*(ராம நவமி ஸ்பெஷல் அல்ல.)
** (டயட்டில் இருப்போரும், பத்தியம் இருப்போரும், உடல் இளைக்க உறுதிமொழி எடுத்து உறுதியாகப் பின்பற்றுபவர்களும், இதைப் படிக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்)
*** சொல்லிட்டோம், அப்புறம் உங்க இஷ்டம்.
டயட்டீஷியன்கள் கோலோச்சும் காலம் இது. எதை எவ்வளவு, யார், எப்போது, எப்படி சாப்பிடலாம் என்று எங்கு பார்த்தாலும் தோன்றி அறிவுரைகளாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது நல்வாழ்வுக்கு நான்கு வழிகள் என்று ( உணவு, பயிற்சி, உள்ளம், உறவாடல்) பட்டியலிட்டு வாழ்வாங்கு வாழ நமக்கு நல்லுரை நல்குவோர் ஏராளம்.
எவ்வளவு சாப்பிட்டாலும் ஸிஸ்டம் தாங்கிக் கொள்வது ஒரு வரம் போலும். அதில் பாதி வரம் அடியேனும் வாங்கி வந்தவன் என நான் திடமாக நம்புவதால் இதை மிகுந்த அதாரிட்டியோடு சொல்கிறேன். எனக்குப் பிடித்த சமாச்சாரங்கள் என்று பட்டியலிட்டால், பஜ்ஜி, மசால்வடை, வாழைத்தண்டு சலாட், வெள்ளரிப் பிஞ்சு, ஓமப்பொடி என்று அனுமார் வால் போல நீண்டுகொண்டே போகும். இதில் எதுவானாலும் சராசரியைப் போல் நானூறு அல்லது ஐநூறு சதவிகிதம் உட்கொண்டு ஏப்பம் விடாதிருக்க என்னால் முடியும். அன்னத்தை மலை போல் குவித்து சாம்பாரை குளம்போல் கட்டி என்று சொல்லப் படுகிற கடோத்கஜ / குண்டோதர குணாதிசயங்கள் எனக்கு இருக்கிறதா என்பதை என் அருகிலிருந்து கண்காணிக்கும் தணிக்கைச் செல்வங்கள் தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நான் சோறு குழம்பு அவ்வளவு சாப்பிடுவதில்லை என்று எனக்குள்ளே ஒருவன் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
அதிகம் சாப்பிடுவது மனக் கஷ்டங்கள் இருக்கும்போது ஒரு வகையான வெளிப்பாடாக, ரிலாக்ஸேஷன் வழிமுறையாக சொல்லப் படுகிறது. மனக் கஷ்டம் இருக்கும் போது சாப்பிடலாம். பணக் கஷ்டம் இருக்கும்போது வண்டி வண்டியாக ‘ கொட்டிக் கொண்டால் ‘ கட்டுபடியாகாது! குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்று சொல்வது, குன்று போல இருக்கும் உடம்பு இளைக்கும் என்று சொல்வதாக எடுத்துக் கொண்டு வளைந்து கட்டிக் கொண்டு வயிறை நிரப்புகிறோம் நம்மில் பலர். இப்படி கின்னஸ் ரெகார்ட் மாதிரி தின்னஸ் ரெகார்டு ஏற்படுத்தும் சாதனையாளர்கள் பெரும்பாலும் 50, 55 வயதுக்கு மேல்தான் இருப்பர் என்பது என் ஆராய்ச்சி முடிவு! இடையில் யாரோ ஒருவர் பெருத்த இடை கொண்ட தீனிப் பண்டாரமாக இளவயதிலேயே இருக்கலாம். அதெல்லாம் விதி விலக்குகள். அவர்களை விட்டு விலக்குங்கள்.
