கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த சுசீந்தர்:
வயல்ல சரியான சமயத்துல களை எடுக்கணும். ஆனா அந்த நேரத்துல ஆளை தேடி அலையிறதே பெரும் வேலையா இருக்கு. அதனால வேலை செய்ய முடியாம, மகசூல் இழப்பு வரைக்கும் போயிடுது. இதுக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சு தான், வீட்டுல கிடைக்குற மரக்கட்டை, கட்டுக் கம்பி மட்டும் வச்சு, களை பறிக்கும் கருவியை செய்தேன்.
கையில் பிடிக்கும் அளவுக்கு 7 அடி நீள கம்பு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். 6 அடி நீளத்தில் மற்றொரு கம்பை எடுத்து, இரண்டையும், ஆங்கில, 'டி' எழுத்து வடிவில் இணைத்து, உறுதித்தன்மைக்காக, 'வி' வடிவ சட்டம் கொண்டு இரண்டு கம்புகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பின், 3 அடி நீளத்தில் மூன்று கட்டுக் கம்பிகளை எடுத்து, 6 அடி நீளம் கொண்ட கம்பின் மீது வைத்து இரண்டாக மடித்து இறுக்கமாக முறுக்கி விட வேண்டும். முனைப்பகுதியை மட்டும் சற்று படர்ந்த நிலையில் வைக்க வேண்டும். இப்படி தேவையான அளவு கம்பிகளை அந்த கம்பு முழுதும் வைத்தால் போதும். அதுவே இறுதியான வடிவம். அதைக் கொண்டு நாற்று நடவு செய்த வயலில் வைத்து, களை பறிக்கலாம்.இதை இழுக்க ஒரு ஆள் போதும். ரொம்ப சுலபமான வேலை. இந்த கருவியை வைச்சு ஒரு ஆள் ஒரு நாளைக்கு, 2 ஏக்கர் வரை களை எடுக்கலாம். வேலையாளுங்கள நம்பியிருக்க வேண்டிய தேவையில்லை. 1 ஏக்கருக்கு ஒருமுறை களையெடுக்க, 2,500 ரூபாய் வரை கூலி செலவாகும். அந்த செலவை இந்த கருவி மிச்சப்படுத்துது. கட்டுக்கம்பிங்க வாங்க, 50 ரூபாய் இருந்தா போதும். வீட்டுல கிடைக்குற பொருட்களை வச்சு, இதை நாமளே தயார் செய்துடலாம். இரும்புக் குழாய்ல வெல்டிங் வச்சும் இதை தயார் செஞ்சும் பயன்படுத்தலாம். பாலிதீன் குழாயில இந்த கருவியை செய்யும் போது, குழாயை சேமிப்பு கலனாக மாத்தி, அதுல இடுபொருளை நிரப்பி நேரடியாக அதை பயிருக்கு கொடுக்க முடியும். சீனா மாதிரியான நாடுகள்ல சங்கிலியை பயன்படுத்தி, இது மாதிரியான கருவியை செஞ்சு உபயோகிக்கிறாங்க.ஆனா அது மாதிரி நாம செய்றதுக்கு அதிக செலவாகும். அதனால, சுலபமான முறையில இதை செய்திருக்கேன்.வயலில் தண்ணி நிற்கும் போது தான், இந்த கருவி மூலம் களை எடுக்க முடியும். களை எடுக்க பயன்படு வதோடு மட்டுமல்லாமல், இலை சுருட்டுப்புழு பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கும். மேலும், இந்த கருவியை பயன்படுத்தும் போது இதில் உள்ள கம்பிகள், 1 அங்குல ஆழத்துல தரையை கீறிட்டு போகும். அதனால களைகள் வேரோட வந்துடும். விளைச்சலுக்கு காற்றோட்டமான சூழ்நிலை உருவாகும். அதோட நுண்ணுாட்ட சத்துக்கள் மறுபடியும் கிளறிவிடும். இக்கருவியால் பயிருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை!தொடர்புக்கு: 99526 37722
அருப்புக்கோட்டை:
மனிதருக்கு கட்டாயம் இருக்க வேண்டியது நிதானம். அதை விட முக்கியமானது அன்னதானம்.
ஒருவருக்கு வயிறார உணவை அளித்தாலே மனம் நிம்மதி பெறும். இதை பலர் அனுபவத்தில் உணர்ந்துள்ளனர். 'போதும்' என்ற சொல்லே அன்னதானம் செய்பவர்களுக்கு போதுமான செல்வத்தை கொடுக்கும் என்பார்கள். அன்புடனும் கருணையுடனும் செய்யும் அன்னதானங்கள் நம்முடைய அடுத்த பிறவி வரை பலனை கொடுக்கும்.
