வெள்ளி, 24 நவம்பர், 2023

வெள்ளி வீடியோ : சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டக் கட்டி இருக்காக...

 

கார்த்திகை பிறந்து விட்டது.  ஐயப்பன் தரிசனம் தேடித் செல்லும் காலம்.  

சோமு எழுதி, வீரமணி இசை அமைத்து பாடியிருக்கும் பாடல் இன்றைய பகிர்வாக..

அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு அய்யனே சரணம் ஐயப்பா
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு அய்யனே சரணம் ஐயப்பா

உன்னடியை பணிந்து நின்றோம் சரணம் பொன்னய்யப்பா
உன்னடியை பணிந்து நின்றோம் சரணம் பொன்னய்யப்பா
கண்ணனின் மைந்தனே சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

வன் புலிமேல் அமர்ந்தவனே சரணமே ஐயப்பா
வாவர் சுவாமி தோழனே சரணமே ஐயப்பா
இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னைய்யப்பா
பந்தலனின் செல்வனே சரணம் பொன்னைய்யப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

எருமேலி சஷ்தாவே சரணம் பொன்னைய்யப்பா
ஏழைப் பங்காளனே சரணம் பொன்னைய்யப்பா
அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை
பொறுத்தருள் வாய் நீ சரணம் பொன்னைய்யப்பா

அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு அய்யனே சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா



===================================================================================================

பாலச்சந்தர் படங்கள் என்றாலே ஒரு கஷ்டப்படும் கதாநாயகி இருப்பாள்.  அவளுக்கும் நல்லகாலம் பிறந்து சுப முடிவு வரும் என்று காத்திருந்தால் அவளின் சோக வாழ்க்கை தொடரும் என்று முடிப்பார்.  

அப்படி இல்லாமல் நல்லபடியாய் முடித்த படங்களில் ஒன்று 1967 ல் வெளிவந்த 'அனுபவி ராஜா அனுபவி' திரைப்படம்.  ராம அரங்கண்ணலின் கதைக்கு பாலச்சந்தர் வசனம் எழுதி இயக்கியிருந்த படம்.  

நாகேஷ், மனோரமா, முத்துராமன், மேஜர் ஆகியோர் நடித்த இந்தத் திரைப்படத்துக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுத, எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.  எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்த இந்தப் படத்தின் பாடலான 'முத்துக் குளிக்க வாரீகளா?' பாடல் தூத்துக்குடி பாஷையில் பாடப்பட்டு  செம ஹிட் அடித்தது.  எந்த அளவு என்றால் ஹிந்தியில் R D பர்மன் இந்தப் பாடலின் சரணத்தை ஹிந்தி வெர்ஷனில் கொண்டு வந்தார்.  அதுவும் தமிழ் வரிகளோடு!

சென்னையை சுற்றி பார்க்க வேண்டுமா?  அதுவும் இப்போது இருக்கும் சென்னைக்கும், 67 ல் இருந்த சென்னைக்கும் வித்தியாசம் தெரிய வேண்டுமா?  பாடலைப் பாருங்கள்.  சென்னையை சுற்றிக் காண்பித்திருக்கிறார் கேபி.    எவ்வளவு காலி இடங்கள்...  LIC தான் உயரமான ஒரே கட்டிடம்.

என்னதான் கிராமத்திலிருந்து வந்திருந்தாலும் நாகேஷ் இப்படி நடு ரோடிலா நடப்பார்.  ஆனாலும் வேஷ்டி துண்டுடன் செம நடை நடக்கிறார்.

