வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

நீயும் ஒரு ஆணை இட பொங்கும் கடல் ஓயலாம்... மாலை முதல் காலை வரை சூரியனும் காயலாம்

 சென்ற வாரம் 'கற்பூர ஒளியினிலே' பாடலைப் பகிரும்போது நீண்ட நாள் தேடிய இன்னொரு பாடலும் இங்கே கிடைத்தது என்று சொல்லி இருந்தேன்.  அந்தப் பாடல் ஜெயவிஜயா பாடிய 'திருமதுரை தென்மதுரை' பாடல்.   இப்படியே நான் தேடி கிடைக்காத பாடல்கள் ஒவ்வொன்றாகக் கிடைத்தால் நல்லதுதான்!

வழக்கம் போலதான்.  எழுதியவர் யார் என்று தெரியாது.  இசை ஜெயவிஜயா சகோதர்களாகவே இருக்கலாம்.

திருமதுரை தென்மதுரை (திகழ்ந்து?) சிறந்து  நிற்கும் தேன்மதுரை 
திருமதுரை தென்மதுரை (திகழ்ந்து?) சிறந்து  நிற்கும் தேன்மதுரை 
சிறந்து விளங்கும் மீனாட்சி அருள்வழங்கும் அவள் ஆட்சி 
சிறந்து விளங்கும் மீனாட்சி அருள்வழங்கும் அவள் ஆட்சி  - திருமதுரை 

ஊருக்கோ அவனொரு கண்ணன் உமையாளுக்கோ அவனே அண்ணன் 
ஊருக்கோ அவனொரு கண்ணன் உமையாளுக்கோ அவனே அண்ணன் 
கார்மேகவண்ணன்..  
கார்மேகவண்ணன் தந்தானே இளையாளை 
 கார்மேகவண்ணன் தந்தானே இளையாளை 
அந்த சொக்கேசன்   கரம் பிடித்தாளே  - திருமதுரை 

வாடிய பயிருக்கு மழையாவாள் அரும்பசிக்கும் அவள்  விருந்தாவாள் 
வாடிய பயிருக்கு மழையாவாள்   அரும்பசிக்கும் அவள் விருந்தாவாள்   
கொடுநோய்க்கும் அவள் மருந்தாவாள் 
கொடுநோய்க்கும் அவள் மருந்தாவாள் - இந்த 
உலகுக்கே அவளின்றி எதுவுமில்லை ...  எதுவுமில்லை
எதுவுமில்லை     - திருமதுரை 


https://www.youtube.com/watch?v=JlZvOksl6NA


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

1985 ல் வெளிவந்த படம்.  'பிள்ளை நிலா'.  'ஆகாய கங்கை' படம் தோல்வி அடைந்தபின் இயக்குனர் மனோபாலாவுக்கு வேறு படம் அமையவில்லை.  தற்கொலைக்கே முயன்றாராம் மனோபாலா.  தயாரிப்பாளர் கலைமணி அவரை அழைத்து 'முதல் வசந்தம்' படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுக்க, உடன் தயாரித்த தயாரிப்பாளர்கள் மனோபாலாவை விரும்பாமல் மணிவனனைப் போடச் சொன்னதால் கலைமணியும் மணிவண்ணனை இயக்குனராக்கி விட்டாலும், மனோ பாலாவுக்கு கட்டாயம் ஒரு படம் தருகிறேன் என்று சொல்லி பிள்ளை நிலா வாய்ப்பை வழங்கினாராம்.  மோகன் ஏற்கெனவே மனோபாலாவின் நண்பர் என்பதால் மோகன் மனோபாலாவுக்கு ஒரு படம் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தாராம்.  இந்தப் படம் மனோபாலாவுக்கு வெற்றிப் படமாகியது.

இந்தப் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய ராஜா மகள் பாடல் சூப்பர் ஹிட்.  வாலியின் பாடலுக்கு இசை இளையராஜா.  காட்சியில் மோகன், ராதிகா.



ராஜா மகள்……ரோஜா மகள்…..

ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா - ராஜா மகள்

பன்னீரையும் வெந்நீரையும்
உன்னோடு நான் பார்க்கிறேன்
பூ என்பதா பெண் என்பதா
நெஞ்சோடு நான் கேட்கிறேன்
முள்ளோடுதான் கள்ளோடுதான்
ரோஜாக்களும் பூக்கலாம்
அம்மாடி நான் அத்தோடுதான்
உன் பேரையும் சேர்க்கலாம்

கோபம் ஒரு கண்ணில்
தாபம் ஒரு கண்ணில்
வந்து வந்து செல்ல
விந்தை என்ன சொல்ல
வண்ண மலரே…..ஏ…ஏ…ஏ…ஏ…

