செவ்வாய், 28 டிசம்பர், 2021

ஏணிமலை 5/5

 

முந்தைய பகுதிகள் சுட்டி : - பகுதி 1 - -  பகுதி 2 - - - பகுதி 3 - - - -பகுதி 4 

- - - - -

கதை எழுதி முடித்ததும், முனியின் உதவியாளருக்கு அமா ' கதை எழுதிமுடித்துவிட்டேன் ' என்று செய்தி அனுப்பினார். 

உதவியாளர் அனுப்பிய டாக்ஸியில் ஏறி, கோவை வந்து, கோவையிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தார். 

= = = =

மறுநாளே, அவர் எழுதியிருந்த கதையை பிரிண்ட் எடுத்துக்கொண்டு, ஒரு கோப்பில் வைத்துக்கொண்டு உதவியாளர் சொன்னபடி, காலை பத்து மணிக்கு டைரக்டர் முனியின் அலுவலகத்திற்கு புறப்பட்டார். ஏதோ பேசுவதற்கு வந்த அவருடைய அம்மாவிடம், " அம்மா - எல்லாம் அப்புறம் பேசுவோம். இப்போ நான் அவசரமாக டைரக்டர் முனியைப் பார்த்து அவரிடம் நான் எழுதிய கதையைக் கொடுக்கவேண்டும்" என்று சொல்லி புறப்பட்டுவிட்டார்.  

அலுவலகத்தில், முனியும் அவருடன் பாபு என்ற ஒருவரும் இருந்தனர். 

அமா கொடுத்த கதையை வாங்கி, மேலோட்டமாக வாசிக்க ஆரம்பித்த முனி, சில நிமிடங்களில் அதை ஊன்றிப் படிக்க ஆரம்பித்தார். அவர் முகத்தில் ஆவல், சுவாரஸ்யம் எல்லாம் தென்பட்டன. ஒரு முறை படித்தவர், மீண்டும் மெதுவாக ஆரம்பம் முதல் கடைசி வரை அந்தக் கதையைப் படித்தார். 

பிறகு அவர் அமாவிடம், " சபாஷ் - சூப்பர் திகில் கதை. நான் முற்றிலும் எதிர்பார்க்காத சப்ஜெக்ட். எனக்குப் பிடித்திருக்கிறது. பாபு - சார் பெயருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் செக் தயார் செய். ஒப்பந்த பேப்பர் தயார் செய்து அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொள்" என்றார். 

( ** இதுல என்ன த்ரில் இருக்கு? ஏணிமலை கதையை படம் எடுத்தா படம் flop - ' என்றெல்லாம் கருத்துரை எழுத நினைப்பவர்கள் கவனத்திற்கு : 'ஏணிமலை' கதை போஜன், அமாவுக்கு சொன்ன கதை. ஆனால், அமா எழுதிய - 'அகிலா ? திகிலா ?' என்னும் கதை அதுவல்ல. முனி கேட்டதற்கிணங்கி அவர் எழுதியது இதுவரை எங்கும் வெளிவராத புதிய கதை. கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, படம் வெளிவந்து, ஹிட் ஆகும் வரை, அவர் அந்தக் கதை பற்றி எங்கும் எழுதக் கூடாது; பேசக் கூடாது. அடுத்த வருடம் முனியின் படம் வெளியாகும். " மூலக்கதை : அமானுஷ்யன் " என்று டைட்டில் விவரம் பார்த்தால், கைதட்டி, விசில் அடித்து படம் சூப்பர் ஹிட் ஆக உதவி செய்யுங்கள்! படம் அதே பெயரில் வெளியாகுமா அல்லது மாற்றப்படுமா என்பது தெரியாது. ) 

முனி அமாவிடம் கூறினார் : " இந்த ஐம்பதாயிரம் முன் பணம். படம் எடுத்து முடித்தவுடன் உங்களுக்கு இரண்டு  லட்ச ரூபாய் கொடுக்கிறோம். படம் வெளிவந்து, யாரும் கதைக்குச் சொந்தம் கொண்டாடி கேஸ் போடாமல் இருந்து, படம் ஹிட் ஆனால் உங்களுக்கு மேலும் ஐந்து லட்ச ரூபாய். சரிதானே? "

அமானுஷ்யனுக்கு பரம சந்தோஷம். முனியிடம், " மிகவும் நன்றி சார். உங்கள் உதவியாளர் மோகினியைக் கூப்பிடுங்கள். அவர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும்" என்றார். 

" என் உதவியாளர் மோகினியா? அப்படி யாரும் கிடையாதே! என்னுடைய இரண்டு உதவியாளர்களும் ஆண்கள் !! டேய் பாபு - என்னடா இது?"

பாபு : " சார் நீங்க இவருக்குக் கொடுத்த நம்பர் நம்ப மோகன் நம்பர். அவன்தான் இப்படி போக்கிரித்தனம் ஏதாவது அடிக்கடி செய்வான். மோகினி என்ற பெயரில் இவருக்கு செய்திகள் அனுப்பியிருப்பான் " 

முனி : " மோகியைக் கூப்பிடு "

பாபு சென்று மோகனை அழைத்து வந்தான். 

முனி : " டேய் மோகீ - என்னடா இதெல்லாம்? "

மோகன்: " சும்மாதான் பாஸ். அமானுஷ்யன் என்பவர் அமானுஷ்யக் கதை எழுதப்போகிறார் என்று நீங்க சொன்னதும், அவருக்கு அவர் சொன்ன ஹோட்டலில் மோகினி என்ற பெயரில் ரூம் புக் செய்தேன். திகில் கதை எழுத அவருக்கு ஒரு கிக் ஸ்டார்ட் கொடுத்தேன் பாஸ்."

எல்லோரும் சிரித்தனர். 

= = = = 

மோகினி விஷயத்தில் ஏமாற்றம் ஒருபக்கம் இருந்தாலும், பணம் கிடைத்த சந்தோஷத்துடன் வீடு திரும்பினார், எழுத்தாளர் அமா. 

