சஞ்சீவியின் சந்தேகங்கள் படித்து ரசித்திருக்கிறீர்களா? குமுதத்தில் வந்த துணுக்குத்தொடர்.
விகடனில் மதன் ரெட்டைவால், சிரிப்புத்திருடன், முன்ஜாக்கிரதை, என்றெல்லாம் போட்ட மாதிரி குமுதத்தில் சில தொடர் துணுக்குகள் வந்தன. அஞ்சு பைசா அம்மு, வெயிட் வெங்கம்மா என்றெல்லாம் வந்த வரிசையில் ஒன்று சஞ்சீவியின் சந்தேகங்கள். சஞ்சீவி ஜோக்ஸில் சட்டென நினைவுக்கு வருவது ஒன்றுதான்.
பஸ் ஸ்டாப்ப்பில் நின்று கொண்டிருப்பார் சஞ்சீவி. எப்போதுமே ஏகப்பட்ட சந்தேகங்கள் வரும் அவருக்கு. இப்போதும் 'வீட்டில் ஜன்னலை மூடினோமா' என்பது போலவோ, 'கதவை மூடினோமா' என்பது போலவோ 'கட்டத்துக்குள்' யோசித்துக் கொண்டிருப்பார். ஆனால் அவர் டை கட்டி சட்டை எல்லாம் போட்டிருப்பார். ஆனால் பேண்ட்ஸ் போட மறந்திருப்பார்!
இந்த ஜோக்கை காபி அடித்து தர்மத்தின் தலைவன் படத்தில்.. இல்லை, அவசரப்பட்டு அப்படிச் சொல்லக் கூடாது. தர்மத்தின் தலைவன், 'கஸ்மே வாதே' ஹிந்திப் படத்தின் தழுவல். ஹிந்தியிலும் இதே மாதிரி காட்சி இருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும். இருந்திருந்தால், அவர்கள் குமுதம் பார்ப்பதே நடவாத காரியம். அதிலும் இந்த ஜோக்கை பார்த்திருக்க நியாயம் இல்லையே!! இருங்கள் பார்த்து விட்டு வருகிறேன்.
அப்பாடி.. இதோ பார்த்துவிட்டு வந்து விட்டேன். கஸ்மே வாதே பார்த்தால் குறிப்பிட்ட சந்தேகத்தை மட்டுமா தீர்த்து விட்டு வரமுடிகிறது? கொஞ்சம் படத்தையும் (மறுபடி) பார்த்துவிட்டு, குறிப்பாக அந்த டைட்டில் 'ஸாங்'கைக் கேட்டுவிட்டு, கேட்டு ரசித்துவிட்டு வந்தேன்! என்ன பாட்டுங்க அது? காட்சிக்கு காட்சி அமிதாப்பும் ராக்கியும் வெவ்வேறு உடையில் தோன்றுவார்கள். ஹிந்தியில் அமிதாப்புக்கு மறதி எல்லாம் இல்லை. இது தமிழில் சேர்க்கப்பட்ட காட்சிகள் என்று தெரிகிறது. ஒன்று வேண்டுமானால் சொல்லலாம், பாடலின் ஆரம்பத்துக்கு சற்றுமுன் 'நாம் எப்போது, எப்படி முதலில் சந்தித்தோம் என்று நினைவிருக்கிறதா?' என்று ராக்கி கேட்க, அமிதாப் யோசித்து 'இல்லை, ஞாபகமில்லை' என்பார்!!
எனவே நண்பர்களே, தமிழில் சஞ்சீவியின் சந்தேகங்கள் பகுதியிலிருந்து இன்ஸ்பைர் ஆகி த த வில் சேர்க்கப்பட்டிருப்பது தெரிகிறது.
சரி, உதாரணங்களை கழற்றி விட்டு விட்டு என் கதைக்கு வருகிறேன். எங்களின் கதை... அது உங்களின் கதை!
நான் தினசரி வீட்டை விட்டு வெளியே செல்லும் வழக்கம் இருப்பதால் மறக்காமல் மாஸ்க் போட்டுச் செல்கிறேன். மகன்கள், குறிப்பாக பெரியவன் சனி ஞாயிறில் எங்காவது வெளியில் செல்லும் ப்ரமேயம் வந்தால் மாஸ்க்கை மறந்து சென்று விட்டு, பாதி வழியில் எங்களுக்கு அலைபேசி கோபப்படுவா ன்!
"மாஸ்க்கே போடவில்லை நான்.. ஞாபகப்படுத்தக் கூடாதா? என்ன பண்றீங்க எல்லோரும்?"
இது எப்படி இருக்கு?
எனக்கு மறதி சின்ன வயசிலிருந்தே ஜாஸ்தி. மறதி எப்படி என்றால் எடுத்ததை எங்கே வைக்கிறேன் என்று மறந்து விடுவேன். எதையும் எப்போதும் தேடிக்கொண்டே இருப்பேன். தொலைத்துக் கொண்டே இருப்பேன்.
அது இப்போதும் தொடர்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் மூன்று குடைகள் தொலைத்திருக்கிறேன்!
அலுவலகத்தில் நான் சிறந்த வேலைக்காரன் என்று பெயர் வாங்கி இருக்கிறேன். ஆனால் மோசமான மெயின்டெனன்ஸ். சம்பந்தப்பட்ட பேப்பர், கோப்புகளை தேவைப்படும் சமயத்தில் தேடோ தேடு என்று தேடுவேன்.
துள்ளித் திரிந்த காலத்திலேயே அதுதான் என் பள்ளிப்பருவத்திலேயே என் அம்மா, என் இந்த மறதி குறித்து வருந்தி, எனக்கு ஒரு அலமாரி ஒதுக்கி, 'உன் சம்பந்தப்பட்ட எந்தப் பொருளாய் இருந்தாலும் இந்த அலமாரிக்குள் போட்டுவிடு. உன் தேடும் எல்லை சுருங்கி விடும். இதை மட்டும் மறக்காதே' என்று சொல்லி இருந்ததை கடைப்பிடித்தேன். கொஞ்சம் அவஸ்தை குறைந்தது.
ஆனாலும் இதில் ஒரு மைனஸ் இருந்தது எனக்கு. வேறெங்கும் வைக்க முடியாமல், - முக்கியமானதாச்சே, தொலைந்தால் தொலைத்து விடுவார்களே பள்ளியில்! - ப்ராகிரஸ் ரிப்போர்ட்டை மறைத்து வைக்க முடியாமல் அம்மா மூலம் அப்பாவிடம் மாட்டிக்கொள்வேன். அவரே ஓரிருமுறை தன் சொந்த முயற்சியிலும் அகழ்ந்தெடுத்திரு க்கிறார். ஆமாங்க... மறைத்து வைக்கிற மாதிரிதான் இருக்கும் மார்க்.
