புதன், 8 நவம்பர், 2023

" BC சார் கூப்பிடுகிறார்"

 

கீதா சாம்பசிவம்: 

ஓட்டல் தொழில் பிராமணர்கள் கைகளில் மட்டும் இருந்தது உண்மையா? {எனக்குத் தெரிந்து அப்படிப் பார்த்தது இல்லை. சின்ன வயசிலேயே பிராமணர் அல்லாதோரின் ஓட்டல்களையும் பார்த்திருக்கேன்.}

# பிராமணர்கள் ஓட்டல் தொழிலில் அதிகம் ஈடுபடாத காலம் ஒன்று இருந்தது.  1940 அதற்கு முன். காரணம்  " அன்னத்தை விலைக்கு விற்பது தவறு " என்ற எண்ணம் அப்போது பரவலாக இருந்தது.  இலவச உணவு சிறந்த தர்மம் என நம்பப்பட்டதால்தான் " தானத்தில் சிறந்தது அன்னதானம் " என்று சொல்லப் பட்டது. அன்ன சத்திரங்கள் ஊர் தோறும் இருந்தன . கோயில் பிரசாதங்களை உண்டு வறியோர் பசியாறினர். இந்த கால கட்டத்தில் ஐயர் கடை மிகச் சொற்பம். நான் இருந்த முத்துப் பேட்டையில்1946-47-ல் அழகப்ப தேவர் காபி ஓட்டல் ஒன்று மட்டுமே இருந்தது !!  

புரோகிதம் , ஜோசியம் தவிர, ஆசிரியர், அரசுப்பணியை விட்டால், ' பிராமணாள் காபி கிளப் ' நடத்துவது ஒன்றுதான் சுலபம் என்று ஆனதால் ஆடம்பரம் இல்லாத எளிய காபிக் கடைகள் ஆங்காங்கு முளைத்தன.  மங்களாம்பிகா, வெங்கடா லாட்ஜ் என்று ஒரு இமேஜ் உருவானது.  

எனவே, நான் அறிந்தவரை ஓட்டல் தொழிலில் பிராமண ஆதிக்கம் என்பது  இருந்ததில்லை.  ஊருக்கு ஒன்றிரண்டு ஓட்டல்கள் மட்டும் இருந்த காலம் அது.  அசைவ உணவகங்கள் கூட அவ்வளவு அதிகம் கிடையாது. எனவே போட்டி ஆதிக்கம் எல்லாம் அறியப்படாத ஒன்று. 

பிராமணாள் என்ற  வார்த்தையை நீக்க பெரியார் போராட்டம் செய்தது உண்மை.

& நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். எல்லா ஊர்களிலும் எல்லா ஜாதியினரும் ஹோட்டல் தொழில் அந்தக் காலத்திலிருந்து நடத்தி வருகிறார்கள். நாகையில் இருந்தவரை வீட்டிற்கு அருகிலேயே இருந்ததால், சங்கர ஐயர் காபி கிளப், வைத்தா ஹோட்டல் போன்றவைகளில் எப்பொழுதாவது டிஃபன் சாப்பிட்டது உண்டு. 

ஓட்டல் நடத்திப் பிரபலமானவர்கள், பணம் சேர்த்தவர்கள் உண்டா? கொஞ்ச நாட்கள் ஓட்டல்கள் ஓடும். பின்னர் பெரும்பாலும் டல் அடிக்கும் இல்லையா?

# உட்லண்ட்ஸ், தாசப்ரகாஷ், ரொம்ப பிரபலமாக இருந்த காலம் ஒன்று உண்டு. "எதுவும் கடந்து போம் " விதி எதற்கும் பொருந்தும். 

& இதிலும் நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். சிற்றூர்களில் ஓட்டல் நடத்தி பெரிதாக சம்பாதித்தவர்கள் யாரும் கிடையாது. 

சென்னையில் எந்த ஓட்டலில் சாப்பாடு/டிஃபன் நன்றாக இருக்கும்?

