Monday, January 25, 2010

தாயின் மணிக்கொடி பாரீர்...நாட்டின் அறுபத்தோராவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. செங்கோட்டையிலும் ஜார்ஜ் கோட்டையிலும் இன்னும் பல இடங்களிலும் கொடி ஏற்றப் படும். கொடி ஏற்றுவதற்கு என்று சில விதிமுறைகள் உண்டு. Flag Code of India 2002 என்று சொல்லப் படும் இது சில விதிமுறைகளை பின்பற்றச் சொல்லி மக்களை கேட்டுக் கொள்கிறது. நமது தேசியக் குறியீட்டுக்கு ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய மரியாதைகளைப் பற்றி சொல்கிறது.


நடுவில் வெண்மை நிறத்துடன் மேல் பாகம் காவி நிறமும், கீழ் பாகம் கரும்பச்சை நிறமும் கொண்டது நமது கொடி. நடுவில் அசோகச் சக்கரம்.


1) கொடி ஏற்றப் படும் போது காவி நிறம் மேலே இருக்கும் வண்ணம் ஏற்ற வேண்டும்.


2) வேறு எந்தக் கொடியோ, முத்திரையோ தேசியக் கொடியை விட மேலேயோ, அதற்கு வலது புறமோ இருக்கக் கூடாது.


3 மற்ற அனைத்துக் கொடிகளும் வரிசையாக பறக்க விடப்பட்டால் தேசியக் கொடியின் இடதுபுறம் வரிசையாக பறக்க விடப் பட வேண்டும்.


4) அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும்போது குறிப்பாக மற்ற கொடிகளையும் ஏந்திச் செல்லும் நிலையில், அணிவகுப்பின் முன்னணியிலோ, அல்லது வலது புறமோ தேசியக் கொடியை ஏந்திச் செல்ல வேண்டும். ...


5) சாதாரணமாக தேசியக் கொடிகள் பாராளுமன்றம், ஜனாதிபதி அலுவலகம், உச்ச நீதிமன்றம், தலைமை நீதிமன்றங்கள், தலைமைச் செயலகங்கள், கமிஷனர் அலுவலகங்கள் போன்ற முக்கிய அரசு அலுவலகங்களில் பறக்க விடப் படலாம்.


6) வியாபாரங்களுக்கோ, மற்ற விளம்பர விஷயங்களுக்கோ தேசியக் கொடியை உபயோகிக்கக் கூடாது.


7) சூர்ய அஸ்தமனத்துக்கு முன் கொடி இறக்கப் பட வேண்டும்.


குடியரசு தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் தவிர மற்ற நாட்களில் சாதாரண பொது ஜனம் தேசியக் கொடியை எங்கும் ஏற்ற அனுமதி இல்லாமல் இருந்தது. தொழிலதிபர் நவீன் ஜிண்டால் தன்னுடைய அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க, அவர் மேல் கொடி அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது. அவரும் தன் உரிமைக்கு வாதாடினார். அந்த வழக்கில் சமீபத்தில் வந்த தீர்ப்பின் படி சில மாறுதல்கள் செய்யப் பட்டுள்ளன. தகுந்த மரியாதைகள் செய்யப் பட்டால் கொடி ஏற்றிக்கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும் இருட்டு இல்லாத இடமாக இருக்கும் படியும், நல்ல ஒளி விளக்குகள் கொடியின் மீது படும் வண்ணமும் வைத்தால் மாலை ஆறு மணிக்குமுன் கொடி இறக்கப் பட வேண்டும் என்ற விதியும் தளர்த்தப் பட்டுள்ளது.


தேசியக் கொடி பற்றி சில சுவாரஸ்ய விவரங்களும் கூடவே தரப் பட்டுள்ளன.


* முதல் முறை அந்நிய மண்ணில் இந்திய தேசியக் கொடி ஏற்றப் பட்டது ஜெர்மனியில்...ஸ்டாட்கராத் என்ற இடத்தில் பிக்காஜி ருஸ்தம் காமா என்ற அம்மையாரால்...1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் நாள்.


* 1953 மே 29 ஆம் தேதியன்று உலகின் உயரமான இடமான எவரெஸ்ட் மலையின் மீது தேசியக் கொடி ஏற்றப் பட்டது.


1984 ஆம் ஆண்டு தேசியக் கொடி விண்வெளியில் பறந்தது..! விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா விண்வெளிப் பயணம் மேற்கொண்ட போது அவரது விண்பயண உடையில் பதக்கமாக அணிவிக்கப் பட்டது

15 comments:

meenakshi said...

