1968 ல் மலையாளத்தில் வெளிவந்த அத்யாபிகா என்கிற மலையாளப்படத்தினைப் பார்த்து கவரப்பட்ட கே எஸ் கோபாலகிருஷ்ணன் அதை தமிழில் 1969 ல் குலவிளக்கு என்கிற பெயரில் எடுத்து தமிழ் மக்களை பிழிய பிழிய அழ வைத்தார்.
ஒன்றும் புதிய கதை எல்லாம் இல்லை. புரட்சிகரமான கதையும் இல்லை.
வழக்கம்போல அப்போதைய ட்ரெண்டான கதாநாயகி தன் குடும்பத்தைக் காப்பாற்ற தன் வாழ்வைத் தியாகம் செய்யும் கதை. ஜெமினி, சரோஜாதேவி நடித்த படம்.
படம் ஓடியதா என்று தெரியவில்லை. சரோஜா தேவிக்கு நல்ல பெயர் கிடைத்தது என்று தெரிகிறது. 'பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ' என்கிற பாடல் இந்தப் படத்தில் பிரபலம். ஆனால் அதிகம்பேர் அறியாத, சிலர் கேட்டிருக்கக் கூடிய இந்த பி சுசீலா பாடல் படத்தில் இடம் பெறவில்லை என்றாலும் அந்தக் காலத்தில் சிலோன் ரேடியோ உபயத்தில் விரும்பிக் கேட்கப்பட்ட பாடல்.
கண்ணதாசனின் பாடலுக்கு கே வி மகாதேவன் இசை. கண்ணதாசன் மக்களை மூன்றுவகை மரங்களாக கற்பனை செய்து எழுதி இருக்கும் பாடல். அந்தந்த மரங்களுக்கு எப்படி நீர் வார்க்க வேண்டும் என்றும் பாடலிலேயே சொல்கிறார்.
சாதாரணமாக எங்கள் வீட்டில் ஒரு பழக்கம் உண்டு. ஹாலில் நான் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுப்பேன். அதன் தொடர்ச்சி உடனடியாக கிச்சனிலிருந்து பாஸிடமிருந்து வரும். ஆனால் இந்தப் பாடலை பாஸுக்கு தெரியவில்லை.
பனை மரம்.. தென்னை மரம்.. வாழை மரம்.. - மக்கள்
பழகும் பழக்கத்துக்கு மூணு மரம்..
பனைமரத்துக்கு ஒரு தரம் தண்ணீர்
பாய்ச்சி விட்டால் போதும் - அது
தனை வளர்த்து தலையில் நுங்கினைத்
தந்து விளையாடும்
தென்னை மரத்துக்கு தினசரி கொஞ்சம்
தீர்த்தம் விட வேணும் -அந்த
தீர்த்தம் இளநீரைச் சேர்த்துக் கொண்டு வரும்
காத்திருக்க வேணும்
வாழை மரத்துக்கு அடிக்கடி தண்ணீர்
வார்த்த பின்னாலடியோ - அது
பூவைப் பழத்தை இலையைக் கொடுப்பது
போட்ட கடனடியோ
மக்களிலே பனை தென்னை வாழை என
மூன்று வகைகளுண்டு - அவர்
நன்றியிலும் செய்யும் நன்மையிலும் இந்த
மூன்று விதங்களுண்டு - அது
நல்ல உறவுகள் என்றோ செய்ததை
ஞாபகம் வைத்திருக்கும் - அது
நல்லதைச் செய்திட நேரத்திலே
வாசலில் காத்திருக்கும்.. தலை
வாசலில் காத்திருக்கும்
அது என்ன மரம்.. அது பனை மரம்
சின்ன உறவுகள் கொடுக்கும் கையை
தினம் எதிர்பார்க்கும் - நாம்
செய்து செய்து அலுத்த பின்பே
அது நம்மைக் காக்கும்
அது என்ன மரம்.. அது தென்னை மரம்
தீய உறவுகள் என்ன கொடுத்தும்
திருப்தி கொள்வதில்லை - நாம்
திரும்பத் திரும்ப அள்ளிக் கொடுத்தால்
கை விடுவதில்லை..
