வெள்ளி, 16 அக்டோபர், 2020

துள்ளும் அலையென அலைந்தோம்... நெஞ்சில் கனவினைச் சுமந்தோம்

பானு அக்காவின் நேயர் விருப்பத்தில் 'சிட்டுக்குருவி' படத்தில் இடம்பெற்ற 'என் கண்மணி' பாடல்.  அப்போது வானொலியில் பரபரப்பாக அடிக்கடி ஒலிபரப்பப் பட்ட பாடல்.  இளையராஜா அப்போது பாடல்களில் சில புதுமைகளை புகுத்தி வந்தார்.  அதில் இதுவும் ஒன்று..

ஒரு வருடத்துக்கு முன்பு டாக்டர் ஜெகதீஷ் பத்மநாபன் என்பவர் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள பக்கத்தில் எழுதி இருப்பதை அப்படியே இங்கே காபி பேஸ்ட் செய்கிறேன்...

‘என் கண்மணி’ பாடல் பற்றி இளையராஜா கூறியதாவது:

கவிஞர் வாலி, இரவு நேரம் என்றும் பாராமல் வந்தார். அவரிடம் இதை விளக்கியபோது, டியூனை வாசிக்கச் சொல்லிக் கேட்டார். ‘ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு டியூன்கள் ஒரே நேரத்தில் இசைத்தால் முரணாகத் தோன்றாதா?’ என்று கேட்டார்.

நான் அவரிடம், “அண்ணே! இரண்டு டியூனும் தனியாக பாடப்பட்டால் அதனதன் தனித்தன்மை மாறாமலும், ஒரு டியூனுக்கு இன்னொரு டியூன் பதில் போலவும், அமைய வேண்டும். அந்த பதில் டியூனும் தனியாகப் பாடப்பட்டால் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து பாடினால், ஒட்ட வைத்தது போல இல்லாமல், ஒரே பாடலாக ஒலிக்க வேண்டும்” என்றேன்.

பதிலுக்கு வாலி, “என்னையா நீ? இந்த நட்ட நடு ராத்திரியில ‘சிட்டுக்குருவிக்கு சிண்டப் பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்குறே? முதல்ல ஒரு ‘மாதிரி’ (Sample) பாடலைச் சொல்லு!” என்றார்.

உடனே வேறு ஒரு பாடலைப் பாடி விளக்கினேன். நான் ஒரு டியூனையும், அமர் ஒரு டியூனையும் பாடி அவருக்கு இன்னும் தெளிவாக்கினோம்.

ஆண் : பொன் பெண் : மஞ்சம் ஆண் : தான் பெண் : அருகில் ஆண் : நீ பெண் : வருவாயோ?

- இப்படிப் பாடிக்காட்டினோம். அதாவது ஆண் பாடுவதைத் தனியாகவும், பெண் பாடுவதைத் தனியாகவும், பிரித்துப் படித்தால், தனித்தனி அர்த்தம் வரும்.

அதாவது ‘பொன் தான் நீ’ என்கிறான் ஆண்.

மஞ்சம் அருகில் வருவாயோ?’ என்கிறாள் பெண்.

இரண்டையும் சேர்த்துப் பாடும்போது, ‘பொன் மஞ்சம் தான் அருகில் நீ வருவாயோ?’ என்று பொதுவாக இன்னொரு அர்த்தம் வரும்.

‘சரி’ என்று புரிந்ததாகத் தெரிவித்த வாலி, கொஞ்சம் யோசித்தார். பின்னர் கையில் Pad-ஐ எடுத்தவர் யாருக்கும் காட்டாமல் அவர் எழுதும் பாணியில் மளமளவென்று எழுதினார். பாடல் என் கைக்கு வந்தது. இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும், மொத்தமாய் பாடும்போது பொதுவான அர்த்தமும் வருவது மாதிரியே வாலி

