வியாழன், 2 நவம்பர், 2023

மெதுவாய் பையை தோளில் மாட்டி.. மெட்ரோ ரயிலில் இடம்பிடித்து

 எனக்குப் பிடித்த சில பட க்ளைமேக்ஸ்கள் பற்றி அவ்வப்போது 

சத்தியத்தையே வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் கடைப்பிடிக்கும் சத்யமூர்த்தி.  சோதனையாக அவன் வாழ்நாள் இளமையிலேயே முடிகிறது.  இது கதாசிரியரின் (வழக்கமான) வக்ரம்!  பாசிட்டிவாக காட்டி விட்டால் மனதில் ஒன்றும் நிற்பதில்லையே...  படம் ஓடாதே...


மக்களும் தங்கள் வாழ்வில் நிகழ்த்த முடியாத ஃபேன்டஸிகளைத்தானே பார்க்க, ரசிக்க விரும்புகிறார்கள்..  தினசரி வாழ்வில் நிகழ்வதையே திரையிலும் பார்க்க போர் அடிக்காதா?!

வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் குழந்தையை தன் குழந்தையாக ஏற்றிருக்கும் அவனிடம் அவன் மனைவி, மந்திரமூர்த்தி, வில்லன் கம் நண்பனின் தூண்டுதலால் இறுதிப் படுக்கையில் இருக்கும் ஜெமினியிடம் கேட்கும் கேள்வி ''உன் மகனாயிருந்தால் இப்படி பாதுகாப்பு செய்யாமல் போவாயா?"  ( அப்படீன்னு நான் கேட்கலை..  மந்திர மூர்த்தி கேட்கிறார்..." என்றே சொல்லி ஒவ்வொன்றையும் சொல்லும் ஜெயந்தி கடைசி வசனத்தை மட்டும் "அப்படீன்னு மந்திர மூர்த்தி கேட்கலை..  நான்தான் கேட்கிறேன்" என்று உடைந்து அழும் காட்சி) 

மந்திரமூர்த்தியின் ஒரு ஃபிராட் பில்லை பாஸ் செய்தால் இவளுக்கு - இவள் மகனின் வாழ்வுக்கு - 25,000 ரூபாய் இனாம்.  அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. 

சத்தியமூர்த்திக்கு அது ஒரு சத்திய சோதனை.  வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கும் அவன் செய்யப்போகும் ஒரே தவறு, முதல் தவறு.  கடைசி தவறும் கூட.  இதற்கான வசனங்களும் ஷார்ப்.  

பாலச்சந்தர் படங்களில் எனக்கு மேஜர் சந்திரகாந்த் வசனங்கள் ரொம்பப் பிடிக்கும்.

யதார்த்தத்தைப் பேசுவோம் என்று சொல்லி எம் ஆர் ஆர் வாசு 'சத்யா இவ்வளவு கஷ்டப்படுவதற்கு சீக்கிரம் மேலே போய்விடுவதே மேல்' என்று சொல்கிறார்.  ஜெயந்தி அதிர, வாசு, 'மேலே இருக்கிறவன் கூட இவனை (சத்தியத்தை) அங்கு விரும்பவில்லை போல' என்கிறான்.

ஜெயந்தி ஜெமினியிடம் குமுறிய குமுறலில் ஜெமினி மறுநாள் தலையணைக்கடியிலிருந்து கையெழுத்திடப்பட்ட அந்த ஃபைலை எடுத்து ஜெயந்தியிடம் தருகிறார்.

தாத்தாவின் எண்ணத்தை உடைக்கும் வகையில் மகனிடம் கூட தான் அவன் உண்மையான தந்தை இல்லை என்பதை சொல்லி வைத்திருக்கும் நேர்மை.

அந்தக் கண்களில் சத்தியத்தை மீறி விட்ட தவிப்போடு, தான் அவள் அல்லது தங்கள் குழந்தையை வேற்றுமையாக நினைக்கவில்லை என்பதை நிரூபிக்க படும் தவிப்பு தெரிகிறது.

அதை வாங்கி விட்ட ஜெயந்தி சில கணங்களில் கிழித்து போடும்போது நம்மில் எழும் உணர்வு..

அந்த கடைசி நேர ஒரு சிறு அணைப்புக்காக ஏங்கும், பரபரக்கும் ஜெமினியின் கைகளின் தவிப்பு...

நிஜங்களில் சாத்தியப்படாத விஷயங்களை சினிமாவில் பார்க்கும்போது மனதுக்குள் நின்று விடுகிறது.  நிஜங்களில் சாத்தியப்படாத டூயட்கள், சண்டைக் காட்சிகளை விட, பின்பற்ற முடியாத இது மாதிரி நல்லெண்ணங்கள் மனதில் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

ஆனால் பிற்பாடு யோசிக்கும்போது நேர்மையாக வாழ்ந்தால் இதுதான் கதியா என்றெல்லாம் எண்ணம் வரக்கூடாது.

கிட்டத்தட்ட உண்மையைக் கடைப்பிடிக்கும் இன்னொரு நண்பனும் அல்லல்படுகிறான்.  


அவன்தான் சத்தியமூர்த்தியின் வாழ்க்கையை புத்தகமாக போட  முன்வருகிறான்.  அவன் நண்பர்களும் கடைசியில் திருந்தி நேர்மையாக வாழ முற்படுகிறார்கள் என்பதெல்லாம் சினிமாட்டிக்.  மனதி நிற்கும் காட்சி ஜெயந்தியின் குழந்தையின் எதிர்காலம் பற்றிய தவிப்பும், சத்தியமூர்த்தியின் சத்திய சோதனையும்தான்.
==============================================================================================

ஏகாந்தமாய் 

ஹிமாச்சல் செல்வன் !

- ஏகாந்தன் -

ஆரம்ப வருடத்தில் இன்னொரு வருகை எங்கள் செக்‌ஷனில் ஹிமாச்சல் பிரதேசத்திலிருந்து. ஐந்தடி உயரம்தான். சீனன் போன்ற தோற்றத்தில் –ஆனால் அந்த மங்கோலிய மஞ்சள் நிறமில்லாது- சற்றே பழுப்பாக இருந்தான். டெல்லியின் ஆளை வறுக்கும் கோடையில் அங்குமிங்குமாக அலைந்து திரிந்து நிறைய அடிபட்டவன் போலும். அவனது விறைப்பான முகம், முறுக்கப்பட்டதுபோலிருந்த உடல் இப்படிச் சொல்லியது.  

ஹிமாச்சல் பிரதேசத்தின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன் என்பது பின்னால் பழகுகையில் தெரியவந்தது. பேசும் விதத்தில் ஒரு வேகம், செயல்பாடுகளில் ஒரு சாதுர்யம் தெரியும். கேலி, கிண்டலும் நிறைய அவனிடமிருந்து வரும். அந்தப் பகுதியிலிருந்து வருபவர்களிடம் பொதுவாகக் காணப்படாத, எதிர்பார்க்கமுடியாத குண அதிசயங்கள்!  

கால்களை விரித்தமாதிரித் தரையில் பதித்து, பார்க்க விசித்திரமான அசைவுகளோடு, வேகமாக நடப்பான் தஷி ஷரிங். அப்படித்தான் அவனது பெயர் ரெகார்டுகளில் காணப்பட்டது. ஒரு மாலையில் என்னிடம் பேசிக்கொண்டிருக்கையில்,  இது தன் பெயரல்ல என்றான். 

திடுக்கிட்டேன்.

”அப்படீன்னா வேறு யாருப்பா இது!” என்றேன் அவனுடைய திருவுருவையே சுட்டிக் காட்டி.

”எங்க கிராமத்து ப்ரைமரி ஸ்கூல் வாத்யார் செஞ்ச வேல இது! என் பெயரச் சரியா புரிஞ்சிக்காம அல்லது சொல்லத் தெரியாம தப்பா ரெகார்ட்ல எழுதிட்டாரு. அது அப்படியே தங்கிருச்சு. என்னோட சர்டிஃபிகேட்டுகளில் புகுந்து கூடவே வந்துகிட்டிருக்கு..” ரொம்ப வருத்தப்பட்டான்!

