வெள்ளி, 26 மார்ச், 2010

வி(சு)க்கல் புராணம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடித்தாலே விக்கல் எடுக்கும் விசுவுக்கு.  தண்ணீர் நாங்களும் பாட்டிலில் தான் வாங்குகிறோம் என்றாலும் நீங்கள் நினைப்பது போல அரை, கால் எல்லாம் இல்லை.  பெரீய்ய பெரீய்ய பாட்டில்களில் - அவற்றைத் தூக்கி அந்த பப்ளரில் கவிழ்ப்பது எங்க ரங்குவின் தினசரி உடற்பயிற்சிகளில் நம்பர் ஒன்று.

இன்று சட்டினி கொஞ்சம் காரம்.  விசு வழக்கம் போல விக்க, பக்கத்தில் இருந்த ராஜம் அத்தை, "மேலே பார் விசு" என்று சொன்னதும் விசு தன் இரண்டு கைகளாலும் தட்டைப் பொத்திக் கொண்டு மேலே பார்த்தான். [பின் என்ன, எத்தனை முறை அனுபவப் பட்டிருக்கிறான்!  மேலே பார்த்து விட்டு தட்டைப் பார்த்தால் கொஞ்சம் குறைந்திருக்கிற மாதிரிதான் எப்பொழுதுமே தோன்றும் - எதற்கு சந்தேகத்துக்கு இடம் என்று இப்பொழுதெல்லாம் அவன் தட்டைப் பொத்திக் கொண்டுதான் பார்வையை இங்கே அங்கே திருப்புகிறான்] மேலே பார்த்த விசு, தட்டையும் இழுத்துக் கொண்டு மெதுவாக பக்கவாட்டில் நகர ஆரம்பித்தான்.  விக்கல்? அது அவன் மேலே பார்த்த மாத்திரத்தில் எங்கோ போயிருந்தது.

ராஜம் அத்தைக்குப் பெருமை பிடிபடவில்லை. வீட்டில் இருக்கின்ற எல்லோருக்கும் கேட்கும் வகையில், "எங்க பாட்டி சொல்லிக் கொடுத்த கை (தலை?) வைத்தியம் இது. இப்போ பாருங்க - விசுவோட விக்கல் போயே போச்சு! "நல்லா கேட்டுக்கோடா, கொழந்தே.  இன்னமே விக்கல் வந்தா மேலே பார்த்தா போறும்"  என்றதும்,  விசு, "நீ மொதல்லே மேலே பாரு" என்றான்.  அத்தை மேலே பார்த்து விட்டுத் தானும் வேகமாக நகர ஆரம்பித்தாள்.  காரணத்தை நீங்களும் பாருங்களேன். 

அட! 

மேலே பாக்காதீங்க! 

இங்கே 

கீ 

ழே இப்போது சொல்லுங்கள்.  விசுவின் விக்கல் நின்றதற்குக் காரணம் மேலே பார்த்ததா, அல்லது மேலே கண்ட காட்(பூச்)சியின் தாக்கமா? 

14 கருத்துகள்:

 1. குரோம்பேட்டைக் குறும்பன்26 மார்ச், 2010 அன்று PM 3:33

  விக்கலை நிறுத்துவது தொடர்பாகப் படிக்கும்பொழுது - தொலைக்காட்சியில், முன்பு, 'கறை நல்லது' என்ற தலைப்பில், வந்த சர்ஃப எக்செல் விளம்பரம் ஒன்று நினைவிற்கு வருகிறது. அப்பாவின் விக்கலை நிறுத்துவதற்காக சிறுமி - தக்காளி சாஸ் (?) அல்லது அது போன்ற ஒன்றை - அப்பாவின் சட்டை மேல் சிதற வைக்கும் விளம்பரம். ஆனால் அந்த விளம்பரம் எந்த காரணத்தாலோ உடனடியாக நிறுத்தப் பட்டது.

  பதிலளிநீக்கு
 2. //தட்டைப் பொத்திக் கொண்டு மேலே பார்த்தான்.//

  ஹையோ.......ஹையோ.........
  இத படிக்கும்போதே எனக்கு சிரிப்பு வந்திருச்சு :))

  பதிலளிநீக்கு
 3. ஓடுகிற பூரானுக்குக் கால் என்னும் திறமை படைத்த என் தம்பியால் கூட இந்தப் பூச்சியை இனம் காண முடிய வில்லை - என்னே பூச்சி இது ?

