செவ்வாய், 27 அக்டோபர், 2020

கேட்டு வாங்கிப்போடும் கதை :  மாய நோட்டு  2/4 - ஜீவி 

மாய நோட்டு  2/4 
ஜீவி 
[ 2 ]


கேஷ் கவுண்ட்டர் வந்ததும்  டக்கென்று பேண்ட் பின் பாக்கெட்டிலிருந்த பர்ஸை எடுத்து  முன்னாடியே ஏற்பாடுடன் பக்குவமாக மடித்து வைத்திருந்த ஐநூறு கொத்தை எடுத்து பில்லுடன் சேர்த்துக்  கொடுத்தேன்.

கவுண்டரில் அமர்ந்திருந்தவருக்கு ஏகப்பட்ட அவசரம்.  இயந்திரம் மாதிரி நோட்டுகளை வாங்குவதும்  பில் பார்த்து மீதிப் பணம் கொடுப்பதும்  பில்லில் சீல் அடித்துக் கொடுப்பதுமாக இருந்தார்.   அந்த அவரசரத்திலும் நான் கொடுத்த நோட்டுகளை   அசால்ட்டாக வாங்கியவர்,  அடுத்த நிமிடமே  "ஐநூறு ஒன்று  அதிகமாகக்  கொடுத்திருக்கிறீர்களே!   இந்தாருங்கள்.." என்று நான் கொடுத்த  நோட்டுகளில் ஒன்றை என்னிடமே தந்து விட்டு,  பில்லில் சீல் அடித்து  இருநூறு ரூபாய் திருப்பிக் கொடுத்தார்.  மூன்று ஐநூறுக்கு  நான்கு ஐநூறு  கொடுத்து  அதில் ஒன்றை திருப்பி வாங்கிக் கொண்ட அசட்டுத்தனத்தை என்னுள்ளேயே விழுங்கிக் கொண்டு சீலடித்த  பில்லைக் காட்டி பையில் இட்ட பார்ஸல்களை வாங்கிக் கொண்டு கடைப் படி இறங்கி ரோடு பக்கம் வந்தேன்.   வெளி ட்யூப் லைட் வெளிச்சத்தில்  கேஷ் கவுண்ட்டரில் கொடுத்த  நோட்டைப்  பார்த்தால்,  என்  மூஞ்சி தொங்கிப் போனது.  அட, ராமா!   அந்த நெருப்பு சுட்ட நோட்டு என்னை விடவே விடாதா என்று எரிச்சலாக வந்தது.



வாழ்க்கையின் பாடங்கள் விநோதமானவை.   எல்லா அழுத்தங்களையும் தாண்டி வருவது தான்  வெற்றிக்கான புடம் போடுதலாம்.    எமர்ஸனோ  நம்ம ஊர்  ஜே.கே.யோ  யார் சொன்னது என்று சட்டென்று   நினைவுக்கு வரவில்லை.  'யாராயிருந்தால் என்ன,  எவர் சொன்னார் என்பது முக்கியமில்லை;  என்ன  சொன்னார் என்பது தான் முக்கியம்'  என்று இன்னொருவர்  சொன்னது நினைவுக்கு வந்தது.

'இந்த சான்ஸ் போனால் என்ன,  இந்த நோட்டை எப்படியாவது தள்ளி விட அடுத்த வழி என்னவென்று மனம்  தீவிர ஆய்வில் சிக்கிக் கொண்டது.

"ஐயா..  பார்க்காதது மாதிரியே  போறீங்களே!  அஞ்சு ரூபா தர்மம் பண்ணி விட்டுத்தான் போங்களேன்..'  என்ற குரல்  வித்தியாசமாகப் பட்டு   டக்கென்று நின்று விட்டேன்.

தரையில் விரித்த துண்டு;  அதன் மேல்  கொஞ்சம் சில்லரைக் காசுகள்.

