வெள்ளி, 3 டிசம்பர், 2021

வெள்ளி வீடியோ : கொஞ்சும் திலகம் நெஞ்சில் பதிய குளிர வேண்டும் இரவு..

 1976 ல் வெளியான படம் கிருஹப்ரவேசம்.  சிவாஜி, கே ஆர் விஜயா, சிவகுமார் நடித்தது.  வழக்கம்போல உணர்ச்சிக்குவியலான படம்.  சிவாஜிக்கு கை விளங்காமல் போய்விடும் என்று ஞாபகம்.  லாரி டிரைவராய் வருவார்.  சிவாஜியும் சிவகுமாரும் அண்ணன் தம்பி, நடுவில் மதிப்பிழந்து, பின்னர் சேரும் கதை என்று நினைவு.  சிவாஜி தம்பதியினருக்கு குழந்தையின்மை, சிவகுமார் ஜெயாவுக்குக் குழந்தை இருப்பது போன்ற பிரச்னைகள்.

இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் இன்று பகிர்வு.  ஒன்று சிவாஜி லாரியில் பாடிக்கொண்டே வரும் பாடல்.டி எம் எஸ் குரலில் கண்ணதாசன் பாடல்.  இசை எம் எஸ் விஸ்வநாதன்.

உலகம் பெரிது சாலைகள் சிறிது
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்

உலகம் பெரிது சாலைகள் சிறிது
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
சுமைகள் அதிகம் சொந்தம் அதிகம்
இறைவனின் கணக்கில் இதுதான் உலகம்
.
.
வாடா கண்ணா வழித்துணை நீதான்
வாழ்வெனும் சாலை அமைத்தவன் நீ
வாசலில் நின்று பூஜைகள் ஒலித்தல்
வழி விடுவாய் என அறிந்தவன் நான்

பயணம் முழுவதும் உன்னைப்
பாடிக் கொண்டிருந்தால் பயமில்லையே

ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
.
தானே இயங்கும் கருவிகள் எல்லாம்
சாலையில் இங்கே உறங்குதடா
வானில் இருந்தே இயக்குகிறாய் நீ
மானிட உலகம் நடக்குதடா
விதியின் இயக்கம் இந்த
வீதிகள் தோறும் தெரியுதடா

ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
.
.
வருஷா வருஷம் ஒவ்வொரு கோடி
மக்கள் கூட்டம் பெருகுதடா
வழிகள் தோறும் தலைகளைப் பார்த்தால்
பொதுக் கூட்டம் போல் தெரியுதடா
படைக்கும் தொழிலை கொஞ்சம்
நிறுத்திக் கொண்டால் என்ன பரந்தாமா
பரந்தாமா
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
சுமைகள் அதிகம் சொந்தம் அதிகம்
இறைவனின் கணக்கில் இதுதான் உலகம்


அடுத்த பாடலும் இதே படத்திலிருந்து.  இதுவும் கண்ணதாசன் பாடல்தான்.  டி எம் எஸ் சுசீலா குரலில் ஒரு டூயட்.  சிவாஜியும், கே ஆர் விஜயாவும் நடுத்தர வயதில் (படத்தில்) பாடும் பாடலாக அமைந்திருக்கும் காட்சி.

எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது - வயது 
ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது
எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது - வயது 
ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது

