திங்கள், 13 நவம்பர், 2023

'திங்க'க்கிழமை  :  ஆர்கானிக் பர்ஃபி  - ஹேமா ரெஸிப்பி 


தேவையான பொருட்கள் 

தோலுரித்து வறுத்த வேர்க்கடலை ஒரு கிண்ணம்.


வேர்க்கடலை எடுத்துக் கொண்ட கிண்ணத்தின் அளவில் பாதியளவு 
மீல்மேக்கர், ஓட்ஸ், அவல், பொட்டுக்கடலை, தேங்காய்த்துருவல் 



வெல்லம் தேவையான அளவு 


நெய் 

ஏலக்காய் 

வேர்க்கடலை, அவல், ஓட்ஸ், பொட்டுக்கடலை மீல்மேக்கர் எலலவற்றையும் தனித்தனியாக வறுத்து வைத்துக் கொள்ளளவும்.

தேங்காயை இரண்டு ஸ்பூன் நெய் விட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும்.

வறுத்த வேர்க்கடலையை முதலில் மிக்சியில் இட்டு "ஒண்ணும் பாதியுமா" நாலு சுற்று சுற்றிய பின் ஏலக்காய் உள்ளிட்ட மற்ற பொருட்களையும் ஒவ்வொன்றாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.  ஒவ்வொன்றையும் தனித்தனியாய் அரைத்துக் கூட எடுத்து பின்னர் சேர்த்துக் கொள்ளலாம்.


அரைத்து எடுத்திருக்கும் பொடியின் அளவுக்கு சமமாக, அலலது அதற்கு முக்கால் பங்கு வெல்லம் - அவரவர் சுவைக்கேற்ப - எடுத்து வெல்லத்தின் அளவில் பாதி அளவு தண்ணீரில் கரைத்து பாகு காய்ச்சவும்.  







முற்றிய பாகுக்கு கொஞ்சம் முந்தைய பதத்தில் எடுக்கவேண்டும்.  வெல்லப்பாகை வடிகட்டி எடுத்துக்கொண்டு அதை மறுபடி அடுப்பில் வைத்து கிளறிக்கொண்டே வறுத்து பொடி செய்து வைத்திருக்கும் கலவையை அதில் சேர்த்து கிளறவும். துகையால் பதத்துக்கு வந்த உடன் ஏற்கெனவே நெய் கொட்டி பரப்பி வைத்திருக்கும் தட்டில் அதைக் கொட்டி வில்லை போடவும்.

32 கருத்துகள்:

  1. ஆர்கானிக் பர்ஃபி நல்லா வந்திருக்கு. மீல் மேக்கரைத் தவிர மற்றவற்றைப் போட்டுச் செய்துபார்க்கணும். நல்ல செய்முறை.

    பதிலளிநீக்கு
  2. ஆர்கானிக் என்ற வார்த்தைக்கு தமிழ்ச் சொல் என்ன? தெரிந்தால் செய்து சாப்பிட்டுப் பார்ப்பதில் இன்னும் ஆர்வம் கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேமா இதற்கு பெயரே சொல்லவில்லை.  பர்பி என்று மட்டுமே சொன்னார்.  இப்போதெல்லாம் இந்த வார்த்தைக்குதானே கவர்ச்சி, மதிப்பு எல்லாம்?  எனவே நான் அந்த வார்தையைச் சேர்த்தேன்!  மேலும் ஹேமா ஆரோக்ய சமையல் ஹேமா என்று அறியப்படுபவர்!

      நீக்கு
    2. ஒரு பொருளை அதிக விலை வைத்து விற்க துணையாக இருக்கும் சொல் என்றளவில் ஆர்கானிக் என்ற சொல் உபயோகப்படுத்தப் படுகிறது என்பது மட்டும் தெரியும்.