எழுதியிருந்தது எல்லோருக்குமே பிடித்துப் போயிற்று. ‘என் கண்மணி’ பாடலைப் பிரித்துப் படித்துப் பாருங்கள். என் கண்மணி இளமாங்கனி, சிரிக்கின்றதேன்? நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ? உன் காதலி உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதேன்? நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ? என் மன்னவன் எனைப் பார்த்ததும் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ? உன் காதலன் ஓராயிரம் கதை சொல்கிறான் நீ ரசிக்கின்றக் கன்னியில்லையோ? இப்படி அழகாக இரண்டு அர்த்தம் வரும். கவிஞர் வாலி அவர்களுக்கு இந்த விஷயத்தை விளக்கி அவரிடம் வரிகளை வாங்கிய இசைஞானியைப் போலவே, விஷயத்தை உள்வாங்கிக் கொண்டு அற்புதமாக எழுதிய வகையில் கவிஞர் வாலியும் ஒரு ‘கவி ஞானி’ தான்!

 


========================================================================================================


இனி என் விருப்பத்துக்கு வருகிறேன்.  

 பச்சிலைகளையும் கரித்தூளையும் அரைத்து, அதன் மரச்சட்டங்களில் கறை படியாமல்  ஸ்லேட்டில் தடவி காயவைத்து புது சிலேட்டு எஃபெக்ட்டுடன் பள்ளி சென்ற நாட்கள் 

ஸ்லேட்டிலேயே தேர்வுகள் எழுதி மார்க்குகள் வாங்கிய நாட்கள் 

காய்கறி வாங்கும் பையில் சிலேட்டு, புத்தகங்களை நிரப்பி, உள்ளே சிறு டிபன் பாக்ஸையும் சொருகி, தோளில்  பின்பக்கமாகத் தொங்க விட்டுக்கொண்டு பள்ளி சென்ற நாட்கள் 

பள்ளி செல்லும்போதும், திரும்பும்போதும் ஓட்டை டிராயர் கழன்று விடாமல் ஒரு கையால் ஏற்றிக்கொண்டு, அரட்டை அடித்துக்கொண்டு,  செங்காயாக புளியங்காயை பையில் நிரப்பி ஆசிரியருக்குத் தெரியாமல் வகுப்பில் உப்பு சேர்த்து புளிப்பாகக் கடித்த நாட்கள் 

'பீட்டி' பீரியடில் ஃபுட்பால் என்று பந்தைத் துரத்திக் கொண்டு, பந்து செல்லும் திசையெல்லாம் ஓடி,  தப்பித்தவறி பந்து கால் பக்கம் வரும்போது பந்தை உதைக்கிறேன் என்று கல்லை உதைத்து காயம் பட்டு அல்லது பந்து கால்களில் அகப்படாமல் சறுக்கி விழுந்த நாட்கள்..    முழங்காலில், கட்டை விரல் அருகிலும் காயம் சாஸ்வதம்!

பக்கத்து வீட்டு மாமா சைக்கிளில் லிஃப்ட் கிடைத்த நாட்களில், பள்ளி விட்டு வரும்போது,  கூட நடந்து வரும் நண்பர்களின் சாபத்துக்கு நடுவே ("போடி...  போ...  நாளைக்கு எங்களோடுதான் வரணும்டி...") கேரியரில் அடக்கவொடுக்கமாக அமர்ந்து வீடு சென்ற நாட்கள்...

கோர்ட்டர்லி, ஆஃபர்லி, ஃபுல்லாண்டு விடுமுறைகளில் வெயில் வீணாகாமல் முந்திரிக் காடுகளிலும் முச்சந்திகளிலும் அலைந்த நாட்கள்..

ஸ்லேட்டுக் காலம் முடிந்து பேனா காலம் ஆரம்பிக்கும்போது வந்த பெரிய மனுஷ உணர்வு..   சிறிய பேனாவும், பெரிய பேனாவுமாக கொண்டுவந்த நாட்கள்..    சின்னச்சின்ன பேனா நிப் ரிப்பேர்கள்...  சட்டைப் பைகளிலும் டிராயர் பாக்கெட்டுகளில் நீல இங்க் கறைகளுடன் திரிந்து அம்மாவிடம் திட்டு வாங்கிய நாட்கள்..

பள்ளி திறக்கும் நாள் வருவதற்கு கொஞ்ச நாள் முன்பு தபால்காரர் கொண்டுவரும் போஸ்ட் கார்ட் கட்டை பயத்துடன் பார்த்துக்கொண்டு  பின்னாலேயே நடந்த நாட்கள்..

