சனி, 25 டிசம்பர், 2021

சுவேகா பெற்ற 3 கோடி + நான் படிச்ச கதை (பானுமதி வெங்கடேஸ்வரன்)

 அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்.

==============================================================================================================

ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகள் சுவேகா. இவர் டெக்ஸ்டெரிட்டி குளோபல் அமைப்பின் மூலம் தலைமை மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்று வந்துள்ளார்.


தொடர்ந்துஇந்த அமைப்பின் மூலம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலை கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பபை படிக்க ரூ.3 கோடி மதிப்பிலான கல்வி உதவி தொகையை பெற்றுள்ளார்.

இது குறித்து அவரது தந்தை சாமிநாதன் கூறுகையில் ஸ்வேகா 14 வயது சிறுமியாக இருந்த போதே டெக்ஸ்டெரிட்டி குளோபல் மூலம் அடையாளம் காணப்பட்டார் என கூறினார்.

கல்வி உதவித்தொகை பெற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்த சுவேகா சாமிநாதன்,குடும்பத்தினர், டெக்ஸ்டெரிட்டி குளோபல் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் ஷரத் சாகர் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்தார்.

உலகின் முதல் 10 பல்கலைகழகங்களில் ஒன்றான சிகாகோ பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை பெற்றுள்ள சுவேகா சாமிநாதன் தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

==========================================================================================================


= = = = =


= = = = = = = =

நான் படிச்ச கதை ( சிவசங்கரி) 

-  பானுமதி வெங்கடேஸ்வரன் -

தூங்கிக்கண்டிருந்த தன்னை எழுப்பி  பெரியம்மா கட்டிக்கொண்டு ஓவென்று அழுதபோது அவளுக்கு ஒன்றும் புரியவில்லை . ஒரு திருமணத்திற்கு அவளையும் அழைத்து வந்திருந்த அவள் பெற்றோர்கள் அவளை மட்டும் மண்டபத்திலேயே விட்டு விட்டு பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு கோவிலுக்கு செல்வதற்காக காரில் சென்றபொழுது வழியில் ஒரு விபத்தில் இரண்டு பேருமே இறந்து விட்டார்கள் என்பதே பிறகு தான் புரிந்தது. எப்படியோ படித்து திருமணம் முடிந்தவுடன் தன் கணவனிடம் அவள் சிறுமியாக இருந்தபொழுது பெற்றோர்களுடன் எந்த ஊர்களுக்கெல்லாம் சென்றாலோ அந்த ஊர்களுக்கெல்லாம் செல்கிறாள்.


சுற்றுலாவில் விருப்பம் கொண்ட அவள் தந்தை வெளியூருக்கு ஏதாவது திருமணம் திருவிழா என்று சென்றால் அருகில் இருக்கும் முக்கியமான இடங்களுக்கும் செல்வார் அப்படி ஒரு முறை அவள் ஏதோ ஒரு கோவிலுக்கு சென்றதும் அங்கிருந்த கோவிலின் தெப்பக்குளத்திற்கு அம்மா அப்பா இன்னும் சில உறவினர்களோடு சென்றதும் அவளுக்கு நினைவில் இருந்தது. ஆனால் அது எந்த ஊர் என்று தெரியவில்லை.  அந்தக் குளம் மிக பிரம்மாண்டமாக இருந்தது குளத்தின் நடுவில் இருக்கும் நீராழி மண்டபத்திற்கு இவர்கள் எல்லோரும் பரிசலில் சென்றார்கள்.  அங்கு அந்த மண்டபத்தின் நடுவில் இருந்த படிகள் வழியே அப்பாவின் கையைப் பிடித்தபடி மேலே ஏறி சென்றதும் ஏறும் பொழுது புறாக்கள் பறந்ததும் அந்தப் புறாக்களுக்கு பொரிகடலை போன்றவை போட்டதும் நினைவில் இருந்தது, ஆனால் எந்த ஊர் தெப்பக்குளம் என்று மட்டும் தெரியவே இல்லை அவளும் பல உறவினர்களிடம் கேட்டு பார்த்தாள்  "ஒரு தெப்பகுளம், அதிலிருக்கும் நீராழி மண்டபத்திற்கு பரிசலில் நாம் எல்லோரும் போனோமே? அந்த மண்டபத்தில் படிகளில் ஏறினோம் அங்கேயே போய்  சாப்பிடுவதற்காக  சித்ரான்னங்கள்.   கலந்து கொண்டு போனோம்" என்றெல்லாம்  சொன்னாலும் யாருக்கும் தெரியவில்லை.  எல்லோருமே, "எந்த கோவில் என்று தெரியவில்லையே?" "நான் வரவில்லையே?" என்றுதான் கூறினார்கள்.

