செவ்வாய், 21 டிசம்பர், 2021

ஏணிமலை 4 / 5


முந்தைய பகுதிகள் சுட்டி : - பகுதி 1 - -  பகுதி 2 - - - பகுதி 3 

போஜன் சொன்னது : (தொடர்ச்சி) 

தேவிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. செய்வதறியாமல் திகைத்தாள். கண்ணீர் சிந்தியபடி இருந்தாள். அக்கம்மா, தேவியிடம் அவளைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தாள். 

அக்கம்மா, சேலை கவுடாவின் முதல் மனைவியின் அக்கா. சேலை கவுடா முதல் மனைவி இருக்கும்போது, இரண்டாவது, மூன்றாவது மனைவிகளை கல்யாணம் செய்துகொண்டது, அக்கம்மாவிற்குப் பிடிக்கவில்லை. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அக்கம்மா தன்னுடைய தம்பி, தங்கை இருவரையும் காப்பாற்றி, கரை சேர்ப்பதற்காக திருமணமே வேண்டாம் என்று மறுத்து தனியாகவே வாழ்ந்து வந்தாள். தன்னுடைய தங்கையை, ஊர்ப் பணக்காரர் சேலை கவுடா கல்யாணம் செய்துகொள்ள விருப்பபட்டதால், சந்தோஷமாக தங்கையை அவருக்குக் கல்யாணம் செய்துகொடுத்து, சேலை கவுடாவின் ஏணி மலைக் கிடங்குக்கு காப்பாளராக தனியே வசித்து வந்தாள். 

தேவியின் நிலை கண்டு பரிதாபப்பட்ட அக்கம்மா, தேவிக்கு அங்கிருந்து தப்பித்துச் செல்ல ஒரு யோசனை சொன்னாள். 

மறுநாள் முதல், அக்கம்மாவும் தேவியும், எத்தையம்மனை வேண்டிக்கொண்டு கடுமையான  விரதம் மேற்கொண்டார்கள். கிடங்குக்கு ஆட்கள் காய்கறிகளைக் கொண்டு வந்து வைக்கும்போதும், எடுத்துச் செல்ல ஆட்கள் வரும்போதும், தேவி, கண்ணீர் சிந்தியவாறு, கவலையுடன் அமர்ந்திருப்பாள். அக்கம்மா - அந்த நேரங்களில், தேவிக்கு புத்திமதி சொல்வதுபோல, ' சேலை கவுடா சொல்படி நடந்துகொள்' என்று சொல்லிக்கொண்டிருப்பாள். மற்ற நேரங்களில் அவர்கள் இருவரும் எத்தை அம்மன் படத்தை வைத்து பூஜை செய்து, அம்மன் பெயரில் பாடல்கள் பாடுவார்கள். 

அடுத்த பௌர்ணமி நாளும் வந்தது. 

அக்கம்மா கொடுத்த யோசனைப்படி அன்று மாலை, தேவி மஞ்சள் நிறப் புடவை அணிந்து, கிடங்குக்கு வெளியே உள்ள மரத்தைச் சுற்றிவந்தாள். 

இதனை, தன் வீட்டிலிருந்து கவனித்த சேலை கவுடா மிகவும் மகிழ்ந்து, தன் ஆட்களை அனுப்பி, சிறை வைக்கப்பட்டிருக்கும் அர்ஜுனனை உடனடியாக விடுதலை செய்யச் சொன்னார். 

அன்று இரவே வீட்டிலிருந்து புறப்பட்டு, ஏணிமலை சென்றார். 

ஏணியில் படி ஏறி அவர் ஏணிமலை உச்சியை அடைந்தவுடன், அங்கே மரத்தடியில், மஞ்சள் நிறப் புடவை அணிந்திருந்த அக்கம்மா, சேலை கவுடாவை ஏணிமலை உச்சியிலிருந்து ஆவேசமாக கீழே தள்ளிவிட்டாள். அவ்வளவுதான். அலறியபடி கீழே அதளபாதாளத்தில் வீழ்ந்த சேலை கவுடாவைக் காப்பாற்ற அவருடைய ஆட்கள் விரைந்து சென்றார்கள். 

இதற்குள் அக்கம்மா, ஏணியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, தேவியிடம், ' நீ இந்த ஏணி வழியாக இறங்கி தப்பித்துச் சென்று உன் கணவனுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்து. உனக்கும், உன் குடும்பத்துக்கும் எத்தை அம்மன் என்றும் துணையிருப்பாள்' என்று சொல்லி, தேவியை அனுப்பிவைத்தாள்.   

சேலை கவுடா உயிர் பிழைக்கவில்லை. விழுந்த அந்தக் கணமே அவர் உயிர் பிரிந்துவிட்டது. 

நடந்தவற்றை ஒருவாறு ஊகித்து அறிந்த அவரது ஆட்கள், சேலை கவுடா அந்தச் சமயத்தில் வாழ்ந்து வந்த அவருடைய மூன்றாவது மனைவியின் வீட்டுக்குச் சென்று விவரங்களை அங்கிருந்த குடும்பத்தாருக்குச் சொன்னார்கள். 

