புதன், 29 டிசம்பர், 2021

Unemployed, Home loving girl வேணும்னு மேட்ரிமோனியல்ல போடறாங்களே. அதன் அர்த்தம் என்ன?

 

நெல்லைத்தமிழன் :

சலங்கை ஒலி படத்தில், வேதம் அணுவிலும் ஒரு நாதம் பாடலில், (நான் பாடிக்கொண்டிருந்தேன் சும்மா வரிகளை) உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே என்ற வரியைப் பாடினபோது, அது எப்படி..நீங்க தவறாச் சொல்றீங்க என்று மனைவி சொன்னாள். ஆனால் பாடல் வரிகள் அப்படித்தான். உயிர் பிரிந்தால் எப்படி நடனமிடுவது? ஒருவேளை பார்வையாளர்கள் உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே என்று சொல்றாரா?

#  பேயா ஆடலாமே. பேயாட்டம் போடுவது என்று கேள்விப் பட்டதில்லையா ?

& கர்மம், கர்மம் ! டையமண்டு பாடலுக்கெல்லாம் அர்த்தம் யோசித்தால் இந்திரன் தோட்டத்து முந்திரியும், திராட்சை தோட்டத்து ஏமாந்த நரியும் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்!   

இந்த ஹோட்டல் அருமை. நான் இருபது வருஷமா சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும் என்றெல்லாம் பலர் ஜல்லியடிக்கறாங்களே. வீட்டுச் சாப்பாடு அவ்வளவு நல்லா இருந்தால், ஏன் ஹோட்டலுக்கு ரெகுலரா வர்றாங்க?

# இருபது வருஷத்தில் ஒரு மாற்றத்துக்காக வாரம் ஒரு நாள் அல்லது மாதம் ஒரு நாள் போனால் கூட அப்படிச் சொல்லலாமே.

& //வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும் //  கொஞ்சம் அவர்களையே தோண்டித் துருவி கேட்டீங்கன்னா 'யார் வீட்டு' சாப்பாட்டை சொல்கிறார் என்று தெரிந்துகொள்ளலாம்.  1) அவருடைய அம்மா சமையலை நினைத்து சொல்லியிருக்கலாம். 2) நண்பர் வீட்டில் சாப்பிட்ட (ஓ சி) சாப்பாட்டைக் கூட நினைத்து சொல்லியிருக்கலாம்.  

Unemployed, Home loving girl வேணும்னு மேட்ரிமோனியல்ல போடறாங்களே. அதன் அர்த்தம் என்ன?

# பிள்ளை நிறைய சம்பாதிக்கிறார். வீடு சமையல் குழந்தைகள் என்று முழு கவனத்துடன் பார்த்துக்கொள்ள பெண் தேடுகிறார்கள் என்று அர்த்தம்.  " பி.டெக் படிச்சது வீணாகப் போக விருப்பமில்லை " என்று சொல்லும் பெண் வேறு இடம் தேடிக் கொள்ளட்டும் என்று குறிப்பாகச் சொல்கிறார்கள்.

= = = = =

ஏணிமலை - கதை பிறந்த கதை 

ஏணிமலை கதை எழுத - உதித்த ஆரம்பப்  பொறி இந்தப் படம்தான். 

இந்தப் படம் - பேஸ்புக் பக்கத்தில், சிறு காணொளி ஒன்றில் screen shot எடுக்கப்பட்ட படம். 


இந்தப் படத்தைப் பார்த்ததுமே ஏதோ ஓர் அமானுஷ்யக் காட்சி என்று தோன்றியது. 

இதை கதைக் கருவாக வைத்து, ஒரு கதை எழுதினால் என்ன என்று தோன்றியது. 

கதை, மலைப் பகுதியில் நிகழ்வதாக இருக்கவேண்டும் 

கட்டிடம் மிகப் பழையதாக இருக்கிறது. 

படத்தில் காணப்படுவது ஓர் ஆவி உருவம் என்று வைத்துக்கொண்டால் .. 