சட்டென்று பொறி தட்டியது.   'இந்த பிச்சைக்காரன் துண்டில் அந்த நெருப்பு சுட்ட நோட்டைப் போட்டு விடலாமா?'. ..  'ஐய்யயோ.. ஐநூறு ரூபாயா?..  என்னதான் செல்லாத நோட்டு என்றாலும்  ஐநூறு ரூபா தானம் அதிகபட்சம்' என்று புனர் ஆலோசனை தடுத்தது.   எப்பப்பார்த்தாலும் என்னுள் இந்த ஆலோசனை-- புனர் ஆலோசனை யுத்தம் தான்.  சலித்துக் கொள்ளாமல் இரண்டு பக்கமும் காது கொடுப்பேன்.  இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் தங்களுக்குள்  சுணங்கிக் கொள்ளாமல் அடுத்த ஆலோசனை -- புனர் ஆலோசனைக்கு ரெண்டு பக்கமும் தயாராகி விடுவது தான்  எனக்கு ஆச்சரியமாக இருக்கும். 

"என்னய்யா,  யோசிக்கிறீங்க?..  தர்மம் பண்ணலாம்ன்னு தீர்மானிச்சிட்டீங்கள்லே..  அப்புறம் என்ன தயக்கம்?"

அவன் பிச்சைக்காரன் போல எனக்குத் தோன்றவில்லை.  வேண்டுமென்றே  போகிற வருகிறவர்களை....  'ஏதாவது candid camera  டிவி ஷோவாக இருக்குமோ' என்று சுற்று முற்றும் பார்த்தேன்..  அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.

"என்ன பாக்குறீங்க?.." என்றான்.

என்னத்தைச் சொல்வது  என்று தெரியாமல்  விழித்தேன்... இவனோடு என்ன  பேச்சு  கொடுத்துக் கொண்டு?.. டக்கென்று கடந்து விடலாமா என்ற எண்ணம் என்னை ஆட்கொண்டது.

"ஒரு அஞ்சு ரூபா   கொடுக்கறத்துக்கு என்ன  யோசனை பாருங்க.." என்றான் அவன்.   உண்மையிலேயே அவன் அப்படிச் சொன்னது தான் என்னை வழிநடத்தியது போல உள்ளுணர்வில் ஒரு கிளர்ச்சி.

அனிச்சை செயலாய்  என் கை பேண்ட் பாக்கெட்டுக்குப் போய் பர்ஸை  எடுத்தது..  ஐந்து ரூபாய் நோட்டு இல்லை;  பத்தாய்த் தான் இருந்தது.  அதில்  ஒரு நோட்டை எடுக்கும் பொழுது பர்ஸிலிருந்து இன்னொரு நோட்டு நழுவி அவன் தரையில் விரித்திருந்த துணியில் விழுந்தது.

நான் சுதாரிக்கும் முன் துணியில் விழுந்த நோட்டை அவன் பார்த்து விட்டான் போலும்..  "அட ஐநூறு!.." என்ற வியப்புடன் அவன் விழிகள் விரிந்தன...  அந்த நோட்டை குனிந்து எடுத்தான்.  அடுத்த வினாடியே "தர்மம் என்றால் பத்து ரூபாயே அதிகம்..  எனக்கு அது போதும்..  இதை நீங்களே வைச்சிக்கங்க.." என்று தன் கைப்பட்ட ஐந்நூறு ரூபாய் நோட்டை என்னை நோக்கி நீட்டினான்.    மேலோட்டமான பார்வைக்கே நெருப்பு சுட்ட நோட்டு அது என்று எனக்குத் தெரிந்து விட்டது..  என்னை அறியாமல் என்னை விட்டுப் போயும் திருப்பித் திருப்பி என்னிடமே வருகிறதே அது என்று எனக்கு ஆயாசமாக இருந்தது.  இந்தத் தடவை இந்த பிச்சைக்காரன் 'நீங்களே வைச்சுக்கங்க' என்று ஏதோ அவன் எனக்குக் கொடுக்கிற மாதிரி... 'அந்த' ஐநூறை என்னிடமே கொடுத்து விட்டான்.  பர்ஸிலிருந்து எடுத்த பத்து ரூபாயை துணியில் போட நான் எத்தனிக்கும் போது,  பதறுகிற மாதிரி அவன் சொன்னான்.. "வேணாம், வேணாம்..  சாயரட்சைக்கு  முதல் தர்மம்..  நீங்க தான் போணி பண்ணியிருக்கீங்க.. கையிலேயே கொடுத்திடுங்க.." என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.