# சென்னை இல்லை, எல்லா ஊர்களிலும் உணவு ஐட்டங்கள் தரம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆகிவிட்டது. 

& 1972 காலத்தில், நான் பீச் ஸ்டேஷன் அருகில் உள்ள அசோக் லேலண்ட் சிட்டி ஆபீஸில் பணிபுரிந்த சமயத்தில், காலை உணவு பீச் ஸ்டேஷன் VLR ஸ்டால் - மதியம் சாப்பாடு அருகில் இருந்த பெயர் இல்லாத செட்டிநாடு உணவகம் ஆகியவற்றில் சாப்பிட்டது உண்டு. பீச் ஸ்டேஷன் சிற்றுண்டி நன்றாக இருக்கும். மொத்தத்தில் 25 பைசாவுக்கு வயிறு நிரம்பிவிடும். செட்டிநாடு உணவு விடுதியில் சாப்பாடு 75 பைசா. நன்றாக இருந்தது. 

பிற்காலங்களில் # சொல்வதுபோல - எல்லாம் ஒரே மாதிரி. 

நக்ஷத்திர உணவு விடுதிகளுக்குப் போயிருக்கீங்களா? அங்கே உள்ள உணவின் தரத்துக்கும் சாதாரண ஓட்டல்களின் உணவுத் தரத்துக்கும் வேறுபாடு கண்டது உண்டா?

# நட்சத்திர விடுதிகளில் சுத்தம் இருக்கும். சுவை இராது.  

& எந்த ஸ்டார் ஹோட்டலுக்கும் என்னுடைய காசு கொடுத்து போனது இல்லை. கம்பெனி சார்பில் டூர் செல்லும்போது அவர்களே ஏற்பாடு செய்யும் ஸ்டார் ஹோட்டல் வாசம், டிஃபன் , சாப்பாடு எல்லாம் சாப்பிடவேண்டி வரும். ஸ்டார் ஹோட்டல்களில் சுத்தம் இருக்கும், சுவை இருக்காது என்பது உண்மை. 

ஓட்டலுக்குப் போனால் நீங்கள் முதலில் எதை ஆர்டர் செய்வீர்கள்? அல்லது பெரும்பாலும் இட்லி, வடை, சட்னி, சாம்பார்தானா?

# நான் ஆர்டர் செய்வது முதலில் பஜ்ஜி அல்லது வடை.  பின்பு தோசை அல்லது பரோட்டா. 

& நாகையில் : ருசிக்காக சாப்பிட்ட காலம் : பூரி மசாலா, ரவா தோசை. 

சென்னையில் : பசிக்காக சாப்பிட்ட காலத்தில் : இட்லி வடை சாம்பார். செட் தோசை. 

பெங்களூரில் : பூரி மசாலா, பொங்கல் வடை. 

அடையார் ஆனந்த பவன் ஓட்டலில் சாப்பிட்டது உண்டா? இப்போ எல்லோரும் அங்கே போகக் கூடாது எனச் சொல்லுவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

# ஆனந்த பவனில் பல முறை சாப்பிட்டு இருக்கிறேன். சாப்பாடு சுமார். டிபன் ok. இனம் மதம் அரசியல் சார்பு காரணமாக ஓட்டலை புறக்கணிப்பது முட்டாள்தனம்.

& குரோம்பேட்டையில் அடையார் ஆனந்த பவன் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அங்கே அடிக்கடி டிஃபன் சாப்பிட்டது உண்டு. விலை அதிகம் என்றாலும் ஓரளவுக்கு நல்ல தரம் இருக்கும். அங்கே போக வேண்டாம் - இங்கே போக வேண்டாம் என்றெல்லாம் சொல்வது சரியில்லை. நமக்கும், நாக்குக்கும் பிடித்திருந்தால், எங்கே வேண்டுமானாலும் பிடித்ததை சாப்பிடலாம். 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

நாம் இப்போது மிகவும் தொட்டாசுணுங்கி ஆகி விட்டோமோ? உ.ம் Boycot A2B, boycot Nalli...

# அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படும் மலிவான பிரசாரங்களை எளிதாக அங்கீகரித்து விடுகிறோம். அதன் விளைவு ஓவர் ரியாக் ஷன் . 

$ Familiarity breeds contempt. ( பரிச்சயம் அவமதிப்பை வளர்க்கிறது) 

& பாய்காட் - எல்லாம் facebook போன்ற தளங்களில் மட்டுமே. வேறு எங்கும் இதற்கெல்லாம் தாக்கம் (impact) கிடையாது. 

= = = = = =

KGG பக்கம் : 

JTS அனுபவங்கள் தொடர்கின்றன. 