”அப்படீன்ன நிஜமான பேருதான் என்ன!” என்றேன் ஆவல் மிகுதியில்.

அவன் முகம் மலர்ந்தது. ”த்ஸே த்ஸரிங்!” என்றான். “இதுதான் என் பெயர். இப்படித்தான் உச்சரிக்கவேண்டும்!” 

சிக்கல் அதிகமாகுதே…  

குழப்பத்தோடு நான் அவனை நோக்க, ஒரு பேப்பரை உருவி அதில் குண்டுகுண்டாக எழுதிக் காண்பித்தான். (இவனது ஆங்கிலக் கையெழுத்தும் ஸ்டைலாக இருக்கும்.)  Tse Tsering.. நான் ஒரு முறை சொல்லிப் பார்த்தேன். திபேத்தின் ஆதிக்கூறு தென்படுகிறதோ… யாரோ ஒரு லாமாவைப்போல…ம்… சரிதான். இந்தப் பெயர்தான் இவனுக்கு நன்றாகத்தான் இருக்கிறது என நினைத்துக்கொண்டேன்.

அலுவலக வேலை அழுத்தம் தருவதாக, சிக்கல் நிறைந்ததாக இருப்பினும் விரைவில் சரிவரக் கற்றுக்கொண்டு செயல்படவேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவன் த்ஸரிங். மற்ற வடக்கத்தி ஆட்களைவிட சரளமாக, தயங்காமல் இங்கிலீஷ் பேசுவான். ஹிந்தியில் தடுமாறிக்கொண்டிருந்த நான், அவனிடம் நெருங்கிப் பழக அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஒரு மாலையின் லேட்-சிட்டிங்கின்போது அரட்டையே பிரதானமாகப் போய்க்கொண்டிருந்தது. நான் தங்கியிருந்த வாடகை ரூமுக்கு உடனே போய் செய்ய வேண்டிய காரியம் ஏதுமில்லாததால், அவர்களோடு உட்கார்ந்திருந்தேன். வெளியே டாபாவில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போகவேண்டும். எப்போது போனால்தான் என்ன?

அன்று ஏனோ இந்திய கலாச்சாரம், பொதுஜன ரசனை, திரைப்படங்கள் இப்படிப் போய்க்கொண்டிருந்தது அரட்டைக் கச்சேரி.

ஏதும் சொல்லாமல் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவர்களில் சிலர் பொதுவாக சௌத் இந்தியாபற்றி, ஏதேதோ உளறியதாலும், தெற்கு வாழ்க்கைபற்றி என்னைக் கொஞ்சம் பேசவைக்க முயற்சித்தது போலவும் தெரியவர, ஒரு கட்டத்தில் நான் தீவிரமாக உள்ளே நுழைய நேர்ந்தது. தென்னிந்திய கலாச்சாரம்பற்றி சரியான புரிதல் இல்லாமல் பொத்தாம்பொதுவாக கேலி செய்வதுபோல் ஓரிருவர் பேசியது எரிச்சலை மூட்டியிருந்த பின்னணியில், வட இந்தியாவில், குறிப்பாக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களின் ஜனரஞ்சக இசை இரைச்சலானது, இனிமையற்றது, ஆட்டபாட்டங்களும் அல்பம், அபத்தம் என்று புகுந்து தாக்கினேன். ஹிந்திப் படங்கள் பல. தெற்குப்பகுதிப் படங்களோடு ஒப்பிடப்படுகையில் கதை சத்தில்லாதவை, ராஜ்கபூர், சஞ்சீவ் குமார், ராஜ்குமார், தேவ் ஆனந்த், நூதன், நர்கீஸ் தத், வைஜயந்தி மாலா போன்றோரின் சில படங்கள் தவிர்த்து மற்றவை சராசரித் தரத்திற்கும் கீழானவை, குப்பை மசாலா என்று பச்சையாக சொல்ல நேரிட்டது. 

இத்தகைய நேரடித் தாக்குதல்களை என்னிடமிருந்து எதிர்பார்க்காத சிலர் பதிலுக்கு சிடுசிடுத்தார்கள்.  மெல்ல முனகியவாறு சிலர் தப்பித்தால் போதும் என விலகிக்கொண்டார்கள். மேலும் கேட்க விரும்பிய சிலருக்கு தென்னிந்திய இசை, நாட்டியம், நாடகம், சினிமா என்று கொஞ்சம் சொன்னேன். அவர்கள் இதுபற்றியெல்லாம் இதற்குமுன் இவ்வளவு கேட்டிருக்கமாட்டார்கள்...

த்ஸரிங்கும் இந்தப் பேச்சை, விமரிசனங்களை கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான் என்பது அவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த விதத்திலிருந்து தெரிந்தது. அவனுக்கும் இந்த விஷயங்கள் அவ்வளவு பரிச்சயமில்லாதவை எனத் தெரிந்தது.  சிலவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டான். அவனுடனான உரையாடலில் கலை, இலக்கியம், பொது ரசனை போன்ற விஷயங்களில் தெற்கு, வடக்கைவிட உயர்ந்திருப்பதாக நான் அழுத்திச் சொன்ன விதம் அவனுக்குள் எதையோ
தூண்டியிருக்கவேண்டும்..

” சௌத் இண்டியன்ஸ்களுக்கே பொதுவா ஒரு சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உண்டு என்பது நன்றாகத் தெரிகிறது!” என்றான் த்ஸரிங். கோபம் தலைகாட்டியதைப்போலிருந்தது அவன் முகம்.

நானும் சூடாகி உடனே தந்தேன் :  ”தப்பு. அது காம்ப்ளெக்ஸ் இல்லை. நிஜமாகவே இத்தகைய விஷயங்களில் கொஞ்சம் மேலேதான் இருக்கிறோம் நாங்கள்.  உண்மையே அதுதான்! “ என்றேன்.

அவன் என்னை முறைத்துப் பார்க்க, நான் அவன் முகத்தை ஆராய்வதுபோல் கூர்ந்து நோக்கினேன். மேற்கொண்டு எதுவும் பேசாமல், ஃபைல்களை உள்ளே வைத்து அலமாரியை மூடினான்.  சில நிமிடங்களில் கிளம்பிப் போனான். மீதி இருந்த நாங்களும் அன்றையக் கடையை மூடிவிட்டு வெளியேறினோம்.

அடுத்த இரண்டு நாட்களில் அவன் பேசவில்லை. தவிர்க்கிறானோ எனத் தோன்றியது. 'நீ பேசவில்லை என்றால், நானும் பேசப்போவதில்லை ..  அடப் போடா..' என்றிருந்துவிட்டேன். ஆதலால் சம்பாஷணை ஏதும் எங்களிடையே நிகழவில்லை. 

மூன்றாவது நாள் மாலையில் சீனியர்கள் சிலரோடு நான் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அவனும் வந்து சேர்ந்து கொண்டான். சில நிமிஷங்களில் என்னிடம் தனியாக ”அப் டண்டா (tanda) ஹோ கயா?”  (இப்போது குளிர்ந்துவிட்டாயா (கோபம் போய்விட்டதா என்பதற்கான ஹிந்தி சொல்லாடல்) எனக் கேட்டான். நான் மெல்லச் சிரித்தவாறே ஆங்கிலத்தில் சொன்னேன்: ”கூல்.. எந்த பிரச்னையும் எனக்கில்லை..” 