இந்த வயசில் தானே எனக்கு விவரம் புரியுது
இந்த வயசில் தானே எனக்கு விவரம் புரியுது - நீங்க ஏற 
இறங்க பாக்கும் போது விளக்கம் தெரியுது, - நீங்க ஏற 
இறங்க பாக்கும் போது விளக்கம் தெரியுது,
எங்க வீட்டு ராஜாவுக்கு இளமை திரும்புது - வயது 
ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது
.
சேலை கட்டிய கருப்பு பல்லக்கு சிரிக்கும் சிரிப்பு அழகு - உன் 
சிரித்தமான முகத்தை பாத்து இருட்டில் மறையும் நிலவு 
சேலை கட்டிய கருப்பு பல்லக்கு சிரிக்கும் சிரிப்பு அழகு - உன் 
சிரித்தமான முகத்தை பாத்து இருட்டில் மறையும் நிலவு 
கோலம் போட்ட இதழின் மீது கூடக் குறைய பழகு 
கோலம் போட்ட இதழின் மீது கூடக் குறைய பழகு 
கொஞ்சும் திலகம் நெஞ்சில் பதிய குளிர வேண்டும் இரவு,
குளிர வேண்டும் இரவு..
.
.
மாலை போட்ட நாளிலிருந்து மனசு துடிக்கும் துடிப்பு 
மதியம் இல்லை இரவுமில்லை தினமும் உங்க நெனப்பு,
காலம் தாண்டி கிடைக்கும் போது காதல் இனிக்கும் இனிப்பு,
கட்டி வெல்லம் கசந்து போகும் கட்டிப் பிடிக்கும் பிடிப்பு 
கட்டிப் பிடிக்கும் பிடிப்பு..

எங்க வீட்டு ராஜாவுக்கு இளமை திரும்புது - வயது 
ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது..

பழுத்து வந்த பழத்தை போல பருவம் இன்று விஜயம் 
பாத்து நீங்க பழக வேண்டும் தெரியும் உங்கள் விசயம் 
பழுத்து வந்த பழத்தை போல பருவம் இன்று விஜயம் 
பாத்து நீங்க பழக வேண்டும் தெரியும் உங்கள் விசயம் 
துன்பம் போல தோன்றினாலும் இன்பம் அங்கு அதிகம் 
இன்பம் துன்பம் எதுவென்றாலும் எனக்கு நீங்கள் உலகம் 
எனக்கு நீங்கள் உலகம்


= = = = =

சென்ற வருடம், நவம்பர் ஏழாம் தேதி காலமான K G Visuweswaran அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் அடிக்கடி எங்கள் குடும்பக்  குழுக்களில் பாடிய இந்தப் பாடலை இங்கே பகிர்கிறோம். (KGG) 

Movie 
Karnan (1964) (கர்ணன்)
Music
Viswanathan Ramamoorthy
Year
1964
Singer
Seerkazhi Govindarajan
Lyrics
Kannadasan
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா...
மரணத்தின் தன்மை சொல்வேன்...
மானிடர் ஆன்மா மரணமெய்தாது...
மறுபடி பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய் 
மேனியைக் கொல்வாய்
வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்து தான் தீரும் ஓர் நாள்... ஆ... ஆ...

என்னை அறிந்தாய் எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்...
துணிந்து நில் தர்மம் வாழ... ஆ...

புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்...
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக
இக்களமெலாம் சிவக்க வாழ்க... ஆ... ஆ... ஆ... 

பரித்ராணாய சாதூனாம்
விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே...


= = = = 

101 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். என்றும்
  ஆரோக்கியமும் அமைதியும்
  கூடி இருக்க இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. சஞ்சீவ் குமார் லாரி பாடல்.கிஷோர் குமார் குரலில்
  மிக இனிமை. இந்த பூனா ,மும்பை சாலை எத்தனை படங்களில் வந்திருக்கும் என்று யோசிக்கிறேன்.
  நன்றி மா ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த அளவு எனக்கு தெரியாது. ஆனால் பாடல் சொன்னீர்கள் என்றால் தெரியும்!

   நீக்கு
 3. இரண்டாம் பாடல் சௌந்தர ராஜன் குரலில் வந்தாலும்
  நாங்கள் ரசிப்பதென்னவோ சிவாஜியின் முக பாவங்களைத்தான்.:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா..  ஹா..   இந்தப் படம், சத்தியம் போன்ற படங்கள் அதிக விளம்பரமின்றி குறுகிய காலத் தயாரிப்பாக வெளி வந்த படங்கள். இந்தப் படம் தஞ்சாவூர் திருவள்ளுவர் தியேட்டரிலும், சத்யம் யாகப்பாவிலும் ரிலீஸ் ஆனதாக ஞாபகம்!