முதல் மனைவியின் அக்காவாகிய அக்கம்மாவை மூன்றாவது மனைவியின் உடன் பிறந்த சகோதரர்களுக்குப் பிடிக்காது. அந்த சகோதரர்கள் இருவர், சேலை கவுடா இறந்த அடுத்த வாரம், ஏணி மலைக்குச் சென்று,  அக்கம்மாவைக் கொன்று, பழி தீர்த்தனர். அவள் உடலை, அந்தக் கிடங்கின் பின் பக்கமாக இருந்த இடத்தில் புதைத்துவிட்டனர். 

அந்த வீரப் பிரதாபத்தை, ஊர் மக்களிடம் சொல்லி பெருமையடித்துக் கொண்டார்கள். 

ஆனால், அடுத்த பௌர்ணமி நாளில், வெற்றி மதர்ப்போடு ஏணிமலைப் பக்கம் பார்த்த அவர்கள், அங்கே மஞ்சள் நிற சேலை அணிந்த அக்கம்மா உருவத்தைப் பார்த்து, பயந்து போனார்கள்.  

அந்த உருவத்தைக் கண்ட இருவரில் ஒருவருக்கு அப்போதே மயக்கம் வந்து கீழே விழுந்துவிட்டார். மற்றவருக்கு மனநிலை பிறழ்ந்துவிட்டது. சில மாதங்கள், அவர்கள் செய்த தவற்றுக்கு வருந்தி, எத்தை அம்மனிடமும், அக்கம்மாவிடமும் மானசீகமாக மன்னிப்புக் கேட்டனர். ஆனாலும் அவர்கள் உடல்நிலை மேலும் மேலும் மோசமாகி, ஒவ்வொருவரும் அடுத்தடுத்து வந்த பௌர்ணமி நாளில் இறந்துவிட்டார்கள். 

*** *** ***

அமா : " அப்புறம் தேவி, அர்ஜுனன் இருவரும் என்ன ஆனார்கள்? "

போஜன்: " தேவி தப்பித்து வந்ததும், அர்ஜுனனைப் பார்த்து, நடந்த கதை எல்லாவற்றையும் சொன்னாள். மேற்கொண்டு அந்த ஊரில் இருந்தால் பிரச்சனை வரும் என்பதால், இருவரும் அர்ஜுனனின் சொந்த ஊராகிய பாலகோலாவுக்குச் சென்றுவிட்டனர். பிறகு அர்ஜுனனின் நண்பன் மூலம் நடந்த கதை எல்லாவற்றையும் தெரிந்துகொண்டார்கள். அக்கம்மாவின் இறப்பு பற்றிக் கேள்விப்பட்டவுடன், தேவி மிகவும் வருத்தப்பட்டாள். 

பாலகோலாவிலிருந்து பார்த்தால், ஏணிமலை உச்சி நன்றாகத் தெரியும். பௌர்ணமி நாட்களில், அக்கம்மாவுக்கு நன்றி செலுத்தும் விதமாக தேவி, உபவாசம் இருந்து, ஏணிமலை உச்சியைப் பார்த்தபடி, அக்கம்மாவுக்கு மனதார பூக்களால் பூஜை செய்வாள். 

தேவிக்கும் அர்ஜுனனுக்கும் மூன்று பையன்கள், இரண்டு பெண்கள். தேவி காலமான பின்பு அவருடைய விருப்பப்படி, ஏணிமலை அடிவாரத்தில் புதைக்கப்பட்டாள். 

ஆனால் - ஆச்சரியம் பௌர்ணமி நாட்களில், தேவியின் ஆவி, ஏணிமலை உச்சிக்கு வந்து, அங்குள்ள அக்கம்மா சமாதிக்கு மலர் தூவி பூஜை செய்வது தொடர்ந்து பல வருடங்களாக நடக்கிறது. தேவி காலமானபோது அணிந்திருந்தது நீல நிற புடவை. தேவியின் ஆவியும் அதே நீல நிறப் புடவையுடன் தோன்றி பூஜை செய்கிறது. 

காலப்போக்கில் அங்கு இருந்த கோடவுன் சிதைந்து மழையில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. ஆனால், அக்கம்மா சமாதி மட்டும் இவ்வளவு வருடங்களாகியும், அப்படியே உள்ளது. 

சில பௌர்ணமி நாட்களில், தேவியின் ஆவி பூஜை செய்தவுடன் அக்கம்மாவின் ஆவி வெளிவரும். அக்கம்மாவின் ஆவி மஞ்சள் நிறப் புடவையுடன் காட்சி தரும். அந்த நாட்களில் சேலைகவுடா பரம்பரையில் பிறந்த ஆட்கள் மற்றும் எந்தப் பெண்ணையும் அவளுடைய விருப்பம் இல்லாமல் வலிய அடைந்தவர்கள் அந்த உருவத்தைப் பார்த்துவிட்டால், அவர்களுக்கு மரணம் நிச்சயம். " 

அமா கேட்டார் : " போஜன் நீ இவ்வளவு நாட்களாக இங்கே இருக்கிறாயே - நீ தேவியின் ஆவியைப் பார்த்தது உண்டா? "

போஜன் : " இல்லை சார். ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் ஊருக்கு வடக்கே உள்ள எத்தை அம்மன் கோவிலுக்கு சென்றுவிடுவேன்."