ப்ராகிரஸ் கார்டில் அப்பாவின் கையெழுத்தை வாங்கும் 'தக்கினிக்கி' எல்லோரும் போலதா ன். கையெழுத்து வாங்கி கொடுக்க கொடுத்திருக்கும் கடைசி நாள் வரை கொடுக்காதோர் லிஸ்ட்டில் என் பெயரும் இருக்கும். கடைசி நாள் ஸ்கூலுக்கு கிளம்பும் நேரம், படியிறங்கும் நேரம், அப்பாவிடம் நீட்டுவேன். சில சமயங்களில் முதல் நாளே அவர் மேஜையில் சத்தமில்லாமல் பேப்பர் வெயிட்டுக்குக் கீழே வைத்திருப்பேன். நானாகச் சொல்லும் / கேட்கும் வரை பார்த்ததாகவே காட்டிக் கொள்ள மாட்டார்.
அவர் எனக்குமேல் எமகாதகர். அந்த அவசரம் எல்லாம் படமாட்டார். வாங்கி கூடப் பார்க்க மாட்டார். (அவருக்குத் தெரியாதா என்ன, உள்ளே என்ன இருக்கும் என்று!)
"வை.. நேரமில்லை. ஸ்கூல் போயிட்டு வா... நாளை பார்த்துக்கலாம்" என்பார்.
"இல்லை, இன்னிக்கே கொடுக்கணுமாம்.."
"என்னிக்கி கொடுத்தாங்க?"
"நே... நேத்துதான்..."
"அதெப்படி ஒரே நாள்ல கேட்பாங்க... உண்மையைச் சொல்லு.. என்னிக்கி கொடுத்தாங்க?"
இதற்குப்பிறகு வழக்கமான வைபவங்கள்தான். சில சமயங்களில் உடனே அர்ச்சனையுடன் கையெழுத்து கிடைக்கும். அர்ச்சனை என்றால் சாதாரண அர்ச்சனை இல்லை, லட்சார்ச்சனை! சமயங்களில் பின் மண்டையில் முதல் அடி விழும்! கவனியுங்கள்... முதல் அடி!
அன்றே அவர் கையெழுத்து போட்டுக் கொடுக்கா விட்டால் பள்ளியில் பிரச்னை. அங்கு ஸ்கேலில் அல்லது குச்சியில் அடிவிழும்! அல்லது வெளியில் நிறுத்தப்படுவேன். சரி, சரி.. இந்த சப்ஜெக்ட் வேண்டாம்.. அது பெரிய கதை. அப்புறம் உணர்ச்சிவசப்பட்டு வேறு சில உண்மைகளையும் சொல்லி விடுவேன்!
மறந்துபோய் வேறு எங்கோ சுற்றிக் கொண்டிருக்கிறேன்.... மறதிக்கு வருகிறேன்.......
=========================================================================================================
இந்த வார சிவாஜி நினைவு ஒன்று...
=======================================================================================================
நான் மிகவும் ரசித்துப் படித்த கதை ஒன்றிலிருந்து ஒரு பகுதி.. இந்தக் கதையைப் படித்திருப்பவர்கள் இது என்ன கதை என்று கண்டுபிடித்து விடுவார்கள். முத்துக்குமார் இதில் அடிக்கடி சொல்லும் ஒரு வாசகம் "அச்சமே கீழ்களது ஆசாரம்"
என்ன ஒரு வர்ணனை...
============================================================================================================
ஆமாம்... ஆமாம். எனக்கும் அப்படிதான்... எனக்கும் அப்படிதான் என்று தோன்றுகிறதா?!!
==========================================================================================================
ஃபேஸ்புக்கில் படித்த ஒரு சுவாரஸ்யமான விஷயம்... (இங்கு க்ளிக்கினால் வீடியோவாகவும் பார்க்கலாம்.)
=========================================================================================================
சென்ற மாதம் தினமணியில் வந்த மதன் ஜோக்.
காலை வணக்கம் அனைவருக்கும்
பதிலளிநீக்குஅடடே... வாங்க மதுரை.. வணக்கம்.
நீக்குபடித்தேன் ரசித்தேன்
பதிலளிநீக்குமதுரை, மாலை வணக்கம்!!
நீக்குகீதா
நன்றி மதுரை.
நீக்குஎல்லோருக்கும் காலை வணக்கம்..
பதிலளிநீக்குஎல்லாப் பகுதிகளுமே சூப்பர்...வருகிறேன்..பின்னர்
குமுதம் பகுதி வாசித்ததில்லை...வீட்டில் வாங்கியதே இல்லையே பத்திரிகைகள் எதுவுமே!!!!
கீதா
வாங்க கீதா... வணக்கம். மெதுவா வாங்க..
நீக்குதிசையன்விளை கிணறு பற்றியும் , திசையன்விளை, சாத்தான்குளம், நாங்குனேரி பகுதிகள் மிதவறட்சிப் பிரதேசங்கள் என்பது பற்றியும் அகஸ்தியர் மலை, மகேந்திரகிரி மலை பற்றியும் எனது அடுத்தடுத்த பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதனால் இங்கு அதை ரிப்பீட் செய்யவில்லை!!
பதிலளிநீக்குகீதா
அடடே.. அப்படியா? அப்போ இது ஒரு முன்னோட்டம்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவாங்க கமலா அக்கா... வணக்கம்.
நீக்குகுறிப்பாக பெரியவன் சனி ஞாயிறில் எங்காவது வெளியில் செல்லும் ப்ரமேயம் வந்தால் மாஸ்க்கை மறந்து சென்று விட்டு, பாதி வழியில் எங்களுக்கு அலைபேசி கோபப்படுவான்!
பதிலளிநீக்கு"மாஸ்க்கே போடவில்லை நான்.. ஞாபகப்படுத்தக் கூடாதா? என்ன பண்றீங்க எல்லோரும்?" //
ஹாஹாஹாஹா....கிட்டத்தட்ட எல்லார் வீட்டிலும் இப்படித்தானோ?!!!
கீதா
அப்பாடி.. கொஞ்சம் ரிலீவ்டாக இருக்கிறது!!
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க, வாழ்க!
நீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க..
நீக்குப்ராகரஸ் ரிப்போர்ட் புராணம் அருமை..
பதிலளிநீக்கு( அதுசரி.. என்னை விட மார்க்குகள் அதிகமா.. கொஞ்சமா!..)
அதுக்கு - உங்க மார்க் என்ன என்பதை முதலில் சொன்னீர்கள் என்றால், ஸ்ரீ மார்க் அதிகமா அல்லது கொஞ்சமா என்று சொல்ல வசதியாக இருக்கும்!
நீக்குஓ... அது வேற இருக்குதா!..
நீக்கு:)))
நீக்குஇந்த வம்பெல்லாம் வேணாம்னுதானே அங்கேயே ஸ்கிப் பண்ணிக்கொண்டு ஓடியிருக்கிறேன்...!
நீக்குஜிவாஜியப் பத்தி என்ன தான்
பதிலளிநீக்குநீங்க துணுக்கு போட்டாலும் நாங்க ஒத்துக்கவே மாட்டோம்...
கீ சா கமெண்ட்?
நீக்கு@துரை செல்வராஜ்: அதானே..!
