Wednesday, March 31, 2010

கடவுள் ..

CERN பரிசோதனை முதல் படியில் வெற்றி என்று கேட்டதும் நாம் யாரைப் பற்றி நினைத்தோமோ அவரே வந்து விட்டார். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி என்பார்களே அந்த மாதிரி இருந்தது அறிவு ஜீவியின் வருகை.

"ஒ, அதுவா ? ஒரு பெரிய வட்ட வடிவ டன்னலில் மூலக் கூறுகளின் ஆதாரத் துகள்களை வேகம், வேகம், இன்னும் வேகம், மிக வேகம் என்று ஒளியின் வேகத்துக்கு கொண்டு வந்து இரண்டையும் மோதச் செய்து முதன் முதலில் பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்த அந்த கணத்தைத் திரும்பக் கொண்டு வரப் போகிறோம் என்கின்றனர் விஞ்ஞானிகள் " என்றதும் அங்கிதா "மாமா எனக்கு ஒரு சந்தேகம்" என்று ஆரம்பிக்க, அம்மா "முதலில் எல்லோரும் போய்க் கை கழுவிக்கொண்டு வந்து வட்டமாக உட்காருங்கள். நான் சாதம் கலந்து வைத்திருக்கிறேன். உருட்டிக் கையில் போட்டுடறேன். அப்புறம் நீங்கள் கிரிக்கெட்டோ கடவுளோ எதை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றாள்.

சாப்பாட்டுக் கடை முடிந்ததும் அங்கிதா கண்டிநியூவிடி விட்டுப் போகாமல் தொடர்ந்தாள். மனதுக்குள் "பிக் பாங் ..பிக் பாங்...பிக் பாங்" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டிருக்கக் கூடும் என்று தோன்றியது. "ஒளி, துகள் வடிவத்துடன் அலை வடிவமும் ஆனது என்று நியூட்டன் பல முறை சொல்லி இருப்பதாக சுசீலா மாடம் சொல்லிக் கொடுத்தார்கள். அதை அடிப்படையாக வைத்து, நான் கூட ஒரு பரிசோதனை பண்ணிப் பார்க்கலாம் என்றிருக்கிறேன். நீங்கள் எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்களா மாமா" என்றாள். 

நீங்கள் அங்கிதாவைப் பார்த்திருக்கிறீர்களோ? தலையைக் கொஞ்சம் சாய்த்து " ப்ளீஸ் அத்தை !" என்றதும் ராஜம் அத்தை ஒரு வார்த்தை கூட மேற்கொண்டு பேசாமல் நகர்ந்து விடுவாள். ஜீவியும் அவ்வாறே "எஸ் மிஸ்! பண்ணிடுவோம்" என்றார். "அர்ஜுன், ஆனந்த் எல்லோரும் கொஞ்சம் வெளியில் போய் விளையாடிக் கொண்டிருங்கள்" என்று சொல்லி அவர்கள் இருவரையும் வெளியேற்றி விட்டுப் பின் ஹாலில் கிழக்கே ஒரு மேஜை, மேற்கே ஒரு மேஜை என்று இழுத்துப் போட்டு விட்டு, பச்சை லாசர் லைட் சிவப்பு லாசர் லைட் என்று மேஜைக்கொன்றாகக் கொண்டு வந்து டேப் போட்டு பொருத்தி வைத்து விட்டு பழைய விசிட்டிங் கார்டுகளை எல்லாம் கொண்டு வந்து மேஜையின் காலடியில் சொருகி என்று ஏகப்பட்ட ஏற்பாடுகளின் பின் சோதனைச் சாலை ரெடி.

அங்கிதா ஏதோ கம்பெனி சேல்ஸ் மானேஜர் பிரசெண்டேஷன் கொடுக்க வந்த மாதிரி வந்து நின்று கொண்டு "CERN பரிசோதனையில் என்ன பண்ணப் போறாங்க தெரியுமா ? அவங்க பண்ணப் போற மாதிரியே ஒளி வேகத்தில் எதிரும் புதிருமாக இரண்டு ஒளிக் கற்றைகளை மோதச் செய்தால் என்ன ஆகும் என்று பார்க்கப் போறோம் !" என்றாள். 