"முதல் தர்மமா?..  அப்போ துணிலே கிடக்கற காசெல்லாம்?;"

"என்னது தான்.  என் காசு தான்..  என்ன செய்யறது?..  மத்தவங்க போடறதுக்கு நானே போட்டுக்கிட்டு வழிகாட்ட வேண்டியிருக்கு.."  என்றான்.  சரியான ஆளாய் இருப்பான் போலிருக்கே....

எனக்கு அவனைப் பிடித்துப் போய் விட்டது.  அதைத் தெரியப் படுத்தும் விதமாக லேசாகப் புன்னகைத்தேன்..

அவன் சிரித்ததும் அழகாய்த் தான் இருந்தது.  "இதோ பாருங்க..  நீங்க கொடுத்த காசை உங்களுக்கு நேரேயே என்ன செய்கிறேன், பாருங்க.." என்று சொல்லி விட்டு அடுத்த தப்படியில் இருந்த டீக்கடைக்கு விரைந்தான்.

'என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்.. அந்த நெருப்பு சுட்ட நோட்டு தானாக வலிய அவன் துண்டில் விழுந்தும் என்னிடமே திருப்பி வந்து விட்டதே!' என்ற எண்ணமே என் மனசில் வண்டாய் குடைந்து கொண்டிருந்தது.

நான் கொடுத்த பத்து ரூபாய் நோட்டை   டீக்கடைக்காரரிடம்  கொடுத்து விட்டு திரும்பி என்னைப் பார்த்து அவன் கையசைப்பது தெரிந்தது.

நானும்  அனிச்சையாய் அவனைப் பார்த்து கையசைத்து விட்டு நகர்ந்தேன்.  ஒரு  பிச்சைக்காரனும் நானும் கையசைப்புகளைப் பகிர்ந்து கொள்வதை ரோடில் போகிற ஒரு ஆள் நின்று நிதானித்து பார்த்து விட்டு நகர்ந்தான்.  'என்ன ஜென்மங்கள் இதுகள்!' என்று நினைத்திருப்பானோ?..

தெருவின் கோடியில் கோயில் கோபுரம்  மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்த ஷணத்தில் பேசாமல் கோயில் உண்டியலில் 'அந்த'  ஐநூறைப் போட்டு விடலாமா என்று லேசான கீற்று போல சிந்தனை எழுந்ததும்   'என்ன இருந்தாலும் இது செல்லாத நோட்டு; இருக்கிற பாவம் போதாதா,  இதை வேறு உண்டியலில் போட்டு இன்னும் சேர்த்துக் கொள்ள வேண்டுமா?' என்று  மாற்றுச் சிந்தனை  ஒரே போடாகப் போட்டு என்னை அடக்கி விட்டது.  பாண்ட் பாக்கெட்டில் நுழைந்து பர்ஸைத் தொட்ட  கையை வெடுக்கென்று வெளியே இழுத்துக் கொண்டேன்.

சன்னதித் தெருவிலேயே ஜானு கேட்ட வெற்றிலையை வாங்கி கொண்டேன்.  பக்கத்து நாட்டு மருந்து கடையில்  ஜாதிக்காய் பாக்கெட் ஒன்று வாங்கிக் கொண்டேன்.  ஜாதிக்காயை சின்னச் சின்ன துண்டுகளாக்கி அப்பப்போ வாயில் அதக்கி கொண்டிருப்பது  மனசுக்குப் பிடித்த ஒரு பழக்கமாகவே ஆகிப் போய்விட்டது..  வெற்றிலையும்  ஜாதிக்காயும் சில்லறை செலவுகள் ஆகையால் அந்த  நோட்டை வெளியே எடுக்கவே வழியில்லாது போய் விட்டது.

வீடு படியேறி வெளி வாசலில் செருப்பைக் கழட்டி விடும் போதே  ஜானகி வாசலுக்கு வந்து விட்டாள்.  "எங்கேயாவது போனீங்கன்னா,  இன்ன இடத்துக்குப் போறேனுட்டு சொல்லிண்டு போக மாட்டீங்களா?..   போய் எவ்வளவு நேரமாச்சுன்னு நா கவலைலே உக்காந்திருக்கேன்.." என்று
கடுகடுத்தாள்.

