Thursday, March 18, 2010

பணமாலைக்கென்ன வழி?


கருப்பை  வெளுப்பாக்க  ஒரு எளிய, புத்திசாலித் தனமான வழி கண்டுபிடிக்கப் பட்டு விட்டது.  கட்சித் தொண்டர்கள் மனமுவந்து போட்டதாக அறிவித்து, பத்து சாக்கு மூட்டை கொள்ளுமளவுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாலையாகக் கட்டிக் கொண்டு வந்து தலைவருக்கு சார்த்தினால் கேள்வி கேட்பது கடினமாகிவிடும்.  யாராவது ஏதாவது ஆட்சேபம் சொன்னால் இருக்கவே இருக்கிறது, ஜாதி, மொழி, இனம் என்று எந்த அடிப்படையிலாவது தானும் தன தொண்டர்களும் பழி வாங்கப் படுவதாக அறிவித்து விடலாம்.

யார் ஆண்டாலும் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்துதான் ஆட்சி நடக்கும்.  எனவே கட்சி வசூலிக்கும் பணத்தை கணக்கு எல்லாம் கேட்டு அவதிப் படுத்துவதை எந்தக் கட்சியும் விரும்புவதில்லை. இது போதாதா?
 
எல்லாம் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக போடப்பட்டதில் - ஒரு சிறிய சிக்கல் எழலாம். எந்த வங்கியிலிருந்து எந்தக் கணக்கிலிருந்து யார் எடுத்தது என்று கேள்வி எழுப்பி என்ன பதில் வருகிறது  என்று பார்க்கலாம்.  இதற்கும் ஒரு புத்திசாலித் தனமான பதில் தயாராக இருந்தாலும இருக்கலாம். யார் கண்டது?
 
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் என்று பாடின கவி இவ்வளவு மோசமான அவலங்களைப்  பார்க்கவில்லை என்று திடமாகச் சொல்லலாம்.  அதிருஷ்டக் காரர்.  

இன்னும் எவ்வளவு கேவலங்களை சகித்துக் கொண்டு செய்வதறியாமல் திண்டாட வேண்டும் என்று நம் தலையில் எழுதியிருக்கிறதோ யாருக்குத் தெரியும்?  

17 comments:

குரோம்பேட்டைக் குறும்பன் said...

தனக்கு விழுகின்ற மாலைகளை உடனுக்குடன் கழற்றி, குழந்தைகள் பக்கம் வீசி எறிவதை நேரு, காமராஜ் போன்ற தலைவர்கள் அந்தக் காலத்தில் செய்ததை - பார்த்துள்ளேன். இவங்க அப்படி செய்வார்களா?

meenakshi said...

//கருப்பை வெளுப்பாக்க ஒரு எளிய, புத்திசாலித் தனமான வழி கண்டுபிடிக்கப் பட்டு விட்டது.//
Exactly! இதுக்கெல்லாம் வரி வசூலிக்க மாட்டாங்களா? பொது மக்கள் கிட்ட எல்லாம் கழுத்துல கத்தி வைக்கதா குறையா வரி வாங்க மட்டும் தெரியுது இல்லை!

ராமலக்ஷ்மி said...

//நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் என்று பாடின கவி இவ்வளவு மோசமான அவலங்களைப் பார்க்கவில்லை என்று திடமாகச் சொல்லலாம். அதிருஷ்டக் காரர்.//

உண்மைதான்!

மைதீன் said...

நெஞ்சு பொறுக்குதில்லையே .......இந்த வரிகளை இப்பொழுதுதான் வேறு பதிவிற்கு பின்னூட்டம் இட்டு வந்து பார்த்தால்......மாயாவதி பற்றி யோசிக்கும் பொது நம் இருவருக்கும் ஒரே எண்ண அலைகள்.நன்றி

வானம்பாடிகள் said...

இது பாடாவதி. அதை விட திமிரா அடுத்த நாளே திரும்பவும் இன்னோரு மாலை போட்டு போஸ் கொடுக்குது.

கக்கு - மாணிக்கம் said...

நமக்கெல்லாம் நிறைய ,நிறைய சகிப்பு தன்மை வேண்டும். வேறு என்ன சொல்ல இருக்கு?
யாரும் யாருக்கும் சற்றும் சளைத்தவர்கள் இல்லை.
நாம் உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்று நெஞ்சு நிமிர சொல்லுவோம்.

சைவகொத்துப்பரோட்டா said...

இன்னும் எத்தனை நாடகங்களை பார்க்க வேண்டியது இருக்குமோ,
தெரியலையே.

jaisankar jaganathan said...

தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகொபித்த எதிரி நீங்கள். மாயாவதிக்கு வந்த பணம் மக்கள் மனமுவந்து குடுத்த பணம்.....??????

Chitra said...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் என்று பாடின கவி இவ்வளவு மோசமான அவலங்களைப் பார்க்கவில்லை என்று திடமாகச் சொல்லலாம். அதிருஷ்டக் காரர்.


.......... என்னத்த சொல்ல?

புலவன் புலிகேசி said...

ஒன்றும் சொல்வதற்கில்லை நண்பா...

தமிழ் உதயம் said...

இதுக்கே வருத்தப்பட்டா எப்படி. இதுக்கு மேலயும் இருக்கு.

Madhavan said...

MMP - Material Minded People.
வேறென்ன சொல்ல, கலி காலத்துல இதுலாம் ரொம்ப சிம்பிள். அதிர்ஷ்டசாலி 'பாரதியார்' இன்னிக்கி நடப்பத பாக்கல. இது கலியின் ஆரம்பம் நாட்கள் தான். எனவே சுமார் 100 - 150 வருடத்துக்கு அப்புறம் நாம கூட அதிர்ஷ்டசாலி தான்.. அப்போ நடக்கப்போவதை பாக்க நாம இருக்க மாட்டோம், நல்லவேளை. (This way of saying is called 'selfpity', I think)

thenammailakshmanan said...

நாமஎன்ன செய முடியும் அவங்களாதான் திருந்தணும்

சாய்ராம் கோபாலன் said...

KGG

Do we have any other choice other than our புலம்பல்

விடுங்க விடுங்க. வேற எதாவது உருப்படியான வேலை பார்ப்போம். நாம மாச சம்பளக்காரங்கள்

அப்பாதுரை said...

caption tops!

Dr.P.Kandaswamy said...

பொலம்பறத தவிர வேற ஒரு வழியும் தெரியலே?

பிரியமுடன்...வசந்த் said...

//எல்லாம் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக போடப்பட்டதில் - ஒரு சிறிய சிக்கல் எழலாம். எந்த வங்கியிலிருந்து எந்தக் கணக்கிலிருந்து யார் எடுத்தது என்று கேள்வி எழுப்பி என்ன பதில் வருகிறது என்று பார்க்கலாம். இதற்கும் ஒரு புத்திசாலித் தனமான பதில் தயாராக இருந்தாலும இருக்கலாம். யார் கண்டது?//

ம்ம் :(

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!