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. Causes
  Hiccups are caused by many central and peripheral nervous system disorders, all from injury or irritation to the phrenic and vagus nerves, as well as toxic or metabolic disorders affecting the aforementioned systems. Hiccups often occur after drinking carbonated beverages or alcohol. Prolonged laughter is also known to cause hiccups. Eating too fast can also cause the hiccups.[2] Persistent or intractable hiccups may be caused by any condition which irritates or damages the relevant nerves. Chemotherapy—which can include a huge amount of different drugs—has been implicated in hiccups (some data states 30 percent of patients),[citation needed] while other studies have not proven such a relationship. Many times chemotherapy is applied to tumors sitting at places that are by themselves prone to cause hiccups, if irritated.
  Courtesy :
  http://en.wikipedia.org/wiki/Hiccup

  //ஓடுகிற பூரானுக்குக் கால் என்னும் திறமை படைத்த என் தம்பியால் கூட இந்தப் பூச்சியை இனம் காண முடிய வில்லை - என்னே பூச்சி இது ?

  looks like spider (ettukkaal poochchi) with less no. of legs.

  பதிலளிநீக்கு
 6. சரியாகப் பழுக்காத சப்போட்டப் பழம், உப்புப் போடாத மோர் சாதம் இவற்றைச் சாபிடும்போழுது வரும் விக்கல், கொஞ்சம் உப்பு தூவி சாப்பிட்டால் வராது. விக்கல் வரும் பொழுது தண்ணீர் குடிப்பதை நம் நாட்டில் தவிர வேறு இடங்களில் காண முடிவதில்லை.

  பதிலளிநீக்கு
 7. {{{{இப்போது சொல்லுங்கள். விசுவின் விக்கல் நின்றதற்குக் காரணம் மேலே பார்த்ததா, அல்லது மேலே கண்ட காட்(பூச்)சியின் தாக்கமா? }}}}

  சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதிவு ...!
  பகிர்வுக்கு நன்றி நண்பரே!!

  பதிலளிநீக்கு
 8. சாமிக்கு முடிஞ்சு வச்ச ஒத்த ரூபா காச நீ தானே எடுத்தே
  பாட்டி மிரட்டியதும் காணாமல் போகும் விக்கல் நினைவிற்கு வந்தது.
  நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 9. குரோம்பேட்டைக் குறும்பன்26 மார்ச், 2010 அன்று PM 8:13

  மணி - ஒரு முறை எனக்கு விக்கல் வந்தபோது, என் பாட்டி, "சாமிக்கு முடிந்து வைத்திருந்த ஒத்தை ரூபாயை நீதானே எடுத்தாய்?" என்று அதட்டிக் கேட்டார்கள்.
  நான் 'ஆமாம்' என்றேன். அதைக் கேட்ட பாட்டிக்கு உடனே விக்கல் வந்துவிட்டது!

  பதிலளிநீக்கு
 10. நிச்சயமா விக்கல் நின்றதுக்கு காரணம் அவரோட கவனம் அந்த பூச்சி மேல் திரும்பினதால்தான். எனக்கு தெரிந்த வரையில் சாப்பிடும்போது புரையேறினால்தான் மேலே பார்க்க சொல்வார்கள். விக்கல் வந்தால், விக்கல் எற்பட்டவரின் கவனத்தை திசை திருப்ப ஏதேனும் செய்தால் விக்கல் நின்று விடும். எனக்கு இந்த அனுபவம் இருக்கிறது. நான் பணிபுரிந்த காலத்தில், ஒரு நாள் எனக்கு தொடர்ந்து பத்து நிமிடத்திற்கு மேல் விக்கல், தண்ணீர் குடித்தும் நிற்கவில்லை. என்னுடன் பணிபுரிந்த ஒரு அக்கௌன்டன்ட், வெளியே ரிசப்ஷனில் இருந்து எனக்கு இண்டர்காம் செய்து, உன்னை பார்க்க உன் அண்ணா வந்திருக்கிறார் என்றார். என்னை பார்க்க எதுக்கு அவன் ஆபீஸ் வரணும்? என்ன ஆச்சு என்று சற்று கவலையுடன் யோசித்துக்கொண்டே வேகமாக ரிசப்ஷன் சென்று பார்த்தால், அங்கு யாருமே இல்லை. என் பின்னாலேயே வந்த அந்த அக்கௌன்டன்ட் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே, உன் விக்கல் நிற்கத்தான் இப்படி செய்தேன் என்றார். நானும் அப்பொழுதுதான் கவனித்தேன் என் விக்கல் நின்று போனதை. மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பின் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

  பதிலளிநீக்கு
 11. வேறு ஏதாவது செய்வார்களோ என்று பார்த்தால் - இவ்வளவு தானா?

  எங்கள் குடும்பம் பக்கம் விசயமே வேறே. மேலே பார்க்கும் போது தட்டைப் பொத்திக் கொள்வதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது - குடும்ப ரகசியம்.

  'மேலே பார்டா' என்று சொன்னதும் அசடு போல் அப்படியே மேலே பார்த்தால் - தட்டில் இருப்பதை சுட்டு விடுவார்கள் பக்கத்தில் இருப்பவர்கள். சிறு வயது அனுபவம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!