Saturday, October 1, 2016

82 வயதில் என்ன செய்ய முடியும் உங்களால்?1)  சென்னை மாம்பலம்வாசிகளுக்கு மேட்லி சாலை சப்வேவை ஒட்டி இருக்கும் கோதண்டராமர் கோயில் குளம் வெகு பிரபலம். அதன் புகழுக்கு அதன் அசுத்தமும் ஒரு காரணம். இப்போது போய் பாருங்கள். குப்பைகளும் கழிவுகளும் நீக்கப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டு, திடீரென்று புதுப்பொலிவோடு புனிதமும் காக்கப்பட்டுள்ளது. இந்த அசத்தல் மாற்றத்துக்கு அசல் காரணம், 26 வயதான அருண் கிருஷ்ணமூர்த்தி. கூகுள் நிறுவன வேலையை விட்டுவிட்டு ஏரி, குளங்களைக் காப்பதில் ஒன்பது வருடங்களாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார் அருண்.

 

2)  "மரம் இருந்தால், மார்க்கம் உண்டு.  மகாகனி, அயனி, நாவல், நிலவேம்பு, வாத முடக்கி, மூலநோய்க்கு மருந்தான துத்தி, வல்லாரை, சிறுகண்பீளை, அம்மான் பச்சரிசி, காந்தாரி மிளகு, சர்வசுகந்தி என, பல விதமான மூலிகை செடிகள் நட்டு உள்ளேன்....."   விபத்தில் வீல்சேரில் முடங்கியவர், மூலிகை மரம், செடிகளின் சுவாசத்தில் எழுந்து நடமாடுவது குறித்து கூறும் சுதிர்லால்.3)  சபாஷ் மக்களே.....   ".......இந்நிலையில், இந்த அத்தியாயத்தைப் படித்த பெயர் குறிப்பிட விரும்பாத, பன்னாட்டு வங்கியில் வேலைபார்க்கும் 'தி இந்து' வாசகர்கள் இருவர் மற்றும் அவர்களது நண்பர்கள் இணைந்து, அன்பாசிரியர் தங்கராஜ் பணிபுரியும் நாமக்கல் ஊத்துப்புளிக்காடு அரசு ஆரம்பப்பள்ளிக்கு 4 கணினிகள் மற்றும் 6 மேசைகளை இலவசமாக வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்...."4)  மஸ்ட்ரம் ஹிதேஷ்,  மற்றும் அஷோக் தேஷ்மானே இருவரும் நல்ல சம்பளம் கிடைக்கும் தங்கள் வேலைகளை விட்டு விட்டு எழிக் குழந்தைகளைக் கல்வியில் மேம்படுத்தி வாழ்வில் அவர்களை முன்னேற வைக்கப் பாடுபடுகிறார்கள்.  இரண்டுமே வெவ்வேறு செய்திகள்.
 

5)  கிராமப்புற ஏழை மற்றும் மன வளர்ச்சி குன்றிய 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, இலவசமாக யோகா கற்றுக் கொடுத்துள்ள வழக்கறிஞர் எம்.கே.கண்ணன்.6)  நீங்கள் 82 வயதில் என்ன செய்வீர்கள்?  நான் என்ன செய்வேனோ!  ஆனால் திருமதி சந்திரமதி செய்துள்ள காரியம் பாராட்டுக்குரியது, நெகிழ்ச்சியானது.
 


7)  சிறிய விஷயம், இதை என்ன நாம் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது என்று நினைக்காமல் கற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் -  கைநாத் அன்சாரி போல.


 

8)  மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில்உள்ள ஒரு டீக்கடை முன்பு, ஏராளமானபெண்கள் திரண்டிருந்தனர்.அங்கு ஒரு போர்டில் 'மற்ற ஊரில் இருந்து கைகுழந்தையுடன் வரும் தாய்மார்களுக்குதரமான பால் இலவசமாக வழங்கபடும்,இப்படிக்கு R.குணா சுரேஷ்' என எழுதபட்டிருந்தது.


பாலில் கலப்படம், பால் விலை ஏற்றம் எனஇன்று தமிழ்நாடே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போது,இதை பார்த்ததும் ' அட பரவாயில்லையே, இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா..?'''எனக்கு சொந்த ஊர் அருப்புகோட்டை பக்கத்துலஒரு சின்ன கிராமம்.இப்ப பொன்மனியில குடும்பத்தோட வசிக்கிறேன். எனது தம்பியின் மனைவி சில ஆண்டுகளுக்குமுன்பு தன் கைக்குழந்தையுடன் சென்னைகோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவு சென்றிருக்கிறார்.அப்போது குழந்தை பசியால் அழுதிருக்கிறது.அந்த நள்ளிரவில் பேருந்து நிலையம் முழுவதும் அலைந்து ஒரு டீக்கடையில் பால் வாங்கிகொடுத்திருக்கிறார். அதை குடித்த கொஞ்சநேரத்தில் அந்த குழந்தைக்கு வாந்தி, மயக்கம்ஏற்பட்டு இருக்கிறது. 


