திங்கள், 29 மார்ச், 2010

அட - இப்போ ப்ளே பண்ணுதே!

அறிவு ஜீவியின் தலை தெரிந்ததுமே எல்லாக் குழந்தைகளும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். 


"மாமா எங்க எல்லோருக்கும் லீவு விட்டாச்சு.  .... ஆனா ஒரு கேம் கூட ஓடாம இந்த பிளே ஸ்டேஷன்ல பாருங்க ....இவன்தான் என்னவோ பண்ணிட்டான் .... எல்லா டிஸ்கையும் அம்மா எடுத்துப் பரண்லே வச்சிருந்தா ... " இப்படிப் பல முனையிலிருந்து பல தகவல்கள் வந்து ஜீவியின் மடியில் - சாரி - காதில் விழுந்ததும், சுறு சுறுப்பானார்.

பொதுவாகப் பையன்களுக்கு விளையாட்டில் இருக்கும் ஆர்வம் பொருள்களைப் பாது காப்பதில் இல்லை என்பதால் அங்கிதாவை அழைத்து மேல் விவரங்களைக் கேட்டுக் கொண்டார்.  பின்னர் ஒரு டிஸ்க் கேட்டு வாங்கிக் கண்ணாடி போட்டுக் கொள்ளாமல் ஒரு தடவை, போட்டுக் கொண்டு இரண்டு தடவை, லைட் போட்டுக் கொண்டு ஒரு தடவை, ஜன்னலோரம் போய் தகட்டைச் சாய்த்து என்று பார்த்துக் கொண்டிருக்க அவர் பின்னேயே ஹாம்லின் நகரத்து குழலூதுபவர் பின் போன குழந்தைகள் மாதிரி, ஜீவி பின்னாலேயே  அலை அலையாக அலைந்து கொண்டிருந்தனர். 

ஜீவி தன் விஷுவல் பரிசோதனை முடிந்ததும், தட்டை முகர்ந்து பார்த்தார்,   பின் (குழந்தைகள் யாரும் பாராத போது) கொஞ்சம் தொட்டு நாக்கு நுனியிலும் வைத்துப் பார்த்தார். பிறகு ஒரு முறை வீட்டுக்குள் சுற்றி வந்தார். திடீரென்று அவர் முகம் பிரகாசமானது.  

"அர்ஜுன் சொன்ன மாதிரி கண்ணாடி துடைக்கும் துணியை வைத்துத் துடைத்தால் போதும் என்றதும், கோரசாகக் குழந்தைகள் அனைவரும் "பின் ஏன் கேம் வரல்லை?" என்றனர்.

"நீங்கள் துடைத்த போது தகட்டைத்தான் துடைத்தீர்கள் ஆனால் உள்ளே இருக்கும் லென்ஸ் மேல் முதலில் படிந்த எண்ணெயைத் துடைக்கவே இல்லை.  இப்போ நம்ப அதையும் துடைச்சுப் பார்ப்போம் "என்றார்.

துடைத்ததும் ஒரு கேம் லோடும் ஆனது.  அங்கிதா "அப்பவே நான் நெனச்சேன் இந்த ஆனந்த் போட்ட ஆயில் தான் இப்படிப் பண்ணியிருக்கும் என்று " என்று ஆரம்பித்ததும் "இன்னொரு தடவை அப்படி சொன்னேன்னா ... " என்று கிட்டே வந்த ஆனந்தை ஜீவி அப்படியே இழுத்துக் கொண்டார்.  

இதுக்கெல்லாம் ஒரு வழியில் கொசு தான் காரணம் என்ற ஜீவி, பிறகு குழந்தைகளுக்கு [ஏன் பெரியவர்களுக்கும் தான் ] விளக்கிச் சொன்னார் :

"நாம்ப பிளக்ல போடற திரவக் கொசு விரட்டியில் இருக்கும் பரஃபின் ஆயில் ஆவியாகி கொசுவை விரட்டுகிறது பின் இரவில் சற்றுக் குளிர்ந்ததும் திரவத் திவலை ஆகி விடுகிறது.   அதனால் தான் நாம் ரொம்ப நாள் உபயோகிக்காத சி டி, டி வி டி  எல்லாவற்றிலும் இப்படித் திவலைகள் காணப் படுகிறது.  துடைத்த பின் உபயோகிப்பது நல்லது. "  என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ராஜம் அத்தை, "அப்படி செட்டிலாகும் திரவத்தில் விஷம் இருக்குமோ - கொழந்தேகளெல்லாம் வெளையாடும் பொழுது கையை வாயில் வச்சுக்குமே ?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.

(ராஜம் அத்தை கேட்டதற்கு, 'ஆமாம்' அல்லது 'இல்லை' அல்லது 'தெரியவில்லை' என்று நினைப்பவர்கள் - பின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளை பதியுங்கள். குழந்தைகள் பார்க்காதபோது அந்த திரவத் திவலைகளை - நுனி நாக்கால் சுவைத்துப் பார்த்த ஜீவி என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்.)

17 கருத்துகள்:

 1. அட - இப்போ ப்ளே பண்ணுதே!"//

  அருமையான கண்டுபிடிப்பு. எங்க வீட்டுக்கு ஒருநாள் அனுப்புங்க அந்த ஜீவீயை.