ராஜா மகள் ரோஜா மகள்

ஆடைகளும் ஜாடைகளும்
கொண்டாடிடும் தாமரை
வையகமும் வானகமும்
கை வணங்கும் தேவதை
நீயும் ஒரு ஆணை இட
பொங்கும் கடல் ஓயலாம்
மாலை முதல் காலை வரை
சூரியனும் காயலாம்

தெய்வ மகள் என்று
தேவன் படைத்தானோ
தங்கச் சிலை செய்து
ஜீவன் கொடுத்தானோ
மஞ்சள் நிலவே…ஏ…ஏ…ஏ…ஏ…

ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா

ராஜா மகள் ரோஜா மகள்

36 கருத்துகள்:

  1. முதல் பாடல் இப்போதுதான் முதல் முறையாக்க் கேட்கிறேன். நன்றாக இருக்கிறது.

    இரண்டாவது பாடல் நிறையமுறை கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.  இரண்டாவதும்தான்!

      நீக்கு
  2. அனைவருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இன்றைய முதல் பாடலைக் கேட்டு பல வருடங்கள் ஆகு விட்டன...
    ஜெய விஜயா இருவரின் குரலும் தனித்தன்மை...

    பதிலளிநீக்கு
  4. ஜெயவிஜயா சகோதரர்களது ஐயப்பன் பாடல்கள் கேட்டதுண்டோ!!

    வெண்ணெய் உருகுவது போல இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்?  இவர்கள் பாடிய 'ஸ்வாமி திந்தகத்தோம்' பாடல் நானே இங்கு பகிர்ந்திருக்கிறேனே...   அப்போதுமுதல் இந்தப் பாடலை தேடினேன்.  இப்போதுதான் கிடைத்தது. 

      இன்னொரு பாடலும் தேடினேன்.  தேடும் பாடல் எது என்பதே இப்போது சட்டென நினைவுக்கு வரவில்லை.  நேற்று நினைவுக்கு வந்தது.  குறித்து வைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்!

      நீக்கு
  5. ராஜா மகள் ரோஜா மகள்...

    அருமை..
    அருமை..

    பதிலளிநீக்கு
  6. முதல் பாடல் கேட்டு இருக்கிறேன் ஜி
    ஆனால் அதிக முறைகள் கேட்டதில்லை.

    இரண்டாவது பாடல் அதிக முறைகள் கேட்டு ரசித்த பாடலே...‌

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறையபேர்களுக்கு அந்தப் பாடலை நினைவு படுத்தும் முயற்சிதான்!  நன்றி ஜி.

      நீக்கு
  7. முதல் பாடல் கேட்ட நினைவில்லை.

    இரண்டாம் பாடல் பல முறை கேட்டு ரசித்த பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். முதல் பாடல் மனதை உருக்கும் சிவரஞ்சனி ராகம்.

      நீக்கு
  8. முதல் பாடல் கேட்டதே இல்லை சூப்பர் பாட்டு சிவரஞ்சனில அழகான பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. ஜெயவிஜயா? பாடவும் செய்வாங்க இசைஅமைப்பாங்களா? இதுவரை கேட்டது இல்லை ஸ்ரீராம். ரொம்ப நல்லா பாடுறாங்க. மீண்டும் கேட்டேன் பாடலை.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னரே இவர்கள் பாடிய பாடலை பகிர்ந்திருக்கிறேன் கீதா...   மலையாள தேசத்தவர்கள்தான்.

      நீக்கு
  10. ராஜா மகள் பாட்டு நிறைய கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம்.

    அருமையான பாடல். இப்பவும் ரசித்தேன். ஜெயசந்திரன் குரலில் அந்தப் பாட்டின் வரிகளில் காதல் ஏக்கம் ஒரு சின்ன சோகம் கலந்த உணர்வு தெரிகிறது.

    ஆமா மோகன் மனோபாலாவின் நண்பர். அதை அவரே சொல்லியிருக்கிறார்.

    என்ன ராகம் என்று டக்குனு தெரிய மாட்டேங்குது....ஆனா அருமையான அழகான ராகம். பாடிப் பார்த்து கண்டுபிடிக்க முயற்சி. ஏதோ புதிய ராகம் போல இருக்கு. கீரவாணி சாயல் இருக்கு ஆனா கீரவாணி இல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ராகம்னு இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லையா?  நீங்களாவது கண்டுபிடித்துச் சொல்வீர்கள் என்று பார்த்தேன்.

      நீக்கு
  11. இன்றைய பாடல் பகிர்வுகள் இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன். நல்ல பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  12. முதல் பாடல் கேட்டதில்லை. ஜெயவிஜயா அவர்களின் குரல் வித்தியாசமாக இருக்கிறது. அருமையான குரலில் அருமையான பாடல். மிகவும் நன்றாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க ஊர்க்காரர்தாம் ஜி.  அவர்களில் ஒருவர் மிக சமீபத்தில்தான் மறைந்தார்.