அது என்ன மரம்.. அது வாழை மரம்
இந்த மரத்தில் எந்த மரத்தை
சொந்தம் கொள்வீரோ - நீங்கள்
எந்த மரத்தைப் போல் இருந்து
நன்றி கொள்வீரோ..
நீங்க என்ன மரம் ?
நாங்க பனை மரம்..
தங்கைக்காக அண்ணன்கள் உருகி உருகிப் பாடும் பாடல்கள் நிறைய கேட்டிருக்கிறோம். பாசமலர், தங்கை, தங்கைக்காக, தொடங்கி அண்ணன் ஒரு கோவில்,, பைரவி, என்று இன்றைய அண்ணாத்த படம் வரை!
இந்தப் பாடல் அண்ணனுக்காக தங்கை பாடும் பாடல். தங்கைக்காக படத்தில் பி சுசீலா பாடும் பாடல். சிவாஜி லட்சுமி அண்ணன் தங்கையாக நடித்த படம். டி யோகானந் இயக்கத்தில் 1971 ல் வெளியான இந்தப் படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத, எம் எஸ் விஸ்வநாதன் இசை.
பி சுசீலாவின் குரல் இந்தப் பாடலில் என்ன இனிமை என்கிறீர்கள்? அண்ணாவின் மீதான பாசம் அந்தக் குரலிலேயே வழிந்தோடும். குறிப்பாக சரணங்கள் மனதைக் குழைய வைத்துவிடும்.
தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது
தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது
கோவில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று
பாடும் குரல் கேட்குது
தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது
கண்ணில் இமையாக தங்கை நலமாக
காணும் துணையல்லவோ
பொன்னைக் கொடுத்தேனும் பூவைக் கொடுத்தேனும்
போற்றும் உறவல்லவோ
தானாட மறந்தாலும் சதையாடும் என்பார்கள்
தாளாத பாசத்தில் அண்ணா என்றழைப்பார்கள்
ஆசை மனமுண்டு பூஜை மலர் உண்டு
தெய்வம் நீயல்லவோ
அண்ணா... தெய்வம் நீயல்லவோ
மண்ணில் இடம் கொண்ட தென்னை இளம் கன்று
மண்ணைப் பிரியாதண்ணா
மங்கை முகம் கொண்ட மஞ்சள் நிறம் என்றும்
பெண்ணைப் பிரியாதண்ணா
தன் வீடு மறந்தாலும் தாய் வீடு மறவாது
தன்னாவி பிரிந்தாலும் அண்ணாவைப் பிரியாது
எங்கே இருந்தாலும் உன்னை மறவாத உள்ளம்
இதுவல்லவோ அண்ணா...
உள்ளம் இதுவல்லவோ
காலை வணக்கம் எல்லோருக்கும்.
பதிலளிநீக்குஹை இன்றைய பாடல் பகிர்வுகள் முதல் வரி பார்த்ததும் படம் என்ன படம் என்றெல்லாம் தெரியாவிட்டாலும் பாடல் பிடி கிட்டி!!! கேட்டோ ஸ்ரீராம்!!!!
கீதா
ஆ.... ஆச்சர்யம்!
நீக்குவணக்கம் கீதா.. வாங்க...
ரசித்துக் கேட்ட பாடல்கள்.
பதிலளிநீக்கு//கண்ணதாசன் மக்களை மூன்றுவகை மரங்களாக கற்பனை செய்து எழுதி இருக்கும் பாடல். அந்தந்த மரங்களுக்கு எப்படி நீர் வார்க்க வேண்டும் என்றும் பாடலிலேயே சொல்கிறார்.//
ஆமாம் ஸ்ரீராம். முதல் பாடலின் ஒப்பீடு வெகு சிறப்பு. இப்போதுதான் முழுவரிகளும் பார்ப்பாதால் கவியரசரின் பாடல் வரிகளையும் ரசிக்க முடிகிறது.
கட்டுரைக்கான வரிகள் போன்று தொடங்கி கவிதை/பாடல் போன்று முடிகிற வரிகளுக்கு கேவி மகாதேவன் அவர்கல் எவ்வளவு அழகா மெட்டு போட்டிருக்கிறார்!!!
