நிதிவனத்தில் தரிசனம் முடிந்து யமுனை ஆற்றின் கரையை நோக்கிச் சென்றோம். செல்லும்வழியில் பார்த்த கோவில் இது. இறங்கி உள்ளே செல்லவில்லை.
18ம் நூற்றாண்டில் லக்னோவைச் சேர்ந்த ஷா சகோதரர்களால் (குந்தன்லால், புந்தன்லால்) கட்டப்பட்ட கோவில் இது. இதனை ஷா ஜி மந்திர் என்றே அழைக்கின்றனர். நேரமின்மையால் இந்தக் கோவிலுக்குள் நாங்கள் செல்லவில்லை.
கண்ணன் யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபிகையர்களின் துணிகளை எடுத்துக்கொண்டு மரத்தில் ஏறி லீலை புரிவது. இதற்கு அடையாளமாக ஒரு பெரிய மரம் யமுனை நதிக்கரையில் இருக்கிறது. இவற்றையெல்லாம் நாம் அடையாளமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்ரீகிருஷ்ணர் துவாபர யுகம்.
இந்த மரத்தின் அருகிலேயே காளிங்க நர்த்தனம் ஆடிய கிருஷ்ணரை நினைவுகூறும் வகையில் கோவிலொன்று இருக்கிறது (சிறிய கோவில்). இந்த இடம் யமுனை நதிக்கரையில்தான் இருக்கிறது.
யமுனையில் படகில் அமர்ந்துகொண்டு, கரையைப் பார்க்கும்போது நகரின் புராதனம் நன்றாகத் தெரிந்தது.
யமுனை படகுச்சவாரிக்குப் பிறகு, அங்கிருந்து புறப்பட்டு, அருகிலிருந்த ரங்க்ஜி மந்திருக்குச் சென்றோம். இது தென்னிந்தியர்களால் நிர்வகிக்கப்பட்டுவரும் ஓரளவு பிரம்மாண்டமான கோவில். கிட்டத்தட்ட நம் ஆண்டாள் ரங்கமன்னார் கோவில் போல (ஸ்ரீவில்லிபுத்தூர்), கர்பக்ரஹத்திற்கும் பக்தர்கள் வணங்கும் இடத்திற்கும் வெகு தொலைவு. அதே போன்ற அமைப்பு. தென்னிந்திய பாணியில் நிர்வகிக்கப்படும் என்றாலே, சட்டை இல்லாமல் இருந்தால்தான் திருமஞ்சனம், வேதகோஷ்டி போன்றவற்றில் கலந்துகொள்ளமுடியும்.
இந்தக் கோவிலின் ஒரு பகுதியில், தசாவதாரங்களும், ஸ்ரீகிருஷ்ணர் சம்பந்தப்பட்ட சிற்பக் கண்காட்சி இருந்தது. மண்ணினால் செய்யப்பட்ட சிற்பங்கள். (பெரிய அளவு கொலு பொம்மை போல). அதையும் பார்த்தோம்.
கோவிலின் வெளிப்புறம் கடைவீதிகள். எல்லா க்ஷேத்திரத்தில் இருக்கும் வித வித கடைகள்தாம் என்றாலும், விருந்தாவனத்தில் ஜால்ரா, துளசி மாலைகள் விசேஷம். பொதுவாக ஏமாற்று இருக்காது. இதைத் தவிர வடநாட்டிற்கே உரித்தான லஸ்ஸி மற்றும் இனிப்புக் கடைகள் உண்டு.
கோவில் தரிசனங்கள் முடிந்த பிறகு தங்குமிடத்திற்கு வந்துசேர்ந்தோம். மதியம் 12 மணிக்கு பகலுணவு. பிறகு இரண்டு மணி நேர ஓய்வுக்குப் பிறகு 2 ½ மணி வாக்கில் விருந்தாவனத்தைவிட்டு குருக்ஷேத்திரம் நோக்கிச் செல்லப்போகிறோம்.
எப்போதும்போல சுவையான மதிய உணவு, இனிப்போடு. இன்னும் 1 ½ மணி நேரம் இருந்த தாலும், நாங்கள் ஏற்கனவே லக்கேஜை ரெடி பண்ணி வைத்துவிட்ட தாலும், கடைத்தெருவுக்கு நானும் மனைவியும் சென்றோம். துளசி மாலை, ஜால்ராக்கள் வாங்கிவிட்டு ஆட்டோவில் திரும்பினோம். (எல்லாம் நடக்கும் தொலைவுதான்).
