செவ்வாய், 4 ஜூலை, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: இரு துருவங்கள் - கீதா ரெங்கன் சீதை 11 (நிறைவுப் பகுதி)



     சென்ற வாரத்தின் தொடர்ச்சி....











இரு துருவங்கள்

கீதா ரெங்கன்


“ஓ!” அங்கு சிறிது மௌனம் நிலவியது. 


டாக்டர் சுழல் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து ஏதோ யோசித்தவாறே நாற்காலியை மெதுவாகச் சுழற்றியவர், மீண்டும் தொடர்ந்தார். மணியின் பிரச்சனை ஹேலூசினேஷன்ஸ், டெலுஷன்ஸ், மூட்ஸ்விங்க்ஸ் என்று மருத்துவ உலகம் சொல்லும் பல வார்த்தைகளைச் சொன்னார். முன்பை விட கொஞ்சம் கூடியுள்ளது என்றார். மஞ்சுவிற்கு, சுஜாதா மற்றும் சிவசங்கரி எழுதிய கதைகள் நினைவுக்கு வந்தது. தலைக்குள் ஏதோ ஒன்று கொத்திக் கொண்டே இருக்குமாமே! மீண்டும் வாசிக்க வேண்டும் என்று குறித்துக் கொண்டாள். ஆனால், முடியாதோ? மணியைப் பொருத்தவரை சுஜாதா அரைவேக்காடு, வெட்டிப்பயல், ஒன்றும் தெரியாதவன். சும்மா நாலு அறிவியல் வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஜல்லி அடிப்பவன், பணம் சம்பாதிப்பவன்! அவள் மனதில் எண்ணங்கள் ஓடிட…டாக்டர் தொடர்ந்தார்..


“தென் நீங்க ஒரு நர்ஸ் போலதான் இருக்கணும். புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்”


“புரியுது டாக்டர்”


நர்ஸ்! ஆம் அன்கண்டிஷனல் லவ்! தாமரை இலை தண்ணீர் போல. எந்தவித எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது! மஞ்சுவிற்குப் பிரச்சனை இல்லை. பொதுவாகவே மஞ்சு எந்த ஒரு உறவையும் அந்த உறவுக்கான ஃப்ரேமுக்குள் போட்டுப் பார்ப்பதில்லை. அம்மா என்றால் ஒரு வித எதிர்பார்ப்பு, அப்பா என்றால் அவரிடம் சில எதிர்பார்ப்புகள், சகோதர சகோதரிகள், மாமியார் என்றால் அவர்கள் இப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள். இப்படி ஃப்ரேமுக்குள் போட்டுப் பார்த்தால் ஏராளமான எதிர்பார்ப்புகள் மனதில் தோன்றிடும். ஏமாற்றங்கள் வரும் என்பதால் எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும் என்ற மனநிலை, திருமணத்திற்கு முன்பே பல அனுபவங்களால் மஞ்சுவிற்கு ஏற்படத் தொடங்கியிருந்தது. ஒத்துவரவில்லை என்றாலும் வெறுக்காமல் சற்று விலகி இருப்பாள். இது அவள் பள்ளியில் அவளது காட்மதர் சொல்லிக் கொடுத்தது.


“யெஸ் ஐ ஆம் ப்ரிப்பேர்ட் டாக்டர்”


“குட்! ஸோ நீங்க அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லலியேன்றத பெரிசா எடுத்துக்கலை!”.


“யெஸ்! டாக்டர்!”


“ஆனா ஒரு வேளை உங்க மனசுல பின்னாடி இந்தக் கேள்வி வரலாம்”


“வராது டாக்டர்”


பின்னாடி வரலாம் என்று டாக்டர் அன்று சொன்னது இன்று வந்து விட்டதோ? அதனால்தான் இப்படியான உணர்ச்சிகள் மூளைக்குள் மோதுகிறதோ இப்போது?!


“டாக்டர்! தப்பா எடுத்துக்காதீங்க, ஒரு கேள்வி கேட்டுக்கலாமா. அவருடைய பிரச்சனைக்கு என்ன காரணம்? மூல காரணம்?”


“இட்ஸ் எ மில்லியன் டாலர் க்வெஷன். ஒரு குறிப்பிட்ட காரணத்தை பின் பாயின்ட் பண்ண முடியாது”


டாக்டர் சொல்லவில்லை என்றால் என்ன? நூலகம் இருக்கிறதே. டாக்டர் வீரியமிக்க மருந்துகள் கொடுத்தார். மஞ்சு பல மருத்துவப் புத்தகங்கள் வாசித்துப் புரிந்து கொண்டாள். இந்தச் சின்ன மூளைக்குள் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள்தான் இவ்வுலகில் ஒவ்வொருவரையும் தனித்தனி மனிதனாக எப்படி வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது! படைப்பின் விந்தை! இது போன்ற மனிதர்களையும், வாழ்க்கையையும் எப்படிச் சீராகச் சமாளிக்க வேண்டும் என்றும் கற்றுக் கொண்டாள். பட்டம் இல்லாத மருத்துவர்!  வாழ்க்கையே ஒரு பல்கலைக்கழகம் தான்! வாழ்க்கை அனுபவத்திலிருந்துக் கற்றுக் கொண்டால் தனி படிப்போ, டிகிரியோ தேவையே இல்லை!


கணவனை எழுப்பி, மயக்க நிலையிலேயே சாப்பாடு கொடுத்தல், குளிக்கவைத்தல், துணி மாற்றிவிடுதல் என்று எல்லாம் செய்தாள். மருத்துவர் புகுந்த வீட்டு ஊர் என்பதால் மாமியார் வீட்டில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை. மாமியார், இவள் அதிர்ஷ்டகாரி இல்லை என்றார். இவளால்தான் தன் மகனுக்குப் பிரச்சனை என்றார். தன் மகனுக்கு வந்த வரன்கள் எல்லாம் மகனது உயர்ந்த படிப்புக்கேற்றபடி, வரதட்சிணையோடும், வீடோடும், நல்ல படிப்போடும், பணக்கார இடங்களாக வந்தது என்றும் ஆனால், ஜோசியர் சொன்னதால், ஒன்றுமில்லாத மஞ்சுதான் வரவேண்டியதாகிப் போனது என்றும் குற்றம் சுமத்திப் பல பேச்சுகள் பேசினார். சாமான்களைத் தூக்கி எறிந்தார். இவளது பழக்கவழக்கங்களைச் சாடினார்.


இப்போது கண்ணை மூடிக் காட்சிகள் விரிந்த சமயத்தில் இவளுக்குச் சிரிப்புதான் வந்தது. எந்தெந்த ஜோசியர்கள் இந்த ஜாதகங்களைச் சேர்த்தனரோ அதே ஜோசியர்களே திருமணத்திற்குப் பிறகு இந்த இரு ஜாதகங்களையும் யார் சேர்த்தது என்று கேள்வி கேட்டனர். பொருத்தமே இல்லை என்றும் சொன்னார்கள். டூ லேட்! பொருத்தம் இல்லை என்பது அவளுக்குமே தெரிந்த விஷயம்தானே. ஆனால் சூழ்நிலைக் கைதி!


மாமியார் எதிர்பார்த்த, மணிக்கு நிகராகப் படித்த பணக்காரப் பெண்கள் யாரேனும் அமைந்திருந்தால் இப்போது வரை இருந்திருப்பாளா என்ற கேள்வியும் இவள் மனதில் எழுந்தது. ஒரு வேளை அவனுக்குச் சமமாகப் படித்திருந்த பெண் என்றால், மணி எதிர்பார்த்த “இன்டெலெக்சுவல் கொம்பாட்டபிலிட்டி” இருந்திருக்குமோ? அவனுக்குச் சரியாகி இருந்திருக்குமோ? ஒரு வேளை வேறு பெண் அமைந்திருந்தால் அவரை விட்டு விலையிருக்கலாம்….அதனால் தான் கடவுளின் கணக்கு இது போலும். இப்படித்தானே பலரும் எண்ணித் தங்களைத் தேற்றிக் கொள்கிறார்கள். இத்தனை வருடங்களாக மனதில் எழாத, தேவையற்ற கேள்விகள் எழுந்தன. மனித மனமும் சரி வாழ்க்கையும் சரி கேள்விகளும், மர்மமும், சவால்களும் நிறைந்தது தானே!


மீண்டும் காட்சிகள் விரியத் தொடங்கின. மாத்திரையின் அளவு குறைக்கப்பட்டு ஒருவிதமான மோன நிலையில் மறுபடியும் ஆஃபீஸ் செல்ல ஆரம்பித்தான். மீண்டும் அவன் வேலை பார்த்த ஊரில் வாழ்க்கை. ஆஃபீஸில் இவன் புத்திசாலித்தனத்தைப் புரிந்து கொண்டதால் பிரச்சனை இல்லை. கூடவே இரக்கமும். டாக்டரிடம் அவ்வப்போது கன்சல்டேஷன். ஒரு முறை டாக்டர் குழந்தை பெறுவதைப் பற்றிச் சொன்னார். குழந்தை பிறந்தால் ஒரு வேளை மாறுதல் வரலாம் என்றார்.


“டாக்டர்! நீங்கதானே நர்ஸ் போல இருக்கணும்னு சொன்னீங்க. ஜெனிட்டிக்கலி 50:50 அடுத்த தலைமுறைக்கும் வரலாம்னு சொன்னீங்க. குழந்தை வேற கஷ்டப்படணுமா டாக்டர்? எனக்கும் தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லையே.”


“குழந்தைய நல்ல முறையில, வளர்த்தா பிரச்சனை இல்லாம கொண்டு வந்துடலாம். இது உங்களுக்காகவும்தான் சொல்லறேன். குழந்தைனு வரும் போது உங்களுக்கு மனசு ரிலாக்ஸ் ஆகும். இயந்திரத்தனமான வாழ்க்கை நிலை மாறும். உங்க ஹஸ்பண்டுக்கும் குழந்தைனு வரும் போது ஒரு மாற்றம் வரலாம். அதான்…..இட்ஸ் அப் டு யு…..நீங்க ஒரு கைனக்காலஜிஸ்டையும் கன்சல்ட் பண்ணிக்குங்க….”


மஞ்சு, தான் வசித்து வந்த ஊரிலுள்ள, தனக்குப் பரிச்சயமான மகப்பேறு மருத்துவரைக் கண்டு எல்லாம் விளக்கினாள். விவாதித்தாள். தாய்மை அடைய தாம்பத்தியம் ஒன்றுதான் வழியா என்ன? மஞ்சுவும் தாய்மை அடைந்து, மணியின் சாயலில் அழகான அபியைப் பெற்றாள். மனநல மருத்துவர் இவளுக்காக என்று சொன்னது புரிந்தது.


மனநல மருத்துவர் மணியின் மாத்திரையை நிறுத்திப் பார்க்கலாம் என்று யோசனை சொன்னார். நிறுத்தப்பட்டது. 4 மாதத்தில் மீண்டும் கணவனுக்குப் பிரச்சனை தொடங்கியது. மீண்டும் ஹேலுசினேஷன்ஸ், டெலுஷன்ஸ் என்று பிரச்சனை அதிகமாகிட, வேலைக்குச் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்தான். வெளியில் செல்லவும் முடியாது வீட்டில் தொலைபேசி இல்லாத காலம் அது. மஞ்சுவால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.. கையில் கைக்குழந்தை. ஒரு பிடி அரிசிக் கஞ்சியே வாழ்க்கையானது.


மணி தான் வேலை பார்த்த நிறுவனத்தின் தலைவர், மாநிலத்தின் முதல்வர், பிரதமர், ஆளுநர், ஜனாதிபதி எல்லோருக்கும் கடிதம் எழுதினான். ‘இந்த நாடே வீழப் போகிறது, அதைக் காப்பாற்றத் தன்னால் மட்டுமே முடியும், அந்த ரகசியம் ஃபார்முலா எல்லாம் தன்னிடம் மட்டுமே இருக்கிறது, எல்லோரும் முட்டாள்கள், ஊழல் புரிபவர்கள்’ என்று வரிகளை முன்னுக்கு முரணாகப் போட்டு எழுதி அனுப்பினான். ஏதோ ஒரு மாநிலத்தில் ஒரு மலையின் அடியில் சில கடவுள்கள் உயிருடன் இருப்பதாகவும் அந்த மலையைப் பெயர்த்தால் அவர்களைக் காணலாம் என்றும் ஒரு கடிதம் எழுதி ஏதோ ஒரு சாமியாரின் முகவரி எழுதி அனுப்புவதற்குத் தயாராக வைத்திருந்தான்.


தான் ஏதேனும் செய்து, எப்படியேனும் தன் கணவனை ஒரு மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று மஞ்சு யோசித்தாள். மருத்துவப் புத்தகங்கள் வாசித்த அறிவும், கல்லூரியில் நாடகம் போட்ட திறமையும் கை கொடுக்க, 8 ஆம் வகுப்பு மாணவியாக நடித்தாள். புடவை கட்டத் தெரியாதது போன்றும், சமைக்கத் தெரியாதது போன்றும், குழந்தையைக் கவனிக்கத் தெரியாதது போன்றும், தாய்ப்பால் கொடுக்காமல், கணவனை டீச்சர், சார் என்று அழைக்கத் தொடங்கினாள். மணி, அவளுக்குப் பிரச்சனை என்று அவ்வூரிலிருந்த மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றான், மருத்துவரையும் டீச்சர் என்று அழைத்தாள். மருத்துவர் கேட்ட கேள்விகள் எல்லாம் இவள் எதிர்பார்த்தவை என்பதால் தான் ஏற்ற கதாபாத்திரத்தைப் போல் பதிலளிக்க, மருத்துவர்,


“இது “…….” என்று அதற்கான மருத்துவப் பெயரைச் சொல்லி மருந்து எழுதத் தொடங்கினார். மஞ்சுவிற்கு ஒரு புறம் ஒரே மகிழ்ச்சி. தான் தேர்வு செய்த கதாபாத்திரத்தைச் சரியாகவே செய்திருக்கிறோம் என்று ஆனால் பிரச்சனை கணவனுக்கல்லவா அதை மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டுமே என்று,


“டீச்சர் டீச்சர் உங்ககிட்ட ரகசியம் சொல்லணும். அந்த டீச்சர வெளிய போகச் சொல்லுங்க” என்று சொல்ல, டாக்டர் மணியை வெளியே போகச் சொன்னார். மஞ்சு விரைவாக எல்லாம் சொல்லிட, டாக்டர் வாயடைத்துப் போனார்.