இப்படி இருக்க உறவில் ஒரு திருமணத்திற்காக கிராமத்திற்கு செல்ல வேண்டி வந்தது அங்கு திருமணம் முடிந்ததும் உள்ளே படுத்திருந்த அவள் தூரத்து சொந்தக்கார பெண்மணி இவளைப் பார்த்ததும், "எப்படி இருக்க? சின்ன குழந்தையா பார்த்தது. உனக்கு ஞாபகம் இருக்கா? நம்ம எல்லாம், நான், நீ, உங்க அப்பா, அம்மா, எல்லாரும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் போனோமே? கட்டு சாதமெல்லாம் கட்டிண்டு பரிசல் வைத்து நடுவில் இருக்கும் நீராழி மண்டபத்திற்கு போனோம்.." என்று சொன்னதும் இவளுக்கு மிகுந்த சந்தோஷமாகி விட்டது இத்தனை நாட்களாக தேடிக்கொண்டிருந்த இடம் தெரிந்துவிட்டது வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்! உடனே அவள் கணவனிடம் சொல்லி  தாங்களும் அங்கே போக வேண்டும் என்றதும் அவனும் ஒப்புக்கொள்ள,  சித்ரான்னங்கள் பிசைந்துகொண்டு புறாக்களுக்கு போடுவதற்காக பொரிகடலை எல்லாம் வாங்கிக் கொண்டு அங்கே செல்கிறார்கள். காரிலிருந்து இறங்கிய அவளுக்கு பெரும் ஏமாற்றம்,ஏனென்றால் அந்த தெப்பக்குளம் வறண்டு கிடந்தது.

இந்த கதையை சிவசங்கரி அவருக்கே உரிய நுட்பமான விவரித்தலோடு எழுதியிருந்தை படித்துக் கொண்டே வந்து கடைசியில் அந்த குளம் வரண்டு கிடந்தது என்று முடித்திருந்ததை படிக்கும் பொழுது அந்த கதாநாயகிக்கு ஏற்பட்ட ஏமாற்றம் நமக்கும் ஏற்படும். 

இந்த கதை படித்ததிலிருந்து வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக  இருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் செல்ல முடிந்தது. அப்போதும் குளம் வரண்டுதான் இருந்ததால் நானும் ஏமாந்து தான் போனேன்.

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் - இணையத்திலிருந்து 

நாவல்களில் அதிரசம் செய்வதையும், பாலக் பனீர் செய்முறைகளையும் எழுதி நம்மை சாவடித்தாலும் சிறுகதைகள் சிறப்பாக எழுதுவார் சிவசங்கரி. நுட்பமான வர்ணனைகளும், நச்சென்று விஷயத்தை சொல்லும் லாகவமும் இவருடைய சிறப்புகள்.

இவருடைய நுட்பமான விவரணைகளுக்கு 'பொழுது' என்னும் கதையை உதாரணமாக சொல்லலாம். இந்த கதை 1976 அல்லது 77 இலக்கிய வீதியின் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.  ஒரு துவக்கம், நடுவில் ஒரு முடிச்சு, இறுதியில் அதற்கான தீர்வு என்ற கதைக்கான இலக்கணத்திற்குள் வராமல், பரபரப்பான ஒரு சாலையின் நிகழ்வுகளை மிக நேர்த்தியாகவும், அழகாகவும் அவர் விவரித்திருந்ததுதான் இந்த கதையின் சிறப்பு.

சென்னைக்கு வெளியே வசிக்கும் ஒரு பெண் அவளுடைய கணவன் வேலை நிமித்தமாக சென்னைக்கு வரும்போதெல்லாம் ஊரில் தனியே இருக்க பிடிக்காமல் அவனோடு சென்னை வருகிறாள். அப்படி வரும் பொழுது ஹோட்டல் அறையில் தனியே இருப்பது மிகவும் கொடுமையாக இருக்க, அவன் மவுண்ட் ரோட்டில் இருக்கும் அலுவலகத்திற்கு செல்ல இவள் கீழே காரில் அமர்ந்தபடி சாலையை வேடிக்கை பார்ப்பதை சிறு கதையாக வடித்திருப்பார். 

இந்த கதையை படித்துக் கொண்டே வரும் பொழுது ஒரு இடத்தில் எனக்கு, இப்போது இங்கே வெய்யில் வருமே? என்று தோன்றியது. கதையில் அடுத்த வரியில் 'ஜன்னல் வழியே வெயில் அடிக்க, நகர்ந்து உட்கார்ந்தாள்' என்று அவர் எழுதியிருப்பார். அந்த அளவிற்கு கதையோடு நம்மை ஒன்றச் செய்யும் எழுத்து.