கீதா
ஆமாம் கீதா. அருமையான கவிஞர் நமக்கு கிடைத்தார். யதேச்சையாக இந்தப் பாடல் ஒரு நாள் நினைவுக்கு வந்தது.
நீக்குசாதாரணமாக எங்கள் வீட்டில் ஒரு பழக்கம் உண்டு. ஹாலில் நான் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுப்பேன். அதன் தொடர்ச்சி உடனடியாக கிச்சனிலிருந்து பாஸிடமிருந்து வரும். ஆனால் இந்தப் பாடலை பாஸுக்கு தெரியவில்லை. //
பதிலளிநீக்குஆ! ...ஆச்சர்யம்! (இது எனக்கு ஆச்சரியம்!!!) ஹாஹாஹாஹா...கீதாவுக்கே தெரிஞ்சுருச்சே!!!..இங்க மழை பெய்யுமோ?!
கீதா
அதுதானே..
நீக்குமழையா.. ஹையோ... ஆனால் இன்று ஒரு புயல் சின்னம் உருவாகப்போவதாக செய்தியில் படித்தேன்.
அன்பின் கீதா, அன்பின் ஸ்ரீராம்
பதிலளிநீக்குமற்றும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் .அமைதியாக இருக்க இறைவன் அருள வேண்டும்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்குபனை மரம் தென்னை மரம் - பாடலைக் கேட்டு பல வருடங்கள் ஆகின்றன..
பதிலளிநீக்குஆம், சென்ற வாரம் சட்டென நினைவுக்கு வந்த சூட்டில் பகிர்ந்து விட்டேன்.
நீக்குதாயின் முகம் இன்று - பாடல் கேட்கும்போதே உள்ளத்தை உருக்கும்...
பதிலளிநீக்குஎன் தங்கை - கல்யாண நாளன்று எனக்காகப் பாடி என்னைக் கலங்கடித்தது நினைவுக்கு வருகின்றது..
அதெல்லாம் அந்தக் காலம்!..
ஆமாம். எனக்கும் மிகவும் பிடித்த, உள்ளத்தை உருக வைக்கும் பாடல். சுசீலாம்மாவின் குரலில்தான் என்ன ஒரு குழைவு, bhaavam...
நீக்கு//அதெல்லாம் அந்தக் காலம்!..// வருத்தமான உண்மை.
நீக்குஅனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா, வணக்கம்.
நீக்குமுதல் பாடல் வரிகளைப் படித்தவுடன் ட்யூன் பிடிபடவில்லை. கேட்டதும் தெரிந்தது.
பதிலளிநீக்குஇரண்டாம் பாடலை மறக்க முடியுமா?
ஆமாம், பாடல்களின் வெள்ளத்தில் நினைவுக்கடலின் ஆழத்துக்குச் சென்று மறைந்திருந்த பாடல் முதல் பாடல். தூர் வாரியபோது மேலே வந்ததது! இரண்டாவது பாடலும் மகா இனிமைதான்.
நீக்குஒரு கெட் டுகெதரில் அந்தாக்ஷரி விளையாடிய சமயத்தில் 'பூ பூவா பூத்திருக்கு..' பாடலை பாடி பூவிலே சிறந்த பூ எந்த பூ" என்று வரிகளை பாடியதும் ஒருவர் 'குஷ் பூ' என்றது நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குஹா.. ஹா... ஹா...
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஇரண்டு பாடல்களும் மிக அருமையான பாடல்.
பதிலளிநீக்குமுதல் படம் பார்த்து இருக்கிறேன், சோகமான படம்.
அடுத்த படம் லட்சுமி இரண்டு வேடத்தில் வருவார் என்று நினைக்கிறேன், மறந்து விட்டது.
//பொன்னைக் கொடுத்தேனும் பூவைக் கொடுத்தேனும்
போற்றும் உறவல்லவோ//
அருமையான வரிகள்.
அருமையான இரண்டு பாடல்களையும் கேட்டேன். நன்றி.
நன்றி அக்கா.
நீக்குகுல விளக்கு படம் , சரோஜாதேவி இருமி இருமி நடித்திருப்பார் என்று நினைவு.