“ஓ மை காட்! பெர்ஃபெக்ட் ஆக்டிங்க்!! நான் மருந்தே எழுதிட்டேன்…..ஓகே..சும்மா மைல்ட் டோஸ் எழுதி ஒரு ஸ்ட்ரிப் மட்டும் வாங்கச் சொல்றேன். ஏன்னா இப்ப அவர நாம நம்ப வைக்கணும். நான் நாளைக்குத்தான் ஹாஸ்பிட்டல் போவேன். ஸோ…..நான் அவர்கிட்ட உங்களை நாளைக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வரச் சொல்லறேன். உங்கள அவர் கூட்டிட்டு வரும் போது அவர நாங்க பாத்துக்குவோம். நீங்க இந்த மாத்திரைய சும்மா சாப்பிடறா மாதிரி ஆக்ட் பண்ணுங்க…..ஆல் த  பெஸ்ட்” என்று சொல்லி மணியை அழைத்து எல்லாம் சொல்லிட வீடு வந்தனர்.


ஆனால் மணிக்கு ஏதோ தோன்றிட, ‘டாக்டர் ஒரு முட்டாள், அரைவேக்காடு’ என்று திட்டி அழைத்துச் செல்லவில்லை. மஞ்சு போட்ட திட்டம் தோல்வியடைந்தது. மணியிடம் வயலென்ட் பிஹேவியரும் வந்திருந்தது. மஞ்சு பொறுத்துக் கொண்டாள். எத்தனை நாட்கள் குழந்தைக்குப் பால் கொடுக்காமல் இருப்பது என்று போட்ட வேஷத்திலிருந்து எப்படி வெளி வரலாம் என்பதையும அவள் கற்றிருந்ததால் அதையும் மெதுவாக நிறைவேற்றி மீண்டும் பழையபடி ஆனாள். குழந்தை அபிக்கு ஆண்டு நிறைவு வந்தது. அதற்கான கடிதம் மற்றும் பணமும் மணியின் அப்பாவிடமிருந்து வந்திட, புகுந்த வீட்டிற்குச் சென்றதும் இவள் நிலைமையைச் சொல்லிட, அங்கு வேறு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.


“என் கணவர் விபத்தில் இறந்துவிட்டார். எனவே எனக்கு உங்கள் நிறுவனத்தில் தயவாய் வேலை தர முடியுமா” என்று மஞ்சு எழுதியது போன்ற ஒரு கடிதத்தை மணி தான் வேலை பார்த்த நிறுவனத்திற்கு அனுப்பியிருந்திருக்கிறான். அந்தக் கடிதத்தை நிறுவனத்தார் இது உண்மையா என்று கேட்டு மணியின் தந்தைக்கு எழுதி, அக்கடிதத்தையும் அனுப்பியிருந்தனர்.


மருத்துவரிடம் மணியை அழைத்துச் செல்ல முடியாது என்பதால் மஞ்சு மருத்துவரைக் கண்டு நிலைமையை விளக்கி,


“டாக்டர், முதல் டைம் கல்யாணத்துக்கு முன்னாடி மாத்திரை வேண்டானும் சொல்லி நிறுத்தினப்ப 4 மாசத்துல திரும்ப வந்துச்சு, அப்படியிருந்தும் இப்ப ஏன் நிறுத்த சொன்னீங்கனு தெரியல.. இப்பவும் 4 மாசத்துல திரும்பவும் அவர் முன்ன மாதிரி ஆகிட்டாரு. இந்த முறை நிறுத்தாம இருந்திருக்கலாம்னு தோணுது. கொஞ்சம் வயலன்ஸும் இருக்கு” என்று சொல்லி எல்லாக் கடிதங்களையும் காட்டிட


“ம்ம்ம்.. எல்லை மீறி போயிருக்கறதுனால ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கனும். பயப்பட வேண்டாம்.”


“ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தா அப்புறம் வராதா டாக்டர்? சரியாகிடுவாரா?”


“அப்படிச் சொல்ல முடியாது. மாத்திரைக்குக் கட்டுப்படாம எல்லை மீறும் போது ப்ரெய்ன் கெமிஸ்ட்ரிய ட்விஸ்ட் பண்ணிவிடத்தான் இது. இது நல்லதுக்குத்தான். இதுக்கு அப்புறமும் அவருக்கு முதல்ல ஹெவி டோஸ் கொடுத்து அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுடலாம். மினிமல் டோஸ்ல தொடரலாம். நிறுத்தினா திரும்ப வருதுனு தெரிஞ்சதுனால  இனி மாத்திரைய நிறுத்த வேண்டாம். லைஃப் லாங்க்… ஆனா மீண்டும் சிவியரா வராதுனு 100% உத்தரவாதம் கிடையாதுதான். எல்லாமே சூழ்நிலையைப் பொறுத்துதான் இருக்கு. ஒரு வேளை நல்லபடியா அப்பப்ப பிரச்சனை எழுந்தாலும், சிவியரா இல்லாம சமாளிக்கும்படியா போகலாம்”


மருத்துவரின் அறிவுரைப்படி மணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து, 10நாட்கள் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து, எல்லாம் முடிந்து, மெதுவாகச் சரியாகி, மீண்டும் வேலைக்குப் போகத் தொடங்கினான். சில வருடங்கள் நன்றாக அமைதியாகச் செல்ல, மணியும் நன்றாகத்தான் இருந்தான். வாழ்க்கையும் ஓரளவு நன்றாகச் சென்றது. அபியும் வளர்ந்தாள். மருத்துவர் சொன்னது போல், அதன் பின், சில பிரச்சனைகள் தலை தூக்கியதுதான். ஆனால், கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. மணியும் அவ்வப்போது வேலையை விட்டுவந்துவிடுவான். என்றாலும் வேலை கிடைக்கும் போது, அவனது படிப்பிற்கும், அனுபவத்திற்கும் நல்ல சம்பளம் கிடைத்தது. ஆனால், அவன் நிலைத்து நிற்காததால் பிரச்சனைகள் தோன்றின. என்றாலும் சமாளித்து வந்தாயிற்று. எந்த முடிவுக்கும் இவளிடம் கருத்து கேட்க மாட்டான். அப்படியே கேட்டாலும், இவள் தனது கருத்தைச் சொன்னாலும்,


“நீயும் உன் சஜஷனும். உங்கிட்ட போய் கேக்கறேன் பாரு….என்னவோ பெரிய அறிவாளினு நினைப்பு….பெரிய்ய படிப்பு! நீயெல்லாம் என்னத்த படிச்ச” என்று சொல்லிப் புறக்கணித்து தான் நினைத்ததைத்தான் செய்வான். மணியின் பல முடிவுகள் தவறாகத்தான் போயின. இவர்களைப் போன்றவர்களுக்கு ஃபினான்சியல் மேனேஜ்மென்ட் சரிவர செய்ய இயலாது என்பதும் மருத்துவ புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்ததே!


எக்ஸ்ட்ரிமிட்டிஸ். மூட் இருந்தால் நல்லவன். மூட் இல்லை என்றால், மிகவும் மோசமாக, அதுவும் வேலை இல்லை என்றால், மஞ்சுவை வீட்டிலும், பொதுவெளியிலும், அகராதியில் இருக்கும், இல்லாத தகுதியற்ற வார்த்தைகளால் பூசை செய்வான். ஆனால், அபியிடம் அன்புடையவன். அப்படியான சூழலில் அபியையும் வளர்த்து, கடன் வாங்கி, எஞ்சினியரிங்க் படிக்க வைத்து, தன்னிடம் இருந்தவை, அபிக்கு வந்தவை எல்லாம் விற்று அடுத்து மேற்படிப்பும் படிக்க வைத்து, கல்யாணமும் செய்து, என்று காலச்சக்கரம் சுழன்று இதோ இப்போது மீண்டும் மணி வேலை இல்லாமல், மஞ்சுவையும், இவள் பெற்றோரையும், குடும்பத்தையும் வார்த்தைகளால் வதைத்துக் கொண்டிருந்தாலும், மஞ்சுவும் தான் இப்படித்தான் என்று தன் இயல்பை நிலை நாட்டிக் கொண்டு, யார் என்ன கமென்ட் அடித்தாலும் தலைக்குள் எடுத்துக் கொள்ளாமல், மணியிடம் எப்போதுமே இரக்கமும், அன்பும் காட்டி வந்தாள். ஆனால் இரு நாட்களுக்கு முன்னால் சொன்ன வார்த்தைகள்தான்…..அந்த வார்த்தைகள்தான்…..


“மஞ்சு, அண்ணாவுக்கு ஒரு லெட்டர் கூரியர்ல வந்திருக்கு.” என்று அமிர்தா சொன்னதும் மஞ்சுவிற்கு மனதில் ஓடிய நினைவலைகளிலிருந்து நிகழ்காலத்திற்கு வர கொஞ்சம் நேரம் பிடித்தது.


“அமிர்தா அப்படியே அந்த டேபிள்ல அவர் கண்ணுல படறா மாதிரி வைச்சுரு. அபி கூப்பிடுகிறேனு சொன்னாளே இன்னும் கூப்பிடலையே” என்று சொல்லிக் கொண்டே நேரத்தைப் பார்த்தாள்.


 “அபி ½ மணி நேரத்துல கூப்பிடறேன்னு சொன்னா… 15 நிமிஷம் தானே ஆகுது…மஞ்சு….”


“ஓ! ஆமா! 15 நிமிஷம் தான் ஆகுதுல!” 2 ½ மணி நேரத் திரைப்படம் சொல்ல முடியாததை பதினைந்தே நிமிடத்தில், வாழ்க்கைக் கதையையே காட்சிகளாய் விரித்து விட்டதே இந்த மனம்! மனம் சிறந்த கதை சொல்லிதான்! மிகவும் சக்தி வாய்ந்ததுதான் என்று நினைத்துக் கொண்டு இன்னும் சில நிமிடங்கள் கடந்த போது அபியின் ஸ்கைப் கால் வந்தது


“அம்மா ஆர் யு ஓகே நௌ? அத்தை நீயும் இங்க வந்து உக்காரு. .அம்மா சொல்லுமா என்ன நடந்துச்சு”


“நீயும் உங்க அப்பனும், தம்பியும் தான் நான் கடனாளியானதுக்குக் காரணம். என்னை ஏமாத்தி உன்னை என் தலைல கட்டி வைச்சு, உதவாக்கரை உனக்குச் சாப்பாடு கொடுத்து, உங்க வீட்டு ஆளுங்க வந்தா அவங்களுக்கும் சோறு போட்டே நான் கடனாளியானேன்.”


“அம்மா இது அப்பா சொல்லுற வழகமான டயலாக்தானே. எங்கிட்டயும் நேத்து பேசும் போது முக்கால் மணி நேரம் உன்னதான் திட்டிக்கிட்டுருந்தாரு”


“தெரியும் அபி! சின்ன வயசுல தாங்கற சக்தி இருந்துச்சு. உன்ன வளர்க்கறதுல, உன் கூட டைம் ஸ்பென்ட் பண்றதுனு, நீ என் கூட இருந்தது வரை அப்பாவோட பிரச்சனையோ எதுவுமே பெரிசா தெரியலை. இப்ப நீயும் வேலை, கல்யாணம்னு போயாச்சு. இத்தன நாள் குடும்பம், உங்கப்பாவைச் சமாளிக்கறது, அதுஇதுனு இருந்தாச்சு. இப்ப மைண்ட என்கேஜ்டா வைச்சுக்கலைனா மனசு தாறுமாறா ஆயிடுமேனு, இப்பவாச்சும் எனக்குனு எனக்குப் பிடிச்ச வாழ்க்கைய யாருக்கும் பாதிப்பு இல்லாம வாழலாமேனு, உங்கிட்ட நான் அன்னிக்கு சொல்லிட்டு ஒரு சில நல்ல ஆக்டிவிட்டிஸ்ல, சோசியல் செர்வீஸ்ல இறங்கியிருக்கேன்ல. அது உங்க அப்பாவுக்குப் பிடிக்கலை. அவரு இப்ப மாத்திரையும் சாப்பிடறது இல்லை அபி.”


“மஞ்சு நீ ஏன் ஒரு வேலைக்குப் போகக் கூடாது? என்ன சொல்லற அபி?”


“நான் வேலைக்குப் போறேன்னு சொன்னாலே உடனே, “போயேன்…போ…நான் பேசாம வேலைய விட்டுட்டு வீட்டுல இருக்கேன். உன்னால என்ன மாதிரி சம்பாதிக்க முடியுமா? நீ சம்பாதிச்சுட்டு வா…நான் வீட்டுல இருக்கேன்” இதான் அவர் பதில். அப்புறம் அவர் பாக்கற வேலையையும் இதச் சொல்லி விட்டுருவாரோனு பயந்தே போல. ஆனா அப்படியிருந்தும் இப்ப இவரு கஷ்டப்படறாரேனு நான் ஆன்லைன்ல ஜாப் எடுத்து வொர்க் பண்ணிக் கொடுத்து பணம் கிடைச்சுச்சு. அதை அவர்கிட்ட கொடுத்தேன்.”


“எவனெவனுக்கெல்லாமோ, கண்ட கபோதிகளுக்கு செய்யற. கண்டவன் கூட போற. எவனுக்கு நீ இப்படி மாஞ்சு மாஞ்சு செய்யற? எவன் கூட ”…..”? அதான் இந்தப் பணமா? நான் என்ன கேனையனா….” இதைச் சொல்வதற்குள் மஞ்சுவால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “எனக்கு இதுக்கு மேலயும் என் சுய மரியாதையை இழந்து இங்க இருக்க முடியலை. இதுதான் காரணம். நான் தனியா வாழலாமானு யோசிக்கறதுக்கு”


அங்கு சிறிது நேரம் மௌனம் நிலவியது. மஞ்சு தன் உணர்வுகளிலிருந்து மீளட்டும் என்று அபியும், அமிர்தாவும் மௌனமாக இருந்தார்கள்.


“பாரு, நான் இப்ப கண்ண மூடின உடனே பழசு எல்லாம் மேல வந்துருச்சு. இத்தனை வருஷம் தோணாதது எல்லாம் இப்ப தோண்டினதுனால குப்பையா மேல மிதக்குது.”


“சரி!…..அம்மா இப்படி யோசிச்சுப் பாரு. ஜஸ்ட் ஒரு சின்ன ஸ்பேஸ் கொடுத்துப் பாரேன். அத்தையோட கொஞ்ச நாள் இருந்து பாரேன்… பை த பை அப்பா இப்ப மாத்திரை சாப்பிடறது இல்லனு தெரியுது. நான் அப்பாகிட்ட பேசறேன். அப்பா நேத்து பேசும் போது அவருக்கு வேலை கிடைக்கப் போகுதாம்… சொன்னாரு….ஸோ அப்புறமும் அவரு இப்படித்தான் பேசப் போறாரு…ஆனா, கொஞ்சம் அடங்கலாம். அதுவரை அத்தையோட இருந்து பாரேன்”


“நான் அதைத்தான் சொல்ல வந்தேன்…..மஞ்சு நான் அண்ணாட்ட பேசறேன்….நீ என் கூட வந்து கொஞ்ச நாள் இருந்து பாரு. உன்னால தனியா வாழ முடியுமானு ஒரு சோதனை முயற்சியா கூட இந்த ஸ்பேஸ் அதுக்கு உதவலாம்.”


