வெள்ளி, 3 நவம்பர், 2023

வெள்ளி வீடியோ : உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் காதலில் சுகம் வருமே

 இந்த வாரம் முருகனை உற்சாகமாக அழைக்கலாமா?

இவர் குரல் கேட்டதும் துள்ளிக் குதித்து ஓடி வருவான் வடிவேலன்.  யார் எழுதிய வரிகள்...........  என்று வழக்கம்போல தெ....ரி...யா...து.  யார் இசை அமைத்தார்கள்?  தெ..ரி..யா..து!

பாடியவர் யார் என்று உங்களுக்கும் தெரியும்.  எனக்கும் தெரியும்.  பெங்களூர் ஏ ஆர் ரமணி அம்மாள்.

வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா!
வள்ளி மணவாளனுக்கு … அரோகரா!

​வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா … அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா

வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா … அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா …

வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா!
வள்ளி மணவாளனுக்கு … அரோகரா!

சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா … ஆடிவா
சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா … ஆடிவா
சிங்கார வேலுடனே ஓடிவா … ஓடிவா
சிங்கார வேலுடனே ஓடிவா … ஓடிவா
சிந்தையிலே நினைப்பவரை நாடிவா...
உன்னை சிந்தையிலே நினைப்பவரை நாடிவா
சின்னஞ்சிறு சிவகுமரா ஓடிவா
வேலவா …

வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா!
வள்ளி மணவாளனுக்கு … அரோகரா!

முத்தே ரத்தினமே … முருகையா
முத்தே ரத்தினமே … முருகையா..முருகையா
முத்தே ரத்தினமே … முருகையா...முருகையா
முழுமதி முகத்தவனே … கந்தையா … கந்தையா
முழுமதி முகத்தவனே … கந்தையா … கந்தையா
முத்தகனே வினை தீர்க்கும் வேலையா
வடி வேலையா … உன் கையில் வேலையா
அந்த வெள்ளிமலை நாதன் பெற்ற சின்னையா
அந்த வெள்ளிமலை நாதன் பெற்ற சின்னையா
வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா … அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா

வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா … அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா …


=========================================================================================

சிவா, கீதாஞ்சலி போன்ற தெலுங்கு பட தமிழ் டப்பிங்  முயற்சிகளுக்குப்பின் (உதயம், இதயத்தைத் திருடாதே முறையே) நாகார்ஜுனா தமிழில் நேரடியாக நடித்த முதல் படம் 'ரட்சகன்' என்று நினைவு.

1997 அக்டோபர் மாதம் வெளியானது.  அப்போது இது மிக அதிகமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாம்.  கே டி குஞ்சுமோன் தயாரித்து நஷ்டமடைந்தார்!  பிரவீன் காந்தி என்று இயக்குனர்.  அவருக்கும், அப்போதைய உலக அழகி சுஷ்மிதா சென்னுக்கும் முதல் படம்!

இசை, இசைப்புயல் ஏ ஆர் ரெஹ்மான்.  ஏ ஆர் ரெஹ்மான் பாடல்களில் எனக்குப் பிடித்த சில பாடல்களில் இன்றைய இந்தப் பாடலும் ஒன்று.  இதே படத்தில் 'சோனியா சோனியா' பாடலும், 'சந்திரனைத் தொட்டது யார்' பாடலும் கூட கேட்கக் கூடிய பாடல்கள்.  

வைரமுத்து எழுதி கே ஜே யேசுதாஸ் ( 'பென்னே பென்னே உன் வளையல்' ) சாதனா சர்கம் குரலில் ஒலிக்கும் இன்றைய 'நெஞ்சே நெஞ்சே' பாடல் மிக அருமையான பாடல்களில் ஒன்று.

வழக்கம்போல காதலியின் அப்பா கொஞ்ச நாள் மகளை பார்க்கக் கூடாது, கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கண்டிஷன் போட, காதலுக்காக ஒத்துக்கொள்ளும் காதலன் அதனால் படும் அவஸ்தையும், அவனுக்கு சமாதானம் சொல்லும் காதலியும்.  உணர்வுகளை அருமையாய் வைரமுத்து வரிகளில் காட்ட, பாடலிலும் டியூனிலும், குரலிலும் அது இழைந்து வருகிறது.

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினைவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு

கண்களை விற்றுத்தான் ஓவியமா
வெந்நீரில் மீன்கள் தூங்குமா
கண்ணீரில் காதல் வாழுமா

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு

பெண்ணே பெண்ணே உன் வளையல்
எனக்கொரு விலங்கல்லவோ
காற்றுக்கு சிறை என்னவோ
தன்மானத்தின் தலையை விற்று
காதலின் வால் வாங்கவோ
கண் மூடி நான் வாழவோ
உன்னை எண்ணி முள் விரித்து
படுக்கவும் பழகிக்கொண்டேன்
என்மேல் யாரும் கல் எறிந்தால்
சிரிக்கவும் பழகிக்கொண்டேன்
உள்ளத்தை மறைத்தேன்
உயிர்வலி பொறுத்தேன் என்
சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்

நெஞ்சே நெஞ்சே நெருங்கிவிடு
நிகழ்ந்ததை மறந்துவிடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
நிஜங்களில் கலந்துவிடு
கட்டி வைத்த காற்றே வந்துவிடு
கைகள் ரெண்டை ஏந்தினேன்
காதல் பிச்சை கேட்கிறேன் 

நெஞ்சே நெஞ்சே..நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே

அன்பே அன்பே நீ பிரிந்தால்
கண்களில் மழை வருமே
காற்றெனை கை விடுமே
விதை அழித்தே செடி வருமே
சிற்பிகள் உடைத்த பின்னே
முத்துக்கள் கை வருமே
காதல் ராஜா ஒன்றை கொடுத்தால்
இன்னொன்றில் உயிர் வருமே
உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
காதலில் சுகம் வருமே
அஸ்தமனம் எல்லாம் நிரந்தரம் அல்ல
மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்

நெஞ்சே நெஞ்சே..நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே


39 கருத்துகள்:

  1. முதல் பாடல் அருமை. பல முறை கேட்டிருக்கிறேன். ரமணி அம்மாள் குரலே தனிதான்.

