வியாழன், 16 டிசம்பர், 2021

கல்யாண அனுபவங்கள் - திருத்தணி சென்று திரும்பி வந்தால்...

 சத்திரக்காரர்களின் வியாபார சாமர்த்தியம் என்பது தனி. 

சத்திரத்தில் பதினெட்டு அறைகள்.  அதில் மணமகன், மணமகள் அறைகள் போக பாக்கி 16 அறைகள்.  எங்கள் வழக்கத்தில் திருமணம் பெண் வீட்டுச் செலவு என்பதால் அவர்கள்தான் பெண் வீட்டுப் பக்கத்துக்கு எத்தனை அறைகள், மாப்பிள்ளை வீட்டுப் பக்கத்துக்கு எத்தனை அறைகள் என்பதை முடிவு செய்வார்கள்.  எங்களுக்கு மணமகன் அறை தவிர எட்டு அறைகள் தந்தார்கள்.  அதில் நான்கு அறைகள் இலவசம்!   மற்ற நான்குக்கு ஐநூறு ரூபாய் பணம் கட்டவேண்டும்!  இது வாடகையில் சேர்த்தி இல்லாமல் தனி சம்பாத்தியம்.  வாங்கும் வாடகைக்கு அந்த அறைகளையும் கொடுப்பதுதானே நியாயம்...

சரி அந்த அறைதான் கொஞ்சமாவது பெரிதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.  இது சத்திரத்துக்கு சத்திரம் மாறுபடுமோ என்னவோ...    மணமகன்/ள் அறை வேண்டுமானால் சற்று பெரிதாக இருந்தது.  மற்ற அறைகள் கட்டிலில் இரண்டு பேர் படுத்தால் கீழே இரண்டு பேர் இடுக்கிக் கொண்டு படுக்கலாம்.  இதுவும் சத்திரத்துக்கு சத்திரம் மாறுபடலாம்.

மட்டுமின்றி, ஒரே ஒரு போர்வையும், இரண்டு தலையணைகளை மட்டுமே தந்தார்கள்.  அட, காசு கொடுக்கிறோம், எக்ஸ்ட்ரா பெட்ஷீட் , போர்வை, தலையணை கொடு என்றால், இல்லையாம்.  இங்கு என்றில்லை, எந்த சத்திரத்திலும் இல்லை.  வேண்டுமானால் திருமணம் நடக்காத பக்கத்து சத்திரங்களில் அறை எடுக்கலாம்.  பிஸினஸ்!  அதுதான் செய்யயவும் செய்தோம்.

அறைகள் ஏஸி போடாமலேயே சில்லோ சில்.  சென்னையில் ஒரு சத்திரத்தில் இதே பிரச்னை இருந்தபோது சில 'ஆதார' வசதிகளுடன் போர்வை பெட்ஷீட் தலையணை வெளியிலிருந்து வாடகைக்கு எடுத்து வந்தோம்.  இங்கு திருத்தணியில் அந்த வசதியும் இல்லை, அல்லது அந்நேரத்தில் எங்களுக்கு அது தெரியவில்லை.  

மார்க்கெட் ரோடில் நிறைய சத்திரங்கள் இருந்தன.  அதில் ஒன்றில் திருமணத்துக்கு வருபவர்களுக்கு (உறவினர்கள், நண்பர்கள்)அறைகள் புக் செய்து வைத்திருந்தோம்.  அங்கு சென்றால் இரண்டாவது மாடியில் அறைகள் ஒதுக்கி இருந்தார்கள்.  லிஃப்ட் ஒரு வாரமாக ரிப்பேராம்!  நம் ராசி.  அல்லது நம்மால் அறைகள் புக் செய்யப்பட்டவர்களின் ராசி!

இவ்வளவு பணம் வாங்கிக்கொண்டு பாத்ரூமில் வாளியுடன் மக் வைக்காமல் அழுக்காக ஒரு டப்பா வைத்திருந்தது இன்னொரு வெறுப்பு.  சுண்ணாம்பு அடிப்பவர்கள் பயன்படுத்தும் பெயிண்ட் டப்பா.   டப்பாவின் உள்ளே எல்லாம் அழுக்காக சுத்தம் கூட செய்யப்படாமல் எங்கள் பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்தது.

மழைக்காலம் என்று ஊரே சில்லென்று இருக்கையில் குளிக்க வெந்நீர் இலையென்று சொன்னால் எப்படி இருக்கும்?  மணமகன்/ள் அறை தவிர மற்ற அறைகளில் சோலாரில் இயங்கும் கெயிஸர்.  சூரியனையே காணோம்?  எங்கிருந்து வெந்நீர் வரும்?  மாற்று ஏற்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.   

அவர்களிடம் வென்னீர் கேட்டால் அவர்கள் முகத்தில் சிரிப்பைக் கூட காட்டவில்லை.  கடைசியில் அடுப்பில் அவர்கள் வைத்திருந்த பெரிய பாத்திரத்திலிருந்து மொண்டு மொண்டு சிறு சாம்பார் வாளிகளில் எடுத்துக்கொண்டு அறைக்கு வந்து ஊற்றிக் குளித்தோம்.

பல பாத்ரூம்களில் உள் தாழ்ப்பாள் போடமுடியாமல் இருந்தது.  கல்யாணத்தில் ரொம்பப் பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்று நிறைய இடங்களில் அடக்கி வாசித்தே போனோம்.  சண்டைக்காரர்கள் என்று பெயர் எடுத்து விடக்கூடாதே...  

பொதுவாகவே கல்யாண ரிஸப்ஷன் போகும்போது என் பொறுமையை சோதிப்பது மணமகளின் நேர மேலாண்மைதான்!  இப்போதெல்லாம் புதிதாக மேக்கப் கலாச்சாரம் ஒன்று தொடங்கி இருக்கிறது.  இப்போது என்றால் சமீபத்தில் இல்லை, சில வருடங்களாக...

வரவேற்பு ஆறு மணி முதல் என்று போட்டிருப்பார்கள்.  நாமே வீட்டைவிட்டு ஏழு மணிக்கு கிளம்பி ஏழரை போலதான் மண்டபத்தை அடைவோம்.  பார்த்தால் அப்போது கூட மணமக்கள் மேடைக்கே வந்திருக்க மாட்டார்கள்.  காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனபின் மெதுவாக வருவார்கள்.  அப்புறம் இப்படி நின்று, அப்படி நின்று போட்டோ எடுப்பார்கள்.  பெரும்பாலும் மணமக்களை பார்த்ததுமே நான் மேடைக்கருகே இடது புறமாக சென்று இடம் பிடித்து விடுவேன்.  அப்போதுதான் காலாகாலத்தில் மொய் கொடுத்துவிட்டு சாப்பிட்டுக் கிளம்பலாம்.  நம் வீடு ஒரு கோடியில் இருக்கும்.மண்டபம் இன்னொரு கோடியில் இருக்கும்!  என்ன செய்ய...  இதில் புறமாக மேடையேறி மொய் கொடுக்கவேண்டும் என்கிற எழுதப்படாத கௌரவ விதி தெரியாமல், அல்லது மதிக்காமல் சிலர் வலது புறமிருந்தும் ஏறி வந்து ஆக்ரமிப்பார்கள்.  