நான் படிச்ச கதை என்னும் இந்த பகுதியை ஜீ.வி. சார் தொடங்கி அதில் அவர் படித்த கதைகளை தன்னுடைய அனுபவத்தால் மிகவும் சிறப்பாக வழங்குகிறார். ஆனால் இந்த பகுதியை எப்படி அணுகுவது என்பதில் எனக்கு தெளிவு இல்லை. ஒரு எழுத்தாளரின் படைப்பை சினிமா பாடல் புத்தகங்களில் கதை சுருக்கம் போல சுருங்குவது பாவம், அதை நம் வார்த்தைகளில் எழுதுவது முறையல்ல. எப்படி செய்வது? என்று ஜீ.வி.சாரிடமே கேட்டேன். அவரிடம் சிவசங்கரியின் தெப்பக்குளம் கதையைப் பற்றி பிரஸ்தாபித்தபொழுது, "இப்போது நீங்கள் என்னிடம் கூறியதே நன்றாகத்தான் இருக்கிறது, இப்படியே எழுதுங்கள்" என்றார். எழுதி விட்டேன். சிவசங்கரியின் ஒரிஜினல் கதையை தேடி படித்து விடுங்கள்.

'தெப்பக்குளம்' கதை 1988 அல்லது 89ல் குங்குமத்தில் வாசித்தேன். ஒரு முறை தான் படித்தேன். கதாநாயகியின் பெயர் நினைவில் இல்லாததால் அவள் என்று குறிப்பிட்டிருக்கிறேன். 'பொழுது' 1977ல் படித்தது. எனவே குறைகள் இருந்தால் அவை என்னுடையவை.

= = = = =

77 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம்.
    Merry Christmas!

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. பானுக்கா ரொம்ப நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். சொல்லும் விதம் மாறியிருப்பதும் தெரிகிறது. பாராட்டுகள்!

    எனக்கும் நான் படித்த கதை என்பதை எழுத ஆசை ஆனால் எழுத வருமா என்ற ஒரு ஐயம். மற்றும் நேரம்.

    நீங்கள் சொல்லியிருக்கும் கதையைத் தேடி வாசிக்க வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கும் நான் படித்த கதை என்பதை எழுத ஆசை// காத்திருக்கிறோம். கமலா ஹரிஹரனும் எழுதலாம்.

      நீக்கு
    2. வணக்கம் பானுமதி சகோதரி

      படித்த கதைகளை பகிர்ந்து கொள்ள முடியுமென்ற கருத்தில் என்னையும் குறிப்பிட்டிருப்பதற்கு மிக்க நன்றிகள். ஆனால் உங்களின் திறமைக்கு முன் நான் சாதரணமானவள். நீங்கள் மலை என்றால் நான் வெறும் மடு. இருப்பினும் உங்கள் ஊக்கமிகு வார்த்தைகளுக்கு ரொம்பவும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  4. குளம் வறண்டிருக்கும் என்பது புரிந்துவிட்டது நீங்கள் சொல்லி வரும் போதே.

    ஏனென்றால் அதுதானே யதார்த்தத்தில் நடக்கிறது என்பதால். என் சமீபத்திய அனுபவமும் இதே தான். இதோ தண்ணீர் பற்றிய கடைசிப் பகுதியில் எழுதியிருக்கிறேன். மீதி பதிவில்

    எழுத்தாளர்கள் சொல்லும் இடங்கள் எத்தனை வருடங்களுக்கு முந்தைய விவரிப்பு என்று தெரிந்துகொண்டு செல்வது நல்லதோ? அப்படித்தான் தோன்றுகிறது தற்போது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வருடம் பெய்த மழையில் வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் நிரம்பியிருக்கலாம்.  திருமலை நாயக்கர் மஹாலிலிருந்து மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை அந்த அடையும் வண்ணம் அந்தக் காலத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாம். மதுரைக் காரர்கள் வந்தால் விவரங்கள் தெரியலாம்.  

      நீக்கு
    2. சிதம்பரம் கோயிலில் நீங்க சொல்லி இருக்கும் ஏற்பாடுகள் உண்டு. ஒவ்வொரு வருஷமும் படங்கள் அனுப்புவார் தீக்ஷிதர். ஆனால் மதுரைக்கோயிலில் இருந்திருக்கலாம். அது பற்றித் தெரியலை. ஏனெனில் ஊர் "நரக" மயமாகிப்பல்லாண்டுகள் ஆகிவிட்டனவே. அதோடு நான் இருந்தவரை தெப்பக்குளத்தைத் தன்ணீர் இல்லாமல் பார்த்தது இல்லை.

      நீக்கு
  5. எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! மெரி கிறிஸ்மஸ்!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  7. கதையோடு ஒன்றி விட்டீர்கள்... அருமை... (எதிலும் அந்த ஈடுபாடு இருந்தால் பரிதல் சிறக்கும் என்பது ஒரு தகவல்)

    பதிலளிநீக்கு
  8. சுவேகாவின் சாதனைகள் தொடரட்டும். 
    நம் நாட்டிலேயே இப்போது வைட்டமின் டி குறைபாட்டினால் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு மேல் நாடுகளைப்போல வைட்டமின் டி ட்ராப்ஸ் கொடுக்கிறார்கள். பெங்களூரில் வசிப்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் வருமாம். 
    வீட்டில் அப்பளம் இடும் பொழுது பிரண்டை ஜாலம் தெளித்து இடுவார்கள். வாசனையாக நன்றாக இருக்கும். கிருஷ்ணா ஸ்வீட்ஸில் பிரண்டை ஊறுகாய் முதல் முறை வாங்கிய பொழுது நன்றாக இருந்தது. அடுத்த முறை அத்தனை நன்றாக இல்லை.  