அவருடைய அம்மா, " இப்போ நேரம் இருக்குதாடா? நான் சொல்ல வந்ததை சொல்லலாமா ? "

அமா : " சொல்லும்மா. என்ன விஷயம்? "

அம்மா : " உன் கல்யாணத்திற்கு பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்திருந்தோமே. நீ சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று கிளம்பி, கதை எழுதப் போய்விட்டாய். நீ கிளம்பிப் போன மறுநாளே  நம்ம வீட்டு விலாசத்திற்கு ஒரு பெண்ணின் ஜாதகம், போட்டோவுடன் வந்தது. ஜாதகத்தை உன் அப்பா நம்ப குடும்ப ஜோஸ்யரிடம் காட்டி, உன் ஜாதகத்தையும் கொடுத்து, பொருத்தம் பார்க்கச் சொன்னார். பிரமாதமாக பொருந்துகிறது என்று ஜோஸ்யர் சொல்லிவிட்டார். பெண்ணும் நல்லா அழகா இருக்கா. நீ பார்த்து பிடிச்சுருக்கா என்று சொல்லு. அவர்களோடு மேற்கொண்டு பேசலாம் " 

அமா ஆவலோடு அந்தக் கவரை வாங்கி, அதில் இருந்த பெண்ணின் புகைப் படத்தைப் பார்த்தவர் அதிர்ச்சியடைந்தார். 

ஹோட்டல் வெண்ணிலாவில் அவர் கனவில் தோன்றி தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி கேட்ட அதே பெண்! 

அமா: " பெண்ணின் பெயர் என்ன அம்மா ? " 

அம்மா : " மோகினி "

(முற்றும்) 

=======  =========   ========= 

எங்கள் 

பின் குறிப்பு 1 :

ஆமாம் - கதை முடிந்துவிட்டதே! எழுதியவர்(கள்) யார்? 

எழுதியவர்(கள்),  இந்தப் பதிவின், 'கருத்துரை(கள்)' பகுதியில், கடைசி கருத்துரையாக தங்கள் கருத்துரையை இடுகிறேன் என்று உறுதியளித்துள்ளார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். 
 
===== ====== ======  =======   
பின் குறிப்பு 2 : 

'கதை முழுமை பெற்றதைப் போலத் தெரியவில்லையே,  இந்தக் கதையின் தொடர்ச்சி / அல்லது இறுதிப் பகுதியை தாங்கள் எழுதலாமா என்று கேட்கும் வாசகர்களுக்கு : " தாராளமாக எழுதலாம். எழுதி எங்களுக்கு அனுப்பவும் " 

= = = = = = 

143 கருத்துகள்:

 1. எல்லோருக்கும் காலை வணக்கம்..

  தொடருமா! யார் வேண்டுமானாலும்?!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாலை வணக்கம் மதுரை...

   உங்க ஊர் ஓ மை எப்படி இருக்கு!! அதுவும் ஒரு அமானுஷ்யம் போல்!!

   அங்கு இருக்கும் எங்கள் உறவினர் பையன் ஒருவருக்கு ஓ மை வந்திருக்கு!!

   கீதா

   நீக்கு
 2. என்னது கதையா இன்று.. அப்ப நான் ராங்கான இடத்திற்கு வந்துவிட்டேன்

  பதிலளிநீக்கு
 3. ஹாஹாஹா ப்ராக்கெட்ல 'அகிலா ? திகிலா ?' கதையே வேற என்று சொல்லி கதை வெளியில் வரக்கூடாது என்று எழுத்தாளர் எஸ்கேப்...இதை ரசித்தேன்.

  முடிவு பிடித்தது. ட்விஸ்ட் கொடுத்து!!!

  //எழுதியவர்(கள்), இந்தப் பதிவின், 'கருத்துரை(கள்)' பகுதியில், கடைசி கருத்துரையாக தங்கள் கருத்துரையை இடுகிறேன் என்று உறுதியளித்துள்ளார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். //

  ஆ ஆ அவங்களும் இங்கு கருத்து இட்டாங்களா...ஹாஹாஹா கௌ அண்ணா!! அது நீங்கதானே!! எழுத்தாளர்!

  கீதா

  பதிலளிநீக்கு
 4. என்னாங்கோ இப்படி கதை அடிச்சு எங்களை முட்டாள்கள் ஆகி விட்டீர்களே.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகி ஆக்கி என்று திருத்திக்கொள்ளவும்.

   நீக்கு
  2. ஹாஹாஹாஹா கடைசில காமெடி பண்ணுவதுதான் கௌ அண்ணா ஸ்டைல்!!!!

   அவருக்கு கொலை, ரத்தம் இதெல்லாம் அலர்ஜி! யாரையும் பிழிய பிழ்ய அழ விடமாட்டார்!!!!! அதனால் அதை எல்லாம் எழுத மாட்டார்!!!

   கீதா

   நீக்கு
  3. ஜெகே அண்ணா,

   இதிய எழுதியவர் கௌ அண்ணா என்று என் மனதில் தோன்றிவிட்டதால் ச்சே இப்படி முடிவு ஆகிவிட்டதே என்று வரவில்லை வராது!!!

   கீதா

   நீக்கு
  4. அப்போ "முட்டாள்கள் ஆகிவிட்டீர்கள்" என்பது சரி என்கிறீர்களா?

   Jayakumar

   நீக்கு
  5. ஹாஹாஹா...

   நான் அமானுஷ்யம் வருமா முடிவு சொதப்பாமல் இருக்குமா என்று கேட்டதற்கு ஸ்ரீராம் சொல்லியிருந்தாரே...கதையின் முடிவை எதிர்பார்க்காதீர்கள் எதிர்பார்த்தால் ஏமாற்றம் என்று!!!

   ஸ்ரீராமின் வாசனையும் கதையில் இந்த முடிவுப் பகுதியில் கொஞ்சம் தெரிகிறது!!!

   கீதா

   நீக்கு
 5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  தொற்றில்லாத வாழ்வு தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 6. மீண்டும் மீண்டும் மோஹினி.
  பரபரப்பாக முடிந்துவிட்டது.

  அமா 50 வயதுக்காரர் என்று நினைத்தேன். இனிமே தான் கல்யாணமா:)

  யார்தான் எழுதினார்கள் என்று பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 7. அமாவுக்கு இனிமேல்தான் திருமணமா?
  ஒரு கதாசிரியருக்கு தமிழ் சினிமாவில் இவ்வளவு சம்பளமா? நல்ல கதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுஜாதா நல்ல தொகை கிடைத்ததாகச் சொல்லி இருக்கார். அடுத்து பாலகுமாரன். இப்போ ஜெயமோகன்.