நீக்கு:))))))))))
நீக்குஷிவாஜி ஷிவாஜிதான்!
நீக்குஸ்ரீராம் உங்கள் மறதி - ப்ளஸ் 1
பதிலளிநீக்குஅதை ஏன் கேக்கறீங்க அவஸ்தை! எனக்கும் அதே நிகழ்வு. லட்சார்ச்சனை...அப்பா அடிக்க மாட்டார். மார்க் பற்றிக் கவலைப்பட்டதில்லை. அம்மா நேரெதிர். அதீதமாகக் கவலைப்படுவார். வீடோ கூட்டுக் குடும்பம். என் கூட இருந்ததுங்க எல்லாம் செம கில்லாடிங்க. புத்திசாலிங்க. ரேங்க் ஹோல்டர் எல்லாமே. கணக்குல வேற புலி எல்லாம். அதனால் ஒப்பீடுகள். லட்சார்ச்சனை மட்டுமல்ல கூடவே கார்ப்போரல் பனிஷ்மென்ட்...என் திறமைகள் மதிக்கப்படாமை...அதனால் ஏற்பட்ட தாழ்வுமனப்பான்மை. அத்னால் விளைந்த மறதி. அதன் முன் மறதி எதுவும் இருந்ததில்லை அதாவது சிறு வயதில். 7 ஆம் வகுப்பிலிருந்து தொடங்கியது இது. காரணங்கள் மேலே சொன்னது...
பெரும்பாலும் கற்பனை உலகில்...கவிதைகள் அதுவும் சந்தக் கவிதைகள் ஒலி நயத்தோடு எல்லாம் அப்போது எழுதுவதுண்டு. ஊரின் இயற்கையோடு இயைந்து... கதைகள்...படம் வரைதல், வீட்டு வேலைகள் வேறு.
ஆனால் எனக்குப் பிடித்த சப்ஜெக்ட் மறப்பதில்லை. ஆர்வத்துடன் வாசிப்பது மறப்பதில்லை!!!!!!
இதுவும் ஒரு பதிவாக எழுதி பாதியில் இருக்கிறது. குறிப்பாக மறதி, அது ஏன் வருகிறது குழந்தைகளுக்கு....என்று...சில விஷயங்கள் அனுபவ ரீதியாகச் சொல்வதை சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்ததில் பதிவு பாதியில் நிற்கிறது...
கீதா
எல்லாம் சரியாகச் செய்ததாலேயே நான் நிறைய அவமானம்/சிறுமை அடைந்திருக்கேன். :)))))) நீ ரொம்ப கெட்டிக்காரி போ! ரொம்பக் கண்டுட்டே! என்பார்கள்! :)))))))))
நீக்குஆனால் உளவியல் ரீதியாக ஆராய்ந்து பார்த்ததில் பெர்ஃபெக்ட் எனப்படும் நபர்களை சாதாரணமாக இருப்பவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. எல்லாவிதத்திலும் ஒழுங்காகக் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்கள் செய்யும் சின்னச் சின்னத் தப்புக்கள் கூடக் கூர்ந்து கவனித்துக் கேலி செய்வார்கள். எப்போவானும் மடிச்சு வைக்காத துணி, அல்லது கொடுக்க விட்டுப் போன காஃபி, இப்படிச் சின்னச் சின்னத் தப்புக்கள் பூதாகாரமாக உருவெடுக்கும்.
நீக்குஆர்ச்சி/ஆர்க்கி(?) காமிக்ஸில் கூட எல்லோருடனும் வேறுபாடில்லாமல் அன்பு பாராட்டும், உதவிகள் செய்யும் பெட்டியைத் தான் சக மாணவிகளுக்குப் பிடிக்காது. அவளுக்கு முன்னால் தங்களைச் சாதாரணமாக உணர்வார்கள். இது பெட்டியின் இயல்பு எனப் புரிந்து கொள்ளாமல் அவள் ஆண்களைக் கவர்வதற்காக முகியமாய் ஆர்ச்சி/ஆர்க்கியைக் கவர்வதற்காகவே இப்படி எல்லாம் செய்வதாய்ச் சொல்லிக் கொள்வார்கள். இது என்ன மாதிரி மனோநிலை?
நீக்குபிடித்த விஷயங்கள் மறக்காது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதானே.. ஆனாலும் நான் தினசரி விளையாடும் கோலி (கோஹ்லி அல்ல) குன்டுகளையே மிஸ்ப்ளேஸ் செய்துவிட்டு தேடுவேன்! அப்போதே கவிதைகள் எழுதுவீர்களா... அட..
நீக்குஒழுங்கா? கட்டுப்பாடா? நானெல்லாம் அப்படி இருந்தவனே அல்ல கீதா அக்கா... ஏன், இருப்பவனுமல்ல!!!
நீக்குஅப்போதே கவிதைகள் எழுதுவீர்களா... அட..//
நீக்குஆமாம் ஸ்ரீராம்...நம்ப முடியலை இல்லையா...எதுகை மோனை, சீர் தளை எல்லாம் அப்படியான கவிதைகளும் ஹைக்கூ போன்றும்...
என் அத்தை/மாமா மகன் சமீபத்தில் கூட என்னோடு பேசும் போது கேட்டான்...முன்ன மாதிரி கவிதை கதை எல்லாம் எழுதறியா என்று. சொல்லிவிட்டு நான் எழுதிய முதல் கவிதை பூ பற்றி என்றும் கூடச் சொன்னான்...
எனக்குச் சுத்தமாக நினைவில்லை!! ஹாஹாஹாஹாஹா...
கல்லூரியில் எனக்கு மிகவும் பிடித்த உஷா தாமஸ் ஆசிரியையின் திருமணத்திற்கு நான் செல்ல முடியவில்லை. ஆனால் அவரைப் பற்றி சந்த நயத்துடன் 4 4 வரியாக 10 எழுதி வாழ்த்துப்பா என்று அவர் முகவரிக்கு அனுப்பினேன். திருமணத்தன்று அதை மிகவும் பாராட்டி வாசித்தார்களாம். அதை தான் ஃப்ரேம் போட்டு மாட்டியிருப்பதாகவும் சொன்னார்.
ஆனால் ஒரு வருடத்தில் என்று நினைக்கிறேன் டைவேர்ஸ் ஆகிவிட்டது. மனம் ரொம்ப வேதனையாகிவிட்டது.
அதன் பின் யாருக்கும் அப்படியான வாழ்த்துப்பா எழுத மனம் வரவில்லை!
கீதா
கல்லூரியில் படித்த சமயம் என்று நினைவு...அப்போது தமிழ்நாடு சட்ட சபையில் அடிதடி நடந்ததே அந்த சமயம், ஆனந்தவிகடனில் அந்த நிகழ்வை ஒட்டி, கவிதைப் போட்டி அறிவித்திருந்தது தெரியவர, நான் கவிதை எழுதி அனுப்பினேன்.