    பதிலளிநீக்கு
  9. வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் படம் இணைக்க வேண்டும் என்று நினைத்தேன்.  ஸ்ரீராமிடமாவது சொல்லியிருக்கலாம். 

    பதிலளிநீக்கு
  10. பிரண்டை துகையல் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் பிரண்டை திருச்சியைத் தவிர வேறு எங்கும் மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. 

    "நான் படித்த கதை" பகுதி வாசகர்களை ஈர்க்கிறது. எல்லோருக்கும் எழுதும் போது வார்த்தைகள் அருவி போல் வராது.  ஒரு சிலருக்கே அது பாக்கியம். அந்த வகையில் கீதா மற்றும் பானு அக்கா, சிறப்பாக பகுதியை கொண்டு செல்வார்கள் என்று விரும்புகிறேன். 

    கதையைப் பற்றி எழுதும் பொது இணையத்தில் இலவசமாக கிடைக்குமானால் சுட்டியையும் சேர்க்கலாம் என்பது எனது கருத்து.

    பண்டிகைகள் பொதுவானது. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரண்டை சென்னையில் எங்க அம்பத்தூர் வீட்டில் போட்டிருந்தோம். அந்தச் செடியில் இருந்து பறித்துத் துவையல் அரைச்சுச் சாப்பிட்டப்போ ஒண்ணும் பண்ணினதே இல்லை. ஆனால் இங்கே வந்து 2,3 முறை பிரண்டைத் துவையல் அரைச்சுச் சாப்பிட்டாலும் ஒத்துக்கறதே இல்லை.:(

      நீக்கு
    2. ஜெ கே அண்ணா மிக்க நன்றி அண்ணா. ஊக்கப்படுத்தும் வார்த்தைகள். இந்தக் கத்துக்குட்டி நான் முயற்சி செய்கிறேன். செய்தால் கண்டிப்பாக இணையத்தில் சுட்டி இருந்தால் கொடுக்கிறேன்.

      மீண்டும் நன்றியுடன்

      கீதா

      நீக்கு
    3. எங்கள் வீட்டில் பிரண்டை வளர்க்கிறோம்.  ஆனால் திவசம் தவிர மற்ற நாட்களில் அதை உபயோகப்படுத்துவது இல்லை!!

      நீக்கு
  11. பதில்கள்
    1. ஓ! அதனால் என்ன பானுமதி! என்னுடைய அருமைச் சகோதரர் மருத்துவர் தி.வாசுதேவன் அனைவரையும் "அக்கா" என்றே கூப்பிடுவார். வயதில் இளையவர்களையும். இது ஆர்.எஸ்.எஸ். அவருக்குக் கற்றுக்கொடுத்த பண்பாடுகளில் ஒன்று என்பார்.

      ஹிஹிஹி, இப்போக் கொஞ்சம் சுய தம்பட்டம். என்னைச் சின்ன வயதில் இருந்தே பலரும் "அம்மா"என்றே அழைப்பார்கள்/அழைத்திருக்கிறார்கள். இப்போவும் வயதில் பெரியவங்க கூட "அம்மா" என்கின்றனர். :))))) நான் இதெல்லாம் கண்டுக்கவே மாட்டேன்.

      நீக்கு
    2. ஜெகே அண்ணா பிரண்டை திருவனந்தபுரத்தில் கிடைக்கவில்லையா?!! ஆஆஆஆ...ஆச்சரியம்.

      நான் இருந்த போது அங்கு கிடைத்தது. இப்போது தங்கையும் வீட்டில் தொட்டியில் பால்கனியில் வைத்திருக்கிறாள்.

      நான் சென்னையிலிருந்து உருண்டைப் பிரண்டை, கிள்ளுப் பிரண்டை இரண்டும் கொண்டு வந்து இங்கு நட்டேன். எலியாருக்கு ரொம்பப் பிடிக்குமாம் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். இரண்டையுமே! இரண்டுமே துளிர் விட்டிருந்தது. எலியார் பிய்த்து போட்டாலும் எடுத்து மீண்டும் நட்டு வைத்தேன் கடைசியில் எல்லாத்தையும் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

      கீதா

      நீக்கு
    3. //இப்போவும் வயதில் பெரியவங்க கூட "அம்மா" என்கின்றனர். :))))) நான் இதெல்லாம் கண்டுக்கவே மாட்டேன்.// உஙாகளுக்கும் எனக்கும் இருக்கும் அடிப்படை வேற்றுமை நீங்கள் உங்கள் குடும்பத்தில் மூத்தவர், நான் என் வீட்டில் கடை குட்டி. எங்களைப் போன்றவர்களை குடும்பத்தில் குழந்தையாகத்தான் பார்ப்பார்கள். அதனால் இந்த அக்கா, அம்மா அழைப்புகள் கொஞ்சம் ஜெர்க் கொடுக்கும். அதுவும் நம்மை விட ரொம்ப பெரியவர்கள் அப்படி அழைப்பது....