   நீக்கு
  2. ஆமாம். எஸ் ராவும் கூட சினிமாவுக்கு எழுதியிருக்கிறார். ஆனால் தொகை பற்றித் தெரியவில்லை.

   என்ன இது...அமாவுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்பதெல்லாம் முந்தைய பகுதியிலெயே வந்துவிட்டதே!!!!!..யாரும் கவனிக்கலையோ!! ஹாஹாஹாஹாஹா

   கீதா

   நீக்கு
  3. // அமாவுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்பதெல்லாம் முந்தைய பகுதியிலெயே வந்துவிட்டதே!!!!!.// அதே, அதே!

   நீக்கு
 8. திகில் கதையாக ஆரம்பித்தவர் முடிக்கையில் நகைச்சுவையாக முடித்து விட்டாரே! ஆனால் அந்த அக்கம்மாவின் கதையில் புதுசாக எதுவும் இல்லைதான். வழக்கமான பண்ணையார் பெண் மோகம்/வேலைக்காரனின் மனைவி தற்கொலை அல்லது கொலை/பழி வாங்குதல் இதானே! எத்தனை கதைகள்/எத்தனை படங்கள் வந்தாச்சு! அப்படிப் பார்த்தால் இது கொஞ்சம் புதுமை தான்! அமா மோகினியைக் கல்யாணம் செய்து கொண்டாரா என்பது அடுத்த சஸ்பென்ஸா? யார் எழுதப் போறீங்க?

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம் நல்வரவு, வாழ்த்துகள், நோய்த் தொந்திரவு இல்லாத நாட்களுக்காகப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 10. இது நிச்சயம் ஜீவி சாரோ, கௌதமன் சாரோ அல்ல. ஒரு வேளை ஶ்ரீராமாக இருக்கலாம், முடிவைப் பார்க்கையில். கடைசியில் யார் சொல்லப் போறாங்கனு தெரிஞ்சுக்கக் காத்திருக்கேன். ஆனால் மற்றவர் நடையை வெகு நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டு அதை வைத்து வாசகர்களைக் குழப்பி இருக்கார் முடிந்தவரை! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால் மற்றவர் நடையை வெகு நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டு அதை வைத்து வாசகர்களைக் குழப்பி இருக்கார் முடிந்தவரை! :)))))//

   ஆமாம் இதையும் நான் முதலிலேயே ஒரு கருத்தில் சொல்லியிருந்தேன்...

   ஸ்ரீராமுக்கும், நெல்லைக்கும் இந்தத் திறமை உண்டு. எனவே இவர்களாக இருக்குமோ!!!!!

   கீதா

   நீக்கு
  2. நெருங்கி வந்துட்டீங்க என்று தோணுது. பார்ப்போம்.

   நீக்கு
 11. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் கெளதமன் சகோதரரே

  கதை பிரமாதம்.(நீஙகள் எழுதியது) கதைக்குள் வரும் எழுத்தாளர் எழுதியதைதான் (அகிலா, திகிலாவை)
  படிக்க முடியாது என ஆகி விட்டதே..! அதுதான் நீங்கள் எழுதியதிலும், கதையின் கடைசியில் ஒரு திகிலாகவே முடித்து தந்து விட்டீர்கள் போலும். கதையின் ஆரம்பத்திலிருந்தே மிகவும் நன்றாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதி இருக்கிறீர்கள். (அதிலும் "நான்" கருத்துரைகளின் கடைசியில் வந்து காட்சி தருவேன் என்ற சஸ்பென்ஸோடு.)

  அம்மாவின் கதையை படமெடுத்து வெளியிட்டு அது வெற்றியடையும் நாள் வரை காத்திருக்கும் டைரக்டர் முனியைப் போல எங்களுக்கும் இன்றைய நாள் முழுக்க பரபரப்புத்தான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 13. கதைக்கான பின்னூட்டங்கள் ஒன்று என்றால்
  கதாசிரியரைப் பற்றிய யூகங்கள் பல ஊட்டங்களாகின்றன.
  ஆக மட்டும் பங்களூர்க்காரர்கள் மட்டும் பங்கேற்றனரோ:)

  பதிலளிநீக்கு
 14. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 15. @ வல்லியம்மா..

  //அமா 50 வயதுக்காரர் என்று நினைத்தேன். இனிமே தான் கல்யாணமா:)..//

  நானும் இப்படித்தான் நினைத்திருந்தேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் முதல் பகுதியிலேயே படித்தேன் - அமா ஹோட்டலில் விவரங்கள் கூறும்போது சொன்னதை.

   நீக்கு
  2. அமா சின்ன வயது தான் என்பது முதல் அத்தியாயத்திலேயே வந்திருந்ததே!

   நீக்கு
  3. முதலிலும் அப்புறம் போஜனுடன் பேசும் பகுதியிலும் பௌர்ணமி பற்றி பேசுறப்ப வரும்...

   கீதா

   நீக்கு
  4. அன்பின் துரை,
   50 வயது பக்கம் இருப்பவர் எழுதிய எழுத்து.
   இளமையும் வரும்.பாதுகாப்பு உணர்ச்சியோடு எழுதுவதும் தெரியும்.
   கதை எழுதினவரின் வயதைத்தான் எழுத்தில் பார்க்கமுடிகிறது.

   அதாவது ஜெயராஜ் மாதிரி கோபுலு வரைய முனைவது
   போல:)

   நீக்கு
  5. கதையைப் படித்து உறங்கி விட்டு வந்து பார்த்தாலும் இன்னும்
   ஆசிரியர் வந்து சொல்லவில்லை.

   மோஹினிக் குழப்பம் வேற.:)

   அமா படத்தையும் பக்கத்தில் வைத்திருக்கலாம்.:)

   நீக்கு
  6. :)) அமா படம்தான் முதல் அத்தியாயத்திலேயே வந்துள்ளதே!!

   நீக்கு
 16. அகிலா திகிலா என்று கதையை மாற்றிய கோணம் ரசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
 17. கதையை எழுதியவர் யார் என்ற கண்டுபிடிப்புக்கு முன்னே இன்னொரு கண்டுபிடிப்பு க்ளூ :

  கடைசிப் பகுதியில் : பின்னுரை 1
  என்றிருப்பதில் 'கருத்துரை' என்ற வார்த்தை எத்தனை தடவைகள் வருகிறது என்று எண்ணிக்கொள்ளுங்கள்.