“இல்ல….எனக்கு இதுக்கு மேலயும் வார்த்தைகளைத் தாங்கற சக்தி இல்ல….ப்ளீஸ் நான் தனியா இருக்கேன்…” மஞ்சு மிகவும் சோர்ந்து போனாள்.


 மஞ்சுவை அவர்கள் இருவரும் பேசி சமாதானப்படுத்திச் சம்மதிக்க வைத்தார்கள். வெளியே போயிருந்த மணி வந்தான்.


“ஹை அண்ணா….எப்படி இருக்கீங்க?”. அவனிடமிருந்து எந்த பதிலுமில்லை.


“அண்ணா வித் யுவர் பெர்மிஷன் அண்ணிய எங்க வீட்டுக்கு ஜஸ்ட் ஒரு வாரம் கூட்டிட்டுப் போட்டா?”


“எங்க வேணா கூட்டிட்டுப் போ. லாயக்கத்தவ. என் ஃப்யூச்சர் ஸ்பாயில் ஆனதுக்குக் காரணமே இவதான். எனக்கு யாரோட உதவியும் தேவையில்ல” என்று அவ்வப்போது உதடுகளைப் பற்களால் கடித்துக் கொண்டு அங்குமிங்கும் வேகமாக நடந்தான். தனக்குள் ஏதோ பேசிக் கொண்டான்.


எதற்குமே மஞ்சுவைக் குறை சொல்லுவதுதான் அண்ணனின் வழக்கம். அமிர்தா எதுவும் பேசவில்லை. மணி சரியாக இல்லை என்பது அமிர்தாவுக்குப் புரிந்தது. தான் மட்டும்தான் இந்த உலகிலேயே பெர்ஃபெக்ட். மற்றவர்கள் எல்லோரும் தவறு செய்கிறார்கள். தான் நினைத்ததைச் சாதிக்க வேண்டும், தோல்வியை மனம் ஒப்பாது. தனது தோல்விகளுக்கு, முடிவுகளுக்கு எப்போதுமே பிறரைக் குற்றம் சொல்லுவது. அதனால் வாழ்க்கையே பாதிக்கப்படுவது! டாக்டர் சொன்னதும் அதுதானே பெர்சனாலிட்டி டிஸார்டர்!


மஞ்சுவின் வைராக்கியம் அமிர்தாவுடன் செல்ல வைத்தது. பைரவியையும் அழைத்துச் சென்றாள். கொஞ்சம் மனசு லேசாகியது. 5 நாட்கள் கடந்த நிலையில் மஞ்சுவின் வைராக்கியம் தளரத் தொடங்கியது. அவளுக்கு எல்லோரையும் அன்பு செய்துதானே பழக்கம்! ‘ஐயோ அவர் மருந்தும் சாப்பிடறாத்ல்லை.. இந்த சமயத்துல தன்னைச் சுத்தமாவும் வைச்சுக்க மாட்டார். டாய்லெட் சரியா யூஸ் பண்ண மாட்டார்.’. மஞ்சுவிற்கு இரவு மீண்டும் பழைய நினைவுகள் மேலெழுந்தது.


 அன்று மணியின் மருத்துவர், ஷாட் ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டும் என்று சொன்னதும் மணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்பதால், மருத்துவர், மணிக்கு ஒரு மயக்க மாத்திரையை உணவில் கலந்து கொடுத்துவிட்டு, வீட்டிலுள்ளவர்களும் சாப்பாடு கசக்கிறது என்று நடிக்க வேண்டும் என்றும், சற்று நேரத்தில் அவன் நன்றாகத் தூங்கிவிடுவான், தூங்கியதும், மருத்துவருக்குச் சொல்லிவிட்டால் மருத்துவமனையிலிருந்து, ஆட்கள் வந்து அவனை அழைத்துச் சென்று விடுவார்கள் என்று சொல்லிட, மஞ்சுவிற்கு அந்தக் காட்சி இப்போது மனதில் விரிந்த போது, குழந்தை அபி அக்காட்சியைப் பார்க்கக் கூடாது என்று தான் மறைத்துக் கொண்டு அறையில் இருந்தது எல்லாம் நினைவில் வந்தது.


மருத்துவமனைக்கு மறுநாள் மஞ்சு சென்ற போது அவள் கண்ட காட்சி அவளை நிலைகுலைய வைத்தது. மணி கொஞ்சம் வயலண்டாக இருந்ததால் ஓர் அறையில், சங்கிலியால் கட்டப்பட்டு, அவன் ஏதோ சிறைக் கைதி போல கம்பிகளைப் பிடித்துக் கொண்டு இவளைப் பார்த்த அந்த ஏக்கமான பார்வை, மனதை உலுக்கியெடுத்துவிட யாருக்கும் இந்த நிலை வரக் கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டாள். மருத்துவமனையில் கண்ட காட்சிகளும், அதிலும் பெண்களின் நிலை கண்களில் நீரை வரவழைத்தது. அங்கிருந்த ஒவ்வொரு மனநிலைபாதிக்கப்பட்ட நோயாளியும் ஏதோ ஒரு விதத்தில் மனதைப் பாதித்தனரே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும் அல்லது பல கதைகள், காரணங்கள் இருக்கலாம். வாழ்க்கை ஒவ்வொருவரிடமும் எப்படி விளையாடுகிறது! பெற்றோர் வளர்ப்பு, விதி, சூழ்நிலை, மூளையில் பிசகு என்று ஏதேனும் ஒரு காரணம் சொல்லப்பட்டாலும் கஷ்டப்படுவது அவர்கள்தானே! பாவம்தான் இப்படியான மனிதர்களின். சின்ன மூளைக்குள் இருக்கும் நியூரான்களுக்குள் எத்தனை சிக்கல்கள்! இவர்கள் எல்லாம் பரிதாபத்திற்குரியவர்கள்தான்.



அதன் பின் 10 நாட்கள் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டு அறையில் கொண்டு வரப்பட்டு படுக்கையில் மணியை படுக்க வைத்ததும் 5 நிமிடத்திற்கு உடல் மேலெழுந்து துள்ளியதே……ஒவ்வொரு நாளும், மஞ்சுவிற்கு, கணவன் என்றில்லாமல் ஒரு மனிதன் என்ற பார்வையிலேயே மனம் துடித்ததே. அது இப்போதும் நினைவுக்கு வர தூக்கம் வரவில்லை. ‘.நோ….இனியும் அந்த நிலை அவருக்கு வந்துவிடக் கூடாது!’ ஒரு தீர்மானத்துடன் அந்த இரவைக் கழித்தாள்.



மறு நாள் காலையில், “அமிர்தா! நான் என் வீட்டுக்குப் போறேன்பா.......உங்க அண்ணா மாத்திரை வேற சாப்பிடறது இல்ல. அப்புறம் அந்த பழைய நிலை வந்துரக் கூடாது……இதுவும் நான் செய்ய நினைக்கிற ஒரு சோசியல் செர்வீஸ்தானே…..வீட்டிலயும் செய்யலாமே……கேட்கக் கூடாத வார்த்தைகளும் கேட்டாச்சுதான். ….மனசுல அந்தப் புண் இருக்குதான்…. இனியும் எறியப்படும் தான். ஆனா ‘க்ஷமா ஹி சத்ய ஹை’ அப்புறம் நான் அடிக்கடி சொல்லுற அன் கண்டிஷனல் லவ் க்கு அர்த்தமே இல்லாம ஆயிடும்…..ஸோ….”



அமிர்தா, அபிக்கு வாட்சப்பில் செய்தி அனுப்பினாள்.



சீதை ராமனை மன்னித்துவிட்டாள்!





தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யலாம்.

78 கருத்துகள்:

  1. த ம +1. அப்பறம் இரண்டு பகுதிகளையும் படித்துவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. //எந்தெந்த ஜோசியர்கள் இந்த ஜாதகங்களைச் சேர்த்தனரோ அதே ஜோசியர்களே திருமணத்திற்குப் பிறகு இந்த இரு ஜாதகங்களையும் யார் சேர்த்தது என்று கேள்வி கேட்டனர். பொருத்தமே இல்லை என்றும் சொன்னார்கள்//

    உண்மை .


    //“அமிர்தா! நான் என் வீட்டுக்குப் போறேன்பா.......உங்க அண்ணா மாத்திரை வேற சாப்பிடறது இல்ல. அப்புறம் அந்த பழைய நிலை வந்துரக் கூடாது……இதுவும் நான் செய்ய நினைக்கிற ஒரு சோசியல் செர்வீஸ்தானே…..வீட்டிலயும் செய்யலாமே……கேட்கக் கூடாத வார்த்தைகளும் கேட்டாச்சுதான். ….மனசுல அந்தப் புண் இருக்குதான்…. இனியும் எறியப்படும் தான். ஆனா ‘க்ஷமா ஹி சத்ய ஹை’ அப்புறம் நான் அடிக்கடி சொல்லுற அன் கண்டிஷனல் லவ் க்கு அர்த்தமே இல்லாம ஆயிடும்…..ஸோ….”//

    மஞ்சுவின் வார்த்தைகள் ! மஞ்சுவின் கவனிப்பில் மணி குணமாக வேண்டும்.

    கீதா , கதை அருமை.

    வாழ்த்துக்கள்.



    பதிலளிநீக்கு
  3. மருத்துவமனை காட்சி மன்னிப்பின் அவசியத்தை நீக்கிவிட்டதாகத் தோன்றுகிறது. மணியின் நிலையில் யார் அவரை மன்னித்தால் என்ன வதைத்தால் என்ன?
    சுமையான களம். அழுத்தமான எழுத்து.

    //மீண்டும் வாசிக்க வேண்டும் என்று குறித்துக் கொண்டாள்.
    why? ஒருமுறை பட்டால் புரியாதா? :-)

    பதிலளிநீக்கு
  4. //இப்போது கண்ணை மூடிக் காட்சிகள் விரிந்த சமயத்தில் இவளுக்குச் சிரிப்புதான் வந்தது. எந்தெந்த ஜோசியர்கள் இந்த ஜாதகங்களைச் சேர்த்தனரோ அதே ஜோசியர்களே திருமணத்திற்குப் பிறகு இந்த இரு ஜாதகங்களையும் யார் சேர்த்தது என்று கேள்வி கேட்டனர்.// இம்மாதிரிக் கேட்கும் ஜோசியர்களைப் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது! மற்றபடி ஆணோ, பெண்ணோ இப்படியான மனோநிலைக்கு ஆளானவர்களோடு தொடர்ந்து வாழ்ந்து வருபவர்கள் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்! இம்மாதிரி ஆண்கள் நிறையவே உண்டு! பெண்களிலும் ஒரு சிலர்! :(

    பதிலளிநீக்கு
  5. இப்போதுததான் முழுமையாகப் படித்தேன். எழுத்துக்களில் வீச்சினைக் காண முடிந்தது.

    பதிலளிநீக்கு
  6. >>> ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும் அல்லது பல கதைகள், காரணங்கள் இருக்கலாம். வாழ்க்கை ஒவ்வொருவரிடமும் எப்படி விளையாடுகிறது!..<<<

    இனிவரும் நாட்களிலாவது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகட்டும்..

    பதிலளிநீக்கு
  7. கனமான கதைக் களன் - கதையின் தலைப்பு கதை படித்த பின் இன்னொரு அழுத்தம் தருகிறது! கதாசிரியருக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  8. #எந்தெந்த ஜோசியர்கள் இந்த ஜாதகங்களைச் சேர்த்தனரோ அதே ஜோசியர்களே திருமணத்திற்குப் பிறகு இந்த இரு ஜாதகங்களையும் யார் சேர்த்தது என்று கேள்வி கேட்டனர். பொருத்தமே இல்லை என்றும் சொன்னார்கள்#
    இது என் அனுபவமும்கூட :)

    பதிலளிநீக்கு
  9. கதையின் களம் அதிகமான கனம்... நேற்றிரவு இரயில் பயணத்தில் படித்தேன்.
    இதைப் படித்தவுடன் எனக்கென்னவோ... நடந்த சம்பவங்களின் பின்னணியில் கதாபாத்திரங்களின் பெயர்கள் மாற்றி உலவ விட்டதுபோல் மனதுக்குள் ஒரு உறுத்தல் உண்மையாகத்தான் இருக்கும்.

    வாழ்த்துகள் கதையின் தேர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  10. மஞ்சுவின் பாத்திர படைப்பு மிகவும் உயர்வாக உள்ளது அக்கா...
    எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ...மிக சிறிய ஆசைகளும் அற்ற..புரிதல் இல்லாத உறவு சுழலில் ..எந்த பற்றும் இல்லாமல் ஆனால்...

    அனைத்தையும் செய்ய வேண்டும்,,,இந்நிலையில் வாழ்வது கடினம் அன்றோ...

    இந்த சீதை ராமனை மன்னித்து மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை....

    ராமனையே இவள் தான் வாழ வைக்கிறாள்...


    சிறப்பான கதையை கொடுத்தமைக்கு நன்றி கீதாக்கா..

    பதிலளிநீக்கு
  11. சகோதரி கீதா அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  12. எழுதிய, எடுத்காட்டிய இருவருக்கும் பாராட்டும் வாழ்த்தும்!

    பதிலளிநீக்கு
  13. வாருங்கள் நெல்லைத் தமிழன் உங்கள் கருத்தை எதிர்ப்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  14. கோமதி அக்கா கருத்திற்கு, வாழ்த்திற்கு மிக்க மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க அப்பாதுரை சார்! கருத்திற்கு மிக்க நன்றி!

    மருத்துவமனை காட்சி மன்னிப்பின் அவசியத்தை நீக்கிவிட்டதாகத் தோன்றுகிறது. மணியின் நிலையில் யார் அவரை மன்னித்தால் என்ன வதைத்தால் என்ன? // ம்ம்ம்ம் ஸார் அந்தக் காட்சி அது பீக்...ட்ரீட்மென்ட் முடிந்து வரும் போது அவர்கள் கான்ஷியஸ் ஆகிவிடுகிறார்களே. அதுவும் ஷாக் ட்ரீட்மென்ட் முடிந்த பிறகு நன்றாகிறார்கள். அப்படித்தான் நான் திரட்டிய மருத்துவத் தகவல்கள் சொல்லுகிறது. அப்புறம் மஞ்சுவின் கேரக்டர்....அவளுக்கு இரக்கம் இருந்தால்தானே மன்னிக்க முடியும்!!!! கதையின் முடிவும் அப்படித்தானே இருக்க வேண்டும்.