சின்னக் குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்றால் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்று யாராவது ஒருவர் தட்டில் ஆகாரத்தை எடுத்துக் கொண்டு அவர்களின் பின்னாலேயே ஓடோடி கெஞ்சிக் கூத்தாடி, ஆட்டம் காட்டி, ஊட்டி விட வேண்டியதாக இருக்கிறது. ஆகாரத்தை கலர் கலராக தயார் செய்யுங்கள் அப்போது குழந்தைகள் ஆசை ஆசையாகச் சாப்பிடுவார்கள் என்று ஒரு நிபுணர் சொன்னதை பரிட்சை செய்து பார்த்த போது பலித்ததாகத் தெரியவில்லை. இள வயதிலிருந்தே சப்பென்று உப்பு காரம் புளிப்பு அதிகம் இல்லாமல் கொடுத்துப் பழக்குங்கள் என்று பல நிபுணர்கள் சொல்கிறார்கள். சினிமா போஸ்டர் ஒட்டும் பசையில் அளவாக உப்பு போட்டு, ஒரு மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து தக்காளி, பச்சை மிளகாயால் அலஙகரித்துக் கொடுத்துப் பார்க்க வேண்டியதுதான் போலும். இந்த அலங்கரித்தல் ரொம்ப முக்கியம் என்று மெனு ராஜாக்களும் இளவரசர்களும் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு அதன் தலையில் பனை ஓலையை அழகாக நறுக்கி வைத்து கொடுத்தால் அதற்கு மதிப்பு வேறேதான்!
உணவு நிபுணர்கள் ஒருபக்கம் எண்ணையைக் குறை. ஆலிவ் ஆயில் (இது ஏதோ தையல் மெஷினுக்குப் போடதான் லாயக்கு என்று எனக்குத் தோன்றும்) பயன் படுத்து. ரிஃபைண்டு ஆயில் வேண்டாம். செக்கு எண்ணை நல்லது. கிழங்கைக் குறை ( நல்ல வேளை, கிழங்களைக் குறை என்று சொல்லவில்லை) என்று சொன்னால், இன்னொரு பக்கம் வேறு ஒரு விற்பன்னர் ‘ பொன்னிறமாக வறுத்து எடுங்கள். எண்ணையைக் கொதிக்க விட்டு மேலே ஊற்றுங்கள் ( பண்டத்தின் மேலேதான் சார், சாப்பிடுபவர் மேலே அல்ல), வெண்ணையையும் சர்க்கரையை யும் நன்கு குழைத்து தனியே வைத்துக் கொள்ளுங்கள் (ஒரு சேரக் குழைத்த அப்புறம் தனியே வைப்பதெப்படி?) என்று ருசிகரமாக சொல்லிக் கொண்டே போகிறார். நிபுணர் சொன்னபடி செய்து விருந்தாளிக்குக் கொடுங்கள் (வருவிருந்து போக்கி செல்விருந்தை அனுப்ப இதைவிட நல்ல வழி இருக்குமா என்ன) மசாலா ராணி சொன்னபடிக்குச் செய்து சூடாக சாப்பிடுங்கள் என்பது தான் உபயோகமான டிப் ஆக இருக்கும்.
ஸ்டார்ட்டர் ஆக சூப், ஆக்ஸிலரேட்டராக புலவ், ரோட்டி (ரொட்டி என்று சொன்னால் உங்களுக்கு சொஃபிஸ்டிகேஷன் பத்தாது என்று பொருள், ஸ்டாப்பராக ஐஸ் க்ரீம், பின்பு பாலை வனமாக, அதுதான், டெஸர்ட்டாக, பழங்கள், குலாப் ஜாமூன் என்று வக்கணையாக கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் சாப்பிட வேண்டுமானால் ஐந்து நட்சத்திர தரிசனம் செய்தாக வேண்டும். (த்ரிஷா, அசின், சூர்யா, சிம்பு போல மினுக்கும் நட்சத்திரங்கள் அல்ல - ஜிம், கார் பார்க், ஸ்விம்மிங் பூல், பிலியர்ட் போலொ, பிங் பாங் எல்லா வசதிகளும் கொண்ட நட்சத்திர ஓட்டல்) அவ்வப்போது எழுந்து போய் அளவாக பிளேட்டில் ரொப்பிக் கொண்டு ஸ்டைலாக சாப்பிடுவது ஒரு கலை. என்ன தான் முக்கி முக்கி சாப்பிட்டாலும், ஐநூறு, எழுநூற்றைம்பது என்று விலை வைத்து விற்கும் சாப்பாட்டை காசுக்கு நியாயம் செய்யும் வகையில் சாப்பிட வேண்டும் என்றால் அங்கேதான் நிற்கிறான் இந்த சாப்பாட்டு ராமன். ஒரே ஒரு கஷ்டம். மட்டன் போல சமைக்கப் பட்ட டர்னிப், காலி பிளவர் போல சமைக்கப் பட்ட கோழிக் கறி என்று ஆள் மாறாட்டம் பெரிய ஆபத்து. சாக உணவும் சாக அடித்துச் சமைத்த உணவும் சக ஜீவனம் நடத்துவதால் சகோதர சகோதரியர்க்கு சங்கடம், சரமாரியாக சஞ்சலம் தரும்.