  இதே மாதிரி repetition வார்த்தை எங்கேயாவது கதையில் வருகிறதா என்று பாருங்கள். வரவில்லை என்றால் இந்த பின்னுரையை எழுதியவர் கதையை எழுதவில்லை என்று லிஸ்டிலிருந்து அவரை எடுத்து விடுங்கள்.

  அதுசரி, இந்த பின்னுரையை எழுதியவர் யார்? இது கூட உங்களுக்குத் தெரியாத ஒன்றா?...
  ஆமாம், பின்னுரையை எழுதியவர், சாட்சாத் நீங்கள் நினைக்கும் அவரே தான்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெளிவாக இருந்தேன். இப்போ குழம்பியாச்சு.

   நீக்கு
  2. ஆமாம், பின்னுரையை எழுதியவர், சாட்சாத் நீங்கள் நினைக்கும் அவரே தான்!..//

   அதையும் நீங்கள் சொல்லியிருக்கலாமே ஜீவி அண்ணா...யார் என்பதை

   கீதா

   நீக்கு
 18. கண்டுபிடிப்பு: 2

  ஸ்ரீராமின் எழுத்தில் ஒரு இடத்திலாவது சுஜாதாவின் பாதிப்பு இல்லாது இருக்காது. 5 பகுதிகள் படித்தீர்களே, ஏதாவது ஒரு இடத்திலாவது சுகாதாவின் பாதிப்பு இருந்ததா? இருந்திருந்தால் ஸ்ரீராம், இல்லையென்றால் அவர் இல்லை. சுளுவான இந்த முடிவை எடுக்க வேண்டியது நீங்கள் தான்!

  பதிலளிநீக்கு
 19. கண்டுபிடிப்பு : 3

  நெல்லை இந்தக் கதையை எழுதியிருந்தால் எங்கேயாவது ஒரு இடத்திலாவது சாப்பாட்டு விஷயத்தைத் தொட்டு ஒரு வரியாவது வந்திருக்கும். கதையை இன்னொரு முறை படித்து அதையும் தீர்மானிக்க வேண்டியது நீங்கள் தான்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா - நெ த எழுதிய சிலகதைகள் (உதாரணம் : https://engal6.blogspot.com/2017/09/blog-post.html) சாப்பாடு பற்றி எல்லாம் ஒன்றும் கிடையாது.

   நீக்கு
  2. நெல்லை கோயில் பற்றிய பேச்சுக்களில்/எழுத்தில் சாப்பாடை/பிரசாத வகையறாக்களைக் கொண்டு வருவாரே தவிர்த்து மற்றவற்றில் இல்லை. அவர் இது எங்கள் இடம் பகுதியில் ராஜிவ் காந்தி கொலையை வைத்து எழுதி இருந்த திக். திக். திக் சிறுகதை நல்ல விறுவிறுப்புடன் இருந்தது. இது ஆரம்பத்தில் விறுவிறுனு ஆரம்பம் ஆனாலும் பின்னால் வெறும் ரம்பமாகிப் பழகிய பாதையிலேயே பயணித்து விட்டது. பேய்க்கதைக்கே சிப்பாய்ச் சிரிக்கும் எனக்கு இது படிச்சதும் இன்னும் சிப்புச் சிப்பாய் வருது. :)))))

   நீக்கு
 20. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்! அருமையான, அமானுஷ்ய கதை. கதாசிரியருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்! யாரென்று அறிந்து கொள்ள ஆவல்!

  பதிலளிநீக்கு
 21. எப்படியோ -

  வெட்டு குத்து ரத்தக் களறி என்று இல்லாமல் கதைக்கு சுபம் போட்டாயிற்று...

  பதிலளிநீக்கு
 22. இருந்தாலும் மோகினியின் முகத்தில் குரூரப் புன்னகை கொஞ்சம் தெரிகிறது.. சிரிக்கும் போது சிங்கப் பல் இருக்கின்றனவா என்று பார்த்து கவனமாக இருந்து கொள்ளவும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமானுஷ்யன் கவனத்தில் கொள்ளட்டும். (நமக்கு என்ன !!)

   நீக்கு
  2. கொஞ்சம் புன்னகை ஒரு மாதிரித்தான் இருக்கு. துரை சொன்னதும் மறுபடி போய்ப் பார்த்தேன்.

   நீக்கு
 23. மோகினியோ..
  வன மோகினியோ!.. -
  கழுத்து பத்திரம்...

  சரி.. தேனிலவுக்குப் போகும்போது எந்தப் பெயரில் அறைக்கு முன்பதிவி செய்வார்கள்?..

  ஜடாமுனி என்றா..
  ஜகன்மோகினி என்றா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜகதல பிரதாபினி என்று முன்பதிவு?

   நீக்கு
  2. கல்யாணம் பண்ணிக்கப் போறது அமா இல்லையோ? ஆகவே அம்மோகினி/அல்லது அமாகினி எனப் பெயர்ப் பதிவு செய்யலாம்.

   நீக்கு
 24. கண்டுபிடிப்பு : 4

  ஒன்னொரு பதிவிலும் கடைசியில் 'பகிர்' என்று போட்டிருப்பதற்கு மேல்
  கெளதமன், ஸ்ரீராம், kg என்றெல்லாம் பெயர் போடப்பட்டிருக்கும்.

  இந்தத் தடவை மட்டும் அந்த இடத்தில்
  'Kasu sobhana' என்று போட்டிருப்பது ஏன்? ஏன்? ஏன்?...

  (தெய்வமே! இதே சந்தேகம் எனக்கும் ஏற்பட்டது என்று யாரும் பின்னால் சொல்லாமல் இருக்க வேண்டுமே!))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜிவி அண்ணா இந்த காசு சோபனா சந்தேகம் முதல் பகுதியிலேயே வந்து டிஸ்கஷனும் ஓடியாச்சே!!! கீதாக்காவும் நானும்

   கீதா

   நீக்கு
  2. அந்த காசு சோபனா என்பது கௌஅண்ணாதான்!!!!!!

   கதை யாருடையது வேண்டுமானாலும் இருக்கலாம் போஸ்ட் செய்பவரும் அவரே என்று சொல்ல முடியாதே...