தோளில் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னாப் பையைப் பார்த்ததும்  "இந்த வெயிட் வேறையா?.." என்று லேசான புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.  அந்தப் புன்னகையில் ஒரு சந்தோஷம் பளிச்சிட்டது என் கழுகுக் கண்களுக்குத் தப்பவில்லை.   நடு ஹாலிலேயே  பையின் உள்ளே இருந்த பார்ஸல்களைப் பார்த்த சந்தோஷத்தில், "என்னன்னா.. முரளி கடைக்குப் போயிருந்தேளா?" என்று மலர்ந்தாள்.

அந்த நெருப்பு சுட்ட நோட்டு சரித்திரத்தை இவளிடம் சொல்லலாமா என்று தோன்றியது..   'ஏற்கனவே அவள் பார்வையில் இருக்கும் இளிச்சவாயன் அந்தஸ்த்தை இன்னும் கூட்டிக் கொள்வானேன்?'   என்று பேசாமல் இருந்து விட்டேன்.  கடைத்தெருவில் அந்த செல்லா  நோட்டை கை கழுவுகிறேன் பேர்வழி என்று ஒரு ரவுண்ட்  அடித்ததும் மட்டுமல்லால் ஆயிரத்து நானூறு ரூபாய்  செலவானது தான் நெட் ரிசல்ட் என்று உறைத்தது.. 

இத்தனை அயர்ச்சிக்கும் நடுவே  'நோட்டோடு நோட்டாக  பதுக்கி வைத்து  விட்டால்  இதற்கென்று தனியே  பிரயத்தனப்படாமல் என்னை   அறியாமலேயே யாருக்காவது கொடுத்து விடுவேன்' என்ற அசாத்திய நம்பிக்கை இருந்தது தான் விசேஷம்.

பீரோ லாக்கரைத் திறந்து  பிளாஸ்டிக் டப்பாவுக்குள்  மற்ற ஐநூறுகளுக்கு நடுவில்  'அதையும்' செருகி வைத்தேன்.

"காஜூ பிரமாதம்ன்னா...  எப்படித்தான் இவ்வளவு டேஸ்ட்டா செய்யறான்னு தெரிலே.. ?"  என்று ஹால் பக்கமிருந்து ஜானகியின் குரல் கேட்டது.

'எல்லாக் கவலையும்  எனக்குத் தான் போலிருக்கு.   ஜானு மாதிரி எல்லாத்தையும் அனுபவித்து சந்தோஷிக்க எனக்கு ஏன் தெரிவதில்லை?'  என்று  யோசனை ஓடியது.  'ரொம்ப யோசிச்சையானா இதுவே இன்னொரு கவலையாகி உன்னை அரிக்க ஆரம்பித்து விடும்'  என்று புனர் யோசனை ஜாக்கிரதைபடுத்த  'இயல்பாகத் தானே இருக்கிறேன்' என்று என்னை நானே   உற்சாகப்படுத்திக் கொண்டு ஹாலுக்கு  வந்தேன்.

"அது என்ன எப்பப் பாத்தாலும் ஒரு  யோசனை?" என்று ஜானு   கண்ணைச் சாய்த்து  என்னை ஆராய்கிற மாதிரி  பார்த்தாள்.  அவள் பார்வையே ஆயிரம் சேதி சொன்னது.  எனக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமாக  வந்து,  இடது கையால்  ஆதரவாக என் தோளில்  விரல்களைப் பதித்தபடி,    "ஆ  திறங்கோ...." என்று காஜூவை உதட்டில்  உரசினாள்.

வாய் மட்டுமில்லை, உடம்பெல்லாம் இனித்தது.  எந்தக் காலத்திலோ ரசித்த பாடல் அட்சரம் பிசகாமல் மனசில் ஓடியது.   'எல்லாம் இன்ப மயம்.. புவிமேல்..,..'  உடுமலை நாராயண கவி எடுத்துக் கொடுக்க,  எம்எல்வி அற்புதமாய் மனசில் இசைத்தார்.  உடம்பில் விதவித ராகங்களின் மீட்டல் புல்லரிப்பை ஏற்படுத்தியது..