விளையாட ஆசை இருந்தும் நாம் பெரியவன் என்கிற உணர்வு தரும் அடலசண்ட் பருவம்...   கைலி கட்டி ஓரமாக நின்று,  அங்கு விளையாடிக் கொண்டிருக்கும்  சிறிய பையன்களை மிரட்டி,  அவர்களுக்குச் சொல்லித் தருவது போல விளையாட முயன்ற காலங்கள்..  விளையாடவும் முடியாது..  விளையாடாமல் இருக்கவும் மனமிருக்காது...  வளராத மீசையை வருடிக் கொடுத்துக் கொண்டு நண்பர்களுடன் தெருக்களில் நடந்து பூங்காவில் அமர்ந்து அரட்டை அடித்த நாட்கள்..

குமுதம் கல்கண்டு வாங்கி, தொடர்கதையும், தகவல் களஞ்சியமும் படிக்க ஆர்வம் காட்டிய நாட்கள்..  முத்துக் காமிக்ஸ் வாங்க முந்திக் கொண்டு ஓடிய நாட்கள்..

ஐம்பது பைசா முத்து காமிக்ஸை பத்துபேருக்கு ஐந்து பைசா வாடகைக்கு படிக்கக் கொடுத்த நாட்கள்..

தன் வயதொத்த பெண்கள் கொத்தாய் எதிரில் வர,  'நீல ட்ரெஸ் எனக்கு', 'பச்சை தாவணி எனக்கு'...  'எனக்கு ரெட்டைப் பின்னல்' என்று பங்கு பிரித்துக்கொண்டு (!), நெருங்கும்போது தலைகுனிந்து தாண்டிக் சென்ற நாட்கள்...

கல்லூரி கட் அடித்து சினிமா சென்ற நாட்களும், கட் அடித்து வீடு வந்து விட்டு "எல்லா படமும் பார்த்துட்டேன் மச்சி...  போர்" என்று பெருமை பேசிய காலங்கள்..

ஜமாவில் சேராத நன்றாய்ப் படிக்கும் பையனைக் கிண்டல் செய்த நாட்கள் போய் வேலை கிடைக்கும் நேரம் அவனுடன் நட்பு கொள்ள அலைந்த காலங்கள்......

துள்ளித் திரிந்ததொரு காலம்...   பள்ளிப் பயின்றதொரு காலம்...

வாலி பாடல்.  இளையாராஜா இசை.  படம் என்றும் அன்புடன்.  என்றும் SPB..

====================== 


====

61 கருத்துகள்:

  1. அன்பு ஸ்ரீராம், இன்னும் வரப்போகும் அனைவருக்கும் இனிய
    காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. பானுமா வின் விருப்பம் அனேகமாக எல்லோரின் விருப்பமாக
    இருக்க வாய்ப்புகள் அதிகம்.
    தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு''
    மிகவும் பிடிக்கும்.
    வாழ்த்துகளும் நன்றிகளும்.
    ஒரு பாடலுக்கு பின் இத்தனை தகவல்கள்!!!
    எங்கிருந்து எடுக்கிறீர்களோ. மனம் நிறைந்த
    பாராட்டுகள். புதுமை கொண்டு வந்த பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா..    அது எல்லோருக்கும் பிடித்த பாடல்.  தகவல்கள் இதே இணையத்திலிருந்துதான் எடுத்தேன்!

      நீக்கு
  3. விளையாட ஆசை இருந்தும் நாம் பெரியவன் என்கிற உணர்வு தரும் அடலசண்ட் பருவம்... கைலி கட்டி ஓரமாக நின்று, அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் சிறிய பையன்களை மிரட்டி, அவர்களுக்குச் சொல்லித் தருவது போல விளையாட முயன்ற காலங்கள்.. விளையாடவும் முடியாது.. விளையாடாமல் இருக்கவும் மனமிருக்காது... வளராத மீசையை வருடிக் கொடுத்துக் கொண்டு நண்பர்களுடன் தெருக்களில் நடந்து பூங்காவில் அமர்ந்து அரட்டை அடித்த நாட்கள்..////////////////////////////////////////////////////////////////////////////////////////அத்தனையும் கவிதை. சிலேட்டில் ஊமத்த இலை
    கரியை அரைத்து கரும்பலகையில் ஒவ்வொரு சனிக்கிழமையும்
    தடவிய ஞாபகம் வருகிறது.
    வலது டாப் கார்னரில் பூக்கள் பார்டர் வரைந்து
    அன்றைய ப்ரசண்ட், ஆப்சண்ட் எழுதி எழுதி