அமா : " ஏன்?"

போஜன்: " நான் அக்கம்மாவின் சாபம் கிடைத்த சேலை கவுடா பரம்பரையைச் சேர்ந்தவன். என்னுடைய கொள்ளுப்பாட்டி சேலை கவுடாவின் இரண்டாவது மனைவி. இந்த வட்டாரத்தில் உள்ள எங்கள் பரம்பரை ஆட்கள் எல்லோரும் பௌர்ணமி அன்று எத்தை அம்மன் கோவிலில் கூடி, எங்கள் முன்னோர்கள் செய்த தவறுக்கு எங்களை மன்னிக்கும்படி அம்மனிடம் மனதார வேண்டிக்கொள்வோம். ஏணிமலை இருக்கும் திசையைக் கூடப் பார்க்கமாட்டோம்."

அமா : " நேற்று இரவு நான் தேவி உருவத்தைப் பார்க்காமல், அக்கம்மா உருவத்தைப் பார்த்திருந்தால், என்ன ஆகியிருக்கும்?"

போஜன் : " நீங்கள் சேலை கவுடா பரம்பரையை சேர்ந்தவர் இல்லை. எந்தப் பெண்ணையும் அவளுடைய விருப்பம் இல்லாமல் நீங்க வலிய அடைந்திருந்தவராக இருந்தால், உங்களுக்கு அடுத்த பௌர்ணமிக்குள் ஏதேனும் கெடுதல் வந்து சேரும். அப்படி எதுவும் தவறு செய்யாதவராக இருந்தால், கவலைப் பட எதுவும் இல்லை. நீங்கள் தேவியின் உருவத்தைப் பார்த்ததால், உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் விரைவில் வாய்க்கும்."

அமா : " இந்த பௌர்ணமி கட்டுப்பாடுகளுக்கு முடிவே கிடையாதா? பல தலைமுறைகளுக்கு தொடர்ந்துகொண்டே இருக்குமா? "

போஜன் : " அது பற்றி எங்கள் முன்னோர்கள், கேரள ஜோதிடர் ஒருவரைப் பார்த்து கேட்டுள்ளனர். பல முன் ஜென்மங்கள், பின் ஜென்மங்கள் பற்றி சொல்லக்கூடியவர் அவர். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், 'இந்த ஏணிமலை அக்கம்மா சமாதி கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து, ஒருநாள் முழுவதுமாக மழையில் கரைந்துவிடும். அந்த நாளிலிருந்து எங்கள் மேல் இருந்த சாபம் நீங்கிவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம். அதற்குப் பின் எங்கள் சந்ததியர்கள் சந்தோஷமாக சுதந்திரமாக வாழலாம்' என்று சொல்லியிருக்கிறார். "

இதைச் சொன்ன போஜன், " நான் போய் வருகிறேன் சார். மற்ற அறைகளில் உள்ளவர்கள் என்னைத் தேடுவார்கள் " என்று சொல்லி போய்விட்டான். 

= = =  =

அடுத்த நான்கைந்து நாட்களில், பகல் நேரத்தில், அமானுஷ்யன், தான் கொண்டு வந்திருந்த மடிக்கணினியில் கதையை கிடு கிடுவென டைப் செய்து முடித்தார். இரவு நேரங்களில் ஜன்னல் அருகே போகாமல் - அந்தப் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்காமல், தலையோடு காலாக கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்து உறங்கினார். 

(தொடரும்) 

101 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் ஆரோக்கியம் அமைதியுடன்
    இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் எல்லோருக்கும்

    //நீங்கள் சேலை கவுடா பரம்பரையை சேர்ந்தவர் இல்லை. எந்தப் பெண்ணையும் அவளுடைய விருப்பம் இல்லாமல் நீங்க வலிய அடைந்திருந்தவராக இருந்தால், உங்களுக்கு அடுத்த பௌர்ணமிக்குள் ஏதேனும் கெடுதல் வந்து சேரும். அப்படி எதுவும் தவறு செய்யாதவராக இருந்தால், கவலைப் பட எதுவும் இல்லை.//

    இதில் தான் நான் கதையின் கடைசியில் ட்விஸ்ட் இருக்குமோ என்று நினைத்தேன்...நினைக்கிறேன்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. கதை மடமடவென்று பாய்கிறது.
    முன்பு எல்லாம் ஒரு எக்ஸ்ப்ரஸ் வண்டியில் தென் மாவட்டங்களில் இருந்து போவோம். அது செங்கல்பட்டு வரை ஒரு நிதானம்...அதற்குப் பிறகு கதறிக் கொண்டு விரையும்!!!!

    இதுவரை இல்லாத ,ஒரு சந்தேகம் வருகிறது.:)


    நானும் சொல்லப் போவதில்லை.
    சொல்லும் முறை இன்னும் ஒருவரைக் காண்பிக்கிறது.

    முன்னே நினைத்தவரின் எழுத்தில் எழுத்தாளர் சாயல் இருக்கும்.
    பின்னே நினைப்பவரின் எழுத்து நடந்த சம்பவத்தை

    எழுதுவதுபோல ஆனால் பின்னிப் பிணைந்து
    சுருக்கப் பட்ட நிகழ்ச்சிகளின் தொடராகிறது.