[தொடரும் ]

47 கருத்துகள்:

  1. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். தொடரும் பண்டிகை உற்சாகக் காலங்கள் முன்போல் விறுவிறுப்புடனும் மன மகிழ்ச்சியுடனும் தொடரப் பிரார்த்தனைகள். நன்மையே விளையட்டும். கதை படிச்சுட்டேன். பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை படிச்சுட்டதாக இன்னும் தெரியலியே!!
      :))

      நீக்கு
    2. கதையைக் காலையிலேயே படிச்சுட்டேன். வேண்டுமென்றே தான் கருத்துச் சொல்லவில்லை. பின்னர் வரும் கருத்துக்கள் அதை ஒட்டி இருந்தால் நான் பொறுப்பாகணும் என்பதால் தான் கருத்தே சொல்லவில்லை. பின்னரும் கருத்துச் சொல்லவில்லை. :))))))

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. விட்டகுறை, தொட்டகுறையாக அந்த ஐநூறை பாடாய் படுத்துகிறதே...

    சுவாரஸ்யம் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட!
      விட்டகுறை
      தொட்ட குறை
      ,-- இந்த இரண்டும் பொருந்துகிறதே!!
      ஆனா அது குறையில்லை!!

      நீக்கு
  5. பாடாய்ப்படுத்தும் ஐநூறு. அங்கிருந்து வெளியேறி இன்னும் எங்கெங்கெல்லாம் போகப்போகிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கெல்லாம் போகப் போகிறதோ? - என்பது தான் கிட்டத்தட்ட இந்தக் கதையே, ஐயா.

      நீக்கு
  6. // இந்த மாதிரி காசில் புரள்கிற ஆளிடம் ....to.... ஆயிரமாயிரத்தோடு ஒன்றாக // சேரட்டும் என்கிற நல்லெண்ணம் இப்படி ஆகி விட்டதே...!

    இன்னும் என்னென்ன வித்தைகள் சொல்லிக் கொடுக்கப் போகிறதோ...? காத்திருக்கிறேன்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜமாலுமே வித்தை தான் டி.டி.

      வித்தை எண்: 3. அடுத்த பகுதியில்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. உங்களை பின்னூட்டம் பகுதியில் பார்க்க மிக்க சந்தோஷம். நலமா காமாட்சி அம்மா?

      நீக்கு
    2. ஆம். காமாட்சி அம்மாவின் பின்னூட்டம் வெகுநாளைக்கப்புறம்! தீபாவளி மின்னிலாவுக்கு நீங்கள் ஏதாவது எழுதி அனுப்புங்களேன்..

      நீக்கு
    3. வாங்க, காமாட்சி அம்மா. நலம் தானே!
      நெடு நாள் பார்க்காதிருந்த உங்களை இங்கு வரவழைத்த்தில் இந்தக் கதையின் எழுத்து நடைக்கு பெரும் பங்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.

      இன்னுமா இருக்கு என்று கேட்டிருக்கிறீர்கள். இனிமேல் தானே எல்லாம் இருக்கு என்பதே என் பதில்.

      நீக்கு
    4. அப்படியா. எனக்கு கை பேசியில் எழுத்துக் கூட்டி எழுத வேண்டி உள்ளது. யாவரும் அன்புடன் வரவேற்பு கொடுத்தது மகிழ்ச்சி. நன்றி. அன்புடன்

      நீக்கு
  8. என்னத்தைச் சொல்றது!..
    இப்படியும் அவஸ்தைகள்... இருந்தாலும்
    விடக்கூடாது.. ஒரு கை பார்த்துடணும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஒரு கை பார்த்துடணும்..//

      எழுதி எழுதியே நமக்கு சாதகமாக தீர்வு கண்டுடணும். தம்பி சொல்வது நூற்றுக்கு நூறு சரியே.

      நீக்கு
  9. சுவாரஸ்ய கதையை வாசித்துப் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி. தொடரும் அடுத்த பகுதியை அடுத்த செவ்வாயில் தொடரலாம். தங்கள் ரசனைக்கு மீண்டும் நன்றி, நண்பர்களே!!