    நடுவில் வந்தே மாதரம் எழுதியது எல்லாமே
    ஞாபகம் வருதே.
    திங்கள் கிழமை எல்லோருக்கும் எதிரே டீச்சரிடம் பாராட்டு
    வாங்கியது,

    கறுப்புக் கையைப் பார்த்து அம்மாவிடம்
    காட்டாமல் வேகமாக ஓடி தொட்டியிலிருந்து தண்ணீர் எடுத்துக்
    கைகளைக் கழுவிய கலமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வகுப்பறையில் கரும்பலகை தயார் செய்வது தனிப்பணி.  சற்றே பெரிய வேலை.  அதை லீடர் கவனித்துக் கொள்வான்!  ஸ்லேட்டைத் தயார் செய்யும் முறையை என் அம்மாதான் எனக்குச் சொன்னார்!

      நீக்கு
  4. /////தன் வயதொத்த பெண்கள் கொத்தாய் எதிரில் வர, 'நீல ட்ரெஸ் எனக்கு', 'பச்சை தாவணி எனக்கு'... 'எனக்கு ரெட்டைப் பின்னல்' என்று பங்கு பிரித்துக்கொண்டு (!), நெருங்கும்போது தலைகுனிந்து தாண்டிக் சென்ற நாட்கள்...////////யூனிஃபார்ம் இல்லையோ அப்போவெல்லாம்?

    கைத்தறிக் கண்காட்சியில், ''காலமென்னும் ஆற்றினிலே""
    பாட்டுப் பாடிப் பின்னால் வந்த குரல்கள் நினைவில்
    வருகின்றன:))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //யூனிஃபார்ம் இல்லையோ அப்போவெல்லாம்?//

      இது மாலை நேரங்களில் அல்லது விடுமுறை நாட்களில் ...  பூங்காக்களின் அருகில்...  !

      நீக்கு
    2. காலமென்னும் ’ஆற்றினிலே’..-வா? இது என்ன பாட்டு, எப்ப வந்தது? கைத்தறிக்காக பிரத்யேகமாக எழுதப்பட்டதோ!

      நீக்கு
    3. மாற்றி எழுதிவிட்டேன் ஏகாந்தன் ஜி. ''காதலென்னும் ஆற்றினிலே"
      கைராசிப் படப் பாடல்:))))))))

      நீக்கு
  5. காய்கறி வாங்கும் பையில் சிலேட்டு, புத்தகங்களை நிரப்பி, உள்ளே சிறு டிபன் பாக்ஸையும் சொருகி, தோளில் பின்பக்கமாகத் தொங்க விட்டுக்கொண்டு பள்ளி சென்ற நாட்கள் ///////////////////////////////////////////////////////////////////////////////////////
    மழைக்குக் குடையாகத் தலையில்
    அமர்ந்த பை. தோள் பை வாங்கிக்
    கொடுக்கச் சொல்லி அப்பாவைத்
    தாஜா செய்த காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  மழைக்கு குடையாக புத்தகப்பை!  அதுவும் ஒரு அனுபவம்.

      நீக்கு
  6. ஸ்லேட்டுக் காலம் முடிந்து பேனா காலம் ஆரம்பிக்கும்போது வந்த பெரிய மனுஷ உணர்வு.. சிறிய பேனாவும், பெரிய பேனாவுமாக கொண்டுவந்த நாட்கள்.. /////////

    ஆஹா. மறக்க முடியுமா. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய இரு பாடல்களுமே அருமை. முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். இரண்டாவது கேட்டால் நினைவுக்கு வரும். (இன்னும் கேட்கவில்லை)

    முதல் பாடலுக்கு நீங்கள் தந்த செய்திகள் அறிந்து கொண்டேன். இரு ஞானிகளும் பிறவியிலேயே வரம் வாங்கி வந்தவர்கள். நன்றி.