   கீதா

   நீக்கு
  3. காசு சோபனாவுக்கும்/கௌதமன் சாருக்கும் கொஞ்சமானும் சம்பந்தம் இருக்கா? இல்லைனே நினைக்கிறேன். காசு சோபனாவே எழுதினாரா இதை? அப்படின்னால் கதையை எழுதியவர் பெயர் வெளியிடும்போது காசு சோபனாவின் உண்மைப் பெயரையும் சொல்லச் சொல்லுங்க! இந்தக் கதையின் தயாரிப்பு/வெளியீடு காசு சோபனா என்பது வரை தெரியும். அதோடு முதல் அத்தியாயம் காசு சோபனா பெயரில் தானே வந்திருந்தது. மற்றவற்றில் ஶ்ரீராம், கௌதமன் பெயர் இருக்கா? போய்ப் பார்க்கணும்.

   நீக்கு
  4. 5 பகுதிகளுக்கும் போய்ப் பார்த்தாச்சு.
   இங்கே தான் கோட்டை விட்டு விட்டார்கள். இதையே ஸ்ரீராமோ கேஜிஜியோ போஸ்ட் பண்ணியிருந்தால் நம்மால் ஆதாரபூர்வமாக யூகிக்க முடிந்திருக்க முடியாது.

   நீக்கு
  5. இன்னொருத்தர் எழுதிய கதையைக் கூட காசு சோபனா போஸ்ட் பண்ணியிருக்கலாம். அந்த இன்னொருத்தரை நான் சந்தித்திருக்கிறேன். அது பற்றி ஆரம்ப அத்தியாயம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறேன்.

   நீக்கு
  6. காசு சோபனா பெயரில் வெளியிட்டிருப்பது நம்மை எல்லாம் குழப்பத்தில் ஆழ்த்த என்பது புரியலையா!! யாரு எழுத்தாளர் என்பதைக் கண்டுபிடிக்க...!!!! எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது கீதாக்கா. ஒரு வேளை நீங்க சொல்லியிருப்பது போல் காசு சோபனாவே எழுதியிருக்கிறார் என்றால் உண்மைப்பெயர் சொல்ல சொல்லணுமாக்கும்!!!!!! ஹிஹிஹி

   கீதா   நீக்கு
  7. இன்னொருத்தர் எழுதிய கதையைக் கூட காசு சோபனா போஸ்ட் பண்ணியிருக்கலாம்.//

   அதுவும் சொல்லியிருக்கிறேன் நான் மேலே..

   கீதா

   நீக்கு
  8. அந்த இன்னொருத்தரை நான் சந்தித்திருக்கிறேன் -- என்ற என் வரியை வசதியாக விட்டு விட்டீர்களே!

   நீக்கு
  9. ஜீவி அண்ணா நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள் என்றால் அது ஸ்ரீராம் தான் எனக்குத் தெரிந்து...

   கீதா

   நீக்கு
  10. நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

   நீக்கு
  11. ஜீவி அண்ணா எனக்குத் தெரிந்த நீங்கள் சந்த்தித்திருக்கும் மற்றொருவர் அப்பாதுரைஜி!!

   அவருக்கு அமானுஷ்யம் அதையும் ஜாலியாகச் சொல்வது கைவந்த கலை. ஆனால் இக்கதையை அவர் எழுதியதாக என்னால் சற்றும் யூகிக்கவும் முடியவில்லை அவர் எழுத்து பாணியும் துளிக்கூட இதில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

   கீதா

   நீக்கு
 25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 26. @ கௌதம் (!)

  // அமானுஷ்யன் கவனத்தில் கொள்ளட்டும்.(நமக்கு என்ன!)..//

  அப்போ நீங்க இல்லையா!?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா ஹாஹாஹாஹா....என்ன அண்ணா இப்படிக் கேட்டுட்டீங்க? எழுத்தாளர் அமானுஷ்யன் வந்தாலும் இப்ப பதில் சொல்லமாட்டாராக்கும்!!!!

   கீதா

   நீக்கு
  2. அமாதானே மோகினி மணக்க விரும்புபவர்.

   நீக்கு
 27. வணக்கம் சகோதரரே

  காலை கருத்துரைகளை கண்டு மனதுக்குள் புன்னகைத்தபடி வந்த மதியம் விடை பெற்று நகர்ந்து கொண்டுள்ளது. மாலையின் வரவை வரவேற்க முன்னிரவு"மாலை"கட்டி தயார் செய்து வைத்துள்ளது. மாலைப் பொழுதும் "மாலைகளின்" நறுமண மயக்கத்தில், மயங்கியபடியே முன்னிரவுக்கு வழி தந்து மறைந்து விடும். அந்த முன்னிரவிலாவது, முனியின் கதைக்கும், மோகினியின் பெயருக்கும் முடிச்சு போடும் கதாசிரியர் திரை விலக்கி எட்டிப் பார்ப்பாரா? அதையும் தாமதித்து பின்னிரவும் முன்னிரவின் எல்லையை தொட்டு விட்டால், எ.பியின் வாசகர்களை நித்திராதேவி தொட்டு விடுவாள். ஹா ஹா. ஹா.(ஆனாலும், இன்று கதாசிரியரை காணும் புதரில், அந்த மாய மோகினியே நடு இரவுக்கு மேல் கண்ணெதிரே வந்து நின்றாலும்,புதிருக்கு விடை தெரியாமல் கண் அசர மாட்டோம் என்ற முடிவில் இருந்தாலும் இருக்கலாம்.:)

  கருத்துரைகளின் நடுவே கதாசிரியர் ஒளிந்து கொண்டுள்ளாரா என பார்க்க வந்தேன். காணவில்லை. எப்போது விடை தெரியும்.? நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்போ வந்தாலும் நான் கணினியை ஐந்தரைக்குப் பின்னர் திறப்பதில்லை. ஆகவே நாளைக்கு சாவகாசமா வந்து பார்க்கிறேன்.