தமிழ் தவிர மற்ற எல்லா பாடங்களும் ஆங்கிலத்தில் என்பதை முன் பதிவுகளிலேயே சொல்லியிருந்தேன். 

workshop  பகுதிக்கு சென்றால் - அங்கே முழு ஆங்கிலம் தெரிந்த ஆசிரியர்கள் யாரும் இல்லை. ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி - தமிழ் அதிகமாகப் பேசுபவர்களே அதிகம். 

முதல் வகுப்பு fitting கிளாஸ் சென்றோம். எல்லோருக்கும் ஒரு 4 அங்குல சதுர வடிவ கால் அங்குல கனம் உள்ள இரும்பு பிளேட் கொடுத்தார்கள். ஒரு file கொண்டு அதை ஒழுங்கான சதுரமமாக ராவ வேண்டும். 

ஆசிரியர் டேவிட் - மிகவும் வயதானர் - கிட்டத்தட்ட ஓய்வு பெறும் வயது. அவர் file ஐ எப்படிப் பிடித்து எப்படி ராவ வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். முதல் நாள் வகுப்பில் நான் அவரிடம் ஏதோ சந்தேகம் கேட்க அவரிடம் போய், அவரை ' தாத்தா' என்று கூப்பிட்டேன். அவர் சிரித்தபடி, "அப்படி கூப்பிடக் கூடாது. சார் என்றுதான் கூப்பிடவேண்டும் " என்றார். பிறகு எல்லோரையும் சார் என்று கூப்பிடத் தொடங்கினேன். 

carpentry பகுதியில் பிரதம ஆசிரியராக இருந்தவர் கடுமையான முகத்தோடு, கட்டைக் குரலில் அதிகாரமாகப் பேசுபவர். பாலிடெக்னிக் மாணவர்கள் எங்களிடம் அவர் பெயரை BC என்று சொல்லியிருந்தனர். நாங்களும் அதுதான் அவர் பெயர் என்று நினைத்து அவரை அப்படியே குறிப்பிட்டு வந்தோம். 

ஒருநாள் fitting பகுதியில் வேலை செய்துகொண்டிருந்தபோது BC சைகை மூலமாக என்னுடைய வகுப்பு பாலுவைக் கூப்பிட்டார். பாலு உடனே fitting டேவிட் சாரிடம் சென்று - " சார் - என்னை BC சார் கூப்பிடுகிறார். போய் என்ன என்று கேட்டு வருகிறேன் " என்றான். 

டேவிட் சாருக்கு ஒன்றும் புரியவில்லை. " பி சி சாரா - யார் அது? " என்று கேட்டார். பாலு உடனே தூரத்தில் உட்காரந்திருந்த carpentry ஆசிரியரைக் காட்டி - அதோ உட்கார்ந்திருக்கிறாரே - அவர்தான் சார் பி சி சார் " என்றான். 

டேவிட் சார் புன்னகையுடன், " சரி, சரி - போய் என்ன என்று கேட்டுவிட்டு வா. அப்படியே அவர் பெயர் என்ன என்று கேட்டு என்னிடம் வந்து சொல்லு " என்றார். 

பாலு பி சி யிடம் போய் பேசி, அவர் கேட்ட சில விஷயங்களுக்கு பதில் சொல்லி, பிறகு அவரிடம் ' சார் உங்கள் பெயர் என்ன என்று டேவிட் சார் கேட்கச் சொன்னார்'  என்றான். 

அவர், "என் பெயர் சவரிமுத்து - அது டேவிட் க்கு தெரியுமே" என்றார். 

பிறகு டேவிட் சார் அங்கே சென்று பாலு கூறிய பெயரை அவரிடம் சொன்னார். சவரிமுத்து  பாலுவிடம், " என் பெயர்  BC என்று யார் சொன்னது?" என்று கேட்டார். பாலிடெக்னிக் சீனியர் மாணவர் ஒருவர் சொன்னார் என்று பாலு சொன்னான். 

அப்புறம்தான் விவரங்கள் எங்களுக்குத் தெரிந்தது - சீனியர் மாணவர்கள் வைத்த 'பட்டப் பெயர்தான் BC' என்று. அதாவது 'Bachelor of Carpentry' என்று சவரிமுத்து சாருக்குப் பட்டப் பெயர் அளித்திருந்தனர் சீனியர் மாணவர்கள்! 