விருந்தாவனத்தில் குரங்குத் தொந்தரவு உண்டு. அதனால் கேமரா போன்றவற்றை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளவேண்டும். முன்பெல்லாம், வரும் யாத்ரீகர்களிடமிருந்து மொபைலைப் பிடிங்கிக்கொண்டு மரத்தில் ஏறி உட்கார்ந்துவிடுமாம். இதற்குப் பழக்கியவர் வந்து ஒரு ஃப்ரூட் ஜூஸ் (டெட்ரா பேக்) மற்றும் கொஞ்சம் ரூபாயை யாத்ரீகரிடமிருந்து கறந்துவிட்டு, மொபைல் போன்றவற்றை குரங்கிடமிருந்து வாங்கித்தந்துவிடுவாராம். இதனால் விருந்தாவனத்துக்குக் கெட்டபெயர் வருகிறது என்று, அந்தக் காட்டுவாசிகளை ஊர்மக்கள் விரட்டிவிட்டுவிட்டார்களாம்.
மதியம் எங்கள் பேருந்து குருக்ஷேத்திரத்தை நோக்கிப் புறப்பட்டது. வழியில் 6 மணிவாக்கில் ஒரு இடத்தில் நிறுத்தி காபி மற்றும் இனிப்பு/காரம் வழங்கினார்கள். இப்படி இடையில் நிறுத்துவதால் கொஞ்சம் கால்களுக்கும் ஓய்வு கிடைக்கிறது. இரவு சுமார் 9 மணிக்கு குருக்ஷேத்திரத்தில் ஜாட் சபா பவனை அடைந்தோம். கொடுக்கப்பட்ட அறையில் எங்கள் லக்கேஜுகளை வைத்தோம். 9 ¾ வாக்கில் இரவு உணவு தந்தார்கள் (கதம்பசாதம், வற்றல், தயிர்சாதம், ஊறுகாய். இனிமேல்தான் உணவு தயாரிப்பவர்கள் செட்டில் ஆகணும்.)
இந்த
வாரமும் படங்கள் அதிகமாக ஆகிவிட்டதால் மிகுதியை அடுத்த வாரம் தொடர்வோம்.
(தொடரும்)
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி சார்.
நீக்குகும்பகோணம் பக்கம் போனீர்களென்றால் ஊத்துக்காடு போய் வாருங்கள். அற்புதமான காளிங்க நர்த்தனம் தரிசனம் கிடைக்கும்
பதிலளிநீக்குகோயிலுள்ளே ஊத்துக்காடு வேங்கட சுப்பையருக்கு சிறிய சிலை உண்டு.
கண்ணன் பாட்டு என்றால் வேங்கட சுப்பைய்யர் தான். அவருக்கு ஈடு இணை யாரும் இல்லை
எல்லாம் கண்ணன் அருள். அவரை நினைக்கும் பொழுதே
'அலைபாயுதே கண்ணா..'
கீதம் மனசில் பிரவாகிக்கிறது.
இந்தத் தகவலை இரு வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருக்கக் கூடாதா ஜீவி சார்?
நீக்குநாங்கள், சும்மா கும்பகோணம் சென்று ஐந்து நாட்கள் தங்கிவந்தோம். பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். கார் எடுத்துக்கொண்டு நாகப்பட்டினம் வரை சென்றுவந்தோம்.
அடடா! நீங்கள் அறொயாததா என்ற நினைப்பு. இனிமேல் சென்றால் பார்த்து தரிசித்து வாருங்கள்.
நீக்கு** அறியாததா
நீக்குசெம்மங்குடி, ஊத்துக்காடு.... என்று பல்வேறு ஊர் போர்டுகள் பார்ப்பேன். ஊத்துக்காட்டில் கிருஷ்ணர் கோவில் இருக்கும் என்பது நினைவுக்கு வரவில்லை ஜீவி சார்.
நீக்குபடஙகள் அழகாக உள்ளன. இதுவரையிலும் கவனித்த வகையில் வட இந்தியாவில் முக்கிய ஊர்களில் தென்னிந்தியர்களால் நிர்வகிக்கப்படும் தென் இந்திய கோயில்கள் இருக்கின்ற்ன. இது நாட்டு ஒற்றுமையை காட்டுகிறது. அதே சமயம் தென் இந்தியாவைப் பொறுத்தவரை, முக்கியமாக தமிழ்நாட்டில் வட இந்திய பாணி கோயில்கள் இல்லை. ஏன் என்று விளக்க முடியுமா??