அதேதான் - அந்தத் தாமதம்தான் - எங்கள் இல்லத் திருமணத்திலும் 
நடந்தது!  அதுவும் எங்கள் பொறுமையையே சோதித்தது.  

நாந்தி முடித்து சாப்பிடக் கிளம்பும்போது 'மூன்று மணிக்கு வரபூஜை, வந்து விடுங்கள்' என்றார்.  வரபூஜை அல்லது நிச்சயதார்த்தம்.

நாங்களும் ப்ராம்ப்ட்டாக மூன்று மணிக்கு மேடைக்கருகே வந்துவிட்டோம்.  மூன்றரை ஆகிறது, நான்கு ஆகிறது எந்த நிகழ்ச்சியும் தொடங்கவில்லை. 

அதேபோல இந்த மேக்கப் என்று செய்யப்படும் விஷயங்கள் மணப்பெண்ணுக்கு உண்மையில் அழகைக் கொடுக்கின்றனவா, அல்லது இருக்கும் அழகையும் கெடுக்கின்றனவா என்பது நிறைய பேர் மனதில் இருக்கும் கேள்வி.  திருஷ்டி கழிப்பதில் இது ஒரு வகையோ என்னவோ!

மூன்று மணிக்கு செய்யப்படுவதாக இருந்த நிச்சயதார்த்தம் ஆறு மணிக்கு மேல் தொடங்கி முடியும்போது எட்டரை மணி.  அதற்குப்பின் வரவேற்பு.  அதில் DJ என்றழைக்கப்படும் நிகழ்வு வேறு ஏற்பாடு செய்திருந்தார்கள்.  சிலர் ஆடினார்கள். அன்றைய பொழுது குளிருடனும் சில் அறைத் தூக்கத்துடனும் கழிந்தது.பெண் மேக்கப்பால்தான் தாமதம், இனி அது நிகழாது என்று நினைத்திருந்த வேளையில்,  மறுநாளும் தாமதம் ஆனது.  நான்கு மணிக்கு எண்ணெய் வைக்கப்போவதாய்ச் சொல்லி, ஐந்தரை மணிக்கு மேல்தான் தயாரானார்கள்.  அவ்வளவு காலையில் வரமுடியாது என்று சொன்ன மாப்பிள்ளை (எங்கள் பக்கம்தான்!) வீட்டுப் பக்க வயதான பெண் ஒருவரை வற்புறுத்தி நான்கு மணிக்கே வந்து உட்கார வைத்திருந்தார்கள்!

காசி யாத்திரைக்கு குடை தயாராகிறது.  விரித்ததும் பூமழை பொழியும்!


ஒரு திருமணம் என்றால்  சிறு அதிருப்திகள், உரசல்கள் இருக்கும்தான்.  இவற்றை எல்லாம் தாண்டி தனக்கான துணை கிடைத்த மகிழ்வில் மணப்பெண்ணும், மணமகனும் திளைத்து இல்லற வாழ்வின் பந்தத்தில் இணைந்தார்கள்.


அன்று அதாவது ஞாயிறு மாலை நாலரைக்கு முன் கிளம்ப வேண்டி இருந்ததால் நடக்க வேண்டிய சம்பிரதாய நிகழ்வுகளை விரைவாக முடித்தபடி வந்தோம்.  நாங்கள் முதல் நாளும் காலை டிஃபன் சாப்பிடவில்லை.  திருமண நாள் அன்றும் சாப்பிடவில்லை.  ஏனெனில் என் அண்ணணின் துணைவியார் மறைந்து விட்ட காரணத்தால் நானும் பாஸும்தான் மேடையில் அமர்ந்து தாரை வாங்கினோம்.

(தொடர்ச்சி அடுத்த வாரம் )

========================================================================================================

அலுவலகத்தில் ஒருவர் தினசரி காலை ஊதுபத்தி ஏற்றி வைப்பார்.  இந்த ஊதுபத்தி ஏற்றும் நாளெல்லாம் வாசனை மிகவும் கவர்ந்தது.  திருப்பதியில் வாங்கி வந்தாராம்.  தி நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

தொடர் மழையினால் புகலிடம் தேடியலைந்த நாலுகால் செல்லங்களில் ஒன்று.  வெயில் வந்ததும்அந்த வெயிலை அனுபவிக்கும் அழகு.

அலுவலகம் செல்லும் வழியில் நடக்கும் மெட்ரோ வேலைகள். போகும்போதும் திரும்பும்போதும் எரிச்சலூட்டும் இடைஞ்சல்கள்.

இந்த புகைப்படங்கள் எதற்கு வைத்திருக்கிறேனென்றால் 

அலுவலகத்துக்குத் தாமதமாகப் போகும் ஒரு நாளில் இவற்றைக் காட்டி நிலைமையை விளக்குவதற்குதான்.

=======================================================================================================

நெஞ்சில் ஓர் ஆலயம்?

விடைகள் இங்கே...   கேள்விகள் எங்கே?!


அட...   அப்பவேவா?

================================================================================================
நண்பர் ஒருவர் வாட்ஸாப்பிலிருந்து எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்திருந்ததை எடுத்து இங்கே பகிர்கிறேன்!

RECEPTION - thanks to BAKKIYAM RAMASAMY SIR.

எந்த ஃபங்ஷனும் லேட்டாகத்தான் ஆரம்பிப்பார்கள். ஆகவே நாம ஊருக்கு முன்னே போய் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்பார்கள் சிலர். வாஸ்தமான பேச்சு.

ரிஸப்ஷன் 6 மணிக்கு என்று போட்டிருந்தால் அதை அப்படியே எடுத்துக்கொண்டு விடக்கூடாது.

அது அதனுடைய லிஸ்ட் ப்ரைஸ். நாம் பேரம் செய்து குறைத்துக் கேட்கலாம்.

6 மணி போட்டிருந்தால் நாம் ஏழே முக்காலுக்குப் போகலாம். ரிஸப்ஷன் பெண் மேக்கப் செய்துகொண்டு வர எந்த பியூட்டி பார்லருக்கோ, தனியார் அழகு விடுதிக்கோ போய் அலங்கோ அலங்கு என அலங்கரித்துக் கொண்டு ஏழே முக்காலுக்கு அந்த உருவம் வந்து சேரும்.

ஒரே ஜிகினா மயம். பட்டுப் புடவையின் பளபளப்பு, போதாதென்று உடம்பு பூரா ஜிகினா பவுடர் மாதிரி எதையோ துவிவிடுவார்கள்.

கர்நாடகத்துக்கும் நவநாகரிகத்துக்கும், கிழக்குக் கலாசாரத்துக்கும் மேற்கத்திய நாகரிகத்துக்கும் நடக்கும் போரை அல்லது கலவரத்தை, கலகத்தை, கலக்கலை மணமகள் உடம்பில் பார்க்கலாம். வியர்த்துக் கொட்டும்.