    இரண்டு பெண்கள். இரண்டு ஆவிகள். நிறையப்
    பழிவாங்கல்.
    அடுத்து என்ன ஆகப் போகிறது என்று பார்ப்போம்.
    நன்றியும் வாழ்த்துகளும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவலோடு காத்திருக்கிறேன்.

      நீக்கு
    2. வல்லிம்மாவின் இந்தப் பின்னூட்டம் எழுதகிறவர்களின் பாணிகளை அலசுகிற மாதிரியில் சிறப்பாக இருப்பது என்னைக் கவர்ந்தது

      நீக்கு
  4. அந்த நாளிலிருந்து எங்கள் மேல் இருந்த சாபம் நீங்கிவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம். அதற்குப் பின் எங்கள் சந்ததியர்கள் சந்தோஷமாக சுதந்திரமாக வாழலாம்' //

    அதுக்கப்புறம் அந்த சந்ததியர்கள் பெண்களை விருப்பமில்லாமல் வலிய அடைந்திருந்தவராக இருந்தால் தப்பித்துவிடுவாரோ...ஃப்ரீடம் கிடைச்சிருச்சு போல!!! ஒரு வேளை அக்கம்மா ஆவிக்கு வயசாகி மறதி வந்திடும் போல!!!! இல்லைனா ஆவி உலகச் சட்டம் அவ்வளவுதானோ? இனி இந்த உலகச் சட்டம் பார்த்துக்கும்னு நம்பிக்கை??!!!!!ஹாஹாஹாஹா

    ஆசிரியரே...இதெல்லாம் சும்மா ஜாலிக்கு...நோ ஹர்ட்டிங்க்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா. எனக்கும் இதே பாயிண்ட் தோன்றியது.
      வெல் செட் கீதா ரங்கன்.:) நான்கு பாகங்களும் வேற வேற மாதிரி.

      இது வரை மூன்று எழுத்து பரிச்சயப் பட்டிருக்கிறது. மூவரின்
      மேல் சந்தேகம்:)

      நீக்கு
    2. யார் அந்த மூவர் என்பதையும் சொல்லிவிட்டீர்கள் என்றால், மற்ற வாசகர்களுக்கும் பயன்படுமே. சொல்லுங்க.

      நீக்கு
    3. பாவம் கதாசிரியர்!!//

      ஹாஹாஹா கௌ அண்ணா இன்னொன்றும் அது போடுவதற்குள் ரோபோ ரொம்ப படுத்தியதால் ஓடிவிட்டேன்.

      அக்காம்மா விரதம் இருந்தார். ஏன் அம்மன் காப்பாற்றவில்லை?

      அர்ச்சுனனின் மறுபிறவிதான் இந்த அமா வாக இருக்குமோ அதான் அந்த மோகினி வடிவ தேவி வந்து என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதோ??!!!!!!! அமாவுக்கு ஏதோ இருக்கு ஆப்பு

      இந்த உலகச் சட்டம் சரியான தண்டனை கொடுக்கலைனா ஆவி தன் சட்டத்தைக் கையிலெடுக்கும் போல!!! அதுவரை ஆவிக்கு ரெஸ்ட்!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    4. ஆறாவது பகுதியை எழுதி அனுப்புங்க !

      நீக்கு
    5. ஹாஹாஹா அண்ணா ஆஆஆ ஆவிக்கு இடைல புகுந்தா அது கன்ஃப்யூஸ் ஆகிவிடாதோ?!!! இல்லேனா அது எங்கிட்ட கா விட்டுரும் "நீ உன் அறிவியலை இங்க கொண்டுவந்து எங்கூட வம்பு பண்ணினா நான் ஸ்ட்ரைக் பண்ணுவேன்னு சொல்லிடுமே!!"

      இல்லேனா முதலேருந்தா!! அப்ப கதை மாந்தர்களை அப்படியே வைத்துக் கொண்டாலும் கதையே மாறிவிடுமே!...ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. போஜன் சொன்ன கதை உண்மையோ பொய்யோ தெரியவில்லை.
    நல்ல வேகமாக கதையை நகர்த்தி விட்டார்.

    எழுதியவர் இந்த கதையில் தன்னை வெளிபடுத்தி கொண்டது போல இருக்கிறது.
    இன்று கதை சொல்லிய முறையில்.

    கதைக்கு ஏற்ற ஓவியம் நன்றாக இருக்கிறது. மஞ்சள் நிலவு, மஞ்சள் புடவை, மரங்கள் மலைத்தொடர்கள், வெண்மேகம் வீடுகள், வீடுகளில் இரவு நேர விளக்கு மினுக்குவது என்று மிக நேர்த்தியாக வரையப்பட்டு இருக்கிறது. பெளர்ணமி நிலவு வரும் நேரம் இப்படித்தான் இருக்கும்.

    அமானுஷ்யனுக்கு கதை கிடைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அமானுஷ்யனுக்கு கதை கிடைத்து விட்டது.// அப்படியா!! முனி ஏற்றுக்கொள்வாரா ??