    சுமையான களம். அழுத்தமான எழுத்து.// மிக்க நன்றி சார்...

    /மீண்டும் வாசிக்க வேண்டும் என்று குறித்துக் கொண்டாள்.
    why? ஒருமுறை பட்டால் புரியாதா? :-)// ஹஹஹஹஹ் அப்படி இருப்பதால் தானே எத்தனை பட்டாலும் மன்னித்துக் கொண்டே இருக்கிறாள் மஞ்சு!!அந்தக் கேரக்டர் அப்படித்தானே வரணும்...ஹஹஹ்.

    மிக்க நன்றி சார். தங்களின் கருத்தை எதிர்பார்க்கவில்லை! மிகவும் மகிழ்ச்சி! உங்கள் எழுத்தை ரசித்திருக்கிறேன் சார்.

    பதிலளிநீக்கு
  16. என் மனதை மிகவும் கலங்க வைத்த மிகப்பெரிய நீண்ட கதை.

    அச்சு அசலாக இதே போன்ற அனுபவங்களுடன் வாழும் ஓர் தம்பதியினரைப் பற்றி எனக்கு மிகவும் நன்கு தெரியும் என்பதால் இதனை நான் (படிக்க மிகவும் களைப்பாக இருப்பினும்) ஏதோ ஒரு ஆர்வத்திலும் எதிர்பார்ப்பிலும் இதிலுள்ள இரு பகுதிகளையும் பொறுமையாகப் படிக்க நேர்ந்தது.

    [நல்லவேளையாக, எனக்குத் தெரிந்த அந்த தம்பதியினருக்கு குழந்தைகள் ஏதும் இதுவரை பிறக்கவில்லை. அதுவும் கடவுளின் க்ருபை என்றே நினைத்து மகிழத்தான் வேண்டியுள்ளது.]

    இருப்பினும் மிகவும் பொறுமையாக, இதிலுள்ள ஒவ்வொரு வரிகளையும் முழுவதுமாக மனதில் கிரஹித்துக்கொண்டு படித்து முடித்தேன்.

    இதில் சொல்லியுள்ளவைகளைத் தவிர சொல்லாமல் விட்டுள்ளவை ஏராளமாகவே இருக்கக்கூடும். அவற்றை என்னால் நன்கு யூகிக்கவும் முடிகிறது.

    பொறுமையான எழுத்து நடையில் மிகவும் அருமையானதொரு ஆக்கம். பாராட்டுகள்.

    இதுபோன்று நாம் எங்கே இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற தன்னிலை மறக்கும் படியான, சுய நினைவற்ற வியாதிகளும், ஷாக் ட்ரீட்மெண்ட் போன்ற கொடுமையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தமான நிலைமையும் நம் எதிரிக்குக்கூட வரவே கூடாது.

    குடும்பத்தில் ஒருவருக்கு இதுபோல ஏற்படும்போது, அது அந்த முழுக்குடும்ப உறுப்பினர்களையும் ஏதோவொரு விதத்தில் பாதிக்கிறது + சமூகத்தில் பல்வேறு அவமானங்களையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடுகிறது. :(

    பதிலளிநீக்கு
  17. இம்மாதிரிக் கேட்கும் ஜோசியர்களைப் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது!// ஹஹஹஹ உண்மைதான் கீதாக்கா. இப்படிப்பட்ட பிரச்சனை உள்ள ஆண்கள் அதிகம் என்பதைவிட பெண்களுக்கு வந்தால் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் ஆண்கள் மிகவும் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால் அதனைத் தவறாகவும் சொல்ல முடியயது. ஆண் தானே குடும்பத்தின் வருமானத்தைக் கவனிக்க வேண்டும். ஆனால் ஆண்களுக்கு வந்தால் பெண்கள் பார்த்துக் கொள்வார்கள் சூழ்நிலையின் காரணங்களால் அப்படித்தான் புள்ளியியல் சொல்லுகிறது. குறிப்பாக இந்தியாவில். ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு அமெரிகக்ப் பெண் தான் ரிசர்ச் செய்தது இந்த சப்ஜெக்டில் அதுவும் கிழக்கிந்திய நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் அதிகமாக இருப்பதாகச் சொன்னார். அதாவது மதத்தத்துவங்கள் இவற்றில் ஆழ்ந்து ஈடுபாடு உடையவர்களுக்கு இருப்பதாகச் சொன்னார். அதுவும் கிராமங்களில் ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் சொன்னார்.

    மிக்க நன்றி கீதாக்கா தங்கள் கருத்திற்கு...

    பதிலளிநீக்கு
  18. முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. துரை செல்வராஜு சகோ தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. ஆண்களும் பார்த்துக்கொள்ளத் தான் செய்கின்றனர். மௌனராகங்கள்! மற்றபடி விவரிக்க முடியாத சூழ்நிலை! பொறுமையின் பூஷணங்களாகத் திகழும் ஆண்களும் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா....நானும் அப்படியான ஆண்களை பார்த்திருக்கிறேன்....

      நீக்கு
  21. மிக்க நன்றி மிடில்க்ளாஸ் மாதவி தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும். தலைப்பு இரு அர்த்தங்களில். ஒன்று இரு கேரக்டர்களும் எதிரெதிர் துருவங்கள். மற்றொன்று ஆண் கதாபாத்திரத்தின் பிரச்சனையைப் பற்றியது...மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  22. பகவான் ஜீ!!! உங்கள் அனுபவமுமா!!!......ஹ்ஹஹஹ் மிக்க நன்றி!!!

    பதிலளிநீக்கு
  23. கில்லர்ஜி வாங்க! கதை கனமா இருக்கா!! ஐயோ அப்போ எப்படி ரயிலில் மொபைலைத் தாங்கிப் படித்தீர்கள்!!! ஹஹஹஹ்!!!நம்மைச் சுற்றி அல்லது நமக்குத் தெரிந்த ஒரு சில நிகழ்வுகள் கதையின் கருவாக அமைய கதை என்றால் கற்பனைதானே ஜி! அப்படி இருக்க பெயர்களும் நம் மனதில் தோன்றுவது தானே!!!..மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கு..

    பதிலளிநீக்கு
  24. வாங்க அனு! //மஞ்சுவின் பாத்திரப்படைப்பு மிகவும் உயர்வாக உள்ளது// ஓ! அப்படியாகிவிட்டதோ. கொஞ்சம் மைனஸ் பார்ட்டையும் சொல்லியிருக்கலாம் இல்லையா! ஒரேயடியாக மஞ்சுவை ராமாயண சீதை ஆக்கிவிட்டேனோ??!!ஹ்ஹஹ்ஹ் ம்ம்ம் இனி இதையும் குறித்துக் கொண்டுள்ளேன் அனு. நல்ல பாயின்ட் கிடைத்தது எனக்கு!!!

    இது போன்றவர்கள் எப்போதும் இப்படி இருப்பதில்லை. மாறுதல்களும் ஏற்பட வாய்ப்புண்டு அனு. கதையின் கண்டிஷன் மன்னிப்பது என்பதால்...இப்படியான கதா பாத்திரங்கள்!!

    மிக்க நன்றி அனு தங்களின் கருத்திற்கு...

    பதிலளிநீக்கு
  25. //அச்சு அசலாக இதே போன்ற அனுபவங்களுடன் வாழும் ஓர் தம்பதியினரைப் பற்றி எனக்கு மிகவும் நன்கு தெரியும்

    life imitates art. scary.

    பதிலளிநீக்கு
  26. கதைக்காக பாத்திரமா பாத்திரத்துக்காக கதையா மஞ்சுவைப் போன்றவர்கள் சீதையாக மாற கற்பனை செய்யப்பட்ட கதை நன்றாகவே வந்திருக்கிறது இத்தனை களே பரத்திலும் குழந்தை பெற்றுக் கொண்டடு ஏன் என்று நினைக்கவும் வைக்கிறது இல்லையென்றால் படும் துயரங்கள் அர்த்தமில்லாதவை ஆகிவிடும் அப்பாதுரை எங்கள் ப்ளாகுக்கு மட்டும் வருகிறாரே

    பதிலளிநீக்கு
  27. முழுமையாகப் படித்தேன். ரொம்ப கனமான கதை. மஞ்சுபோல் இருப்பவர்கள் வெகு வெகு அபூர்வம், அவர்கள் சேவைக்காகவே பிறந்த மனநிலை உள்ளவர்கள். அவள் ஆரம்பத்திலேயே இந்த ரெஸ்பான்சிபிளிட்டியை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது. ஏற்றால், குறை சொல்லுபவர்களைப் புறம்தள்ளி, என்ன செய்தாலும் தன் மீது சேறுதான் வீசப்படும் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கவேண்டும்.

    இதைப்போன்ற நிகழ்வு என் உறவுகளில் நடந்திருக்கிறது. Very similar (ஆனால் இரண்டு குழந்தைகள்) ஆனால், ஏதோ ஒரு கணத்தில் ஆண் இறப்பை ஏற்றுக்கொள்கிறார். எதிரிகளுக்குக்கூட வரக்கூடாத நிகழ்வு இந்த மாதிரி ஒருவர் நம் குடும்பத்தில் பிறப்பது.

    மஞ்சுவைப் போன்றவர்களுக்கு பெரும்பாலும் எந்த உறவுமே (கணவனைச் சார்ந்தவர்கள்) ஆறுதலாக இருக்கமாட்டார்கள். இப்படிப்பட்டவனுக்கு இவள் சரி என்று சொல்லி மணந்தாளே என்ற மனநிலை உடனே மறந்துவிடும். அந்தப் பெண்களைத் தாங்குவதற்குப் பதில், வார்த்தைகளால் தாக்கத்தான் முனைவார்கள். கடவுள் புண்ணியத்தில் குழந்தைகள் நல்ல நிலைமை அடைந்து, அம்மாவைப் புரிந்துகொள்ளும் மனநிலை இருந்தால் கடைசி காலத்திலாவது கொஞ்சம் சாந்தியோடு இருப்பது (மனச் சாந்தி. இது யாரு புதுசா சாந்தின்னு கேட்காதீங்க) சாத்தியமாகும்.

    ரசித்துப்படிக்கவில்லை. ரொம்பவும் மன அழுத்தம் தரக்கூடிய கதை. இத்தகைய சோகக்கதைகளை நான் பெரும்பாலும் படிக்க விரும்புவதில்லை.

    நன்றாக எழுதியிருக்கீங்க. கொஞ்சம் டிங்கரிங் பண்ணியிருந்தீங்கன்னா, மிகச் சிறந்த கதையா வந்திருக்கும். அத்தகைய சீதைகள், ராமனை மன்னிப்பதில்லை, இந்த நிலைமையை ஏற்படுத்திய, சீதைகளுக்கு இத்தகைய வாழ்வைக் கொடுத்த கடவுளைத்தான் மன்னிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  28. கதை ஓவராக இழுக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  29. டிடி சகோ மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு!!!

    புலவர் ஐயா தங்களுக்கு மிக்க நன்றி கருத்திற்கு!!

    விஜய்! தங்களுக்கும் மிக்க நன்றி! தவறாக நினைக்க வேண்டாம். இது தகவல் அல்ல. கதை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. வைகோ சார் மிக்க நன்றி தங்களின்விரிவான கருத்திற்கு..

    ஆம் இப்படியும் தம்பதியினர் இருக்கின்றனர்// ஆம்! இதையும் விட வேதனையில் துடிப்பவர்களும் இருக்கிறார்கள் சார். குழந்தை இருப்பது நல்லது என்றும் சொல்லலாம்...இல்லை என்பதையும் நலல்து என்று சொல்லலாம் சார். இரண்டிலுமெ ப்ளஸ் மைனஸ் உண்டுதானே...

    மிகவும் நீளமான இந்தக் கதையை சிரமப்பட்டாலும் வாசித்துக் கிரஹித்தமைக்கு மிக்க மிக்க நன்றி சார்.

    சொல்லாதவை இருக்கலாம் சார். ஏற்கனவே கதை மிகவும் நீண்டு விட்டது...மனோதத்துவ மருத்துவர்களிடம் தொலைக்காட்சியில் நேயர்கள் கேள்வி கேட்க பதில் அளித்ததும், மருத்துவர்கள் இதழ்களில் பதில் அளித்தவை கட்டுரைகள் படித்தவற்றில் நிறைய நிகழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது..ஆனால் சொல்லவில்லை..

    இது போன்ற நிலைமை எதிரிக்கும் வரக்கூடாது. சரிதான் சார். ஆனால் ஒழுங்கான மருத்துவக் கவனிப்பு இருந்தால் நிலைமையைச்க் சீராகக் கொண்டு செல்லலாம் என்றும் மருத்துவர்கள் சொல்லுகிறார்க்ள். விழிப்புணர்வுதான் தேவை...

    மிக்க நன்றி சார் தங்களின் கருத்துகளுக்கு..

    பதிலளிநீக்கு
  31. ரொம்பகாலம் பொறுமை கடைபிடித்துவிட்டு கடைசியில் மனது மாற்றம் வந்தால்கூட, ஸம்பந்தம், வாழ்ந்த ஸம்பந்தம் பாசமென்று சொல்லாவிட்டாலும்,ஸோஷியல் ஒர்க்காகவேனும் செய்யவேண்டும் என்று ஏன் தோன்றியது. இம்மாதிரி உதாரணங்கள் நம் நாட்டில் ஏராளம். மஞ்சு அநேகம்பேர். புதிய வியாதிகளின் பெயர்கள்.அரைப்பயித்தியம் என்று கிராமங்களில் சொல்லுவார்கள். மனதை கனக்க வைக்கும் கதை. சிந்திக்கவும் வைக்கிறது மஞ்சுக்களைப் பற்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  32. அவள் ஆரம்பத்திலேயே இந்த ரெஸ்பான்சிபிளிட்டியை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது. ஏற்றால், குறை சொல்லுபவர்களைப் புறம்தள்ளி, என்ன செய்தாலும் தன் மீது சேறுதான் வீசப்படும் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கவேண்டும்.// மிகவும் சரியே! மஞ்சுவும் தொடர்வதாகத்தான் வருகிறது.
    எத்தகைய மனப்பக்குவம் உள்ளவர் என்றாலும் மனித மனம் தானே! தோன்றத்தானே செய்யும் அதுவும் பிரச்சனைகள் அழுத்தும் போது, குழந்தையும் அருகில் இல்லாத போது....இப்படி ஒரு பெண் முன்பு ஒரு முறை மனநல மருத்துவர் ஒருவரிடம் ஏதோ ஒரு இதழில் சொல்லிக் கேட்டிருந்தார். அதற்கு மருத்துவர் அளித்த பதிலில் கிடைத்த ஒரு பாயின்ட் தான்...இப்படிப் பல வாசித்ததுண்டு..