பதிலளிநீக்குகோவிந்தபுரத்தை சொல்லவேண்டாம். அது 20ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார்.. வட இந்தியாவில் உள்ள தென்னிந்தியபாணி கோவில்களும் மிகப் புராதானமானவை கிடையாது. ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவைதாம்.
நீக்குசமீபத்தில்தான் வட இந்திய பாணி கோவில்கள் தமிழகத்தில் அதிகரிக்கின்றன. காரணம் புலம் பெயர்ந்தவர்களது தேவை அல்லது அரசியலாக இருக்கலாம்.
வட இந்தியாவில் உள்ள எல்லா முக்கிய கோயில்களுமே முகலாயர் ஆட்சிக்கு பின்னர் கட்டப்பட்டவை தான். அது எந்த பாணியானாலும். தமிழ்நாடு கோயில்கள் அப்படி இல்லை.
நீக்குJayakumar
மாயவரத்தில் "காசி விஸ்வநாதர் கோவில்" என்ற பழைய கோவில் இருக்கிறது. ஆதினம் காசி போய் வந்த நினைவாக கட்டியது என்பார்கள். மூலவர் இருக்கும் இடம் காசி கோபுரம் போல இருக்கும்.https://mathysblog.blogspot.com/2023/02/blog-post_17.html
நீக்குபதிவு போட்டு இருக்கிறேன். இப்போது வண்ணம் அடித்து விட்டார்கள். முன்பு காசி கோவிலில் உள்ளது போலவே இருக்கும்.
தகவலுக்கு நன்றி. சென்று பதிவைப் பார்த்தேன். கோயில் இரண்டு பாணிகளின் கலப்பு. முகப்பு கோபுரம், கொடிமரம், நகரா பாணி கருவறை விமானம், அதிலும் கும்பம் போன்ற தென் இந்திய விமானக்கலப்பு என்று இருக்கிறது. கருவறை விமானம் தவிர அனைத்தும் தென் இந்திய பாணியே.
நீக்குஜெயகுமார் சார்.... பஞ்சத்துவாரகை யாத்திரை தொடர் படித்த பின்பும் உங்களுக்கு இந்தச் சந்தேகம் வரலாமா? முக்கிய துவாரகைக் கோவில்கள் அனைத்துமே முகலாயர் காலத்துக்கு முற்பட்டன
நீக்குகோமதி அரசு மேடம்... நீங்கள் சொன்னதை இப்போது பார்த்தேன். இது பற்றி உ.வெ.சாமிநாதையர் புத்தகத்தில் படித்திருக்கிறேனோ? (காசி வாசி தம்பிரான் என்று).
நீக்குஇன்னொன்று இப்போது பலப் பல திவ்யதேசக் கோவில்களிலும் பெயிண்டை அடித்து, கோவிலைப் புதுப்பித்துவிட்டதுபோலச் செய்கிறார்கள். பழைமை காணாமல்போனதுதான் மிச்சம்.
கோட்டையில் கோயில் கட்டின மாதிரி ரங்க்ஜி கோயிலின் வெளிப்புறம்.
பதிலளிநீக்குதென்னிந்தியர்களால் நிர்வகிப்படும் கோயில் என்கிறீர்களே! நம் கோயில்கள் போன்ற
கர்ப்பகிரகமும் ஸ்வாமி சிலைகளும் உண்டா?
தமிழ் பேசும் அர்ச்சகர்கள் உள்ளனரா?
தென் இந்திய பாணி என்பது தமிழ்நாட்டு பாணி மாத்திரம் என்பதில்லை.
நீக்குபோட்டோவில் கருவறை தனியே, நமஸ்கார மண்டபம் தனியே என்று உள்ளதை கவனிக்கவில்லையா?
அர்ச்சகர்களுக்கு பொது மொழி சமஸ்க்ரிதம். வேதம் படித்தவர் சமஸ்க்ரிதம் அறிந்தவர் அர்ச்சகர்களாக இருப்பர்.
ஜீவி சார்... நம் பாணிக் கோவில்கள் என்பது கோபுரம், த்வஜஸ்தம்பம், முன் மண்டபம், பிரகாரம், கருவறை மற்றும் பல்வேறு சந்நிதிகள் கொண்டவை. நம் பாணிக் கோவில்கள் என்றாலே நாலாயிர திவ்யப் பிரபந்தங்களுக்குத் தனி இடம் உண்டு. பிரம்மோற்சவம், பவித்ரோத்ஸவம் உண்டு. அப்போது தமிழ் பிரபந்தங்கள் சேவிக்கப்படும், எல்லா நாட்களிலும்.
