புதன், 11 செப்டம்பர், 2024

காக்கா பிடித்தல் என்றால் என்ன?

 

ஜீவி: 

எபியில் பலர் பார்வையில் படுகிற மாதிரி ஒரு கோரிக்கையை வைப்பது எப்படி? கோரிக்கை ஒன்றை உதாரணமாகக் கொடுத்து பதில் சொல்லுங்கள்.

# இதற்கு கௌதமன்தான் பதில் சொல்ல வேண்டும் 'சொல்ல விரும்புகிறேன்' என்று புதுப்பகுதிஆரம்பித்து விடலாம்.

& இது சம்பந்தமாக ஒரு சிறிய பரிசோதனை முயற்சி மேற்கொண்டுள்ளேன். அது பலிக்கிறதா என்று பார்த்து பிறகு இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கிறேன். ( க்ளூ : ரீட்டா & மீட்டா ) 

நெல்லைத்தமிழன் :

1). கேட்டவன், பாடுபட்டவன் பெரியவனா இல்லை நிறைவேற்றியவன் சாதித்தவனா? இது செயலைப் பொறுத்து மாறுபட்டு அவரவர்களுக்குத் தோன்றியவாறு சொல்வதால் இந்தக் கேள்வி.

# இந்தக் கேள்வி எனக்கு விளங்கவில்லை.‌ நிறைவேற்றியவன் இயல்பாக  உயர்ந்தவன் என்றாலும் அவனுக்குக் கைகாட்டி ஊக்கமளித்தவனும் உந்துதல் செய்தவரும் கூட பெரியவர் தாம். இவரன்றி செயல் இல்லை அவரன்றி வெற்றி இல்லை அல்லவா ?

& மூவரில் யார் சாமர்த்தியசாலியோ அவர் பெயரைத் தட்டிச் செல்வார்! 

2). இயல்பாக ஜாதிப் பெயரையும் கொண்டுள்ளவர்களின் ஜாதிப் பெயரை நீக்கி அவரை அடையாளமில்லாதவர்களாகச் செய்வதன் காரணம் என்ன? நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, முத்துராமலிங்கத் தேவர் என்றிருக்கும் பெயர்களை பிள்ளை, தேவர் என்று இல்லாமல் எழுதினால் ஜாதி ஒழிந்துவிடுமா? அப்படி ஒழியும் என்றால் 'ரெட்டி' 'ராவுத்தர்' போன்ற பல வால்களை மாத்திரம் விட்டுவைத்திருப்பதன் மர்மம் என்ன?

# சாதி இந்தியாவில் ஒழிக்கவொண்ணாதது என்று‌கணிக்கிற‌ அறிஞர் பெருமக்கள் பலர். சாதியை முன்னிறுத்தி சண்டை சச்சரவு செய்யாத சமுகமே எளிய குறிக்கோளாக இருக்க வேண்டும். 

 இந்த பெயர்ப்பலகை மாற்றம் எல்லாம் மக்களை முட்டாள் அடிக்கிற அரசியல் ஆதாய தந்திரம். "கிருஷ்ணமா சாலை" போன்ற அபத்தங்கள் தவிர வேறு சுவாரசியம் இல்லாத புரட்சி. 

அவரவர் தத்தம் சாதியைப் பெருமையோடு பார்க்கிறார்கள் என்பது கண்கூடு. 

.‌கே சக்ரபாணி, சென்னை 28: 

மேடைகளில்  பேசும் போது  லேடீஸ் அன்ட்  ஜென்டில்மென். என்று ஆரம்பிக்கிறார்கள்  ஆண்களுக்கு  ஜென்டில்மென்  என்கிறார்கள்  பெண்களுக்கு  ஒன்றும் சொல்வதில்லையே  ஏன்?

# ஜென்டில்மேன் என்கிற ஆங்கில பதத்திற்கு பெண்பால் வார்த்தை லேடி. 

ஏதேனும்  ஒரு காரியம்  நடக்கவேண்டும் என்றால்  அவரை காக்கா  பிடி. என்கிறார்களே  அது  எப்படி வந்தது? 

# கால் கை பிடித்தாவது காரியத்தை சாதித்துக் கொள் என்று சொல்லப் போய் , அது காக்கா  பிடித்தாவது என்று ஆகிவிட்டது. 

& இங்கு மட்டும் அல்ல - பேச்சு வழக்கில், பல இடங்களில் கால், கை என்பது காக்காய் ஆகிவிட்டது. 