    இரண்டாவது பாடலுக்கு நீங்கள் சேர்த்து கோர்த்து வார்த்தை மணிகளை மிகவும் ரசித்தேன். பால்ய பருவத்திற்கு அழைத்துச் செல்கிறது.

    /ஸ்லேட்டுக் காலம் முடிந்து பேனா காலம் ஆரம்பிக்கும்போது வந்த பெரிய மனுஷ உணர்வு.. சிறிய பேனாவும், பெரிய பேனாவுமாக கொண்டுவந்த நாட்கள்/

    ஆமாம்.. அப்போது மனதில் எழும்பிய உணர்வுகளை மறக்க இயலாது. அப்போது அக்கம்பக்கம் இன்னமும் ஸ்லேட்டுடன் இருக்கும் சிறார்களுக்கு எதிரில் நாம் தனித்துவமாக எண்ணும் ஓர் உணர்வை... அப்படியே கண்ணெதிரே கொண்டு வந்து விட்டீர்கள்.

    உங்கள் வார்த்தை ஜாலங்களை மிகவும் ரசித்தேன். மனம் நிறைந்த பாராட்டுக்கள். பாடலை பிறகு கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேர்த்து கோர்த்த வார்த்தை மணிகளை என படிக்கவும்.

      நீக்கு
    2. ஆமாம் கமலா அக்கா...   கொஞ்சம் அடுத்த கிளாசுக்கு சென்று விட்டாலே முந்தைய வகுப்பில் படிப்பபவர்கள் பக்கா ஜூனியர்ஸ் என்ற நினைப்பு வந்து விடும்!

      நன்றி ரசித்து பாராட்டியதற்கு.

      நீக்கு
  9. நலம் வாழ்க என்றென்றும்..
    அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  10. திருச்சி வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பு செய்யப்பட்டதை விட -

    இலங்கை வானொலியில் அதிகமாக ஒலிபரப்பு செய்யப் பெற்ற பாடல் இது...

    பதிலளிநீக்கு
  11. சைக்கிளில் செல்கும் போது இந்தப் பாடலைக் கேட்டு விட்டால் -

    இறங்கி நின்று கேட்டு விட்டுச் செல்வேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது  அப்படி இப்படி பாடல் கேட்டால்தான் உண்டு.

      நீக்கு
  12. சென்னை பேருந்துகளின் நடத்துனர்களின் கண்ணியம் அப்போதே வெளிப்படுத்தப் பட்டிருக்கும்..

    இப்போது தஞ்சாவூரிலும் பேருந்து நடத்துனர்கள் - ஏறு, எறங்கு,... கிராக்கி - என்றாகி விட்டார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொற்று வியாதி!  எல்லா ஊரிலும் பழகி விட்டார்கள் போல!

      நீக்கு
  13. இந்தப் பாடலை கேட்டபோது
    சென்னையைப் பார்த்திருக்கவில்லை..

    அதற்கு அப்புறம் சென்னைக்கு சென்றபோது
    அந்த இடமா இது!... என்று கண்கள் அலைபாய்ந்தது நினைவுக்கு வருகிறது...

    பதிலளிநீக்கு
  14. என் விருப்பம் என்று எழுதியதெல்லாம்
    என் விருப்பமும் கூட!..

    பதிலளிநீக்கு
  15. என்ன ஒரு வித்தியாசம்...
    விளையாட்டு என்ற பேரில்
    முழங்காலைப் பெயர்த்துக்
    கொண்டதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருமுறை தெருவில் புட்பால் விளையாடும்போது புதருக்குள் சென்ற பந்தை குனிய, உடைந்த பெனிசிலின் ஊசி பாட்டில் முழங்காலில் அப்படியே சொருகிக்கொண்டு காலை நிமிர்த்த முடியாமல் அலறியது நினைவுக்கு வருகிறது!

      நீக்கு
    2. அடடா!...
      முழங்காலில் உடைந்த பாட்டில் குத்திக் கொண்டதென்றால் எத்தனை கஷ்டம்?...