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடி

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுக யாருமில்லே
இங்கே சரியா தமிழ் பேச ஆளுமில்லே
மெதுவாப் போறவுக யாருமில்லே
இங்கே சரியா தமிழ் பேச ஆளுமில்லே

ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

சீட்டுக்கட்டுக் கணக்காக
இங்கே வீட்டக் கட்டி இருக்காக
வீட்டக் கட்டி இருந்தாலும்
சிலர் ரோட்டு மேலே படுக்காக

பட்டணத்துத் தெருக்களிலே
ஆளு நிக்க ஒரு நிழலில்லையே
வெட்டவெளி நிலமில்லையே
நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே
அடி சக்கே

வைக்கோலாலே கன்னுக் குட்டி
மாடு எப்போ போட்டுது
கக்கத்திலே தூக்கி வச்சாக்
கத்தலையே என்னது

ரொக்கத்துக்கு மதிப்பில்லையே
இங்கு வெக்கத்துக்கு விலையில்லையே

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்


ஊரு கெட்டுப் போனதுக்கு
மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்

தேராட்டம் காரினிலே
ரொம்பத் திமிரோடு போறவரே
எங்க ஏரோட்டம் நின்னு போனா
உங்க காரு ஓட்டம் என்னவாகும்
ஏஹேஹே

காத்து வாங்க பீச்சுப் பக்கம்
காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து
என்ன ஆச்சு வூட்டிலே

கெட்டுப்போன புள்ளிகளா
வாழப் பட்டணத்தில் வந்தீகளா

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுக யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே

ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடியோ...

54 கருத்துகள்:

  1. முதல் பாடல் பல்லாயிரம் முறைகள் கேட்டு ரசித்து இருக்கிறேன்.

    இரண்டாவது பாடலும் கேட்டு ரசித்ததே... பகிர்வுக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  2. முதற்பாடல் பல தடவைகள் கேட்டிருக்கிறேன்.

    இரண்டாவது பாடல், பாடலாசிரியர் எழுத சிரமப் பட்டிருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு என்ன சிரமம்? எளிதாக எழுதி இருப்பார்!

      நீக்கு
  3. சென்னை பாஷை 67ல் சரியில்லை. இப்போது நிலைமை பெட்டராக இருக்கிறது. காரணம் பூர்வ குடிகளைத் துரத்திவிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து நல்ல தமிழ் பேசும் மக்கள் சென்னைக்குப் படையெடுத்து வாழத் தொடங்கிவிட்டதாலா? (புதன் கேள்வி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொழுதும் வடசென்னைப்பக்கம் போய்ப்பாருங்கள்.  சென்னை பாஷை உயிர்ப்புடன் இருக்கிறது நைனா...

      நீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. ஐயப்ப தரிசனம் நன்று..

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா
    ஸ்வாமியே சரணம் ஐயப்பா

    பதிலளிநீக்கு
  6. வீரமணி - சோமு அவர்களது இனிய பாடல்கள் பலவும் நவீன கலக்கல் சத்தங்களோடு மறு பிறப்பு எடுத்திருக்கின்றன..

    இதுவும் ஐயனின் விருப்பமே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய வெர்ஷன் ஒன்று இருந்தாலும் அதை எம்பெட் செய்ய முடியாது.  இங்கு ஷேர் ஆகாது.   வீடியோ அனவைலபில் என்று சொல்லும்.  இதைதான் பகிர முடிகிறது..  குரலாவது ஒரிஜினலாயிருக்கிறதே என்று சந்தோஷம்.

      நீக்கு
  7. ///என்ன தான் கிராமத்திலிருந்து வந்திருந்தாலும் நாகேஷ் இப்படி நடு ரோட்டிலா நடப்பார்?. ///

    நெருடல் தான்...

    பதிலளிநீக்கு
  8. பட்டணத்துத் தெருக்களிலே
    ஆளு நிக்க ஒரு நிழலில்லையே
    வெட்டவெளி நிலமில்லையே
    நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே
    அடி சக்கே..

    அன்றைக்கு காலியாக இட்ங்கள் கிடந்தாலும் இன்றைக்கு உன்மையாக்கி விட்டார்கள்..

    பதிலளிநீக்கு
  9. வைக்கலாலே கன்னுக் குட்டி
    மாடு எப்போ போட்டுது
    கக்கத்திலே தூக்கி வச்சாக்
    கத்தலையே என்னது!?..


    டகால்டிகி வேலை அந்தக் காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது...

    பதிலளிநீக்கு
  10. /// ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
    வித்யாசம் தோணல்லே ///

    பாவம் சென்னை!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒன்றும் தெரியாமல் இருக்காது என்று வைத்துக் கொள்ளுங்கள்!