    அதில் ஒன்றுதான் நீங்கள்க் சொல்லியிருப்பது போல் ஒரு பெண்ணின் கணவனின் குடும்பத்தார் முதலில் சேற்றை அள்ளி வீசினாலும், அப்பெண் மாமியாரை நன்றாகப் பார்த்துக் கொள்ளப் போக, புரிந்து கொண்டு அவளைப் போற்றியதாக எழுதியிருந்தார்.
    //கடவுள் புண்ணியத்தில் குழந்தைகள் நல்ல நிலைமை அடைந்து, அம்மாவைப் புரிந்துகொள்ளும் மனநிலை இருந்தால் கடைசி காலத்திலாவது கொஞ்சம் சாந்தியோடு இருப்பது சாத்தியமாகும். // உண்மைதான் நெல்லைத் தமிழன்.

    (மனச் சாந்தி. இது யாரு புதுசா சாந்தின்னு கேட்காதீங்க)// ஹஹஹஹஹஹ் சிரித்து முடிலப்பா....ரொம்ப ரசித்தேன் இதை...

    ரசித்துப்படிக்கவில்லை. ரொம்பவும் மன அழுத்தம் தரக்கூடிய கதை. இத்தகைய சோகக்கதைகளை நான் பெரும்பாலும் படிக்க விரும்புவதில்லை. // மீ டூ....இது கொஞ்சம் ஓவராகிவிட்டதுதான் இல்லையா..எனக்கு நகைச்சுவைதான் ரொம்பப் பிடிக்கும் த்ரில்லரும் ரொம்பப் பிடிக்கும் அதுவும் துப்பறியும் கதைகள் ரொம்பவே பிடிக்கும்.....இருங்க ஒரு லைட்டர் ஒன் வரும்....

    நன்றாக எழுதியிருக்கீங்க. கொஞ்சம் டிங்கரிங் பண்ணியிருந்தீங்கன்னா, மிகச் சிறந்த கதையா வந்திருக்கும்// டிங்கரிங்க் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன் நன்றி ஸ்ரீராம். இன்னும் செய்திருக்கலாம் தான் . இதுவே நான் முதலில் அனுப்பிட்டு, அவர் ப்ளாகரில் போட்டு, ஸ்பேஸ் அட்ஜஸ்ட் செய்து, செட்டும் செய்துவிட,, ஸ்ரீராமிடம் இருங்க இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணிக் கொடுக்கறேன்னு சொல்லி பாவம் அவருக்கு நிறைய வேலை வைத்துவிட்டேன். அப்புறம் நான் அவரிடம் இனி இந்தக் கதையைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன்னு சொல்லி பின்னர் நான் அதை மீண்டும் பார்க்கக் கூட இல்லை...இங்கு வெளியான பிறகு கூட வாசிக்கவில்லை....கருத்துகளை மட்டும் பார்த்துப் பதில் சொல்லுகிறேன்...சில கதைகள் ஓரிரு முறை எடிட் செய்து பண்ணும் போது கொஞ்சமேனும் திருப்தி வந்துவிடுகிறது. ஆனால் சில எத்தனை முறை கிடப்பில் போட்டுத் திருத்தினாலும் திருப்தி வருவதில்லை...அப்படி இன்னும் சில உள்ளன.....உங்களின்- டிங்கரிங்க்- இந்தப் பாயின்டைக் குறித்துக் கொண்டேன். நீங்களும் டிங்கரிங்க் உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன் இந்தக் கதையில்...எனக்கு கற்றுக் கொள்ள உதவும்.

    சில சமயங்களில் சில சூழல்கள் இத்தகைய சீதைகளை தங்கள் முடிவுகளை எடுக்க முடியாமல் செய்துவிடுவதும் உண்டே. இதில் சொல்லப்பட்டது போல்... முதல் பகுதியில்...ஏழ்மை, பெற்றோரின் நிலைமை என்று பல சூழல்கள்...ஒரு வேளை பிறந்தவீட்டு ஆதரவு இருந்தால் இத்தகைய சீதைகள் இன்னும் தைரியமாக முடிவெடுப்பார்களாக இருக்கலாம். ஆனால் அந்த ஆதரவும் கொஞ்ச நாட்களுக்குத்தான் இருக்கும். நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே அது நடக்கும். அப்படி நல்ல புரிதல் உள்ள பெற்றோரையும் நான் சந்தித்திருக்கிறேன். அசாத்தியமான பெற்றோர்...மிக மிக அழகாகத் தன் பெண் குழந்தைகளை நல்ல வழியில் சப்போர்ட் செய்து...இத்தகைய சூழலில் டிவோர்ஸ் ஆன பெண்ணை அழகாக வழிநடத்திச் செல்கின்றனர் அந்தப் பெற்றோர்...எல்லாமெ நல்ல புரிதலில், சூழலில் தான் இருக்கிறது.

    மிக்க நன்றி நெல்லை மிகவிரிவான கருத்திற்கும், பாராட்டிற்கும் அதே சமயம் திருத்தமும் சொல்லியதற்கு...

    பதிலளிநீக்கு
  33. ஏகாந்தன் சகோ! நீண்டு விட்டதுதான்! சீதை மன்னித்தலுக்கு ஸ்ட்ராங்க் களம் வேண்டுமேனு, காட்சிகள், உணர்வுகள் என்றி சொல்லிவரும் போது ஓவராகவே நீண்டு விட்டதுதான். உங்கள் கருத்தையும் குறித்துக் கொண்டேன்.... மிக்க நன்றிசகோ

    பதிலளிநீக்கு
  34. கீதா ரெங்கன் இந்தக் கதையை அனுப்பி அதை நான் படித்ததும் மனம் கனத்துதான் போனது. ஹெவியான சப்ஜெக்ட். அதைக் கையாளும்போது உணர்வுகளை வெளிப்படுத்த கொஞ்சம் விரிவாக எழுத வேண்டியிருக்கும்.

    நீளமான பின்னூட்டங்கள் படிப்பவர்கள் மனதை கதை ஒரு அசை அசைத்திருப்பதை உணர முடிகிறது. அதுவே படைப்பாளியின் வெற்றி. கதை எழுதும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறேன் என்று சொல்லும் கீதா இப்படி ஒரு படைப்பைக் கொடுத்ததும் அசந்துதான் போனேன். நம்ம ஏரியாவில் அவர்களின் படைப்பு கூட (காலம் தவறிய உணர்வுகள்) வேறு தளத்தில் வித்தியாசமாக நன்றாக படைத்திருந்தார். கதை எழுதுவதில் கீதா அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறார். (நெல்லை... அடுத்த கட்டடத்தை நோக்கி நகர்கிறார் என்று படித்து விடாதீர்கள்!!! :))))]

    பதிலளிநீக்கு
  35. கதைக்காக பாத்திரமா பாத்திரத்துக்காக கதையா// ஜிஎம்பி சார்! இரண்டையும் சொல்லலாம்...

    மஞ்சுவைப் போன்றவர்கள் சீதையாக மாற கற்பனை செய்யப்பட்ட கதை நன்றாகவே வந்திருக்கிறது// மிக்க நன்றி சார். ஆனால் அதே சமயம் மஞ்சுவைப் போன்றவர்கள் ராமாயண சீதை போல் இல்லை என்றாலும் இந்தக் காலத்துக்கு ஏற்றார் போன்ற சீதையாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள் சார். இதில் இந்த மஞ்சு...ஒரு வகை தான். இவளையும் விட இன்னும் கஷ்டப்பட்டு, அடிமைகளாகத் தியாகம் செய்வோரும் இருக்கிறார்கள் சார். மேடைகளில் விவாதிக்கலாம் பெண்ணுரிமை என்று. ஆனால் யதார்த்தத்தில் பல சூழல்கள் சில பெண்களுக்குச் சாதகமாக அமைவதில்லை சார்.

    //இத்தனை களே பரத்திலும் குழந்தை பெற்றுக் கொண்டடு ஏன் என்று நினைக்கவும் வைக்கிறது. // இதற்கான பதிலையும் நீங்களே சொல்லிட்டீங்க சார்.../இல்லையென்றால் படும் துயரங்கள் அர்த்தமில்லாதவை ஆகிவிடும் //...யெஸ் சார். மருத்துவரின் யோசனை...மஞ்சு தொடர நினைக்கும் போது அவளுக்கும் ஒரு ஆறுதல் வேண்டுமல்லவா. குழந்தை பிறப்பதற்குத் தாம்பத்தியம் அவசியமில்லையே. அது தவறா சரியா என்றல்ல.... மஞ்சுவை நான் அது போன்ற ஒரு காரேக்டராகத்தான் சித்தரிக்க விரும்பினேன். அமைதியான முறையில் போர்க்கொடி. அன்பைச் செலுத்தி அதே சமயம் யாரையும் பாதிக்காத அளவில் சுயநலமற்ற தன் விருப்பங்களை, முடியும் வரையில் தன் சுயத்தை விட்டுக் கொடுக்காமல் இருத்தல்.. அதே சமயம் விட்டுக் கொடுக்கும் நிலை வந்தால் விட்டுக் கொடுத்து.. அப்படியான கதாபாத்திரத்தைத்தான் மனதில் இருத்தினேன் சார்...

    மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு...

    பதிலளிநீக்கு
  36. "அடுத்த கட்டடத்தை நோக்கி நகர்கிறார் " - அதுவும் உண்மைதானே. இங்க ஒரு கதை. அடுத்த கட்டடத்தில் (எங்கள்கிரியேஷன்ஸ்) ஒரு கதை. அனேகமாக அடுத்த கதை, க க க போ2வுக்காகத்தான் இருக்கும் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  37. "யதார்த்தத்தில் பல சூழல்கள் சில பெண்களுக்குச் சாதகமாக அமைவதில்லை" - உண்மை கீதா ரங்கன். நான் பார்த்திருப்பது,
    1. முதல் மனைவி 2 குழந்தைகளைத் தவிக்கவிட்டு இறந்ததும், இன்னொரு பெண்ணை, 'குழந்தை பெறக்கூடாது' என்ற கண்டிஷனோடு திருமணம் செய்தது.
    2. முதல் மனைவியை விவாகரத்து செய்து, இரண்டாவது கொஞ்சம் ஏழ்மைக்குடும்பத்தில் பெண் எடுத்தது.
    3. நீங்கள் எழுதிய கதையைப்போல, மன நலம் குன்றியவருக்கு, திருமணம் செய்துவைத்து, 2 குழந்தைகள் பிறந்து, ஓரளவுதான் மன நிலை சரியாகி, ஒரு கட்டத்தில் மன விகாரத்தினால் ஒரு நாளில் தானே தனக்குத் தீவைத்துக்கொண்டு இறந்த கணவன்.

    இதுபோல் ஏகப்பட்ட சீதைகள் இருப்பார்கள். பெண்கள்தானே நம் குடும்பத்தின் ஆணிவேர். அவர்களின் பொறுமை இல்லையென்றால், பெரும்பாலானவர்கள் குடும்பம் நடத்தவே முடியாது. அவர்கள்தான் மற்றவர்களின் தவறுகளை மன்னிக்கும் தாய்மை குணம் கொண்டவர்கள். ஆண்களிலும் 'சீதாபதி' (தாய்மை குணம் கொண்டவர்கள்) இருக்கலாம், அதன் விழுக்காடு மிகவும் குறைவு.

    மாமியார்கள் மருமகளைப் படுத்துகிறார்கள் என்று சொல்வார்கள். அது பெரும்பாலும், தன் பதவியை புதிதாக வந்தவள் எடுத்துக்கொண்டுவிட்டாளே, ஓரிரவில் தன் மகன் இன்னொருவளின் கணவன் என்ற நிலையில் தன்னை அப்ரோச் செய்கிறானே என்ற ஆரம்ப எண்ணம்தான். அப்போது மருமகள் கொஞ்சம் பொறுமையைக் கடைபிடித்தால், கடைசி காலத்தில் அத்தகைய மருமகளிடம் மன்னிப்புக்கேட்காத மாமியார் ஏது?

    பதிலளிநீக்கு
  38. காமாட்சி அம்மா, உங்கள் கருத்து மிகவும் சரி என்பேன். நம் நாட்டில் என்னதான் மேலைநாட்டுக் கலாச்சாரத்தின் தாக்குதல் இருந்தாலும் இன்னும் பெண்கள் மனம் மாறினாலும் கணவன், பாசம் என்று பிரச்சனைகள் பல வந்தாலும் டக்கென்று பிரிந்துவிடுவதில்லை. அப்படியான மஞ்சுக்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்தான்...கிராமங்களில் இன்னும் விழிப்புணர்வு இல்லை அம்மா. அதனால் அரைப்பைத்தியம், பைத்தியம் என்பார்கள். எனக்கு அந்த வார்த்தையைக் கேட்டாலே மனசு வேதனைப்படும். பாவம் அவர்கள். அவர்களது மூளைக்குள் நடக்கும் சமாச்சாரம் தான் அவர்களை அப்படி நடந்து கொள்ள வைக்கிறது. சமூகத்தில் இன்னும் விழிப்புணர்வு வர வேண்டும்.

    மிக்க நன்றி காமாட்சி அம்மா தங்களின் கருத்திற்கு.

    பதிலளிநீக்கு
  39. நெகிழ்வான கதை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  40. ஸ்ரீராம் என்னப்பா இப்படி என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டீர்கள்! மிக்க நன்றி! இந்த நன்றி உங்கள் கருத்திற்குமட்டுமல்ல. இப்படிக் கதை எழுத வைத்து ஊக்குவித்து அதுவும் கல்லூரிக் காலத்தில் எழுதியது. அதன் பின் எழுத்து இல்லாமல் இப்போதுதானே எழுதுகிறேன்...அப்போ முதல் கட்டம் தானே....சத்தியமாகச் சொல்ல வெண்டும் என்றால் உங்கள் எல்லோரது ஊக்கமும், கருத்துகளும், அதுவும் திருத்தும் கருத்துகளும் தான் காரணம்..! நிஷா எங்கள் தளத்தில் கதைக்கு...எங்கள் ப்ளாகிற்கு ஓ போட்டுருவோம்னு சொல்லியிருந்தாங்க...உண்மைதான்!! இரு தளங்களும் எல்லோரையும் ஊக்குவித்துக் கௌரவித்து பல புதிய எழுத்தாளர்களை உருவாக்குகிறீர்கள்!!! இதனை விட சிறப்பு வேறு என்ன சொல்லுங்கள். நிஷாவும் இதைச் சொல்லியிருந்தார். இரு தளங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவேண்டும்....