      நீக்கு
    2. கௌ அண்ணா ஹைஃபைவ்!! டைரக்டர் இந்தக் கதையை அப்ரூவ் செய்வாரா என்றும் எனக்குத் தோன்றியது. நாங்க ஆடியன்ஸ் எல்லாம் இங்க பிரிச்சு மேயறோமே. டைரக்டர் இதெல்லாம் பார்த்து (கதை எழுதும் ஆசிரியர்கள் சொல்றார்/ங்க - நானே/ங்களே டைரக்டர்- எழுத்தாளர் - திரைக்கதை எல்லாமே ஆடியன்ஸ் வியூ என்னன்னு தெரிந்துவிட்டால் அடுத்து கதைய சினிமாவுல ரீச் ஆற மாதிரி எப்படி மாத்தலாம்னு யோசிச்சிட மாட்டோம்!!! ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு

  7. தேவிக்கு உதவிய அக்கம்மாவை எத்தை அம்மன் ஏன் கை விட்டாள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே !! ஏன் ? ஏன்? கதாசிரியர் பதில் சொல்வாரா?

      நீக்கு
    2. ஹாஹாஹாஅ கௌ அண்ணா கதாசிரியர் இப்ப வரமாட்டார்! முடிஞ்சதும் தான் வருவார்!! இப்ப இங்க கேட்கப்படும் கேள்விகள் எல்லாத்துக்கும் பதில்கள் ஒரு வேளை புதன் பதிவாகவும் மாறக் கூடும்!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  8. எழுதும் பாணி ஒவ்வொரு வாரமும் வித்யாசப்படுகிறது. கதை என்னவோ கொஞ்சம் ராமாயண சீதை சிறை + விடாது கருப்பு (பவுர்ணமி பூஜை) என்று பல கதைகளின் அவியலாக உள்ளது. இப்படி குறை சொல்வதை தவறாக என்ன வேண்டாம். 

    ஆக நாலு வாரங்கள் நாலு ஆசிரியர்கள் சரிதானே?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. பார்ப்போம் - அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

      நீக்கு
    2. ஆமாம் ஜெ கெ அண்ணா இந்த வாரம் பாணி வேறு மாதிரி தான் இருக்கு.

      தொடங்கி வைச்சது ஸ்ரீராமோ அல்லது ஜீவி அண்ணாவோ என்று தோன்றுகிறது. அதன் பின் மற்ற ஆசிரியர்/கள்.

      கீதா

      நீக்கு
    3. JC சாரின் பின்னூட்டம் வழக்கம் போலவே வித்தியாசப்பட்டு தனித்து தெரிகிறது. அதனாலேயே வாசிப்பவரை யோசிக்க வைக்கிறது.

      நீக்கு
    4. இருந்தாலும் கதாசிரியர் ஒருவர் தான் என்பதற்கே என் ஓட்டு!..

      நீக்கு
  9. இன்னிக்கு மீண்டும் ரோபோ வந்துவிட்டது. கில்லர்ஜி ப்ளாக்ல மட்டும் பெயர்த்திக்கு வாழ்த்து சொல்ல இந்த ரோபோ அனுமதிக்க மாட்டேங்குதே!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. தப்பித்தவறி ஏணிமலை பக்கமாக போனால் தேவ கவுடா சாரி... சேலை கவுடா பரம்பரை ஆட்களோடு பழக கூடாது.

    பதிலளிநீக்கு
  11. கணினியில் கதையை கிடு கிடுவென வாசித்து முடித்தவுடன், இந்தப் பக்கம் அடுத்த வாரம் திரும்பிப் பார்க்கலாம் என்று முடிவு...!

    பதிலளிநீக்கு
  12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  13. கதை வேகம் எடுத்திருக்கின்றது.. எதற்காக என்று புரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் முடிக்கவேண்டும் என்கிற அவசரம் போலிருக்கு கதாசிரியருக்கு.

      நீக்கு
    2. ஹாஹா கௌ அண்ணா ஆசிரியருக்கு அந்த எண்ணம் இல்லை. அந்த ஆவி/தேவி/மோகினி தான் ரொம்ப பிஸியாம். அப்பாயின்ட்மென்ட் டைம், கால்ஷீட் அவ்வளவுதான் ஓவர்ன்னு சொல்லிருக்கும்.!!!!

      கீதா

      நீக்கு
    3. வேகம் எடுத்திருப்பதாய்த் தெரியலை. ஆசிரியர் அவசரம் அவசரமாக உப்புச்சப்பில்லாத நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே போய்விட்டார்.

      நீக்கு
  14. கட்டி வைத்த செங்கரும்பை
    வெட்டி வைத்தால் எப்படி?..

    பதிலளிநீக்கு
  15. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. இந்த வார கதை ஆசிரியர் கீசாக்கா? அதுதான் மறைந்திருந்தே பார்க்கிறார் கருத்துக்களை. இதுவரை காணவில்லை. உசுப்பிவிடும் நெல்லையையும் காணவில்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோசிக்கவேண்டிய விஷயம்.

      நீக்கு
    2. கண்டிப்பாக கீதாக்கா இல்லை.