நீக்குதென்னிந்திய பாணி என்பது திராவிட பாணி... கோபுரங்களோடு கூடியது. கேரள பாணி வேறு. அங்கு முன் கோபுரம் கிடையாது (விதி விலக்குகளான அனந்தபுரம் போன்றவை திராவிட, உட்புறம் கேரள பாணியாக அமைந்தவை)
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குமுருகன் நம்மைக் காப்பானாக
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குபதிவும் படங்களும் அருமை. நேரில் பார்த்த உணர்வை தருகிறது.
பதிலளிநீக்குஷா ஜி மந்திர் பார்க்க அழகாய் இருக்கிறது.
யமுனை நதிக்கரையோரம் உள்ள பெரிய மரத்துக்கு கீழ் நின்று நீங்கள் எடுத்து கொண்ட படத்தில் இரண்டு, மூன்று குரங்கார், ஒரு செல்லம் இடம்பெற்று இருக்கிறார்கள்.
காளிங்க நர்த்தனர் நன்றாக இருக்கிறார் தரிசனம் செய்து கொண்டேன்.
யமுனையில் படகுச்சவாரி நன்றாக இருந்து இருக்கும்.
ரங்க்ஜி மந்திர் படங்கள் எல்லாம் அருமை. மூலவர் படங்கள் அருமை.
தூண் சிற்பங்கள் அழகு.
தசாவதாரங்களும், ஸ்ரீகிருஷ்ணர் சம்பந்தப்பட்ட சிற்பக் கண்காட்சி இருந்தது. //
நிறைய இடங்களில் இப்படி கண்காட்சி இருக்கும் வட நாட்டில் குருசேத்திரத்திலும் இப்படி கண்காட்சி பார்த்தோம்.
ஜால்ராக்கள் நாங்களும் வாங்கினோம் . மாயவரத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் பஜனை மடத்தில் கிருஷ்ணஜெயந்திக்கு பஜனை நடக்கும் அங்கு பாடும் பக்தர்களுக்கு கொடுத்தோம். இன்னும் சில வீட்டில் இருக்கிறது.
அனைத்தும் அருமை.
நன்றி கோமதி அரசு மேடம். நான் வீட்டுக்கு வந்த பிறகு சில நேரங்களில் ஜால்ரா சப்தம் போடுவேன். மத்தவர்கள் கர்ர்ர்ர்ர்ர்னு சொல்வாங்க.
நீக்குபடங்கள் எல்லாம் சூப்பர். முதல் படம் ரொம்ப அழகா இருக்கு அந்த ஷா கோவில். உள்ள போக முடி ந்திருந்தால் இன்னும் அந்தப் படங்களும் கிடைத்திருக்கும் பார்க்க!!!
பதிலளிநீக்குகீதா
மிக முக்கியமான கோவில்களைத் தவிர மற்றவற்றிர்க்கு நேரம் இருக்காது, யாத்திரை நடத்துபவரும் கூட்டிச் செல்வதில்லை கீதா ரங்கன் ஜி (தில்லி வெங்கட் பாணி ஹா ஹா)
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குயமுனை நதியும் படகுகளின் அணிவகுப்பும் படங்களில் இரண்டாவது படம் ஈர்க்கிறது அழகா வரிசையா நிறுத்தி வைச்சிருக்காங்க.
பதிலளிநீக்குநதியும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளும் எப்பவுமே பார்க்க ரம்மியம்தான்
கீதா
ஆமாம் கீதா ரங்கன். நதி, கடல், யானை, வானம் என்று பலவும் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். என்ன ஒண்ணு, நாற்றம் அடித்தால் கஷ்டம்.
நீக்குயமுனையில் படகில் அமர்ந்துகொண்டு, கரையைப் பார்க்கும்போது நகரின் புராதனம் நன்றாகத் தெரிந்தது.//
பதிலளிநீக்குகொஞ்சம் கங்கைக்கரை போன்று தெரிகிறது. ஏனா அதுவும் இப்படித்தானே இருக்கும்...