அப்புறம் என்ன… வழக்கம்போல் பேச ஆரம்பித்து நட்பினைத் தொடர்ந்தான் த்ஸரிங்

ஒரு நாள் என்னிடம் பாங்கிங் சர்வீஸில் ப்ரொபேஷனரி ஆஃபீஸர் தேர்வுக்குத் தான் தயாராகிக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.  அவனுக்கு வெளிநாட்டு பயணம், அயல் மண்ணில் வாழ்க்கை என்பதெல்லாம் சரியாக, சுவாரஸ்யமாகப்படவில்லையாம். அடுத்த சில மாதங்களில் தேர்வின் முடிவு வர, அவன் தேர்வாகியிருந்தான்.  ஸ்டேட் பாங்கில் வெளியூர் கிளையொன்றில் ப்ரொபேஷனரி ஆஃபீஸராக சேரப்போவதாகச் சொன்னவன், இரண்டு வாரங்களில் வெளியுறவு அமைச்சக வேலையை ராஜினாமா செய்து வெளியேறிவிட்டான்.

என்னுடைய அடுத்த சில மாதங்களும் ப்ரொமோஷன், ட்ரெயினிங், மாற்றல் எனப் பரபரக்க, வெளிநாட்டு இந்திய அலுவலகத்திற்கு மாற்றலானேன். மேற்கொண்டு தொடர முடியாத நிலையில், அத்தோடு முற்றுப்பெற்றது எங்கள் நட்பு.

================================================================================================

மக்களாட்சி 

தங்கம் வாங்கி ஒளிப்பதில்லை
இப்போதெல்லாம்
பணமாகத்தான் பதுக்கறாங்க
பட்டென்று ஒரு நாள் ராத்திரி
செல்லாதென்று சொன்னாலும்
கொல்லென்று சிரித்து தாங்கள்
கொள்ளையடிக்க பணத்தை
கமுக்கமா கைமாத்திடறாங்க
மக்களும்
வாக்கு சுத்தம் பார்க்கவில்லை
வங்கிக் கணக்கை பார்க்கவில்லை
யோக்கியமா என்றும் கேட்கவில்லை
அவங்க எதுவும் 
யோக்கியமா சேர்க்கவுமில்லை 
என்றே அறிந்தும் -

பாக்கி எதுவும் சரியில்லை
அந்த பாக்கியமும் 
தங்களுக்கில்லை 
என்பதும் உணர்ந்து 
அன்றாடம் வெளியாகும் அதிகபட்ச
ஊழல் செய்திகளை
அதிரடியாய் வெளியாகும்  
ஆக்ஷன் திரைப்படம்
போலவே பார்த்துக் கடக்கறாங்க
மெதுவாய் பையை தோளில் மாட்டி
மெட்ரோ ரயிலில் இடம்பிடித்து
ஆபீஸ் போய் அட்டெண்டென்ஸ் போட்டு
பேருக்கு ரெண்டு ஃபைல் பார்த்து
பக்கத்து சீட் பங்கஜத்தை 
பாங்குடனே நோட்டமிட்டு
வெற்றிலை பாக்கு 
போட்டுத்துப்பி 
சிகரெட்புகை வளையமிட்டு 
ஊரணியாயம் உலக நியாயம் 
ஒன்று விடாமல் அலசி 
வாழ்வை இயந்திரமாய் நகர்த்தி 
கார்ப்பரேட் ஆபீஸ்களிலும் 
கேன்டீன்களிலும் மால்களிலும் 
கதைபேசி 
வாட்ஸாப்பில் வட்டமிட்டு 
முகநூலில் மூழ்கி வம்படித்து 
கோடிகள் வாங்கும் நடிகனுக்கு 
கொடிபிடித்து விசிலடித்து 
அவன் வாழ்வை வளமாக்கி 
அடுத்த தேர்தலிலும் 
அயோக்கியர்களுக்கே 
வாக்களிக்கிறாங்க!

=======================================================================================

நியூஸ் ரூம் 

02.11.23

- போலீஸ் மோப்ப நாய்க்கு பிரிவு உபசார விழா. சிக்மகளூரு போலீஸ் துறையில் 2013 ல் இணைந்த திப்பு என்ற நாய், இதுவரை 35 திருட்டு, வழிப்பறி, 204 திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியுள்ளது. போலீஸ் துறையில் இணைந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால் அதற்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டு, கௌரவிக்கப்பட்டது. அதை பராமரித்த மஞ்சுநாத், குமார் என்று இருவரும் கூட கௌரவிக்கப்பட்டனர்.

- புலி நகம் கொண்ட செயின் அணிந்திருந்த வர்தூர் சந்தோஷ் என்பவரை பிக் பாஸ் வீட்டிற்கே சென்று கைது செய்த கர்நாடக வனத்துறையினர் மேலும் பல வி.ஐ.பி.க்கள் மீது வனத்துறையினர் கவனம் சென்றுள்ளதால் வி.ஐ.பி.க்கள் கிலியில் உள்ளனராம்.

- புளூடூத் பயன்படுத்தி தேர்வு எழுதியவர் கைது. கர்நாடக அரசின் வாரிய தேர்வை ப்ளூடூத் பயன்படுத்தி எழுதிய தேர்வரும், அதற்கு உதவியாக இருந்த அவர் தந்தையும், இன்னும் இரண்டு பேரும் கைது செய்யப் பட்டனர்.

- டெஸ்லா என்னும் எலக்ட்ரிக் கார் உற்பத்தி கம்பெனிக்கு போட்டியாளரான வின்ஃபாஸ்ட் என்னும் வியட்நாமிய கம்பெனி இந்தியாவில் காலூன்ற திட்டமிட்டுள்ளது. அதன் தொழிற்சாலையை நிறுவ அதன் முதல் தேர்வு சென்னை,தமிழகம். இரண்டாவது இடத்தில் குஜராத். 

- தக்காளியைப் தொடர்ந்து ஏறுமுகத்தில் சின்ன வெங்காயம்.

- ஒடிசாவில் பேருந்து ஓட்டிக் கொண்டிருந்த டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் பேருந்து அவர் கட்டுப்பாட்டை மீறி ஓடியது. அந்த இக்கட்டான நேரத்திலும் அவர் சமயோசிதமாக சாலையை ஒட்டி இருந்த சுவற்றில் மோதி வண்டியை நிறுத்தி, 48 பயணியை காப்பாற்றியிருக்கிறார். அதன் பின்னர் மயங்கி சரிந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர், ஆனால் அவர் முன்னரே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- வைக்கோலில் இருந்து கைப்பைகள் அறிமுகம்.

- மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் இளையமகளும் நடிக்க வருகிறார். அதர்வாவுக்கு ஜோடியாக தமிழ்ப்படமொன்றில் அறிமுகமாகிறார்.

=============================================================================================

அந்தநாள் திரைப்படம்.....

தமிழ்த் திரைப்பட உலகில் வலம் வந்த அறிவுஜீவிகளைக் கணக்கெடுத்தால், அதிலே எஸ்.பாலசந்தரும் அடங்குவார்.

பின்னாட்களில், எஸ்.பாலசந்தர் ஒரு வீணை வித்துவானாகப் புகழ் அடைந்திருந்தாலும், அவ்ர் தன்னுடைய கலைப் பயணத்தைத் துவக்கியது திரைப்பட நடிகராகவும், இயக்குனராகவும் தான். சீதா கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி, அதற்குப் பின் சில திரைப்படங்களில், துணைப்பாத்திரங்களில் நடித்தார். ” பெண்' என்ற திரைப்படத்தில், நாயகன் ஜெமினிகணேசனுக்கு தோழனாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடித்திருந்தார். “என் கணவர், இது நிஜமா?. அவனா இவன், அவன் அமரன், நடு இரவில், கைதி போன்ற திரைப்படங்கள் இயக்கினார்.