    பதிலளிநீக்கு
  10. இந்தக் கதையில் அலை பாயும் ரூபாய் நோட்டுப் பற்றி அதை மாற்றுவது பற்றி என் தம்பியிடம் கேட்டுச் சொல்வதாகச் சொல்லி இருந்தேன் போன வாரம். பின்னர் அதை மறந்துட்டேன். இன்னிக்குத் தான் பதிவைப் பார்த்ததும் நினைவு வந்தது. தம்பியிடம் கேட்டதற்கு வாடிக்கையாளர் வங்கிக்கு அடிக்கடி போய் வங்கி அலுவலர்க்கு நெருங்கிய பரிச்சயம் உள்ளவராக இருந்தால் மாற்றிக் கொடுப்பார் என்று சொல்கிறார். பொதுவாக மாற்றுவது கஷ்டம் என்றாலும் வங்கி அலுவலர் தெரிந்தவராக இருந்தால் மாற்றுவது எளிது என்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தம்பி சொல்லியிருக்கும் பதில் ஏற்கனவே சென்ற பதிவில் உங்களுக்கு பின்னூட்டமாக நான் சொன்னது தான். ஜீவி சொன்னபடியே என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம்.

      நீக்கு
    2. நீங்கள் மாற்றவே முடியாது. யார் கொடுத்தாங்க, எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பிரமாணப்பத்திரம் எழுதிக் கொடுக்கணும் என்றெல்லாம் சொன்ன நினைவு. ஆனால் அப்படி எல்லாம் இல்லைனு தம்பி சொன்னதோடு இல்லாமல் பெரும்பாலும் வங்கி அலுவலர்கள் தெரிந்தவர்களாக இருந்தால் மாற்றுவது எளிது என்றும் சொன்னார். நானும்/பானுமதியும் கூட இதைத் தான் குறிப்பிட்டோம்.

      நீக்கு
    3. சென்ற பகுதி பின்னூட்டத்திற்கு சென்று பாருங்கள். அப்பறம் சொல்லுங்கள்.. எனக்கு இந்த வங்கி விஷயமெல்லாம் அத்துபடி.

      நீக்கு
    4. //இருந்தாலும் திருப்பித் தருவதற்கு சில நடைமுறைகள் உண்டு. சான்றுகளோடு கைப்பட கடிதம் எழுதித் தந்து மாற்றிக் கொள்ளலாம். கடைசி கட்டம் ரிசர்வ் வங்கியை அணுகுதல். எந்த இடத்திலும் தான் நம் காரியங்களை இலகுவாக சாதித்துக் கொள்ள நமக்கென்று யாரைவது பிடித்து வைத்திருக்கிறோமே! அவர்கள் மூலம் சாதித்துக் கொள்ளலாம். //சென்ற பகுதிப் பின்னூட்டத்தில் நீங்கள் சொன்னது. கடிதம் எழுதித் தரவேண்டும், என்றே சொல்லி இருக்கீங்க. கடைசியாகத் தெரிந்தவர்கள் மூலம் குழைந்து, குனிந்து வாங்கலாம் எனும் உங்கள் கருத்து! அப்படி எல்லாம் நேர்ந்ததே இல்லை. பெரும்பாலும் வாடிக்கையாளர் தெரிந்தவர்கள் எனில் அடிக்கடி வங்கிக்கு வருபவர் எனில் பிரச்னை இல்லை என்பதே என் கருத்து. இனி இதைக் குறித்து நான் எதுவும் சொல்லப் போவதில்லை. நன்றி. வணக்கம்.

      நீக்கு
  11. தம்பி ஸ்டேட் வங்கியில் தலைமை அலுவலகத்தில் (பீச் ரோடு) அந்நியச் செலாவணிப் பிரிவில் அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர்.

    பதிலளிநீக்கு
  12. அருமை. அந்த நோட்டோடு இத்துணை பாடுபடுவதற்கு பதில்அதனை டப்பாவிலேயே ஆரம்பத்திலேயே போட்டு இருந்திருக்க வேண்டும்.
    N.Paramasivam

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டப்பாவா,? என்ன டப்பா?

      அபுரி. (நன்றி, ஸ்ரீராம். சுஜாதாவுக்கு நன்றி சொல்வது ஸ்ரீராம் பாடு!!)

      நீக்கு
  13. வல்லிம்மாவை இன்னும் காணோமே?
    கோமதி அரசு அவர்கள் வேறு வரக்காணோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை தேடியதற்கு நன்றி சார். ஒரு வாரகாலமாக வலைத்தளம் வரவில்லை. இன்றுதான் வந்தேன். படித்து விட்டு கருத்துச் சொல்கிறேன்.

      நீக்கு
    2. பொதுத்தளத்தில் நான் எழுதுகிறேன் என்றால் வழக்கமாக இவர்கள் வாசித்து தங்கள் கருத்துக்களைப் பதிவார்கள் என்ற கணிப்பு எனக்குண்டு.