      நீக்கு
    2. கொஞ்ச நாள் கழித்தாவது இப்படி இப்படி உன் வீட்டுக்காரர் இப்படி இப்படி சொன்னார் என்று சொல்வார்கள் அல்வா?

      நீக்கு
  11. மெட்ராசை இம்மாந் தொலவுக்கு உர்ச்சிக் காட்னாலும் கவிஞ்சர் இங்கத் தான கடேசி வரிக்கும் குட்த்தனம் பேம்லி பன்னிக்கினாரு.. கவிஞ்சர் பேஜாரான ஆளு.. நல்லாத் தான் பாடி வெச்சிருக்காரு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் வெறுக்கவில்லை. இந்த முரண்பாடுகளை ரசிக்கிறார்!

      நீக்கு
  12. இப்போ யாரும் இந்தா மாரி டேமேஜ் சாங் பண்ணிட்டு போய்ட முடியும் ன்னு நெனைக்கிற நீ?..

    பதிலளிநீக்கு
  13. சென்னை
    சென்னப்பட்டணம்

    ராபர்ட்டு கெளைவு வருவதற்கு முன்
    மீன் உலர்த்தப்பட்ட இடம் தானே!..

    பதிலளிநீக்கு
  14. சென்னை
    சென்னப்பட்டணம்

    ராவர்ட்டு கெளைவு வர்றதுக்கு முன்பு மீன் உலர்த்தப்பட்ட இடம் தானே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னபட்டணம் எல்லாம் கட்டணம் 
      கைய நீட்டினா காசுமழை கொட்டணும் 

      நீக்கு
  15. திரு மயிலைக்கும்
    திரு அல்லிக்கேணிக்கும்
    திரு நீர்மலைக்கும்
    திரு வன்மீக ஊருக்கும்
    திரு வேற்காட்டிற்கும் வணக்கம் வணக்கம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே...

      நீக்கு
  16. ஒண்ணாம் படிதன்னில்
    சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா
    ஐயனே பொன் ஐயப்பா
    சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா...

    --- இப்படியே 18 படிகளுக்கும்.
    இளம் வயதில் மனனம் ஆனது, இன்றும் நினைவில் தங்கியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  பஜனைப்பாடல் போல எல்லோரும் கேட்டிருப்போம்.

      நீக்கு
  17. மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் பாடலில்
    'எங்கள் ஏரோட்டம் நின்னு போனால் உங்கள் காரோட்டம்
    என்னவாகும்? --என்பது எக்காலத்துக்கும் பொருந்தும் வீரியமுள்ள வரி..

    'அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி,

    அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி..'
    இந்த மெட்ராஸ் நல்ல மெட்ராஸின் அடுத்தக் கட்ட விரிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புன்னகை அணிந்த மாளிகைகள் 
      புன்னகை மறந்த மண்குடிசை..
      பசிவரா அங்கே மாத்திரைகள் 
      பட்டினியால் இங்கு யாத்திரைகள்...

      இதுவும் கவிஞர்தான்.

      நீக்கு
  18. ஏரோட்டம் நின்னு போனால் உங்கள் காரோட்டம்
    என்னவாகும்?..

    ஏரோட்டம் நடந்த வயல்வெளிகள் எல்லாம்
    நீரோட்டம் அற்றுப் போனதே..
    மனிதா...
    காரோட்டம் மட்டுமே நினைவோட்டம் என்று
    கனவோட்டம் கொள்ளாதே
    மனிதா.. மனிதா..

    இன்றைக்கு வேளாண்மை இல்லாத மாவட்டம் ஜென்னை.. ( சென்னை)

    பதிலளிநீக்கு
  19. ஏரோட்டம் என்ற வார்த்தை சிம்பாலிக்கா விளைச்சலுக்கு சொன்ன வார்த்தை என்று எடுத்துக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏர் கலப்பை/ இயந்திரம் - எதுவானாலும் அது ஓடினால் தான் விளைச்சல்...