பெடஸ்டல் விசிறி வைத்தால் மேக்கப்பை அலைக்கழிக்கும் என்பதால் கை விசிறியால் ஒரு வாண்டு 'அக்கா'வுக்கு விசிறக் கூடும்.

விசிறி முதுகில் இடித்தால், மணமகள் அதை நிறுத்தும்படி சமிக்ஞை செய்வாள். விசிறி வாணடுவும் பொழச்சேண்டியக்கா என்று சந்தோஷமாகத் தப்பி ஓடிவிடும்.

ஆறு மணியிலிருந்து ஏழரை வரை ரிஸப்ஷன். அப்புறம் டின்னர் என்று போட்டிருந்தாலும், ஏழரைக்கு முன்னதாகவே ஏழிலிருந்தே சாப்பிட்டு ஹால் மாடியிலா கீழேவா என்பது போன்ற கவலைகள் நம்மை அரிக்க ஆஜராகிவிடும்.

சில முன்னடைவுள்ளவர்கள் தானே சென்று கதவு சாத்தாப்பட்ட ஹாலை நைஸாகத் திறந்து எட்டிப் பார்ப்பார்கள். பிறகு வெறுப்போடு 'இன்னும் கேசரி போண்டா க்ளாஸே முடியலை போலிருக்கு' என்று ரிப்போர்ட் சமர்ப்பிப்பார்கள்.

சில பேர் ரொம்ப உரிமை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட உறவினரிடமோ அல்லது உறவினர் என்று தப்பாக நினைத்துக்கொண்டு வேறு யாரிடமோ 'இலை போட இன்னும் நாழியாகுமா?' என்று கேட்டு விடுவார்கள்.
கேட்கப்பட்டவரும் வாய்விட்டு 'ஆகும் ஒரு மணி நேரம். நீங்கள் சாயந்தரம் டிபன் சாப்பிட்டீங்களோ?' என்பார்.

'அதையும் கொட்டிக் கொண்டா இப்படி அலையறீர்,' என்ற எரிச்சலின் பாதிப்பு அவர் கேள்வி.

ஆகவே திருமண ரிஸப்ஷனுக்குப் போகும் விஷயங்களில் பரபரப்பு காட்ட வேண்டாம்.

106 கருத்துகள்:

 1. காலை வணக்கம் எல்லோருக்கும்.

  //எங்கள் வழக்கத்தில் திருமணம் பெண் வீட்டுச் செலவு என்பதால் அவர்கள்தான் பெண் வீட்டுப் பக்கத்துக்கு எத்தனை அறைகள், மாப்பிள்ளை வீட்டுப் பக்கத்துக்கு எத்தனை அறைகள் என்பதை முடிவு செய்வார்கள். //

  ஆமாம் அதே. நம் சமூகத்திலும் அப்படித்தான் என்றாலும் தற்போது ஒரு சில குடும்பங்களில் இரு வீட்டாரும் பகிர்ந்தும் கொள்கிறார்கள்.

  வெயில் குளியல் எடுக்கும் செல்லம் கண்ணில் பட்டுவிட்டது!!! அழகு.

  நானும் ஊரில் ஒன்றினை எடுத்திருக்கிறேன். வரும்...மெதுவாக!!

  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், சில வீடுகளில் ஷேரிங்.  விடியோவுக்கு ஷேரிங் கேட்டார்கள் இங்கும்.  நாங்கள் மறுத்து விட்டோம்!

   வாங்க கீதா, வணக்கம்.

   நீக்கு
 2. அனைவருக்கும் வணக்கம்.
  திருப்பதியை திருத்தணியாக்கி விட்டீர்களா? ஹாஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  பாடல் நினைவுக்கு வந்ததா?

   வணக்கம் பானு அக்கா..  வாங்க...

   நீக்கு
 3. கொரானா காலக் கல்யாணம் போன்று 20+20 விருந்தினர்களுடன் 3 மணி நேர கல்யாணம். கல்யாணம் மற்ற உறவினர்களுக்கு நேரடி ஒளிபரப்பு. கல்யாணத்திற்கு வந்தவர்களுக்கு எடுப்பு சாப்பாடு. மற்ற உறவுகளுக்கு ஸ்வீட் பாக்கெட் கூரியரில் என்று செலவை மிச்சப்படுத்தியிருக்கிறார்கள் சிலர்.

  ஆகட்டும். உங்கள் மகன்கள் கல்யாணத்தில் குறைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.


  பாட்டுகளாக உள்ள பதில்களுக்கு தக்க கேள்விகள் அமைக்க முடியவில்லை.


  பிலிம் ரீல் பெட்டி தெருவில் விற்கப்படும் படத்தைப் பார்த்தவுடன் திருட்டு VCD விற்பனை நினைவூட்டியது. தற்போது OTT வேற.


  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொரோனா காலக்கட்டுப்பாடுகளின்போது திருமணம் ஏற்பாடாகி இருந்தாலும், அதைத் தாண்டி அந்த நிகழ்வு நடைபெற்றதால் கூட்டம் ப்ளஸ் கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தன.  நல்லவேளை, கூட்டத்தால் பிரச்னை வரவில்லை.  ஆனால் சாப்பிட்ட சாப்பாட்டால் பலபேருக்கு பிரச்னை வந்தது!  ஹா..  ஹா..  ஹா...
   என் மகன்கள் கல்யாணத்துக்கு நல்ல ரிகர்சல் என்றே நானும் நினைத்தேன்.  அதேபோல மற்றவர்களும் சொன்னார்கள்!

   அந்தக் காலத்தில் இப்படி திருட்டு ரீல் பெட்டியை வாங்கி திரையிட ஒவ்வொரு வீட்டிலும் ப்ரொஜெக்டர் அவசியமாயிற்றே!  வீட்டில் 16 எம் ம் தான் இருக்க முடியும்.  ரீல் அதற்குத் தகுந்தாற்போல் இருக்கவேண்டும்!  ஸ்ரீதர் இந்த கார்ட்டூனை வரையக் காரணமாயிருந்த சம்பவம் (அல்லது சம்பவங்கள்) என்னவாயிருந்திருக்கும் என்று யோசிக்கிறேன்!

   நீக்கு
 4. கல்யாண ரிசப்ஷன் கலாட்டாக்கள்.. நீங்கள் சொன்னது போதாது என்று வேறு யாரோ சொன்னதையும் போட்டிருக்கிறீர்களா. ரொம்ப பட்டு விட்டீர்கள் என்று தெரிகிறது.
  சன்பாத் எடுக்கும் செல்லம்.. முகநூலில் பகிர்ந்திருந்தீர்களோ?
  சினிமா ஜோக்.. இப்போதும் ஒத்துப் போகிறதே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //என்று வேறு யாரோ சொன்னதையும் //

   பகிர்ந்தவர் அதை எழுதியவர் பாக்கியம் ராமசாமி என்று சொல்லி இருக்கிறார்.  நிஜமா தெரியாது.  ஆனால் வரவேற்பு நிகழ்ச்சிகள் திருப்திகரமாக அமைவது மிகச்சிலதான்!