      கால நிலைமை சரியில்லை என்பதினால் அவர்கள் வராத போது மனம் கிலேசமடைகிறது. ஜிஎம்பீ சார் என்னுடன் வாட்ஸாப் தொடர்பில் இருப்பதால் அவரைக் குறிப்பிடவில்லை. நன்றி, கோமதிம்மா.

      நீக்கு
  14. வருடத்தில் இரண்டு நாள் மௌனமாக இருக்க வேண்டும் என் கணவருக்கு செலுத்த வேண்டிய மரியாதை ஜீவி சார்.

    கதை மிக மிக சுவாரஸ்யம் மனைவி ஜானு இனிமை. பணம் படுத்தும் பாடு மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.. அப்படியா? Sorry for disturbed you
      Vallima.
      ஜானு அச்சு அசலான அந்நாளைய பிராமணக் குடும்ப பிரதிநிதி. உன்கள் மனம் கவர்ந்ததில் ஆச்டரியமில்லை.
      வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. மிக மிக உண்மை. இந்த மாதிரி
      இன்னொசென்ஸ் இனி பார்க்க முடியாது. நன்றி ஜீவி சார்.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    ஜீவி சகோதரரின் இன்றைய பகுதி கதையும் நல்ல திசையில் பயணிக்கிறது. கதையின் திருப்பு முனைகள் நன்றாக உள்ளது.

    அந்தப்பணம் அவரிடமிருந்து (கதை நாயகர்) செல்ல நினைக்கும் சமயத்தில் அவரின் நினைப்புக்கு காத்திராமல் அகன்று விடும். அந்த சமயத்தில் அதை அவரே சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். இதுதான் கதை முடிவென நான் நினைக்கிறேன்.

    கதையை ஸ்வாரஸ்யமாக எழுதி, அதில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை விறுவிறுப்பாக எழுந்து நடை போட வைக்கும் ஜீவி சகோதரரின் எழுத்து திறமைக்கு என் பணிவான நன்றிகள். அடுத்த வாரத்திலும், அந்த "மாய நோட்டின்" நடையைக் காண காத்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்தப்பணம் அவரிடமிருந்து (கதை நாயகர்) செல்ல நினைக்கும் சமயத்தில் அவரின் நினைப்புக்கு காத்திராமல் அகன்று விடும். அந்த சமயத்தில் அதை அவரே சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். இதுதான் கதை முடிவென நான் நினைக்கிறேன்.//

      ஹஹ்ஹஹ்ஹா.. நல்ல யூகம் தான்.

      #### இத்தனை அயர்ச்சிக்கும் நடுவே 'நோட்டோடு நோட்டாக பதுக்கி வைத்து விட்டால் இதற்கென்று தனியே பிரயத்தனப்படாமல் என்னை அறியாமலேயே யாருக்காவது கொடுத்து விடுவேன்' என்ற அசாத்திய நம்பிக்கை இருந்தது தான் விசேஷம். ####

      கதைப் போக்கின் இந்த இடம் உங்களின் இந்த எண்ணத்திற்கு வழி வகுத்திருக்கலாம். உங்கள் கூர்மையான வாசிப்பு நேர்த்திக்கு இது ஒரு அடையாளம். ஒரு கதையை வாசிக்கும் போதே அந்தக் கதையின் போக்கு குறித்து மட்டுமே தீர யோசிப்பது. அதன் தொடர்பாக நம் வழியில் அனுமானிப்பது. நம் அனுமானப்படியே கதை முடிந்து விட்டால் ஒரு அலாதியான சந்தோஷம் நம்மை ஆக்கிரமிக்கும். இதெல்லாம் தான் நல்ல வாசிப்பிற்கும் ஒரு எழுத்தாள மனோபாவம் நம்மில் படிந்திருப்பதற்குமான அறிகுறிகள்.