உதாரணம்  : கால் கை வலிப்பு (காக்காய் வலிப்பு), எச்சில் கையால் கால் கை ஆட்டமாட்டான். (காக்காய் ஓட்டமாட்டான் ) 

யார் விஷயத்திலேனும் தலையிட்டால்  அங்கபோய் ஏன் மூக்கை நுழைக்கிறாய்  என்பார்கள்.  அங்கு நம் பேச்சை. சட்டை செய்யவில்லை என்றால்  மூக்குஅறுபட்டு ( நோஸ் கட் ஆகி) வந்தாயா  என்பார்கள். இது எப்படி வந்தது? 

# I smell a rat, I smell something fishy .. இவை ஆங்கிலத்தில் சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய சொற்கட்டு.  idiom என்று சொல்வார்கள்.‌ அங்கே மூக்குக்கு தானே வேலை.  எனவே "உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்காதே" என்று சொல்வது சரியான பிரயோகம்தான்.

& இராமாயண காலத்தில் மற்றவர் விஷயத்தில் தலையிட்டதால், சூர்ப்பனகை மூக்கறுபட நேர்ந்தது. அன்றிலிருந்து 'மூக்கறு'  என்னும் பதம் உபயோகத்தில் வந்திருக்கும் என நினைக்கிறேன். 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

மற்றவர்களிடமிருந்து பாராட்டையும், புகழ்ச்சியையும் எதிர்பார்ப்பது இயல்பான உணர்ச்சிதானே, அப்படியிருக்க, "பெருமைக்காக காரியம் செய்கிறார்கள்" என்று இகழ்ச்சியாக பேசுவது சரியா?

# ஒரு நல்ல காரியம் செய்வதில் இருக்கிற சந்தோஷம் -  அதை முன் வைத்து நல்ல காரியம் செய்து சந்தோஷமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் பிறத்தியார் பாராட்ட வேண்டும் என்று நாம் ஒரு காரியத்தைச் செய்தால் அதை அவர்கள் சொல்லிக் காட்டுவதில் தவறில்லையே.

& 'பெருமைக்காக காரியம் செய்கிறார்கள் ' என்று சொன்னால் அது பெருமைதானே! இகழ்ச்சியாகப் பேசுகிறார்கள் என்று ஏன் நினைக்கவேண்டும்? 

= = = = = = = = 

KGG பக்கம். 

kgs நினைவுகள் தொடர்கின்றன. 

kgs தனது உண்டியலில் சேர்த்து வைத்த காசுகளை என்ன செய்தார்? 

சென்னையில் அந்தக் காலத்தில் இருந்த மூர் மார்க்கெட் போன்று, நாகையில் அந்தக் காலத்தில் இருந்த ஓர் இடம் - அந்திக் கடை. ரொம்ப சிறிய பகுதிதான். ஆனால் அங்கே மாலை நேரம் தொடங்கி இரவு பத்து மணி வரையிலும் கடத்தல் பொருட்கள் உட்பட, பல தரப்பட்ட பொருட்களும் கிடைக்கும். பழைய கிராமஃபோன் ரெகார்ட் கூட கிடைக்கும். சில ரேடியோ பொருட்கள், மான கொம்பு, மணி மாலை, பழைய புத்தகங்கள், பீம புஷ்டி லேகியம் என்று என்னென்னவோ பொருட்கள் எல்லாம் கிடைக்கும். 

kgs என்ன செய்வார் என்றால் அந்திக் கடையிலிருந்து அடிக்கடி ஏதேனும் அபூர்வ பொருட்கள் - மிகவும் மலிவான விலைக்கு பேரம் பேசி வாங்கி வருவார். பழைய லாட வடிவ காந்தம், தாமிரக் கம்பி, செல்லுலாயிட் பொம்மை (தங்கை விளையாட), பழைய டிரான்ஸ்ஃபார்மர்,  ட்வெய்ன் நூல், கலர் சாக்பீஸ், எலெக்ட்ரிக் வயர், சுருமாக்கல் (diode போல அதைப் பயன்படுத்தி ரேடியோ செய்யலாம் என்பார்!), பழைய எரியாத டார்ச் லைட், குறடு, ஸ்பேனர், ஸ்குரூ ஆணிகள், ஸ்குரூ டிரைவர் வாட்டர் கலர் பாக்ஸ், இத்யாதி இத்யாதி!   அந்தப் பொருட்களைப் பயன்படுத்தி - வித விதமான புதிய பொருட்கள் உருவாக்குவார். 

kgs அவர்களின் creativity க்கு எல்லையே கிடையாது. எங்கள் பேட்டை ஜி டி நாயுடு அவர்! 

அந்த நாட்களில் kgs செய்த சில பொருட்களை கூறுகின்றேன். 

