சனி, 6 மார்ச், 2010

உல்லாசம், சல்லாபம், சந்நியாசம்!


இரண்டொரு நாட்களாக எல்லார் கவனத்தையும் கவர்ந்திருப்பது ஒரு இள வயது சாமியார் ஒரு நடுவயது நடிகையுடன் சல்லாபம் - உல்லாசம் செய்யும் விடியோ காட்சிகள் மிகப் பரவலாக தொலைக்காட்சிகளில் வலம் வருவதும் அதற்கு அசாதாரண முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பப் படுவதும்தான். பப்ளிக் ஃபிகர் என்ற ஸ்தானத்தில் இருப்பவர்கள் பொதுமக்களின் தொடர்ந்த கண்காணிப்புக்குப் பாத்திரமானவர்கள் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.  அவர்கள் சொல் ஒன்று செயல் ஒன்று என நடந்துகொள்வது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதுதான்.  

ஆனால் அந்தப் பெண்?  அவர் ஒரு விவாக ரத்தான நடிகை.  அவர் நடிகை என்றாலும் பப்ளிக் ஃபிகர் என்ற வகைப் படுத்தலில் வரமாட்டார்.  ஒரு நடிகையாக அவரை விமரிசிக்கலாமே தவிர அவரது சொந்த வாழ்க்கையைக் குறித்து ஆட்சேபம் எழுப்ப யாருக்கு உரிமை இருக்கிறது?  நான்கு சுவர்களுக்குள்ளே இருவரும் சம்மதித்து யார் உறவு கொண்டாலும் அது அசாதாரண உறவு முறையாக (அப்பா, மகள், சகோதர சகோதரி மாதிரியான விபரீத முறை) இருந்தாலொழிய சட்ட பூர்வமாக அதை தடை செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை.  மேலும் விடியோ காட்சிகளில் அவரது முகத்தை மறைத்து வெளியிட வசதி இருக்கும் போது இப்படி அவரை அடையாளம் காட்டுவதும் அல்லாமல் அவர் பெயர் சொல்லிக் குறிப்பிட என்ன தேவை வந்தது? ஒருவரது தனிப்பட்ட நடவடிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக பலரறியச் செய்தல் சரிதானா?  விபசாரம் செய்தால் ஒழிய வேறு நடவடிக்கைகள் தணிக்கை செய்யப் பட முகாந்திரம் இல்லை.  இந்தமாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பெண்ணே துணிந்து ஒருவரை அவரது அசல் முகம் அனைவருக்கும் தெரியப் படுத்தப் பட வேண்டும் என்ற நோக்கில் இந்த மாதிரி செய்தால் சட்ட ரீதியாக எப்படி காணப் படுமோ தெரியவில்லை. 

நம் மக்களுக்கு சில பலவீனங்கள் இருக்கின்றன.  5000 ரூபாயில் வீடு கட்டித் தருகிறேன், பணத்தை இரட்டித்துத் தருகிறேன், பத்து சதவிகித விலையில் வீட்டு உபயோகப் பொருள் தருகிறேன், பெண்ணுக்கு ஃபாரின் மாப்பிள்ளை பிடித்துத் தருகிறேன், வெளி நாட்டில் வேலை வாங்கித் தருகிறேன், பூஜை செய்து புதையலெடுத்துக் கொடுக்கிறேன், அழகிய பெண்ணை வசியம் செய்ய தாயத்து தருகிறேன், ஆண்மைக் குறைவை லேகியம் களிம்பு கொடுத்து (??!!) சரி செய்கிறேன் என்று எப்படி யெல்லாமோ ஏமாற்றுகிறவர்களும் அதற்கு எளிதில் ஏமாந்து விட்டு, அதற்குப் பிறகு, போலீஸ் அல்லது அரசு இதை நொடியில் சரிசெய்து இழந்த பொருளை மீட்டுத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  

இது எல்லாவற்றையும் விட காவி உடை, மதச் சின்னங்கள் தரித்து தாடி, முடி, மொட்டை என்று தலை, முக வளர்ப்புகளை முதலீடாக வைத்து மோசடி செய்பவர்களை அளவுக்கு அதிகமாக நம்புவதும், ஆசிரமத்தில் சேர்ந்து போதைப் பழக்கங்களுக்கும் அதன் பின் தொடரும் விபரீத வக்கிரங்களுக்கும் இரையாவதில் நம்மவருக்கு நிகர் வேறு யார்?  போலி சாமிகளுக்கு சொத்து சேர்த்துக் கொடுத்துவிட்டு பின்பு, 'ஐயோ அப்பா' என்று அலறுவது மக்களுக்கு கைவந்த கலையாகி விட்டது. 