      நீக்கு
    4. JC Sir

      பிரண்டை கிடைக்கும்போது இரண்டு கணுவை மட்டும் எடுத்து நட்டுவிட்டால் போதும்.  சரசரவென வளர்ந்து வந்து விடுகிறது.

      நீக்கு
    5. மதுரைப் பக்கம் எல்லாம் குழந்தைகளைக் கூட அவங்க இவங்க என்று சொல்லும் வழக்கம் உண்டு.  அதேபோல சென்னையிலும் வயது வித்தியாசம் இல்லாமல் பெயருடன் அண்ணா, அக்கா சேர்த்து சொல்லும் வழக்கம் இருக்கிறது.  என் மாமியார் என்னுடன் பணிபுரியும் ஓரளவு என் வயதொத்த யார் வீட்டுக்கு வந்தாலும் அவர்கள் பெயருடன் அல்லது பெயரில்லாமல் மாமா சேர்த்து சொல்வார்!  உதாரணமாக " மாமா வந்திருக்கார்..  அவர்தான் சஞ்சு அப்பா..."  இப்படி!

      நீக்கு
    6. ஹாஹாஹா! பானுமதி! என் அப்பாவீட்டில் நான் தான் கடைசி/எல்லாப்பெரியப்பாப் பெண்களை எல்லாம் சேர்த்து! ஆனாலும் அங்கெல்லாம் பெண்களை முதிர்ச்சியடைந்தவர்களாகவே பார்க்கிறார்கள். என் புகுந்த வீட்டில் தான் நான் மூத்தவள்! ஆனால் எனக்கு நினைவு தெரிந்து என்னோட ஆறேழு வயதிலேயே அம்மாவழித் தாத்தா மற்றும் பெரிய மாமா ஆகியோர் "அம்மா" என்றே அழைப்பார்கள். அதிலும் தாத்தா என்னோட ஜாதகப் பெயரான சீதாலக்ஷ்மி என்பதைச் சுருக்கி "சீதம்மா!" என்பார். கொஞ்சுவது கூடக் கட்டிக்கட்டி சீதா! என்று தான்! சுமார் ஏழு வயது வரை இப்படிக் கொஞ்சி இருக்காங்க! :)))))) அதன் பிறகு நிறையப் பேத்திகள்! :)))))

      நீக்கு
    7. @ஸ்ரீராம், பிரண்டையை எப்போ வேணுமானாலும் சாப்பிடலாம். துவையல், ரசம் வைப்பார்கள். நான் அதிகம் துவையல் தான் பண்ணி இருக்கேன். தூதுவளை ரசம், ஓமவல்லி ரசம் வைப்பேன். அதில் சமீபத்தில் ஓமவல்லி ரசம் வைத்தப்போ ஒத்துக்கவே இல்லை. இப்படிச்சில சமயம் ஆகிறது. அதே போல் கண்டந்திப்பிலியும் இப்போல்லாம் ஒத்துக்கறதில்லை. :(

      நீக்கு
    8. எப்போ வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று தெரியும்.  பிரச்சனைகள், அதை நான் மட்டுமோ, பாஸும் கொஞ்சமோ போட்டுக் கொள்வார்கள்.  அடுத்தது என்ன, எப்படி  செய்வது என்று தெரியாத பிரச்னை

      நீக்கு
    9. நாங்கள் 2 வருடங்கள் முன்பு வரை சாலை காய்கறி கடைத்தெருவில் காய் கனிகள் வாங்கினோம். அது ஒரு கொத்தவால் சாவடி போன்றது. அங்கு பிரண்டை என்ன, சிவப்புக் கீரையைத்தவிர வேறு கீரை போலும் கிடைக்காது. பின்னர் கொரனோ வந்தபின் ஆன்லைனில் காய் வாங்குவதால் இதை எல்லாம் ஆர்டர் பண்ண முடியாது.


      தற்போதும் பால் மற்றும் சின்ன சில்லரை சாமான்கள் தவிர மற்றவை ஆன்லைனில் தான் வாங்குகிறோம்.

      Jayakumar

      நீக்கு
  12. சிவசங்கரி அவர்கள் தன் படைப்புகளை இணையத்தில் வெளியிடவில்லை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ஹிண்ட் 


      இந்த சுட்டியைப் பாருங்கள், எல்லோருக்கும் பயன் படலாம். இலவசம். 


      https://tamilbookspdf.com/


      Jayakumar

      நீக்கு
    2. இந்தச் சுட்டி எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது.

      நீக்கு
    3. இந்தச் சுட்டியில் நானும் டவுன்லோட் செய்வதுண்டு ஜெகே அண்ணா.