    பதிலளிநீக்கு
  2. //கே.டி. குஞ்சுமோன்
    தயாரித்து நஷ்டமடைந்தார். //

    ஏதோ பக்கத்திலிருந்து கணக்கு வழக்கெல்லாம்
    சரி பார்த்தமாதிரி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பவே தெரிஞ்சதுதானே... மேலும் விக்கியிலும் போட்டிருக்காங்க...

      நீக்கு
    2. ரகசியம்.. ரகசியம்
      பரம ரகசியம்
      அப்பப்போ நஷ்டக் கணக்கு
      ரகசியம்.. பரம ரகசியம்..!

      நீக்கு
    3. படம் வெளியானபோது சரியாக ஓடவில்லை என்பது நினைவில் இருக்கிறது.

      நீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. ரமணியம்மாள் அவர்களது பாடல் சிறப்பு..

    80 களில் சிங்கப்பூரில் கேட்ட நினைவு..

    எனது தொகுப்பில் உள்ள பாடல்களில் இதுவும் ஒன்று..

    பதிலளிநீக்கு
  5. முதல் பாடல் பல்லாயிரம் முறைகள் கேட்டு இருக்கிறேன் ஜி.

    இரண்டாவது பாடலும் சிறப்பே...

    பதிலளிநீக்கு
  6. வேலவா
    வடிவேலவா..
    பாடலுக்கு இசையமைப்பு கல்யாணம் என்ற நினைவு..

    பதிலளிநீக்கு
  7. இசைப்புயல் -- என்ன அர்த்தத்தில் என்ன பட்டமோ, தெரிலே! காலூன்றி நின்ற
    எந்த மரத்தையெல்லாம்
    அடிச்சு சாய்த்ததோ தெரிலே!...

    'புயலுக்குப் பின்னே அமைதி....... இது தான் வாழ்க்கை நியதி'

    -- ஞானிகளுக்கெல்லாம்
    தெரிந்தது தான்!

    பதிலளிநீக்கு
  8. ஐயப்ப பஜனாம்ருத பாடல்களுக்கு முன்னோடி ரமணியம்மாள் அவர்கள்..

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. என்னப்பனே
    என் ஐயனே..

    - எனும் பாடலைக் கேட்டதுண்டா!..

    ஆட்டம் தானே வரும்..

    பதிலளிநீக்கு
  11. டைமண்ட் கவிஞரின் வரிகள்.. அடடா, அடடாவோ!...

    'தன்மானத்தின் தலையை விற்று --
    காதலின் வால் வாங்கவோ'

    ஹி..ஹி...

    பதிலளிநீக்கு
  12. சிற்பிகள் உடைத்த பின்னே...

    சிப்பிகள்


    பதிலளிநீக்கு
  13. 'வேலவா வடிவேலவா".....அழகிய முருகன்பாடல் வெள்ளி பகிர்வாக வந்தது மகிழ்ச்சி.

    மற்றைய பாடலும் அருமையானது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. முதல் பாடல் மிக அருமையான பாடல் , அடிக்கடி கேட்ட பாடல். எளிமையான பாடல் வரிகள். துள்ளல் இசை.
    காவடி எடுத்து வருபவர்கள் பாடி ஆடி கொண்டு வருவார்கள்.
    அடுத்த பாடல் கேட்டு பல வருடம் ஆச்சு இன்று மீண்டும் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  15. முதல் பாடல் கேட்காமல் இருக்க முடியாது. எங்க பெண் பிறந்ததில் இருந்தே ரமணி அம்மாள் பாடல்கள் பிரபலமாக இருந்தன. ஒவ்வொன்றுக்கும் அவள் ஒவ்வொரு முறையில் ஆடுவாள். அதனால் ரமணி அம்மாள் பாடலைத் தேடித் தேடி வாங்கி இருக்கோம். அடுத்த படம் தெரியாது. பாடலும் தெரியாது. என்றாலும் இனிமையாகவே இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா. 

      பம்மபம்மதா தையதையநக்க திரிநாக்கு நக்கீர்த்தின் பஜங்கரே கேட்டிருப்பீர்கள்!

      நீக்கு
    2. yessssooo yessu. Just one week back one small boy sang this song. You tubele ketten. :))))

      நீக்கு
  16. முதல் பாட்ல் நிறைய கேட்டதுண்டு, ஸ்ரீராம். அருமையான பாடல்.

    ரெண்டாவது பாடல் இப்பதான் கேட்கிறேன். கேட்டதில்லை அவ்வளவாக. ஓ ரட்சகன் படமா...

    பாடல் ஓகே. கேட்க நன்றாக இருக்கு, ஸ்ரீராம். மெலடி...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!