பதிலளிநீக்குநல்ல பாட்டுப்பாடி, காதலித்து ஆடின நடிகை,
இந்த வேடம் போட்டது எங்களுக்கெல்லாம்
அவ்வளவு விருப்பம் இல்லை.
பூப்பூவா பூத்திருக்கு நல்ல பாடல்.
இருமி இருமி... அது தாமரை நெஞ்சமோ... படத்தில் நாகேஷும் இருப்பார்!
நீக்குநன்றி அம்மா.
இருக்கலாம் ஸ்ரீராம். ஒரு நாய் கூடத் துணை இருக்கும்.
நீக்குமஹா சோகம்.
இந்தப் படம் தாம்மா. ஆளைவிடு.:(
நீக்குஹா.. ஹா... சரிம்மா.. இரண்டு படங்களுமே நான் பார்க்கவில்லை!
நீக்குநான் இந்தப் படத்தின் முடிவைப் பார்க்க வேண்டும் என்றே இப்போதுதான்
நீக்குபார்த்தேன் மா. ஒரு பனைமரத்துக்குப் பக்கத்தில்
சரோஜாதேவி நிற்கிறார்.டி எம் எஸ் பாட்டு.
இருமி நாய் பக்கத்தில் விழுகிறார்.:)
மேகம் திரண்ட நேரத்திலே தாகம் எடுக்கவில்லை. பாடல்.
நீக்குஓ.. யு டியூப் போய் படமே பார்த்து விட்டீர்களா?!! சோகப்பாடம் அம்மா.
நீக்குபாடல் நினைவுக்கு வருகிறது.
இந்தப் பனை மரம் பாடல் திரைப்படத்திலேயே சரோஜா தேவி வகுப்புப் பிள்ளைகளுக்குப் பாடம் எடுக்கையில் பாடுவதாக வந்து நான் படமே பார்த்திருக்கேனே! கடைசியில் இருமி, இருமிச் செத்துப் போவார்.
நீக்குகருத்துக் கொடுத்தால் காணாமல் போகிறதே, நேற்று ரேவதி பதிவில். இன்னிக்கு இங்கே! :(
நீக்குஇதுக்கு முன்னே இந்தப் பாடல் பத்திக் கருத்துச் சொல்லி இருந்தேன். படத்தில் சரோஜாதேவி வகுப்பில் பிள்ளைகளுக்காகப்பாடிப் பாடம் சொல்லிக் கொடுக்கும் காட்சி இது என்பதாக. ஆனால் அந்தக் கருத்து எங்கே போச்சு? காக்காய்? ரோபோ? ரேவதியின் பதிவில் கூடக் கேட்டிருந்தேன். எதுவுமே வரலை. :(
நீக்கு
நீக்குஇந்தப் பனை மரம் பாடல் திரைப்படத்திலேயே சரோஜா தேவி வகுப்புப் பிள்ளைகளுக்குப் பாடம் எடுக்கையில் பாடுவதாக வந்து நான் படமே பார்த்திருக்கேனே! கடைசியில் இருமி, இருமிச் செத்துப் போவார்.
நீக்குகருத்துக் கொடுத்தால் காணாமல் போகிறதே, நேற்று ரேவதி பதிவில். இன்னிக்கு இங்கே! :(
என்ன ஆச்சரியம்? நான் கொடுத்த மூன்று கருத்துகளுமே காணாமல் போய்விட்டன. ஆனால் என் மெயில் பாக்ஸில் இருக்கு.
நீக்குமயக்கமே வரும்போல இருக்கே! கொடுக்கும் கருத்துகள் எல்லாம் எங்கே போகின்றன? அல்லது ஶ்ரீராம் ஒருத்தர் இத்தனை தான் போடணும்னு ஏதாவது நிபந்தனை வெளியிட்டிருக்காரா? :))))))
நீக்குஇப்போ ஆறிலே நாலு போய் இரண்டு, இதைச் சேர்த்தால் 3 இருக்கு!
நீக்குமரம் பாடலும் மிக மிக அருமை.
பதிலளிநீக்குஇது போல எழுத இனி யார்.
''பனை மரம்.. தென்னை மரம்.. வாழை மரம்.. - மக்கள்
பழகும் பழக்கத்துக்கு மூணு மரம்..''
ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு பலன்.
