சனி, 27 மார்ச், 2010

செய்தியும், சேட்டையும்..

செய்தி: இறுதி துணை பட்ஜெட் தாக்கல்.
சேட்டை: ஐயோ தாக்கல்? காயம் பலமாகப் பட்டுடுச்சா?  


செ: அ.தி.மு.க.,வுடன் பா.ம.க., ரகசிய 'கூட்டு'? 
சே: மற்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு 'அவியல்' கூட்டணி ? 
மக்கள் 'குழம்பு'(கிறார்கள்!)


செ: காலாவதி மருந்து :இதுவரை 10 பேர் கைது.
சே: கொஞ்ச கால அவதி. பின் விலை கொடுத்து அமைதி! 


செ: மெட்ரிக்., ஆங்கில வினாக்கள் எளிமையே.
சே: ஆமாம். விடைகள்தான் கடினம்.


செ: கர்நாடக போலீசார் சேலத்தில் முகாம்.
சே: மாடர்ன் போலீசார் எந்த ஊரில் முகாம்?


செ: கனடா உதவி எதிர்பார்ப்பு : கமல்நாத்.
சே: காணடா - உதவுபவரின் கமல முகம்.

செ: எய்ட்ஸ் நோயை தடுக்கும் வாழைப்பழம்.
சே: எல்லாரையும் தடுக்கிவிடும் வாழைப்பழத்தோல்!

செ: பிரபல ரவுடி சுட்டுக் கொலை.
சே: ரவுடி சுட்டுக் கொலையுண்டது யார்?  

செ: போலீஸ் தேடிய மீனாட்சிசுந்தரம் சரண்.
சே: அப்படியானால் தேடியது சரண் சரிதானா?  

செ: மாமியார் உதைப்பது பற்றி பரபரப்பு தீர்ப்பு. 
சே: மாமியார் நம்மையும் உதைக்கக் கூடும் என்று பரபரப்பு?

செ: திருவாரூரில் போட்டி தேரோட்டம்.
சே: ---- ---  ---- ---- (இ இ வா வா வி: இந்த இடம் வாசகர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது)

செ: பா.ம.க., தமிழ்க்குமரனுக்கு ஓட்டு இல்லை.
சே: ----------------(இ இ வா வா வி: இந்த இடமும் வாசகர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது)  

11 கருத்துகள்:

 1. //திருவாரூரில் போட்டி தேரோட்டம்.//

  திருவாரூரில் போட்டி: தேரோட்டம்.

  ஏதோ நம்மால முடிஞ்சது :))

  பதிலளிநீக்கு
 2. செ: பா.ம.க., தமிழ்க்குமரனுக்கு ஓட்டு இல்லை.

  சே :அப்போ ஓட்டு போடப் போறது யாரு.

  பதிலளிநீக்கு
 3. செ: அ.தி.மு.க.,வுடன் பா.ம.க., ரகசிய 'கூட்டு'?
  சே: மற்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு 'அவியல்' கூட்டணி ?
  மக்கள் 'குழம்பு'(கிறார்கள்!)


  ....ha,ha,ha,ha,ha... good one!

  பதிலளிநீக்கு
 4. செ: திருவாரூரில் போட்டி தேரோட்டம்
  ​​சே: ​​​தென்பாண்டி சீ​மையி​லே தேரோடும் வீதியி​லே... யா​ரை யார் அடிச்சிக்கப் ​போறாங்க​ளோ..!

  செ: பா.ம.க., தமிழ்க்குமரனுக்கு ஓட்டு இல்லை.
  ​சே: ​ஆயிரம் ரூபாய் ​போச்​சே..!

  பதிலளிநீக்கு
 5. //செ: திருவாரூரில் போட்டி தேரோட்டம்
  ​​சே: ​​​தென்பாண்டி சீ​மையி​லே....//

  சோழ ராஜாவுக்கு உங்க மேலே சொல்லமுடியாத கோபம். பின்னே என்ன, அவரது நாட்டின் உள்பகுதியை நீங்கள் பாண்டியருக்குக் கொடுக்க ஆயத்தம் செய்கிறீர்களே?

  பதிலளிநீக்கு
 6. //செ: திருவாரூரில் போட்டி தேரோட்டம்.//

  தேரை அரசியல் பிறுமுகர் வீட்டுக்கா ?

  பதிலளிநீக்கு
 7. //செ: எய்ட்ஸ் நோயை தடுக்கும் வாழைப்பழம்.//

  நல்லோர் சொன்னது:

  An Apple a day keeps the doctor away

  அதைவிட நல்லவன் சாய் சொன்னது:

  Nurse a day keeps - apple away !!


  அப்படித்தான் நம்மாளு நித்யம் ஆனந்தம் பண்ணிக்கொண்டு இருக்கிறார் போலே !

  பதிலளிநீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 9. //செ: பா.ம.க., தமிழ்க்குமரனுக்கு ஓட்டு இல்லை//

  அதுதான் எல்லோருடைய கள்ளவோட்டு இருக்கே ! இதுக்குப்போய் அலட்டிக்கலாமா !

  பதிலளிநீக்கு
 10. //..தமிழ்க்குமரனுக்கு ஓட்டு இல்லை.//

  என்ன நயினா, தமிழ் குமரனுக்கு இப்படி "க்" வச்சுட்டியே!

  பதிலளிநீக்கு
 11. சை கொ ப, தமிழ் உதயம், ஜெகநாதன், பாஸ்கரன், சாய்ராம், அனானி - ஆஹா உங்க எல்லோருடைய கமெண்டுகளும் சூப்பர்!
  நன்றி சித்ரா.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!