      நீக்கு
    2. ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை..

      நீக்கு
  20. சரணம் ஐயப்பா.
    கேட்கும் போது மனம் உருகும் பாடல். இரண்டு பாடல்களுமே கேட்டீருக்கிறேன்.

    மற்றாஸ் எண்பத்தி மூன்றில் முதல் முதல் கண்டிருக்கிறேன்.அப்போது அவ்வளவு வளர்ச்சி இல்லை.அதன் பின்பு நான்கு தடவை வந்திருக்கிறேன் வளர்ச்சி தெரிந்தது.

    பதிலளிநீக்கு
  21. வீரமணி பாடலைக் கேட்காதவங்களும் உண்டா என்ன? அதிலும் எங்க வீட்டில் பையர், ரங்க்ஸ் , அண்ணா, தம்பி, அண்ணா பையர்னு எல்லோரும் சபரிமலைக்குப் போயிட்டு வருவாங்க. அது ஒரு காலம். வெயிலிலேயே ஒரு குளிர் படர்ந்திருக்கும். சோம்பலான வெயில் எனலாமோ? அப்போ ஐயனைக் கூப்பிட்டு பஜனைப்பாடல்கள் பாடித் தொழுத சுகம்! கிணற்றுத் தண்ணீரை இறைத்துக் குளித்த சுகம். இப்போ வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சைத்தண்ணீர் ஜிலீர்!  நடையணிகள் இல்லாத நடை..  கட்டுப்படு.

      நீக்கு
  22. என்ன ஆச்சரியம்! என்ன ஆச்சரியம்! இரண்டு நாட்களாக இந்தப் பாடலே மனதைச் சுத்திக் கொண்டிருக்கு. இன்னிக்கு நீங்க இங்கே போட்டிருக்கீங்க. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாடலும் அருமை, நாகேஷ், மனோரமா, இருவரும் அடித்த கொட்டம். படத்தை என்னமோ பல வருஷங்கள் கழிச்சுத் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். என்றாலும் ரசித்த படம்/பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். கேபிக்கு அப்புறம்தான் அறிவுஜீவி கிறுக்கு பிடிக்க ஆரம்பித்தது.

      நீக்கு
  23. ஐயப்பன் பாடல் பல முறை கேட்ட பாடல். பிடித்த பாடல், கேட்டேன்.
    அடுத்த பாடலும் நாகேஷ் நடிப்பும் அருமையாக இருக்கும்.
    அந்தக்கால சென்னையும் , இப்போழுது உள்ள சென்னையும் பார்த்தால் எவ்வளவு வித்தியாசம்!

    //மெதுவாப் போறவுக யாருமில்லே//

    அப்போதே அப்படி சொல்லி இருக்கிறார் இப்போது உள்ள வேகத்தைப்பார்த்தால் என்ன சொல்வாரோ கண்ணதாசன்.
    இரண்டு பாடல்களையும் கேட்டு ரசித்தேன், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'உலகம் பெரிது சாலைகள் சிறிது' என்று அப்போதே பாடி இருக்கிறார்.  வேறொரு கவிஞர் 'வேகம் வேகம் போகும் தூரம் மேஜிக் ஜர்னி 'என்று பாடி இருக்கிறார்.

      நீக்கு
  24. அடுத்த பாடலில் நாகேஷ் நடிப்பும் அருமையாக இருக்கும்.
    அந்தக்கால சென்னையும் , இப்பொழுது உள்ள சென்னையும் பார்த்தால் எவ்வளவு வித்தியாசம்!

    பதிலளிநீக்கு
  25. @ ஸ்ரீராம்..

    /// அவர் வெறுக்க வில்லை. இந்த முரண்பாடுகளை ரசிக்கிறார்!.. ///

    ஞானும் வெறுக்கயில்லா.. கேட்டோ..

    கவிதயும் சங்ஙீதமும்
    நாகேஷிண்ட
    நாட்யமாயிந
    நடிப்பும் அடிபொழி யல்லோ..

    மலையாளம் தெரிந்தோர் பொறுத்துக் கொள்ளவும்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!