அன்றிலிருந்து ஒவ்வொரு workshop வகுப்புக்கும் செல்லும்போது எங்களை அந்தந்த ஆசிரியர்கள், பேரனைக் கொஞ்சும் தாத்தாக்கள் போல, ' என் பெயர் என்ன? ' என்று கேட்டார்கள்! 

நாங்கள் ஜாக்கிரதை ஆகிவிட்டதால் பட்டப் பெயர்களை வெளியே சொல்லவில்லை. 

அப்போது இருந்த சில பட்டப் பெயர்களான "சொக்கப்பனை, பல்லன், சிலிண்டர், empty vessel, workshop சூப்பரின்டென்டண்ட் .. என்ற பெயர்கள் ஞாபகம் உள்ளன. 

= = = = = = =

அப்பாதுரை பக்கம் : 

அப்பாதுரை சுற்றுப் பயணத்தில் இருப்பதால், இந்த வாரம் அவர் பக்கம் அனுப்பவில்லை. மற்ற வாசகர்கள் தங்கள் எண்ணங்களை வாசகர் பக்கத்துக்கு எழுதியனுப்பவும். 

= = = = = = = = =


65 கருத்துகள்:

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று..

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. அடுத்த உயிர்களுக்கு உணவு வழங்குவது பாரதத்தில் கலாச்சாரம்..

    இது சுவாசத்துடன் கலந்திருப்பது..

    மாற்றார் கல்வியினால் மதியிழந்தோம்..

    பதிலளிநீக்கு
  5. இன்றைய உணவகங்களுக்கு முன்னோடி சத்திரங்கள்..

    இவற்றுக்கு சத்ர யாகம் எனப்பட்ட அன்னதானம் அடித்தளம்..

    பரமாச்சார்யார் அவர்களது தெய்வத்தின் குரல் வாசிக்கவும்..

    பதிலளிநீக்கு
  6. சிலவகையினர் தமது வசதிக்கு ஏற்ப நமது நெறிகளை மாற்றி எழுதி வைத்து விட்டனர்..

    பதிலளிநீக்கு
  7. சில வருடங்கள் கழிச்சு காலை நேரம் வருவதால் அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். அனைவருக்கும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமையப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சில வருடங்கள் கழிச்சு காலை நேரம் வருவதால்// இது வரை காலை நேரம் (விடியல்) வரவே இல்லையா?

      நீக்கு
    2. காலைநேரம் விடியல் இல்லையா?..

      ஏதோ தீஞ்சு போன வாடை வருது!..

      நீக்கு
    3. அதான் விடியலே இல்லையே இப்போச் சில வருடங்களாக. இனித் தான் விடியணும். :(

      நீக்கு
  8. இப்போது உள்ள மக்கள் மனோநிலை விசித்திரமாக உள்ளது. என் கேள்விகளுக்குப் பதில் அளித்தமைக்கு எ.பி. ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றி. நல்லியையும் தவிர்க்கச் சொல்கிறார்களா? ஏன், என்ன காரணம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லையே! சென்னை சங்கீத சீசன் நேரத்தில் - நல்லி செட்டியார் அளவுக்கு சங்கீத வித்வான்களுக்கும் சங்கீதத்துக்கும் செய்பவர்கள் யாரும் இல்லை.

      நீக்கு
    2. //நல்லியையும் தவிர்க்கச் சொல்கிறார்களா? ஏன், என்ன காரணம்?// நல்லி தீபாவளி விளம்பரத்தில் இருக்கும் பெண்கள் பொட்டு வைக்காமல் இருப்பதற்காக இந்த கோபம். ரமதான், கிருஸ்துமஸ் போன்ற பண்டிகைக்கால விளம்பரங்களில் வரும் பெண்கள் பொட்டு வைத்துக் கொள்ளாமல் இருக்கலாம், தீபாவளி என்பது ஹிந்துக்களுக்கான பண்டிகை. அதற்கான விளம்பர படத்தில் வரும் பெண் புடவை அணிந்து கொண்டு, பொட்டு வைத்துக் கொள்ளாமல் இருக்கலாமா? என்பது கேள்வி.