அன்னதானம் செய்பவர்கள் வாழ்வில் பசியே வராது. கடவுளின் பரிபூரண ஆசியும் கிடைக்கும்.
இத்தகைய அன்னதானத்தை அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியை சேர்ந்த பாபு ஆண்டு முழுவதும் 365 நாட்களும் இடைவிடாது செய்து வருகிறார். ஆதரவற்றவர்களுக்கும், உணவு கேட்டு வருபவர்களுக்கும் அவ்வப்போது உணவு வழங்கி வந்த இவருக்கு, ஆண்டு முழுவதும் மதிய உணவு வழங்கலாமே என்ன எண்ணத்தால் அவரது இடத்திலே தினம் மதிய வேளையில் 40 முதல் 60 பேர்களுக்கு உணவை பொட்டலமாக வழங்கி வழங்கி வருகிறார்.
பண்டிகை காலங்களில் சேலை, வேட்டிகள் வழங்குகிறார். தி.மு.க.,வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள இவர், ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்ற உதவிகளையும் செய்து வருகிறார்.அன்னதானத்தை இடைவிடாமல் செய்ய வேண்டும் என்பது தான் என் குறிக்கோள் என்கிறார் பாபு. இவரை பாராட்ட, 95786 69999ல்அழைக்கலாம்.
= = = =
= = = = =
====================================================================================================
நான் படிச்ச கதை
- ஜீவி -
'எஸ்.ரா.' என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு ஆகச் சிறந்த படிப்பாளியாகத் தான் வாசகர் உலகிற்கு அறிமுகமானார். அவர் தம் வாசிப்பு, பயண அனுபவங்களால் கட்டமைக்கப்பட்டது
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
நீக்குபதிவின் தகவல்கள் வழக்கம் போல அருமை..
பதிலளிநீக்குநல்லோர் வாழ்க நலங்கொண்டு..
வாழ்த்துவோம்.
நீக்குஅன்ணா ஜீவி அவர்களின் விமர்சன களம் ஆகா!..
பதிலளிநீக்குஜீராவில் விழுந்த ஜீ பூம்பா போல!.. - ஆகி விட்டது மனம்..
ஆம், உண்மைதான்.
நீக்குதேனிலும் மகரந்தத்திலும் புரண்டாலும் தேனீ - தேனில் ஆழ்வதில்லை..
பதிலளிநீக்குசாதாரண ஈயின் பாடு தான் பரிதாபம்...
ஆம்.
நீக்குதம்பீ! மலரின் மென்மை மெத்தை மடியில் அமர்ந்து வாகாக தேனை உறிஞ்சுவதற்கு தேனீக்களுக்கு மட்டும் உறிஞ்சு குழலைக் கொடுத்தது இறைவனின் ஓரவஞ்சனையோ?..
நீக்குஇல்லை.. இல்லை.. மகரந்த சேர்க்கையே தேனீக்களின் மூலமாகத்
தான் என்று வழி வகுத்த இறைவன் படைப்பின் ரகசிய சலுகை போலும் அது!
இந்நேரம் வரைக்கும் யாரும்
பதிலளிநீக்குவரக் காணோமே!..
வந்தேனே !! வந்து நின்று, வந்தனமும் தந்தேனே !
நீக்குவல்லியம்மா ..
பதிலளிநீக்குநலமாக இருக்கின்றீர்களா!...
எஸ்.ரா.வின் கடீடுரைளை வாசித்திருக்கிறேன். முதல் முறையாக அவருடைய நிமித்தம் என்னும் கதையை படித்துக் கொண்டிருக்கிறேன். முடித்தால் கூட ஜீ.வி.சார் போல இவ்வளவு சிறப்பாக அதை எழுத முடியுமா என்பது சந்தேகமே.
பதிலளிநீக்குஉங்கள் யூட்யூப் பேச்சுக்களைப் பார்க்கும் பொழுது மகிழ்ந்து நானும்
நீக்குநினைத்துக் கொள்வது தான். இந்தப் பகுதியில் தான் எழுதியிருக்கிறீர்களே!
எழுத எழுதப் பழகி விடும். சிவ சங்கரியை பற்றி ஒரு தடவை நீங்கள் பிரஸ்தாபித்த ஞாபகம். அல்லது வேறு யாரையாவது எடுத்துக் கொள்ளுங்களேன். கவிதை, கட்டுரை என்று வாசிக்கும் எதையும் வெரைட்டியாக எழுத ஆரம்பித்தால் இந்த பகுதி சூடு பிடித்து விடும்.
செவ்வாய், வியாழன் போல சனிக்கிழமையும் அமைந்து விடும்.