வெள்ளி தங்க சிம்மாசனங்கள், வானளாவிய மிகப் பெரிய மாளிகைகள், வேலைகள் செய்திட குறிப்பாக அழகிய இளம்பெண்கள் என்று சில செட் அப் களைப் பார்க்கும் போது கண், மனம் கூசவில்லையா? 

23 கருத்துகள்:

 1. உங்கள் தலைப்பே சொல்லி விட்டதே சந்நியாசத்தின் அழகை!!. கட்டுரை அருமை.

  பதிலளிநீக்கு
 2. இவங்க ரெம்ப நல்லவங்க. எவ்வளவு ஏமாத்தினாலும் வருத்தமே படாம நல்லா ஏமாறுவாங்க.

  பதிலளிநீக்கு
 3. நல்ல பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை .உங்கள் எழுத்து நிறம் படிக்க மிகவும் சிரமமா இருக்கிறது நண்பரே.:(

  பதிலளிநீக்கு
 5. உங்கள் எழுத்து நிறம் படிக்க மிகவும் சிரமமா இருக்கிறது நண்பரே.:(

  ஷங்கர்,
  என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லையே! எழுத்து நிறம் என்றால் காவி, நீலம் போன்ற குறியீடு வண்ணங்களா?

  பதிலளிநீக்கு
 6. சாமியாரின் அபச்சாரத்தை விட ஊடக விபச்சாரம் கொடுமையாக இருக்கிறது.

  விஜய்

  பதிலளிநீக்கு
 7. விடியோ காட்சிகளில் அவரது முகத்தை மறைத்து வெளியிட வசதி இருக்கும் போது இப்படி அவரை அடையாளம் காட்டுவதும் அல்லாமல் அவர் பெயர் சொல்லிக் குறிப்பிட என்ன தேவை வந்தது?

  எல்லாம் பணத் தேவை தான் ஸ்ரீராம்..

  பதிலளிநீக்கு
 8. //உங்கள் எழுத்து நிறம் படிக்க மிகவும் சிரமமா இருக்கிறது நண்பரே.:( //

  உங்கள் கட்டுரையின் எழுத்துகள் தடித்தும் (Bold), கருநீலத்தில் இருப்பதாலும் படிப்பதற்கு சிரமமாக தோன்றும்.

  எழுத்துகள் தடித்து இல்லாமல் மாற்றிப்பார்க்கவும். இல்லையேல் எழுத்தின் வண்ணத்தை மாற்றவும்.

  புரிதலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. ஷங்கர் அவர்கள் எழுத்து நிறம் படிக்க சிரமமாக இருக்கிறது என்று சொன்னவுடனேயே - எழுத்து நிறத்தை காவி நிறத்திலிருந்து - டார்க் பளுவாக மாற்றிவிட்டோம். - ஹூம் இப்போ எல்லாம் மஞ்சள், ப்ளூ, பச்சை இந்த வரிசையில் காவியும் சேர்ந்துவிட்டதே !!

  பதிலளிநீக்கு
 10. I was really busy with my work schedule last 2-3 weeks.. hence not following the news much.

  I do agree that the media gives unwanted 'hype' to almost most of the news. Media not focussing on 'productive news'. Infact they just want to 'produce' news. (plz,. Ref. http://madhavan73.blogspot.com/2009/11/for-those-who-are-not-familiar-with.html)

  பதிலளிநீக்கு
 11. ஐய்யகோ ஒன்லி டெக்ஸ்ட் கலர்தான் நண்பரே..:) இப்ப ஓக்கே.. இது போன்ற நிறங்களையே இடுகைக்கு பயன் படுத்தினால் படிப்பவர்களுக்கு சுலபமாயிருக்கும் என்றேன்..:)
  --

  இப்ப பதிவு பத்தி கருத்து..
  //"உல்லாசம், சல்லாபம், சந்நியாசம்!//
  ரைட்டு..:))

  பதிலளிநீக்கு
 12. தல இதத்தான் பல பின்னூட்டங்களில் சொல்லியிருந்தேன்...இது அவன் குற்றம் இல்லை மக்கள் குற்றம்...அது ஏன் ஒருவனை சாமியாரா அங்கீகரிக்கனும்...அவனைக் கடவுள்னு சொல்லனும்?