1) எங்கள் வீட்டு முதல் night lamp அவர் செய்ததுதான். 

2) டிரான்ஸ்பார்மர் பயன்படுத்தி ஒரு மின்சார அழைப்பு மணி 

3) களிமண் அச்சு பயன்படுத்தி வீட்டில் உள்ள விக்கிரகங்களின் நகல்கள் - ஈயத்தில் வார்ப்பு செய்தார். 

4) உடைந்த, பயன்படாமல் போன பல பொருட்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பார். ஃப்யூஸ் ஆகிப்போன அந்தக் காலத்து குண்டு பல்புகளை டங்க்ஸ்டென் இழையை இலாகவமாக மீண்டும் ஒட்டவைத்து எரிய வைப்பார். 

5) பழைய பேப்பர்களை ஊற வைத்து, வெந்தயத்துடன் சேர்த்து அரைத்து ( அந்தக் காலத்தில் மிக்ஸி கிரைண்டர் எல்லாம் கிடையாது) கல்லுரலில் அரைப்பார்! பேப்பர் கூடை உருவாக்குவார். 

6) எங்கள் வீட்டின் முதல் டிரான்ஸிஸ்டர் ரேடியோ (1962) அவர் உருவாக்கியதுதான்! இது பற்றி நான் பதினான்கு வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு - அண்ணனோட அற்புதப் படைப்பு - சுட்டி இது! 

இன்னும் அவர் உருவாக்கிய பல பொருட்கள், நினைவு வரும்போது எழுதுகின்றேன். 

அவருடைய பதின்ம வயதுகளில் படம் வரையும் திறமை அவருக்கு இருந்தது. 

யானை, குதிரை, பூனை, நாய் போன்ற படங்கள் மட்டும் இன்றி, பார்க்கும் எந்தப் படத்தையும் வரையும் திறமை அவருக்கு இருந்தது. என்னுடைய சின்ன அண்ணனை பயமுறுத்த ஒரு பூத முகம் வரைந்து, அதற்கு  'ப்ரூபரம்' என்று அவரே ஒரு பெயரும் வைத்தார். 

அந்தக் காலத்தில், ஆனந்தவிகடன் நிறுவனத்தினர், வருடா வருடம் தினசரி காலண்டர் அச்சடித்து விற்பனை செய்வார்கள். அந்த காலண்டரின் அட்டைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு முருகன் + மயில் படம் இருக்கும். அதைப் பார்த்து அதே மாதிரி வரைந்து வாட்டர் கலர் அடித்து அதை அட்டையில் ஒட்டி சுவற்றில் தொங்கவிடுவார். 

(தொடரும்) 

50 கருத்துகள்:

  1. பாடுபட்டவர்கள் பெரியவர்களா அல்லது நிறைவேற்றியவர்கள்
    சாதித்தவர்களா என்பது அடிப்படையிலேயே கோணலான கேள்வி.

    நமது தேச சுதந்திரப் போராட்டத்தையே எடுத்துக் கொள்ளூங்கள்.
    எண்ணிலடங்கா தியாகிகள் ஏகப்பட்ட அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்கள்.
    'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று கர்ஜித்து பிரிட்ஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த திலகரை (பாரதியார், வ.உ.சி. அரவிந்தர் போன்றோர் தமது தலைவராகக் கொண்டவர்) இன்றைய இந்தியர் பெரும்பாலோருக்குத் தெரியாது. இதை நினைத்தால் இரத்தம் கொதிக்கிறது.

    அகண்ட அடிப்பாகம் கொண்ட ஒரு மரத்தை 10 பேர் கோடலிகொண்டு
    சாய்க்க முயற்சிக்கிறார்கள். கிட்டத்தட்ட மரம் அதுவாகவே விழுந்து விடுகிற சமயத்தில் பத்தாவது நபர் கைக்கு கோடலி வருகிறது. அவனது ஒரே வெட்டில் மரம் சாய்கிறது.

    பத்தாவது ஆள் தான் மரத்தை சாய்த்த காரியத்தை நிறைவேறினான் என்று அவனுக்குப் பதக்கம் கொடுத்தால் அறிவுடமை ஆகுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாடு என்ற பெயர் சென்னை ராஜதானிக்குப் பெயராகணும் என்று பலர் போராடியிருக்க, அண்ணாதான் காரணம், திமுகதான் காரணம் என்று சொல்வது அறிவுடைமையாகுமா என்பதுதான் என் கேள்வியின் உள்ளர்த்தம் ஜீவி சார். பலர் அப்படிச் சொல்கின்றனர் எழுதுகின்றனர்.

