வெள்ளி, 10 நவம்பர், 2023

வெள்ளி வீடியோ : நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை வென்றவர் யாரடியோ

எழுதியவர் யாரென்று தெரியாது.  பாடியவர் யரன்று தெரியும்.  சென்ற வாரமே முடிவாகி விட்டது இந்த வாரம் என்ன தனிப்பாடல் பகிர்வது என்று!

பம்ம பம்மதா தைய தையநக்கு தின்னாக்கு நக்குதின் பஜன்கரே

உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
பொம்ம பொம்மதா தைய தையநக்கு தின்னாக்கு நக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட
திக்குத்தாள திம்மிக்கிட தகிடுத தகிடுத தள தவோடுதாம்

அமரு வாசுவை கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா
அமரு வாசுவை கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா
தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா

வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட
திக்குத்தாள திம்மிக்கிட தகிடுத தகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அமரு வாசுவை கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
அமரு வாசுவை கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா
பம்ம பம்மதா தைய தையநக்கு தின்னாக்கு நக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
தை தை கணபதி நாம் ஸதா… தை தை கணபதி நாம் ஸதா

======================================================================================================

பரமேஸ்வரி..  ராஜேஸ்வரி..  ஜெகதீஸ்வரி என்கின்ற பாடலும், யாரை நம்பி நான் பொறந்தேன் என்கின்ற பாடலும் இருந்தாலும் ஏனோ எனக்கு எங்க ஊர் ராஜா படத்தில் இந்தப் பாடல் பிடிக்கும்.  அதற்கு காரணம் அதன் டியூன்.

எங்க ஊர் ராஜா...

1968 ல் வந்து பெருவெற்றி பெற்ற இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தியிலும் எடுக்கப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.

நீயொரு பெண்பிள்ளை..  நானொரு ஆண்பிள்ளை வென்றவர் யாரடியோ என்கிற வரியில் ஆணாதிக்கம் தெரிந்தாலும் அது அந்தக் காலம்!  யாரும் ஒன்றும் சொல்லவில்லை.

மாதவன் இயக்கத்தில், கண்ணதாசன் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.  சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் நடித்திருக்கும் படம்.

என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் 
என்ன சொல்லடியோ

என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் 
என்ன சொல்லடியோ

காலோடு மீன் வந்து மோதிடும் சுகத்தை
கண்களில் கூறடியோ 
கருத்த கூந்தலில் மேனியை மூடி
கரையில் ஏறடியோ
நீரினில் ஆடிடும் பூவினை காணட்டும்
நேருக்கு நேரடியோ ...
நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை 
வென்றவர் யாரடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் 
என்ன சொல்லடியோ

பொன்னான கைகளை மேற்புறம் தூக்கி
கும்பிடு போடடியோ 
புதிய கண்ணனின் கோபியை போலே
உடையை கேளடியோ
லீலைகள் செய்தவன் சேலையை தந்தால் 
நான் கொஞ்சம் வேறடியோ...
நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை 
வென்றவர் யாரடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் 
என்ன சொல்லடியோ

31 கருத்துகள்:

  1. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. பம்ம பம்ம்பதா...

    தாள கதிக்கு அமைந்த பாடல்...
    81 ல் முதல் முதலாகக் காதில் ஒலித்தது..
    உருது வார்த்தைகளும் இந்த பாடலினுள் இருக்கின்றன..
    ரமணியம்மாள் அவர்கள் அளவுக்கு யாரும் பாடியிருக்கின்றார்களா..

    தெரியவில்லை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டு ரசித்திருக்கிறேன். விவரம் தெரியாது!

      நீக்கு
    2. சௌராஷ்ட்ர மொழியோனு சந்தேகம். ரமணி அம்மாளின் எல்லாப் பாடல்களுமே மிகவும் பிடித்தமானவை. இந்தப் பாடலுக்கும் குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் பாடலுக்கும் எங்க பெண் ஆடுவா ஒன்றரை வயசிலே! அந்த மாதிரி ஆடுவதற்கு அப்போதுள்ள குழந்தைகள் யாராலும் முடியாது.

      நீக்கு
  4. கணபதி நர்த்தனம் இசை வடிவாகக் காட்டப்படுகின்றது..

    மிருதங்கம், ஸாரங்கி, கினரி (கின்னரர் வாசிப்பது) முக சங்கு (மோர்சிங்) முதலான இசைக் கருவிகள் சொல்லப்படுகின்றன..

    பதிலளிநீக்கு
  5. இதில் நவாபு எதற்காக வந்தார் என்பது புரிய வில்லை..

    ஒருவேளை கேளிக்கை வரி வசூலிக்க வந்திருப்பாரோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சாரங்கியின் வகை நவாபு சாரங்கியோ என்னவோ...

      நீக்கு
  6. இந்த பம்ம பம்மதா பாடலை ஆதிசங்கரர் மண்டபத்தில் இருந்து எழுதினார் என்றும் உருட்டப்படுகின்றது..

    பதிலளிநீக்கு
  7. எப்படியோ TMS பாடிய திரைப் பாடல் நினைவுக்கு வந்திருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் முரடன் முத்து பாடல் யார் பாடியது?  பெண்ணாசை கொண்டவர்க்கு உள்ளம் இல்லை...

      நீக்கு
    2. மன்னிக்கவும்..
      மறந்து விட்டேன்..

      நீக்கு
  8. பெங்களூர் ரமணி அம்மாள் குரலில் இந்தப் பாடல் மிகவும் பிடித்தது. மற்ற பாடகர்களின் குரலில் இப்பாடல் கேட்டிருந்தாலும் ஏனோ பிடித்ததில்லை.

    பதிலளிநீக்கு
  9. முதல்பாடல் இன்றுதான் அறிகிறேன். எமக்கு தெரிந்தது 'தையத்...தைய ...தையா தக்க தையதையா...... :) நீங்கள் தந்த முதல் பாடலில் இருந்துதான் எழுதியிருப்பார்கள் போன்றும் தோன்றுகிறது.

    இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் பாடல் எது என்று தெரியவில்லை மாதேவி. நன்றி கருத்துரைக்கு.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. பெங்களூர் ரமணி அம்மாள் பாடல் அடிக்கடி கேட்ட பாடல்.
    பிடித்த பாடல்.
    அடுத்த பாடல் கேட்டு பல வருடம் ஆச்சு. இருபாடல்களையும் கேட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு

  12. @ ஸ்ரீராம்..

    /// சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் முரடன் முத்து பாடல் யார் பாடியது? பெண்ணாசை கொண்டவர்க்கு உள்ளம் இல்லை..///

    ஓ...

    அந்தப் பாடலைப் பாடியவர் சிவாஜி கணேசன்..

    பதிலளிநீக்கு
  13. அடுத்து வரும் பாடல் கேட்ட ஞாபகம் இல்லை. இத்தனைக்கும் ஜிவாஜி பாடல்! ம்ம்ம்ம்ம்ம்ம்:)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!