நெறி பிடித்தொழுகி நித்தம் நாவினை அடக்கி
கறி குறைத்து கால் நடந்து காலம் கழித்தென்ன
நரி யனைய முகர்ந்து நாவினில் நீரூற
வெறி பிடித்து வெங்காய பஜ்ஜி மேய்ந்திடில்.
முடிவில் சொன்ன "கவிதை" அற்புதம்.
பதிலளிநீக்கு(ஆமா, அந்த ஹனுமன் சிலை எங்கு உள்ளது என்ற பதிலை தரவில்லையே-முந்தைய இடுகைக்கான கேள்வி இது)
வாங்க சை கொ ப. எங்கள் வலையாபதி எப்பவுமே இப்படித்தான் ஏதாவது ஒரு படம் அனுப்பிவைத்துவிட்டு வெளியிடச் சொல்வார். நாங்க வெளியிட்டபின் விவரம் அனுப்புகிறேன் என்று சொல்லி அப்புறம் எங்கியாவது பறந்துவிடுவார். பார்ப்போம் இதைப் படித்துவிட்டாவது எங்கேயிருந்தாவது விவரம் அனுப்புகிறாரா என்று.
பதிலளிநீக்குஹ்ம்ம் நா கடுமையான டயட் இல் இருக்கேன் .சனிக்கிழமை தோறும் இப்பிடி ரெஸ்டாரன்ட் ரெஸ்டாரன்ட் ஆக சுத்தி இப்போ ஓட்சும் கொள்ளும் தான் பிரதான உணவு .
பதிலளிநீக்குஇப்பிடிலாம் சொல்லலாம்னு பாத்தா முடிலையே .சோறு கண்ட இடம் சுவர்க்கம் தான்
கடைசியில அந்தக் கவிதை:)!
பதிலளிநீக்குஉங்கள் வலையாபதி பதிலுக்கு நானும் காத்திருக்கிறேன்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு|| சாக உணவும் சாக அடித்துச் சமைத்த உணவும் சக ஜீவனம் நடத்துவதால் சகோதர சகோதரியர்க்கு சங்கடம், சரமாரியாக சஞ்சலம் தரும். ||
பதிலளிநீக்குசரியாச் சொன்னீங்க சாரே
கண்கள் இரண்டும் வெளியில் வந்து, ரிப்பன் போல சுருட்டி வைத்திருந்த நாக்கு பட படவென்று வெளியே ரோல் ஆகி, இங்கே ஓடோடி வந்தால்..//இடையில் யாரோ ஒருவர் பெருத்த இடை கொண்ட தீனிப் பண்டாரமாக இளவயதிலேயே இருக்கலாம்// என்னைப்பற்றி இப்படி விஷமத்தனமாக எழுதியமைக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்கிறேன் :P அடிபொளி கேட்டோ?
பதிலளிநீக்குஅருமை சாப்பாட்டு ராமாயணம்
பதிலளிநீக்குஉயிர் வாழ சாப்பிடறவங்க ஒரு ஜாதின்னா, சாப்பிடறதுக்காகவே உயிர் வாழறவங்க இன்னொரு ஜாதி. இதுல நான் எந்த ஜாதின்னு வேற சொல்லணுமா! :) பதிவு பிரமாதம்! அதை விட கவிதை ரொம்ப பிரமாதம்!
பதிலளிநீக்கு//அன்னத்தை மலை போல் குவித்து சாம்பாரை குளம்போல் கட்டி என்று சொல்லப் படுகிற கடோத்கஜ / குண்டோதர குணாதிசயங்கள் எனக்கு இருக்கிறதா என்பதை என் அருகிலிருந்து கண்காணிக்கும் தணிக்கைச் செல்வங்கள் தான் சொல்ல வேண்டும். //
பதிலளிநீக்குஹா ஹா ஹா
பதிவு பிரமாதம் பேஷ் பேஷ் நன்னாயிருக்கு.....