நீக்குஎன் கவிதை அப்படியே ஓரிரிரு வார்த்தைகள் மட்டுமே மாற்றப்பட்டு வெளியாகியிருந்தது பரிசு கிடைத்ததாக...ஆனால் பெயர் வேறு ஒருவரின் பெயரில்!!!!!
நொந்து போனேன். அதன் பின் போட்டிக்கு அனுப்பியதில்லை.
அப்போது எழுதிய ஒரு சில நினைவில் இருந்தவற்றை 3, 4 எங்கள் தளத்தில் பகிர்ந்த நினைவு...
அதன் பின் வாழ்க்கை திசை மாறியது. என் கற்பனை உலகும் திசை மாறியது!. கவிதை, கட்டுரை, கதை, நாடகம் எழுதுவது எல்லாமும் அந்த மனம் போயே போச்!!!
அது கொஞ்சமேனும் மீண்டு வந்து வலையில் எழுதுவதற்குக் காரணம் நண்பர் துளசிதான். ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
வலைக்கு வந்த பின் நீங்கள் என்னை உற்சாகப் படுத்தி கதைகளை இங்கு பகிர்ந்து...நம் நட்புகள் கருத்து சொல்லிட, அந்த ஊக்கம் எனக்கு மிகப் பெரிய டானிக். அதற்கு உங்களுக்கும் கௌ அண்ணாவிற்கும் மிகப் பெரிய நன்றி சொல்ல வேண்டும்!
அப்படித்தான், பானுக்கா தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசி அப்படித்தான் நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதியது.
இரு நாட்கள் முன்பு என்று நினைக்கிறேன் ஜெகே அண்ணாவும் சொல்லியிருந்தார் என்னையும், நான் படித்த கதை எழுத.
இப்படியான ஊக்கங்கள் தான் டானிக். அதற்கு உங்களுக்கு மிகப் பெரிய நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
அது சரி ஸ்ரீராம் உங்களுக்கு எப்படி என்னிடம் கேவாபோக விற்குக் கதை அனுப்பச் சொல்லிக் கேட்கத் தோன்றியது? எது கேட்க வைத்தது? நினைவிருக்கோ? ஹாஹாஹா
எனக்கு நினைவில்லை!!!!! ஹிஹிஹிஹிஹி
சேம் போட்?!!!
கீதா
கீதா
//என் கவிதை அப்படியே ஓரிரிரு வார்த்தைகள் மட்டுமே மாற்றப்பட்டு வெளியாகியிருந்தது பரிசு கிடைத்ததாக...ஆனால் பெயர் வேறு ஒருவரின் பெயரில்!!!!!//
நீக்குஇது ரொம்ப வேதனை கீதா... அநியாயம்.
//அது சரி ஸ்ரீராம் உங்களுக்கு எப்படி என்னிடம் கேவாபோக விற்குக் கதை அனுப்பச் சொல்லிக் கேட்கத் தோன்றியது? எது கேட்க வைத்தது? நினைவிருக்கோ?//
சரியாய் நினைவில் இல்லை. எனி செபேஸ திங் டு ரிமெம்பர் கீதா? கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்... ப்ளீஸ்...
அலுவலகத்தில் நான் சிறந்த வேலைக்காரன் என்று பெயர் வாங்கி இருக்கிறேன். //
பதிலளிநீக்குஹைஃபைவ்!!! ஸ்ரீராம். உங்களுக்கு அலுவலகத்தில்...எனக்கு வீட்டில்!!!! சிறுவயதிலும் சரி அதன் பின்னரும் சரி!
கீதா
அடடே...
நீக்குலேட் பண்ணாம, அந்த சார்ஜரக் கொடுத்து அனுப்புங்க. சிறிசுங்க பாவம், சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டும்!
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் அண்ணா! காணமப் போயிட்டிங்களே!! ஹாஹாஹா...
நீக்குகீதா
ஹா.. ஹா.. ஹா... அதுல வொயரே இத்துப் போச்சாம் ஏகாந்தன் ஸார்.. ஓல்ட் மாடலாம்!
நீக்குபை த பை செஞ்சுரியன்ல வரலாறு படைக்கப்படுமா?
வரலாறோ என்னமோ வெற்றி வெற்றி வெற்றி.
நீக்குJayakumar
வரலாறுதேன்..!! அங்கன இதுவரை செயித்ததில்ல இல்ல...
நீக்குசிவாஜி பற்றிய தகவல் ரசித்தேன்.
பதிலளிநீக்குஎங்கள் பிறந்த வீட்டில் என்னை டாம் பாய் என்பதற்குப் பதில் என் பாட்டி என்னை ஜவான் என்பார். ஜவான் நடை.
கீதா
ஜெய் ஜவான்; ஜெய் கிசான்!
நீக்குபெரியவன் உங்களைப் போல...? அலுவலகத்தில் ஒரு அலமாரி கேட்கவில்லையா...?
பதிலளிநீக்குஅவன் இப்படிக் கேள்வி கேட்பானே தவிர, ரொம்ப உஷார்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம், வாங்கோ.
நீக்குவணக்கம் பானு அக்கா.. வாங்க..
நீக்குமறதி நல்லதா...? கெட்டதா...?
பதிலளிநீக்குமறக்க வேண்டியதும் மறக்கக் கூடாததும் எவை...?
ஐயனிடம் கேட்கிறேன்... 16 குறள்கள்...! அதில் எத்தனை மதிப்பெண்...? அதற்கான நுட்பத்துடன் பதிவு எழுத வேண்டும்...!
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
நீக்குஅன்றே மறப்பது நன்று.
எழுதுங்கள்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குபுதிய தொற்று யாரையும் அணுகாமல் இருக்க இறைவன் துணை தர வேண்டும்.
பிரார்த்தனைகள் பலன் அளிக்கட்டும்.
நீக்குவாங்க வல்லிம்மா.. வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதம்பம் அருமை. தர்மத்தின் தலைவன் தொ.கா.வில் பார்த்திருக்கிறேன்.அதன் முதலாகிய இந்திப் பதிப்பு பார்த்ததில்லை. குமுதம் நான் வளரும் காலங்களில் வீட்டில் அவ்வளவாக வாங்கியதில்லை. அப்படியே யாராவது படித்து சொல்லியிருந்தாலும் அது நினைவிலுமில்லை.(மறதிதான் காரணம்:)) நீங்கள் குமுதம் பற்றி சொல்வதை இப்போது புதிதாக கேட்பது போல் படிக்கிறேன்.
உங்கள் மறதி குறித்து எழுதியது நன்றாக உள்ளது. ஓ..இன்னமும் நீங்கள் அந்த பகுதி குறித்தே வரவில்லையோ? :) ஆனாலும் சிறுவயதில் நடந்ததெல்லாம் அது அந்த வயதின் பயங்களின் துணையோடு ஒரளவு அவ்வப்போது நினைவுக்குள் தங்கி விடும். எல்லாவற்றையும் அழகாக நினைவில் வைத்து பதிந்திருக்கிறீர்கள்.