    மிக்க நன்றி ஸ்ரீராம் உங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும் என்ன சொல்ல என்று தெரியவில்லை....வார்த்தைகள் இல்லை.!! உங்கள் வார்த்தைகளையே சொல்லுகிறேன்...தன்யவான் ஆனேன்!!!

    பதிலளிநீக்கு
  41. (நெல்லை... அடுத்த கட்டடத்தை நோக்கி நகர்கிறார் என்று படித்து விடாதீர்கள்!!! :))))]// ஹஹஹஹஹ் அயோ தாங்கலைப்பா....இது அக்மார்க் ஸ்ரீராமின் குறும்பு!!! ஸ்ரீராம் அண்ட் குடும்பமே நகைச்சுவையில் மன்னர்கள் ..பின்ன கௌதம் அண்ணாவும் செமையா நகைச்சுவைதான்.. இது போன்று....

    அடுத்த கட்டடத்தை நோக்கி.....இதற்கு நெல்லையின் பதிலையும் ரசித்தேன்....அடுத்த கட்டடம் என்று எங்கள் க்ரியேஷன்ஸைச் சொன்னதற்கு...அஹ்ஹ..

    பதிலளிநீக்கு
  42. "அடுத்த கட்டடத்தை நோக்கி நகர்கிறார் " - அதுவும் உண்மைதானே. இங்க ஒரு கதை. அடுத்த கட்டடத்தில் (எங்கள்கிரியேஷன்ஸ்) ஒரு கதை. அனேகமாக அடுத்த கதை, க க க போ2வுக்காகத்தான் இருக்கும் ஸ்ரீராம்.// ஹஹஹஹ் கககபோ 2 ற்கு அல்ல நெல்லை. மனதில் இருக்கிறது...ஆனால் பிள்ளையார் சுழி கூட போடவில்லை. கககபோ 1 ற்கு இன்னொன்று எடிட்டிங்கில் இருக்கிறது. இன்னும் முடிக்கவில்லை. ஏற்கனவே கொஞ்சம் எழுதி வைத்த ஒன்று அதை கககபோ1 ற்கு கொஞ்சம் மாற்றி...ஆனால் அது அப்படியே கககபோ 1 ற்கு பொருந்துமா என்று தெரியவில்லை ... லைட்டர் பார்ட்!!! மீதி எங்கள்க்ரியேஷனில்..(நான் ஸ்ரீராமிற்கு அனுப்பி அவர் ஓகே சொல்லி கௌதம் அண்ணாவிடம் பாஸாகி வெளியாக என்று பல சானல்கள் இருக்கு...ஹிஹிஹி...பார்ப்போம்.!!!!)

    பதிலளிநீக்கு
  43. மிக்க நன்றி அசோகன் குப்புசாமி சகோ தங்களின் கருத்திற்கு...

    பதிலளிநீக்கு
  44. இதுபோல் ஏகப்பட்ட சீதைகள் இருப்பார்கள். பெண்கள்தானே நம் குடும்பத்தின் ஆணிவேர். அவர்களின் பொறுமை இல்லையென்றால், பெரும்பாலானவர்கள் குடும்பம் நடத்தவே முடியாது. அவர்கள்தான் மற்றவர்களின் தவறுகளை மன்னிக்கும் தாய்மை குணம் கொண்டவர்கள். ஆண்களிலும் 'சீதாபதி' (தாய்மை குணம் கொண்டவர்கள்) இருக்கலாம், அதன் விழுக்காடு மிகவும் குறைவு.//

    யெஸ் யெஸ் நெல்லை...இதை நான் அடிக்கடி சொல்லுவேன்!! அதுவும் கல்லூரி காலத்தில் பட்டிமன்றத்தில், சீதைக்காக வாதாடியிருக்கிறேன்! மேடைப் பேச்சில் பெண்ணுரிமை பற்றி பேசியிருக்கிறேன்.

    //மாமியார்கள் மருமகளைப் படுத்துகிறார்கள் என்று சொல்வார்கள். அது பெரும்பாலும், தன் பதவியை புதிதாக வந்தவள் எடுத்துக்கொண்டுவிட்டாளே, ஓரிரவில் தன் மகன் இன்னொருவளின் கணவன் என்ற நிலையில் தன்னை அப்ரோச் செய்கிறானே என்ற ஆரம்ப எண்ணம்தான். அப்போது மருமகள் கொஞ்சம் பொறுமையைக் கடைபிடித்தால், கடைசி காலத்தில் அத்தகைய மருமகளிடம் மன்னிப்புக்கேட்காத மாமியார் ஏது?// இதுவும் வழிமொழிகிறேன்!!! கொஞ்சம் பொறுமையைக் கடை பிடித்தால் அன்பினால்!!! உறவுகள் கைவசம்!!!

    பதிலளிநீக்கு
  45. //ஆண்களிலும் 'சீதாபதி' (தாய்மை குணம் கொண்டவர்கள்) இருக்கலாம், அதன் விழுக்காடு மிகவும் குறைவு.// அதே அதே...

    ஹைஃபைவ். நெல்லை..நானும் "சீதாபதி" என்றுதான் சொல்வது வழக்கம்...இப்படியான ஆண்களை!!!

    பதிலளிநீக்கு
  46. வாவ் !! செம கலக்கலான அழகிய எழுத்து நடை கீதா ..வாலண்டியரிங்கில் கொஞ்சம் பிசியாக இருப்பதால் (இன்னும் பிளைட் ஏறலை ) மகளுக்கு இயர் 12 induction இப்போ நடக்குது நடந்து முடிஞ்சபின் தான் பிளேனில் கால வைப்பேன் :)

    இருங்க முதலில் ஏரோப்பிளேன் ட்ரக் பஸ் ரெயில் நிறைச்சி பூங்கொத்துக்களை தரேன் பிடிச்சிக்கோங்க :)
    அடுத்து தொடர்வது .... கதை மாந்தர் குறித்த எனது பார்வை ...
    தம 11

    பதிலளிநீக்கு
  47. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  48. "சீதை ராமனை மன்னித்து விட்டாள்" என்ற முடிவைத் தரும் கதைகள் தொடரும்...
    பதிவர்களும் தொடர்ந்து படைக்கின்றனர்...
    சிறிராம் ஐயா அவர்களது முயற்சி வெல்லும் - ஆனால்
    நம்ம சூழலில் எத்தனை ராமர் திருந்தினர். - அதற்கும்
    வாசிப்போர் எண்ணிக்கை குறைவெனச் சாட்டுப் பகிருவீரோ?

    பதிலளிநீக்கு
  49. சரி எனது மனதில் பட்ட கருத்துக்களை சொல்லலாமா வேண்டாமான்னு யோசித்து சொல்லணும்னு தீர்மானித்தேன் ..
    மஞ்சு ..இவர் கொஞ்சம் பாலசந்தர் கொஞ்சம் பாலகுமாரன் இருவரது கதை நாயகிகளை சேர்த்து செய்த கலவை போலிருக்கிறார் ..
    இன்னும் சில மஞ்சூக்கள் நடமாடிக்கொண்டிருக்கிறாரகள் இவ்வுலகில் அப்படிப்பட்ட மஞ்சூக்கள் கண்ணில் இந்த கருத்து பட்டால் என்னாகும்னு நினைச்சேன் ஆனா இந்த முட்டாள் சோ கால்ட் அன்கண்டிஷினால் லவ் எனும் போர்வை போர்த்திய மஞ்சுக்கள் சற்று கூட்டை விட்டு வரட்டும் என்று நினைத்தே பதிகிறேன் ..இவர் போன்றவர்கள் பொது வாழ்க்கைக்கு தங்களை அர்ப்பணித்து கொண்டிருந்தால் பிரச்சினைகள் ஏற்படுவது குறைவு ....
    எல்லாரும் மணியை திட்டி பாவம் மஞ்சு என்று நினைத்திருக்கக்கூடும் ஆனால் என்னைப்பொறுத்தவரை மணி ஞானக்கிறுக்கன் எனும் அதிகம் படித்த eccentric அதே அறிவுடன் அதே எக்ஸெண்ட்ரிக் குணத்துடன் கொஞ்சம் வீரியம் குறைவுடன் அவருக்கு வாய்ந்தவர் தான் மஞ்சு ..ஆரம்பத்தில் மணியை அவரது குறைகளுடன் ஏற்றுக்கொண்டவர் பிறகு தடுமாறுவது அவரும் மற்ற பெண்களை போன்றே என தோன்ற வைக்கிறது ..ஒரு விஷயம் புரியவில்லை அன்பாலும் அன்னியோனியத்தாலும் மாற்ற முடியாததா இவை போன்ற குறைபாடுகளை ..மஞ்சுவிற்கும் தாம்பத்தியத்தில் உடன்பாடில்லை ஆனால் குழந்தை மட்டும் வேண்டும் ..இதுவும் குழப்பமாக இருக்கிறது ..அப்போ இது வரை இரு துருவங்கள் மனதாலும் உடலாலும் இணையவில்லை :( ..மஞ்சுவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது ..
    IVF மூலம் குழந்தை பெறும் மன உறுதி படைத்தவர் என பாராட்ட மனம் வரவில்லை எனக்கு ஏனென்றால் அவருக்கே தாம்பத்தியத்தில் விருப்பமில்லையே .. எனோ உலக பாரமெல்லாவற்றையும் தலையில் தூக்கி சுமக்கும் பூமா தேவிகள் மீது எனக்கு அத்தனை ஈர்ப்பும் அனுதாபமும் ஏற்படாது ...


    பதிலளிநீக்கு
  50. /கடவுளின் கணக்கு இது போலும். இப்படித்தானே பலரும் எண்ணித் தங்களைத் தேற்றிக் கொள்கிறார்கள். //

    ம்ம் எனோ இப்படி பட்ட வார்த்தைகளை கேட்க ஏற்றுக்கொள்ள மனம் தயங்குகிறது ..

    செய்யற தப்பை எல்லாம் செஞ்சிட்டு கடவுள் போட்ட கணக்கு என்று கடவுளை பிளேம் செய்யலாமா ?
    இது மஞ்சுவின் பெற்றோர் அவசரப்பட்டு தீர விசாரிக்காமல் செய்தார்களோ என தோன்றுகிறது ..
    இது நம்ம நாட்டு பெற்றோர் வாங்கி வந்த வரம் :( பெண்ணை எப்படியாவது கரை சேர்க்கணும் கரையோரத்தில் முதலை இருக்கா இலை புதை குழி இருக்கா இல்லை போற வழில திமிங்கிலம் இருக்கானெல்லாம் பார்க்க மாட்டாங்க :(


    பதிலளிநீக்கு
  51. மணி தான் வேலை பார்த்த நிறுவனத்தின் தலைவர், மாநிலத்தின் முதல்வர், பிரதமர், ஆளுநர், ஜனாதிபதி எல்லோருக்கும் கடிதம் எழுதினான். ‘. ஏதோ ஒரு மாநிலத்தில் ஒரு மலையின் அடியில் சில கடவுள்கள் உயிருடன் இருப்பதாகவும் அந்த மலையைப் பெயர்த்தால் அவர்களைக் காணலாம் என்றும் ஒரு கடிதம் எழுதி ஏதோ ஒரு சாமியாரின் முகவரி எழுதி அனுப்புவதற்குத் தயாராக வைத்திருந்தான்.//

    ஹையோ இதே போன்ற ஒருவரை நான் அறிவேன் ..எதற்கெடுத்தாலும் மனு எழுதி அனுப்பிவைப்பார் இதனால் அவரது மனைவிக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டு எங்க வீட்டுக்கு அப்பா அம்மாவிடம் உதவி கேட்டு ஓடி வருவார் .வேடிக்கை என்னனா அவருக்கு ஒரு கெட்ட பழக்கமுமில்லை ஆனால் தான் தான் தானே நீதிபதி நோ காம்ப்ரமைஸ் டைப் ..கடவுளுடன் பேசியதாகவும் சொல்வாராம் ..மஞ்சுவை அந்த ஆன்ட்டி இடத்தில வைத்து பார்த்தால் புரிகிறது மஞ்சுவின் கஷ்டம் ..
    அப்புறம் அவர் தான் ஒரு குறிப்பிட்ட வயதில் இறக்கப்போவதாகவும் கூறிக்கொண்டிருந்தார் ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்னமும் இருக்கிறார்

    பதிலளிநீக்கு
  52. மஞ்சுவிடம் அதாவது மஞ்சு போன்ற சீதைகளிடம் நான் சொல்ல விரும்புவது முதலில் மாற்றத்தை உங்களில் கொண்டு வாருங்கள் மணி போன்றோர் விரைவில் குணமாகுவார்கள் உங்கள் அன்பினாலும் அரவணைப்பினாலும் .
    போனது போகட்டும் இனியாவது இருவர் வாழ்வும் அர்த்தமுள்ளதாக மாற இறைவனை வேண்டுகிறேன் ..

    ஆனால் மிக பெரியஆச்சர்யம் அபி .இப்படிப்பட்ட குழப்ப சூழலிலும் படித்து மணமாகி வெளிநாட்டில் இருக்கும் பெண் ..உண்மையில் க்ரேட் ..

    அழகிய எழுதிய நடை கீதா மீண்டும் கதையை நகர்த்தி சென்ற விதத்திற்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  53. மஞ்சு ஒவ்வொருவரையும் ஒரு பிரேமில் வைத்து பார்ப்பது போல நான் எந்த காலத்திலும் பிறர் இடத்தில குறிப்ப இந்த சீதைகள் இடத்தில என்னை வைத்து பார்த்ததில்லை ஒரு வேலை அதனால்தானா நான் மட்டும் மஞ்சுவின் இந்த ஓவர் அன்பை ஏற்றுக்கொள்ள முடியலையோ :(

    ஆக மொத்தம் கீதா உங்கள் கதை மனதில் எனக்கு மிக்ஸ்ட் எமோஷன்ஸை தந்துவிட்டது ..இன்னும் எவ்வளவோ தோணுச்சு கதையை படிச்சி முடிச்சதும் ..அப்போவே பின்னூட்டம் தந்திருந்தால் இன்னும் நிறைய கொட்டியிருப்பேன் :)

    பதிலளிநீக்கு
  54. //அமிர்தா! நான் என் வீட்டுக்குப் போறேன்பா.......உங்க அண்ணா மாத்திரை வேற சாப்பிடறது இல்ல. அப்புறம் அந்த பழைய நிலை வந்துரக் கூடாது……இதுவும் நான் செய்ய நினைக்கிற ஒரு சோசியல் செர்வீஸ்தானே…..வீட்டிலயும் செய்யலாமே……//
    Good ..manju accept him as a patient .no more regrets ..மஞ்சுவாகிய சீதை மணியாகிய ராமனை மன்னித்து மறந்து ஏற்றுக்கொண்டாள் ..