      நீக்கு
    3. அதனால்தான் அலறல்.  அம்மா வந்து உள்ளே சொருகி இருந்த பாட்டில் துண்டை எடுத்தார்கள்!  அப்படியே மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு தையல் போடப்பட்டது!  இப்பொழுதும் வடு உள்ளது!

      நீக்கு
  16. இப்படியும் பாட்டெழுதுகிறார்களா தெரிந்திருக்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை...   பாட்டைக் கேட்டால் எப்படி வந்திருக்கிறது என்று தெரியும்.

      நீக்கு

  17. ஆண் : பொன்
    பெண் : மஞ்சம்
    ஆண் : தான்
    பெண் : அருகில்
    ஆண் : நீ
    பெண் : வருவாயோ?இத்தனை விஷயங்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியாகப் படித்தால் ஒரு அர்த்தம், சேர்த்துப் படித்தால் ஒரு அர்த்தம் என்பது போல..

      நீக்கு
  18. கண்மணி பாடல் கேட்டதுண்டு படம்பார்த்ததில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை பார்க்கவில்லை. 

      நீக்கு
    2. தஞ்சை ஹவுசிங் யூனிட்டில் மாதாந்திர இலவச பட லிஸ்ட்டில் போடப்பட்டதால் பார்த்தேன்!

      நீக்கு
  19. முதல் பாடல் என்றும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று...

    இரண்டாவது - பாடல் வரிகளாலும் கவர்ந்த பாடல்... சமீப பதிவான பாடும் நிலா SPB கேட்பொலியில் சேர்த்து, பிறகு முந்தைய பதிவுகளில் உள்ளதால் நீக்கின பாடல்... இது காரணம் அல்ல... பாடியது SPB / மனோ...? சரியான தகவல் எங்கும் இல்லை என்று, இணையத்தில் கிடைக்கும் இதன் படத்தையே சிறிது நேரம் பார்த்தேன்... ஆனால் இருவருமே பாடல் பாடியவர்கள் என்று, படத்தின் ஆரம்பம் சொல்கிறது...!

    இதனால் வருடம் வாரியாக செய்த SPB கேட்பொலி நுட்பத்தை, வேறொரு பாடலை இணைத்ததால், முழுவதுமாக மாற்ற நேரிட்டது...! தரவேற்றம் உட்பட...!

    யார் பாடினாலும், அந்தளவிற்கு விருப்பமானது இரண்டாவது பாடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது எஸ் பி பாசுப்ரமணியமேதான்.  மனோ பாடிய வெர்ஷன் இருக்கிறதா என்று தெரியாது.  ஆனால் வெளியில் வந்திருப்பது எஸ் பி பி தான்.  நான் வாழவைப்பேன் படத்தில் வரும் என்னோடு பாடுங்கள் பாடல் கூட டி எம் எஸ்ஸை வைத்து பதிவு செய்தார்கள்.  எனினும் எஸ் பி பி வெர்ஷனே வெளியில் வந்ததது.

      நீக்கு
  20. முதல் பாடலைப் பற்றிய தகவல்கள் ஸ்வாரஸ்யம். இந்தப் பாடல் வெளியான பொழுது, ஒருவரே எப்படி இரண்டு பேர்கள் படுவது போல் பாட முடியும்? என்ற சந்தேகம் வந்தது. Physics படித்த தோழி ஒருத்தி, எஸ்.பி.பி.யை வெவ்வேறு ட்ராக்குகளில் பாடச் சொல்லி ரெக்கார்ட் செய்திருப்பார்கள் என்றாள்.  சினிமா  பாடல் பதிவுகளில் ட்ராக் என்று ஒரு விஷய ம் உண்டு என்று அன்று குன்ஸாக புரிந்தது. 
    பாடல்களுக்காக படத்திற்குச் சென்று ஏமாந்த  படங்களுள் இதுவும்  ஒன்று.  ஆனந்த  விகடன்  சினிமா விமரிசனத்தில், இந்தப் படத்தின்  பாடல்களை'ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை' என்று குறிப்பிட்டிருந்தார்கள்.    