ப்ராகரஸ் ரிப்போர்ட் எல்லோர் நினைவிலும் நிழலாடும் போலும். இப்போது உங்கள் மகனின் மறதி கோபமாகி மாறி உங்களின் மேல் பாய்வதை ரசித்தேன்.
எனக்கு மறந்து வைக்கப்பட்ட ஒரு பொருளை தேடும் போது எதிர்பாராத விதமாக எப்போதோ தேடிய வேறு பொருளும் கிடைக்கும். அது அப்போதைக்கு அவசியமில்லையென கைக்கு எதிரே வந்த அந்தப் பொருளை வேறு இடமொன்றில் குடிப்புக வைத்து விட்டு, மறுபடி எப்பவாவது அதை தேடும் புராணம் நடக்கும். இப்படியாக மறதி ஒரு புதையல் தேடும் வைபவமாகி விடும். பிற பகுதிகளை படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான் பொதுவாக அதிகம் மறப்பதில்லை. எந்தப் பொருளை/சாமான்களை/மளிகைப் பொருட்கள் என வீட்டு உபயோகப் பொருட்களைக் கூட நானே எடுத்து வைத்தால் அது எங்கே எந்தப் பொசிஷனில் வைக்கப்பட்டது என்பது வரை நினைவில் வந்து விடும்.அதன் பின்னர் அதை எடுக்கும் சிரமம் அதிகம் இருக்காது. புடைவைக்கு அடியில் பத்து ரூபாய் வைத்தேன் எனில் (முன்னெல்லாம் அவசர காலத்துக்கு இப்படி எடுத்து வைத்துவிட்டுப் பின்னர் செலவு செய்வது உண்டு) எந்தப் புடைவை என்பது வரை ரங்க்ஸிடம் கரெக்டாகச் சொல்லிவிடுவேன். புடைவையின் ஜாதகமே வந்துடும். ஆனால் எப்போவுமே அது என்னால் மட்டுமே வைக்கப்பட்டிருக்கணும். :))))) யாராவது உதவி செய்கிறேன் என வந்து அப்போ வைச்சால்! சுத்தம்! என்ன செய்தேன் என்பதே நினைவில் இருக்காது! :)))) என் அம்மாவே என்னை "விசித்திரப் பிறவி" என்பார். :))))))
நீக்குகமலா அக்கா, எங்கள் வீட்டில் அந்நேரங்களில் தவறாது குமுதமும் கற்கண்டும் வாங்கி கொண்டிருந்தார் அப்பா. விகடனும்! கட்டுப்பாடெல்லாம் கிடையாது. நாங்களும் படிப்போம்
நீக்குஆம், எனக்கும், ஏன், எல்லோருக்குமே தேடும்பொருள் தேடும்போது கிடைக்காமல், பின்னர் ஒருநாள் வேறொன்று தேடும்போது கிடைப்பது வழக்கம். அதையும் மர்பி விதிகளில் சேர்க்கலாமோ!
கீதா அக்கா.. அசத்தறீங்க.. என் பாஸ் ரொம்ப நினைவு சக்தி உடையவர். அவர்கூட பல சமயங்களில் வைத்த இடம் தெரியாமல் சில பொருகளைத் தேடிக் கொண்டிருப்பார். இரண்டு நாட்களுக்கு முன்னாள் கூட அப்படி அப்பாவித்தங்கமணி கார்டை தேடிக்கொண்டிருந்தார்!!!
நீக்குபாடங்கள் கூடப் புத்தகத்தில் குறிப்பிட்ட கேள்விக்குக் குறிப்பிட்ட பக்கத்தில் இருக்கும் விடை கண்ணெதிரே தோன்றி இருக்கு ஒரு காலத்தில். :(
நீக்குவியாழன் பதிவு எப்போதும் போல இனிமை.
பதிலளிநீக்குப்ராக்ரெஸ் ரிப்போர்ட்டுக்கு யாராவது அடிப்பார்களா.
பாவம் பா ஸ்ரீராம்.
திசையன் விளை கிணறு அதிசயமாக இருக்கிறது வற்றாத ,நிரம்பாத
கிணறு என்றால் தண்ணீஎ எங்கேயோ
போகிறதோ என்னவோ.
பின்னே அடிக்காமல்? என்ன அடித்தாலும் நான் அசருவதில்லை! மாறியதுமில்லை!!!
நீக்கு😎👍😂🙂😁🤗😃
நீக்குஉங்கள் வீட்டுப் பெரியவன் போல எங்கள் வீட்டுப் பெரியவனும் மறப்பான்.
பதிலளிநீக்குபாஸ்போர்ட்டை மறந்து
தென் ஆப்ரிக்காவுக்குக் கிளம்பினவனை,
சரியான நேரத்தில் பின் சென்று லண்டன் டிராஃபிக்கில் கொடுத்துத் திரும்பினாள்
மருமகள். சரியான கார் சேஸ்.:)
அம்மாடி.. நினைத்துப் பார்க்கவே த்ரில்லாய் இருக்கிறது. அவருக்கு எப்போது அது தெரியும்? கைக்கு வந்ததும்தானா?
நீக்குஆமாம் ஸ்ரீராம்.
நீக்குமொபைலில் அவனைப் பிடித்து அப்பா,
ரோட்டோரமா வண்டியை நிறுத்திக்கோ.உன் பொண்டாட்டி வருகிறாள்
என்று நான் செய்தி அனுப்பினதும்
சொல்கிறான்.
அதனால என்னம்மா. அடுத்த ஃப்ளைட்டில
போனாப் போறது என்று!!!!!!! Cool as cucumber. Just like his father.
அம்மாடி.. கூல். ஆனால் எப்படியும் கைக்கு கிடைத்துவிடப் போகிறது என்று தெரிந்ததும் வரும் நிம்மதியுடன் கூடிய பதிலோ!
நீக்குசிவாஜி பற்றி எழுதுகிறார்களா.
பதிலளிநீக்குலக்ஷ்மிக்குத் தைரியம் ஜாஸ்திதான். அவருக்கென்ன மகராஜன்.
உலகத்தில் இருக்கும் அத்தனை பேராகவும் நடித்துக் காண்பிப்பார்.
மிக மிக நன்றிப்பா ஸ்ரீராம்.
லஷ்மி தப்பாய் எதுவும் சொல்லவில்லையே அம்மா.
நீக்குலக்ஷ்மி தப்பாகச் சொல்லவில்லை.
நீக்குசிவாஜியிடம், நீங்களே நடித்துக் ஆண்பியுங்கள் என்று
கேட்டிருக்கிறாரே அந்த தைரியத்தைச் சொன்னேன்.:)
ராஜ ராஜ சோழன் நினைவுக்கு வந்தது.
அம்மு, லஷ்மி , எல்லாம்அவரவர்கள் அம்மாக்கள் மூலம் இந்த சீனியர்களுக்கு ஏற்கெனவே அறிமுமானவர்களாக இருந்ததால் அப்படிக் சொல்லி இருப்பாரோ.. அல்லது சம்பவமே கற்பனையோ...
நீக்குநோக்கியா ஜோக் பிரமாதம் ஹாஹா.
