கே: பெரிய வீடு சின்ன வீட்டைப் பார்த்து என்ன சொல்லும்?
பதில்:ரொம்ப அலட்டிக்காதே. வெள்ளையடிச்சு மினுக்கறதெல்லாம் என் வயசு வரும்போது என்னாகும் தெரியுமா என்று கேட்கும்.
கே: விலைவாசி குறைப்பில் அரசியல்வாதி ஏன் அதிகம் அக்கறை காட்டுவதில்லை?
பதில்: யார் சொன்னது? வோட்டு விலை ஏறி எகிறிப்போய் அவனவன் படற பாடு உங்களுக்கு எங்கே தெரிகிறது என்று அரற்றுகிறார் அரசியல்வாதி.
கே: பெரிய நடிகைக்கு என்ன அடையாளம்?
பதில்: ரொம்பச் சின்ன உடைகள்.
கே: ஒரு கவிதை சொல்லுங்களேன்:
பதில்: குட்டிக் கதை சொல்லி கும்பலைக் கவர்ந்தார்
குட்டி மலை போல குவித்தார் செல்வத்தை
குட்டி அடக்கவோ கூட யாருமில்லை
குட்டி உறவால் குப்பையாய்ப் போனார்.
கே: விகடனிலிருந்து சினிமா பகுதியை தனிப் படுத்தி சினிமா விகடன் என்று ஏன் புதுப் பத்திரிகை பிரசுரம் செய்யக் கூடாது?
பதில்: அப்புறம் மீதி விகடனுக்கு 'சோனி விகடன்' என்றுதான் பெயர் வைக்க வேண்டும்.
கே: கல்கி சுஜாதா சாவி மீண்டும் உயிர் பெற்று வந்தால் . . . ?
பதில்: கல்கி: கல்கி ரொம்ப மாறிவிட்டது, வருத்தமாக இருக்கிறது.
சுஜாதா: டெக்னாலஜி ரொம்ப மாறி விட்டது. சந்தோஷமாக இருக்கிறது.
சாவி: ஜோக் மாறவே இல்லை. ஆச்சரியமாக இருக்கிறது.
கே: மக்கள் சக்தி மகத்தானது என்கிறார்கள். ஒன்றும் சாதிக்க முடியவில்லையே!
பதில்: மக்கள் சக்தியை முன்வைத்து முன்னேறி வரும் சித்த வைத்தியர்கள் இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.
கே: மந்திரோபதேசம் வேத பாராயணம் இதற்கெல்லாம் பெண்களை அந்தக் காலத்தில் சேர்ப்பதில்லையாமே அப்படியா?
பதில்: அதை இந்தக் காலத்திலும் வைத்திருக்கலாமே, இப்படியா!
கே: அஞ்சு பைட்டு, மூணு லவ் சீன், பன்ச் டயலாக் என்று தமிழ் சினிமா ஆனது எப்போது மாறும்?
பதில்: கவலைப் படாதீர்கள். பத்து பைட்டு, இருபது லவ் சீன், ஆபாச காமெடி என்று மாறி வருகிறதே கவனிக்க வில்லையா?
கே: உப்புமாவை எப்படி சாப்பிட வேண்டும்?
பதில்: வயிறு உப்புமா என்று பார்த்து சாப்பிட வேண்டும்.
கே: புனர் ஜன்மத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் என்ன செய்யலாம்?
பதில்: செட் தோசை, மக்மல் பூரி சாப்பிடலாம்.
கே: டி வி யில் முன்பு பார்த்தது இப்போது பார்க்க முடியாதது எது?
பதில்: ' தடங்கலுக்கு வருந்துகிறோம் ' கார்டு.
கே: விலகி இருப்பது, விலகி இருக்க வேண்டியது, விலகாதிருப்பது, விலகாதிருக்க வேண்டியது எது?
பதில்: விலகி இருப்பது: கதா நாயகிகளின் மேலாடை.
விலகி இருக்க வேண்டியது, உதடும் சிகரெட்டும்
விலகாதிருப்பது: அதிகாரமும் லஞ்சமும்.
விலகாதிருக்க வேண்டியது: சீரியலும் சோகமும்.
கே: நீங்கள் எதை தொடர்ந்து படித்தாலும் நடை முறைப் படுத்துவதில்லை?
பதில்: சமையல் குறிப்புகள்.
கே: தோற்றத்தில் கவர்ச்சியும் நல்ல பேச்சுத் திறனும் இருப்பவர் எந்தக் கட்சியில் சேரலாம்?
பதில்: அவரே புதிதாக ஆரம்பிக்கலாம் -- கட்சியை அல்ல. சாமியார் மடத்தை.
கே: கடைச் சங்க காலம் என்று சொன்ன பின்பு இனி தமிழ்ச் சங்கம் தோன்ற வாய்ப்பிருக்கிறதா?