      நீக்கு
    3. கூகுளில் தேடிப்பார்த்தேன். கரிம உணவு உற்பத்தி என்று ஏறத்தாழ நான்கு பக்கங்களுக்கு லேசில் புரிந்து விடாத படிக்கு ஏதேதோ சொல்கிறார்கள். வேண்டாம்டா சாமி என்று வந்து விட்டேன்.

      நீக்கு
    4. ஆர்கானிக் - இயற்கை - அதாவது செயற்கை உரங்கள், கெமிக்கல் உரங்கள் போன்றவை போடாமல் விளைவித்தவை. அதுபோல அவற்றை ப்ராசஸ் செய்யும்போதும் கெமிக்கல் உபயோகிப்பதில்லை.

      ஆனால் என் அனுமானத்தின்படி, ஆர்கானிக் என்ற பெயரில் எல்லாவற்றையும் விலை அதிகமாக விற்பதற்கான தந்திரத்தை உபயோகிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதனால் ஆர்கானிக் என்று போட்டிருந்தால் நான் நாலடி தள்ளி நடந்துவிடுவேன்.

      நீக்கு
    5. இதுவே சரி..

      ஆர்கானிக் என்பதே வியாவார தந்திரம்..

      நீக்கு
  3. ​ஆர்கானிக் என்பதற்கு பதில் ஆரோக்ய என்று அடைமொழி கொடுத்திருக்கலாம். மீல்மேக்கர் தான் ஏன் என்று தெரியவில்லை...​ தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான பர்பி! சோயா நிறைய பேருக்கு பிடிக்காது. இப்படி சேர்த்து செய்யும்போது அதன் சத்தும் உள்ளே போகிறது. நல்லதொரு குறிப்பைக் கொடுத்ததற்கு வாழ்த்துக்களும் அன்பு நன்றியும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ம்னோ அக்கா, சோயா பிடிக்காதவர்களுக்கு இப்படிச் சேர்த்து செய்யும் போது நல்ல டெக்னிக்!!!! ஹேமா அவங்க நிறைய இப்படி சத்துள்ள சமையல் குறிப்புகள் செய்யறவங்க. முன்னாடியும் இங்கு கொடுத்திருக்காங்க.

      ஆரோக்கிய சமையல் ஹேமா!ன்னுதான் அவங்களை ஸ்ரீராம் அறிமுகப்படுத்தினார்!

      கீதா

      நீக்கு
  5. செயற்கை உரம் போடாமல் இயற்கையாக விளைந்த/பயிர செய்யப்பட்ட காய் கனி கீரை இவற்றை ஆர்கானிக் என்று கூறிக் கொள்கிறார்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. 'கூறிக் கொள்கிறார்கள்' அவ்வளவு தானே!
    நல்லவேளை.. சொன்னீர்கள். நெல்லை பார்த்திருந்தார் என்றால் புதன்கிழமைக்குத் தள்ளி விட்டிருப்பார்.
    ஹி..ஹி..

    பதிலளிநீக்கு
  7. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. செய்முறை அருமை..

    ஆனாலும்
    சோயா சக்கையினை சாப்பாடு (மீல்ஸ்) என்று மாற்றியது வணிகத்தின் வக்கிரம்..

    இன்றைக்கு இதனுடன் சேர்ந்து கொண்ட இன்னொரு கொடூரம் தான் -

    ஆர்கானிக்!..

    பதிலளிநீக்கு
  9. இன்றைக்கு என்றால்

    இந்த காலகட்டத்தில் என்று பொருள் கொள்ளவும்..

    பதிலளிநீக்கு
  10. மீல் மேக்கர் என்பது சோயா புண்ணாக்கை உணவு என்று சந்தைப் படுத்திய நிறுவனத்தின் பெயராம்..

    இறைச்சிக்கு மாற்று என்ற பெருமை இதற்கு..

    சோயாபீன்ஸ் புண்ணாக்கில் புரதம் நிறைய உள்ளது..

    நீரிழிவை கட்டுப்படுத்துகின்றது என்றாலும் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனை உற்பத்தி செய்கின்றது..