//அதிகம் சாப்பிடுவது மனக் கஷ்டங்கள் இருக்கும்போது ஒரு வகையான வெளிப்பாடாக, ரிலாக்ஸேஷன் வழிமுறையாக சொல்லப் படுகிறது.//
பதிலளிநீக்குஅவ்வ்வ்வ்வ் நான் எப்பவுமே அதிகமாத்தான் சாப்பிடுறேன். எனக்கு மனக்கஷ்டம் இல்லீங்க. இது எதாவது வியாதியோ...? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இவ்வளவு அருமையான படங்களையும் பதிவோட சேர்த்துப்போட்டு ஆசையை கிளப்பி விட்டீரையா... பொறுங்கோ, ஒரு ஐந்து பிளேட் குமுரீட்டு வாரேன்... (பசியை வேற கிளப்பிவிட்டாங்கையா...) :-)))
பதிலளிநீக்குஎன்ன டாக்டர் கொஞ்ச நாள் முன்னே மன நிலைகள் பற்றிய ஒரு பதிவில் சொல்ல முடியாமல் போனவற்றை சொல்ல உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம்.
பதிலளிநீக்குBulomia [spelling?] பற்றிக் கொஞ்சம் குறிப்புக் கொடுங்களேன்.
இப்ப நான் டயட்டிலிருப்பதால் இந்தப் பதிவைப் பத்து நாள் கழித்துப் படிக்கிறேன்!!!.
பதிலளிநீக்கு---கீதா
//நெறி பிடித்தொழுகி நித்தம் நாவினை அடக்கி
பதிலளிநீக்குகறி குறைத்து கால் நடந்து காலம் கழித்தென்ன
நரி யனைய முகர்ந்து நாவினில் நீரூற
வெறி பிடித்து வெங்காய பஜ்ஜி மேய்ந்திடில்.//
முதல் அடி, 'மேய்ந்திடில்' என்றும்
ஈற்றடி 'நெறி பிடித்து' என்றும் வெண்பா யாக்க, யான் முயன்று கொண்டிருக்கையில், கலர் கலரான, வகைவகையான அயிட்டங்களில் கவனம் தப்பிப் போன கொடுமையைச் செப்புவதைத் தவிர்த்து செப்பாமலிருத்தலே நலம்.
unmailiye idhu or Ramayanamthan.
பதிலளிநீக்குenna sollugireergal endre theriyavillai.
மேய்ந்திடில் மெய்யாக மேன்மை கெடும் தீனியின்பால்
பதிலளிநீக்குசாய்ந்திடில் சாக்கு மூட்டையாம் சங்கடங்கள்
காய்ந்திடில் வயிற்றினில் கட்டாயம் அமிலம் வரும்
ஓய்ந்துவிடாதீர் ஒழுகுவீர் நெறி பிடித்து.
இது எப்பிடி இருக்கு?
கண்கள் இரண்டும் வெளியில் வந்து, ரிப்பன் போல சுருட்டி வைத்திருந்த நாக்கு பட படவென்று வெளியே ரோல் ஆகி, இங்கே ஓடோடி வந்தால்..//இடையில் யாரோ ஒருவர் பெருத்த இடை கொண்ட தீனிப் பண்டாரமாக இளவயதிலேயே இருக்கலாம்// என்னைப்பற்றி இப்படி விஷமத்தனமாக எழுதியமைக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்கிறேன் :P அடிபொளி கேட்டோ?
பதிலளிநீக்குஅநன்யா மஹாதேவன், மைனாரிட்டி நலன்களை பாதுகாப்பான் வேண்டி நீங்கள் வெளி நடப்பு செய்ததற்கு நாங்கள் ஜே போடுகிறோம்.
ரகளைதான். சும்மா சொல்லக்கூடாது, வெண்பா, அட்டகாசம்! அற்புதமாக அமைந்து விட்டது!
பதிலளிநீக்குகங்கிராட்ஸ், ரசிகன்!
வெண்பா இலக்கணம் என்று ஒன்று இருப்பதாகச் சொல்வார்கள். அது ஏதும் நான் அறியேன். பூச்சீர், காய்ச்சீர், நேர், நிரை தெரியும். நாள் மலர் காசு பிறப்பு என முடிய வேண்டும் என்று சொல்லப் படுவது தெரியும். யாரேனும் சரியான வெண்பா இலக்கணம் கொடுத்து உதவ முடியுமா?
பதிலளிநீக்குஅதிகம் சாப்பிடுவது மனக் கஷ்டங்கள்......
பதிலளிநீக்குஅருமை சாப்பாட்டு
than you
ROJA
வாழ்க தமிழ்
பதிலளிநீக்கு