பதில்: சங்கமம் தோன்ற நிறைய வாய்ப்பு வந்து போகிறதே போதாதா?
(மேலும் கேள்வி கேட்போர் engalblog@gmail.com என்ற ஜி மெயிலுக்கு மெயில் அனுப்பவும்.)
அடடடா....என்ன மாதிரியான பதில்கள் :))
பதிலளிநீக்குஎங்கள் ப்ளாக்கை நீங்கள் வெளியிலிருந்து விமர்சனம் செய்தால் என்ன சொல்வீர்கள்?
பதிலளிநீக்கு//கே:..., விலகாதிருக்க வேண்டியது எது?
பதிலளிநீக்குபதில்:.... விலகியிருக்க வேண்டியது: சீரியலும் சோகமும்.//
பருப்பிருக்கா என்றால் உப்பிருக்கு என்பார்களாமே கடைக்காரர்கள் ..உங்கள் கடையில் என்ன விற்கிறீர்கள்?
நன்றி சைவகொத்துப்பரோட்டா
பதிலளிநீக்குரவி உங்களுக்கு பதில் தனி பதிவில்.
அனானி நன்றி - திருத்திவிட்டோம்.
//குட்டிக் கதை சொல்லி கும்பலைக் கவர்ந்தார்
பதிலளிநீக்குகுட்டி மலை போல குவித்தார் செல்வத்தை
குட்டி அடக்கவோ கூட யாருமில்லை
குட்டி உறவால் குப்பையாய்ப் போனார்//
என்ன ஒரு டைமிங்கான கவிதை. சூப்பர் .பொழுது போகுது
இப்படி வேற கலக்கியாறதா:)) பலே!
பதிலளிநீக்குகே: பெரிய வீடு சின்ன வீட்டைப் ...
பதிலளிநீக்குபதில்:ரொம்ப அலட்டிக்காதே. வெள்ளையடிச்சு ...
நித்யானந்தா இஷ்டைல்ல இன்னாவோ சொல்வியாங்காட்டியும்னு பாத்தா..ரூட்டு மாத்துறியே நைனா?
-அப்பாதுரை
நித்யானந்தா இஷ்டைல்ல இன்னாவோ சொல்வியாங்காட்டியும்னு பாத்தா..ரூட்டு மாத்துறியே நைனா?
பதிலளிநீக்கு-அப்பாதுரை
ஐயா சாமி, துரைமாரே, அப்பா, நித்யம் ஒரே ஆனந்தத்தைக் கட்டிக் கிட்டு கஷ்டப் படணுமா என்ன?
:-)).. சூப்பருங்க!
பதிலளிநீக்குரைட்டு.............
பதிலளிநீக்குசூப்பர் .. :))
பதிலளிநீக்குகிண்டலான கேள்விகள்...
பதிலளிநீக்குகேலியான பதில்கள்...
MAMATA DERAILS SONIA VICTORY - We are not taken into confidence - but Left were taken into confidence - for the 33% reservation bill. Says Mamata.
பதிலளிநீக்குபெண்களுக்குப் பெண்தான் எதிரி என்பது சரிதானோ?
//ஐயா சாமி, துரைமாரே, அப்பா, நித்யம் ஒரே ஆனந்தத்தைக் கட்டிக் கிட்டு கஷ்டப் படணுமா என்ன?//
பதிலளிநீக்குஅவன் தானே ர...வை கட்டிக்கொண்டான் ? நமக்கு அந்த கொடுப்பினை இல்லையே !!! அப்பறம் எங்கே நித்யம் ஆனந்தம் !
ரைட்டு ரைட்டு ...
all are good. i njoyd
பதிலளிநீக்கு//குட்டிக் கதை சொல்லி கும்பலைக் கவர்ந்தார்
பதிலளிநீக்குகுட்டி மலை போல குவித்தார் செல்வத்தை
குட்டி அடக்கவோ கூட யாருமில்லை
குட்டி உறவால் குப்பையாய்ப் போனார்//
ம்ம்ம்... சூப்பர் கவிதை ஸ்ரீராம்
சோனி விகடந்தான் சூப்பர்
பதிலளிநீக்கு:)))))))))))))
கலக்குங்க எங்கள் ப்ளாக்
//கடைச் சங்க காலம் என்று சொன்ன பின்பு இனி தமிழ்ச் சங்கம் தோன்ற வாய்ப்பிருக்கிறதா?//
பதிலளிநீக்குஉங்கள் வாழ்நாளில் எத்தனை கடைசி சிகரெட், கடைசி கிளாஸ் விஸ்கி, கடைசி சண்டை பார்த்திருக்கிறீர்கள்? பிறகென்ன, இன்னொரு சங்கம் வந்து கடைச் சங்கத்தை இரண்டாம் இடைச் சங்கமாக்கி விடும்.