"எம்மா, இவ்வளவு குறைந்த வசதியில் அதெல்லாம் பண்ணலாம் என்றால், ஒரு காந்தத்தை மாற்றுவதற்கு ஏன் ஆறு மாதம் எடுத்துக் கொண்டார்கள் ? " என்று ராஜம் அத்தை கேட்டாள்.

நாங்களும் சேர்ந்து கொண்டோம். என்ன தான் நடந்தது? பொறுத்திருந்து தான் பாருங்களேன்.

(என்ன நடந்தது என்பதை, இந்தப் பதிவின் பதினாறாவது பின்னூட்டமாக பதிய இருக்கிறார் அறிவு ஜீவி.)

20 comments:

வானம்பாடிகள் said...

1

வானம்பாடிகள் said...

2

வானம்பாடிகள் said...

...

வானம்பாடிகள் said...
This comment has been removed by the author.
வானம்பாடிகள் said...

14

வானம்பாடிகள் said...

சீக்கிரம் சொல்லுங்க 15 ஆய்டுத்து

Vels said...

வேகமா சொல்லுங்களேன். ஆர்வம் தாங்கல.

எங்கள் said...

சரி. இப்படி வைத்துக்கொள்வோம். எங்களைத்தவிர - பதினைந்து வெவ்வேறு ஆட்கள் கருத்து (கவனிக்க - கருத்து அல்லது எழுத்துக்கள் - எண்கள் மட்டும் அல்ல!) வேண்டும், அறிவு ஜீவிக்கு. ஆகையால் பெயர் என்னதான் வானம்பாடிகள் என்று பன்மையில் இருந்தாலும், ஒரே கருத்துதான் அவரிடமிருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
நன்றி வானம்பாடிகள், வேல்ஸ்.

சைவகொத்துப்பரோட்டா said...

காத்திருக்கிறேன்!!

Chitra said...

நாங்களும் சேர்ந்து கொண்டோம். என்ன தான் நடந்தது? பொறுத்திருந்து தான் பாருங்களேன்.


......... ஆடு, மாடு, கோழி........ எல்லாம் நடந்தது. ஹா,ஹா,ஹா.....

thenammailakshmanan said...

என்ன நடந்தது சொல்லுங்க...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

காத்திருக்கிறேன்!!
என்ன நடந்தது சொல்லுங்க...

Anonymous said...

என்ன நடந்தது? ஒன்றுமே நடக்கவில்லையோ? லாசர் வைத்து அறுவை எல்லாம் செய்கிறார்களாமே எதையாவது அறுத்துத் தொலைத்து விட்டீர்களா?

ஹுஸைனம்மா said...

என்ன சார், இப்படி சஸ்பெண்ஸ் வச்சு தொடரும் போட்டுட்டீங்க?

Anonymous said...

What is CERN? can you please explain that first?

எங்கள் said...

வானம்பாடிகள்
வேல்ஸ்
சைககொத்துப்பரோட்டா
சித்ரா
தேனம்மை
மணி ஆ ஒ
அனானி ஒன்று
ஹுசைனம்மா
அனானி இரண்டு
ஒன்பது பேருங்க ஆச்சு - இன்னும் ஆறு பேர் வேண்டும் - அறிவு ஜீவியைப் பதினாறும் பெற வைக்க!

geetha santhanam said...

அதென்ன கணக்கு பதினாறாவதாக சொல்லவேண்டுமென்று? முதலில் அதை சொல்லுங்கள். பின்னர் என்ன நடந்ததென்று சொல்லுங்கள்--கீதா

எங்கள் said...

10. geetha santhanam

meenakshi said...

அதானே, அது என்ன கணக்கு?? அதை சொல்லுங்க முதல்ல!

11. meenakshi.

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!