நல்ல தகவல்கள். நன்றி!
வந்தே மாதரம்!

குரோம்பேட்டைக் குறும்பன் said...

சின்ன வயசுல - குடியரசு தினம், சுதந்திர தினம் என்றால், காலை எழுந்திருந்து, குளித்து, வெள்ளைச் சீருடை அணிந்து, வீர நடை இட்டு - பள்ளிக்கூடம் சென்று - கொடியேற்றம் கண்டு, உள்ளூர்ப் பிரமுகரின் உளறல்களுக்குக் கைதட்டி, பிறகு கை நிறைய ஆரஞ்சு சுளை பெப்பர்மிண்ட் வாங்கி, அதை டிராயர் பையில் போட்டுக்கொண்டு, ஒவ்வொன்றாக எடுத்து, சுவைத்து இரசித்த நாட்கள் ஞாபகம் வருகிறது. இங்கேயும் கொடி ஏற்றி இருக்கிறீர்களே, இனிப்பு எங்கே?

meenakshi said...

அதானே! நீங்களும் கொடி எத்திடீங்க, நானும் வணக்கம் வெச்சாச்சு, மிட்டாய் எங்கேங்க?

சைவகொத்துப்பரோட்டா said...

இவ்வளவு விசயங்கள் இருக்கா, நன்றி தகவல்களுக்கு.

புலவன் புலிகேசி said...

சல்யூட்

ராமலக்ஷ்மி said...

பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. மிக நல்ல பதிவு. வாழ்க பாரதம்! வாழிய மணிக்கொடி!

maddy73 said...
This comment has been removed by the author.
maddy73 said...

தேசியக் கொடியின் நீள அகல விகிதம் 3 : 2 ஆக இருக்க வேண்டும்.
நல்ல தகவல்கள். மேலும் தகவலுக்கு
http://en.wikipedia.org/wiki/Indian_national_flag

செ.சரவணக்குமார் said...

நல்ல தகவல்கள் சார். குடியரசு தின வாழ்த்துக்கள்.

Jawahar said...

நல்ல தகவல்கள். சூரிய அஸ்தமனத்துக்கு முன் கொடி இறக்கப்பட வேண்டும் என்பதில் சில மாற்றங்கள் இப்போது வந்துள்ளதாக அறிகிறேன்.

நமது நாட்டில், தலை கீழாக கொடியை ஏற்றிய முதல்வர்களும், தேசிய கீதம் பாடப்படும் போது மேடையிலிருந்து நகர ஆரம்பித்த முதல்வர்களும் உண்டு என்று நிரூபணம் இல்லாத சில தகவல்கள் உண்டு!!

http://kgjawarlal.wordpress.com

தியாவின் பேனா said...

நான் வந்திட்டன் கொஞ்சநாள் ஓய்வுக்கு பிறகு வந்திருக்கிறன்

விஜய் said...

நமஸ்தே மாபூமி நமோஸ்துதே

விஜய்

ஹேமா said...

நன்றி தகவல்களுக்கு.
குடியரசு தின வாழ்த்துகள்.

எங்கள் said...

மீனாக்ஷி, கிரோம்பெட்டைக் குறும்பன்,

மிட்டாய் அங்கேயே தட்டில் இருந்ததே எடுத்துக் கொள்ளவில்லையா...

சைவகொத்துபரோட்டா,
நீங்கள் விஷயம் மட்டும் எடுத்துக் கொண்டீர்களா, மிட்டாயுமா?!

புலிகேசி,
வருக, வருக, ஊர் சென்று திரும்பியபின் இங்கு முதல் வருகை...!

ராமலக்ஷ்மி,
நன்றி.

மாதவன்,
விடுபட்ட தகவலைச் சொன்னதற்கு நன்றி.

செ. சரவணக்குமார்,
வாழ்த்துக்கள் உங்களுக்கும்..உங்கள் புத்தக ஆர்வமும், நண்பர்களை தேடி பார்க்கும் பண்பும் கவர்ந்த அம்சங்கள். எப்போது இந்தியா வருகை?

ஜவஹர்,
நீங்கள் சொல்லியுள்ள மாற்றங்கள் குறித்து இதிலேயே குறிப்பிடப் பட்டுள்ளதே...அதைத் தவிர வேறு மாற்றங்களா? என்ன?

தியா,
வருக..ஊர் சென்றிருந்தீர்களோ? அடுத்த பதிவு எப்போது?

விஜய்,
வருக..வருக..முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தரவும்..
உங்களுக்கு எங்கள் இனிமையான பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

எங்கள் said...

நன்றி ஹேமா..

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!