பனைமரத்தின் ஒரு பாகமும் வீணாகாது.
வாழை மரமும் அப்படித்தான்.
இருக்கும் இடம் தான் வேறு.
ஆம். அருமையான வரிகள். பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே பாடலும் இதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் ஒரு பாடலை படத்திலிருந்து தூக்கி விட்டார்கள் போல..
நீக்குகோவில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று
பதிலளிநீக்குபாடும் குரல் கேட்குது''
''தன் வீடு மறந்தாலும் தாய் வீடு மறவாது
தன்னாவி பிரிந்தாலும் அண்ணாவைப் பிரியாது
எங்கே இருந்தாலும் உன்னை மறவாத உள்ளம்''
அழவைக்கும் , உருக வைக்கும் வரிகள்.
எப்படித்தான் எழுதினாரோ...பெண்ணின் உள்ளத்தைப்
படித்தவர்.
அவர் யாருக்காக எழுதினாரோ.
பெண்களுக்கு மிகப் பிடித்த பாடல். சுசீலாம்மா குரலுக்குக் கேட்பானேன்.
மூன்றுமே மிகச் சிறப்பு ஸ்ரீராம். மனம் நிறை வாழ்த்துகள்.
ஆமாம் அம்மா.. நீங்கள் சொல்லி இருக்கும் வரிகளில் எனக்கும் கண்கள் கலங்கும். பாடல் வரிகளினால் கண்களை கலங்க வைக்க முடிகிறது பாருங்கள்.. கவிஞரின் சிறப்பு. சுசீலாம்மாவின் குரல்.
நீக்குஞாபகம் வந்தது :-
பதிலளிநீக்குவலையுலகம் வந்த ஆரம்பத்தில் (2011) "நீங்க மரமாகப் போறீங்க..." பதிவில் இந்த மரம் பாடலை கேட்பொலியாக இணைக்க வேண்டும் என்று எண்ணினேன்... ஆனால் அப்போது தொழினுட்பம் தெரியாது... (முயற்சிக்கவில்லை என்பது உண்மை...!) ஒவ்வொரு வரியும் சிறப்பானவை...
இரண்டாவது பாடலில் // தன் வீடு மறந்தாலும் தாய் வீடு மறவாது...// பல கணவன்மார்கள் உணர வேண்டிய வரி...!
ஓ.. அப்படியா DD? அப்போது என்று சொன்னாலும் உங்களுக்கே தொழில் நுட்பம் தெரியாது என்கிற வரி ஆச்சர்யம்!
நீக்கு//பல கணவன்மார்கள் உணர வேண்டிய வரி...!//
உண்மை. வேரின்றி மரமேது?
நன்றி...
நீக்குஇன்று அந்தப் பதிவில் இணைத்து விடுவேன்... தொழினுட்பம் கற்க வைத்தது ஐயன் (67 %) + வாசகர்களின் கருத்துரைகள் (33 %)
//:வேரின்றி மரமேது? // மனைவி - கணவன் - அதானே...!
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை...!
அருமை DD.
நீக்குஇரண்டு பாடல்களும் கேட்டு ரசித்தவை ஜி இலங்கை வானொலியில்தான்...
பதிலளிநீக்குநன்றி ஜி. விவித் பாரதி போன்ற வானொலியில் கூட நான் கேட்டிருக்கிறேன்!
நீக்குஒரு கொனஷ்டையான குட்டி வினா.
பதிலளிநீக்குதமிழ் சினிமாவில் மாமனார் மாமியாருக்காகவோ அல்லது மாமியார் மாமனாருக்காகவோ பாடிய பாடல் ஏதேனும் உண்டா? :))
இருக்கிறது ஜீவி ஸார்...
நீக்குஇது நடிகர் அபிநய்யின் அப்பா, விஜய சாமுண்டீஸ்வரியின் கணவர் கோவிந்தா ராவ்வின் மாமனார், மாமியார் நடித்த படைப்பு பாடல்..
https://www.youtube.com/watch?v=5cmfqO-e020
இது நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்திகாவின் மாமனார் அவர் மாமியாரை பார்த்து பாடும் பாடல்!
https://www.youtube.com/watch?v=2RSvYa8EnUs
பயங்கர குழப்பம்.