   நீக்கு
 4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 5. கர்ணன் படப் பாடலைத் தவிர்த்து மற்றப் பாடல்கள் கேட்ட நினைவில் இல்லை. ஆனாலும் எல்லாமே இன்னிக்கு ஜிவாஜி படங்கள்! ஜிவாஜி ரசிகர்களுக்கு விருந்து!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மற்ற இரு பாடல்களுமே கேட்டதில்லையா?  இரண்டாவது பாடல் கூடவா?

   நீக்கு
 6. திரு கேஜி. விஸ்வேஸ்வரன் அவர்களுக்கு எங்கள் அஞ்சலியும். முகநூல் நண்பர். உண்மையிலேயே உங்கள் குடும்பத்திற்கு மிகப் பெரிய ஈடு செய்ய முடியா இழப்பு. ஶ்ரீராமின் சகோதரிக்கும் எங்கள் அனுதாபங்கள். காலம் மெல்ல மெல்ல மன வேதனையை மாற்றட்டும்.

  பதிலளிநீக்கு
 7. மூன்றாம் பாடலில் விஜயா,சிவாஜி நடிப்பு

  விஜயாவை விட சிவாஜி இளமையாகத் தெரிகிறார்.:)

  தமிழ்த் திரைப்படங்களில் இந்தக் காட்சிகள்
  இல்லாமல் படம் எடுத்தால் நன்றாக இருக்கும்.:)

  என்னைப் போல எல்லோரும் நினைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
  இல்லாததை இருப்பதாகப் பார்க்கத் தானே சினிமாக்கள்.
  கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலுக்கு
  பல ஆரம்பங்களைக் கொடுப்பார் என்றுதான்
  அவர் மகன் சொல்லக் கேட்டு வருகிறேன்.

  அற்புதமாக அருவி போலக் கொட்டுமாம்
  பாடல் வரிகள்.
  நெல்லை கண்ணனின் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் ரொமான்ஸ் இருந்தால்தானே அந்தத்தரப்பு ரசிகர்களையும் கவரலாம்!  ஆனாலும் இந்தப் படம்ஸ் சரியாக ஓடவில்லை என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 8. கர்ணன் படம் வந்த போது எல்லாப் பாடல்களும் அவ்வளவு தடவை
  கேட்டிருப்போம்.
  பகவத் கீதையின் சாராம்சத்த்தை
  எளிய மக்கள் புரிந்து கொள்ளக் கண்ணதாசன்
  கொடுத்த பாடல்.

  சிறப்பு உரைகளைப் படிக்கும் போது
  புரியாதது ,கவிஞர் அவர்களின்
  பாடல்களைக் கேட்கும்போது எளிதாகப் புரியும்.

  அருமையான பாடல்களுக்கு மிக நன்றி ஸ்ரீராம்.
  நல்லதொரு நாளுக்கானவாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ணன் படத்தில் அனைத்துப் பாடல்களுமே மிக இனிமையான பாடல்கள்.

   நீக்கு
 9. திரு கே ஜி விஸ்வேஸ்வரன் அவர்களுக்கு
  அஞ்சலிகள்.
  அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது.
  உங்கள் சகோதரிக்கு நீங்கள் எல்லாம்
  ஆதரவாக இருப்பது ஒரு ஆறுதல்.

  காலம் தான் எல்லா நிம்மதியையும் தரவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் நவம்பர் ஏழாம் தேதி மறைந்தார். அக்டோபர் இறுதியில் வருஷாப்தீகம் முடிந்தது.

   நீக்கு
  2. Very difficult to digest these deaths, that includes SPB and so many other persons.
   SPB கடைசியா சூப்பர் சிங்கர் எபிசோட்ல கலந்துகொண்டிருந்தபோது, அவர் சொல்றார், 'I will live to see you excel in your life' என்று ஒரு பாடகியைப் பார்த்து.... ரொம்பவே மனதை நெருடியது (இப்படிச் சொல்லி சில மாதங்களில் அவர் போய்விட்டார்).