    இது பெண்களுக்கானது..

    இளைஞர்கள் இதனை அதிகம் உட்கொண்டால் பிருகன்னளை ஆகிவிடுவார்கள் என்று அறியப்படுகின்றது..

    இதற்கு
    நேரிடையான சாட்சி உண்டா என்று கேட்டால்

    இதை வெளியில் பிறர் அறிய சொல்லவும் கூடுமோ!..

    ஒரு பழமொழி இருக்கின்றதே அந்தக் கதை தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா, சோயா பீன்ஸ் ஜீரணம் ஆவதற்கு நேரம் ஆகும் புரதம் நிறைய இருப்பதால். ஆனால் இப்படி அதன் எண்ணை பிரித்த பிறகு தயாரிக்கப் படுவதில் சத்தும் இருக்கும் அதே நேரம் ஜீரணம் ஆவதற்கு அவ்வளவு சிரமம் இல்லை என்பது நான் அறிந்த வரையில்.

      இது நாம் தினம் தினம் எடுத்துக் கொள்ளப் போவதில்லையே. எப்போதேனும்தானே. எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சுதான் ஆனால் இதில் பல பொருட்களுடன் தான் சேர்க்கப்பட்டுள்ளது.

      தவிர என் நினைவுத்திறன் படி ஹேமா அவங்க செய்முறை வந்து பல வருடங்கள் ஆச்சு. ரொம்ப வருஷம் கழிச்சு கொடுத்திருக்காங்க. அவங்க நிறைய இப்படி யோசித்து புதிது புதிதாகச் செய்பவர். இனியும் அவங்க செய்யும் புதிய வகைகளை இங்கு பகிர வேண்டும் இல்லையா.

      ஆர்வத்துடன் பகிர்பவர்களின் ஆர்வம் குன்றிவிடாமல் நாம் பார்த்துக் கொள்வோம் இல்லையா துரை அண்ணா.

      கீதா

      நீக்கு
  11. ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகின்றது சோயா புண்ணாக்கு வகையறாக்களைச் சாப்பிட்டு..

    பதிலளிநீக்கு
  12. இறைச்சிக்கு மாற்று என்பதால் இதன் விற்பனை இங்கே தான் அதிகம்..

    ஏனெனில், இந்நாட்டில் தான் சர்வ பட்சணி விரும்பிகளும் அதிகம்..

    குருதி புலால் வாடையைத் துறக்க முடியாதவர்களுக்குத் தான் இது..

    மற்ற வகை மனிதர்க்கு சோயா புண்ணாக்கு எதற்கு?..

    மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்பவர்க்கு தேங்காய்ப் பால் எதற்கடி குதம்பாய்?..

    சம்போ சிவ சம்போ!..

    பதிலளிநீக்கு
  13. இன்றைய செய்முறை அளித்த ஹேமா அவர்கள் எனது கருத்துகளால் வருத்தப்படக் கூடாது..

    நாங்களும் எங்கள் குடும்பத்தில் சோயா புண்ணாக்கு தாசர்களாகத் தான் இருந்தோம்..

    அதிலிருந்து தப்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன..

    பதிலளிநீக்கு
  14. சுவையான குறிப்பு. நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  15. இனிப்புப் பிரியர்களுக்கு நல்ல பர்பி.

    பதிலளிநீக்கு
  16. ஹேமா, சூப்பர் குறிப்பு. ரொம்ப நல்லா வந்திருக்கு.

    மீல்ஸ் மேக்கர் இதுவரை ஸ்வீட்டில் சேர்த்தது இல்லை. இப்படிச் செய்திருந்தாலும்...பேரீச்சை சேர்த்திருக்கிறேன். உலர் பருப்புகளும் கூடச் சேர்த்து. நீங்க செய்திருப்பது போல் மீல்ஸ் மேக்கரும் சேர்த்துச் செய்தா போச்சு!

