பள்ளிக்கூடங்கள் ஒவ்வொன்றாய் கோடை விடுமுறை அறிவித்ததிலிருந்து வீட்டில் சிறுவர்களின் கூட்டம் அதிகம் - ஓசையும் அதிகம்.
வெகு நாட்களாக அம்மா (பரீட்சை படிப்புகள் காரணமாக) ஒளித்து வைத்திருந்த பிளே ஸ்டேஷன் குறுந்தகடுகள், சுங்கத் துறை ஆய்வை சுலபமாக சமாளித்து வெளியே வருகின்ற அரசியல்வாதிகள் போல, மிக சாமர்த்தியமான முறையில் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்தன. ஆனால், என்ன ஒரு சோகம், முன்பு நன்றாக ஓடிக் கொண்டிருந்த கேம் டி வி டி கூட லோடு ஆகமாட்டேன் என்று அடம் பிடித்தது.
"டேய் அந்த அழுக்குத் துணியை எல்லாம் வைத்துத் துடைக்காதேடா. இன்னும் கொஞ்சம் கோடு விழுந்துடும். ஏற்கெனவே காட்சிகள் எல்லாம் ஒரு மாதிரி, 'பனி படர்ந்த மலையின் மேலே' என்று பாடுகிறாற்போல் தெரிகிறது" என்ற அங்கிதாவின் குரல் ஓயும் முன்னேயே, 'அப்பாவின் மூக்குக் கண்ணாடி கூட்டிலிருந்து அந்த சதுரமான மஞ்சத் துணியைக் கொண்டு வரவா? ' என்று அர்ஜுன்.
"இரு, இரு. இதென்ன பிசு பிசுனு? - ஆனந்த், டிஸ்க் ஈசியா ஓடணும்னு ஆயில் ஏதாவது போட்டியா என்ன?" மீண்டும் அங்கிதா.
"நான் எதுவும் செய்யலே ரொம்பக் கஷ்டப்பட்டுத் தேடி எடுத்துண்டு வந்தால், சொல்ல மாட்டே நீ!" - ஆனந்த்.
"அக்கா நீ வேணா பாரு. நாம்ப இன்னும் எடுத்துப் போடாத டிஸ்க்லே கூட உருண்டை உருண்டையாய் எண்ணெய் மாதிரி.." மீண்டும் ஆனந்த்.
'இதோ, இதோ இதிலே கூட' என்று கூக்குரல்களுக்குப் பின் சற்று நேர அமைதி.
"நாளை ஜீவி மாமா வந்த உடனே கேட்டுரணும்" அங்கிதாவின் குரலுக்கு நிறைய ஆமோதிப்புகள்.
[அறிவு] ஜீவி வரும் வரை உங்களுக்கு இது மாதிரி அனுபவம் ஏற்பட்டிருந்தால் அதையும், எப்படி சமாளித்தீர்கள் என்பதையும் சொலலுங்கள், பின்னூட்டமாக!
//"இரு, இரு. இதென்ன பிசு பிசுனு? - ஆனந்த், டிஸ்க் ஈசியா ஓடணும்னு ஆயில் ஏதாவது போட்டியா என்ன?" மீண்டும் அங்கிதா.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா...
நல்லா யோசிக்கிறாங்கய்யா...
// 'அப்பாவின் மூக்குக் கண்ணாடி கூட்டிலிருந்து அந்த சதுரமான மஞ்சத் துணியைக் கொண்டு வரவா? ' என்று அர்ஜுன்.//
பதிலளிநீக்குஆமாப்பா, அதுதான் மிருதுவா நல்லா துடைக்கும்:))!
Clean with a quality Glass Cleaner liquid.
பதிலளிநீக்குSpray a little on surfaces and wipe it up gently with a clean and soft cotton cloth.
அந்த இரண்டாவது படத்தில் உள்ள சி டி விற்பனைக்கு கிடைக்குமா?
பதிலளிநீக்குஉங்களிடம் உள்ளதா? என்ன விலை?
கு கு அவர்களே, எங்கள் ப்ளாக் - ஐந்து கிராக் சி டி வரும் வியாழக் கிழமை, சென்னையில் வெளியிடப்படும். மேலும் விவரங்கள் அன்றைய ப்ளாக் போஸ்டில் எதிர்பாருங்கள்.
பதிலளிநீக்கு/////"இரு, இரு. இதென்ன பிசு பிசுனு? - ஆனந்த், டிஸ்க் ஈசியா ஓடணும்னு ஆயில் ஏதாவது போட்டியா என்ன?"/////
பதிலளிநீக்கு........இப்படி ஒண்ணு இருக்கோ?
ha,ha,ha,....
//......இப்படி ஒண்ணு இருக்கோ? //
பதிலளிநீக்குபிளே ஸ்டேஷன் கருவியில் உண்மையிலேயே டிஸ்க் ஃப்ரீயாகச் சுற்றாமல் இருக்கும்படி ஒரு தடை இருக்கிறது குழந்தைகள் கண்டு பிடித்துவிட்டனரோ என்னவோ?
//"இரு, இரு. இதென்ன பிசு பிசுனு? - ஆனந்த், டிஸ்க் ஈசியா ஓடணும்னு ஆயில் ஏதாவது போட்டியா என்ன?" மீண்டும் அங்கிதா.//
பதிலளிநீக்குஇப்படி தான் நிறைய cd dvd எல்லாம் வீணாகப் pogiratha? ஹா..ஹா..ஹா..
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் ஸ்ரீராம்..
பதிலளிநீக்கு//"இரு, இரு. இதென்ன பிசு பிசுனு? - ஆனந்த், டிஸ்க் ஈசியா ஓடணும்னு ஆயில் ஏதாவது போட்டியா என்ன?" மீண்டும் அங்கிதா ///////
பதிலளிநீக்குகலக்கல் .
எப்படி இப்படியெல்லாம் ....
டிவிடியை வாஷிங்மெஷின்லா போட்டு துவைச்சா எல்லா எண்ணை பிசுக்கும் போயிடும்
பதிலளிநீக்குகேட்டதும் கொடுப்பவனே ஸ்ரீராம் என்று பாடலாம் போலிருக்கிறது. சிடி நமக்கு ஸ்டூடியோ குவாலிட்டியில் ரெகார்டிங் செய்ய வராது என்றாலும் கடைசி டிராக் ஒரே இரைச்சல் எதோ கலியாண மண்டபத்தில் செய்திதிருக்கிற மாதிரி இருக்கிறது. சோபனா பேசுவது ஒன்றுமே விளங்க வில்லை.
பதிலளிநீக்குபாஸ்கரன் - குறுந்தகடுடன் நாங்கள் அனுப்பிய முகப்பு கடிதத்தின் முதல் வரியை சரியாகப் படிக்கவில்லையா?
பதிலளிநீக்குஇது குறித்து பேச்சோ எழுத்தோ நாங்கள் சொல்லும்வரை எங்கும் கூடாது என்று எழுதியிருந்தோமே!