    ஹ்ம்ம் ஒவ்வோர் சீதையும் வெவ்வேறு விதமா மன்னித்துக்கொண்டு இருக்கிறார்கள் ,..
    நானும் விடுமுறை முடியுமுன் அனுப்பி வைக்கிறேன் இங்கே (எனது சீதையை )எனது கதையை :)

    நெல்லைத்தமிழனின் ஆழமான விரிவான கருத்துக்கள் சூப்பர்

    பதிலளிநீக்கு
  55. மன்னிக்கவும் கீதா கொஞ்சம் எமோஷனலாகிட்டேன் :) ஒரு நாலுகால் செல்லத்துக்கு அநீதி நடந்தாலே தாங்க முடியாது எனக்கு ..யோசிக்கும் திறனுள்ள பெண்கள்/ஆண்கள் இன்னும் அன்பெனும் மாய வலையில் சிக்கிக்கிடக்கிறார்கள் எனும் வருத்தம் தான் மிஞ்சியது துவக்கத்திலேயே ஒரு ஸ்ட்ராங் retaliation மஞ்சுவிடமிருந்து வெளிப்பட்டிருந்தா மணி அமைதியாகி இருப்பாரோ என கேள்வி எழுகிறது ..
    மீண்டும் ஒருமுறை என்னை பலகோணங்களில் யோசிக்க வைத்தது உங்கள் கதாபாத்திரங்கள் ..

    பதிலளிநீக்கு
  56. ஏஞ்சல் உங்கள் அனைத்துக் கருத்துகளையும் வாசித்துவிட்டேன்! மிக்க நன்றி சூப்பர் அனலைசிஸ். வெகுவாக, உண்மையாக ரசித்தேன். உங்கள் கருத்துகளும் என்னை சிந்திக்க வைக்கிறது. ஆனால் அதே சமயம் சில சொல்லத் தோன்றுகிறது.
    வருகிறேன் உங்கள் கருத்துகளுக்கு பதில் சொல்ல..... இப்போது கொஞ்சம் பிஸி...

    பதிலளிநீக்கு
  57. துவக்கத்திலேயே ஒரு ஸ்ட்ராங் retaliation மஞ்சுவிடமிருந்து வெளிப்பட்டிருந்தா மணி அமைதியாகி இருப்பாரோ என கேள்வி எழுகிறது ..// இதற்கு மட்டும் இப்போது பதில்....

    இல்லை கதையின் ஃப்ளாஷ் பேக்கில், மஞ்சுவிற்கு மணி ஒரு புதிராகவே இருந்தான். கிராமத்துப் பெண்ணாகிய அவளுக்கு அது பற்றிய அறிவு முதலில் இல்லை அந்தக்காலம் இக்காலம் இல்லையே... அவனுக்குப் பிரச்சனை என்று தெரிந்ததும், அவளது வீட்டுச் சூழல், பெற்றோரால் புரிந்து கொள்ள முடியாத நிலை, ஏழ்மை.... அவளுக்கு ஆதரவு இல்லாமை...எல்லாம் அவளை முடிவு எடுக்க வைத்தது. ஆனால், மருத்துவர் சொன்ன அட்வைஸை அப்படியே பின்பற்றி வருகிறாள். ரிட்டாலியேட் பண்ண முடியாது. பண்ணவும் கூடாது என்றுதான் மருத்துவரின் அட்வைஸ். அது இன்னும் அவனது பிரச்சனையை அதிகரிக்கும் என்னதான் மணிக்குப் பிரச்சனை என்றாலும் அவனது ஈகோ அதிகம் என்றால் மிகவும் அதிகம்.

    எல்லோரும் மனிதர்கள் தானே ஏஞ்சல்! இப்படியான குடும்பங்களில் வளரும் குழந்தைகள் நன்றாகவே வளர்ந்து நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஒரு ஐஐடியில் ப்ரொஃபஸராக வேலை பார்த்தவரின் நிலைமை கிட்டத்தட்ட இது போன்றதுதான் கொஞ்சம் மாறுபட்டது....அவர் குழந்தைகள் இன்று நன்றாகவே இருக்கிறார்கள். அவரது மனைவியும் இதே மஞ்சு போன்றுதான். மஞ்சுவின் மகளுக்கு மஞ்சுவின் நிலையைப் புரிந்து கொண்டாலும் மணியையும் அன்பு செலுத்துபவள். மஞ்சுவிற்கும், பல பெண்களுக்கும் வரும் 50 வயதில் வரும் பிரச்சனைகள் வரத்தானே செய்யும்... ...அந்த நிலைமையில் கொஞ்சம் தோன்றிய ஒரு சிறு உளைச்சல். அதுவும் மணியின் வார்த்தைகள்...அதற்கு முன் அவளுக்கு அப்படித் தோன்றியதில்லை என்று தானெ வருகிறது..அவனுக்கு உதவ வேண்டி இவள் செய்யும் நல்லதை..அவன்.இவளது கேரக்டரை அவன் பேசிவிடுவது அவளுக்கு வேதனை ஏற்பட்ட்டுவிடுகிறது. எந்தப் பெண்ணாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று இல்லையா... பின் அவளே அதை சரி செய்து கொண்டு விடுகிறாளே...ஸ்பேஸ்....மஞ்சு காட்டும் அன்பினால் தான் இன்றும் மணி அவனது வேலை பார்க்கும் வட்டாரத்தில் மதிக்கப்படுகிறான். மஞ்சுவிற்கு எந்தப் பிரச்சனையும் இல்லாததால் தான் அபி நன்றாக வளர்க்கப்படுகிறாள்....நான் அறிந்த ஒரு குடும்பத்தின் கதை தான் இது.....உண்மைக் கதை என்பதால் வாசிப்பவர்களின் மனதில் பல தோன்றியிருக்கலாம்...இப்படியும் இருப்பார்களா என்றும் தோன்றியிருக்கலாம்.....நான் செர்வீஸ் செய்யப்போன இடத்தில் அறிந்தவை.. இன்னும் நம்ப முடியாத அளவிற்குக் கதைகள் இருக்கின்றன...இதை விடவும் மோசமாக....அதுவும் படித்த குடும்பங்களில் இருக்கின்றன....நாம் சொல்லலாம் ஏன் இப்படி நடக்கிறது....அவர்கள் இப்படிச் செய்திருக்கலாம் அப்படிச் செய்திருக்கலாம் என்று ஆனால் தியரெட்டிக்கல் வேறு... யாதார்த்தம் வேறு தானே!

    மகன் சொல்லுவான்....நான் மருத்துவபுத்தகத்தில் ஒரு நோயின் ஸிம்டம்ஸ் என்று படிப்பது போல் யதார்த்தத்தில் இருப்பதே இல்லை. வெகு குறைவு....என்று

    மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு...வருகிறேன்...மீண்டும்...

    பதிலளிநீக்கு
  58. சகோ யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  59. ஏஞ்சல் இது மஞ்சுவின் கதாபாத்திரப்படைப்பை நியாயப்படுத்துவதற்காக இல்லை. தாம்பத்தியத்தில் அவளுக்கு ஈடுபாடு இல்லை என்பது மணியைப் பார்த்தபின் அவனது நடவடிக்கைகள் ஏற்படுத்திய தாக்கத்தால்....மணிக்கும் அவன் மதத் தத்துவத்தில் ஒரு அளவுக்கதிகமான ஈடுபாட்டுடன் கூடிய சிந்தனைகள் உடையவன் அதுவும் அவன் தவறாகப் புரிந்து கொண்ட சில எண்ணங்கள், மனைவி ராமகிருஷ்ணபரமஹம்சரின் மனைவியான சாரதா போன்று இருக்க வேண்டும் என்று நினைத்தவன் என்பதால் என்று நான் அறிந்த ஒரு ஒருவரின் பிரச்சனை உடையவரின் பாத்திரப்படைப்பு. கிட்டத்தட்ட அந்நியனில் சொல்லப்பட்ட கதாபாத்திரம் போன்றவர் ஆனால் அந்நியன் என்பது மணியின் ந்லைமைக்கு அடுத்த அட்வான்ஸ்ட் ஸ்டேஜ்....எனவே மணியும் அதில் அத்தனை ஈடுபாடு காட்டவில்லை. இவை எல்லாம் முதல் ட்ராஃப்டில் சொல்லி கதை நாவல் போன்று வந்துவிட்டதால் பின்னர் எடிட் செய்து....ஸ்ரீராமுக்கு அனுப்பிய பின்னும் மீண்டும் எடிட் செய்து இதனை மேலே நெல்லைத் தமிழன் அவர்களுக்குச்ச் சொல்லியிருக்கிறேன்...பாவம் ஸ்ரீராம் எனக்காக கொஞ்சம் கஷ்டப்பட்டார் ப்ளாகரில் போட்டு...ஸ்பேஸ் அட்ஜஸ்ட் செய்து என்று. அதனால்தான் மருத்துவர் சொன்னதை அவள் சிந்தித்துப் பார்த்து குழந்தை என்பது இருவருக்கும் நலல்து என்று தோன்றியதால் எடுத்த முடிவு அது நல்லதாகவும் அமைந்தது என்று தான் பார்த்த குடும்பத்தின் (ஐஐடி ப்ரொஃபசர்) குழந்தைகளை மனதில் கொண்டு அந்தப் படைப்பு. ஏஞ்சல் ஒன்று இங்கு சொல்லுகிறேன். நாம் குழந்தை வளர்ப்பிற்கு என்னதான் சூழல் பெற்றோர் என்று சொன்னாலும், அத்தகைய சுழலிலும் குழந்தைகள் நன்றாக வளரும் சாத்திய உண்டு என்பதற்கான உதாரணம் நான். என் சிறு வயதிலிருந்து திருமணம் ஆகும் வரையான வாழ்க்கை என்பது நான் அதிலிருந்து கற்ற பாடங்கள் தான் என் மகனை அவனது கற்றல் குறைபாடு இருந்த போதிலும் வளர்க்க உதவியது...எனவே நமக்கும் மீறி சிலது நடக்கும்....

    பதிலளிநீக்கு
  60. அடுத்து மணி நல்ல மூடில் இருந்தால் மிகவும் நல்லவன் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன். நல்ல மூடில் இல்லை என்றால் இந்த எக்ஸ்ட்ரீம். அதான் இரு துருவம். அவனால் சமநிலையில் நடுவாகச் சிந்திக்க இயலாது சிந்தித்தாலும் செயல்படுத்துவதில் அவனது ப்ரெய்ன் கெமிஸ்ட்ரி உதவாது....கதைத் தலைப்பு இதற்கான விளக்கமும் மிடில்க்ளாஸ் மாதவிக்குச் சொல்லியிருக்கிறேன். அதன் பின் எழுதியிருந்த ஒரு வரி எனது எடிட்டிங்கில் மிஸ் ஆகியிருப்பது இப்போதுதான் தெரிகிறது...அதாவது மஞ்சு மணியின் ப்ளஸ் பாயிண்டுகளையும் மனதில் கொண்டுதான் ஏற்று வாழ்கிறாள். ஆனால் அவளை வேதனை படுத்திய வார்த்தைகள், அவளது கேரக்டரையே அவன் பேசியதுதான்....அதாவது எந்த ஒரு பெண்ணுமே எதைத் தாங்கிக் கொண்டாலும் அவளது கேரக்டரை அதுவும் ஆணுடன் தொடர்பு என்று சொல்லப்படுவதை அதுவும் மணியிடம் அன்பும் கொண்டு அவனுக்கு உதவியாகவே இருக்கும் தன்னை இத்தனை வருடங்கள் வாழ்ந்தும் அவன் இப்படிச் சொல்லிவிட்டானே என்பதுதான் அது...வேறு எப்படியான வார்த்தைகளையும் அவள் பொறுத்துக் கொண்டுதான் வாழ்வதாகச் சொல்லியிருக்கிறேன். மட்டுமல்ல...அபி அவளுடன் இருந்த வரை ஒரு ஆறுதல்...அவள் அருகில் இல்லாதது கொஞ்சம் மிஸ் ஆனது போன்ற ஒரு உணர்வு. எல்லாம் கலந்துகட்டி மஞ்சுவை அப்படித் தடுமாற வைத்தது..தடுமாற்றத்திற்கு மற்றொரு காரணம் அவளது வயது...அந்த வயதில் வரும் உணர்வுகள்.....ஆனால் தன்னை உடன் மாற்றிக் கொண்டுவிட்டதாகச் சொல்லி அவள் மன்னித்துவிட்டதாக முடித்துள்ளேனே...

    பதிலளிநீக்கு
  61. யாரையுமே நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஃப்ரேமுக்குள் போட முடியாதே. அபப்டிப் போட்டால் நமது எதிர்பார்ப்புகள் சிதறி விடுமே...அன் கண்டிஷனல் லவ் என்பது மிகவும் கஷ்டமான ஒன்றுதானே ஏஞ்சல் பின்பற்றுவது என்பது. பிற மனிதர்கள் மீது அதுவும் நம் கூடவே இருப்பவர்கள் மீது கோபம் வரத்தானே செய்கிறது சில சமயங்களில்...அப்போது இந்த லவ் கொஞ்சம் வீக் ஆகத்தானே செய்கிறது. மஞ்சுவும் 100% பெர்ஃபெக்ட் இல்லை ராமாயண காலத்து சீதை இல்லை என்பதையும் காட்டத்தான் அப்படியான கேரக்க்டர் படைப்பு...அக்செப்ட் பீப்பிள் அஸ் தெ ஆர் என்பதுதான் நானும் அடிக்கடிச் சொல்லுவது...ஆனால் சில சமயம் கடினம் தான்...இருந்தாலும் கூடியவரை ப்ராக்டிஸ் செய்ய முயற்சி...