      நீக்கு
    2. ஓ கேரளமா? இதையும் அவரிடம் சொல்லியிருக்கிறேன் இப்ப. என்ன சொல்றார் பார்ப்போம். தெரிஞ்சிருந்தா நேத்தே சொல்லியிருப்பாரே!

      கீதா

      நீக்கு
  13. இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன். அருமையான பாடல்தான். என்றலௌம் ஜெயசந்திரன் பாடிய இடத்தில் எஸ் பி பி பாடியிருந்தால் இன்னும் கெஞ்சல்களும் குழைவுகளும் குரலில் வந்திருக்கலாம் என்று ஏனோ தோன்றியது. மோகன் படத்தில் பாடி நடிப்பதற்கு (அவரது குரலுக்குக் கூட சுரேந்தர் அவர்கள்தான் குரல் கொடுத்தார் இல்லையா?) எஸ் பி பி பாட்டு அமையும் போது ஏதோ அவரே பாடியிருப்பது போன்று ஒன்றிப் போகும் என்று ஏதோ ஒரு, மோகன் கொடுத்திருந்த பேட்டியில் கேட்ட நினைவு. அந்த அளவு எஸ் பிபி அந்த அசைவுகளுக்கும் உணர்வுகளுக்கும் வடிவம் கொடுத்துப் பாடுவதாகத்தான் எனக்குத் தோன்றும். டப்பிங்கிற்குச் செய்வது போல, பாடும் போது முன்னில் அப்பாடல் காட்சி கூட ஓடும் என்று கேட்டதுண்டு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இந்த பாடல்களுக்கு இந்த மாதிரி குரல்தான் என்று இசை அமைப்பாளர்கள் தீர்மானித்து விடுகிறார்கள் என்று நினைப்பேன். 

      ஒருவர் குரலில் முதலில் கேட்டு ரசித்த ஒரு பாடலை இன்னொருவர் குரலில் பெரும்பாலும் ரசிக்க முடிவதில்லை.  மற்றவர்கள் பாடிய சில பாடல்களை SPB பாடி இருக்கிறார். என்ன இருந்தாலும் ஒரிஜினல் போல வரவில்லை என்றே தோன்றும். 

      ஹிந்தியில் கிஷோர் பாடல்கள் சிலவற்றை அபிஜித் பாடி இருக்கிறார். ரசிக்கலாம்.  அசலுக்கு அருகில் வரும்.

      நீக்கு
    2. ஸ்ரீராம், துளசிக்கு ஹிந்திப்பாடல்கள் சுத்தமா தெரியாது! எனக்காச்சும் ஒன்றிரண்டு சும்மா கேட்டதுண்டு. அவர்கிட்ட இக்கருத்தை காப்பி பேஸ்ட் பண்ணி அனுப்பினப்ப....கிஷோர்குமார் தெரியும் நல்லா பாடுவார்னு தெரியும் ஆனால் பாட்டு எதுவும் தெரியாதே என்று!

      நேற்று அவர் வாய்ஸ் மெசேஜ் கேட்டு இங்கு டைப்பும் போது துளசிக்கு இப்படிக் கூட தோன்றுவதுண்டா என்று ஆச்சரியம். பாடலைக் கேட்கும் போது! அதாவது இந்த அளவு நோட் செய்து!!!! எஸ் பி பி ஃபேனான எனக்குக் கூடத் தோணலையே!

      கீதா

      நீக்கு
  14. இரண்டு பாடல்களும் கேட்டு ரசித்த பாடல்கள்.
    இரண்டு பாடல்களும் கேட்டு வெகு நாள் ஆச்சு.
    இன்று கேட்டேன், நன்றி.

    பதிலளிநீக்கு
  15. முதல் பாடல் முதல் முறையாக கேட்கிறேன். நன்றி
    இரண்டாவது பாடலை கேட்காமல் இருக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னால் முதல் பாடலையே மறுபடி மறுபடி கேட்காமல் இருக்க முடியவில்லை.  வழுக்கிச் செல்லும் ஸ்ருதி மாறாத குரல்கள்.

      நீக்கு
  16. பொங்கும் கடல் ஓய்ந்தால் என்ன
    உற்பாதம் ஏற்படுமோ?

    மாலை முதல் காலை வரை
    சூரியன் காய்ந்தால்
    காலை கடந்து மாலை வரை இருள் சூழுமோ?

    இருள் விரும்பாத வெளிச்சம் வேண்டும் 'காதல்' என்ன காதல்?

    அல்லால்
    காதலன் வந்து விட்டான்
    கதவைச் சாத்தடி, கதையோ?..

    பதிலளிநீக்கு

  17. இந்தப் பாடலைக் கேட்டுத் தான் எவ்வளவு நாட்கள் ஆகி விட்டன!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!