இந்த செட் படங்களில் கடைசி படம் அட்டகாசம்!!! செமையா இருக்கு நடுவில் மணல் திட்டு - கரை போன்று ஒன்று (சாலைகளில் டிவைடர் இருக்குமே அப்படி) இருக்கிறதே!!!
கீதா
இல்லை கீதா ரங்கன். கங்கைக் கரை, தொடர்ந்து படித்துறைகளாக தனியாக மெஜெஸ்டிக்காக இருக்கும்.
நீக்குஅப்போது யமுனையில் நீர் வரத்து குறைவு. நீர் வரத்து அதிகமாக இருந்தபோதும் போயிருக்கிறேன். கொஞ்சம் நீர் அதிகமாக இருக்கும்போது நிறைய ஆகாயத்தாமரைகளும் மிதக்கும்.
உங்கள் கருத்தைப் படித்ததும், நான் கங்கையில் அக்கரைக்குச் சென்று அங்கு தர்ப்பணம் பண்ணியது நினைவுக்கு வருகிறது. என் வாரணாசிப் பயணத்தை ஒரு முறை எழுதுகிறேன் (மூன்று நான்கு தடவைகள் சென்றிருந்தாலும் சென்ற முறை மூன்று நாட்கள் வாரணாசியில் இருந்தோம்)
நீக்குயமுனைக்கரையில் அந்த புராதான கோயில் கவர்கின்றது!
பதிலளிநீக்குரங்க்ஜி மந்திர் அமைப்பும் மஹல் போன்று இருக்கு சாளரம் எல்லாம் இருக்கின்றதே.
அழகாவும் இருக்கு
சிற்பங்கள் சூப்பர். அதில் திருவிக்ரம/வாமன அவதாரச் சிற்பம் போல இருக்கிறதே!! அதுதானே!! இல்லையோ அது? பளிச்சென்று இருக்கு
கீதா
நன்றி கீதா ரங்கன். ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்திருக்கும். மாற்றரசர்களால் கலைக்கப்பட்டது தவிர மிச்சம் உள்ளவை மாத்திரமே தற்போது இருக்கிறது
நீக்குகடைகள் இப்படிக் கோவில் அருகில் இருப்பவற்றைப் பார்க்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப நல்லாருக்கு...
பதிலளிநீக்குகீதா
எனக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் நேரம் இருந்தால்தான் இந்தக் கடைகளில் அளைய (அலைய இல்லை) விடுவார் யாத்திரை நடத்துபவர். சொன்னால் சண்டைக்கு வராதீங்க. பெண்கள், (அனேகமா எல்லோரும்) கடைகளைப் பார்த்தால் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி, கூட வந்திருப்பவர்கள், நம்ம ஒருவேளை துறவறம் போயிருக்கலாமோ என்று எண்ணவைத்துவிடுவார்கள் ஹா ஹா ஹா
நீக்குகொலு பொம்மை போல பெரிதாக இருப்பவை போன்று வேறு சில கோவில்களிலும் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஇங்கு பெங்களூரில் மஹாலக்ஷ்மி லே அவுட்டில் இருக்கும் பாலாஜி கோவில் வளாகத்தில் ஒரு மஹல் போன்று இருக்கும் அதற்குள் சென்றால் படிகளும் லிஃப்டும் உண்டு ஒவ்வொரு தளத்திலும் தசாவதாரம், மற்றும் பல புராணக் காட்சிகள் இப்படிப் பொம்மை வடிவில் பெரிதாக மிக அழகாக உருவாக்கி வைத்திருக்காங்க. படங்களும் எடுத்தேன் எங்கிருக்கு என்று பார்க்க வேண்டும். சில அங்கிருக்கும் லைட்டில் சரியாக வருவதில்லை.
கீதா
அவைகள் என்னை மிகவும் கவரவில்லை. இதுபோலவே ஹரித்துவாரிலும் ஒரு கோவிலில் ஒவ்வொரு தளத்திலும் இதுபோன்று பொம்மைகளைப் போன்று பல சிற்பங்கள். ஓகே ஓகே லெவல்தான்.
நீக்குவழக்கம் போல புனிதப் பயணத்தின் ஒளிப்படங்கள் அழகு..
பதிலளிநீக்குதரிசித்துக் கொண்டேன்..
ஓம் ஹரி ஓம்.
வாங்க துரை செல்வராஜு சார். நன்றி
நீக்குயமுனை நதிகரையோரம் கண்ணன் கோபிகைகள் லீலை கண்டோம்.
பதிலளிநீக்குயமுனையில் இருந்து பழைய நகரம் காட்சிகள் அழகாக இருக்கின்றன.