   ஆனால் கதை திகிலாக ஆரம்பிக்கப் போவதாகச் சொல்லப்பட்டு நடுவில் என்ன எழுதுவதுனு புரியாமல் ஏதோ இட்டு ரொப்பிப் பின்னர் முடிவில் "அமா"வின் கல்யாணம் அதில் மணப்பெண் ஒரு பேய் என்பதோடு முடிகிறது. :)))))

   நீக்கு
  2. ஆனால் கதை திகிலாக ஆரம்பிக்கப் போவதாகச் சொல்லப்பட்டு நடுவில் என்ன எழுதுவதுனு புரியாமல் ஏதோ இட்டு ரொப்பிப் பின்னர் முடிவில் "அமா"வின் கல்யாணம் அதில் மணப்பெண் ஒரு பேய் என்பதோடு முடிகிறது. :)))))//

   ஹாஹாஹஹா கீதாக்கா அதானே கதையே!!! அதாவது அந்த போஜன் சொல்வதாகவும் இந்த் அமா அதைக் கேட்டு இன்ஸ்பிரேஷனில் வேறொரு திகில் கதை அகிலா திகிலா எழுதுவதாகவும் அது திரைப்படம் வெளியே வரும் போதுதான் தெரியும் என்றும் அதுவரை ரகசியம் என்றும் ப்ராக்கெட்டில் சொல்லியிருக்கிறாரே அமா!!!! ஹாஹாஹா

   எனவே இது அமா ஏணிமலையைப் பற்றி அறியும் கதை அதுதான் இதன் சாராம்சம்!! கதை அமானுஷ்யம் இல்லாமல் சென்றாலும்....இந்த ட்விஸ்ட் எனக்குப் பிடித்திருந்தது. இதுதான் கதை..நாம் தான் அமானுஷ்யம் எதிர்பார்த்து ஏமாந்தோம் கீதாக்கா...கதாசிரியர் நன்றாகவே முடித்திருக்கிறார்.

   இதுதான் அமானுஷ்யனின் அகிலா திகிலா கதை.... பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டு. டைரக்டர் முனிக்கு சிறந்த இயக்குநர் என்று தேசிய அவார்ட் கிடைத்திருக்கிறது....சிறந்த அமானுஷ்ய கதை என்று அமா விற்கும் தேசிய விருது கிடைத்திருக்கு என்று யாராச்சும் அகிலா திகிலா என்பது என்ன கதை என்பதை எழுதலாம்...மீதி ஒடிடி யில் என்று போடாதவரைக்கும்!!! நல்லது!!!! ஹாஹாஹாஹா

   கீதா

   நீக்கு
  3. இந்த ஏமாற்றத்தைப் பற்றி ஸ்ரீராம் முன்னரே சொல்லியிருந்ததால் இது எழுதியது ஸ்ரீராமோ என்று தோன்றுகிறது...

   கீதா

   நீக்கு
  4. ஆனால் இடையில் வரும் அந்த பண்ணையார் "ரிப்பீட்டு" கதை பாணி ஸ்ரீராம் எழுத்து போல் இல்லை...எனவே டவுட்டு டவுட்டா வருது...அதைப் பார்க்கும் போது நெல்லையோ? இந்த நெல்லை நானும் பானுக்காவும் எழுதிய போது எக்கச்சக்க கற்பனைகளில் கதை இப்படிப் போகுமோ அப்படிப் போகுமோ என்றுகருத்தில் சொல்ல நானும் அக்காவும் சிரித்து முடியலை அப்ப. ஸோ அப்படிப் பார்க்கும் போது நெல்லையோ..என்றும்...அல்லது கௌ அண்ணாவும் என் டவுட்டில் இருக்கிறார்...

   கீதா

   நீக்கு
  5. இத்தனை டவுட்டுக்கும் பதில் ஏதும் தராமல் மெளனமாக இருக்கும் கெளதமன் சகோதரர் இன்னும் சற்று நேரத்தில் வந்து "நான்தான் அந்த கதாசிரியர்" எனச் சொல்லப் போகிறார். எனவே அதிர்ச்சி ஏதுமில்லாமல் காத்திருப்போம். ஹா.ஹா.ஹா.

   நீக்கு
  6. :)))) அப்படி எல்லாம் நான் சொல்லமாட்டேன்.

   நீக்கு
  7. அப்போ கதையை எழுதியவர் நீங்கள் இல்லையா? ஒருவேளை"காசு சோபனா" என்ற புனைப் பெயரில் மறைந்திருக்கும் தாங்கள் எழுதியதாக இருக்கும். :))

   நான் கூறிய முன்னிரவும் வந்து விட்டது. புதிர்தான் விலக விரும்பாமல் தொடர்கிறது..:)

   நீக்கு
  8. அப்போ நாளைக்கு தான் வருமா.. ஏமாற்றம்ம்ம்ம்ம்
   ஏமாற்றம்.
   அகிலாவோ திகிலாவோ
   அமாவோ சும்மாவோ
   பாதையில்தான் சிறு மாற்றம்
   பயணத்திலே ஏமாற்றம்....
   இந்தப் பாடல் மோஹினி பாடுவது போல
   ஒரு காட்சி வைக்கலாம்:)

   நீக்கு
 28. திகிலாக ஆரம்பித்து வேறு வழியே இல்லாமல் சகஜ நிலைக்கு கொண்டு வருவது தான் இந்த மாதிரி கதைகளின் இலக்கணம்.

  அதனால் எந்த ஏமாற்றமும் இல்லாமல் கதை எனக்குப் பிடித்திருந்தது.

  பதிலளிநீக்கு
 29. முடிவு நன்றாக இருக்கிறது. யார் எழுத்தாளர் என்பது இன்னும் வெளிவரவில்லை போலும். அப்புறம் தெரிந்துகொள்கிறேன்.

  வாசகர்களின் எதிர்ப்பார்ப்பிலிருந்து வித்தியாசமான முடிவை எழுதிய, புன்னகைக்க வைத்த கிட்டத்தட்ட பழைய குமுதம் பாணியில் எழுதிய (இப்போதைய குமுதம் பற்றித் தெரியவில்லை) எழுத்தாளருக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 30. @ ஜீவி அண்ணா..

  // திகிலாக ஆரம்பித்து வேறு வழியே இல்லாமல் சகஜ நிலைக்கு கொண்டு வருவது தான் இந்த மாதிரி கதைகளின் இலக்கணம்..//

  இது தான் இலக்கணமா!... இது தெரியாமல் கதை ஒன்றை எழுதி இருக்கின்றேன்...

  அது இந்த இலக்கணத்தினுள் இருப்பது தான் விந்தை..

  பதிலளிநீக்கு
 31. எனக்குக் கதையைப் பற்றி இப்படியும் சொல்லத் தோன்றுகிறது..

  முடிவு யதார்த்தம். ஏனென்றால் பொதுவாக திரைப்படத்திற்கு என்று தனியாக எழுதப்படும் கதைகள் வெளியில் வராது. ஒரு சில எழுத்தாளர்களின் கதைகள், தொடர்கள் திரைப்படமாக வருவது என்பது வேறு. திரில்லர் கதைகள் வெளியில் வராது. வந்தால் அதில் என்ன திகில் அல்லது சஸ்பென்ஸ் இருக்கும்?