    அடுத்து மணியின் கேரக்டர் எக்சென்ட்ரிக் என்று சொல்லுவதை விட அதனுடன் மேலும் சில சிம்டம்ஸ் உண்டு.....ஏனென்றால் நாம் பொதுவாக மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லுகிறோம். ஆனால் அதில் பல பல நுணுக்கமான உட்பிரிவுகள், மயிரிழை வேறுபாடுகள் என்று பல மருத்துவப் பெயர்கள் உண்டு. நெருங்கிய உறவினர் பெண்ணுக்கு மணியின் பிரச்சனை போன்று பருவ வயதில் இருந்தது வெளியில் தெரியாமல் உள்ளே அமுங்கி இருந்தது கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்த பிறகு வந்து இடையில் சரியாகி இப்போது மீண்டும் அவளது மெனோபாஸில் வந்து, அவள் கணவரும் அவரது அம்மாவும் தனியாகவும், இவள் தனியாகவும், ஒரே வீட்டில் மேலும் கீழுமாக வாழ்ந்து வருகிறார்கள். அவள் நார்மலாகத் தோன்றினாலும் நன்றாக வெளியில் வேலை பார்த்து வந்தாலும்....பிரச்சனை ட்ரிகர் ஆகத்தான் செய்கிறது....கணவர் தன்தாயைப் பார்த்துக் கொள்ள வேண்டி இப்படி...ஒரு பெண்ணுக்கு வந்தால் நன்றாகப் பார்த்துக் கொள்ளும் ஆணும் இருக்கிறார்கள். மன நிலை பாதிப்பு என்பது சட்டென்று பேசி விடும் சப்ஜெக்ட் அல்ல. நான் சீசோஃப்ரீனியா, ஓசிடி, ஓசிபிடி, பைபோலார், பைபோலார் அண்ட் ஹைப்போமேனியா, மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸார்டர், பார்டர் லைன் பெர்சனாலிட்டி டிஸார்டர், ஐடென்டிட்டி க்ரைசில் என்று பல வகையைப் பார்த்துவிட்டேன். இதில் பல வற்றிலும் ஒரே சிம்டம்ஸ் இருப்பது போலத் தோன்றும். ஆனால் யதார்த்தத்தில் வேறுபடும்....இவர்களில் சிலருக்கு எத்தனை அன்பு செலுத்தினாலும் (கணவன் மனைவி என்றில்லை...பெற்றோர் எத்தனை அன்பு செலுத்தினாலும், நல்ல பராமரிப்பில் இருந்தாலும், மருத்துவம் உட்பட, மாறாமல் இருப்பவர்களையும் பார்க்கிறேன். அதுவும் பெண் குழந்தைகள்... இருந்தாலும் அந்தப் பெற்றோர் அன்புடன் பராமரித்து வருகின்றனர் சிலருக்குச் சலிப்பும் ஏற்படுகிறது வயதாவதால்.

    மஞ்சுவின் பெற்றோர் கிராமம்..அவ்வளவாகப்.படிப்பறிவு இல்லாதவர்கள். அந்தக் காலம்...டெக்னாலஜி வளர்ந்திருக்கும் இக்காலத்திலேயே, நல்ல படித்த குடும்பங்களிலேயே ப்ராப்ளம் உள்ள பெண் குழந்தைகளுக்கு மணம் புரிந்து வைத்து, நன்றாக விசாரித்தும் நேரில் பேசியும்...ஏனென்றால் இதில் சில நேரில் பேசும் போது தெரிவதில்லை...யதார்த்த வாழ்க்கையில் செல்லும் போதுதான் பிரச்சனை தெரிகிறது. பின்னர் டிவோர்சில் போய் முடிகிறது. இதற்கும் எங்கள் வீட்டில் உதாரணம் உண்டு. இப்போதும் நடக்கத்தான் செய்கிறது. வாங்க பழகிப் பார்க்கலாம் கல்சரை நம்மால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லையே.

    ஹான் ஏஞ்சல் எனக்கு பாலச்சந்தரின் படங்கள் கதாபாத்திரங்கள் பிடிக்கும் குறிப்பாகப் பெண் கேரக்க்டர்கள்.....ஒரு வேளை அது சற்று வெளிப்பட்டு விட்டிருக்கலாம் ஹஹஹஹஹ்

    மிக்க நன்றி ஏஞ்சல் நல்ல அனலைசிஸ் செய்து கருத்துகளுக்கு...ஆனால் இது போன்று மட்டுமில்ல, இதைவிடக் கொடுமையான அடிமைகளா வாழும் மஞ்சுக்களும் இருக்கிறார்கள் ஏஞ்சல்...நான் நேரில் கண்டதுண்டு......இன்று கொஞ்சம் பிஸி...பிறகு அடிக்கடி வர இயலுமா என்று தெரியவில்லை....

    பதிலளிநீக்கு
  62. விரிவான பதில்களுக்கு நன்றி கீதா

    //பாலச்சந்தரின் படங்கள் கதாபாத்திரங்கள் பிடிக்கும் குறிப்பாகப் பெண் கேரக்க்டர்கள்.....ஒரு வேளை அது சற்று வெளிப்பட்டு விட்டிருக்கலாம் ஹஹஹஹஹ் //

    எனக்கும் வெளிப்படும் அப்பப்போ கற்பனையில் யாரையாச்சும் அடிக்கிற மாதிரி பளார் கொடுப்பேன் ..மீ டூ கொஞ்சம் கே பி நாயகி போலத்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் ஹை5....இதுக்கு...ஹஹஹ...

      நீங்க சொல்லிருந்த பாயின்ட்ஸ் நல்லருந்துச்சு. குறித்தும் கொண்டேன்.எனக்கும் மனா நிலை பாதிக்கப்பட்டவர் மீது ரொம்ப இரக்கம் தோணும். யாராவது அவங்கள பைத்தியம் னு சொன்னா கோபம் வந்துரும்... நான் சர்வீஸ் செய்தப்ப ஆண் பெண் என்று நிறைய மனநிலை பாதிக்கப்பட்ட அதுவும் வேறு வேறு விதமான கேஸ் பார்த்து எல்லாம் கலந்து வைத்து பெரிய நாவல் டைப்பில் எழுதி வைத்திருந்தேன்....அதில் மணியின் ப்ளஸ் மற்றும் மஞ்சு எப்படி பிரச்சனையை சமாளித்தாள் குழந்தையை வளர்த்தாள்... என்று இருக்கும்...அப்பதான் ஸ்ரீராம் முடிவு இப்படி இருக்கணும்னு சொன்னதும் முடிவை சற்று மாற்றி அனுப்ப...ஸ்ரீராம் அது நாவல் போன்று இருக்கு அதை எடிட் பண்ணி கொடுங்கன்னு சொன்னதும், எடிட் பண்ணியதில் விட்டுப் போனது....அனுக்கு கொடுத்த பதிலில் கூட...மஞ்சுவை ராமாயண சீதை போல் சொல்லிட்டேனோ என்று சொல்லி அந்த பாயின்ட்ஸ்யும் குறித்துக் கொண்டேன்....பின்னூட்டங்கள் வாசித்த போதுதான் தெரிந்தது....விடுபட்டவை.....இப்படித்தானே கதை எழுதுவதில் நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. ஒரு நாவலுக்கான சப்ஜெக்ட் அதை சிறு கதையாகச் சொல்லும் போது எவ்வளவு கடினம் என்பதையும் கற்று க் கொண்ட3ன் எனலாம்......இதற்கு எல்லாவற்றிற்கும் காரணம் ஸ்ரீராம்...அவருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். இத்தனை நல்ல ஆக்கப் பூர்வமான கருத்துகள் கிடைத்து மெருக்கேற்றிக் கொள்ள உதவுவதற்கும்...ஸ்ரீரமுக்கும்ம், கருத்து சொல்லி ஊக்கப்படுத்தும் அநைவருக்கும் நன்றி சொல்றேன்...

      நீக்கு
    2. நாஙலும் நன்றி சொல்லி கொள்கிறோம்.. எங்கள் ப்ளாக் மற்றும் ஸ்ரீராம் அனைவருக்கும்.

      நீக்கு
  63. //வாங்க பழகிப் பார்க்கலாம் கல்சரை நம்மால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லையே//noooo நமக்கு அது சரிவராது ..செலிபிரிட்டி ஆக இருப்பவஙலெ தடுமாறி தவறான முடிவு எடுத்து விடராங்க ..அதனை விட பெற்றோர் பிள்ளை களுக்கு சப்போர்ட்டிவா இருந்தா அதே போதும்...லிவிங் டு கெதர் பற்றி பிறகு ஒரு அலசல் செய்யனும் நீங்கள் நான் நெல்லை தமிழன் மதுரை தமிழ்ஹன் அப்புறம் மியாவ் ..விடுமுறை முடிந்து பட்டி மன்றம் போல செய்ய்லாம் ..

    பதிலளிநீக்கு
  64. சிறப்பான கதை. /எந்த ஒரு உறவையும் அந்த உறவுக்கான ஃப்ரேமுக்குள் போட்டுப் பார்ப்பதில்லை. அம்மா என்றால் ஒரு வித எதிர்பார்ப்பு, அப்பா என்றால் அவரிடம் சில எதிர்பார்ப்புகள், சகோதர சகோதரிகள், மாமியார் என்றால் அவர்கள் இப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள். இப்படி ஃப்ரேமுக்குள் போட்டுப் பார்த்தால் ஏராளமான எதிர்பார்ப்புகள் மனதில் தோன்றிடும். ஏமாற்றங்கள் வரும் என்பதால் எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும் என்ற மனநிலை,..// Unconditional love பற்றிய வரிகள் அருமை.

    பதிலளிநீக்கு
  65. நிறைவுப் பகுதியின் ஆரம்பத்தைப் படித்தவுடனேயே முழுக் கதையையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் தொற்றிக் கொள்கிறது. (மணியைப் பொருத்தவரை சுஜாதா அரைவேக்காடு, வெட்டிப்பயல், ஒன்றும் தெரியாதவன். சும்மா நாலு அறிவியல் வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஜல்லி அடிப்பவன்)

    முழுக் கதையும் படித்தால் தனியாக விமரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை கூட கூடுகிறது. அதற்கான சாத்திய கூறுகளும் உண்டு. ஸ்ரீராம் பின்னூட்டப் பெட்டி என் சவகாசத்திற்கு ஒத்துழைக்காவிடில், தனி விமரிசனம் நிச்சயம். வாழ்த்துக்கள், சகோதரி!

    பதிலளிநீக்கு
  66. என்ன சொல்வது..... நல்ல கதை.

    எத்தனை எத்தனை சீதைகள்.... தீவிரமாக மனோ வியாதி இல்லாமலேயே பல இராமன்கள் தங்கள் சீதைகளை வதைத்துக் கொண்டிருக்க, இந்த சீதை இன்னும் ஒரு படி மேலே நின்று, இராமனை மன்னிக்கிறார்.....


    பதிலளிநீக்கு
  67. எழுதும் கதையோடு எழுதுபவரும் ஒன்றிப் போகும் பொழுது அந்த எழுத்தில் உண்மையின் ஜ்வாலை தகிக்கும் என்பது உண்மை தான். இந்த மாதிரி உணர்வு பூர்வமான கதைகளுக்கு இது தான் முடிவு என்று எதையும் சொல்லி விட முடியாது. பிரச்னைகளை சந்திப்பவர்கள் தங்கள் போக்கில் அந்தந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதும் சரியாக இருக்கலாம்.

    தன் தாய் தந்தையைப் பற்றி அபியின் உணர்வுகளில் என் மனம் அலை பாய்ந்தது. அது இன்னொரு கதை.





    பதிலளிநீக்கு
  68. அதனை விட பெற்றோர் பிள்ளை களுக்கு சப்போர்ட்டிவா இருந்தா அதே போதும்...லிவிங் டு கெதர் பற்றி பிறகு ஒரு அலசல் செய்யனும் நீங்கள் நான் நெல்லை தமிழன் மதுரை தமிழ்ஹன் அப்புறம் மியாவ் ..விடுமுறை முடிந்து பட்டி மன்றம் போல செய்ய்லாம் ..//

    யெஸ் ஏஞ்சல் கண்டிப்பாக!!! நானும் ரெடி....நீங்க தளத்துக்கு வந்தப்புறம் பூசாரும் வந்ததும் வைச்சுக்கலாம்..டன் டன் டன்.....

    கீதா

    பதிலளிநீக்கு
  69. சகோதரி ராமலக்ஷ்மிக்கு மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
  70. வெங்கட் ஜி ஆமாம்...இதில் சொல்லப்பட்டிருக்கும் மஞ்சுவை விட இன்னும் மோசமான சூழலில் சீதைகள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை யதார்த்தம்! பல பெண்களுக்கு அவர்களது சூழல்கள் சாதகமாக இருப்பதில்லை... மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
  71. மிக்க நன்றி ஜீவி சார்!! தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்...

    உங்கள் விமர்சனம் நிச்சயமாக எனக்குக் கற்றுக் கொள்வதற்கு நிறைய கிடைக்கும்....அது உறுதி.

    இந்த மாதிரி உணர்வு பூர்வமான கதைகளுக்கு இது தான் முடிவு என்று எதையும் சொல்லி விட முடியாது. பிரச்னைகளை சந்திப்பவர்கள் தங்கள் போக்கில் அந்தந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதும் சரியாக இருக்கலாம். // உண்மைதான் ஸார். நாம் கதைக்கு அப்பாற்பட்டு, நம்மிடம் யாரேனும் ஒரு அட்வைஸ் கேட்க வந்தாலும் கூட மிகத் தெளிவாக ஒரு முடிவு கொடுக்க முடியாதுதான். ஏனென்றால் அந்த ஷூவில் இருப்பவர் மட்டுமே அதை யோசித்து முடிவெடுக்க முடியும். நான் எளிதாகச் சொல்லலாம்...இப்படிச் செய்திருக்கலாம் அப்படிச் செய்திருக்கலாம் என்று. ஆனால் அந்தச் சூழலில் அந்த நபருக்கு என்ன முடிவு தோன்றுகிறதோ அதைத்தான் எடுக்க முடியும். நம்மையும் மீறிய ஒரு சக்தி இவ்வுலகையே ஆள்கிறது!! ஒவ்வொருவரது வாழ்க்கையின் ஸ்க்ரீன் ப்ளேயும் அவரவர் கையில் தான். அந்த ஸ்க்ரீன் ப்ளேயை வேறு எவரும் நுழைந்து மாற்ற முடியாது. ஆறுதல் வேண்டுமென்றால் கிடைக்கலாம். ஒரு அவுட்லெட்...அவ்வளவுதான். மாற்றும் போது பல தப்புத்தாளங்கள் ஆகின்றன. காரணத்தை அதற்குக் காரணமானவர்கள் என்று பிறரைச் சுட்டுவது அறிவிலித்தனம்என்றே தோன்றுகிறது.

    //தன் தாய் தந்தையைப் பற்றி அபியின் உணர்வுகளில் என் மனம் அலை பாய்ந்தது. அது இன்னொரு கதை.// ஆமாம் சார். அதுவும் உணர்வுகள் அடங்கிய கதை தான்...அது ஒரு தனிக்கதை தான்..

    மிக்க மிக்க நன்றி ஜீவி சார்!

    பதிலளிநீக்கு
  72. குழந்தை பிறக்காமலிருந்திருந்தால் மஞ்சு வெளியே வந்திருக்கலாம். ஏற்கனவே கணவன் என்னும் இரும்புச் சங்கிலியுடன் குழந்தை என்னும் பட்டுச் சங்கிலி வேறா?
    எளிதில் ஜீரணிக்க முடியாத கதை என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!