   நீக்கு
  3. இதைத்தான் Man proposes God d isposes என்று சொல்வார்கள் போல..  இஸ்லாமிய மக்கள் மனிதன் இப்படி தலைக்கனத்துடன் சொல்வது கூடாது என்றுதான் எதை ஒன்றையும் சொல்லி விட்டு இன்ஷா அல்லாஹ் என்று சேர்த்துக் கொள்வார்கள்.  நான் 'கடவுள் மனது வைத்து' என்று அல்லது 'பொழச்சு கிடந்து' என்றோ சேர்த்துக் கொள்வேன்!  சமயங்களில் 'இன்ஷா முருகா' என்பேன்!

   நீக்கு
  4. அக்டோபர் இறுதியில் வருஷாப்தீகம் முடிந்தது.//

   ஆமாம் எனக்கு நினைவு வந்தது காலையில். முடிந்துவிட்டதெ...அப்பொது எதற்கோ உங்களோடு, பாஸோடு பேசினப்ப தெரிந்தது....இன்று காலை இதைப் பார்த்ததும் என்னடா இன்று என்று....கீதாக்கா கொடுத்ததையும் பார்த்ததும்....மீண்டும் அது விஸ்வேஸ்வரன் மாமா தானா அல்லது இங்கு ஸ்ரீராம் கௌ அண்ணா பதில்களும் இல்லையே என்று மனம் திக் என்று ஒரு நிமிடம் சென்று பின்னர் விஸ்வேஸ்வரன் என்ற பெயர் பார்த்ததும் உங்கள் அக்கா என்று வேறு கீதாக்கா சொல்லியிருந்தது பார்த்ததும்...அவர் பற்றித்தான் என்பது உறுதியானது.

   கீதா

   நீக்கு
 10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 11. இன்று மணநாள் கொண்டாடும் நெல்லைத் தமிழர் தம்பதிகளுக்கு எங்கள் மனமார்ந்த நல்லாசிகளும், வாழ்த்துகளும். என்றென்றும் மன மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் பெண், பிள்ளைக்குத் திருமணம் ஆகிப் பேரன், பேத்திகளுடனும் வாழ்வாங்கு வாழ நல்வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு சந்தேகம் தான், இன்றா நாளையா என. ஆனால் 120க்ரீட்டிங்க்ஸ்.காம் இன்னிக்குத்தான்னு சொல்லிப் படுத்தி எடுத்துவிட்டது! :)))))

   நீக்கு
  2. கிர்ர்ர்ர்ர்ர்...   தப்புத்தப்பா தேதி சொல்லி அ வ வச்சுட்டீங்க!

   நீக்கு
  3. ஹிஹிஹி, என்னை விடவா உங்களுக்கு அ.வ.????? :))))

   நெல்லையாரின் மகன் ஜூனியர் நெல்லைக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்! யாருங்க அங்கே கூட்டமா ஓடறது? இன்னிக்குத் தான் பிறந்த நாள் ஜூனியர் நெல்லைக்கு. அவரே சொல்லி இருக்கார். ஆகவே அதை நம்பலாம். ம்பலாம். பலாம். லாம். ம். எக்கோ! சத்தமாய்ச் சொன்னேனா அதான்! :))))

   நீக்கு
  4. ஹா..  ஹா... ஹா..   ஆமாம் வாட்ஸாப் க்ரூப்ல சொல்லி இருக்கிறார்.   அவர் மகனுக்கு எங்கள் வாழ்த்துகளும்..

   நீக்கு
  5. சரி... அ.வ என்றால்? இ.தி.கு என்றால் ஏற்கனவே தெரியும்.

   நம் சகோதரர் தெல்லைத் தமிழரின் மகனுக்கு எங்கள் இனிய வாழ்த்துகளும்.இன்று பிறந்த நாள் காணும் அவர் சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் நீடுழி வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  6. ஹாஹாஹா, கமலா, நான் முன்னர் ஒரு தரம் இதற்கான அருஞ்சொற்பொருள் போட்டிருந்தேன். :))) அ.வ. என்றால் அசடு வழிந்தேன்/வழிந்தான்/வழிந்தார்/வழிந்தாள். அ.வ.சி. என்றால் அசடு வழியச் சிரித்தேன்/சிரித்தார்/சிரிக்கிறார்/சிரிக்கிறாள். விவிசி எனில் விழுந்து விழுந்து சிரித்தாள்/சிரித்தேன்/சிரிக்கிறார். சிரிக்கிறாள். வவாபி எனில் வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி. மற்றவை பின்னர்.