சொல்லவே வேண்டாம். திங்கள் தனிக் காட்டு ராஜா! (இல்லை, ராணி) :))
களையெடுக்க உதவும் கருவியை கண்டு பிடித்திருக்கும் விவசாயிக்கு அதற்கு பேன்ட் உரிமை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியுமா?
பதிலளிநீக்குபுலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ் மறப்பெண்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். இது சிறுத்தையிடமிகுந்து தன் குழந்தையை மீட்ட மராட்டிய வீர மங்கை. வாழ்க வளமுடன்.
@ பானுமதி வெங்கடேஸ்வரன்
நீக்கு// புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ் மறப் பெண்களை.. //
இப்படியெல்லாம் நடந்திருக்கும் என்றே நம்புகின்றேன்...
//இப்படியெல்லாம் நடந்திருக்கும் என்றே நம்புகின்றேன்...// அதில் என்ன சந்தேகம்? நிச்சயம் நடந்துதானிருக்கும். சில வருடங்களுக்கு முன்பு மலைப்பாம்பு விழுங்கத் துவங்கிய தன் பேரனை அதனிடமிருந்து மீட்ட ஒரு பெண்ணை பற்றிய செய்தி ஜூனியர் விகடனில் வந்தது.
நீக்கு@ ஜீவி அண்ணா..
பதிலளிநீக்கு// மகரந்த சேர்க்கையே தேனீக்களின் மூலமாகத்தான் என்று வழி வகுத்த இறைவன் படைப்பின் ரகசிய சலுகை போலும் அது!..//
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்று ஔவையார் வியப்படைந்த மாதிரி -
தேனீக்களின் பெருமையும் பெரிது தான்!..
அறுகோணச் சிற்றறைகளை வடிவமைக்கும் தேனீ இயற்கையின் ரகசியம்.. அதிசயம்..
தேன் உப்பு - இவையிரண்டும் தானும் கெடாது.. தன்னைச் சேர்ந்தவைகளையும் கெட விடாது..
குழந்தை முதல் தெய்வம் வரை தேனே!!. என்று கொஞ்சப்படுவதும் அதனால் தான்..
நம்முடம்பில் ஒளிந்திருக்கும் மூலங்களுள் உப்பு வெளிப்படை..
தேன் (அமிர்தம்) மறைபொருள்.. தானடங்கிய தவத்தினால் மட்டுமே
சித்திக்கும்.. தித்திக்கும்..
//தேன் (அமிர்தம்) மறைபொருள்.. தானடங்கிய தவத்தினால் மட்டுமே
நீக்குசித்திக்கும்.. தித்திக்கும்..// சுருங்கச் சொல்லி விளங்க வைத்து விட்டீர்கள். _/\_
தேன் என்று வரும் திரைப் பாடல்கள் கூட ஏராளம்.. அத்தனையும் அழகானவை..
பதிலளிநீக்குதேன் சிந்துதே வானம்
உனை எனை தாலாட்டுதே!..
- என்ன நினைத்துக் கொண்டு எழுதி வைத்தார் கவியரசர்!..
தேன் உண்ணும் வண்டு - சூப்பர் பாடலை ஸ்ரீராம் வெளியிடணும்னா அவருக்கு 60 வயதாவது ஆயிருக்கணும். பார்ப்போம்.
நீக்குதேனே தென் பாண்டி மீனே, தேன் தித்திக்கும் தேன்.... பாடல்களை எழுதுங்க
அன்பின் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குஅடுத்தடுத்து வரும் பதிவுகளில்
தேன் - பாடல்களில் ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கலாமா!?..
ஸ்ரீராம் ??
நீக்குதேன் ஆன பாடல்களுக்கெல்லாம் மகுடம் -
பதிலளிநீக்குபார்த்தேன்.. சிரித்தேன்!..
ஆகா...
தேனே.. தமிழ்த் தேனே!..
தேனே உன்னைத் தேடித் தேடி நானலைந்தேனே !!
நீக்குஅருப்புக்கோட்டை மனிதர் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவாழ்த்துவோம். (கில்லர்ஜி அருப்புக்கோட்டையை தேவக்கோட்டை என்று படித்திருப்பாரோ !)
நீக்குஅனைத்தும் நல்ல செய்திகள். நல்ல விமரிசனம். என்றாலும் எஸ்.ரா.வின் எழுத்து என்னை அவ்வளவா ஈர்த்தது இல்லை. ஆரம்ப காலங்களில் விகடனில் வந்தப்போ (இப்போ உள்ள விகடன் அல்ல எல்லாவற்றிலும் பழைய விகடன்) பல ஆண்டுகள் ஆகின்றன. பாலகுமாரன், எஸ்.ரா.ஜெயமோகன் ஆகியோரைப் படித்து!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகளை எடுக்கும் மிஷின் எப்படி வேலை செய்கிறது என்பது புரியவில்லை. ஒரே வரிசையில் நாற்று இருந்தால், இடையில் வரும் களையை அது நீக்கலாம். ஆனால் வரிசையிலேயே வரும் களையை எப்படி நீக்கும்னு தெரியலை.