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமதி இந்தப் பதிவுக்காகப் போட்ட சில கருத்துகள் இடம் மாறி விட்டன என நினைக்கிறேன்.

      நீக்கு
    2. தொழில் நுட்பங்கள் முன்னேற முன்னேற, டூயட் பாடல்கள் கூட தனித்தனியாக வந்து பாடிவிட்டு செல்லும் அளவு வந்து விட்டது.  குரல் மட்டும் பதிவு செய்து, பின்னர் இசை கோர்த்த சம்பவங்களும் உண்டு என்று படித்த நினைவு.

      நீக்கு
  21. //'நீல ட்ரெஸ் எனக்கு', 'பச்சை தாவணி எனக்கு'...  'எனக்கு ரெட்டைப் பின்னல்' என்று பங்கு பிரித்துக்கொண்டு (!), நெருங்கும்போது தலைகுனிந்து தாண்டிக் சென்ற நாட்கள்...// இது அழியாத கோலங்கள் படத்தில் வரும் டயலாக் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?  இருக்கலாம்.  நினைவில்லை.  ஆனால் அந்த வயதில் எல்லோரும் பேசக் கூடியதுதான் அது!

      நீக்கு
  22. ' என் கண்மணி பிடித்த பாடல் . விபரங்கள் ரசனை.விரிவாக தந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. என் கண்மணி பாடல் எனக்கும் பிடித்த பாடல் - அதன் பின்னே இருந்த ஸ்வாரஸ்ய விளக்கம் தெரிந்து மகிழ்ச்சி. மற்ற பாடல் கேட்ட நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில்  ஒன்று.  அனைவராலும் ரசித்துக் கேட்கப்பட்ட பாடல்களில் ஒன்று.  நன்றி வெங்கட்.

      நீக்கு
  24. எல்லாமே புதுசா இருக்கே! படம், பாடல்கள் எல்லாம்! கேட்டது இல்லை, இப்போ மத்தியானம் ஒரு மணிக்குக் கேட்கவும் முடியாதே! அப்புறமாக் கேட்கணும். எப்போவானும் பாடல் மட்டும் கேட்டிருப்பேன். படம் தெரிஞ்சிருக்காது. அப்படி ஒன்றோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...    இந்த இரண்டு பாடல்களில் ஒன்றைக் கூட கேட்டதில்லை என்பது ஆச்சர்யம்தான்.   அப்புறமா வாங்க..

      நீக்கு
  25. என் கண்மணி..பாடல் இரண்டில் ஒன்று என்ற முறையில் அமைந்ததாகும். Two in one. நான் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  26. என் கண்மணி பாடலின் மேற்தகவல்கள் ஸ்வாரஸ்யம். ஶ்ரீராம் சொல்லியிருப்பது போல அந்தக் காலத்தில்,வானொலியில் அதிகமாக ஒலிபரப்பப்பட்ட பாடல்களுள் இதுவும் ஒன்று. அதுவும் ஞாயிறு என்றால் காலையில் சிலோன் ரேடியோவில் ஒரு முறை, விவிதபாரதியில் ஒருமுறை, திருச்சி ரேடியோவில் ஒரு முறை, சென்னை ரேடியோவில் ஒரு முறை என்று மாற்றி மாற்றி கேட்டிருக்கிறோம். "வீணை பேசும்..", "செல்லப்பிள்ளை சரவணன்.." போன்ற பாடல்களும் அந்த லிஸ்டில் உண்டு. ஒரே பாடலை எத்தனை முறை கேட்பீர்கள்? என்று வீட்டு பெரியவர்கள் அலுத்துக் கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
  27. @கீதா அக்கா:
    செல் போன் மூலம் கருத்து பதிந்ததால் கீழே சென்று விட்டது போலிருக்கிறது. கவனித்து சொன்னதற்கு நன்றி. 

    பதிலளிநீக்கு
  28. இரண்டு பாடல்களுமே அருமை. இன்றைய எழுத்தினை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  29. இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கிறது.
    பிடித்த பாடல்கள்தான். கேட்டு ரசித்தேன்.

    உங்கள் இளமைக் கால மலரும் நினைவுகள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!