இது நிஜமா என்ற திரைப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், இரட்டை வேடங்களில் நடிக்கவும் செய்து, படத்திற்கு இசையும் அமைத்தார். [ கமலஹாசன் நடித்த கல்யாணராமன், இது நிஜமா வின் லேசான தழுவல்] திகில் மர்மம் என்ற வகையில் அடங்கும் அவரது இதிரைப்படங்கள், மேனாட்டுக் கதையமைப்பை, கதைக் கருக்களை ஒட்டி அமைந்திருந்தாலும். அவற்றை, தமிழ்நாட்டு சூழலுக்கு ஏற்ப, அப்போதைய கலாசாரச் சூழலை ஒட்டி மாற்றி அமைத்து படங்கள் எடுத்தார். இவரின் படங்கள், திகில், மர்மம் என்ற அடிப்படைகளை வைத்தே வந்தன என்றாலும், போலித்தனமான பயமுறுத்தல் உத்திகள் இல்லாமல், நல்ல தயாரிப்பு திறனுடன் கொண்ட திரைப்படங்களாக எடுத்தார். ஸ்டுடியோக்களிலேயே மொத்தப் படங்களை எடுத்த அந்த காலத்தில், அவரது திரைப்படங்களில் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிகள் அதிகமாக இடம் பெறும். வசனங்களில் ஆங்கிலம் அதிகமாகக் கலந்திருக்கும்.
பல படங்களை அவர் உருவாக்கியிருந்தாலும், அவர் இயக்கிய திரைப்படங்களில், அந்த நாள் மிக முக்கியமானது.

முதல் முறையாக, உலக திரைப்பட விழா, 1952ல், சென்னையில் நடந்தபோது திரைப்பட அரங்குகளிலும், தினமும் நான்கு காட்சிகள் என, பல மொழி படங்கள் திரையிடப்பட்டன. முதல் முறையாக உலக திரைப்பட விழா நடந்ததால், சென்னையில் நடந்ததால் அனைத்து தியேட்டர்களிலும், திரை உலகினர் அலை மோதினர். அந்த விழாவில் மிகவும் பேசப்பட்ட படங்களாக பைசைக்கிள் திவீஸ் என்ற இத்தாலி மொழி படம், ரஷோமான் மற்றும் யாகிவாரிஷோ ஆகிய ஜப்பான் மொழி படங்கள் இரண்டும் தான் இருந்தது.  ரஷோமான் படம் , இந்திய திரை உலகமே வியந்து பாராட்டிய படமாகும். இதை இயக்கியவர், உலக அளவில் பேசப்பட்ட, 'அகிரா குரஸோவா...''

அந்த நாள் படமும் இந்த படத்தின் பாதிப்பில் உருவானது, வீணை எஸ்.பாலசந்தர். AV.மெய்யப்பச்செட்டியாரை பார்க்க வந்தார், ஏற்கனவே, பொம்மை மற்றும் கைதி திரைப்படங்களை இயக்கிவர். ரஷோமான் படத்தை, ஏ வி எம் , ஏற்கனவே ஜப்பானில் பார்த்திருந்தார், 'ரஷோமான் கதை பாணியிலேயே, நான் ஒரு கதையை எழுதியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால், ஏவி.எம்., பேனரில் எடுக்கலாம்...' என்றார், பாலசந்தர்.
கதையை கேட்டதும், ஏ வி எம்க்கும் பிடித்து போகவே, சம்மதம் தெரிவித்தார். படப்பிடிப்புக்கு நாள் குறிக்கப்பட்டு, சில நாட்களிலேயே, 1,000 அடி, 'பிலிம்'களில் காட்சிகளை எடுத்திருந்தார், பாலசந்தர்.

எப்போதுமே சில படங்களின் காட்சிகளை எடுத்த வரை போட்டு பார்த்து, அதில் ஏதாவது குறை இருந்தால், சரி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தவர் ஏ வி எம் தான் எடுத்த காட்சிகள் வரை போட்டு காட்டினார், பாலசந்தர். காட்சிகளை பார்த்தவர், 'நீங்கள் எடுத்த காட்சிகள் முழுவதையும் மீண்டும் படம் பிடிக்க வேண்டும். ஏனென்றால், என்னிடம் கூறிய கதையில் இருந்த விறுவிறுப்பு, இப்போது பார்த்த காட்சிகளில் இல்லை. மேலும், நீங்கள் மிகவும் நம்பிய நடிகர், கல்கத்தா விஸ்வநாதனின் நடிப்பும் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை...' என்றார், தந்தை.
'ஒரு சிறந்த வங்காள நடிகர். மேடையிலும், திரையிலும் அவருக்கு நல்ல வரவேற்பு உண்டு...' என்று வாதிட்டார், பாலசந்தர்.
(இவர்தான் பாலு மகேந்திராவின் மூடு பனி படத்தில் பிரதாப்போத்தனுக்கு மாமாவாக நடித்தவர்) 

என் தந்தை யோசித்து சொல்வதாக கூறி, இரண்டு நாட்கள் கழித்து, 'சிவாஜி கணேசனை நாயகனாக போட்டு எடுங்கள். அவ்வாறு செய்தால், நீங்கள் சொன்ன கதை போல, படம் நன்றாக அமையும்... மேலும், ஜாவர் சீதாராமனை வைத்து கதையில் சிறிய மாற்றத்தை செய்யுங்கள்...' என்றார்.
அவ்வாறே வேண்டிய மாற்றங்களை உடனே செய்து படமாக்கினார், பாலசந்தர். முதலில் அந்த படத்துக்கு, ஒருநாள் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. பின், ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுத, சிவாஜிகணேசன் நடித்தபோது, அந்த நாள் என்று பெயர் சூட்டப்பட்டது.

அன்றைய சினிமாவில் பாடல்கள் இல்லாமல், திரைப்படம் எடுப்பது மிகவும் அரிது. பாடல்களே இல்லாமல் உருவான, அந்த நாள் ஒளி அமைப்பிலும், கேமரா நகர்வுகளிலும் புதிய பாதையை வகுத்தது. வசூலில் வெற்றிப்படமாக அமையாவிட்டாலும், பத்திரிகைகள் பெரிதும் பாராட்டின.
படத்தைப்பற்றி
அந்த நாள் திரைப்படத்தில், மொத்தப் படமும், இரண்டு துப்பறியும் இன்ஸ்பெக்டர்கள், நடந்த கொலையை விசாரிப்பதாகத்தான் அமைந்திருக்கும். அந்த விசாரணையின் போது, விசாரிக்கப் படும் ஒவ்வொருவர் மூலமாகவும், கதை மெல்ல மெல்ல அவிழும். கதை, முன்னும் பின்னுமாக நகர்ந்தாலும், குழப்பமே ஏற்படாது என்பது, திரைக்கதையின் அம்சமாகும. கதையின் பின்புலமும் சுவாரஸ்யமானது. இந்த நாட்டில் அங்கீகாரம் கிடைக்காத ரேடியோ இன்ஜினியர் ராஜன் ( சிவாஜி) ஆத்திரத்தில், எதிரி நாட்டுக்கு உதவி செய்து, தேசத்துரோகி ஆகின்றான். அவனை அவனது மனைவியே ( பண்டரிபாய்) சுட்டுக் கொல்கிறாள். இந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது. வில்லன பாத்திரம் போல தோன்றினாலும் சிவாஜிகணேசன் மிகஅனயாசமாக நடித்திருந்தார் ஒரு க்ளாசிக் படம் என்றாலும், இத்திரைப்படம் பெரிய வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது.
சி.ஐ.டியாக வரும், ஜாவர் சீதாராமன், அழுத்தமான குரல் உச்சரிப்பு இந்த படத்திற்கு மிக பிளஸ் பாயிண்ட் என சொல்லாம் லாஜிக்காக வசனம் பேசி, துப்புத் துலக்குவது, பார்க்க சுவாரசியமாக இருக்கும்.

தமிழ் திரைப்படங்களில் பத்து, இருபது பாடல்கள் நிரம்பி வழிந்த 1950-களில் பாடல்கள் மட்டுமல்லாது, சண்டைக்காட்சிகளும் இல்லாமல் வந்த திரைப்படம் `அந்த நாள்.' சுந்தரம் பாலசந்தர் இயக்கிய இப்படத்தில், பாடல்களே இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில்கூட `பின்னணி இசை : ஏவி.எம் இசைக்குழு' என்று மட்டும்தான் காட்டப்படும். மேலும், `அந்த நாள்'தான் நோயிர் (noir) என்று அழைக்கப்படும் இருண்டவகைப் படங்களில் வந்த முதல் தமிழ்த் திரைப்படமாகும்.