      சிவசங்கரி அவர்களின் புத்தகங்கள் முன்பு இணையத்தில் இல்லை. ஆனால் இந்தச் சுட்டியில் இருக்கிறது பானுக்கா. எடுத்து வைத்துள்ளேன்.

      கீதாக்கா அது மீடியா ஃபைர் க்கு கொண்டு செல்லும் டவுன்லோட் செய்ய.

      கீதா


      நீக்கு
    4. மீடியாஃபைருக்குப் போகலை! :)))) ஏதேதோ விளம்பரங்கள்! :)))))

      நீக்கு

    5. விளம்பரங்களை தொடாமல் பொடி எழுத்தில் இருக்கும் (மேல் அல்லது சைடில்) லிங்க் கிளிக் செய்யவும், மொத்தம் 2194 தமிழ் புத்தகங்கள் உள்ளன.
      Jayakumar

      நீக்கு
    6. மேலே செர்ச் பாக்ஸில் தேவையை டைப் செய்து நேரே டவுன்லோட் பக்கம் செல்லலாம். டவுன்லோட் பட்டன் கொஞ்சம் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

      நீக்கு
    7. பார்த்தேன். நன்றி கீதா. அதில் ட்ரங்கால் என்று ஒரு புத்தகம் பார்த்தேன். அது சிறுகதை தொகுப்பு என்று நினைக்கிறேன். ட்ரங்கால் என்னும் கதையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை சாக்கோ பாங்கமாக விவரித்திருப்பார். நம்மால் அந்த கதையோடு identify பண்ணிக்கொள்ள முடியும்.

      நீக்கு
    8. //சிவசங்கரி அவர்கள் தன் படைப்புகளை இணையத்தில் வெளியிடவில்லை என்று நினைக்கிறேன்.//

      எஸ்ரா, ஜெமோ, சாரு போன்றோர் தங்கள் தளங்களில் வெளியிடுவது வேறுவகை.  பொதுவாக எந்த எழுத்தாளரும் தன் படைப்புகளை இணையத்தில் தானே பெரும்பாலும் வெளியிட மாட்டார்கள்.  மற்றவர்கள்தான் இந்தத் திருட்டு வேலையைச் செய்வார்கள்.  நாமும் அதைத்தரவிறக்கிப் படிப்போம்.  உண்மையில் இது தப்புதான்.  தவிர்க்க முடியாத தப்புகள்!

      நீக்கு
  13. கதையின் போக்குப்படி இன்று (25.12.2021) நாயகி சென்றால் ஏமாற மாட்டார் காரணம் பரிசல், தெப்பம் நிறைய தண்ணீர் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வருடம் பெய்த மழையில் குளம் நிரம்பாமல் இருக்குமா?

      நீக்கு
  14. ஏணி மலை தெற்கு ஜன்னல் மோஹினி  inspiration ? 

    https://tamilbookspdf.com/books/therkku-vaasal-mohini-by-vikiraman/

    Jayakumar

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. சுவேகா குடும்பத்தினர் முகம் எனக்கு ரொம்ப நெருங்கியவர்களைப் பார்ப்பது போல் உள்ளது. அந்தக் குழந்தையின் திறமைக்கு வாழ்த்துகள். இப்படியான அதிசயங்கள் நிகழும்போது உண்மையிலேயே ஆச்சரியமாக வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா ஹைஃபைவ்! எனக்கும் அப்படியே ஏதோ ரொம்பப் பரிச்சயமாக இருப்பது போலத் தெரிகிறது.

      கீதா

      நீக்கு
    2. ஆமாம்! சுவேகாவின் அப்பா அப்படியே என் பெரியம்மாவின் மூத்த பிள்ளையை (என் அண்ணா) நினைவூட்டுகிறார். அவர் மனைவியும் அதே பெரியம்மாவின் கடைசி மருமகளை நினைவூட்டுகிறார். மனதுக்கு நெருக்கமானவர்களைப் போன்றதொரு எண்ணம்!

      நீக்கு
  17. சுவேகாவிற்கு வாழ்த்துகள்

    விட்டமின் டி தினமும் வெயிலில் நடக்கிறோம். நிற்கிறோம்.

    பிரண்டைத் துவையல் அரைப்பதுண்டு. நம் வீட்டில் நட்டு வைத்த இரு வகைப் பிரண்டையையும் எலி தூக்கிக் கொண்டு போய்விட்டது. அதுக்கு பிரண்டை பிடிக்குமாம்! அதுக்கு முட்டி வலி, மறதி எல்லாம் வந்துவிட்டதோ!!!

    இப்போது அதனால் பிரண்டைப் பொடி ப்யூர், ஆயுஷ் விற்பதை வாங்கி வைத்திருக்கிறேன். நன்றாக இருக்கிறது. அது போட்டுதான் அப்பளம் செய்கிறேன்.