   சன்பாத் எடுக்கும் செல்லம்.. முகநூலில், ஆம், பகிர்ந்திருந்தேன்!  வேறு கேப்ஷனுடன்!

   நீக்கு


  2. // நிஜமா தெரியாது. //

   ஆமாம் ஜராசு தான். நானும் வழிமொழிகிறேன்.

   நீக்கு
  3. பேஸ்புக்கில் சொல்லி இருந்தாரோ என்னவோ...  அங்கு அவருடைய நட்பு லிஸ்ட்டில் நான் இருந்தேன்.  ஆனால் இதைப் பார்த்த நினைவு இல்லை.

   ஒன்று தெரியுமோ, அவர் தேடிய அவர் எழுத்து ஏதோ ஒன்று அப்புசாமி கதை என்று ஞாபகம் என் பைண்டிக் கலெக்ஷனில் இருக்கிறது என்று சொல்லப்போக டெலிபோன் நம்பர் எல்லாம் கொடுத்திருந்தார்.  ஆனால் நான் அவரைத் தொடர்பு கொள்வதற்குள் மறைந்து விட்டார்.

   நீக்கு
 5. மற்ற நான்குக்கு ஐநூறு ரூபாய் பணம் கட்டவேண்டும்! இது வாடகையில் சேர்த்தி இல்லாமல் தனி சம்பாத்தியம். //

  இது என்னது புதிதாக இருக்கிறதே! நல்ல வியாபாரம்! ஒரு வேளை கொரோனா சமயத்தில் வருமானம் இல்லாமல் இப்போது அதற்கும் சேர்த்து வருமானம் போலும்!

  கீதா

  கீதா

  பதிலளிநீக்கு
 6. ஸ்ரீராம் ஒவ்வொரு சத்திரத்திலும் அறைகளின் சைஸ் வசதிகள் எல்லாம் மாறும்.

  இன்னொன்று என் தனிப்பட்ட கருத்து இது - பொதுஇடங்களில் அது ஹோட்டல் அறையாக இருந்தாலும் சரி, சத்திரமாக இருந்தாலும் சரி, ரயிலாக இருந்தாலும், நம் போர்வைகள்/பெட்ஷீட்கள் எடுத்துக்கொண்டு போவது நல்லது. பற்றாகுறைக்காக அல்ல சில சுகாதாரப் பிரச்சனைகளைத் தவிர்க்க.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு சித்திரத்திலும் சைஸ் மாறும் என்பது நானே பார்த்திருக்கிறேன்.


   நம்முடைய உபயோகத்துக்கு போர்வை இத்யாதி எடுத்துக் கொண்டு போகலாம், போனோம். மற்ற விருந்தினர்களுக்கு?!!

   நீக்கு
  2. * ஒவ்வொரு சத்திரத்திலும் அறை சைஸ்

   நீக்கு
  3. மற்ற விருந்தினர்களுக்கு?!!//

   ஆமாம்...சரிதான்..

   ..நாங்கள் நெருங்கிய சுற்றத்திடம் சொல்லிவிட்டோம் நாங்களும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா எடுத்துச் சென்றோம்.

   எல்லோருமே இப்ப செய்வதுதான் என்று நினைக்கிறேன் எல்லாம் பலருக்கும் அனுபவம் தானே!!

   கீதா

   நீக்கு
  4. நட்புறவுகள் கொஞ்சம் கஷ்டப்பட்டார்கள்தான்.

   நீக்கு
 7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் நோய் குறித்த அச்சம் அகன்று நிம்மதியாக வாழப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 8. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. கல்யாண நிகழ்வுகளை இனிமேல் தான் பார்க்கணும். ஆனால் பின்னால் உள்ளனவற்றைப் படிச்சேன், போகிற போக்கில். அதையும் படிச்சுட்டு வரேன். இந்த ரிசப்ஷன் கலாட்டாவைப் பார்த்தால் எங்க கல்யாண ரிசப்ஷன் நினைவில் வருது. என் மாமனார் வீட்டுக்காரங்களுக்கு அது அப்போப் புதுசா இருந்தது. நலுங்கு முடிந்து சாயங்காலம் ஐந்தரையில் இருந்து ஆறரை வரையே ரிசப்ஷன். அந்த ஒரு மணி நேரம் தான் உட்காரலாம். அதுக்குள்ளாக வரவங்க வந்துட்டுப் போயிடுவாங்க/அல்லது சிலர் இரவுச் சாப்பாட்டுக்கு உட்காருவாங்க. ரிசப்ஷனில் என்ன கொடுப்பாங்கனு நினைக்கிறீங்க? ஒரு ஸ்வீட், ஒரு காரம். அநேகமா ஜிலேபி, மிக்சர் அல்லது ஏதேனும் அல்வா, மிக்சர் அல்லது அப்போல்லாம் கேக் என்னும் பெயரில் பிரபலமாக இருந்த மைதா கேக், மிக்சர் இவை தான். குடிக்க எலுமிச்சை ஜூஸ் கொடுப்பாங்க. அதையே பெருமையா அவங்க வீட்டுக் கல்யாணத்தில் ஜூஸ் கொடுத்தாங்கனு சொல்லிப் பெருமைப் பட்டுக்கறவங்களும் உண்டு. மேலே போய்ப் படிச்சுட்டு வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போ எல்லாம் ரிசப்ஷன் விருந்து தான் ஹெவியாய் இருக்கும்.  ஆபீஸ் நண்பர்களும் அப்போதுதான் பெரும்பாலும் வருவார்கள்.  கல்யாணத்தில் நெருங்கிய உறவுக்கூட்டம் மட்டுமே இருக்கும்!

   நீக்கு
 10. எனக்கு ஊதுபத்தி வாசனையே ஒத்துக்காது. அக்கம்பக்கம் யாரானும் ஏத்தினால் கூட அங்கே போகவே மாட்டேன். வீட்டிலும் கதவைச் சாத்திக் கொண்டுடுவேன். சாம்பிராணி ஓகே. ஆனால் நெருப்பு மூட்டிச் சாம்பிராணி போடுபவர்கள் குறைவு.
  செல்லத்தை முகநூலிலும் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில ஊதுபத்தி வாசனைகள் எரிப்பது போலிருக்கும். எனக்கும் அது பிடிக்காது. சில நாசிகளில் மென்மையாக நுழையும். இது அந்த வகை.

   நீக்கு
 11. ஆட்டோ நினைவுகள் விரைவில் உபயோகம் ஆகட்டும். :))) இந்த வாரம் ஒரே ஒரு ஜோக் தானா? படங்களின் பாடல்களுக்கான கேள்விகள் என்னவாக இருக்கும்?
  எங்க பக்கமெல்லாம் எப்போதுமே திருமணம் பெண் வீட்டுச் செலவு தான். இப்போ என் தம்பி பையர் கல்யாணத்தில் தான் முதல் முதலாக எல்லாவற்றிலுமே இருவருமே பாதிப்பாதி எனப் பங்கு போட்டுக் கொண்டார்கள். வாத்தியார் தக்ஷணை தவிர்த்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த. "எங்க பக்கமெல்லாம்" காலம் போய்க்கொண்டிருக்கிறது.