      நெல்லை? ம்ம்ம்ம்ம். ஆனால் அவர் லாஜிக் பார்ப்பாரே!!!!

      முதல் பகுதியில் , இரண்டாம் பகுதியில் ஸ்ரீராம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அடுத்த பகுதிகளை வாசிக்கும் போது ஸ்ரீராமைக் காணவில்லை...ஹாஹாஹா கதையில்.....

      சில பகுதிகளில் ஜீவி அண்ணா, கௌ அண்ணாவைக் காண முடிகிறது.

      நானும் என் பங்கிற்குக் குழப்பிவிட்டுச் செல்கிறேன். தெளிவாக இருப்பவர்கள் தெளிவாக இருங்கள்!!! ஹாஹாஹாஹ

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராமா ? அமா !! ஆமா இல்லே? (நானும் குழப்புவேனே!)

      நீக்கு
    4. //கண்டிப்பாக கீதாக்கா இல்லை.//ஆமாம், நான் ஏற்கெனவே சொல்லிட்டேனே. இந்த வாரக்கதை கொஞ்சம் கொஞ்சம் நான் எழுதறாப்போலவே கட்டுரை பாணியில் இருந்தாலும் நான் இல்லை. ஒரே எழுத்தாளரே வெவ்வேறு பாணியில் எழுதுகிறாரா? அல்லது வாரம் ஒருவரா? யோசிக்கணும்.

      நீக்கு
    5. கண்டிப்பாக யோசிக்கவேண்டிய விஷயம்.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இந்த வார ஏணிமலை கதை பயங்கர வேகமாக செல்கிறது. (ஏணிப்படிகளில் முதலில் ஏறும் போதுதான் கால்களில் சற்று தடுமாற்றம் வரும். உயரே ஏற, ஏற கால்களின் பழக்கம் காரணமாக ஏணியின் உச்சியை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணம் போல் கதையும் வேகமாக செல்கிறது.)

    ஒருவேளை அந்த கதாசிரியர் அந்த அக்கம்மாவின் தம்பியின் பேரனோ? அக்கம்மாவின் மரணத்தைப் பற்றிய தான் கேள்விப்பட்ட/படாத சில உண்மைகளை கண்டு பிடிக்க அங்கு வந்திருக்கிறாரோ? அதை வைத்து இவர் ஏதாவது மர்மக்கதை எழுதித்தர திட்டமோ..? எப்படியும் கதை சுவாரஸ்யமாக நகர்ந்து கொண்டுள்ளது. அடுத்த வார முடிவை காண ஆவலாக உள்ளேன். (கருத்துரைத்தவர்களின் சந்தேகப்படி எழுதியவர்கள் யார் யாரெனவும் அறிந்து கொள்ளவும் ஆவலாக உள்ளேன்.) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // (ஏணிப்படிகளில் முதலில் ஏறும் போதுதான் கால்களில் சற்று தடுமாற்றம் வரும். உயரே ஏற, ஏற கால்களின் பழக்கம் காரணமாக ஏணியின் உச்சியை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணம் போல் கதையும் வேகமாக செல்கிறது.)// ஆஹா எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டீர்கள்! - ஆறாவது பகுதியை நீங்களும் எழுதி அனுப்பலாமே!

      நீக்கு
    2. வணக்கம் கெளதமன் சகோதரரே

      நன்றி. ஆறாவது பகுதி ஏன்.? ஐந்தில்தான் இதை எழுதியவர் யாரென்பது தெரிந்து விடுமே..! அப்படியும் ஆறாவது,ஏழாவது,என தொடர்ந்து ஐந்தின் முடிவை பார்த்த பின் எல்லோரும் எழுதினால்,ஏணிமலை ஒரு நாவலாக விடுமே..!

      ஒரு கதை எழுதி ப்ளாக்கில் வெளியிட்ட பின் அதன் கருத்துக்களாக என்னென்ன யார் யார் சொல்லியிருக்கிறார்கள் என்றியும் ஆவல் கதை எழுதும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக வரும். அந்த விஷயத்தில், நீங்கள் வந்த முதல் வாரத்திலிருந்து உடனுக்குடன் கருத்துரைகளுக்கு பதில் தந்து ரசித்து வருவதால்,(அதில் வேண்டுமென்றே நீங்கள் பேசி குழப்புவது வேறு விஷயம்..) நீங்கள்தான் இந்த கதையை எழுதியிருக்கிறீர்கள் என்பதை முதல் வாரத்திலிருந்து உறுதியாக சொன்னது போல் இப்போதும் சொல்கிறேன். ஒவ்வொரு வாரமும் கதையை திகிலாக நகர்த்துவது போல, அதை எழுதியது யாரென்ற (சந்தேகமற நீங்கள்தான்) சஸ்பென்ஸையும் கட்டி காத்து வரும் உங்கள் திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

      வாராவாரம் வரும் ஓவியங்களில்,சிலது மட்டும் நீங்கள் இல்லாமல் மாற்றமிருக்கலாம். இந்த வார ஓவியம் நன்றாக உள்ளது. மஞ்சள் நிலவும், மஞ்சளாடை பெண் அக்கம்மாவுமாக இயற்கை எழில் சூழ அழகாக உள்ளது. வரைந்தவருக்கு, (அது நீங்களாக இருப்பின் உங்களுக்கும்) பாராட்டுக்கள்.
      நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. உண்மையான கதாசிரியர் உங்க கருத்தைப் படித்து என்ன ரியாக்ஷன் கொடுப்பாரோ தெரியவில்லை.