      //கதையை ஸ்வாரஸ்யமாக எழுதி, அதில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை விறுவிறுப்பாக எழுந்து நடை போட வைக்கும்.. //

      வயதான இணைந்த தம்பதிகளின் அன்றாட வாழ்க்கைப் போக்கின் நேர்த்தியை ஆற்றுப் போக்கு போல விவரிக்க எண்ணித் தான் இந்தக் கதையை எழுதினேன்.
      நீங்கள் மிகச் சரியாகக் கணித்திருப்பது போல அந்த ஐநூறு ரூபா தொட்டுக் கொள்வதற்கான ஊறுகாய் போலத் தான். ஆனால் பெரும்பாலும் வாசித்துப் பின்னூட்டமிட்ட பலரின் கவனமும் அந்த ஐநூறு ரூபாயைச் சுற்றியே சிதறி விட்டது. இதைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்த செல்லாத நோட்டை எப்படி செலாவணியாக்குவது என்பது பற்றி பலவித பார்வைகள் பரிமாறப்பட்டது தான் வினோதம். இதில் விளைந்த பரிதாபம் என்னவென்றால்
      நான் அழகாக வடித்தெடுத்த அந்த தம்பதிகளின் உரையாடல் சிறப்பை தவற விட்டதும் அல்லாமல் அது பற்றித் தெரிந்திருந்தகர்கள் கூட ரசித்துக் குறிப்பிடாததும் தான்.

      தொடர்ந்து வாருங்கள். கதையின் அடுத்த நகர்வு உங்களை ஆச்சரியப்படுத்தலாம். கருத்துரைக்கு மிக்க நன்றி, சகோ.

      நீக்கு
  16. //நான் சுதாரிக்கும் முன் துணியில் விழுந்த நோட்டை அவன் பார்த்து விட்டான் போலும்.. "அட ஐநூறு!.." என்ற வியப்புடன் அவன் விழிகள் விரிந்தன... அந்த நோட்டை குனிந்து எடுத்தான். அடுத்த வினாடியே "தர்மம் என்றால் பத்து ரூபாயே அதிகம்.. எனக்கு அது போதும்.. இதை நீங்களே வைச்சிக்கங்க.." //

    பேராசை இல்லாதவர். முதல் போணி என்று துண்டில் விழுந்த 500 ரூபாயை கேட்கவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ். சில நல்லாத்மாக்கள் நமக்கும் பாடம் போதிப்பது போல இப்படித்தான் இருப்பார்கள் போல. நமக்குத் தான் அவர்களைப் பார்த்து பாடம் கற்க நேரமில்லை.

      தங்கள் தொடர்ந்த வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. நோட்டின் பயணம் இனிதாக தொடர்கிறது.வேறு என்ன பணச் செலவு வைக்கப் போகிறதோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியொரு கோணம் இருக்கிறது, பாருங்கள்! நீங்கள் சொன்னவுடன் தான் எனக்குக் கூட இது தெரிந்தது.

      செல்லாத அந்த 500 ரூபாயை செலவழிக்கிறேன் பேர்வழி என்று ஐநூறைத் தாண்டிய எத்தனை செலவுகள், பாருங்கள்!.. வேடிக்கையாயில்லை?..

      தங்கள் மாறுபட்ட கருத்தோட்டத்திற்கு நன்றி, மாதேவி!

      நீக்கு
  18. 'ஐய்யயோ.. ஐநூறு ரூபாயா?.. என்னதான் செல்லாத நோட்டு என்றாலும் ஐநூறு ரூபா தானம் அதிகபட்சம்' என்று புனர் ஆலோசனை தடுத்தது. எப்பப்பார்த்தாலும் என்னுள் இந்த ஆலோசனை-- புனர் ஆலோசனை யுத்தம் ம் தான்/. செய்வது தவறு போல் தெரிந்தாலும் தவறுசெய்வதை மனது தடுக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, GMB சார்.. அப்படித் தடுக்காத போது தான், நம் செய்கைகளில் திருப்தி படுவது நம் மனசு தானோ என்று தோன்றும்.
      அது சரி, நானும் நம் மனசும் வேறே வேறையா என்ன?..

      நீக்கு
  19. ஜீவி சார் என்கதை உங்களூக்காக காத்திருக்கிற்து(ஒரு நினைவூட்டல் )

    பதிலளிநீக்கு
  20. நினைவு இருக்கிறது சார். மனசின் ஒத்துழைப்பு கிடைக்கும் பொழுது டக்கென்று உட்கார்ந்து எழுதி அனுப்பி விடுகிறேன்.
    பொறுத்தருளவும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!