பதிலளிநீக்குநோக்கியாவும் ஓல்ட், ஜோக்கும் ஓல்ட்... சிரிப்பு எப்ப்பவுமே கோல்ட்! ஹிஹிஹி...
நீக்குமுத்துக் குமரன் கதை யார் எழுதியது தெரியவில்லையே.
பதிலளிநீக்குசுவைபட மனித உணர்ச்சிகளை விவரித்திருக்கிறார்.
எனக்குத் தெரியும். ஆனால் - - - நா சொல்லமாட்டேன் பா.
நீக்குநான் படிக்கவே இல்லை! :(
நீக்கு// எனக்குத் தெரியும். ஆனால் - - - நா சொல்லமாட்டேன் பா.//
நீக்குஹா.. ஹா... ஹா... ஒரு ஒற்றெழுத்து மிஸ்ஸிங் என்பதை கவனியுங்கள்!
ஓ. நா.பார்த்தசாரதியா!! நன்றி மா.
நீக்குகப்புனு பிடிச்சுட்டீங்க... சமுதாயவீதி கதை அம்மா அது.
நீக்குசென்னை வருவதற்கு முன் குமுதம் படிப்பேன்.
பதிலளிநீக்கு76க்குப் பிறகு வந்த குமுதங்கள் அவ்வளவாகப்
படிக்கக் கிடைக்கவில்லை.
அனைத்துப் பதிவுகளுக்கும் நன்றி ஸ்ரீராம்.
பிறந்த வீட்டில் இருந்தவரை குமுதம் படிக்கவே முடியாது. அப்பாவுக்குத் தெரியாமல் பெரியப்பா வீட்டிற்குப் போய்ப் படிப்பேன்/அதுவும் எப்போவானும் தான். எழுபதுகளுக்குப் பிறகே குமுதம் நான் படிக்க ஆரம்பித்தேன்.
நீக்குநான் குமுதத்தை 90 களில்தான் நிறுத்தினேன்!!
நீக்குமுதுமையைப் பற்றியும் மறதியைப் பற்றியும் GMB ஐயா வரமா சாபமா என்று பல பதிவுகள் எழுதியிருக்கிறார். மறதி பொதுவானது. சின்ன வயதிலும் வரும். ஆனால் கைமாற்று கொடுத்தது மட்டும் நினைவில் நிற்கும் வாங்கிய நபரை பார்க்கும்போதெல்லாம்.
பதிலளிநீக்கு//மறதி எப்படி என்றால் எடுத்ததை எங்கே வைக்கிறேன் என்று மறந்து விடுவேன். எதையும் எப்போதும் தேடிக்கொண்டே இருப்பேன். தொலைத்துக் கொண்டே இருப்பேன். //
இப்படித்தான் நானும் இருந்தேன். தற்போது எடுத்த பொருளை அதன் உபயோகம் முடிந்தவுடன் அதன் இடத்தில மறக்காமல் வைக்க முயற்சி செய்கிறேன். ஆனாலும்.....
சிவாஜி என்றவுடன் இந்த மறதியையும் இணைத்து ஒரு பாடல்.
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று (2)
இரண்டு மனம் வேண்டும்.
Murphy's law எனது அலுவலக வேலையின் முதல் பாடம். நான் ஒரு programmer ஆக என்னுடைய அலுவலக வேலையை துவங்கினேன். இந்த தவறுகளை கண்டுபிடிப்பது என்பதே என்னுடைய முதல் அசைன்மென்ட். அதாவது மெயின்டெனன்ஸ். அதில் முதிர்ச்சி பெற்றால் bug free கோடிங் செய்ய முடியும் என்ற பாலபாடம். ஒரு 3000 லைன் ப்ரோக்ராமில் ஒரு "+" "*" ஆனா தவறை (bug) கண்டுபிடிக்க 3 நாட்கள் தேவைப்பட்டது.
மதன் ஜோக் பலவகைகளில் டாக்டர் ஜோக்காக வந்திருக்கிறது.
இந்த வாரம் கதம்பம் நீண்டதால் கவிதை இல்லையோ? கொஞ்சம் ஏமாற்றம் தான்.
Jayakumar
சிவாஜி (கண்ணதாசன்) பாடல் மறதிக்கு பொருத்தமான பாடல்.
நீக்குசில சமயங்களில் தவறுகள் கண்முன்னே இருந்தும் தவறவிட்டிருப்போம் - ஆழ்ந்த கவனத்தால்! சரியாய் விவரம் தெரியாத இன்னொருவர் அதைப் பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடித்துவிடக்கூடும்.
ஆம், மதன் ஜோக் அக்கருத்து பழசு என்றாலும், மதன் இன்னமும் சுடச்சுட படம் போட்டுக்கொண்டிருக்கிறார் என்பதற்காகத்தான் அதைப் பகிர்ந்தேன்.
கவிதை இல்லாததற்கு இப்படி வருத்தமா? அட...
இந்த வார வியாழன் கதம்பம் வழக்கமான உற்சாகத்தோடு இல்லையே ஏன்?
பதிலளிநீக்குஏன்?
நீக்குகவிதை என்ற முந்திரி பருப்பும் ரெட்டை வால் ரெங்குடு போன்ற திராட்சைகளும் இல்லாத சர்க்கரைப் பொங்கல்.
நீக்குநான் சாதாரணமாக வைக்கும் பொருள்களை மறக்க மாட்டேன், பத்திரமாக வைக்க வேண்டும் என்று நினைத்து எங்கேயாவது வைத்து விட்டு தேடுவேன். பெரும்பாலும் தேடுவதில் லை.
பதிலளிநீக்குஅதேதான் என் வழக்கமும்!
நீக்குசஞ்சீவியின் சந்தேகங்கள் நினைவில் இல்லை. பால்கார பத்மா, பயில்வான்.... என்று சில பாத்திரங்கள் நினைவில் இருக்கின்றன.
பதிலளிநீக்குதாணு என்னும் ஓவியர் வரைந்த துணுக்குகள் "குமாரி" என்னும் தலைப்பில் குமுதத்தில் வரும். ஆர்ச்சி காமிக்ஸை சுஜாதா குமுதம் ஆசிரியராக இருந்தப்போ
நீக்குஅச்சு/ஜக்கு" என்னும் பெயரில் வெளியிட்டு வந்தார். அவ்வளவாக வரவேற்புப் பெறவில்லை.
சஞ்சீவியின் சந்தேகங்கள் யாருக்குமே ஞாபகம் இல்லையா? எனக்கு கவலையாக இருக்கிறது!
நீக்குஸ்ரீராம், கதை செமையா இருக்கு. மனித உணர்வுகள் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பல வரிகள் என் மனதில் கதை எழுதும் போது எழும் எண்ண அலைகளைச்சொல்லுகிறது..பூகம்பம் ஒப்புமை எல்லாம்...யார் எழுதியது என்பது தெரிய தேட வைக்கிறது!!
