Wednesday, March 24, 2010

ஸ்ரீராம் ஜெயராம் ...

இன்று ஸ்ரீ ராம நவமி.  நம் கஷ்டங்கள் குறைய இரு முறை 'ராம, ராம' என்று சொன்னாலே போதும் என்று ஹனுமான் சொன்னதாகச் சொல்வார்கள்.  இங்கிருக்கும் ஹனுமார் சிலை எங்கு அமைந்துள்ளது என்பது நம்மில் நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும் - அதனால் நாங்கள் சொல்லவில்லை  தெரிந்தவர்கள் பின்னூட்டமாய் சொல்லுங்களேன்.

ஸ்ரீ ராம நவமி அன்று எங்கள் ஊர் பெருமாள் கோவிலில் பானகம், நீர் மோர், வடை பருப்பு எல்லாம் தருவார்கள்.  இதற்கு ஒரு பின்னணி இருக்கக் கூடும் என்று நினைக்கிறோம்.  கோடையில் உண்டாகும் சில நோய்களைக் கட்டுப் படுத்த இம்மாதிரி உணவுகள் பயன்படும் என்று ஊட்டச் சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். ராம நவமியுடன் நிறுத்தி விடாமல் குழந்தைகளும் பெரியவர்களும், தொடர்ந்து  பானகம் மற்றும் நீர் மோர் அருந்துவது  கோடையின் கொடுமையிலிருந்து தப்ப உதவும்.

(தலைப்பையும் படத்தையும் பார்த்து, ஆசிரியர் குழுவில் ஏதோ உள்குத்து இருக்கு என்று நினைப்பவர்களுக்கு - அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறோம்) 

21 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

/ஆசிரியர் குழுவில் உள்குத்து எதுவும் இல்லை./

எங்க அப்பன் குதிருக்குள் இல்லை! சரிதானே!


ஸ்ரீராம, ஜய ராம ஜய ஜய ராம!

அப்பாதுரை said...

இந்த சிலை ஏதோ ஒரு கோவில்ல தான் இருக்குனு நினைக்கிறேன்.

Anonymous said...

என்ன துரை! கோவிலுக்கு வெளியே தானே இருக்கற மாதிரி இருக்கு?

குரோம்பேட்டைக் குறும்பன் said...

அப்பாதுரை சொல்வதை நான் வழி (மொழி)கிறேன். அதுவும் அனுமார் கோவில் என்று நினைக்கிறேன்!

Vels said...

இருந்தாலும், அப்பாதுரைக்கும், குரோம்பேட்டை குறும்பனுக்கும், அந்த அனானிக்கும் குசும்பு ஓவர்தான்.

அநன்யா மஹாதேவன் said...

ராமராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய சீதா ராம்.
ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள்!

அப்பாதுரை அவர்களே, கலக்கல்!

Madhavan said...

//தலைப்பையும் படத்தையும் பார்த்து, ஆசிரியர் குழுவில் ஏதோ உள்குத்து இருக்கு என்று நினைப்பவர்களுக்கு - அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறோம் //

மருந்த சாப்பிடச்சே எதையோ நெனைக்கக் கூடாதுன்னு டாக்டர் சொன்னாரு.... மறந்துடிச்சே.... ஆங்.. 'குரங்க' நெனைக்கக் கூடாது... ஓகே .. ஓகே.. அடாடா.. நேனைசிட்டேன்ல.. இப்போ சாப்டக்கூடாது..

"ஆகவே 'இப்பதிவாசிரியருக்கு' 'டாக்டர்' பட்டம் (இலவசமாக) வழங்கப் படுகிறது".

வானம்பாடிகள் said...

:)) ராம ராமா

jaisankar jaganathan said...

திருப்பதி போற வழியில் சரியா

k_rangan said...

All Roads lead to Rome

If this is true this is also the way to Tirupathy

தமிழ் உதயம் said...

பக்தின்னு வந்த பிறகு, உள்குத்துன்னு ல்லாம் சொல்லக்கூடாது.

சைவகொத்துப்பரோட்டா said...

சுசீந்திரம் - ஹனுமன் கோவில்தானே!!

meenakshi said...

இந்த சிலையை பெங்களூர்ல பாத்தா மாதிரி ஞாபகம் இருக்கு.

'ராம' இந்த மந்திரத்தில் 'ரா' என்ற எழுத்து 'நாராயணா' என்ற மந்திரத்தையும், 'ம' என்ற எழுது 'நமசிவாய' என்ற மந்திரத்தையும் குறிக்கும். இதில் 'நாராயணா' என்ற மந்திரத்தில் 'ரா' என்ற எழுத்தை நீக்கி விட்டால் 'நா யணா' என்றும்
'நமசிவாய' இதில் 'ம' என்ற எழுத்தை நீக்கி விட்டால் 'ந சிவாய' என்று அர்த்தமாகி விடுவதால் இந்த இரண்டு எழுத்துக்கும் அவ்வளவு சக்தி உண்டு என்றும், இந்த இரண்டையும் சேர்த்து உச்சரிப்பது அவ்வளவு மகிமை வாய்ந்தது என்றும் கேள்வி பட்டிருக்கிறேன். ஹரியும், சிவனும் ஒன்றுதான் என்பதற்கும் இந்த மந்திரம் ஒரு சிறந்த உதாரணம்.

அப்பாதுரை, அனானி, குரோம்பேட்டை .....கலக்கல்ஸ்! :)

ராமலக்ஷ்மி said...

கோரமங்களா தாண்டி மடிவாலா பக்கம் அனுமரை இப்படிப் பார்த்த நினைவு. சரிதானா சொல்லுங்கள்.

ஸ்ரீராம ஜெயம்.

divya said...
This comment has been removed by the author.
thenammailakshmanan said...

ராமனவமிக்கு நல்ல பதிவு ராம ராம
ஜெய் பஜ்ரங் பலி கீ

Anonymous said...

This statue in Malaysia batucaves

Sudha said...

இந்த சிலை மலேசியாவில் உள்ள பத்துமலையில் உள்ளது

Anonymous said...

அவ்வப்போது நீங்க வெளியிடுகிற படங்களை பார்க்கும் பொழுது, வலையாபதி - மலேசியாவில்தான் நிரந்தரமாக இருக்கிறாரோ என்கிற ஐயம் தோன்றுகிறது.

ஜீவி said...

'நம்மில் நிறைய பேர்'-- என்பது உங்களையும் சேர்த்துத்தானே?..
கடைசி வரை அந்த ஆஞ்சநேயர் சிலை எந்த இடத்தில் இருக்கிறது என்பதைச் சொல்லவே இல்லையே?..

Anonymous said...

மலேசியாவில் இருக்கும் இந்த ஹனுமார் சிலையிலிருந்து இறங்கிப் போவது யார் ஸ்ரீராமா?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!