   பெண் வேணுமா? எல்லாம் பகிர்ந்துகொள் என்று சொல்லும் காலம்

   நீக்கு
  2. நான் சீக்கிரமே கிளம்பினாலும் ஆட்டோக்காரர் சற்று தாமதமாகவே வருகிறார். எப்படியோ போய்க் கொண்டிருக்கிறது. பார்ப்போம். என் அண்ணன் மகன் திருமணத்தில் செல்லுபடியான பேரம், என் மகன் திருமணத்திலும் அமைய வேண்டும்!!!

   நீக்கு
  3. உங்கள் இரு மகன்களின் திருமணமும் சிறப்பாக நடைபெறும். கவலை வேண்டாம். யாராவது ஒரு பையருக்குத் திருச்சியில்/ஶ்ரீரங்கத்தில் பெண் எடுங்கள். அதுவும் எங்க வீட்டைச் சுத்தி இருக்கும் 3 கல்யாண மஹாலில் ஏதேனும் ஒன்றைப் பிடிக்கச் சொல்லுங்கள். அப்பாடானு இருக்கும். :)))))

   நீக்கு
  4. ரோபோ படுத்தற பாடு தாங்கலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
 12. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் எல்லா நாட்களும் ஆரோக்கியத்துடனும்
  அமைதியுடனும்
  வாழ வேண்டும்.

  பதிலளிநீக்கு
 13. ஸ்ரீராம் இப்போதெல்லாம் தங்கவேண்டிய கல்யாணங்கள் என்றால், மக் பக்கெட் உட்பட ஏதோ குடித்தனம் செய்யப் போவது போல பெட்டி படுக்கையுடனும் செல்ல வேண்டும். ஹாஹாஹா

  என் தங்கை பெண் கல்யாணத்திற்கு நாங்கள் படுக்கை, பக்கெட் மக் உட்பட எடுத்துச் சென்றோம். சத்திரம் என்னவோ படு ஸ்மார்ட்!!! சத்திரம் தான் ஆனால் சிலது மனதிற்கு ஒத்துவரவில்லை என்பதால் இப்படி. அது போன்று சிறு கயிறு கூட எடுத்துச் சென்றோம்!!!!! பின்னே சீன் பை சீன் கல்யாணப் பெண், அம்மா, சகோதரி மாற்றும் புடவைகள் மாற்றி மாற்றி மாற்றி......ஹாஹாஹா அதெல்லாம் அப்படியே குவியலாக இருக்கக் கூடாது அப்புறம் அதைக் காணவில்லை இதைக் காணவில்லை என்று சொல்வதை விட செட்டாகப் போட வேண்டும் என்றும், அப்புறம் க பெண்ணின் அம்மா, அப்பா, சகோதரியின் ட்ரெஸ் செட்டாக போட்டு, நகைகள் எல்லாம் மாற்றினால் அதை எடுத்து பத்திரமாக ஒரு நபரையும் பொறுப்பில் வைத்து, அதாவது எங்கள் அறையில் தங்கும் மிக நெருங்கிய பந்தங்கள்....மற்றவர்கள் மற்ற அறைகளில் தங்குபவர்கள் அவரவர் பொறுப்பு என்று இப்படிப் பல விஷயங்கள் யோசித்து எழுதி எழுதப்படாத சட்டங்கள் போட்டுவிடுவேன். இந்த பெண்ககள் ட்ரெஸ் மாற்றுவது இருக்கு பாருங்க!!! ஹாஹாஹா!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது சரி... ஊர்ப் பயணம் போல இத்தனை ஏற்பாடுகளுடன்... கஷ்டம்தான்!

   நீக்கு
  2. நாங்க எப்போவும் துணி உலர்த்தும் ப்ளாஸ்டிக் கயிறுகள் எடுத்துப்போம். எங்களுடைய சொந்த தம்பளர், டபராவைத் தான் பயன்படுத்திப்போம். இப்போல்லாம் கூடுதலாக இன்டக்‌ஷன் ஸ்டவும் எடுத்துப் போகிறோம். 2008 ஆம் ஆண்டில் இன்டக்‌ஷன் ஸ்டவ் வாங்கியதில் இருந்து.

   நீக்கு
 14. வெந்நீர் ஆமாம் அது மிக முக்கியம் அதுவும் சில் நாளில். இதெல்லாம் தான் நாம் ரொம்பவே முன்னெச்சரிக்கையாகக் கேட்டு...கேட்டாலும் முக்கிய தினத்தன்று இல்லை என்றால் என்ன செய்வது?

  கூடவே ஹீட்டரையும் கொண்டு போகணும் போல!!! இதுக்குப் பேசாம ஜஸ்ட் 3 மணினேரக் கல்யாணம் என்று பேசிவிடுவது நல்லது என்றே தோன்றுகிறது ஸ்ரீராம். நோ லௌகீகம். ஒன்லி முக்கிய மந்திர நிகழ்வுகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இண்டக்ஷன் ஸ்டவ் ஓகே.. ஆனால் நேரமாகும்! பேசாமல் யார் கையிலாவது பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஓரமாக அமர்ந்து விடலாம்!

   நீக்கு
  2. அட? இங்கேயே வந்திருக்கா? இன்டக்‌ஷன் ஸ்டவில் குளிக்க வெந்நீர் போட்டுக் கட்டுப்படி ஆகாது.

   நீக்கு
 15. கல்யாணத்தில் ரொம்பப் பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்று நிறைய இடங்களில் அடக்கி வாசித்தே போனோம். சண்டைக்காரர்கள் என்று பெயர் எடுத்து விடக்கூடாதே... //

  சம்பந்திச் சண்டை!!! மாப்பிள்ளை வீட்டார் முறுக்கு என்று!! ரொம்பவே கஷ்டங்கள் என்று தெரிகிறது. அதுவும் ஊரு விட்டு ஊர் சென்று கல்யாணம் என்பதால். சென்னையிலேயே என்றால் இத்தனைக் கஷ்டங்கள் இருந்திருக்காது இல்லையா

  உங்க பசங்களுக்கு சென்னைன்னு முதலிலேயே சொல்லிடுங்க ஸ்ரீராம்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னையில் வேறு மாதிரி சிரமங்கள் இருக்குமோ என்னவோ...!!! என் மகன் கல்யாணம் எந்த ஊரிலாவது சீக்கிரம் அமைந்தால் தேவலாம்!

   நீக்கு
  2. ஶ்ரீரங்கம், ஶ்ரீரங்கம், ஶ்ரீரங்கம்!

   நீக்கு
 16. ரிசப்ஷன் அமர்க்களங்கள் கண் முன்னே
  காட்சிகளைக் கொண்டு வந்து காட்டின அதிசயம். ஹாஹா.
  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 17. நீங்கள் இருவரும் தான் மணையில் அமர்ந்திருக்க வேண்டும் என்று யூகித்தேன்.
  பாணிகிரஹ புண்ணியம் உங்கள் இருவருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா? இதற்கு புண்ணியம் வேறு சேருமா?!