      நீக்கு
    3. இரண்டு வருடங்களுக்கு முன்பு தனிஷ்க் ஜுவல்லரி விளம்பரத்தில் இப்படி பொட்டு வைத்துக் கொள்ளாத படம், அதுவும் திருமணத்திற்கான விளம்பரம் வந்த பொழுது, பலர் எதிர்ப்பு தெரிவித்து, பின்னர் க்ராஃபிக்ஸ் முறையில் பொட்டு வைத்தார்கள்.

      நீக்கு
    4. இந்துப் பெண்கள் தான் ஊசி நுனியால்
      தொட்டு குங்குமம் வைத்துக் கொள்கின்றார்களே!.

      நீக்கு
    5. பொட்டு வைத்த முகமோ?
      கட்டி வைத்த குழலோ ?
      என்று கேட்டால் - இப்போ இரண்டையும் காண முடிவதில்லை!

      நீக்கு
  9. மகாபாரதம் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  10. அப்பாதுரை பக்கம் இல்லாமல் வெறிச். கேஜிஜி அவர்களின் பி.சி. சார் பற்றிய விபரங்கள் அருமை. ஆசிரியர்கள் யாருமே இதைத் தெரிந்து கொண்ட பின்னரும் கோவிக்காமல் இருந்தது மிகச் சிறப்பு. எனினும் கேஜிஜி சாரின் எழுத்தில் இன்று விறுவிறு குறைச்சல்.

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம் மறுபடி ஏதானும் பக்திச் சுற்றுலா போயிருக்காரா?

    பதிலளிநீக்கு
  12. ஆதியில் அறமாக இருந்த உணவு வழங்கும் பண்பு தான் உணவகத் தொழிலாக மாற்றப்பட்டது..

    அறமாக இருந்த கல்வி வணிகமாக மாற்றப்பட்டதைப் போல!..

    எப்படி?..

    பதிலளிநீக்கு
  13. அன்னம் வழங்குவதிலும் அன்னத்தைப் பெறுவதிலும் பற்பல நியதிகள் இருக்கின்றன..

    பதிலளிநீக்கு
  14. இரவு உறக்கத்துக்குப் பின் (!?) காலையில் எழுந்ததும் குளித்து விட்டு அடுத்த வேலையைச் செய்யும் பழக்கமுடையோர் சமைக்கும் உணவே உணவு!..

    எது நடந்தாலும் துடைத்து விட்டுச் செல்லும் வழக்கம் நமது கலாச்சாரத்துக்கு ஏற்புடையது அல்ல..

    அதனால் தான் அந்தக் காலத்தில் வீட்டுக்கு வெளியில் சாப்பிடுவதை ஏற்றுக் கொள்ளவில்லை..

    பதிலளிநீக்கு
  15. இரவு உறக்கத்துக்குப் பின் (!?) காலையில் எழுந்ததும் குளித்து விட்டு அடுத்த வேலையைச் செய்யும் பழக்கமுடையோர் சமைக்கும் உணவே உணவு!..

    எது நடந்தாலும் துடைத்து விட்டுச் செல்லும் வழக்கம் நமது கலாச்சாரத்துக்கு ஏற்புடையது அல்ல..

    அதனால் தான் அந்தக் காலத்தில் வீட்டுக்கு வெளியில் சாப்பிடுவதை ஏற்றுக் கொள்ளவில்லை..

    பதிலளிநீக்கு
  16. உணவு வழங்குதல் முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்று..

    பதிலளிநீக்கு
  17. உணவு வழங்குதல் முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்று..

    பதிலளிநீக்கு
  18. கீதாக்கவின் கேள்விகளுக்கு ஆசிரியர்களின் பதில் சூப்பர். குறிப்பாக ஹோட்டல்கள் விஷயங்களுக்கானவை என் கருத்துகளும் அதுவே.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. பானுக்காவின் கேள்விக்கு - பொதுவாகவே இப்போது சமூகத்தின் ஒரு பகுதி உணர்ச்சிவசப்படுதல் கூடியிருக்கிறது. அது சமூகவலைத்தளங்களும் காரணம் எனலாம். சென்ஸேஷனல் என்று இல்லாததை பற்ற வைப்பது வார்த்தைகளால், நடக்காத ஒன்றை பற்ற வைப்பது...அல்லது ஒரு சாதாரண நிகழ்வைத் தவறாகக் குறிப்பிட்டு பற்ற வைப்பது...என்று.