இந்து தமிழ் திசை இதழில் இருந்து (hindutamil. in)  நன்றி திரு R கந்தசாமி FB 

==========================================================================================

ரசித்த படம் 

=================================================================================== 

பொக்கிஷம்  : -

கதைகள் இருக்கின்ற பக்கத்திலேயே இப்படி இன்னொரு கட்டச் சிறுகதை!



"ப்ளீஸ்..  ஒரு வாட்டி காட்டுங்க ஸார்..."  

"ஏன்யா..  அதை டி டி  ஆர் கிட்ட கேட்காம, பக்கத்து ஸீட் ஆள் கிட்ட கேட்கலாமே..."


அடடா...   தீபாவளி வேற வருதே....

தெரியுமா?

சரி வாத்யாரே...   அப்புறம் மேடைப்பாடகியா எப்படி ஆக்குவீங்க?

ரொம்ப தொலைவுதான் போங்க....

இலவசம்னா அப்படி..  அப்படி... அலைவோம்!

103 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம்.
      இருமுறை சொல்வேன்
      சபையினர் முன்னே.

      (வழக்கத்துக்கு மாறான இதுக்குக் காரணம் இருக்கு.)

      நீக்கு
    2. வாங்க ஜீவி ஸார்...  வணக்கம்.

      வணக்கம்... வணக்கம்... ணா.... ? ஜெமினி?

      நீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. ஹிந்து தமிழிலிருந்து திரு. கந்தசாமி ஐயா எடுத்துப் போட, அவர் போட்டதிலிருந்து எடுத்து இங்கு நீங்கள் போட...

    எப்படியெல்லாம் ஒரே மேட்டர் சுற்றி சுற்றி வந்து எங்களை அடைகிறது
    என்பதை நினைத்துப் பார்க்கவே 'த்ரில்'லாகத் தான் இருக்கிறது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "எல்லோரும் எல்லாமும்படிக்கவேண்டும்...  இங்கு தெரியாது என்கின்ற நிலை வேண்டும்!..."

      நீக்கு
  5. கே. பாலசந்தர்
    எஸ். பாலச்சந்தர்
    தவிர
    பாலச்சந்திரன் என்ற பெயரில் துணைப் பாத்திரங்களில் நடித்த ஒரு நடிகரையும் கண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.

    (இது கூட இ.தெ.எ.நி. வேண்டும் வகையறா தானாக்கும்)

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. புன்னகை பட விமர்சனம் நன்றாக உள்ளது. நடிக நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களின் நிலையோடு ஒன்றி நடித்து விட்டால், நம் மனதில் ஆழமாக அந்த படங்களும், அந்த பாத்திர படைப்பும் ஆழமாக நின்று விடும் இல்லையா? ஆனால், ஏனோ நான் இந்தப்படத்தை இதுவரை முழுதாக பார்த்ததில்லை. ஒரு தடவை பார்க்க வேண்டும்.

    /பாலச்சந்தர் படங்களில் எனக்கு மேஜர் சந்திரகாந்த் வசனங்கள் ரொம்பப் பிடிக்கும்./

    ஆம். இந்த படத்தின் வசனங்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். தொலைக் காட்சியில்தான் இரண்டு முறை பார்த்தாக நினைவு.மேஜர், நாகேஷ் இருவரின் நடிப்பும் ஒருவரையொருவர் போட்டி போட்டு ரசிக்க வைக்கும் விதமாக அந்தப் படம் அமைந்திருக்கும்.

    இப்போதுள்ள படங்களை விட இந்த மாதிரி படங்களை மீண்டும் பார்க்கலாம். ஆனால், இளைய தலைமுறையினருக்கு இந்தப்படங்கள் பயங்கர போர். இப்படி பேசிப் பேசி நம்மை கொல்வதை விட, எடுத்தவுடன் பயங்கர கருவிகளுடன் எதிரிலுள்ள ஆட்களை சம்ஹரிக்கும் படங்கள் சிறந்ததென என அதைத்தான் விரும்புகிறார்கள்.:)))) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது அக்கா..  கிளைமேக்ஸ் சிலாகிப்பு!

      நீக்கு
    2. இதே படத்தில் லாஜிக்கே இல்லாமல் ஜெயந்தியை ராமதாஸ் பாலியல் பலாத்காரம் செய்யவரும்போது அவர் ஒரு பாட்டு பாடிக்கொண்டே ஓடுவார்!!!!!!!!  

      நீக்கு
    3. /இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது அக்கா.. கிளைமேக்ஸ் சிலாகிப்பு!/

      ஓ.. சரி. சரி. வார்த்தை புதுமை நன்றாக உள்ளது. சிலாகிப்பு செய்வதிலிருந்துதானே ஒரு விமர்சனம் பிறக்கிறது. அதனால்தான் நான் அப்படி எழுதி விட்டேன். நன்றி.

      நீக்கு
  7. /// எடுத்த எடுப்பில் ஆயுதங்களால் எதிரிலுள்ள ஆட்களை போட்டுத் தள்ளும் கசா நாயகன் சிறந்ததென .. ///

    நிதர்சனம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எடுத்துக் காட்டி இருக்கும் வரிகள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது எனக்கு குழப்பமாக இருக்கிறது.

      நீக்கு
  8. எஸ். பாலசந்தர் அடிப்படையில் வீணை வித்துவான் என்றே அறிந்திருக்கிறேன்.
    கதாநாயகன் ஆனாலும்
    நெகட்டிவ் பாத்திர அமைப்பில் நடிக்க மறுக்காத சிவாஜியின்
    நடிப்பார்வத்தை சொல்லியே ஆக வேண்டும்.

    எஸ். பாலச்சந்தரை அடையாளப்படுத்திய
    'பொம்மை' படத்தையும் குறிப்பிட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பொம்மை
      படத்தில் வரும் 'நீயும் பொம்மை, நானும் பொம்மை' பாடல் தான் ஜேசுதாஸ் அவர்கள் தமிழ் படத்திற்காக பாடிய முதல் பாடல்.
      அதுசரி, அந்தப் பாடலை எழுதிய
      பாடலாசிரியர்? (!!!!)

      நீக்கு
    2. அவரேதான்.  வீணை பாலச்சந்தரரே எழுதிய   பாடல்தான்.

      நீக்கு
  9. படச்சுருள்/ டப்பா என்றிருந்த காலத்தில் அவனும் இவனும் ஏதோ ஒன்றுக்காக அடித்துப் புரண்டு கொண்டபோது கூட இன்றைக்கு காட்டப்படுவது போல காட்சி அமைப்புகள்
    இருந்ததில்லை..

    பதிலளிநீக்கு
  10. /// அவர் ஒரு பாட்டு பாடிக் கொண்டே ஓடுவார்... ///

    அபத்தமான காட்சி அது அன்றைக்கு..

    இன்றைக்கு அயோக்கியத் தனமான காட்சிகள் ஏராளம்.. ஏராளம்..

    எல்லாம் பணம் ப்டுத்தும் பாடு..

    பதிலளிநீக்கு
  11. தான் கெட்ட குரங்கு வனத்தைக் கெடுத்தது - என்ற பழமொழி தான் இன்றைய சினிமா!..

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    தங்கள் கவிதை நன்றாக உள்ளது. ஐந்து வருட கணக்கில் இப்படி உருண்டோடி விட்டு பின் மக்களாட்சி இப்படியேதான் தொடர்கிறது. மக்களாட்சியின் நிதர்சனத்தை வார்த்தைகளில் கொண்டு வந்ததை ரசித்தேன். அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. டைரடக்கர்
    (டைரக்டர்) பாலச்சந்தரை எப்போதுமே பிடிக்காது..

    இன்று நினைவு படுத்தி விட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? முனைவர் ஜம்புலிங்கம் சாரின் அபிமான இயக்குனர் அவர்.

