திங்கள், 6 நவம்பர், 2023

"திங்க"க்கிழமை  : ப்ரெட் ஆலு, பயத்தம் பருப்பு கோலா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

ப்ரெட் ஆலு, பயத்தம் பருப்பு கோலா(evening snack)





தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு  - 1 கப்

உருளைக் கிழங்கு(மீடியம் சைஸ்)  - 2

ப்ரெட் ஸ்லைஸ்      -  4

பெரிய வெங்காயம்   -  1

காரப்பொடி  -  1 டீ ஸ்பூன்

உப்பு       -  1 டீ ஸ்பூன்

செய்முறை:

பயத்தம் பருப்பை குழைய வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.

இவையிரண்டையும் ஒன்றாகக் கலந்து, அதோடு பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து, அதோடு ப்ரெட் ஸ்லைஸ்கள் மற்றும் காரப்பொடி, உப்பு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். 

ப்ரெட் ஸ்லைஸ்களை தண்ணீரில் நனைக்க வேண்டாம், தண்ணீரை தடவி ஈரமாக்கினால் போதும்.  ஓரங்களை நீக்க வேண்டாம். மில்க் ப்ரெட்டாக இல்லாமல்,  சாண்ட்விச் ப்ரெட்டாக இருப்பது நலம்.

பிசைந்த மாவை சிலிண்டர் ஷேப்பில் உருட்டிக் கொள்ளவும். 

அடுப்பில் வாணைலியை வைத்து, எண்ணையை ஊற்றி, எண்ணை காய்ந்ததும் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் நன்றாக இருக்கும். மாலையில் பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகத் தரலாம். விரும்பி சாப்பிடுவார்கள். 



30 கருத்துகள்:

  1. எளிமையான செய்முறை. வடா பாவுக்கும் உபயோகிக்கலாம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜே.கே. சார். முதல் ஆளாக வந்து கருத்திட்டிருக்கிறீர்கள். வடா பாவ் செய்து ஒரு திங்கற கிழமைக்கு போட்டு விடலாம்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் மாலை நேர சிற்றுண்டியாக அறிமுகப்படுத்திய ப்ரெட் ஆலு செய்முறை, மற்றும் படங்களுடன் நன்றாக உள்ளது. என் பேத்திக்கு உ. கி என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் ப்ரெட் அவ்வளவாக பிடிக்காது. இதை சேர்த்து செய்து தந்தால் வித்தியாசம் தெரியாமல் புது உணவாக நல்லதுதானே..! கூடவே புரோட்டின் பயத்தம் பருப்பு. இந்த கலவையை விரும்பி உண்பாள் என நினைக்கறேன். ஒரு நாள் இப்படி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    இது யாருடைய தயாரிப்பு என்பதை நீங்கள் குறிப்பிடவில்லையே? இங்கு முதலாவதாக வந்து கருத்து தந்திருக்கும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் சமையல் பக்குவமென ஊகிக்கிறேன். சரியா? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேர்க்க விட்டுப்போய் இருக்கிறது.  இப்போது சேர்த்து விட்டேன்.  ஆனாலும் லேபிளில் முன்னரே இருக்கிறதே....!   நன்றி அக்கா.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      என் கைப்பேசியில் தெரியவில்லை. அதனால்தான் கேட்டேன். இந்த வாரம் நல்ல சிற்றுண்டி பதிவை தந்த சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. பாராட்டுக்கு நன்றி கமலா.

      நீக்கு
  4. செய்முறை சுலபமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. அருமையானதொரு ஸ்நாக்! சுலபமான குறிப்பு! விரைவில் செய்து பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  6. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. ப்ரெட் ஆலு, பயத்தம் பருப்பு கோலா செய்முறை குறிப்பும், படங்களும் அருமையாக இருக்கிறது. எளிதான செய்முறை.
    குழந்தைகளுக்கு சத்து மிகுந்த மாலை நேர சிற்றுண்டி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. சிறப்பு.. எளிமையான செய்முறை..

    நன்று..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  10. நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்கு பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  11. பானுக்கா சூப்பர். ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. அதுவும் உருட்டி பொரித்த ஷேப் அட்டகாசம். சப்பிட ஈர்க்கிறது.

    இது நீங்க கோலான்னு சொல்லிருக்கீங்க....நான் இதை கோஃப்தா என்று இப்படி நீளமா இல்லாம உருட்டி பால்னு என் மகனுக்குச் செய்து கொடுத்திருக்கிறேன். ஆனா அது எப்படிச் செய்தேன்னு கீழ அடுத்த கருத்தில்

    கீதா

    பதிலளிநீக்கு
  12. நாம ஒன்று செய்ய நினைச்சு அது ப்ராஸஸ் மிஸ் ஆகும் போது புது டிஷ் கிடைக்கும் அப்படி நான் செய்தது. நான் கோல்மால் என்று சொல்வேன்.