    என்னைக் கேட்டால் அப்படியான ஒரு பகுதி சமூகத்திற்கு, மக்களுக்குச் சுய சிந்தனை இல்லை என்பேன். மட்டுமல்ல அதீதமான மீடியாக்கள் அதை அளவுக்கு மீறி வெளியிடுதல் என்பதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. முதல் நாள் வகுப்பில் நான் அவரிடம் ஏதோ சந்தேகம் கேட்க அவரிடம் போய், அவரை ' தாத்தா' என்று கூப்பிட்டேன். //

    சிரித்துவிட்டேன்....

    டேவிட் ஸார் ரொம்ப அன்பான தாத்தா போல ஓ ஸாரி டைப்பு ஸ்லிப்பு!!! ஸார் போலருக்கு!!!!

    ஒவ்வொரு ஸாரும் தங்கள் பெயர் என்ன என்று கேட்டதும் புன்னகைக்க வைத்தது....சுவாரசியமான அனுபவங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
  21. படிக்கும் காலத்தில் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல சக மாணவர்களுக்குள்ளும் பட்டப்பெயர் வைப்பது உண்டு. என்னுடைய 8ஆம் வகுப்பு ஆசிரியர் "புடலங்காய்". 9ஆவது வகுப்பு ஆசிரியர் "சபக் டிஜின்" பெயர் காரணம் அறிந்தால் வருத்தப்படுவீர்கள்.

    நான் சிறுது காலம் ஒரு பள்ளியில் தாற்காலிக ஆசிரியராக இருந்தபோது என்னுடைய பட்டப்பெயர் "பையன் வாத்தியார்"
    Jayakumar

    பதிலளிநீக்கு
  22. பிராமணர்கள் வீட்டு சாப்பாடு சுவையாகத்தான் இருக்கும்.

    Kgg பட்டப் பெயர்கள் ரசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செட்டியார்கள், சைவ பிள்ளைமார்கள் வீட்டு சமையலும் சுவையாகத்தான் இருக்கும்.

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  23. தீண்டாமையே இருந்ததில்லை என்பது போல் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  24. பிராமனாள் காபி கிளப் + எம்.ஆர்.ராதா சம்பந்தப்பட்ட ஒரு சுவையான விஷயம் உண்டு. அதை சுகி சிவம் உரைகளில் தேடி கேட்டுக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  25. கேள்விகளும் அதற்கான பதில்களும் ரசித்தேன்.

    எல்லாம் இங்கே அரசியல். சின்னச் சின்ன விஷயங்கள் கூட ஊதி ஊதி பெரியதாக ஆக்கப்படுவதும் வேதனையான உண்மை.

    ஆசிரியர்களுக்கான பட்டப்பெயர்கள் - எனது பள்ளி/கல்லூரி கால நினைவுகள் மனதில் வந்து போனது....

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கே வருகிறேன். அனைவரும் நலமாக இருக்க எனது பிரார்த்தனைகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கே வருகிறேன். அனைவரும் நலமாக இருக்க எனது பிரார்த்தனைகள்...// அதே, அதே ! ஆச்சரியம்!!

      நீக்கு
  26. /// தீபாவளி என்பது ஹிந்துக்களுக்கான பண்டிகை ///

    இருக்கலாம்...

    அதற்காக இந்துப் பெண்கள் கும்மாங்குத்து குத்திக் கொண்டு நடனம் ஆடுவது போலக் காட்டுவது கேவலம்..

    அதனால் நெற்றியில் ஏதும் இல்லாமல் பாழ்நெற்றிப் பருவமங்கையாய் வருவதே மகிழ்ச்சி..

    காசுக்குக் காசும் ஆயிற்று..
    கலாச்சாரத்தை சீரழித்தது மாதிரியும் ஆயிற்று..

    பதிலளிநீக்கு
  27. கேள்விக்கு பதில்கள் அருமை.
    கெளதமன் சார் பட்டபெயர்களை பற்றி சொல்லி இருக்கிறார்.
    நாங்கள் பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர்களுக்கு பட்டபெயர் வைத்து இருந்தார்கள் மாணவிகள். அதை ரகசியமாக பேசுவதற்கு பயன்படுத்தி கொள்வார்கள். ஆசிரியர்களுக்கும் தெரியும் ஆனால் கண்டு கொள்ளவில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!