      நீக்கு
  14. இந்த வார கதம்பத்தில் சினிமா செயதிகள் நிறைய.. நோ கமெண்ட்..

    கவிதை கவிதையாய் தோன்றவில்லை. நீங்கள் எழுதிய மாதிரியும் இல்லை.

    பொக்கிஷ ஜோக்குகள் கடிக்கின்றன.
    மொத்தத்தில் அவசரமாக கட்டப்பட்ட கதம்பம்.

    பதிலளிநீக்கு
  15. இன்றைய கதம்பம் நன்றாக இருக்கிறது.

    வீணை பாலசந்தரின் படங்கள் வித்தியாசமானவை. நன்றாகவும் இருக்கும். அந்த நாள் படம் இரு முறை பார்த்திருக்கிறேன். (டிவிடி, ஓடிடி)

    பதிலளிநீக்கு
  16. டைரக்டர் பாலசந்தர் பல படங்களில் வக்ர புத்தியோடு கதை அமைப்பு, க்ளைமாக்ஸ் பண்ணுவார். பொய் (?) பிரெஆஷ்ராஜின் படத்தை படு தோல்விப் படமாக முனைந்து ஆக்கியது அவரின் சாதனை. மக்கள் எதிர்பார்க்கும் முடிவை வைக்காத்து அவரின் வக்ரபுத்தி. இதுபோலத்தான் ஶ்ரீதர், விக்ரமை வைத்து கதாநாயகன் ஆண்மையில்லாத நேர்மையாளனாக்க் காட்டி ஒரு படுதோல்விப் படத்தைக் கொடுத்தார்.

    பதிலளிநீக்கு
  17. புன்னகை புன்னகைக்க வைத்தது.

    திரு. ஏகாந்தன் சாரின் அனுபவம் சிறப்பு

    பதிலளிநீக்கு
  18. தற்போது
    தொலைக்காட்சி விளம்பரங்களைக் கவனித்தீர்களா!?..

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. '//உன் மகனாயிருந்தால் இப்படி பாதுகாப்பு செய்யாமல் போவாயா?" ( அப்படீன்னு நான் கேட்கலை.. மந்திர மூர்த்தி கேட்கிறார்..." என்றே சொல்லி ஒவ்வொன்றையும் சொல்லும் ஜெயந்தி கடைசி வசனத்தை மட்டும் "அப்படீன்னு மந்திர மூர்த்தி கேட்கலை.. நான்தான் கேட்கிறேன்" என்று உடைந்து அழும் காட்சி) //

    இந்த மாதிரி வசனங்கள் இருகோடுகள் படத்திலும் வரும்.

    புன்னகை படத்தில் ஜெயந்தி பாடும் ஆணை இட்டேன் நெருங்காதே! முன்பு ஒரு முறை சொல்லி இருக்கிறீர்கள். தியேட்டரில் எல்லோருக்கும் சிரிப்பை வரவழைத்த பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  எழுதும்போதே எனக்கும் நினைவு வந்தது.  அது Life File என்கிற வார்த்தைகளைக் கொண்டு விளையாடும் விளையாட்டாக இருக்கும்.  அதிலும் ஜெமினி! ஜெயந்தி!

      நீக்கு
    2. நானெல்லாம் சிப்பை அடக்க முடியாமல் சிரிச்சுடுவேன். ஓடுவார், ஓடுவார், ஓடிக் கொண்டே இருப்பார். :)

      நீக்கு
  21. ஹிமாச்சல் செல்வன் Tse Tsering.. நட்பு பகிர்வு அருமை.

    //ஊழல் செய்திகளை
    அதிரடியாய் வெளியாகும்
    ஆக்ஷன் திரைப்படம்
    போலவே பார்த்துக் கடக்கறாங்க//

    வேறு என்ன செய்ய முடியும்!

    எஸ்.பாலசந்தர் படம் "நடு இரவு" படத்தை சிறு வயதில் பார்த்து விட்டு பயந்து போய் இருக்கிறேன். அவர் இயக்கிய படங்கள் எல்லாம் நன்றாக இருக்கும், "அவனே தான் இவன்" , "பொம்மை" எல்லாம் நன்றாக இருக்கும்."அந்தநாள்" தொலைகாட்சியில் வைக்கும் போது எல்லாம் பார்ப்பேன். இதில் முடிவை சொல்லி விட்டாரே ! புதிதாக பார்ப்பவர்களுக்கு முடிவு தெரியாமால் இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  22. பொக்கிஷபகிர்வில் தீபாவளி புடவை தேர்வு இடம் பெற்று விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் இடைப்பெற்றாலும் பொருத்தமாகவே இருக்கும்!

      நீக்கு
  23. பாலசந்தரின் மேஜர் சந்திரகாந்த் பார்த்ததில்லை, ஸ்ரீராம், ஆனால் உங்கள் பதிவு இப்ப பார்க்க வேண்டும் என்று தோன்ற வைக்கிறது. கண்டிப்பா யுட்யூபில் இருக்கும்.

    பாலசந்தரின் படங்களில் சில வசனங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இரு கோடுகள் வசனங்கள் பல இடங்களில் பிடிக்கும். எனக்கு ஒரே தாட் ப்ராஸஸ் விட, வித்தியாசமானவை ரொம்பப் பிடிக்கும் என்பதோடு யோசிக்கவும் வைக்கும் என்பதால்.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேஜர் சந்திரகாந்த் கண்டிப்பாக   பாருங்கள்.குறிப்பாக மேஜர்-நாகேஷ் உரையாடல்களுக்காகவே.  

      இன்னொரு படத்தில் - நவகிரகம் என்று நினைவு - "கெட்டநேரம் வந்துட்டா ஒட்டகத்து மேல ஏறி உட்கார்ந்தாலும் நாய் கடிக்காம விடாது"

      நீக்கு
    2. மேஜர் சந்திரகாந்த் நாகேஷ், மேஜர் போட்டி போட்டு நடித்த படம். நவகிரஹம் சுமார் ரகம் தான். சர்வர் சுந்தரம், எதிர்நீச்சலை ஒப்பு நோக்கினால் பின்னர் வந்த படங்கள் அனைத்துமே அவர் தன் அறிவு ஜீவித்தனத்தைக் காட்டுவதற்காக எடுத்தவை எனலாம்.

      நீக்கு
    3. ஆம். என் அபிப்பிராயமும் அதுவே...

      நீக்கு
    4. //மேஜர் சந்திரகாந்த் கண்டிப்பாக பாருங்கள்.குறிப்பாக மேஜர்-நாகேஷ் உரையாடல்களுக்காகவே.// அழகான ஜெயலலிதாவிற்காகவும்.

      நீக்கு
  24. க்ளைமாக்ஸ், மற்றும் படத்தில் டைரக்டர்ஸ் வைக்கும் வசனக்காட்சிகள் பத்தி சொன்ன வரிகள் அனைத்தையும் டிட்டோ செய்கிறேன், ஸ்ரீராம். ஆமா நம்மால் நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாததை இப்படிப் பார்க்கும் போது அவை வெற்றி பெறுகின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஏகாந்தன் அண்ணாவின் அனுபவங்கள் மிக சுவாரஸியம்.

    என் அப்பாவும் இலங்கையில் இந்திய தூதரகத்தில் பாஸ்போர்ட் செக்ஷனில் வேலை செய்தார். நானும் அங்கு வளர்ந்தேன். ஆனால் இலங்கை ஈழப் பிரச்சனை தலைதூக்கிய போது அப்பா வேலையை விட வேண்டிய சூழல் ஊருக்கு வந்த பின் வாழ்க்கையே தடம் புரண்டது. தூதரகம், வெளிநாட்டுக்கு மாற்றல் என்றதை வாசித்ததும் அந்த நினைவுகள் வந்து சென்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  அப்படியா?  நிச்சயம் சோகமான அனுபவங்களாக இருந்திருக்கும்.  அதே போல பர்மாவிலிருந்து அகதியாய் வந்தவர்கள் வாழ்வும் சோகமானது.