    பிரண்டைத் துவையலும் செய்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எலி தூக்கிக் கொண்டு போய்விட்டது. அதுக்கு பிரண்டை பிடிக்குமாம்! அதுக்கு முட்டி வலி, மறதி எல்லாம் வந்துவிட்டதோ!!!// டாம் என்னும் பூனை துரத்தும்போதெல்லாம் ஓடி ஓடி - முட்டி வலி வந்துவிட்டதாம் - ஜெர்ரியார் சொல்றார்.

      நீக்கு
  18. வண்டியூர் மாரியம்மன் தெப்பக் குளம் செம அழகா இருக்கு. இப்பதான் இணைத்துள்ளீர்கள் போல. இப்ப மழை பெய்திருப்பதால் தண்ணீர் இருக்கிறது என்று நினைக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  19. சிவசங்கரி ஏனோ என்னை ஆரம்பகாலத்தில் இருந்தே அதிகம் கவர்ந்தது இல்லை. எல்லாக் கதைகள்/நாவல்களிலும் அவர் அமெரிக்க அண்ணி/ஏதேனும் ஒரு சின்ன சமையல் குறிப்பு. அதையும் குட்டியூண்டு என எழுதுவதில் அவருக்கு ஒரு சந்தோஷம்! இப்போது நிறையவே மாறி விட்டார் என அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  20. யாரோ கேட்டிருந்தார்கள்! ஓர் எழுத்தாளருக்கு இவ்வளவு சொத்தா என ஆச்சரியப்பட்டு! அவர் குடும்பமே பரம்பரைப் பணக்காரக்குடும்பம். கணவர் தொழிலதிபர். ஆகவே எதற்கும் குறைவில்லை. எழுத்தாளர் சூடாமணி கூடத் தன் கோடிக்கணக்கான சொத்துக்களை அநாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  21. நானும் சமீப காலங்களில் நிறையச் சிறுகதைகள்/நாவல்கள் படித்துக் கொண்டிருந்தாலும் ஏனோ இதெல்லாம் எழுதத் தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதாவது இது குறித்து எழுதவேண்டும் என்று நினைத்துக் கொண்டு படிக்காமல் சும்மா சுவாரஸ்யத்துக்குப் படித்தால் அப்போது மனதில் தோன்றுவதை பின்னர் எழுத்தில் கொண்டு வரலாம்.  அபிப்ராயத்துக்காக படிக்கும்போதே பாரபட்சமும் செயற்கையும் கலந்து விடும்.  அல்லது எதுவுமே ஓடாது.  தொடர்ந்து படிக்கவும் ஓடாது!   இது என் அனுபவம்.

      நீக்கு
    2. நீங்கள் சொல்வது சரிதான் ஶ்ரீராம். நான் விமரிசனத்திற்காகப் படிக்கிறதே இல்லை. மனதில் தோன்றினால் விமரிசிக்கலாம். இல்லைனா இல்லை தான்! :)))))

      நீக்கு
  22. சிவசங்கரியின் இந்த தெப்பக்குளம் கதையை பா.வெ. என்னிடம் எப்படிச் சொன்னாரோ அப்படியே எழுத்திலும் கொண்டு வந்திருக்கிறார்.

    தான் வாசித்த அல்லது தனக்குத் தெரிய வந்த ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்வதும் அதையே எழுத்தில் வடித்துக் காட்டுவதும் வெவ்வேறு செயல்பாடுகள். இருப்பினும் இரண்டு வகைகளிலும் பா.வெ. திறமை பெற்றிருப்பது தான் விசேஷம். அதைக் குறிப்பிட்டுச் சொல்வதில் நம் எபி குடும்பத்தைச் சார்ந்தவர் என்ற வகையில் எனக்கும் பெருமையாகத் தான் இருக்கிறது
    இந்தப் பகுதியில் இன்னும் நிறைய எழுதவிருப்பதற்கு வாழ்த்துக்கள், சகோ.

    பதிலளிநீக்கு
  23. நினைவில் நிற்கும் கதை..

    பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களது கைவண்ணத்தில் அருமை...