  பதிலளிநீக்கு
 2. நல்ல தகவல். நன்றி ஜீவி!
  சி டி -ல செட்டிலான திரவத்துல விஷம் இருக்குமான்னு தெரியல. ஆனா, குழந்தைகளுக்கு இந்த மாதிரி அழுக்கு,
  தூசின்னு எதை தொட்டாலும் உடனே சோப்பு போட்டு கை அலம்பர வழக்கத்தை கண்டிப்பா பழக்க படுத்தணும். இது எப்பவுமே அவங்களுக்கு நல்லது.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி
  kggouthamam

  பதிலளிநீக்கு
 4. ராஜம் அத்தை, "அப்படி செட்டிலாகும் திரவத்தில் விஷம் இருக்குமோ - கொழந்தேகளெல்லாம் வெளையாடும் பொழுது கையை வாயில் வச்சுக்குமே ?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.


  அக்கறையுள்ள கேள்வி. பதில் அறிய ஆசை.

  பதிலளிநீக்கு
 5. மணி சார் நானும் உங்க கூடத்தான் சேர்ந்து இதைப் படித்தேன். எனக்கு எதற்கு நன்றி?

  பதிலளிநீக்கு
 6. :))! குழந்தைகள் இனி குதூகலமாய் விளையாடட்டும்.

  பதிலளிநீக்கு
 7. அட, ஆமாம். என் சி டி க்கள் கூட எதோ திரவத்தால் பாதிக்கப் பட்டுள்ளன ஜீவியின் துணிச்சல் இல்லாததால் அப்படியே துடைத்து விட்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 8. {{{{நுனி நாக்கால் சுவைத்துப் பார்த்த ஜீவி }}}
  இப்போ எப்பிடி இருக்கார்??


  ரசாயனங்களின் ஆளுமை இலாத இடம் எது??குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் அவதானமாக இருத்தல் அவசியம்!!

  பதிலளிநீக்கு
 9. எனது ஒவ்வொரு கண்டுபிடிப்பு கருத்துக்கும் ஆயிரம் ரூபாய் கன்சல்டிங் பீஸ் இருக்கு. இல்லனா, சொல்லிடுவேன்.

  பதிலளிநீக்கு
 10. மீனாக்ஷி சொல்வது சரி
  குழந்தைகளை அவ்வப்போது சோப்பு போட்டுக் கை கழுவப் பழக்குவது நல்லது

  பதிலளிநீக்கு
 11. இரண்டு வாரம் முன்பு தான் தண்ணீர் பற்றி எழுதி இருந்தார்கள் ! கண்ட இடங்களில் கை வைக்காமல் இருக்க பழகி வைத்தால் அதைவிட நல்லது !!

  மீனாட்சியும் / தேனம்மையும் - டேய் சாய் அடங்கு என்பது கேட்கின்றது. இருந்தாலும் சாய் அப்படியே விட்டால் - அது அசிங்கம் இல்லே !

  நாங்கள் சினிமா படங்களை, இப்போது எல்லாம், "யு.எஸ்.பி. ஹர்ட் டிரைவ்" உள் போட்டு விடுகின்றோம். விளையாட்டு சி.டி. கொஞ்சம் கஷ்டம் தான். லாவகமாக ஆட்காட்டி விரலை சி.டியின் நடு துவாரத்தில் நுழைத்து உபயோக படுத்துவது நல்லது. முறுக்கு, தட்டை என்று நொறுக்கு தினி தின்றுக்கொண்டு எடுத்தால் - அம்பேல் தான் !

  உங்கள் ஊரின் கொசு இதற்கெல்லாம் கவலை படுவது போல் தெரியவில்லையே ? என் அம்மாவிடம் சென்னை வந்து தங்கி இருக்கும்போது கொசு கடிக்கிறது என்றால். "டேய், அது எப்படிடா உன்னை மட்டும் கடிக்கிறது" என்று கேட்ப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 12. ".......அந்த திரவத் திவலைகளை - நுனி நாக்கால் சுவைத்துப் பார்த்த ஜீவி என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்."
  ------
  நுனி நாக்கால் அந்த திரவத் திவலைகளை - நுனி நாக்கால் சுவைத்துப் பார்த்தவர் வந்து என்ன சொல்லப்போகிறார் ?--- இதில் விஷமில்லை.. இல்லன்னா நா போழச்சிருப்பேனா?

  பதிலளிநீக்கு
 13. Residue தான் என்றாலும், எப்படியும் கொஞ்சுண்டு பூச்சிக்கொல்லியின் நச்சுத்தன்மை பாக்கி இருக்கும் என்பது என் ஊஹம். மீனாக்ஷி அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். விஷமோ விஷம் இல்லையோ, குழந்தைகளை ஜாத்திரதையாய் இருக்க பழகினால் நல்லது. அடிக்கடி கை அலம்புவதால் தண்ணீர் வீணாகும் என்றால், Hand Santilizer உபயோகப்படுத்தலாமே?

  பதிலளிநீக்கு
 14. ஆவியாக இருக்கும்போது அதை சுவாசிக்கிறோமே? அப்போது அது விஷமாக இருப்பதில்லை! அதனால், திரவமாக இருக்கும்போதும் அது ஒன்றும் செய்யாது! இதுதான் என் கணிப்பு!

  பதிலளிநீக்கு
 15. எந்த விஷமும் அதற்குத்தேவையான அளவில் இருந்தால்தான் விஷமாக வேலை செய்யும். (Threshold level). அதற்கு குறைந்திருந்தால் அடர்த்தியைப்பொருத்து மருந்தாகவும் செயல்படும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!