பதிலளிநீக்குகீதா
இன்னும் ஜீவாதாரமான கட்டங்கள் அந்தக் கதையில் இருக்கின்றன.
நீக்குபொழுது போகாத பொம்மு என்று ஒரு பகுதி வந்தது. தெருவில் நடந்து செல்பவர்களின் எத்தனை பேர்கள் குடை கொண்டு செல்கிறார்கள்? எத்தனை பேர்கள் கூலிங் கிளாஸ் அணிந்து செல்கிறார்கள்? என்றெல்லாம் கணக்கு கொடுப்பார்கள். இந்தப் பகுதியை வேதா கோபாலன் செய்தார் என்று நினைவு.
பதிலளிநீக்குஆம்.. அதெல்லாம் எனக்கு நினைவில் இருக்கின்றன. மனிதன் என்றொரு பகுதியும் வரும்.
நீக்குசிறு வயது நினைவலைகள் சுவாரஸ்யம். தொடருமா ???
பதிலளிநீக்குஆம். தொடரும் ஜி.
நீக்குஇப்பல்லாம் எப்படியும் ஓரிரு வாரங்கள் இழுத்து விடுவது...!
கதம்பம் பகுதிகள் அனைத்தும் நன்று. கிணறு விஷயம் அதிசயம் தான். நகைச்சுவை துணுக்குகள் புன்னகைக்க வைத்தன.
பதிலளிநீக்குநன்றி வெங்கட். நீண்ட (நாள்) அரியர்ஸ் முடிக்கறீங்க போல...!
நீக்குமறதி குறித்த ஞாபகங்கள் அருமை..வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்றி ரமணி ஸார்.
நீக்கு'என்ன ஒரு வர்ணனை' க்கு கீழே காண்பது அச்சுப் பிரதியின் ஃபோட்டோ காப்பி தானே?.. ஏன் இத்தனை எழுத்துப் பிழைகள்?
பதிலளிநீக்குசில எழுத்துருக்கள் பி டி எஃப் பண்ணும்போது அப்படி ஆகிவிடும் ஜீவி ஸார்.
நீக்குஎன்ன ஒரு வர்ணனை என்னால் படிக்க முடியலை. பெரிசாக்கியும் பார்த்தேன். :))))
பதிலளிநீக்குஅடப்பாவமே... விடுங்க.. விடுதலை! ஏன்? மொபைலிலா படிக்கிறீர்கள்?
நீக்குஇல்லையே! மொபைலில் அநேகமாக வாட்சப் செய்திகள் தான் அதிகம் பார்ப்பேன். எப்போவானும் ஃபேஸ்புக்! கிடைத்தால் கருத்துரைகளில் போட வேண்டிக் கிடைக்கும் பொருத்தமான ஐகான்களில் புகுந்து விளையாடத் தோன்றும்.
நீக்குகணினிக்கு எதிரில் உட்காரவே இப்போதெல்லாம் எனக்கு(ம்) மூட் வருவதில்லை கீதா அக்கா...
நீக்குதினமணி மதன் ஜோக், நோக்கியா ஜோக் எல்லாம் அரதப் பழசு! ஹிஹிஹி! அதிசயக்கிணறு தொலைக்காட்சியிலும் பார்த்தேன். எல்லாமே நன்றாக இருந்தாலும் ஏதோ ஒண்ணு குறையுது!
பதிலளிநீக்குஎன்ன அது?!
நீக்குஓ! உங்கள் மறதி பற்றிய கட்டுரை/வ்யாசம் குறித்து ஏதும் சொல்லலியோ? :)))) மறந்துட்டேன். :)
பதிலளிநீக்குஹிஹிஹி....
நீக்குகவிதை இல்லையே என்று வருத்தப் பட்டிருக்கும் ஜெயகுமார் ஸார் பின்னூட்டம் பார்த்ததும் குமுதத்தில் வெளி வந்த என் குட்டிக் கவிதை ஒன்று ஞாபகத்திற்ககு வந்தது
பதிலளிநீக்கு. ஏற்கனவே எபியில் குமுதத்தின் பெயர் ரிப்பேர் ஆகியிருக்கிறது. நாம் வேறு எதையாவது போட்டு மெல்ல அவல் கொடுப்பானேன் என்று பகிர்வதைத் தவிர்த்தேன்.
குமுதத்தின் பெயர் இப்போது புதிதாக ரிப்பேர் ஆகி இருக்கா என்ன? அநேகமாக எங்கள் வயசைச் சேர்ந்த பெண்கள் அனைவரையும் அவங்க வீடுகளில் குமுதம் படிக்கக் கூடாது என்றே சொல்லி இருப்பார்கள். இதைத் தான் ரேவதியும் சொல்லி இருப்பார்/ நானும் சொல்லி இருக்கேன். அதன் பின்னரும் பல ஆண்டுகள் குமுதத்திற்கு அந்தப் பெயர் மாறவில்லை. இப்போது இருபது வருடங்களுக்கும் மேலாகக் குமுதம் எல்லாம் வாங்குவதே இல்லை என்பதால் தெரியலை. ஆனால் குமுதம் நிர்வாகம் மாறப்போவதாகவோ/அல்லது அச்சுப்பதிப்பு நிற்கப் போகிறது என்றோ நம்பிக்கையான ஒருவர் சொன்னார்.
நீக்குகுமுதம் பத்திரிகைக்குப் பெயர் கிடைக்கவில்லை என வருந்தும் ஒருவரை இப்போது தான் பார்க்கிறேன். எல்லோருமே குமுதம் படித்தாலும் பலரும் அப்போதெல்லாம் வெளியே சொன்னதில்லை. ராணி, குமுதம் எல்லாம் பொதுவெளியில் ஒதுக்கப்பட்ட பத்திரிகைகளாகவே பல ஆண்டுகள் இருந்தன.
நீக்குஜீவி ஸார்.. என்ன கவிதை அது?
நீக்குகுமுதம் சாண்டில்யன் கதை, வேறு சில கோபாலி போன்ற கதைகளினால் வேண்டுமானால் கொஞ்சம் வேறு பெயர் வாங்கி இருக்கலாம். ஆனால் தரமில்லாத பத்திரிகை என்றோ, போர் என்றோ சொல்லி விட முடியாது.
நீக்குஎன்ன கவிதை அது?
நீக்குநேர்படப் பார்ப்பவர்களுக்கு நல்ல கவிதை அது. கோணலாகப் பார்ப்பவர்களுக்கு 'ஒரு மாதிரி' இருக்கும் அவ்வளவு தான்.
அந்தக்கால ஆவி போலவோ, கல்கி போலவோ இல்லாமல் இளையோர்க்கு ஏற்ற புதுமைகளைச் சுமந்து கொணடு குமுதம் இருந்ததால் அந்த நாளைய வீட்டு பெரியவர்கள் அந்த பளபளப்பை சகித்துக் கொள்ள முடியாமல் தடா போட்டிருக்கிறார்கள். அவ்வளவு தான்.
நீக்குஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம் ஆவியில் வந்த பொழுது நம் பண்பாடே பறி போய் விட்ட மாதிரி ஒரு குய்யோ முறையோ கூப்பாடு எழுந்தது.