  ஆரம்பப் பகுதியில் சொல்லப்பட்டது போல் அமா திரைப்படத்திற்குக் கதை எழுத வருகிறார். அவர் அதைத்தான் இங்கு சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லைதானே!! அதுதான் சஸ்பென்ஸ் இந்தக் கதையில்!! எனவே முதல் பகுதியை கடைசிப் பகுதியில் மிகவும் அழகாகப் பொருத்தி முடிக்கப்பட்டிருக்கிறது..இதுவும் ஒரு முடிவு. ....இடையில் வருவது அமா அறியும் அந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை சார்ந்த ஒரு கதை, அதைச் சுருக்கமாகப் போஜன் சொல்வது, அமாவின் அனுபவம் என்று எழுத்தாளர் எழுதுகிறார்...!! எனவே அப்பகுதியில் கதை ஒரே வேகமாகச் செல்கிறது, எழுத்தாளர் வேகமாக முடிக்க நினைக்கிறார் என்று சொன்னது கதையை வேறு வகையில் எதிர்பார்த்ததால்...அமானுஷ்யங்கள் என்று...அப்படிப் பயணித்திருந்தால் கதையை முதல் பகுதிக்கு ஏற்ப பொருத்தி வேறு வகையில் முடித்திருக்க வேண்டி வரும்.

  இப்ப பொருத்தியதும் சரியே. யதார்த்தம். இங்கு பின் குறிப்பு 2ல் சொல்லப்பட்டது போல் கதையை யாரேனும் தொடர ஒரு வாய்ப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அகிலா திகிலா வை அமானுஷய்மாகவோ அல்லது அமானுஷ்யத்தை அறிவியலோடு இணைத்தோ யாரேனும் எழுதலாம்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் அதைத்தான் இங்கு சொல்லவேண்டும்//

   அவர் என்பது இக்கதையை எழுதிய எழுத்தாளர்...

   கீதா

   நீக்கு
 32. இலக்கியம் இயல்பாக கைவரப்பெறும் பேறு பெறும் போது அது தன்னைத் தானே அதற்கானவான இலக்கணத்திற்குள் அடக்கிக்
  கொள்ளும்.

  பதிலளிநீக்கு
 33. 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வேண்டுமானால் பேய்க் கதைகள் திகிலூட்டுபவையாக இருக்கலாம்.

  40 வயதிற்கு மேற்பட்டவர்களெல்
  லாம் அமாநுஷ்யம் அப்படி இப்படி என்று
  அலறினால் நம்ப முடிகிற மாதிரியா இருக்கு? நம்ப வேண்டுமானால் வயதிற்கு ஏற்ற வளர்ச்சி அடையவில்லை என்றே அர்த்தம்.

  அறிவியலுக்கு புறம்பான செய்திகளை புறம் தள்ளும் போக்கு இயற்கையாகவே குறிப்பிட்ட வயதிற்கு மேல் நம்மிடம் அமைந்து விடுவது தான் இயல்பான வளர்ச்சியாகத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 34. 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் படிக்கும் கதைகளில் அமானுஷ்யம் வந்தாலும் தொடர்ந்து படித்து, அதற்கான லாஜிக் கதையில் பிறகு வருகிறதா என்று தெரிந்து கொள்வார்கள். ஜா சீ எழுதிய
  ' உடல் பொருள் ஆனந்தி' , ரா கி ரங்கராஜன் எழுதிய கோஸ்ட், தமிழ்வாணன் எழுதிய ' பேய் பேய்தான்' போன்ற கதைகளில் அப்படிப்பட்ட லாஜிக் எதுவும் வரவில்லை. ஆனாலும் அந்தக் கதைகளை அந்த நாட்களில் இரசித்துப் படித்தவர்கள் அதிகம் பேர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கௌ அண்ணா டிட்டோ...இப்பவும் இரசித்து வாசிப்பவர்கள் இருக்கிறார்கள்தான். நான் உட்பட! யெஸ் நானும் லாஜிக் அறிவியல் என்று பலதும் யோசிப்பதுண்டு

   கீதா

   நீக்கு
  2. அந்த நாட்களில் என்பது தான் முக்கியம்.

   நீக்கு
 35. ஆகக் கூடி,
  இந்த கதையை எழுதியவர் 45 வயதிலிருந்து 60
  வயது வரை இருக்கலாம்.

  2, 60 லிருந்து 70 வரை இருக்கலாம்.
  எப்பதான் சார் சொல்லப் போறீங்க.:)
  ஓ ஸ்ரீராம் ஆஃபீஸ்ல இருந்து இன்னும் வரலியோ :)
  3,
  இது கண்டிப்பா அப்பாதுரை எழுதவில்லை.
  அவர் ப்ராண்ட் வேற!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி அண்ணா எனக்கு அப்படித் தோன்றுவதில்லை. அமானுஷ்யம் என்பது எல்லா வயதினரையும் ஈர்க்கும் ஒரு விஷ்யம். சிறிய வயதில் திகில் என்றால் குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு அது சுவாரசியம், ஜாலி...

   நம்பாதவர்களும் கூட, அறிவியல் சார்ந்து யோசிப்பவர்களும் கூட ஒரு சுவாரசியத்திற்காகக் கேட்பதற்கும் வாசிப்பதற்கும், அப்படியான திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் - வளர்ச்சிக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. நம்புவது வேறு, சுவாரசியத்திற்காக வாசிப்பது கேட்பது, பார்ப்பது வேறு.

   அவர்களுக்கு இயல்பான வளர்ச்சி இல்லை என்று சொல்லமுடியாது இல்லையா...இதற்கும் மெச்சூரிட்டிக்கும் ஜாலியாக வாசிப்பதற்கும் பார்ப்பதற்கும் மனமுதிர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை என்பதே என் எண்ணம்

   அப்படி என்றால் அமானுஷ்ய கதைகள் எழுதும் ஃபேமஸ் எழுத்தாளர்களுக்கும் வளர்ச்சி இல்லை என்ற அர்த்தமாகிப் போகிறதே.