   நீக்கு
  7. கை.நா. எனில் கை நாட்டு. க.கை.நா. எனில் கணினி கை நாட்டு. மு.ஜா.மு. முன் ஜாக்கிரதை முத்தம்மா/முத்தண்ணா! இப்படி நிறைய இருக்கு.

   நீக்கு
  8. ம.உ.மி. மண்டை உடைஞ்சது தான் மிச்சம். அதே ம.கா. எனில் மண்டை காயுது.

   நீக்கு
  9. அனைவருக்கும் மிக்க நன்றி. பெரியவர்களின் வாழ்த்து மிக்க மகிழ்ச்சியை உண்டாக்குது (கீதா ரங்கன்க்கா வையும் சேர்த்துத்தான்)

   நீக்கு
  10. நெல்லைத் தமிழன் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
   வாழ்க வளமுடன்

   நீக்கு
  11. வணக்கம் சகோதரி

   ஹா ஹா ஹா. அருஞ்சொற்பொருள் பாடம் படித்து தெரிந்து கொண்டேன். விளக்கங்கள் அருமை. முன்பு அம்மா வீட்டில் இருந்த போது, நானும், அண்ணா, மன்னியும் இப்படித்தான் சுருக்கிக் பேசி மகிழ்வோம். க.கா,பாஷையும் அப்போதெல்லாம் நகைப்புக்கு நெருங்கிய நட்புகள். என்னவோ அதெல்லாம் அம்மா வீட்டோடு போச்சு. திருமணம் ஆன பின் 79ல் போன சுதந்திரம் இன்னமும் வரவில்லை. புகுந்த வீட்டு உறவுகள் எப்படியோ என்ற எண்ணத்திலேயே இதுவெல்லாம் மறந்து விட்டது. உங்கள் சுருக்கெழுத்து மொழி பகிர்வுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  12. ஹிஹிஹி, இப்போவும் என் குழந்தைகள் என்னைக் "கா" பாஷையிலும் "அய்ன" சேர்த்தும் பேசச் சொல்லிக் கேட்டு ரசிப்பார்கள். நாங்க என் கசின்ஸ் எல்லோருமே இந்த பாஷையில் மிக வேகமாகப் பேசுவோம்.

   நீக்கு
  13. கஎ கங் கக களு கக் ககு கம் கஇ கந் கத கப கழ கக் கக கம் கஉ கண் கடு 

   நீக்கு
 12. // உலகம் பெரிது
  சாலைகள் சிறிது..//

  இந்த வரிகளை இதற்கு முன் கேட்டிருக்கின்றோமே!.. - என்று..

  வாழ்க நலம்..
  அமைதி எங்கும் நிறைக..

  பதிலளிநீக்கு
 13. கிரகப்பிரவேசம் படத்தில் இன்னொரு பாடல் -

  சத்தியத்தின் சோதனைக்கு
  எத்தனை பேர் போட்டி..
  தர்மம் என்னை வாட்டுதம்மா
  சொந்தங்களைக் காட்டி..

  - என்றொரு பாடலும் உண்டு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  எனக்கு அந்தப் பாடல் அவ்வளவு ரசிக்காது. 

   சென்ற மாதம் தேவகோட்டையார் அந்தப் பாடலை உல்ட்டா செய்து போட்டிருந்தாரே...

   நீக்கு
 14. கருத்துப் போடுவதில் ஏதோ சிக்கல். டெஸ்ட்..!

  பதிலளிநீக்கு
 15. Happy wedding anniversary & many more happy returns of the day Mrs&Mr.NellaiTamizhanGod bless! 🎈🎈🎊

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தும்பா தன்யவாதகளு (கேனடா போனால் ஆங்கிலத்தில் எழுதணும்னா, கர்நாடகாவில் இருந்தால் கன்னடத்தில் எழுதணுமோ?)