      நீக்கு
    2. நெல்லை சார்
      //என்று பலர் போராடியிருக்க,// அந்த பலர் யார் என்பது தான் கேள்வி? அதிகாரத்தில் இருந்த அன்று செயல்படுத்தக்கூடிய காமராஜ், சுப்பிரமணியம், ராஜாஜி போன்றோர் நேருவிடம் ஏன் முறைப்படி வேண்டுகோள் செய்யவில்லை.
      Jayakumar

      நீக்கு
    3. ஜெயகுமார் சார்.. ஜீவி சார் அந்த வரலாற்றைச் சுருக்கமாக இங்கு சில நாட்களுக்குமுன் எழுதியிருந்தாரே...நீங்கள் படிக்கவில்லையா?

      காங்கிரஸ்கார்ர்கள் அது பிரிவினைவாத்த்துக்கு வழி விடுவதுபோல இருக்கிறதே என்பதால் எடுத்துச் செல்லவில்லையாயிருக்கும். தமிழகம் என்றிருந்தால் அவர்கள் முனைந்திருக்கலாம்.

      நீக்கு
    4. சுவாரஸ்யமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றி.

      நீக்கு
  2. அடுத்த புதனுக்கான கேள்வி;
    நான் புதன் பதிலுக்காக ஒரு கேள்வியை எழுப்புகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
    அடுத்த புதனில் அந்தக் கேள்விக்கான பதிலை அளித்தவர் இவர் தான் என்று எப்படி நான் தெரிந்து கொள்வது? அதற்கு ஏதாவது கண்டுபிடிக்கும் வழி இருக்கா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு பதில் பல வாசகர்களுக்குத் தெரியும்.

      நீக்கு
    2. அரசு கேள்வி பதில்களில் பதில் அளித்தவர் அ வா, ர வா, சு வா எப்படி சார் அனுமானித்தீர்கள்? அது போலத்தான் இதுவும்.

      நீக்கு
    3. அரசு கேள்வி-பதிலில் நால்வரில் யார் எந்தக் கேள்விக்குப் பதிலளித்தார் என்று துல்லியமாகக் கண்டு பிடிப்பது சிரமமான காரியம். சும்மாவானும் எடுத்து விடக்கூடாது.

      நீக்கு
  3. ஜாதி பெயர் நீக்க முயற்சி பலன் அளிக்கவில்லை என்று சொல்ல முடியாது. பலரும், எ பி ஆசிரியர்கள், கேள்வி கேட்ட நெல்லையும் சேர்த்துதான் ஜாதியை வாலாக்க வில்லை.
    ஆனால் ஜாதி ஒழிப்பு என்பது வேறு. அது ஒரு சமூக அடையாளமாக இன்னும் சிறிது காலத்திற்கு தொடரும் என்று தோன்றுகிறது. பிறப்பால் ஜாதி என்பது மாறவேண்டும். பண்டைய வழக்க்கம் போல் தொழில் அடிப்படையில் அடையாள படுத்தலாம்.

    காக்காய் பிடிப்பது என்பது கோழி பிடிப்பது போன்று அவ்வளவு சுலபமானது அல்ல. காக்கை பிடிப்பது போன்று கஷ்டப்பட்டாவது காரியத்தை சாதித்துக்கொள் என்ற அர்த்தத்தில் சொல்லியது என்று இருக்கலாம் அல்லவா?

    // "பெருமைக்காக காரியம் செய்கிறார்கள்"// கல்யாணத்துக்கு வாழ்த்து, மரணத்துக்கு கண்ணீர் அஞ்சலி, என்று போர்டுகளும் போஸ்டர்களும் எதற்காக?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க பத்திரிகைகள் படிப்பதில்லையா? யாதவ், வன்னியர், கவுண்டர் எனப் பெயரில் சேர்த்துக்கொள்வது இளைஞர்களிடையே அதிகமாகியிருக்கிறதென்று? அரசு செய்தது தமிழக இந்துக்களின் சாதியைத்தான். கொஞ்சம் கூகிளிட்டுப் பாருங்கள், எப்படி அரசு தெலுங்கு, மலையாள, கிறித்துவ, முஸ்லீம் சமூகத்திடையே சாதி பற்றி நுழையாமல் வாலைச் சுருட்டிக்கொண்டு இருக்கிறதென்று (தமிழகத்தில்)

      நீக்கு
    2. கொஞ்சம் கடினமான சப்ஜெக்ட்.

      நீக்கு
  4. காக்காய் பிடிப்பது என்பதற்கு
    தாங்கள் அளித்த விளக்கம்
    கண்டு வியந்தேன். அதுதான்
    சரியான பதில். நன்றி.
    கே. சக்கரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான பதில் ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருந்தால் வியக்க மாட்டீர்கள். பாராட்டுவீர்கள்.