ரங்க்ஜி மந்திர் கவர்கிறது. சிற்பங்கள்பலவும் கலையை பறைசாற்றுகின்றன.
படங்கள் நன்று தொடர்கிறோம் உங்கள் பயணத்தில்.
வாங்க மாதேவி அவர்கள். நன்றி
நீக்குவணக்கம் நெல்லைத்தமிழர் சகோதரரே.
பதிலளிநீக்குஇன்றைய கோவில் யாத்திரை பகிர்வும், படங்களும் வழக்கம் போல மிக அருமையாக உள்ளது.
காளிங்க நர்த்தன கிருஷ்ணர் தரிசனம் ரங்க்ஜி மூலவர் தரிசனம் திருவேங்கடமுடையான் தரிசனம் அனைத்தும் மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது. யமுனை நதி படங்கள், தூண்களின் சிற்பங்கள் படங்கள் அழகு. இன்னும் படங்கள் ஒவ்வொன்றையும் பெரிதாக்கிப் பார்த்து விட்டு வருகிறேன்.
இங்கு எங்கள் (பெரிய மகன் வசிக்கும்) அப்பார்ட்மெண்டில் விநாயக சதுர்த்தி விழா, விநாயகர் கரைப்பு என்ற விஷேடங்கள் நடக்கிறது.காலை, மாலையென பூஜைகள், குழந்தைகளுக்கான நடனம், பாட்டு, ஸலோகங்கள் என அமர்களப்படுகிறது. அதில் எங்கள் குழந்தைகளும் (பேரன், பேத்திகள்) கலந்து கொள்வதால் நாங்களும் இன்றெல்லாம் கொஞ்சம் பிஸி. எனவே பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். இங்கும் பிள்ளையார் சதுர்த்தியை அசோசியேஷன் கொண்டாடுது (நான் போகலை. பெரும்பாலும் வட இந்திய பாணியிலான கொண்டாட்டம். நேற்று இரவு ரொம்பவே சப்தமா இருந்தது. இன்று எல்லா டவரிலும் கோலம் போட்டு அமர்க்களமாகச் செய்கிறார்கள்)
நீக்குஅது சரி... பிள்ளையார் கொழுக்கட்டைகள் செய்தீர்களா? படத்துடன் பதிவு வருமா?
படங்களுடன் பதிவு நேரடியாகப் பார்க்கிற அனுபவம் தருகிறது..வாழ்த்துகள்..
பதிலளிநீக்குமிக்க நன்றி ரமணி சார்.
நீக்குஷாஜி மந்திர இந்தமுறை பார்க்கவில்லை, சரி... சென்றமுறைகளில் பார்த்திருப்பீர்கள் இல்லையா? படங்கள் யாவுமே மனத்தைக் கவர்கின்றன.
பதிலளிநீக்குயாத்திரைக் குழுத் தலைவர், மிக முக்கியமான கோவில்களுக்கு மாத்திரமே அழைத்துச் செல்வார். அதற்கே நேரம் சரியாக இருக்கும். எல்லாக் கோவில்களும் மதியத்துக்கு மேல் நடை சாத்திடுவாங்க. அதற்குள் அந்த அந்த இடங்களுக்குச் செல்லவேண்டும். இடையில் உணவு நேரம், அடுத்த ஊருக்குப் புறப்படும் நேரம் போன்ற constraints இருப்பதால் இந்த மாதிரி கோவில்கள் வாய்ப்பதில்லை என்று நினைக்கிறேன்.
நீக்குஅழகான படங்கள். ரங்க்ஜி மந்திர் பிடித்த இடம். ஒவ்வொரு முறை விருந்தாவன் செல்லும்போதும் அங்கே அதிக நேரம் செலவிடுவது வழக்கம். படங்களும் தகவல்களும் நன்று. தொடரட்டும் பயணமும் பதிவுகளும்.
பதிலளிநீக்குவாங்க் தில்லி வெங்கட் நாகராஜ். விருந்தாவன், கோகுலம் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள். குருக்ஷேத்திரம் (அது ஒரு யுத்த பூமி..) இப்போ ஒரே காங்க்ரீட் காடாயிடுச்சு. பார்த்தோம்னா எதிர்காலத்துல 20 அடிக்கு 20 அடி விட்டுவிட்டு மிச்சமெல்லாம் வீடுகள் மயமாகிடும்.
நீக்கு