      நீக்கு
  18. எல்லோருக்கும் உதவி செய்து நல்லவளாக இருந்த அக்கம்மா ஏன் கொல்லப்பட்டாள்? இது அநியாயம் இல்லையோ? அது சரி, இந்த அமா தான் சேலை கவுடா வம்சத்தில் ஏதோ ஒரு கிளையோ? விஷயம் தெரிந்து தான் வந்திருக்காரா?

    பதிலளிநீக்கு
  19. இந்த வாரம் ஒரே ஓட்டம். ஆனால் சுவாரசியம் குறைவு.

    பதிலளிநீக்கு
  20. என்னோட மின்னஞ்சல் முகவரியே ரத்து செய்துட்டாங்களாமே! என்ன ஆச்சு? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியலை. நான் கருத்துக் கொடுத்துவிட்டுப் பின் தொடரும் ஆப்ஷனைக் க்ளிக்கினால் ஒவ்வொரு முறையும் இப்படித் தான் பதில் வந்தது. அப்புறமா ரிஃப்ரெஷ் இரண்டு /மூன்று தரம் செய்துட்டுப் பின்னர் கொடுத்தேன். அவை போய் விட்டன.

      நீக்கு
    2. ஹாஹாஹா கீதாக்கா உங்களுக்கு இப்படி படுத்தலா. எனக்கு ரோபோ ஒருபக்கம் தொல்லை அதுவும் முதலில் ரோபோ இல்லை என்று சொல்ல வேண்டும் அப்புறம் டெஸ்ட் வைக்குது ஒரு டெஸ்ட் படம் நா பரவாயில்லை சிலபோ ரெண்டு கொடுக்குது இது ஓவரா இல்லை??!!!

      அடுத்த தொல்லை, துரை அண்ணா தளம், கோமதிக்கா தளம், வெங்கட்ஜி தளம், கில்லர்ஜி தளம் எல்லாம் முதலில் வராது....இன்ஃபர்மேஷன் மினிஸ்ட்ரி தளங்களை தடை செய்துள்ளது என்று வரும். அப்புறம் மீண்டும் மீண்டும் ரெஃப்ரெஷ் செய்து அப்புறம் தான் வருகிறது.

      கீதா

      நீக்கு
    3. உங்கள் கூகிள் அக்கவுண்டில் 15 ஜி பி தீர்ந்து இருக்கும். 

      https://myaccount.google.com/payments-and-subscriptions 

      இதில் சென்று ஸ்டோரேஜ் அக்கௌன்ட் பார்க்கவும். 
      இதுவும் காரணம் ஆகலாம். 
      Jayakumar

      நீக்கு
    4. 1.17 GB of 15 GB used இது என்னோட sivamgss@gmail.com மெயில் கணக்கில் உள்ள நிலவரம். இதைத் தவிர்த்து இன்னமும் இரண்டு அக்கவுன்ட்கள் ஜிமெயிலில் உள்ளன. அவற்றிலும் 2 ஜிபிக்கு மேல் செலவாகவில்லை. நான் பழைய வேண்டாத மெயில்களை அடிக்கடி அகற்றுவேன். தேவையானவற்றை வேர்டில் சேமித்துக்கொள்வேன். ட்ராஃப்ட் மோடிலும் அதிகம் சேராமல் பார்த்துப்பேன். பொதுவாக எல்லாவற்றிலும் நேரம் செலவு செய்வதிலிருந்து சிக்கனம். அந்த அந்த நேரத்துக்கு அது அது! இன்னும் சொல்லப் போனால் குளிர்சாதனப் பெட்டியில் மோர் வைக்கும் இடம் மோரை எடுத்ததும் காலியாக இருக்கையில் நம்மவர் வந்து ஏதானும் பூக்களை வைச்சுடுவார். பின்னர் நான் பார்த்து வேறு இடத்தில் சில பல சரி செய்யும் வேலைகளைச் செய்துவிட்டு வைப்பேன்.மோர் வைக்கும் இடம் திரும்ப குளிர்சாதனப் பெட்டிக்கு வரும் வரை அந்த இடம் காலியாகவே இருக்கும். அதே போல் மாவு வைக்கும் இடமும். மாவு தீர்ந்து போனால் திரும்ப அரைத்துவைக்கும் வரை காலியாகவே வைப்பேன்.:)))) இது சரியா/டப்பானு தெரியாது. ஆனால் இப்படித் தான் செய்து வருகிறேன்.

      நீக்கு
    5. நீங்கள் செய்வது சரியே. A place for everything and everything in its place is a good practice.