இப்படி தொடங்கியது கற்பனைக் குதிரை ஓட்டம். 

ஏறக்குறைய இரண்டு மாத காலம் - இரவும் பகலுமாக யோசித்து கதையை உருவாக்கினேன். 

எனக்கு கொஞ்சம் பரிச்சயமான மலைப் பகுதி என்பது நான் ஏழாம் வகுப்பு படித்த நஞ்சநாடு போர்டு ஹை ஸ்கூல். அப்போது என்னுடன் படித்த மாணவ மாணவியரில் படகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மை. 

என் பக்கத்தில் உட்கார்ந்த மாணவன் பெயர் அர்ஜுனன். சில நண்பர்களின் வீடுகளுக்கும் சில சமயங்களில் சென்றது உண்டு. 

படகர்கள் பற்றிய குறிப்புகளை (கதை உருவான பிறகு) இணையத்தில் தரவிறக்கம் செய்து படித்துத் தெரிந்துகொண்டேன். 

தோன்றிய கதையை ஒரே கதையாக இல்லாமல் - அமானுஷ்யன் என்ற ஒரு பாத்திரம், போஜன் என்ற ஒரு பாத்திரம் மூலம் வெளியே கொண்டு வந்தேன். 

எல்லாவற்றையும் இணைத்து, கதை உருவாக்கினேன். 

படங்களையும் இட்டு / பிட்டு / சுட்டு / உருவாக்கினேன். 

எல்லாம் முடிந்து வெளியிட தயார் என்ற நிலையில் சட்டென்று ஒரு யோசனை வந்தது.     

கதையை எழுதியது யார் - என்ற ஒரு எலிமெண்ட் ஆஃப் ஸஸ்பென்ஸ் இருந்தால், இன்னும் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும் என்று தோன்றியது. 

அதோடு, கதையைப் படிக்கும் வாசகர்களில் ஒருவனாக அவர்களுடன், ஐந்து வாரமும் பயணித்து அவர்களின் கருத்துகளைத் தெரிந்துகொண்டால் எப்படி இருக்கும் என்றும் ஓர் எண்ணம் தோன்றியது. அதை அப்படியே செயல் படுத்தினேன். கதையை கா சோ வுக்கு அனுப்பி, அவர் மூலமாக வெளியிட ஏற்பாடு செய்தேன். 

கதை நன்றாக இருந்ததா? உங்களுக்குப் பிடித்திருந்ததா? 

அனைவருக்கும் நன்றி. 

அன்புடன் 

KGG. 

கதை பற்றிய உங்கள் சந்தேகங்கள் இருந்தால், கருத்துரை பதியுங்கள். பதில் அளிக்கிறேன். 

= = = = =

கதை எழுதியவர் இவர்தான் என்று ஆரம்பம் முதல் அடித்துச் சொன்னவர் நெல்லைத்தமிழன். கொஞ்சம் சந்தேகத்தோடு சொன்னவர்கள், கீதா ரெங்கன் மற்றும் கமலா ஹரிஹரன். (வேறு யாரேனும் இருந்தால் கருத்துரையில் பதியவும்) 

இவர்களுக்கு எங்கள் Blog ன் 2022 ஆம் ஆண்டில் வெளிவர இருக்கின்ற உ கே - எ ப - தொ 1 - புத்தகம் (PDF) ஜனவரி ஒன்றாம் தேதி அனுப்பிவைக்கப்படும். 

 = = = = =

66 கருத்துகள்:

 1. எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்!

  ஆஹா எழுத்தாளர் வெளியில் வந்துவிட்டார்.

  எனக்குத் தோன்றியது கௌ அண்ணா என்று 100 பெர்சென்ட் மூன்றாம் பகுதி வந்ததும். ஆனால் கூடவே ஒரே ஒரு டவுட்டு...முதல் பகுதியிலும் கடைசிப் பகுதியிலும் கொஞ்சம் ஸ்ரீராம்....அதனால் அது 90 பெர்சென்ட் ஆனது. இருந்தாலும் அவ்வப்போது கருத்துரையில் சொல்லிக் கொண்டே இருந்தேன் நேற்றும். ஆனால் கடைசியில் ஸ்ரீராம் உறுதியாக என்று கேட்ட போதும் அனுமானம் என்றுதான் சொன்னேன்.