நீக்குதிரைக்கதைப்படி மாமமார் மாமியாருக்காக vice versa பாடும் பாடல்களாகா இவை?
நெல்லை ஒத்துப்பாரா தெரியலியே!
ஜீவி சார்.... கதாநாயகி கதாநாயகர்களுக்கு குழந்தை இருந்து, அது இருவரையோ இல்லை அப்பாவையோ இக்னோர் செய்யும்போது அம்மா, அப்பாவுக்காகவும், அப்பா அம்மாவுக்காகவும் பாடியிருப்பார் (இதில் அந்தக் குழந்தைக்கு திருமணம் ஆயிருக்கவேண்டும்). தங்கப்பதக்கம் .... என ஏகப்பட்ட லிஸ்ட் இதற்கு உண்டே.
நீக்குமரத்தைச் சுத்தி டூயட் பாடுவாங்களா என்று கேட்டால் யோசிக்கணும்.
நெல்லையா, கொக்கா?...
நீக்குவியட்நாம் வீடு, 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' மாதிரி. நிறைய சிவாஜி படங்கள் இந்த கேட்டகிரியில் தேறும்.
//திரைக்கதைப்படி மாமமார் மாமியாருக்காக vice versa பாடும் பாடல்களாகா இவை?//
நீக்குமாமனார் மாமியாருக்காக என்ற கேள்வியே வராது. ஏனென்றால் மாமனார் மாமியாருக்காக என்றால் கணவன் மனைவியைப் பார்த்துப் பாடுவதாகத்தான் (அல்லது மனைவி கணவனைப்பார்த்து) பொருள். எனவேதான் அப்படி சொன்னேன்.
இல்லாவிட்டால் ஒரு மாமனார், மருமகன் அல்லது மருமகள் கண்ணெதிரே அவரது மாமியார் -கவனிக்கவும் மாமனாரின் மாமியார் -பற்றி பாடுவதாக இருக்க வேண்டும்.
உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலே கணவன் மனைவியைப் பார்த்து பாடுவதாகத்தானே வருகிறது! தங்கப்பதக்கமும் அங்ஙனமே!
கொனஷ்டை என்ற வார்த்தையை உபயோகப்படுத்திதிருக்கிறேன் பாருங்கள். இதுக்குப் பெயர் தான் கொனஷ்டை! ...
நீக்குகிட்டத்தட்ட எக்குத்தப்பாக என்று பொருள் கொள்ளலாம்.
நீக்குகொனஷ்டை என்ற பெயரில் கலைமகள் பத்திரிகையில் எழுதிய ஒரு எழுத்தாளரே இருந்தார். ஸ்ரீனிவாசச்சாரி என்பது இவர் பெயர். உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்தார் என்று நினைவு.
கொனஷ்டை என்கிற வார்த்தையை நானும் என் பதிவுகளில் அவ்வப்போது உபயோகித்திருக்கிறேன். எங்கள் வீடுகளில் சகஜமாக புழங்கும் வார்த்தை. குறிப்பாக கே ஜி ஜவர்லால் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை.
நீக்கு//கொனஷ்டை என்ற பெயரில் கலைமகள் பத்திரிகையில் எழுதிய ஒரு எழுத்தாளரே இருந்தார். ஸ்ரீனிவாசச்சாரி என்பது இவர் பெயர். உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்தார் என்று நினைவு.//
இது புதிய தகவல் எனக்கு.
உங்களின் இந்த 'மாமனார் மாமியாரைப் பார்த்து' கேள்வியை ஃபேஸ்புக்கில் ரெஃபர் செய்திருக்கிறேன்!!!
நீக்குஅப்படியா?... ;))
நீக்குசில நேரங்களில் குறும்பு என்ற அர்த்தத்திலும் கொனஷ்டை வார்த்தை வரலாம். தஞ்சை மண் மணம் தான். இருந்தாலும் கீதாம்மா வந்தால் புகுந்த வீட்டுப் பெருமையில் தெளிவு படுத்துவார்.
நீக்குகொனஷ்டை அர்த்தம் வேறே! குறும்பு முழுக்க முழுக்க வேறே! கண்ணன் செய்தது எல்லாம் குறும்பு. கொனஷ்டை இல்லை.