      நீக்கு
  21. முன்னால் கொடுத்த கருத்துரைகள் எல்லாம் மெயில்பாக்ஸுக்கு வரலை. கடைசியாக் கொடுத்த 2 மட்டும் வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  22. படத்தின் வண்ணக்கலவைகள் எல்லாம் எங்க குஞ்சுலு இரண்டு நாட்களாய்ப் போடுவது போல் இருக்கு, மஞ்சள் வண்ண அக்கம்மாவைத் தவிர்த்து. தாத்தா, பாட்டியை எல்லாம் வரைஞ்சு வைச்சிருக்கு. பாட்டியைச் சின்னக்குழந்தை போல வரைஞ்சிருக்கு. தாத்தாவை நல்ல உயரமாக லேசான கூன் முதுகுடன் வரைஞ்சிருக்கு. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் எடுத்து அனுப்புங்க.

      நீக்கு
    2. பாட்டி சின்னக் குழந்தைதானே!!!!! ஹாஹாஹா

      நீங்க அடிக்கடி சொல்றத அது வரைஞ்சுருக்கு!! சமத்து தங்கக் குட்டி!! குஞ்சுலு இங்க வந்தாச்சா!! எஞ்சாய் மாடி!!

      கீதா

      நீக்கு
    3. நானும் சொல்ல நினைத்தேன்!

      நீக்கு
  23. கதையைப் படித்துவிட்டேன்... அவசர அவசரமாக நிகழ்ச்சியை எழுதியது, போஜனின் வேலை அவசரமா இல்லை ஐந்தாம் பகுதியிலேயே சுபம் போட்டுவிடணும் என்று ஆசிரியர் நெருக்குகிறாரா?

    படம் நன்றாக வரைந்துள்ளீர்கள். பாராட்டுகள் (எனக்கு படம் எப்போது சூப்பர் என்று மனதில் படுகிறதோ அப்போதுதான் என் கருத்தை எழுதுவேன். அதனால என்னுடைய பாராட்டு என்பது உண்மையானது)

    பதிலளிநீக்கு
  24. படம் சூப்பரா இருக்கு. அட!! தேவிக்கு மாடேர்ன் ட்ரெஸ்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்கள் உடையை ஆண்கள்தான் உருப்படியா கவனிப்பாங்க (அதுக்காகத்தான் அவங்க விதவிதமா அணியறாங்கன்னு சொன்னால் சண்டைக்கு வருவாங்க).

      மஞ்சள் சீலை, மஞ்சள் ஜாக்கெட் (கொஞ்சம் கசங்கி இருப்பதாக-கையில் அனுமானித்துக்கொள்ளலாம்). இல்லை கவிதை மாதிரி எழுதணும்னா, சந்திரனின் மஞ்சள் நிறம் அவள் உடையில் பட்டு ஒளிர்கிறதா இல்லை அவளின் மஞ்சள் உடை, சந்திரனின் நிறத்தையே மாற்றிவிட்டதா என்று யோசிக்கலாம்)

      நீக்கு
    2. ஆஹா !! நல்ல வர்ணனை! (படத்தில் காணப்படுவது அக்கம்மாவின் ஆவி என்று நினைக்கிறேன். தேவி அல்ல.)

      நீக்கு
    3. (அதுக்காகத்தான் அவங்க விதவிதமா அணியறாங்கன்னு சொன்னால் சண்டைக்கு வருவாங்க).

      கண்டிப்பாக நான் சண்டைக்கு வந்திருப்பேன் ஆனா இப்ப அதுக்கு டைம் இல்ல!!!!!! பொண்ணுங்க சைக்காலஜி தெரியாத நெல்லை!!!!!!!!!!!

      அடுத்த வீட்டுப் பொண்ணு பார்க்கணும்ன்றதுக்காகத்தான் விதம் விதமான நகை உடை எல்லாம்..(பெரும்பாலானவர்கள்).அதை விடத் தான் தனித்துத் தெரியணும் என்பதும் (ஒரு சிலருக்கு)...ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    4. நெல்லை இதற்கு பதில் சொல்வாரா ?

      நீக்கு
  25. படம் வெகு அழகு. ஃப்ளாஷ் பேக் முடிந்து விட்டது. அவசர அவசரமாக அம்மா கதை தட்டச்சு செய்து விட்டு கம்பியை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவதை பார்த்தால் அடுத்த பெளர்ணமியில் ஒரு சம்பவத்தை எதிர் பார்க்கலாம் போலிருக்கிறதே?

    பதிலளிநீக்கு
  26. அம்மா - அமா
    கம்பியை - கம்பிளியை

    பதிலளிநீக்கு
  27. J.C.சார் சொன்னது போல சென்ற வாரமே எனக்கு ராமாயண கதையில் ஆவியை நுழைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
  28. @ நெல்லை..

    // அதுக்காகத்தான் அவங்க விதவிதமா அணியறாங்கன்னு சொன்னால் சண்டைக்கு வருவாங்க..//

    ஆகா.. உண்மை.. உண்மை..
    ( ஏஞ்சாமீ.. உனக்கு இதெல்லாம் தேவையா!..)

    பதிலளிநீக்கு
  29. கடைசிப் பகுதியில் கதையில் வரும் எழுத்தாளர் அமானுஷ்யன் என்ன ஆவார் என்று எதிர்பார்க்க வைக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  30. படம் நன்றாக இருக்கிறது.
    கதை அடுத்து என்ன எனப் பார்ப்போம்.....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!