      நீக்கு
  5. தன் காரியத்தை சாதித்துக் கொள்வதற்காக பிறரின்
    கால், கை பிடித்தல் தான் காக்காய் பிடிப்பது என்று வழக்கத்தில் மாறிப் போனது.

    பதிலளிநீக்கு
  6. கம்பரின் படைப்பான சூர்ப்பனகை அற்புதமானவள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வால்மீகி இராமாயணத்தில் சூர் கிடையாதா?

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. கம்பன் தான் என்க்கெல்லாம் கையேடு. (கோனார் நோட்ஸ் மாதிரி)

      நீக்கு
  7. அடுத்த புதனுக்கான அடுத்த கேள்வி:

    வாராவாராம் ஒரு எபி வாசகர் புதன் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் புதுமையைப் புகுத்தினால் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துப் பெட்டியில் எல்லா கேள்விகளுக்கும் எல்லா வாசகர்களும் பதில் தர வசதி ஏற்கனவே உள்ளதே.
      Jayakumar

      நீக்கு
    2. ஆசிரியர் குழுவில் யாராவது மற்றவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதில் ஒரு வாசகர் மற்ற எல்லா கேள்விகளுக்கும்.

      நீக்கு
  8. முருகன் திருவருள் முன் நின்று காக்க...

    பதிலளிநீக்கு
  9. பதிவு வெளியானதும் முதல் ஆளாக (5:01) வந்தேன்...

    பதிலளிநீக்கு
  10. திருப்பிப் போடப்பட்டதால் தோ சொய்...

    ஏக் சொய் தப்பித்துக் கொண்டது..

    பதிலளிநீக்கு
  11. ரிவால்வார் ரீட்டா இல்லாமல் என புதன் இது?..

    பதிலளிநீக்கு
  12. கேள்வி பதில்கள் நன்று.

    கேஜிஜி பக்கம் - சிறப்பு. எத்தனை திறமை கேஜிஎஸ் அவர்களுக்கு.

    பதிலளிநீக்கு
  13. Kgs அவர்களின் திறமை வியக்கவைக்கிறது. பாராட்டுகள்.
    சிலருக்கு இவை கைவந்தகலை .

    இந்நேரம் எனது சகோதரர் ஒருவரும் நினைவுக்கு வருகிறார். அவரிடமும் பல திறமைகள் இருந்தன. இப்பொழுது நோய்வாய்பட்டு இருப்பதில் செய்யமுடியாத நிலையில் உள்ளார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரர் விரைவில் பூரண நலம் அடைய பிரார்த்திக்கிறோம்.

      நீக்கு
  14. கேள்வி பதில்கள் சூப்பர். காக்காய் பிடிச்சதை ரசித்தேன்!!!

    கேஜி ஜி பக்கத்தில் கேஜிஎஸ் மிகவும் திறமை வாய்ந்தவர் என்பது இங்கும் மீண்டும் தெரிந்து கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருடைய திறமை என்பது, learning as we progress. இல்லைனா இணையதளம், பிளாக் என்று பலவற்றில் அவர் தானாகவே கற்றுக்கொண்டு எபி ஆரம்பிக்கக் காரணமாக இருந்திருக்கமுடியாது. இன்னும் பலவற்றில் அவர் ஈடுபாடு காண்பித்தார்.

      நீக்கு
    2. Nellai, Yes I know about KGS.

      learning as we progress.// அதே தான். நாம் வயதாக ஆக நம் கற்றலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் புதிது புதிதாக....அப்போதான் நாமும் evolve ஆகிக் கொண்டு வருவோம். இந்தக் கற்றல் புதிதாகத் தெரிந்து கொள்வதோடு நம்மை நாம் பக்குவப்படுத்தல் உட்பட. கற்றலினால் நாம் வளர்வோம்...பக்குவமும் அடைவோம்! பக்குவம் அடையும் போது நம்மை அறியாமலேயே ஒரு அமைதி நம்மை ஆட்கொண்டுவிடும்!!

      கீதா

      நீக்கு
  15. கேள்விகளுக்கு பதில் நன்றாக இருக்கிறது.
    உங்கள் அண்ணாவின் திறமைகள் வியக்க வைக்கிறது.
    தன் சேமிப்பை வீட்டுக்கு உபயோகமாக பயன்படுத்தி இருக்கிறார்.
    அனைவர் மேலும் அன்புடன் இருந்து இருக்கிறார்.
    பல திறமைகள் கொண்ட அண்ணாவுக்கு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!