   நீக்கு
  2. ஆமாம், ஶ்ரீராம். முன்னெல்லாம் குழந்தை இல்லாத் தம்பதிகளை அவங்களை விடச் சின்னவங்களுக்குக் கல்யாணம் வந்தால் அப்போப் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்கச் சொல்லி உட்கார வைப்பது உண்டு. அந்தப் புண்ணியத்தில் அவங்களுக்கும் சீக்கிரம் குழந்தை பிறக்கட்டும் என்பார்கள். இப்போல்லாம் குழந்தை இல்லைனா அவங்களை ஒதுக்கி வைக்கிறாங்க! :(

   நீக்கு
 18. தித்தோம் கண்டு பிடித்தோம்
  விடைகள் நன்றாக இருக்கின்றன.
  கேள்விகள் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடல் காட்சியின் படத்தைப் போட்டுவிட்டு என்ன பாடல், எந்தப் படம் என்று கேட்டிருத்திருப்பார்கள் வல்லிம்மா

   நீக்கு
  2. கேள்விகள் பக்கம் அந்த பைண்டிங்கில் இல்லை!

   நீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  கல்யாணத்தில் சத்திர குறைபாடுகளை நன்றாக விளக்கியிருக்கிறீரகள். வீட்டுக்கு வீடு வாசல்படிதான். திருமண புகைப்படங்கள் நன்றாக உள்ளது. மணமக்களுக்கு எங்கள் தாமதமான மனமார்ந்த வாழ்த்துகளும்.

  தாங்களும் பாஸும் தாரை வாங்கிக் கொண்ட யோகம் விரைவில் தங்கள் மகன்களுக்கு திருமண யோகம் கிடைத்து நல்ல மருமகள்கள் வர இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். மற்றதையும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 20. அந்த ஊது பத்தி கிடைத்தால் சொல்லுங்கள்.
  வாங்கி வைக்கச் சொல்கிறேன்:)

  பதிலளிநீக்கு
 21. கல்யாண சங்கடங்கள் இத்தனையா.

  ஏன் இத்தனை அலட்சியம்!!!
  அவர்கள் வீட்டுப் பெண் நல்லபடியாக வாழ
  நல்ல தன்மையுடன் சம்பந்திகளோடு பழக வேண்டாமா.

  ரிசப்ஷன், மேக்கப் அலப்பறைகள் 20 வருடங்களுக்கு முன்பிருந்தே
  தொடங்கி விட்டன.

  என்ன செய்யலாம். அமைதியாக இருப்பதைத்தவிர வேறு வழியில்லை.:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான்தான் ரொம்பக் குறை சொல்கிறேனோ! ஆனால் ஒன்று, பெண் தங்கம். அவளைப்பற்றி பின்னொரு நாளில் தனியாக எழுதுகிறேன்!

   நீக்கு
  2. அருமை. பெண் நல்ல குணவதியாக அமைந்தாலே போதுமே! வேறென்ன வேண்டும்! சீர் வரிசை, புடைவைகள், நகை எல்லாம் தேவையே இல்லை. இதுவே பெரிய சீர்.

   நீக்கு
 22. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 23. உங்கள் மகன்கள் திருமணம் சிறப்பாக் அமைய வேண்டும். தன்மையான சம்பந்திகள் வரட்டும். இங்கே அபரிதமான காற்று
  சங்கடம் . மீண்டும் பார்க்கலாம் ஸ்ரீராம்.நன்றி மா.

  பதிலளிநீக்கு
 24. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

  சத்திரப் பிரச்சனைகள் இரு நாட்கள்தானே.. பிறகு மறந்துவிடும்.

  நங்கநல்லூர் (கேஜிஒய்) கேடர்ருக்குச் சொல்லிடுங்க

  பதிலளிநீக்கு
 25. சாப்பாடு பற்றி எழுதலை. அடுத்த வார வயிற்றெரிச்சலுக்காக வைத்திருக்கிறீர்களா இல்லை சூப்பராக அமைந்துவிட்டதா?

  பதிலளிநீக்கு
 26. எல்லாத்தையும் குறித்து வைத்துக் கொண்டீர்களா...? விரைவில் நடக்கும் மூத்த மகனின் திருமணத்திற்கு வந்து சரி பார்ப்பேன்... ஜாக்கிரதை...!

  ஆமாம் வாசகர்களுக்கு அழைப்பு உண்டு தானே...?

  பதிலளிநீக்கு
 27. எனக்குத் தோன்றிய கேள்விகள் :
  1) பதிவிரதை போட்ட இலை எது?
  2) வழிப்போக்கன் மீது மழை நீரை வாரி இறைத்த லாரி ஓட்டுனர், வழிப்போக்கனைப் பார்த்து, கேட்டது என்ன?
  3) Cool jeans போட்ட இளம் வயதினரைப் பற்றி சிறு குறிப்பு வரைக : (காளை வயசு, 'கட்'டான சைஸு )

  பதிலளிநீக்கு
 28. நெ.ஒ.ஆலயம் சின்ன கதை தான். அதை ஒரு குறு நாவலுக்கு உரிய சுவாரஸ்யத்துடன் எடுத்திருப்பார் ஸ்ரீதர்.

  குட்டி பத்மினியைப் பார்த்தவுடயே 'அத்தை மடி மைத்தையடி' ஞாபகத்திற்கு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அத்தை மடி மெத்தையடி - கற்பகம் படத்தில் நடித்திருப்பவர்கள் : K R விஜயா + பேபி ஷகீலாதானே !! (இந்தக் கால ஷகீலா அல்ல!!) நீங்கள் நினைக்கும் பாடல், " முத்தான முத்தல்லவோ " பாடலாக இருக்கும்.

   நீக்கு
  2. ஆமாம். முத்தான முத்தல்லவோ தான..

   ஆனால் நினைவுக்கு வந்தது என்னவோ அத்தை மடி தான். :))

   நீக்கு
  3. நன்றி ஜீவி ஸார்... நெஞ்சில் ஓர் ஆலயம் பார்த்திருக்கிறேன். நல்ல படம். இங்கு ஒரு கிசுகிசு சொல்லவேண்டும்.. பின்னாட்களில் கமலும் குட்டி பத்மினியும் கூட கொஞ்ச காலம் கிசுகிசுக்கப்பட்டதாய்ப் படித்த நினைவு!

   நீக்கு
  4. இல்லை ஶ்ரீராம். குட்டி பத்மினி தான் தன்னைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொண்டு ஏமாந்ததாகக் கேள்விப் பட்டிருக்கேன். இந்த லிஸ்டில் கமலோடு சேர்த்துக் கிசுகிசுக்கப்பட்டவர்களில் ஶ்ரீவித்யா முதல் இடம் அடுத்து ஶ்ரீப்ரியா. ஶ்ரீவித்யா தான் பாவம், நம்பி ஏமாந்தார். :( அதன் பின்னர் அவர் வாழ்க்கையே திசை மாறி விட்டது.