  பதிலளிநீக்கு
 13. நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை எங்கள் ப்ளாக்

  பதிலளிநீக்கு
 14. உண்மையான சக்தியுள்ள எந்த சந்நியாசியும் உலகத்தோடு ஓட்டுவது இல்லை, அவருக்கு செங்கல்லும் வைரக்கல்லும் ஒன்றுதான், மண்ணும் பொன்னும் ஒண்ணுதான். ஆனால் கபட சந்நியாசியிடம் மனத்தை செலுத்தும் ஆட்டு மந்தைகள் இருக்கும் வரை, அவர்கள் இப்படித்தான் தடம் மாறுவார்கள். கடவுளை நினை, ஆனால் தானே கடவுள் என்று சொல்பவனிடம் நெருங்கவே நெருங்காதே!

  (ஆன்மீகத்தைப் பற்றிய என்னுடைய பதிவை இங்க பார்க்கலாம் : http://ulagamahauthamar.blogspot.com/2010/03/blog-post.html

  பதிலளிநீக்கு
 15. பரஸ்பரப் புரிதலில் ஒரு ஆணும் பெண்ணும் சல்லாபமாக இருப்பது சாதாரணப் பிரஜைகளுக்கு பெரிய விஷயம் இல்லாததாக இருக்கலாம். சட்டத்தில் கூட அப்படிச் செய்து விட்டுத் தன்னைக் காத்துக் கொள்ள avenues இருக்கலாம். ஆனால், சமூகத்துக்கு, அதிக சிந்தனைத் திறன் இல்லாதவர்களுக்கு, துறவிகள் என்றாலே சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்கிற தவறான எண்ணத்தைத் தந்து விடும் இம்மாதிரி செயல்கள். நம் தவறுகள் நம்மை மட்டும் பாதிக்கிற வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. சமூகத்துக்கு தவறான புரிதல்களைத் தருமேயானால் சட்டப்படி எப்படியோ, தர்மப்படி தவறு. கலாச்சாரப்படித் தவறு.

  நல்ல analytical கட்டுரை. பாராட்டுக்கள்.

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 16. நான் சட்டப் படி தவறேதும் செய்யவில்லை என்று ஆட்சேபிக்கத் தக்க செயல்கள் செய்து மாட்டிக் கொண்ட பல பேரும் சொல்லலாம். சட்டப் படி தண்டனை பெறக் கூடிய குற்றத்தை அவர் செய்யாமலே இருக்கலாம்தான். என்றாலும் கூட அன் எதிகல் என்று சொல்லப் படும் கௌரவமற்ற நடத்தை மிக்க கண்டனத்துக் குரியதே. சுதா ரகு நாதன் அகாடமி மேடையில் உட்கார்ந்து கொண்டு “ பாஆஆண்டியனின் ராஜ்ஜியத்தில்ல்ல்ல் உய்யலாலா “ என்று பாடினால் அவரை அரெஸ்ட் செய்ய முடியாது. ஆனால் அடுத்தடுத்த கச்சேரிகள் அரோகரா ஆகிவிடும் அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
 17. //சுதா ரகு நாதன் அகாடமி மேடையில் உட்கார்ந்து கொண்டு “ பாஆஆண்டியனின் ராஜ்ஜியத்தில்ல்ல்ல் உய்யலாலா “ என்று பாடினால் அவரை அரெஸ்ட் செய்ய முடியாது. ஆனால் அடுத்தடுத்த கச்சேரிகள் அரோகரா ஆகிவிடும் அவ்வளவுதான்.//


  அடுத்த கச்சேரி அரோகரா ஆகுதோ இல்லையோ, அதைப் பார்த்துட்டு பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, உன்னி கிருஷ்ணன் எல்லாரும் 'நாக்கா முக்கு', 'சின்ன வீடா வரட்டுமா' எல்லாம் பாட ஆரம்பித்தால் சங்கீத மேடைகள் என்னாவது!

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 18. ivargal pilaippe kadavul endru solli makkalai yeamaatruvathuthan.
  makkalaum nambugiraargal.
  yeamarubavargal irukkumvarai yeamaatrubavargal jaiththuk konde iruppaargal.
  candru

  பதிலளிநீக்கு
 19. Hi there, I set up your blog via Google while searching destined for the benefit of earliest grant-in-aid representing a generosity storm and your temporary looks really thought-provoking seeing that me

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!