர்களுக்கு உடனே கடவுள் அளித்துவிட்டார் என்றால், என்ன ஆகும்? (கவனிக்கவும்: அவர் பாடலின் மற்ற வரிகளைக் கேட்காமல் முதல் வரியை மட்டும் OK செய்துவிட்டார். )

  கேட்டவர் திரிஷா தானே!.... அவருக்கென்று தனியாக ஒரு பூலோகத்தை கடவுள் படைக்கட்டும். பாவம் திரிஷா அவர்கள். (யாருமில்லை என்றால் ஒன்று ஞானியாக வேண்டும் அல்லது மனநிலை பாதிப்பு. நமக்கு ஒத்துவராது)

  நம்மிடையே கடவுள் மனிதனாக உலாவுகிறார்தான். நமக்குத்தான் அடையாளம் தெரிவதில்லை. கண்ணிருந்தும் குருடாய், செவியிருந்தும் செவிடாய்...(இது கீதா பாடிய ஒரு பாடலில் இருந்த வரி.)

  பதிவில் இறுதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதைக் காணவில்லை.

  கேள்விகள் பதில்கள் எல்லாமே அருமை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!