  அவ்வப்போது உங்கள் இருவருக்கும் சிறிய சிறிய ஒற்றுமைகளைக் கவனித்ததுண்டு. குடும்ப ஜீன்!!??!!! 90% கௌ அண்ணா என்றே எனக்குத் தோன்றினாலும்...இந்தக் குழப்பம் குறுக்கிட்டது.

  முடிவு வந்ததும் கூட ஜெகே அண்ணாவுக்குச் சொல்லிய கருத்துரையிலும் , உங்களுக்குமே கூட நீங்கள்தான் என்று சொல்லியிருந்தேன் தான்...ஆனாலும் ஒரு சின்ன குழப்பம்...

  ஆனால் நெல்லை முதலிலிருந்தே நீங்கள்தான் என்று சொல்லிவிட்டார். நெல்லை சூப்பர்!!!

  காசு சோபனாவும் நீங்கள்தான் என்பது என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது...என்றாலும் கீதாக்கா எனக்கு முந்தியே எபியுடன் தொடர்புடையவர் என்பதால் அவர் இல்லை என்றதும் டவுட்டு வந்தது. அல்லாமல் கௌ அண்ணாதான் என்பது என் மனதில் உண்டு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹப்பா அரை மணி நேரமாக முயற்சி செய்து இப்பதான் கருத்து வந்தது!!

   ப்ளாகர் மறுப்பு. கூடவே ரோபோ வந்து அடையாளம் கேட்டல் மீண்டும் மறுப்பு....ப்ளாகர் ஓவராகப் படுத்துகிறது.

   கீதா

   நீக்கு
  2. வாங்க கீதா... வணக்கம்.

   நான் கூட இரண்டு தளங்களில் கொடுத்த கமெண்ட் போச்சா என்றே தெரியவில்லை.  அங்கு மட்டறுத்தல் வேறு இருப்பதால் அப்புறம் வந்திருக்கிறதாம் என்று பார்க்க வேணும்.  அந்நேரத்தில் என்ன கமெண்ட் போட்டோ என்பது நமக்கு மறந்து விடும், மாறி விடும்!

   நீக்கு
  3. ஹாஹா ஸ்ரீராம் உங்களுக்குமா...பானுக்காவும் சொன்னாங்க....கீதாக்காவுக்கு எப்படி என்று தெரியலை அவங்களுக்கும் பிரச்சனை இருந்தது....ஆமாம் எனக்கும் மறந்துவிடுமே. அதனால் வேர்டில் போட்டுவைத்துக் கொள்கிறேன்....வழக்கமாகிவிட்டது!!

   கீதா

   நீக்கு
  4. வாங்கோ, வாங்கோ ! வணக்கம்.

   நீக்கு
  5. ஆஹா, ஏமாந்துட்டேனே! :( நான் நினைச்சது ஶ்ரீராமை மட்டுமே! :( அவ்வப்போது கொஞ்சம் குழம்பினாலும் கடைசி அத்தியாயத்தில் ஶ்ரீராம் தான் என நிச்சயமாக எதிர்பார்த்திருந்தேன்.

   நீக்கு
  6. நானும். - ஓ சாரி ஸஸ்பென்ஸ் முடிந்துவிட்டதே !!

   நீக்கு
  7. கௌ அண்ணா, கதை பிறந்த உங்கள் அனுபவம், அதை வடிவமைத்தவிதம் எல்லாமே நன்றாக இருக்கிறது.