   நீக்கு
  2. இந்த குசும்புதான் நெல்லையில் சிறப்பு! ஆங்கிலத்தில் டைப்புவது எளிதாக இருக்கிறது. வாழ்த்துவதா? வணங்குவதா? என்ற குழப்பமெல்லாம் வராது பாருங்கள்.:))

   நீக்கு
 16. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா.. இன்று என் பெயரையே மாற்றி விட்டீர்கள்.:) எனக்கு ஒரே பெயர்தான் எங்கள் அப்பா வழி பாட்டியின் பெயர். எனக்கு மட்டும் இன்னொரு பெயர் ஏன் வைக்கவில்லை என என் சிறு வயதில் எங்கள் அம்மாவிடம் நிறைய தடவை கேட்டுள்ளேன். இதை சகோதரி பானுமதியின் பதிவில் சொல்ல நினைத்தேன். அங்கு விட்டு போய் இங்கு தொடர்ந்திருக்கிறது. அதற்கென்ன.. எங்கும் "எங்கள் ப்ளாக்தானே" ஹா.ஹா.ஹா. இப்போது நீங்கள் அன்னையாக எனக்கு புதுப் பெயர் வைத்து விட்டீர்கள். மகிழ்வோடு நன்றி.

   சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் நெல்லைத் தமிழரின் மணநாள் நாளை என்பதற்கு பதிலாக இன்று வாழ்த்து தந்து விட்டார். .. ஆனாலும் எங்கள் (நம்) வாழ்த்துக்கள் என்றும் ஒரே மாதிரிதான். நாளைய மணநாளுக்கு இன்றைய அட்வான்ஸ் வாழ்த்துகள் சகோதரரே.

   நீக்கு
  2. ஹிஹிஹி... வணக்கம் கமலா .அக்கா. வாங்க...

   நீக்கு
  3. ஹா ஹா.ஹா . அழகான மறுபெயர் மாயமாக வந்த சுவடு தெரியாமல் மறைந்து விட்டதே..:(

   நீக்கு
 17. நெல்லைத்தமிழன் தம்பதியருக்கு கல்யாண நன்னாள் வாழ்த்துகள். வாழ்வு மேன்மேலும் சிறக்க ஆண்டவன் அருளட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஏகாந்தன் சார்... 7 1/2 சனி முடியட்டும். அப்போ பார்க்கலாம் வாழ்வு சிறக்கிறதா என்று. ஹா ஹா

   நீக்கு
 18. வணக்கம் சகோதரரே

  இன்றைய வெள்ளி பாடல்கள் அனைத்தும் அருமை. நேற்றைய பதிவின் தலைப்பு இன்றைய பாடலாக ரசித்தேன். கர்ணன் பட பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை. உங்கள் மாமாவின் நினைவாக பகிர்ந்த அந்த பாடல் மனதுக்கு அமைதி தருபவை. அவருக்கு என் அஞ்சலிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

  உங்களுக்கு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள். ஆயுள், ஆரோக்கியத்தோடு வருடாவருடம் இதுபோன்றே திருமண நாளை நல்ல முறையில் சந்தோஷமாக கொண்டாடி, சீரும் சிறப்புமாக வாழவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கமலா (உங்க பேர் கமலாம்பாளா இல்லை வெறும் கமலாவா?) ஹரிஹரன் மேடம். உங்களுக்கு பாலக்காடு அல்லது திருவனந்தபுரத் தொடர்பு உண்டோ?

