கே: விமன் ரிசர்வேஷன் பில்லினால் என்ன நன்மை?
ப: விமன் கொஞ்சம் less reserved ஆக மாறலாம்.
கே: பாராளுமன்றத்தில் அடாவடியாக நடந்து கொள்கிறார்களே அவர்கள் மேல் என் அரசு கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது?
ப: நீங்கள் வேறே. ஆனானப்பட்ட உபஜனாதிபதியையே சட்டையைப் பிடித்து இழுக்கிறார்கள், போலிஸ் அதிகாரியை பளார் என்று ரெண்டு அறை வைத்து விட்டு விடுவார்களே என்ற பயம்தான்.
கே: நான் சட்டத்துக்குப் புறம்பா ஒண்ணும் செய்யலை என்கிற சாமர்த்தியத்தைப் பார்த்தீர்களா?
ப: வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதை பொய்ப்பிக்கிறார்கள். நுணலும் தன வாயால் கெடும் என்று மெய்ப்பிக்கிறார்கள்.
கே: தெலிங்கானா போராட்டத்தில் அநியாயமா வயசுப் பிள்ளைங்க தற்கொலை செய்து கொள்கிறார்களே. அந்த மாதிரி எதுவும் செய்ய வேண்டாம் என்று ஏன் தலைவர்கள் அறிக்கை, வேண்டுகோள் விடுவதில்லை?
ப: தியாகத்துக்கு வீர வணக்கம் செய்து முதல் தேடிக் கொள்வது முடியாமல் போய் விடும் என்பதால் இருக்கலாம். நான் கேட்பது என்னவென்றால் இந்த தலைகளே ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது?
கே: உனக்கு போராட்டம் வேண்டாம். படிக்கதான் உன்னை கல்லூரிக்கு அனுப்பினோம் என்று ஏன் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சொல்வது இல்லை? அல்லது பெற்றோர் சொல்லியும் பிள்ளைகள் கேட்பதில்லையா?
ப: இது நமக்கும் புரியவில்லைதான். பெற்றோர் சொல்லாமலா இருப்பார்கள்? போராட்டத்தில் கெலித்தால் அவர்களில் ஒரு சிலர் அரசியலில் பதவிகள் பெறலாம். அதனால் அந்த சிலர் பலரை ஊக்குவித்து போராடச் செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. நீ தீயை வைத்துக் கொள் நான் வந்து அணைத்துக் காப்பாற்றி விடுகிறேன் என்று சொல்லி வாக்குத் தவறுவதாகவும் ஒரு தகவல். இது உண்மையாக இருக்கக் கூடாது என்றே பிரார்த்திக்கிறோம். Power corrupts என்று சொல்வார்கள். போராட்ட காலத்தில் கிடைக்கும் அற்ப விளம்பரமும் முக்கியத்துவமும் இளைஞர்களை வழி தப்பிப் போக வைக்கின்றன என்றே தோன்றுகிறது.
(இனிமே கேள்வி பதில் எதுவும் - இந்த வாரத்தில் இருக்காது என்று நம்பலாமா? .... இதுக்கு ஏதாவது பதில் எழுதினீங்கன்னா - முட்டியைப் பேத்துடுவேன் - ஜாக்கிரதை!)
பதில் : இல்லீங்க - இதுக்கு பதில் இல்லீங்க - இந்த கேள்வி பதில் பகுதி முழுவதும் அடுத்து வரப்போகின்ற ஒரு சீரியஸ் மேட்டர் - ஜே. கே - சிந்தனைகள் பற்றி அவ்வப்போது எழுதுவதற்கு வாசகர்கள் அபிப்பிராயம் கேட்கப் போகின்றோம் - அதுக்கு முன்னாடி மீதி மேட்டர்களை எல்லாம் அவசரம் அவசரமாக எழுதி முடிச்சுக்கறோம்!
சனிக்கிழமை, எண்ணெய் தேச்சு குளிக்கிற மாதிரியில்ல ஆயிருச்சு இந்த தீக்குளிப்பு.
பதிலளிநீக்கு//(இனிமே கேள்வி பதில் எதுவும் - இந்த வாரத்தில் இருக்காது என்று நம்பலாமா? .... இதுக்கு ஏதாவது பதில் எழுதினீங்கன்னா - முட்டியைப் பேத்துடுவேன் - ஜாக்கிரதை!)//
பதிலளிநீக்குஹா..ஹா..ஹா..
// இந்த தலைகளே ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது? //
பதிலளிநீக்குபதில் சொல்லச்சொன்னா, நீங்களும் கேள்வி கேக்கறீங்க? அதுவும் விவகாரமான கேள்வி!!
செம கலக்கல்
பதிலளிநீக்குஅடேடே ஸ்ரீராம் - அதற்குள் பதிவிட்டுவிட்டீர்களே! இதோ ஒரு உபயோககரமான கேள்வி பதில்:
பதிலளிநீக்குகேள்வி: 'உன் சமையலறையில், நான் உப்பா / சர்க்கரையா?'
பதில்: 'போடாங்க வெண்ணை ...!'
கேள்விகளும் பதில்களும் அருமை. இதை எங்கள் ப்ளாகின் special feature ஆக ஆக்கிவிடுங்கள். --கீதா
பதிலளிநீக்குஅடுத்த சாமியார், ஜக்கியா, ரவிசங்கரா?
பதிலளிநீக்குஜெய்சங்கர் - எங்கே கோடிகளும் கொழுந்தியாள்களும் அதிகம் சேர்கிறதோ - அங்குதான் .....அடுத்து
பதிலளிநீக்கு// jaisankar jaganathan said...
பதிலளிநீக்குஅடுத்த சாமியார், ஜக்கியா, ரவிசங்கரா?//
I am making my first move to become a samiyar to get in to bigger picture !!
//கே: விமன் ரிசர்வேஷன் பில்லினால் என்ன நன்மை?
பதிலளிநீக்குப: விமன் கொஞ்சம் less reserved ஆக மாறலாம். //
Women will also become Billionaire like men in politics !!!
//I am making my first move to become a samiyar to get in to bigger picture !!
பதிலளிநீக்கு/
பாத்து எவனாவது வீடியோ எடுத்துட போறான்
: உனக்கு போராட்டம் வேண்டாம். படிக்கதான் உன்னை கல்லூரிக்கு அனுப்பினோம் என்று ஏன் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சொல்வது இல்லை? அல்லது பெற்றோர் சொல்லியும் பிள்ளைகள் கேட்பதில்லையா?
பதிலளிநீக்குஎன் மனதின் கேள்வியும் இதுதான் ராம்
//பாத்து எவனாவது வீடியோ எடுத்துட போறான்//
பதிலளிநீக்குநித்தியானந்தம் படம் மேல் படம் ரிலீஸ் பண்னறாரு ? இருக்கிற இடம் பார்த்தால் "கும்ப மேளா" மாதிரி தெரியலே ? "பின் லேடன்" மாதிரி பின்னாடி ஒரு வெள்ளை ஸ்க்ரீன் வேறே ?
சகட்டு மேனிக்கு துள்ளி குதித்து எல்லாம் எழுந்து உட்கார்ந்த மனுஷன் - இப்போ ரொம்ப அவசியமா sanskrit சுலோகம் வேறு !
நம்ம எவன் படம் எடுக்கபோறான் !