   நீக்கு
  5. //பின்னாட்களில் கமலும் குட்டி பத்மினியும் கூட// - புதன் கேள்வி... கமலுடன் நடித்தவர்களில் (16 வ காந்திமதி ரேஞ்ச் தவிர்த்து, க.நாயகிகள்) அவருடன் கிசுகிசுக்கப்படாதவர்கள் யார் யார்? ஹா ஹா ஹா

   நீக்கு
 29. பொதுவாகவே கல்யாண ரிஸப்ஷன் போகும்போது என் பொறுமையை சோதிப்பது மணமகளின் நேர மேலாண்மைதான்! இப்போதெல்லாம் புதிதாக மேக்கப் கலாச்சாரம் ஒன்று தொடங்கி இருக்கிறது. இப்போது என்றால் சமீபத்தில் இல்லை, சில வருடங்களாக...//

  ஆமாம் இது ஒவ்வொருவர் விருப்பம்.

  என்றாலும், ஸ்ரீராம் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காத நிகழ்வு!

  அதிலும் அந்த ஃபோட்டோ ஷூட் உட்பட! நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஏனோ எனக்கு இது சுத்தமாகப் பிடிப்பதில்லை. என் தனிப்பட்டக் கருத்து. அதற்கு மற்றொரு காரணமும் உண்டு. உங்கள் வீட்டு நிழழ்வைச் சொல்வதால் நான் இங்கு அதைச் சொல்வது சரியாக இருக்காது.

  ஆனால் மற்றவர்கள் செய்தால் அவர்கள் விருப்பம். குறைப்பட்டுக் கொள்வது இல்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும்! எனக்கும்! ஆனால் நம் விருப்பத்தை எல்லாம் யார் மதிக்கிறார்கள்?!

   நீக்கு
 30. அதேபோல இந்த மேக்கப் என்று செய்யப்படும் விஷயங்கள் மணப்பெண்ணுக்கு உண்மையில் அழகைக் கொடுக்கின்றனவா, அல்லது இருக்கும் அழகையும் கெடுக்கின்றனவா என்பது நிறைய பேர் மனதில் இருக்கும் கேள்வி.//

  நிச்சயமாக இல்லை. கல்யாணம் என்பது சினிமாவா என்ன? ஆனால் சரி விடுங்க...என் நாக்கு துறு துறு என்கிறது.

  //திருஷ்டி கழிப்பதில் இது ஒரு வகையோ என்னவோ!//

  ஹாஹாஹா பாயின்டு!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொன்னால் சம்பந்தப்பட்டவர்கள் மனம் புண்படக்கூடும் என்பதால் சொல்வதில்லை!

   நீக்கு
  2. பொதுவாகவே மேக்கப் என்ற கான்சப்டே பிடிப்பதில்லை. அழகாக இருப்பவளை மைதாமாவு தடவி, இதோ இப்போதே சினிமா ஷூட்டிங்கிற்குப் போவதுபோல மாற்றி அனுப்பிவிடுவது. என்ன என்ன கெமிக்கல் எழவெல்லாம் உபயோகப்படுத்தறாங்களோ.. சமீபத்தில் ஒரு நடிகைகூட கோடி ரூபாய் கேட்டு வழக்குப் போட்டதைப் பார்த்தோமே.

   நீக்கு
  3. நெல்லை இப்பதான் பார்க்கிறேன் உங்க கமென்டை..டிட்டோ செய்கிறேன்....அப்போவே வந்திருந்தால் நான் ஒரு பெரிய பக்கமே கருத்து அடிச்சிருப்பேன்...

   இப்ப வந்ததால் இவ்வளவுதான்...

   கீதா

   நீக்கு
 31. அதில் DJ என்றழைக்கப்படும் காட்டுக்கத்தல் நிகழ்வு வேறு ஏற்பாடு செய்திருந்தார்கள். சிலர் ஆடினார்கள். பொறுமை காக்க வேண்டி இருந்தது.//

  இதுவும் சமீபத்திய வரவு. இதற்கெல்லாம் 2 லட்சம் 3 லட்சம் செலவு செய்வார்கள். அதைப் பெண் பெயரில் போட்டு வைத்தால் உபயோகமாக இருக்கும். அல்லது சாப்பாடு திருப்தியாகப் போடலாம் வீண் செய்யாமல். வந்தவர்களை நன்றாகக் கவனிப்பதில் கூடச் செய்யலாம்.

  எனக்குத் தெரிந்து சமீபத்திய கல்யாணங்களில் கல்யாணச் செலவு 20 லிருந்து 22 க்கும் மேல். அதாவது மெஹந்தி, ரிசப்ஷன், டிஜெ, அலல்து ஏதேனும் ஒரு நிகழ்வு...இப்படி.

  என்னவோ போங்க.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. DJ மட்டுமல்ல, இசைக்கச்சேரி என்று அமெச்சூர்கள் அலறும் சினிமாப் பாடல்கள் கூட பெரிய கொடுமை.

   நீக்கு
  2. ஆமாம், தம்பி பையர் கல்யாணத்தில் மெல்லிசைக் கச்சேரி என்னும் பெயரில் சத்திரத்தை அதிர விட்டார்கள். நாங்க ஏழரைக்கே காட்டேஜுக்குப் போயிட்டோம். சாப்பிட்டோம்னு பெயர் பண்ணிட்டுத் தான்.:)

   நீக்கு
  3. இந்தக் காலத் திருமணங்களைப்போல ஆடம்பரங்கள் (அத்தனையும் வேஸ்ட்) நான் பார்த்ததில்லை. யாருக்கும் உபயோகமில்லாமல். இவ்வளவு செலவழித்தும் ஸ்பூனில் காய் போடுவது, சாம்பார் ஆள் எங்கே என்று தேட வைப்பது... சொல்லி மாளாது. இந்த கேடரர்கள் மாதிரி (பெரும்பாலானவர்கள்) உலக மஹா ஃப்ராடுகள் நான் பார்க்கவில்லை. ஆனால் இந்தப் பூனைக்கு மணி கட்டும் பெரியவர்களைத்தான் சமூகத்தில் பார்க்கமுடிவதில்லை.

   திருமணத்தில் செலவழிக்கும் 80 சதவிகிதச் செலவு வீண் என்பது என் எண்ணம். அந்தக் காசை திருமணம் செய்துகொள்கிறவர்களுக்குக் கொடுத்துவிடலாம். அல்லது அநாதை ஆஸ்ரமங்கள், முதியோர் இல்லத்திற்கு உணவுக்குக் கொடுத்துவிடலாம்.

   நீக்கு
  4. ஆனால் இந்தப் பூனைக்கு மணி கட்டும் பெரியவர்களைத்தான் சமூகத்தில் பார்க்கமுடிவதில்லை.

   திருமணத்தில் செலவழிக்கும் 80 சதவிகிதச் செலவு வீண் என்பது என் எண்ணம். அந்தக் காசை திருமணம் செய்துகொள்கிறவர்களுக்குக் கொடுத்துவிடலாம். அல்லது அநாதை ஆஸ்ரமங்கள், முதியோர் இல்லத்திற்கு உணவுக்குக் கொடுத்துவிடலாம்.//

   யெஸ் நெல்லை. இருக்கிறோம்!!!!