இந்த சம்பவம் எனக்குமிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.இங்கும் சில டீக்கடைகளில் பாலில்பலவிதமான கலப்படம் செய்றாங்க. மேலும்,பால் கெட்டியா இருப்பதற்காக கிழங்கு மாவு சேர்க்கிறாங்க.அது பெரியவங்களுக்கேஒத்துக்காது.


குழந்தைகளுக்கு எப்படி இருக்கும். எனவே,தான் கைக்குழந்தைகளோடு வருபவர்களுக்குகலப்படம் இல்லாத தரமான பாலைஇலவசமாக வழங்கி வருகிறேன்.இதனால் எனக்கு நஷ்டம் ஏற்படவில்லை.இதற்கு எனது தம்பியும் உதவியா இருந்துவருகிறார்'' என்றவர்,''என்னுடைய இந்த சேவையை கேள்விபட்டமதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்டமேயர், தமிழ்நாடு நுகர்வோர் மக்கள் இயக்கமகளிரணி என பலரும் பாராட்டினாங்க.இதுபோன்று எல்லா பேருந்து நிலையங்களிலும் தன்னார்வம் கொண்டவர்கள் செய்ய வேண்டும்என சொல்றாங்க.நான் இதை விளம்பரத்திற்காக செய்யல,இதுல எனக்கு பெரிய மன நிம்மதி கிடைக்குது.நாம போனாலும், நம்ம பேரு நிக்கணும்” என்கிறார்.

20 comments:

மனோ சாமிநாதன் said...

திரு.அருண் கிருஷ்ணமூர்தி, கண்ணன், குணா சுரேஷ் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்!

தி.தமிழ் இளங்கோ said...

மேலே சொன்ன எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்
தம+1

நன்மனம் said...

அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள். தங்கள் பகிர்வுக்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

R, குணா சுரேஷ் அதிசய மனிதர்தான் வாழ்த்துவோம்

middleclassmadhavi said...

சாதனை மனிதர்களை பாராட்டுகிறேன்!!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த வழிகாட்டிகள்
இவர்கள் பணி தொடர
எனது வாழ்த்துகள்
இவர்களைப் போல
ஏனையோரும் முன்வந்தால்
நாடு முன்னேறும் பாருங்கோ!

G.M Balasubramaniam said...

நல்லவர்களின் நற்பணிகள் தொடர வாழ்த்துகள்

Nat Chander said...

the world exists because of these noble persons....

Geetha Sambasivam said...

சில செய்திகள் படித்தவை, பல செய்திகள் அறியாதவை!

Bagawanjee KA said...

நானும் அந்த இலவசப் பால் தரும் கடையை கடந்து கொண்டுதான் இருக்கிறேன் !
உங்களின் மூலமாய் குணா சுரேசைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது ,அவரது சேவை மனப் பான்மைக்கு என் வணக்கம் :)

கோமதி அரசு said...

மனிதநேயம் மிக்கவர்களை பற்றிய செய்திகள் அனைத்தும்.
அனைவரையும் வணங்க வேண்டும். வாழ்த்த வேண்டும்.
உங்களுக்கு நன்றி.

பரிவை சே.குமார் said...

செயற்கரிய செயல் செய்பவர்களைப் போற்றுவோம்...
மாட்டுத் தாவணி ஆவின் பால் கடையில் நிறைய முறை டீ, பால் அருந்தியிருக்கிறேன்... அருமையாக இருக்கும்...
அவரின் பணி பாராட்டத் தக்கது.

Unknown said...

கைகுழந்தை பால் இலவசம். நல்ல செய்தி. உயர்ந்த மனிதர். விஜயன்

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்துச் செய்திகளும் அருமை....கைனாத் அன்சாரி மற்றும் கண்ணன் அவர்களின் சேவை அருமை...அது போன்று குணாசுரேஷ்!! எல்லோருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் said...

அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். கலப்படம் இல்லாத நல்ல பால் - குழந்தைகளுக்குத் தரும் நபருக்கு ஸ்பெஷல் பூங்கொத்து.....

புலவர் இராமாநுசம் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்!

‘தளிர்’ சுரேஷ் said...

அருமையான மனிதர்கள்! அட்டகாசமான பணிகள்! அறிமுகம் செய்த எங்கள் ப்ளாக்கிற்கு நன்றி!

ஞா. கலையரசி said...

நல்ல சம்பளம் தரும் வேலைகளை விட்டுவிட்டு சமுதாய பணி செய்யும் இளைஞர்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. 82 வயதில் சந்திரமதி முதியவர்களுக்குக் காப்பகம் துவங்கியிருப்பதை எண்ணும் போது சாதிக்க வயது ஒரு தடையல்ல என்ற உண்மை புலப்படுகின்றது. பாசிட்டிவ் எனர்ஜி ஊட்டும் செய்திகளுக்கு நன்றி!

'நெல்லைத் தமிழன் said...

அருமையான செய்திகள். நீர்'நிலைகளைக் காப்பது, ஆதரவற்ற முதியவர்களுக்கான இடம், இலவச பால், எளிய குழந்தைகளுக்கு இலவச யோகா... எல்லா நேர்மறைச் செய்திகளும் மனதைத் தொட்டன.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!