    பல வருஷங்களுக்கு முன்ன நான் மாமியார் கோசுமல்லி செய்வாங்க. அது நான் முன்னர் சாப்பிட்டதில்லை அப்படி கொஞ்சம் வித்யாசமா சாலட் செய்ய லாம் என்று பயத்தம்பருப்பு ஊற வைச்சேன். உருளைக் கிழங்கு ரொம்ப வேகாமல் அதே சமயம் நீளமாகக் கட் செய்து கொஞ்சம் பொரித்து சேர்க்கலாம்னு அதுவும்...திடீர்னு சந்தேகம். கோசுமல்லிக்கு பயத்தம் பருப்பு ஊற வைத்ததை அப்படியே போடுவாங்களா இல்லை வேக வைச்சுப் போடுவாங்களான்னு. குக்கர்ல எல்லாத்தையும் வேக வைக்க கடைசில எல்லாம் குழைந்து வந்தது உகி பப. என்ன செய்ய? என்று யோசனை. இத எப்படிக் கெட்டியாக்குவதுன்னு. மகனுக்கு அன்று மதியம் சான்ட்விச் கொடுத்துவிட்டது போக உப்பு ப்ரெட் (அப்போதெல்லாம் சான்ட்விச் ப்ரெட்னு கிடைக்காது. பேக்கரியில் உப்பு ப்ரெட்னு வாங்க வேண்டும். ) உப்பு ப்ரெட் இருக்க அதில் சில ஸ்லைஸ்களை மிக்சியில் போட்டு ஓட்டி பொடியாக்கிக் கொண்டு போட்டு சாலட்டுக்கு நறுக்கி வைத்திருந்த வெங்காயம் இஞ்சி, கொத்தமல்லி எல்லாமும் போட்டு கலந்தேன். உருட்டும் அளவில் இருந்தது. உள்ளே சீஸ் வைத்து அப்படியே பால்ஸாகப் போட்டு பொரித்து எடுத்துவிட்டேன். பால்ஸ் / கோஃப்தான்னும் சொல்லிக்கலாம்.

    அதன் பின் இதிலிருந்து தோன்றிய மற்றொரு ஐடியா...அட இதே பால்ஸை கோஃப்தா கிரேவி செய்துவிடலாமேன்னு அப்படியும் செய்தேன்.

    அடுக்களை விஷயங்களிலும் ஆர்வமும் கற்பனையும் இருந்தால் இப்படித் தவறுகளில் இருந்து பிறக்கும் புது வகை ஏராளம். அப்படித்தான் நான் நிறைய கற்றுக் கொண்டேன். நம் வீட்டில் எதுவுமே வேஸ்ட் ஆகாது. புது புது அவதாரங்கள், மேக்கப் போட்டு ஃபேன்ஸி ட்ரெஸ் போட்டு வந்துரும்!!!! ஹாஹாஹாஹா... நெல்லை இதை வாசித்துவிட்டு ..."ஆ! கீதா ரங்கன் ...கா வீட்டுக்குப் போலாம்னு எப்பவாச்சும் அகஸ்மாத்தா நினைச்சா கூட இப்ப ரொம்ப யோசிக்கணும் போல இருக்கேன்னு!!!!!"

    யோசிங்க யோசிங்க....நல்ல்ல்ல்ல்ல்ல்லாஆஆஆஆஆஅ யோசிங்க!!

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், பல சமயங்களில் சொதப்பல்கள் சூப்பர் ரெஸிபியாகிவிடும், ஆனால் மூலத்தை சொல்லக் கூடாது :))

      நீக்கு
  13. காணாமல் போச்சு ஒருகருத்து பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் கருத்து....நெல்லைய வேற இழுத்திருந்தேன்...அதனால கண்டிப்பா பிடிச்சுகொண்டாந்து போடணும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. பானுக்கா, நீங்க இப்ப போட்டுருக்கறத பார்த்ததும் ....செய்துவிட வேண்டும் என்று தோன்றுகிறது. ரொம்ப வருஷம் ஆச்சே!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. நாங்க சிவி.வி.ராமன் நகரில் தங்கி இருந்தப்போ தினம் மாலை இது தான் அதிகம் சாப்பிடுவோம். பல புதிய தின்பண்டங்கள் ப்ரெடில் செய்து பொரித்து எடுத்தது சாப்பிட்டுப் பார்த்திருக்கோம். உ.கி. ஸ்டஃப் செய்த ப்ரெடைல் பஜ்ஜி மாவில் தோய்த்தும் எMண்ணெயில் பொரித்தும் பண்ணி இருக்கேன். எண்ணெய் குடிக்கும் என்பதோடு ரொம்பவே ஹெவியாகவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  16. சில/பல மாதங்கள் கழிச்சு இன்னிக்கு ப்ரெட் வாங்கி இருக்கார். உ.கி. அல்லது கொ.ம.சட்னி வைச்சு சான்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்னு எண்ணம்.

    பதிலளிநீக்கு
  17. நான் அதை ப்ரெட் போண்டா என்பேன். கொஞ்சம் ஹெவிதான். நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!