   ஒரு கதை பிறப்பது என்பது பிரசவ வேதனையை விடக் கஷ்டம் என்பது என் அனுபவம் மற்றும் தனிப்பட்டக் கருத்து. அது பிறந்ததும் அதை வெளியிடும் முன் குழந்தையை உலகில் நடமாட விடுமுன் எவ்வளவு அறிவுரைகள் சொல்லி திருத்தி (திருத்திக் கொண்டே...இதுகதைக்கும் பொருந்தும்) பராமரித்து நல்ல வடிவம் கொடுத்து என்பது போல் கதையை வெளியிடும் முன் அதை நல்லவடிவில் கொண்டுவருவதற்கு திருத்தி, வேண்டாததை நீக்கி, திடீரென்று மனதில் நல்ல கருத்து தோன்றும் அதைச் சேர்த்து என்று நான் மிகவும் சிரமப்படுவதுண்டு. இதுவும் என் அனுபவவத்தில் வந்த கருத்து.

   நீங்களும் இரண்டு மாதமாக இதற்கு உழைத்தது தெரிகிறது வாழ்த்துகள், பாராட்டுகள். நல்லவடிவில் வந்தது. கடைசி ட்விஸ்ட் உட்பட. அது யதார்த்தத்துடன் பொருந்திப் போகவும் செய்தது.

   கீதா

   நீக்கு
 2. வாழ்த்துகள் கௌ அண்ணா.

  நான் நேற்றே கதையைப் பற்றிய என் கருத்தைக் கடைசியிலும் அதற்கு மேலில் கீதாக்காவுக்குக் கொடுத்த கருத்திலும் சொல்லியிருந்தேன். அதே கருத்துதான் இப்போதும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் முடிந்து வெளியிட தயார் என்ற நிலையில் சட்டென்று ஒரு யோசனை வந்தது.

   கதையை எழுதியது யார் - என்ற ஒரு எலிமெண்ட் ஆஃப் ஸஸ்பென்ஸ் இருந்தால், இன்னும் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும் என்று தோன்றியது. //

   இதுதான் செம சுவாரசியமாக, அரட்டை அடிக்கவும், குறிப்பாக எனக்கு ரொம்பவே ரிலாக்சேஷன் தேவைப்படும் இச்சமயத்திற்கு உதவியது!!! சிரித்து, யோசித்து என்று...

   அதற்கு உங்களுக்கு நன்றி சொல்கிறேன் கௌ அண்ணா.

   கீதா

   நீக்கு
  2. கதையை கா சோ வுக்கு அனுப்பி, அவர் மூலமாக வெளியிட ஏற்பாடு செய்தேன். //

   ஹாஹாஹா மீண்டும் சஸ்பென்ஸா!! நோ நெவர்! உங்களின் மற்றொரு ஐடிக்கு (ஐடி அவதாரம் எடுக்கும் அதிரடி போல!!!!!) அனுப்பி....ஹாஹாஹாஹா. எங்களைப் பேய்க்காட்ட முடியாதாக்கும்!!!!

   கீதா

   நீக்கு
  3. நான் சொன்னா நம்பவேணும் !!

   நீக்கு
 3. இவர்களுக்கு எங்கள் Blog ன் 2022 ஆம் ஆண்டில் வெளிவர இருக்கின்ற உ கே - எ ப - தொ 1 - புத்தகம் (PDF) ஜனவரி ஒன்றாம் தேதி அனுப்பிவைக்கப்படும். //

  மிக்க நன்றி கௌ அண்ணா

  கீதா

  கோமதி அக்காவும் நீங்கள்தான் என்று சொன்ன நினைவு அதன் பின் அவர் இந்தியாவுக்கு வரும் பிரயாணத்தில் இருந்ததால் வர இயலவில்லை என்று நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 4. கதை எழுதியது கெளதமன் பார்த்தான் என்று தெளிவாக தெரிந்தது. நம் பங்கிற்கு கொஞ்சம் குழப்பலாமே என்று நொல்லையாரோ? என்றேன். ஆனால் இரண்டாம் பகுதியில் கெள அண்ணா போல தெரிகிறது என்று கீதா ரங்கனின் கருத்தை ஆமோதித்திருக்கிறேன்.
  கு.வி.மீ.ம.ஓ.என்று யாரோ சொல்வது கேட்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் புத்தகம் அனுப்பிவிடுகிறோம்!!