   ஆரோக்கியத்தோடு வாழ்ந்தால் போதும்

   நீக்கு
  2. ஹா.ஹா.ஹா. ஏதேது.. இன்று என் பெயரை மாற்றுவதிலேயே எல்லோரும் கங்கணம் கட்டி கொண்டிருப்பது போன்று தெரிகிறதே:) என் பெயர் கமலாதான். ஹரிஹரனுக்கான சந்தேகம் உங்களுக்கு அவ்வப்போது தலை தூக்குகிறது. அவர் (என் கணவர்) கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி பிறந்தவர்.அதனால் சாஸ்தாவின் பெயர் அவரின் பெயராயிற்று. மற்றபடி கேரளாவிற்கும் அவர் பெயருக்கும் தொடர்பில்லை. நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்ததா?:)

   நீக்கு
  3. ம்ம்ம்ம் திருநெல்வேலிக்கார வீர வைணவரான நெல்லைக்கு ஹரிஹரன் என்பது தென்மாவட்டங்களில் புழங்கும் சகஜமான பெயர் என்பது தெரியலை பாருங்க கமலா! இஃகி,இஃகி,இஃகி!

   நீக்கு
 20. நெல்லைத் தமிழன் தம்பதியருக்கு திருமண நாள் நல்வாழ்த்துகள்..

  எல்லாம் வல்ல இறைவன்
  அருளால் மேன்மேலும் சிறக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 21. கீதையின் சாரத்தோடு
  திரு KGV அவர்களது நினை நாள்..

  ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி..

  பதிலளிநீக்கு
 22. நெல்லைத்தமிழருக்கு திருமண நன்நாள் வாழ்த்துகள்.

  கர்ணன் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  பதிலளிநீக்கு
 23. //உலகம் பெரிது சாலைகள் சிறிது // ஓஹோ இந்தப் பாடலின் முதல் வரிதான் நேற்றைய தலைப்பா!!!! பாட்டு தெரிஞ்சாத்தானே கண்டுபிடிக்க!! ஹாஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 24. கேஜிவி அவர்களுக்கு அஞ்சலிகள். ஒரு வருடம் ஓடிவிட்டது. எல்லோருக்கும் காலம் மனவலிமையைத் தரட்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 25. நெல்லைத் தமிழன் தம்பி/அண்ணாத்தே!!!!! (ஹாஹாஹாஹா) உங்களுக்கும் உங்கள் ஹஸ்பண்டுக்கும் மனமார்ந்த மணநாள் வாழ்த்துகள்!

  இன்றைய ஸ்வீட் திங்க பதிவாக வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் பெண், என்னை இனிப்பு பக்கமே போகக்கூடாது, பொரித்த எதையும் சாப்பிடக்கூடாது என்று ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா. 21 நவம்பர்லேர்ந்து.

   அதனால் இனிப்புக்குத் தடா. Fried itemsக்கு தடா. (பஜ்ஜி அப்பளாம்.... பிஸினெஸ் எல்லாத்துக்கும்)

   நீக்கு
  2. ரொம்ப நல்லது நெல்லை. இதே உறுதியுடன் இருங்கள். உடலைப் பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள். 21 நவம்பரில் என்ன நடந்திருந்தாலும் இனிமேல் உணவு விஷயத்தில் நீங்க கவனமாக இருக்கணும் ஒவ்வொரு நிமிஷமும்.

   நீக்கு
  3. குட் நெல்லை!! நல்ல விஷயம். ஹெல்த் ரொம்ப முக்கியம்.

   கீதா

   நீக்கு
 26. கேஜிவி நன்றாகப் பாடுவாரே!!!

  முதல் பாடல் கேட்டதில்லை ஸ்ரீராம். கேட்ட நினைவும் இல்லை.

  இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன். அழகான ராகம் மோகனம்

  மூன்றாவது பாடல் கேஜிவி தினத்திற்குப் பொருத்தமான பாடல்.

  மிகவும் பிடித்தமான பாடல். சீர்காழியின் குரல் செம. பாடல் ராகமாலிகை...நாட்டை, சஹானா, மத்தியமாவதி.

  கீதா

  ம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விசு மாமாவுக்கு நல்ல குரல்.  நன்றாய் மேலே எழுப்பிப் பாடுவார்.  உங்களுக்கும் அனுப்பி இருக்கிறேன் என்று நினைவு.

   நீக்கு
  2. ஆம் ஸ்ரீராம் அதனால்தான் சொன்னேன் நன்றாகப் பாடுவார் என்று

   கீதா

   நீக்கு
 27. முதல் பாடல் நிறைய தடவை கேட்டிருக்கிறேன். வரிகள்கூட நினைவில் இருக்கிறது. இரண்டாவது பாடல் அபூர்வமாகத்தான் கேட்டிருக்கிறேன்.