பதிலளிநீக்குஅன்னதானம் மிகவும் பெரிய பொறுப்பு. பாராட்டணும்.
இரவில் எலுமிச்சை நீர்... முயற்சி செய்து பார்க்கிறேன்.
காலையிலும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான வெந்நீரில் அரை எலுமிச்சைச் சாறு பிழிந்து லேசாக உப்புச் சேர்த்துத் தேன் விட்டுக் கலக்கிக் குடித்துப் பாருங்கள். சும்மாவானும் நான்கு/ஐந்து நாட்கள் செய்துட்டு விடக் கூடாது. குறைந்த பட்சம் ஆறு மாசமாவது தொடர்ந்து குடிக்கணும். நிச்சயம் பலன் தெரியும்.
நீக்குஅன்னாசிப் பழத்தையும் சாறு எடுத்துக் கொண்டு அதில் வறுத்த ஓமத்தைப் பொடி செய்து சேர்த்துக் கொண்டு உப்பு அல்லது சாட் மசாலா சேர்த்துக் காலை வேளையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வரலாம். இரண்டு முறைகளிலும் நிச்சயமாய் எடை குறையும்.
நீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்.
நீக்குஇந்த வார நல்ல செய்திகள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குவயலில் களை எடுக்கும் சாதனம், அன்னதானம் செய்பவர், குழந்தையை சிறுத்தையிடமிருந்து காத்தவர் எல்லாம் அருமையான செய்திகள்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
எலுமிச்சை குறிப்பு பயனுள்ளது.
நன்றி.
நீக்குஜீவி சார் அவர்களின் படித்த கதை பகிர்வு, மற்றும் கதை விமர்சனம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஒதுக்காமல் வாசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கோமதிம்மா.
நீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குஆம்.
நீக்குசுசீந்தர் செய்த கருவியின் படம் அவர் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர் சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும் போது எப்படிக் களை எடுக்க முடியும் அதைக் கொண்டு என்று தோன்றுகிறது. நாற்றும் கூட வந்துவிடாதோ..
பதிலளிநீக்குஅன்னதானம் - க்ரேட்..
சிறுத்தையோடு போராடி!! ஆ நிஜம்மாவே தைரியம்தான்.
கீதா
அவர் சொல்லி இருப்பதைப் பார்த்தால் எனக்கும் நாற்றுக்களும் கூட வந்துடுமோனு சந்தேகம் இப்போவும் இருக்கு. நேரில் பார்த்தால் தான் புரியும்.
நீக்குகருத்துரைகளுக்கு நன்றி.
நீக்குஅன்னதானம் சிறப்பு...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇரவில் எலுமிச்சை நீர் குடிப்பதுண்டு. முன்பு காலையில் குடித்து வந்தேன். தற்போது இரவில்.
பதிலளிநீக்குகீதா
தகவலுக்கு நன்றி.
நீக்குநல்ல செய்திகள்.
பதிலளிநீக்குபுலியுடன் போராடி குழந்தையை மீட்ட அன்னை போற்றுதற்குரியவர்.
ஆம்.
நீக்குநேற்று ஜீவி அண்ணா எழுதியிருக்கும் தனக்குப் ப்டித்த கதை பற்றி இங்கு குறிப்பிட முடியாமல் போனது.
பதிலளிநீக்குகதைக்களம் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கிறது.
அதை ஜீவி அண்ணா கதை என்ன சொல்கிறது என்பதைச்சொல்லிவிட்டுத் தன் கருத்துகளைச் சொன்ன விதம் அழகாக இருக்கிறது. நுணுக்கமான வெளிப்படுத்தல்கள். காமம் என்பது கதையில் வந்தால் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் வித்தைக்காரன் போலத்தான். கொஞ்சம் நழுவினாலும் விரசமாகிவிடும் அபாயம்தான். அதை எஸ்ரா சரியாகக் கையாண்டு இருக்கிறார் என்று தெரிகிறது.
எஸ் ராவின் சின்ன கதைகள் ஓரிரண்டு வாசித்திருக்கிறேன். கட்டுரைகளும் ஒரு சில அதுவும் கூட அங்குமிங்குமாய்தான் முழுவதும் வாசித்ததில்லை.
கீதா
நான் படிச்ச கதை/கவிதைகள்/கட்டுரை -- என்ற இந்தப் பகுதிக்கு நீங்களும் எழுதலாமே?..
பதிலளிநீக்குபுறந்தள்ளி விடாமல் வாசித்து கருத்துச் சொன்னமைக்கு நன்றி.