    (கீதாவின் Dietician (அதாங்க உள் மனசு!!!) அது சரி கீதா பெரிசா செய்தா போச்சுன்னு சொல்றியே...இது ஸ்வீட்டுமா!!!!! ஸ்வீட்டு! நீ அப்பப்ப என் சொற்படி கேட்பதே இல்லை...இது வார்னிங்க் !!!)

    ஸ்ரீராம் ஆர்கானிக்? சத்தான பர்ஃபின்னு வந்தா சரியா இருக்குமோ?! ஆர்கானிக் என்றால் பொருட்கள் எலலம் இயற்கை உரத்தில் விளைந்தவைன்னு அர்த்தம் இல்லையோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. மீல் மேக்கர் என்பதைப் பெயரளவில் மட்டும் கேட்டிருக்கேன். வாங்கியதே இல்லை. எங்க வீடுகளிலும் யாருமே இதை வாங்கினது இல்லை. எங்க பையர் மட்டும் காளான் உணவு சாப்பிடுவார் எப்போதேனும். அதையும் அவரே செய்து கொள்ளுவார். மருமகள் வாங்கினதும் இல்லை. செய்து கொடுத்ததும் இல்லை. சாப்பிடவும் இல்லை. மற்றப் பொருட்களைப் பயன்படுத்தி அதாவது வேர்க்கடலை, ஓட்ஸ், அவல், பொட்டுக்கடலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துத் தேங்காய்த் துருவலுடன் கலந்து இந்த பர்ஃபியைச் செய்து பார்க்கலாம். நான் செய்த பாதாம் பர்ஃபி என்னும் பெயருள்ள இனிப்பிலும் இப்படித்தான் சில/பல சாமான்களைச் சேர்த்தேன். ஏதோ ஒரு தரம் ரொம்ப நல்லா வந்திருந்தது. இம்முறை பல்லைக் காட்டி விட்டது. ஆனாலும் விடலையே1 சாப்பிடறோம். பட்டர் பேப்பர் மாதிரிப் பேப்பரில் சுத்தி பாதாம் அல்வா என்னும் பெயரில் விநியோகிக்கிறோம். இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
  18. ஹேமா பர்பி என்று மட்டுமே கொடுத்திருந்தார்.  நான்தான் ஆர்கானிக் சேர்த்த குற்றவாளி!  ஆரோக்ய என்று சேர்க்க வந்து,  இருக்கட்டும் என்று ஆர்கானிக் என்று சேர்த்தேன்.  

    இதை அனுப்பும்போதே ஹேமா சொன்னது சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு ப்ரோட்டின் சேர சில வழிகளே உள்ளன.  இதில் ப்ரோட்டீன் சேர நான் இதைச் சேர்த்தேன்.  பிடிக்காதவர்கள் விட்டு விடலாம் என்று சொல்லி இருந்தார்.  சில சமயங்களில் சிறு குறைகளை பார்த்து மறுபடி மறுபடி அதைப் பேசும்போது மெயின் விஷயம் அடிபட்டு போகிறது இல்லையா துரை செல்வராஜூ அண்ணா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க ஆர்கானிக் என்பதற்குப் பதில் ஆரோக்கிய என்று சொல்லியிருந்தால் சரியாக இருக்கும். இங்க ஆர்கானிக் கடுகு, ஆர்கானிக் வெல்லம் என்று ஒரே புளுகுகளைத்தான் பார்க்கிறேன். ஒரு நிலம் இயற்கை உரத்தினால் செழிப்படைய ஐந்து வருடங்களாகும். அப்படி எத்தனை மீட்டர் (ஏக்கர அல்ல) இயற்கை நிலம் இருக்கிறது?

      எளிய ஆரோக்கியமான ப்ரோட்டீன் வேர்கடலை.

      நீக்கு
  19. ஆர்கானிக் பர்ஃபி செய்முறை மற்றும் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. எளிதாக இருக்கிறது செய்முறை.
    ஒரு தடவை செய்து பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!