   (அதே சமயம் இந்த அமானுஷ்யத்தை பயப்படுபவர்களும், அதீதமாக நம்பி ஆழ்ந்து அதனால் மனோவியாதி வருபவர்களும் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.)

   கீதா

   நீக்கு
  2. ஹா ஹா ஹா."மேலும் ஏற்றுக" வரும்வரை கதாசிரியர் வேடிக்கைப் பார்த்தபடி ரசிக்கப் போகிறாரா.?

   நீக்கு
  3. சரியாகச் சொன்னீர்கள். ( ஆனால் ஜிவி சார் கருத்துக்கு பதிலாக போடாமல், வல்லிசிம்ஹன் கருத்துரையில் பதிலாக போட்டு குழப்பிவிட்டீர்கள்! )

   நீக்கு
  4. மேலே இருப்பது தி கீதா கருத்துரைக்கு.

   நீக்கு
  5. சரியாகச் சொன்னீர்கள். ( ஆனால் ஜிவி சார் கருத்துக்கு பதிலாக போடாமல், வல்லிசிம்ஹன் கருத்துரையில் பதிலாக போட்டு குழப்பிவிட்டீர்கள்! )//

   ஓ கௌ அண்ணா ஆமாம் இல்லையா இப்பத்தான் பார்க்கிறேன். இந்த ரோபோ வந்து ரொம்பத் தொல்லை...இப்போது இரண்டு மூன்று என்று தொடர்ந்து படங்களும் கொடுத்து டிக் செய்யச் சொல்கிறது...அதில் தவறுதலாக வந்துவிட்டது போல...ஹாஹாஹா

   ஆனால் நல்லகாலம் ஜீவி அண்ணா என்று சொல்லியிருப்பதால் தெரிந்துவிடும்!!!!

   கீதா

   நீக்கு
 36. பார்ப்போம் யார் கடைசி கருத்துரை இடுகிறார்கள் என்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு பதிலாகத்தான் மேலேயிருக்கும் என் பதிலை அனுப்பினேன். அது தன்னைத்தானே எப்படி "மேலே ஏற்றிக்" கொண்டது. ஆகா.. முன்னிரவிலேயே அமாவை மணக்கப் போகும் பெண் வந்து விட்டாளா.?:))

   நீக்கு
  2. அப்படியும் இருக்கலாம். இன்று இரவு நான் கம்பளியை தலையோடு காலாக இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்க வேண்டியதுதான் போலிருக்கு. இல்லையேல் மோகினி வந்து பயமுறுத்துவாளோ!

   நீக்கு
  3. கௌ அண்ணா பயமுறுத்துவதை விடுங்க!!! அமாவிடம் மோகினி கேட்ட கேள்வியை உங்களிடம் கேட்டாலோ??!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  4. எதுக்கும் சிவப்பு கம்லளியாகப் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். கறுப்பு தான் கறுப்புக்கு ஆகாத கலர். கறுப்பு - சிவப்பு கலந்தது என்றாலும் ஓ.கே. ப. பகலவன் கலர் என்பதால்.

   நீக்கு
  5. 'மோகினி அப்படிக் கேட்டாள்' என்று சொன்னேன் என்றால், எனக்கு அப்பளக் குழவி அடி கிடைக்கும்.

   நீக்கு
 37. கதை முடிவு நன்றாக இருக்கிறது. இன்னும் எழுத்தாளர் யார் என்பது வெளிவரவில்லை போலும். அப்புறம்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

  பழைய குமுதம் ஸ்டைல் நினைவுக்கு வருகிறது. இப்போதைய குமுதம் ஸ்டைல் எப்படி என்று தெரியவில்லை.

  அமானுஷ்யன் எழுதிய கதையை சஸ்பென்சாக வைத்து இங்கு எழுத்தாளர் கதைக்குள் கதையாக எழுதி முடித்தவிதம் ரசிக்கும்படியான முடிவு.

  எழுத்தாளருக்குப் பாராட்டுகள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 38. எல்லோரும் எல்லாம் பெயரும் சொல்லி இருப்பதால் ஏ எ குழம்பி இருக்கும் போல.. பின்னே? யார் பெயரைச் சொன்னாலும், 'நான்தான் (அவர் பெயரையும்) சொன்னேனே" என்று எல்லோரும் சொல்வார்களே என்று யோசிக்கிறாரோ?!! எல்லோருமே இவர்தான் அல்லது இவர்கள்தான் என்று உறுதியாகச் சொன்னால் சரியாக இருக்குமே என்று யோசிக்கிறாரோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒப்புக்கொள்கிற மாதிரி நான் ஒருவர் பெயரைத் தான் சொல்லியிருக்கிறேன், ஸ்ரீராம்.

   அவர் ---------

   கா.சு. சோபனா அவர்கள்.

   நீக்கு
  2. //ஏ.எ. குழம்பி இருக்கும் போல.. //

   கரெக்ட். விஷயமே அது தான். !!

   நீக்கு
  3. ஸ்ரீராம் நான் இதுவரை காசுசோபனா எழுதியது எதுவும் வாசித்ததில்லை என்றே நினைக்கிறேன் ஏனென்றால் அவர் யார் என்பதே தெரியவில்லை, யூகிக்க இயலவில்லை. எனவே என்னால் அவர் பெயரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

   என் அனுமான லிஸ்டில் என்றுதான் சொல்ல முடிகிறது. நீங்கள், கௌ அண்ணா, அலல்து நெல்லை. அலல்து கலந்துகட்டி!!! இருவர் அல்லது மூவருமே

   தவறாகவும் இருக்கலாம்..நோ ப்ராப்ளம்!!! ஹாஹாஹஹா

   கீதா

   நீக்கு
 39. சினிமான்னா அது வேறே லெவல். டிராகுலா படங்கள் ஒரு கலக்கு கலக்கதான் செய்யும். இருட்டு சூழல், ஒலி ஓசை, ஆங்கில படங்களில் அந்த தத்ரூபம் எல்லாம் கலந்து கட்டி ஒரு திடுக்கிடுதலை எந்த வயசிலும் ஏற்படுத்தத் தான் செய்யும்..

  பதிலளிநீக்கு
 40. @ கௌதம் (!)..

  // கதையை எங்களுக்கு அனுப்புங்க.. //

  நாளும் ஒன்று என்று ஒன்றை ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றேன்...

  அமானுஷ்ய …...... எனும் பெயரில்
  அருகில் இருக்கின்றாள்..
  நன்றி...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!