   கீதா

   நீக்கு
 32. அபயஹஸ்தா நன்றாக இருக்கிறதே.

  அலுவலகத்துக்குத் தாமதமாகப் போகும் ஒரு நாளில் இவற்றைக் காட்டி நிலைமையை விளக்குவதற்குதான்.//

  ஹாஹாஹாஹாஹா... சிரித்துவிட்டேன்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்க்க நன்றாய் இருக்கிறதே என்பது மட்டுமல்ல, வாசனையும் நன்றாய் இருக்கிறது.

   நீக்கு
 33. விடைகள் தித்தோம் என்று நடனம் ஆடினாலும் (படம் ஷேக் ஆகியிருக்கோ!!) வாசித்து என்ன கேள்வியாக இருக்கும்

  நாட்டியக் குதிரை, ஓடி ஓடி என்னோடு வா போன்று வலப்புறம் இருப்பவை எல்லாம் இவை எந்தப் படத்தைக் குறிக்கின்றன என்ற கேள்வியாக இருந்திருக்கும்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேள்விகள் எனக்கு தெரியவில்லை! படம் போதுமான வெளிச்சத்தில் எடுக்காததால் அப்படி இருக்கிறது.

   நீக்கு
 34. 'அதையும் கொட்டிக் கொண்டா இப்படி அலையறீர்,' என்ற எரிச்சலின் பாதிப்பு அவர் கேள்வி./

  ஹாஹாஹா...திருமண ரிசப்ஷன் வாட்சப்/ஃபேஸ்புக் பகிர்வு உண்மை உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை!!! ஹாஹாஹா பாக்கியம் ராமசாமி அவர்கள் சமீபகால திருமணம் பற்றித்தான் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 35. நவீனத்திற்கும் பொருந்துமோ ஜோக்! ரசித்தேன்

  வெயில் குளியல் செல்லம் அழகு!

  கீதா

  பதிலளிநீக்கு
 36. சமீபத்தில் ஒரு திருமணத்தில் (உறவு) சீர் பட்சணங்களில் லட்டு மட்டும் கண்ணில் பார்க்க நேர்ந்தது. இரு கையாலும் சேர்த்தாலும் பிடிக்க முடியாத சைஸில் 21 லட்டு. மனைவி சொன்னாள், மைசூர் பாக்கும் ரொம்ப ரொம்பப் பெரிது என்று.

  அந்தப் படங்களையாவது (சீர் பட்சணங்கள்) ஸ்ரீராம் பகிர்ந்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தம்பி பையர் கல்யாண லட்டு ரொம்பச் சின்னது. முறுக்கும் ஐந்து சுற்றுத் தான். அளவும் சின்னது. நானே சுத்திடுவேன். முன்னெல்லாம் சீர் முறுக்கு, தேன்குழல் எனில் ஒரு தோசைக்கல்லை விடப் பெரியதாக இருக்கும். லட்டுவும் என் கல்யாணத்தில் எல்லாம் இரண்டு கைகளாலும் பிடித்தார்கள். வீட்டிலேயே பண்ணினதால் எல்லாவற்றையும் நேரில் பார்த்திருக்கேன். மைசூர்ப்பாகு எனில் இப்போ மாதிரி ரிஃபைன்ட் ஆயில்/கடலை எண்ணெய் விட்டுப் பண்ண மாட்டாங்க. நல்ல புத்துருக்கு நெய். மேலே சிவந்து பொறபொறனு காணப்பட்டாலும் கைகளால் சுலபமாகப் பிய்த்துச் சாப்பிடலாம்.

   நீக்கு
 37. கல்யாணங்களில் இத்தனை கஷ்டங்கள் இருக்கிறது என்பது தெரிகிறது. எங்கள் பக்கக் கல்யாணங்கள் இப்படி இல்லை என்பதால் இந்த அனுபவங்கள் இல்லை. அதாவது நான் பங்கெடுத்த கல்யாணங்களில். இங்கும் பணக்காரர்கள் ஒரு சிலர் ஆடம்பரமாகச் செய்கிறார்கள் தான்.

  ஜோக் ரசித்தேன். இப்படியான படங்களும் இருக்கின்றனவே.

  நெஞ்சில் ஓர் ஆலயம் சோகம் தான் என்றாலும் பார்த்த நினைவு இருக்கிறது.

  வாட்சப் செய்தி நீங்கள் எழுதியிருப்பது போலத்தான் என்று தெரிகிறது. பலரது அனுபவம் இப்படித்தான் இல்லையா?

  துளசிதரன்


  பதிலளிநீக்கு
 38. உங்கள் மகனுக்கும் கல்யாண வயது என்று அறிகிறேன் ஸ்ரீராம்ஜி.

  அவருக்கும் விரைவில் திருமணம் ஃபிக்ஸ் ஆகி நல்ல பெண்ணாக அமைந்து எல்லாம் நல்லபடியாக நடந்திட வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். கண்டிப்பாக நடக்கும் ஸ்ரீராம்ஜி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 39. கல்யாண சத்திரம், கல்யாண பெண் அலங்காரம் செய்து வருதல் என்று நிறைய செய்திகள் சொல்லி இருக்கிறீர்கள்.

  //நானும் பாஸும்தான் மேடையில் அமர்ந்து தாரை வாங்கினோம்.///  உங்களுக்கு தாரை வாங்கும் புண்ணியம் கிடைத்து இருக்கிறது.
  உங்கள் மகன்களுக்கு நல்ல படியாக திருமணம் நடக்கும் நல்ல மருமகள்கள் அமைவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அண்ணன் மகன், மருமகளுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

   நீக்கு
 40. கண்மூடி வெயிலை ரசிக்கும் செல்லம் அருமை. இரண்டுசெல்லங்கள் ரகசியம் பேசும் (நட்புடன் விளையாடும்) படம் போடவில்லையா? முகநூலில் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 41. //நண்பர் ஒருவர் வாட்ஸாப்பிலிருந்து எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்திருந்ததை எடுத்து இங்கே பகிர்கிறேன்!//

  நண்பர் பகிர்ந்தது போல சில கல்யாண வரவேற்ப்ய் நிகழவுகள் நடக்கிறதுதான். எல்லாம் கொஞ்ச நாள் அப்புறம் மறந்தே போகும்.

  பதிலளிநீக்கு
 42. உண்மைதான், பெரும்பாலான சத்திரங்களில் அறைகள் சரியாக இருப்பதில்லை. அதனால் பக்கத்தில் நல்ல விடுதியாகப் பார்த்து அறை எடுத்து விடுகிறார்கள் பலரும். ரிசப்ஷனில் காத்திருப்பு என்பதும் பல ஆண்டுகளாக நடக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி இருவர் இணையும் இனிய தருணம் என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

  வெயிலில் குளிக்கும் இந்த நாயைப் போல பத்து நாள் மேகமூட்டம், மழைக்குப் பிறகு வெயிலில், புல்வெளியில் 1 மணி நேரமாகக் படுத்திருந்த மணிப்புறாவைப் படமாக்கினேன் சிலநாட்கள் முன்னர்:).

  நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!