நீக்குஹாஹா, கொனஷ்டை வேறே, குறும்பு வேறேனு பதில் கொடுத்திருந்தேனே! வழக்கம் போல் காணோம். அல்லது ஏணிமலை பூதம் தான் வந்து விழுங்குகிறதோ? தெரியலை. என்னொட மெயில் பாக்ஸில் இருப்பதால் நாளைக்கு வந்து காப்பி, பேஸ்ட் பண்ணிப் பார்க்கணும். :)))
நீக்குபனித்திரை படத்தில் - ஒரு பாடல் : (மருமகன் பாடுவது போல ) " மாமியாளுக்கு ஒரு சேதி .. " (நீகுழாய் சுட்டி : https://youtu.be/77rdzZSsJ7w )
நீக்குFace book ல் பரீட்சைக்கு நேரமாச்சு படத்தில் மாமியார் பாடுவதுபோல வரும் பாடல் ஒன்றை நண்பர் ஸ்ரீவத்ஸன் குறிப்பிட்டுள்ளார். "எங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நீ..". மாமனாரைப் பார்த்து பாடாவிட்டாலும் கொஞ்சம் நெருங்கி வருகிறது! இதே படத்தில் வரும் " ஒரு ஓசையின்றி மௌனமாக" பாடல் நன்றாய்ப் பொருந்தும்.
நீக்குமுதல் பாடல் கேட்ட நினைவில்லை. இரண்டாம் பாடல் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குசூழல் காரணமாக யாருடைய வலைப்பதிவுகளையும் படிக்க இயலவில்லை. விரைவில் தொடர்ந்து வருவேன்.
வாங்க வெங்கட்... ரசித்ததற்கு நன்றி.
நீக்குஇரு பாடல்களும் எப்போதோ ஓரிரு முறை கேட்டது.
பதிலளிநீக்குநினைவுக்கு வரவில்லை. காணொளியில் கேட்டதற்பின்பு எங்கோ எப்போதோ கேட்ட நினைவு வந்தது
சரிதான். ஆச்சர்யம். முதல் பாடலையாவது இப்படி சொல்லலாம். இரண்டாம் பாடல் பலபேர்களின் மனம் கவர்ந்த பாடலாச்சே!
நீக்குசும்மா சொல்லக் கூடாது. பிடித்த விஷயங்களை பிரமாதமாகத் தான் எழுதுகிறீர்கள். எல்லாத்திலும் ஒரு நேக் இருக்கிறதல்லவா? எழுதுவதில் அந்த நேக் உங்களுக்கு வசப்ப்பட்டிருக்கு. பலே பாண்டியா!
பதிலளிநீக்கு(குஷி வந்து விட்டால் பாரதியார் இப்படித் தான் உரத்த குரலில் பாராட்டுவாராம்.)
இந்தக் கருத்து நெல்லையைப் பார்த்து சொல்லப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் இரண்டாவது வரி படிக்கும்போது நெல்லை அவ்வளவு தொடர்ந்து சமீபத்தில் எழுதவில்லையே என்றும் தோன்றுகிறது. சற்றே குழப்பத்துடன் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு நன்றி சொல்லி விடுகிறேன்!!
நீக்குஉங்களின் இந்தப் பதிவைப் படித்துத் தான் இப்படிச் சொல்லத் தோன்றியது.
நீக்குஅந்நாளைய குமுதம் போல ஒரு பத்திரிகையப் பிரித்துப் படிக்கிற அனுபவம் கிடைத்தது.
அப்போ அதிகாரபூர்வமா ஒரு நன்றியைப் போட்டுக்கறேன்!!
நீக்குஇது நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்திகாவின் மாமனார் அவர் மாமியாரை பார்த்து பாடும் பாடல்!:)
பதிலளிநீக்குஇது நடிகர் அபிநய்யின் அப்பா, விஜய சாமுண்டீஸ்வரியின் கணவர் கோவிந்தா ராவ்வின் மாமனார், மாமியார் நடித்த படைப்பு பாடல்..!!!!!!!!!!!!!!!!!
உன்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ!!!!!!!!
பிரமாதம் ஸ்ரீராம்.