   நீக்கு
  2. ஆஅமாம் அதே அதே. கோமதிக்கா பற்றி சொல்லிவிட்டு கூடவே பானுக்காவும் சொன்னாங்களே என்று சொல்ல வந்ததும் ப்ளாகர் வழக்கம் போல படுத்த....அப்புறம் மறந்து போக மேலே கருத்துகள் போட்டு இங்கு வந்தால் பானுக்காவே சொல்லிட்டாங்க!!!

   கீதா

   நீக்கு
 5. கெளதமன் சார்தான், நெல்லையார் என்று வந்திருக்க வேண்டும்.
  தட்டச்சு பிழைகளை மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்குமினிய காலை வணக்கம்.

  அனைவரும் தொற்றில்லா வாழ்வில் தொடர வேண்டும் .இறைவன் துணை.

  பதிலளிநீக்கு
 7. கதை பிறந்த கதை அருமை.

  அனுபவித்தாலும் அதை எழுத்தில் கொண்டு வருவது
  கடினம்தான். நீங்கள் மிக அருமையாக எழுதி முடித்திருக்கிறீர்கள் கௌதமன் ஜி.

  நெ த வுக்கும் கீதா ரங்கனுக்கும் வாழ்த்துகள்.
  இனி நிறைய நல்ல கதைகள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 8. ஆசிரியரைக் கண்டுபிடிப்பதில் ஐந்து வாரங்களும் சுவாரஸ்யமாகப் போனது அதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரட்டைகளில் பங்கேற்றது எனக்கும் சுவாரஸ்யமான அனுபவம். பின்னூட்ட அரட்டைகளில் பங்கேற்றவர்கள் எல்லோருக்கும் நன்றி.

   நீக்கு
 9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி வரப்போகும் புதுவருஷம் மனதில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 10. என்னைப் பொறுத்தவரை ஶ்ரீராம்/ஜீவி இருவரில் ஒருவர் என்றே நினைத்திருந்தேன். ஆங்காங்கே குழம்பினாலும்/குழப்பினாலும் திரு கௌதமன் அவர்கள் கடைசிவரை ரகசியத்தை நன்றாகவே காப்பாற்றி வந்திருக்கார். அது சரி, காசு சோபனா இன்னொருத்தர் என்பது தெரியும். ஆனால் அவர் யார்னு சொல்லலையே! அதை யூகம் செய்து சொல்பவர்களுக்கும் பரிசு கொடுத்திடுங்க! :)))))

  பதிலளிநீக்கு
 11. இந்தப் படத்தை வைத்துத் தான் நான் கௌதமன் சார் கதை எழுதலை எனத் தீர்மானித்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஆனால் இது Wuthering Heights கதையில்/நாவலில் வரும் ஒரு சம்பவத்தை நினைவூட்டியது. அதுவும் அமானுஷ்யம் கலந்த த்ரில்லர் தானே ஒரு வகையில்! :))) ஆகவே இந்த விஷயத்தில் நான் சொன்னது சரியாக இருப்பதால் எனக்கும் புத்தகம் அனுப்ப வேண்டும் யுவர் ஆனர்! உங்கள் தீர்ப்பை மாற்றிப் போடுங்க! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் அனுப்பிவிடுகிறோம்! உங்களுக்கு வேறு பரிசுகள் உள்ளன. ஜனவரி 1 ஆம் தேதி பதிவில் காணவும்.

   நீக்கு
  2. ஆஹா! ஆவல் அதிகரிக்குதே! :)))))

   நீக்கு
  3. அதுவும் எல்லோருக்கும் பரிசு எனில் எனக்குப் பரிசுகள்னு வேறே சொல்லி இருக்கீங்க! :)))

   நீக்கு
 12. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 13. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 14. @ !!!..

  // கர்மம், கர்மம்!.. டையமண்டு பாடலுக்கெல்லாம் அர்த்தம் யோசித்தால் .. //

  " தமிழுக்குப் பஞ்சம்.. " என்று போட்டவராயிற்றே!..)