      நீக்கு
    2. ..என் அப்பாவும் இலங்கையில் இந்திய தூதரகத்தில் பாஸ்போர்ட் செக்ஷனில் வேலை செய்தார். நானும் அங்கு வளர்ந்தேன். ஆனால் இலங்கை ஈழப் பிரச்சனை தலைதூக்கிய போது..//

      எந்த வருடங்கள் இவை..? எப்போது திரும்பினார் அப்பா இந்தியாவுக்கு? குழப்பம் அதிகமாகிறது!

      பிரச்னை தலைதூக்கியபோது ..- தலைதூக்காவிட்டால் அது பிரச்னையே இல்லை!

      நீக்கு
  26. ஸ்ரீராம், மக்களாட்சி - கருத்துகள் புரிகின்றன..நல்ல கருத்துகள் ஆனால் என்னவோ மிஸ்ஸிங்க். அது என்னனு சொல்லத் தெரியலை. பஞ்ச் மிஸிங்க்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? இருக்கலாம்! நீளமாக ஆனது கூட கொஞ்சம் இழுத்திருக்கலாம்.

      நீக்கு
  27. திப்பு - பிரிவு உபசார விழா செய்தி ரசித்தேன். இப்படி பல பைரவ பைரவிகளுக்கு உபசார விழா நடத்துவது இராணுவத்திலும் நடப்பதை அறிந்ததுண்டு. செய்திகள் காணொளிகள் கண்டதுண்டு.

    புலி நகம் செய்தி வாசித்தேன்..இதன் தொடர்ன்பாக ..மேலும் ஒரு பெண்மணி அதிகாரி இன்னும் சிலர் இப்படி பொருட்கள் வைத்திருந்ததாகவும் லஞ்ச்ம வாங்கியதாவும் கூட வந்தது.

    டெஸ்லா இங்கு ஒன்றே ஒன்று பாத்தேன் ஆனால் டக்கென்று, பேருந்தில் போறப்ப....சிவப்பு கலர்.

    சின்ன வெங்காயம் மட்டுமா பெரிய வெங்காயம், இஞ்சி பச்சை மிளகாய் எல்லாமும். அதனால் நான் இப்ப பஜ்ஜி மிளகாய் தான் வாங்கிப் பயன்படுத்துகிறேன் சட்னி க்கு கூட. நன்றாக இருக்கிறது

    ஒடிஸா ட்ரைவர் - நல்ல சம்யோஜித செயல். எல்லாராலும் இப்படி முடியுமா என்று தெரியவில்லை ஏனென்றால் மாரடைப்பு வருவதைப் பொருத்து இல்லையா..

    வைக்கோல் ஆடைகளே வருவதாக அறிகிறேன் அது போல சணல், வாழைநார், மூங்கில் இழைகள் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. எஸ் பாலசந்தர் பற்றிய தகவல் வெகு சுவாரசியம். அவர் படங்கள் ஏதேனும் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று நினைத்து அந்தநாள் படத்தின் ஒரு சில சீன் கள் மட்டும் பார்த்திருக்கிறேன். சிவாஜி ரேடியோ எஞ்சினியர்...அவர் மறைந்து வாழும் வாழ்க்கை...ஜாவர் தேடி வருவது அவ்வளவே.

    முழுமையாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும் நேரம் அமைய வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.. முந்தைய பதிலில் SB படம் எதுவுமே பார்த்ததில்லை என்று சொல்லி விட்டேன். அந்த நாளே நான் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  29. குதிரை பைக் ரசித்தேன்!!!!

    காத்திருந்தேன் காத்திருந்தேன் - கதை யூகிக்க முடிந்தது! அது சரி, சந்திரனை ஆண் என்று சொல்லிவிட்டு , எல்லோரும் கவிஞர்கள் கதையாளர்கள் எல்லோரும் பெண்ணை வர்ணிக்கப் பயன்படுத்துகின்றனர்?!!!!!!! (எனக்கு ஏனோ கதை எழுதும் போது இப்படியான வர்ணனைகள் மனதில் தோன்றுவதே இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹிஹிஹிஹி)

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வர்ணனைகள் படிப்போருக்கு ஜவ்வாக மாறி விடும் அபாயம் உண்டு!

      நீக்கு
  30. கருத்து வந்ததா?!!! காத்திருந்தேன் காத்திருந்தேனுக்கும் பைக்கிற்குப் போட்ட இரண்டும் ஒரே கருத்தில்...

    //"ஏன்யா.. அதை டி டி ஆர் கிட்ட கேட்காம, பக்கத்து ஸீட் ஆள் கிட்ட கேட்கலாமே..."//

    அதானே!!!!

    புடவை -வழக்கமாகப் பெண்களின் வசனம். நிறைய கேட்டதுண்டு.!!!

    எங்கள் ஊரரகில்தானே தோவாளை! 15 நிமிடப்பயணம். ஔவையாரம்மன் நிகழ்வுகள் தெரியும். என்னுடன் படித்த தோழியின் பெயர் ஔவை. ஆனால் அழகியபாண்டிபுரத்தில் உள்ள இக்கோயிலுக்குச் சென்றதில்லை. அவ்வளவுவருடங்கள் இருந்தும்...அப்பலாம் வீட்டுல எங்க கூட்டிக் கொண்டு போவாங்க...> அதன் பின் சென்ற போதும் கூட. கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய இடங்களை நான் மிஸ் செய்திருக்கிறேன்.

    எழும்பூரிலிருந்து மயிலாப்பூர் - ஊர் என்று சொல்வது பாண்டியில் 5 நிமிடத்தில் இருக்கும் பகுதியையும் ஊர் என்று சொல்வாங்க....எந்த ஊர்ல இருக்கீங்க என்பாங்க...சொல்றவங்க அடுத்தாப்ல இருக்கற பகுதியைச் சொல்லும் போது நான் வியப்புடம் பார்த்த விஷயம்.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..   ஆமாம்.  அப்போதைய புறநகர் பகுதிகளிலிருந்து சென்னை மெயினுக்கு வந்தாலோ, இன்னொரு புறநகர் பகுதிக்கு சென்றாலோ 'ஊருக்கு போயிருக்காங்க'தான்!

      நீக்கு
    2. நானெல்லாம் சின்ன வயசில் மதுரை கழுதை அக்ரஹாரம் எனப்படும் மேலப்பாண்டியன் அகழித் தெருவில் இருந்து சந்தைக்கு அருகில் இருந்த கிருஷ்ணாராய அக்ரஹாரம் பாட்டி வீட்டுக்குப் போனாலே ஊருக்குப் போனேன் என்பேன். பின்னர் அவங்க ஜெய்ஹிந்த்புரம், சுப்ரமண்யபுரம் என மாறினப்புறமும் ஊருக்குப் போனேன் தான்.

      நீக்கு
    3. மதுரையிலேயே அந்தக் கதை  என்றால் சென்னையில் சொல்வதில் தவறே இல்லை.

      நீக்கு
  31. அருமை கருத்து படம் கதை சிறப்பு

    பதிலளிநீக்கு
  32. பாலசந்தர் கே. யின் ஆரம்பகாலப்படங்கள் அப்போது அவர் வாழ்க்கைத் தரத்தை அப்படியே காட்டும்படி சாதாரண மத்திய தரக்குடும்பங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை ஆதாரமாகக் கொண்டு வந்தன. ஆகவே அவை எல்லாமும் வெற்றிப்படங்களாக மக்கள் மனதில் இடம் பெற்றன. நாட்கள் ஆக ஆக பாலசந்தரின் வாழ்க்கைத்தரமும் மேம்பட மேம்பட அவர் அதற்கேற்ற படங்களை எடுக்க ஆரம்பித்தார். அவள் ஒரு தொடர்கதையிலிருந்து இது தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. நவீனம், புதுமை என்னும் பெயரில் முறையற்ற உறவு, தத்துப்பித்தான வசனங்கள், எப்போதும் தோற்கும் கதாநாயகி எனக் காட்டி வந்ததில் அலுத்துப் போக வைத்தன அவர் படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அறிவுஜீவியாக இருப்பதன் சிரமங்கள்.