ஆனால் ஆவியில் சிறை என்ற தொடர் வந்த பொழுது? .... கப்சிப்.
ஸ்ரீராம்! சிறை படிச்சிருக்கீங்களா? இல்லை, சினிமா பாத்திருக்கீங்களா?
நீக்குஶ்ரீராம், நீங்க குமுதத்தில் வரும் "ஒரு மாதிரி" யான செய்திகள்/உண்மைக்கதைகள் எனப் படிக்கலை/பார்க்கலையா? மற்றபடி போர் அடிக்கும் என்றெல்லாம் சொல்லவில்லை. ரகசியமாய்ப் பெரியப்பா வீட்டில் போய்ப் படிப்பேன் என்று சொல்லி இருக்கேனே! அதைக் கவனிங்க! மற்றப் பத்திரிகைகளோடு ஒப்பிட்டால் குமுதம் தரம் சுமார் ரகத்தில் தான் வரும். பின்னர் வந்த சாவி, குங்குமம், தாய் போன்றவை அதே ஃபார்முலாவைப் பின்பற்றின. இதில் குங்குமம் மட்டும் குறிப்பிட்டவர்களின் பலத்தால் நிலைத்து இருக்கிறது. மற்றவை போன இடம் தெரியவில்லை.
நீக்குஅறுபதுகளில் நடுவில் சில காலங்கள் தினமணி கதிர் (தினமணி பதிப்பகம்/எக்ஸ்ப்ரஸ் குழுமம்) வெளி வந்தது சாவியை ஆசிரியராகக் கொண்டு. சாவி அதில் நிறையப் புதுமைகளைப் புகுத்தினார். சுஜாதாவின் வண்ணான் கணக்கு அதில் தான் வந்ததோ? ஜெயகாந்தனும் அதில் நிறைய எழுதி இருக்கார். ஶ்ரீவேணுகோபாலன் என்னும் புஷ்பா தங்கதுரை இரண்டு பெயர்களிலும் நிறைய எழுதினார். அதில் நீ-நான் -நிலா தொடருக்காகப் புத்தகத்தைத் தேடித்தேடிப் படிச்சிருக்கேன். பின்னாட்களில் புத்தகமாய் வந்தப்போ ஏனோ ரசிக்கலை. வயது/முதிர்ச்சி காரணமோ?
நீக்குஉண்மைக்கதைகள் மாதிரியான பகுதிகள் கம்மி. சினிமா பக்கத்தில் கவர்ச்சிப்படங்கள் வெளியிடாத பத்திரிகை ஏது!
நீக்குசிறை படித்திருக்கிறேன் ஜீவி ஸார்... படம் பார்க்கவில்லை.
நீக்குஇரு ஜோக்குகளையும் ரசித்தேன் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குகீதா
ந
நீக்குன்
றி
கீதா.
எனக்கும் மறதி ஒரு சில விஷயங்களில் குறிப்பாகச் சில சம்பவங்கள், தேதிகள் நினைவில் இருப்பதில்லை. ஆனால் முக்கியமான விஷயங்கள் டாக்குமென்ட்கள் எல்லாம் நினைவாக சரியாக வைத்து தேடும் நிலை இதுவரை இல்லை.
பதிலளிநீக்குதுளசிதரன்
சிலவற்றை மறக்க முடியவில்லை. சிலவை திடீரென் நினைவுக்கு வருகின்றன. முக்கியமாகப்
நீக்குபணவிஷயத்தில் மறதி அதிகம்.
ஒரு டிரிக் இருக்கிறது. எதையாவது தேட வேண்டும் என்றால்
when you trace back your movements you will certainly
find the missing thing.
இது எனக்கு வேலை செய்கிறது. Thulasidharan.
ஆமாம் அம்மா.. நானும் அப்படி செய்வேன். எனக்கும் இந்தப் பழக்கம் உண்டு.
நீக்கு
சிவாஜி பற்றிய தகவல் சிறப்பு. சில வீடியோக்களிலும் கேட்கிறேன்.
பதிலளிநீக்குஜோக்குகளை ரசித்தேன். செல் ஜோக்கு இப்பவும் பொருந்திப் போகிறது.
துளசிதரன்
அதிசய கிணறு அதிசயம்தான். வீடியோவும் பார்த்தேன் ஆச்சரியமாக இருக்கிறது
பதிலளிநீக்குதுளசிதரன்
@ஸ்ரீராம்
பதிலளிநீக்குமிதக்கும் சென்னை, படகு வாங்கிவிட்டீர்களா?
Jayakumar
ஹாஹாஹா சென்னையில் மழை அதுவும் கன மழை!!! வெதர் மேன் சொல்லியிருக்கிறாரே!!!
நீக்குகீதா
மீண்டும் மழை?:(
பதிலளிநீக்குஆமாம் வல்லிம்மா கன மழையாம். ரோடு மீண்டும் வெள்ளத்தில்னு செய்தி!!!
நீக்குChennai: Heavy spell of rains lashed several parts of Chennai throwing life out gear within hours. On Tuesday, the Regional Meteorological Centre had said that heavy rains with thunderstorms are likely in several coastal districts of Tamil Nadu.
Traffic snarls were reported in many parts of the city with roads flooded with rain water within hours of heavy downpour. //
இப்படி பெய்தாலும் இன்னும் அடுத்த மூன்று மாதங்களில் தண்ணீர் லாரிகள் சென்னை சாலைகளில் ஓடத் தொடங்கிவிடும்!!!!
கீதா
எல்லா செய்திகளும் படித்தேன்.
நீக்குஏற்கனவே பலர் வீடு மாற வேண்டிய நிலைமை.
இன்னோரு வயதான் தோழியின் வீட்ட்னுள் மழை வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.
ரொம்பக் கவலையா இருக்குமா.
நேற்றைக்கு இன்று தேவலாம். ஆனாலும் இன்றும் மழை. நாளை மிக கனமழையாம்.
நீக்குஸ்ரீராம், கவிதை மிஸ்ஸிங்க்!
பதிலளிநீக்குகீதா
முயற்சிக்கிறேன்!
நீக்குஆச்சரியமான கிணறு.
பதிலளிநீக்குஎங்கள் பகுதியிலும் நிலாவரை கிணறு ஒன்று இருக்கிறது 382 அடிக்கு மேல் ஆழம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் கோடை மழை எக்காலத்திலும் ஒரே அளவில்தான் நீர் இருக்கும் நிலத்தடியில் இருந்து 14 அடியில் நீர் இருக்கும். வற்றாக்கிணறு இப்பகுதி மக்களின் விவசாயக்கிணறு இது.
ஜோக்ஸ் ரசனை.
அட, அப்படியா? நன்றி மாதேவி.
நீக்குஇந்தத் தடவை எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாதமி விருது!!
பதிலளிநீக்குஆமாம் ஸார்... செய்தி வெளியான உடனேயே பார்த்தேன்.
நீக்கு