  மூன்றாவது பாடலும் அதன் தொடர்ச்சியான உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலும் மனதை உருக்குகின்ற பாடல். இதெல்லாம் எழுதறதுக்கு கண்ணதாசன் ஒருவர்தான். எம்.எஸ்.வி இசையின் மணிமகுடம் இந்தப்படம்.

  பதிலளிநீக்கு
 28. முன்னொருகாலத்தில், 'தாது வருஷப் பஞ்சத்துல' என்று வயதில் பெரியவர்கள் அந்தக் காலக் கதையைச் சொல்வதுபோல, நாமும் (ரொம்ப வருஷம் உயிரோடு இருந்தால்), அந்தக் காலத்துல கொரோனா என்ற வைரஸ் வாழ்க்கையை எப்படி முடக்கிப்போட்டது, தெருவுக்கு குறைந்தது இருவர் என்று எத்தனை பேர்கள் மறைந்தனர், எவ்வளவு புகழ் பெற்றவர்கள் இறந்தனர், குடும்பம் சொந்தபந்தங்களில் யார் யார் இறந்தனர் என்றெல்லாம் சொல்லி வருந்துவோம்னு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய குழந்தைகள் நாளை அப்படி சொல்லக்கூடும்!  இல்லாவிட்டால் வரலாறு (திரித்து எழுதப்படாமலிருந்தால்) சொல்லும்!

   நீக்கு
 29. நாளை வரும் எங்கள் மணநாளுக்கு (27?) வாழ்த்திய, ஆசிகூறிய அனைவருக்கும் மிக்க நன்றி.

  மனைவிக்கு என்ன வாங்கித் தருவது என்று யோசிக்கவே இல்லை. பஹ்ரைனில் இருந்த நாட்களில், பசங்களுக்கு பிறந்த நாள் விமர்சையாகக் கொண்டாடியதே இல்லை. (அது இன்னுமொரு நாளே என்பது என் கான்சப்ட்). இன்னொன்று, இரவு 9க்கு (இப்போல்லாம் 9 3/4-10 மணி ஆகிடுது) படுத்தால் காலை 4 மணி வரை என்னை டிஸ்டர்ப் பண்ணுவது பிடிக்காது. என் பெண், பையனின் பிறந்த நாளுக்காக நடு இரவில் கேக்குடன் செலெப்ரேட் பண்ணின படத்தை காலையில் பார்த்தேன். நாளைக்கு என்ன பண்ணுவது என்று யோசிக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லவேளை என் பாஸ் எங்கள் பிளாக் படிப்பதில்லை.  நான் அப்படி எல்லாம் ஒன்றும் வாங்கித் தருவதில்லை!

   நீக்கு
  2. இப்போது குழந்தைகள் வாங்கி தருவார்கள் நெல்லைதமிழன், ஸ்ரீராம்.

   நீக்கு
  3. ஆம். அதுவும் நடந்தது, உண்மைதான் கோமதி அக்கா.

   நீக்கு
 30. முதலாவது பாடல் கேட்டதில்லை.

  நெல்லை தமிழன் தம்பதியருக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 31. நெல்லைத் தமிழன் தம்பதியருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
  மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 32. பாடல்கள் கேட்டேன். இந்தி பாடலும், அதே போன்ற சிவாஜி பாடிய பாடலும் கேட்டதில்லை.

  மற்ற இரண்டு பாடலும் கேட்டு இருக்கிறேன்.

  உங்கள் மாமா பாடிய பாடலை அனுப்பி இருக்கலாம்.
  அவர்களுக்கு பிடித்த பாடல் அனைவருக்கும் பிடித்த பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேர்த்திருக்கலாம்.  ஆனால் அந்தப் பாடலை இணைத்தது கேஜிஜி.  நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 33. எல்லாப் பாடல்களும் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்ஜி.

  அருமையான பாடல்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!