    பதிலளிநீக்கு
  24. எந்த முன் அனுபவமும் இல்லாமல் எழுத்துத் துறைக்கு வந்தவள் நான் என்று சிவசங்கரியே சொல்லியிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைப்பதும் அதை சரியாக உபயோகப்படுத்திக் கொள்வதும் பெரிய விஷயம். அவரது 'ஒரு மனிதனின் கதை' வெளிவந்ததும்
    எல்லா தரப்பு வாசகர்களின் கவனத்தையும் கவர்ந்தவர் ஆனார். பின் பெரும் தலைவர்களை பேட்டி காண்பதில் அகில இந்திய எழுத்தாளர்கள் அமைப்புகளில் அறிமுகமாதல் என்று வெவ்வேறு தளங்களில் அவர் பேசப்படுபவர் ஆனார். எதற்கு இதைச் சொல்ல நேர்ந்தது என்றால் வாய்ப்புகளை தட்டிக் கழிக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது தனிக்கலை என்பதைக் குறிப்பிடத்தான்.
    எபியில் தனித்தனி தலைப்புகளில் சுதந்திரமாக எழுத வாய்ப்பு கிடைப்பதும் பெரிய விஷயம் தான்.
    அது ஒரு மனப் பயிற்சிக்கு வடிகாலாக இருக்கும் என்பது உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்பன்பைப் நிறுவனத்தின் சொந்தக்காரர்கள் வீட்டின் அவுட் அவுஸில்தான் நாங்கள் தஞ்சையில் வ வு சி நகரில் குடியிருந்தோம்.  அந்த வீட்டின் மருமகள்தான் சிவசங்கரி.  அங்கு அவர்களை என் தந்தை சந்தித்து உரையாடியபோது பார்த்திருக்கிறேன்.  அவர் வாசல் வராண்டாவில் காபியும் பேப்பருமாக அமர்ந்திருக்கும்போது பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    2. ஒ.. அப்படியா?.. அவர்கள் விழுப்புரம் பக்கம் வந்த பிறகு தான் எனக்குத் தெரியும். அந்நாளைய பிரபல இலக்கிய ஆர்வலர் இனியவன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு மதுராந்தகம் வந்திருந்த்தார். அவரை முதன் முதலாக நேரில் பார்த்து பேசியது அப்போது தான்.

      நீக்கு
  25. குறிப்பிட்ட தலைப்புகளில் வெவ்வேறு விஷயங்களுக்கு மனம் அலை பாயாமல் கோர்வையாக எடுத்துக் கொண்ட விஷயத்தை வாசிப்பவர்களுக்கு நேர்த்தியாக விவரிக்கும் ஆற்றல் பெற இந்த மாதிரி பயிற்சிகள் உதவுகின்றன.
    குறிப்பாக நம் போக்கில் வாசிப்பதை
    ரசிக்கவும் முக்கியமாக அதைப் பிறரிடம் பகிர்ந்து கொண்டு ஒரு கூட்டு ரசிப்பாக ஆனந்திக்க வழி ஏற்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ இந்த பண்புகள் நம்மை உருவாக்குவதில் ஒரு பெரும் பங்கு வகிக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி அண்ணா உங்களின் இந்த இரண்டு கருத்துகளையும் அப்படியே ஆமோதிக்கிறேன்.

      பானுக்கா சொல்லியிருப்பது போல் ஒத்த ரசனை உடையவர்களோடு பகிர்ந்துகொள்வது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்பதையும் சேர்த்து..

      கீதா

      நீக்கு
    2. ஒத்த ரசனை என்பதைப் பொதுவாக கணக்கில் எடுத்துக் கொள்ளுவதற்கு ஆரம்பத்தில் அவசியமில்லாதே போகும். ஏதோ வித்தியாசமாக இந்தப் பகுதி இருக்கிறதே என்று வாசிக்க பிடித்திருந்து பாராட்ட மனம் வந்தாலே போதும்.

      நீக்கு
    3. யோசித்துப் பார்க்கையில் அந்தப் பாராட்டும் எழுதுபவர்க்கு முக்கியமில்லை என்பது புரியும்.
      பல புதுப்புது வாசிப்பு அனுபவங்களுக்கு வாசிப்போர் பழக்கப்படுக்கிறார்கள் என்பதே முக்கியமாகிப் போகும்.

      நீக்கு
    4. ஜீவி ஸார் சொல்பவற்றை ஆமோதிக்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன்.

      நீக்கு
  26. ஒத்த ரசனை உள்ளவர்களோடு படித்தவறறை பகிர்ந்து கொள்வது ஒரு நல்ல அனுபவம்.

    பதிலளிநீக்கு
  27. செல்வி ஸ்வேதா போன்றவர்கள் இந்நாட்டின் கண்மணிகள்..

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    இன்றைய செய்திகள் அருமை. சாதனை புரிந்த ஸ்வேதா அவர்களின் திறமைக்கு மென்மேலும் புகழுடன் வாழ்வில் பல வெற்றிகளை அடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் "நான் படித்த கதை" பகிர்வில் தெப்பக்குளம் கதை நன்றாக உள்ளது. கதை சுருக்கத்தை அழகாக விவரித்துள்ளார். வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் படமும் நன்றாக உள்ளது. நானும் இப்போதுதான் இந்த தெப்பக் குளத்தைப் பார்க்கிறேன். இந்த கதையும், மற்றொரு கதையும் நான் படித்ததில்லை. எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய இரண்டு கதைகளையும், சுவைபட சுருக்கி எடுத்து கூறியிருக்கும் சகோதரி பானுமதி அவர்களின் சிறந்த எழுத்தாற்றலுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  29. பாராட்டுக்கு நன்றி கமலா. படித்தவற்றை மிக அழகாக விமர்சிக்கும் உங்களாலும் நீங்கள் படித்து ரசித்த கதையைப் பற்றி எழுத முடியும். முயற்சி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்களின் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி சகோதரி. இறைவனின் சித்தப்படி முயற்சி செய்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  30. நானும் இந்தக் கதையை வாசித்திருக்கிறேன். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!