      நீக்கு
    2. அறிவு.. ஜீவியா ! எப்போதிருந்தார் அப்படி ?

      நீக்கு
    3. அப்படித்தானே எல்லோரும் சொன்னார்கள்? இல்லையா?

      நீக்கு
    4. தன்னை ஓர் அறிவு ஜீவியாகவே அவர் காட்டிக் கொண்டார். இல்லையா? என்னைப் பொறுத்தவரை மனதில் வக்கிரமான சிந்தனைகள் நிரம்பியவர்.

      நீக்கு
  33. புன்னகை, கண்ணா நலமா ஆகிய படங்களை அயனாவரம் சயானி திரை அரங்கில் பார்த்த நினைவு. அதன் பின்னர் சென்னையை விட்டுச் சென்ற பின்னர் பல வருடங்கள் பாலசந்தர் படங்கள் பார்க்கச் சந்தர்ப்பமே கிடைக்கலை. சிகிந்திராபாதில் இருந்தப்போ சுமித்ரா, கமலஹாசன் நடிச்ச ஒரு படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஷோபாவும் நடிச்சிருப்பார். படம் பேரெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் மகா அறுவைப்படம். அதன் பின்னர் மீண்டும் சென்னை வந்தாலும் அப்போ இருந்த சூழ்நிலை அன்றாட வாழ்க்கையே ஒரு நரகமாக இருந்தது. இதில் திரைப்படமெல்லாம் எங்கே இருந்து பார்ப்பது? ஆனால் வீட்டில் அப்போத் தான் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியதால் ஞாயிற்றுக் கிழமைப் படங்களைத் தவறாமல் பார்த்துடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிழல் நிஜமாகிறது னால படமாச்சே..  அதை போர் என்கிறீர்கள்.  ரசிக்கும்படியான படம்.  எந்த வக்ரமும் இல்லாத படம்.

      நீக்கு
  34. புன்னகை, கண்ணா நலமா ஆகிய படங்களை அயனாவரம் சயானி திரை அரங்கில் பார்த்த நினைவு. அதன் பின்னர் சென்னையை விட்டுச் சென்ற பின்னர் பல வருடங்கள் பாலசந்தர் படங்கள் பார்க்கச் சந்தர்ப்பமே கிடைக்கலை. சிகிந்திராபாதில் இருந்தப்போ சுமித்ரா, கமலஹாசன் நடிச்ச ஒரு படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஷோபாவும் நடிச்சிருப்பார். படம் பேரெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் மகா அறுவைப்படம். அதன் பின்னர் மீண்டும் சென்னை வந்தாலும் அப்போ இருந்த சூழ்நிலை அன்றாட வாழ்க்கையே ஒரு நரகமாக இருந்தது. இதில் திரைப்படமெல்லாம் எங்கே இருந்து பார்ப்பது? ஆனால் வீட்டில் அப்போத் தான் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியதால் ஞாயிற்றுக் கிழமைப் படங்களைத் தவறாமல் பார்த்துடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுமித்ரா, கமல், சரத் பாபு, ஷோபா நடித்த படம்: நிழல் நிஜமாகிறது.

      நீக்கு
  35. வீணை பாலசந்தரின் படங்கள் எல்லாமே க்ளாசிக். அநேகமாக பொம்மை தவிர்த்து மற்றப்படங்கள் பார்த்திருக்கேன். தொலைக்காட்சிப் பெட்டி தயவில் தான். திரை அரங்கில் பார்த்த ஒரே படம் நடு இரவில். அண்ணா ஹோசூரில் இருந்தப்போ நான், அம்மா, அண்ணா போனோம். தம்பி அப்பாவோடு மதுரையில் இருந்தார். அவருக்குப் பள்ளி இருந்தது ஆகவே வரலை. நடு இரவில் எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். அதில் வீட்டுக்குள்ளேயே ஒவ்வொரு மாடிக்கும் செல்ல லிஃப்ட் இருக்கும். அதுவும் பிடிச்சது. கடைசியில் யார் குற்றவாளி என்பது தெரிந்து ஒரே திடுக். அந்தநாள் படமும் தொலைக்காட்சியில் பார்த்தது தான். படம் போடுவதற்கு முதல்நாள் என் தம்பி வேறே வேலை இல்லாமல் மெனக்கெட்டு வந்து ஜிவாஜி தான் குற்றவாளி எனச் சொல்லிட்டுப் போயிட்டார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நாள் தவிர எதுவும் பார்க்கவில்லை. ஒவ்வொன்றாய் பார்க்க முயற்சிக்கிறேன்!

      நீக்கு
  36. மக்களாட்சி மாறப்போவதே இல்லை. நியூஸ் ரூம் நன்று. ஜோக்குகள் பரவாயில்லை ரகம். சிறுகதையை என்னால் படிக்க முடியலை. :( பைக்குதிரை அபாரம். எப்போவுமே தீபாவளி சமயத்தில் வெங்காயம் விலை ஏறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நியூஸ் ரூம் நன்று.//முதல் முறையாக கீதா அக்காவிடமிருந்து பாராட்டு. நன்றி __/\__ __/\__

      நீக்கு
  37. @ கமலா ஹரிஹரன்..

    ### எடுத்தவுடன் பயங்கர கருவிகளுடன் எதிரிலுள்ள ஆட்களை சம்ஹரிக்கும் படங்கள் சிறந்ததென... ###


    /// எடுத்த எடுப்பில் ஆயுதங்களால் எதிரிலுள்ள ஆட்களை போட்டுத் தள்ளும் கசா நாயகன் சிறந்ததென ///

    விவரம் குறிப்பதற்கு விடுபட்டுப் போயிற்று..

    பதிலளிநீக்கு
  38. படத்தின் பெயர் அறிந்திருக்கிறேன், பார்த்ததில்லை. இதிலிருந்துதான் "மேஜர்" சுந்தரராஜன் எனும் பட்டப் பெயர் வந்ததோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேஜர் சந்திரகாந்த் நாடகத்திலும் சுந்தர்ராஜந்தான் நடித்தார். அதில் கிடைத்த பட்டம்தன் 'மேஜர்'

      நீக்கு
  39. "புன்னகை"மில் ஆழ்ந்து விட்டீர்கள்...

    நேர்மை - ஒழுக்கம் - நமக்கு நாமே...

    பதிலளிநீக்கு
  40. நியூஸ்ரூம் படத்தை எங்கிருந்து பிடித்தீர்கள்? கிட்டத்தட்ட என்னைப் போல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாராவது சொல்வார்களா என்று பார்த்தேன். நீங்களே சொல்லி விட்டீர்கள். எதேச்சையாய் கிடைத்ததுதான்!

      நீக்கு
  41. மதுரை கழுதை அக்ரஹாரம் சரி -- அக்ரஹாரக் கழுதைன்னு திரைப்படம் ஒண்ணும் வெளியானது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூகுள் தேடலில் தேடிப் பார்த்த பொழுது படத்தின் பெயர் அக்ரஹாரத்தில் கழுதை என்று தெரிந்தது.
      அட! நம்ம வெங்கட் சாமிநாதன் சம்பந்தப்பட்ட படமாம்.
      1977 ரிலீஸ். நியோ ரியலிஸ வரிசையில் வந்த படமாம். நியோ ரியலிஸம் -- விஷயம் ஜெமோவுக்குத் தாவி விட்டதே!

      நீக்கு
  42. நியூஸ் ரூம் நன்றாக இருந்தது.

    பொக்கிசங்கள் ரசனை. ரேடியோ பாடகி ஹா...ஹா...சிரித்து முடியவில்லை செம சிரிப்பு . ..போட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!