  பதிலளிநீக்கு
 15. திரு. கௌதம் தான் எழுதுகின்றார் என்பதை நாளடைவில் புரிந்து கொண்டேன்.. தரவுகளை வைத்து அடித்து விளையாட இயலவில்லை.. இணையம் பிரச்னை..

  தவிர, வேறு கண்ணாடியும் மாற்ற வேண்டியிருக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரிசு புத்தகம் உங்களுக்கு உண்டு. ஜனவரி 1 ஆம் தேதி பதிவில் விவரம் வெளியாகும்.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  ஏணிமலையின் கதையை எழுதியவர் நீங்கள்தான் என ஆரம்பத்திலிருந்தே எவ்வித சந்தேகமே இல்லாமலும்,விடாமலுந்தான் நான் சொல்லி வந்தேன் என நினைக்கிறேன். அதில் வரையப்படும் ஓவியங்களில் கூட உங்கள் பெயரை காண்பிக்காது, கதையுடன் படங்களிலும் சஸ்பென்ஸ் காத்து வருகிறீர்கள் எனவும் சொல்லி வந்தேன். என் ஊர்ஜிதங்கள் உண்மையாகி உள்ளதற்கு இறைவனுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  நீங்கள் இந்தக் கதையை மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அபார கற்பனையுடன் கூடிய உங்களின் எழுத்தாற்றலை கண்டு மனமுவந்து வியக்கிறேன். சொல்லப் போனால், ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமையை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தேன். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றிகள்.

  இந்தக் கதை ஆரம்பித்த செவ்வாயிலிருந்து ஒவ்வொரு செவ்வாய் கிழமையையும் நான் ஆவலோடு கதையை எதிர்பார்த்து படித்து ரசித்து, என் பொதுவான வழக்கங்களை மீறி நானும், அன்பான எ.பியின் வாசகர்கள் அனைவருடனும் "இதை எழுதிய கதாசிரியர் யார்?" என்ற கருத்துப் பரிமாற்றத்திலும் வந்து வந்து என்னால் முடிந்த மட்டும், என் அறிவுக்கு தெரிந்த மட்டும், பேசி (எழுதி) கலந்து கொண்டு என் மனக் கலக்கங்களை போக்கி உற்சாகமாகி கொண்டேன். கடந்த ஒருமாத காலமும் நல்லவிதமாக கழிந்த அந்த செவ்வாய்கிழமை நாட்களுக்காகவும், இறைவனுக்கும், உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  கருத்துக்களில் உற்சாகத்துடன் பங்களித்த எ.பியின் அனைத்து அன்பான வாசகர்களுக்கும் என் அன்பான நன்றியுடன் கூடிய வாழ்த்துகள்.
  மேலும் உங்களது அன்பான பரிசுக்கும் மனம் நிறைந்த நன்றி. 🙏.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 17. ஆனாலும்,

  ஏணிமலைக்கு எழுதிய கருத்துரைக் கவிதைக்குக் கிடைத்த அன்பினால் - நாமும் ஒன்றை எழுதிவைப்போமே என்று எழுத ஆரம்பித்தேன்..

  அந்தப் பொண்ணு குறுக்கால வந்து திசை திருப்பி விட்டாள்..

  எழுதி முடித்து அனுப்பியும் விட்டேன்..

  அது சரி..அந்தப் பொண்ணு யார் அவள்?...

  இன்னும் சில மாதங்களில் தெரியும்!..

  பதிலளிநீக்கு
 18. & கர்மம், கர்மம் ! டையமண்டு பாடலுக்கெல்லாம் அர்த்தம் யோசித்தால் இந்திரன் தோட்டத்து முந்திரியும், திராட்சை தோட்டத்து ஏமாந்த நரியும் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்! //

  ஹாஹாஹா நானும் அதுங்களோடு சிரித்துவிட்டேன்....உங்கள் பதில் பார்த்து..

  கீதா

  பதிலளிநீக்கு
 19. கௌதமன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 20. ச்சே இந்த கீதா நேற்று எப்படி ஃப்யூஸ் ஆனாள் என்று தெரியலை..ஒவ்வொரு பார்ட்டையும் ஆராய்ந்து வாசித்து வாசித்து...நேற்று கருத்தில்.ஒரு மிகப் பெரிய க்ளூ கிடைத்தும், அதை காப்பி பேஸ்ட் செய்து எடுத்து வைத்திருந்து, உடனே 4 வது பகுதிக்குச் சென்று அதே போன்ற வரியை எடுத்து வைத்தும் நேற்று இறுதியில் ஸ்ரீராம் கருத்திற்கு கருத்து இடும் போது கூட ஃப்யூஸ் ஆகிப் போயிருக்கிறேன். எப்படி இப்படி ஆச்சு என்று இப்போது வரை யோசித்தும் ...ஹிஹிஹிஹி

  இரவு மோகினி வந்து 'என்ன க்ளூ கிடைத்தும் கோட்டை விட்டியா என்று கேட்டு, எடுத்து வைத்தும் மறந்துவிட்டாயே என்று தலையில் கைவைத்துக் கொண்டு சென்றுவிட்டது!!!!!!!"

  இன்று காலையிலும் கூட!!!! அதைச் சொல்லாமல் விட்டிருக்கிறேன்...ஹூம் கீதாவின் மறதி ரொம்ப ஃபேமஸ்!! இப்ப கருத்து எழுதி வைத்துக் கொள்ளும் வேர்ட் டாக்குமென்டில் ஏதேனும் வேறு ப்ளாகிற்கு கருத்து போடாமல் இருக்கிறதா? துளசியின் கமென்ட் எல்லாம் போட்டுவிட்டேனா என்று செக் செய்யும் போது கீதாக்காவின் குகு பதிவிற்கு துளசி கொடுத்த கருத்தைப் பதியாமல் இருக்கிறதே என்று பார்த போது..ஆஆஆ இது கண்ணில் பட்டது...

  அதென்ன க்ளூ என்று சொல்ல வேண்டும் இல்லையா...இதுதான்...

  இது கதையில் 4 வது பகுதியில் கடைசியில் வரும் வரி

  //தலையோடு காலாக கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்து உறங்கினார்.//

  இது நேற்று கௌ அண்ணா கிட்டத்தட்ட கடைசியில் கருத்தில் கொடுத்த வரி. இதற்கு நான் அண்ணாவைக் கலாய்த்தும் கருத்து போட்ட போது அந்த வரிகளை எடுத்து வைத்தேன்...ச்சே அப்படியும் மறந்துவிட்டேன்!!!!

  கருத்தில் சொன்ன அதே வரி....//இன்று இரவு நான் கம்பளியை தலையோடு காலாக இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்க//

  ஹிஹிஹி...Got blank yesterday!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது நல்லா இருக்கே! நான் கதையில் ஏற்கெனவே வாசித்த ஒரு வரியை சொன்னால், அதனால், நான்தான் கதையை எழுதினேன் என்று ஆகிவிடுமா! நான் அமானுஷ்யனைக் கிண்டல் செய்வதற்காக எழுதிய வரி அது.

   நீக்கு
 21. கேஜிஜி சாருக்கு வாழ்த்துகள்!

  கதை நன்றாக இருந்தது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 22. திரு . கெளதம் அவர்களுக்கு வாழ்த்துகள்.
  மோகினி மீண்டும் வருமா :))

  பதிலளிநீக்கு
 23. நானும் வந்துட்டேன். kgg சாருக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை. இன்று புதன் ஆயினும் கருத்துரைகள் கொஞ்சம் குறைந்து காணப்படுவது ஏனோ? 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் + நீங்கள் கேள்விகள் எதுவும் கேட்காததும், படங்கள் போட்டு வாசகர்கள் கருத்து கேட்காததும் - அதிக பின்னூட்டங்கள் இல்லாத காரணம்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!