வியாழன், 22 அக்டோபர், 2020

மீனுக்கு வேர்க்குமோ?

பயங்கரமான அந்த வில்லனிடம் தோற்றுப் போன ஹீரோ தற்காலிகமாக வெளியிடத்தில் பதுங்கி இருக்கிறான்.

கதாநாயகனுடைய நாட்டை, அந்த அழகிய நகரத்தை அழிக்க தன் முக்கிய கையாளுக்கு ஆணையிடுகிறான் வில்லன்.  

ஆ...  ஆனால் அந்தக் கையாள் வில்லனைக் கொல்ல நினைப்போரோடு சேர்ந்து கொண்டு வில்லனைக் கொல்லும் ஒரு முயற்சியில் துணை நிற்கிறான்.

அதிர்ந்து போனாலும் கடுப்பான வில்லன் தனது நம்பிக்கைக்குரிய வேறொரு பயங்கரவாதியை சம்பவ இடத்துக்கு அனுப்புகிறான்.  இவன் முன்னவனைவிட ரொம்பவே பயங்கரமானவன்.

அந்த பயங்கரவாதியின் கொடுஞ்செயல்கள் உலகம் அறிந்தவை.  அந்த நகர மக்கள் இவனைக் கண்டு நடுங்குகிறார்கள்.  இவனும் விதம் விதமாய் மக்களின் மீதான தன் கொடுமைகளைத் தொடங்குகிறான்

வில்லனுக்கு துரோகியாய் மாறிய முதல் கையாள் இப்போது வந்திருக்கும் பயங்கரவாதியைச் சந்தித்து அவன் மனதை மாற்ற முயல, இவன் அவனை எச்சரித்து அனுப்புகிறான்.  தான் அவ்வளவு சுலபமாக முதலாளிக்கு எதிராக மாறமாட்டேன் என்று வில்லனுக்கு விசுவாசம் காட்டுகிறான்.

மக்களைச் சிறிதும் பெரிதுமான விஷயங்களில் மேலும் கொடுமைப் படுத்துகிறான்.  தகிக்கிறது நகரம்.

நகரின் முக்கிய பகுதிகளில் குண்டுகள் வைக்கப் படுகிறது.  இந் நேரத்தில் தற்செயலாக நிகழ்வதுபோல நகரின் சில முக்கியஸ்தர்களுடன் இந்த பயங்கரவாதிக்கு சந்திப்பு நிகழ்கிறது.  

நகரின் அழகு சுட்டிக்காட்டப்படுகிறது.  அழிப்பது சுலபம், ஆக்குவதே கடினம் என்பது உணர்த்தப் படுகிறது.  அழிப்பதாலா, காப்பதாலா?  எந்தப் பெயர் வரலாற்றில் நிலைக்கும் என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

அங்கே வில்லன் வேறு சில இடங்களில் தோல்வி காண்கிறான்.  அவனின் கொடூர குணம் இந்த பயங்கரவாதிக்கு உரைக்கத் தொடங்குகிறது.  மெல்ல மெல்ல மனம் மாறும் இந்த பயங்கரவாதி மறைந்திருக்கும் ஹீரோவுக்கு படையுடன் வரச்சொல்லி ரகசியத் தகவல் அனுப்புகிறான்.  அவனும் வருகிறான்.

பெரிய வில்லன் குண்டுகளை வெடிக்கச் செய்து நகரைக் காலி செய்ய தொலைபேசிமூலம் இந்தத் தன் கையாளுக்கு உத்தரவிடுகிறான்.

மறுபடி மறுபடி உத்தரவிட்டும் சம்பவம் ஏன் நடக்கவில்லை என்று வில்லனுக்குப் புரியவில்லை.

இங்கு மக்கள் உற்சாகத்துடன் நகருக்குள் வரும் ஹீரோவுடன் அணிவகுக்கிறார்கள்.  பிடிபடும் இந்த பயங்கரக் கையாளை நையப் புடைக்கிறார்கள்.  

அவர்களுக்குத் தெரியவில்லை, தங்கள் நகரம் அழியாமலும், அழகு மாறாமலும் இருப்பதற்கு அந்த 'பயங்கரவாதி'தான் காரணம் என்று...

இப்படி ஒரு கதையை எத்தனைப் படங்களில் பார்த்திருக்க முடியும்?  அந்த பயங்கரவாதி கேரக்டரில் நடிப்பவருக்கு என்ன ஒரு ஸ்கோப்?

நிஜங்கள் நிழலாகும் சமயங்களில் இதுவும் ஒன்று.  இது நிஜமாக நடந்த சம்பவம்.  1944 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் பாரிஸில் நடந்த சம்பவம்.  



ஹீரோ ஜெனரல் டிகால்.  வில்லன் ஹிட்லர்.  மாறிய முதல் கையாள் அவன் தளபதி வான் போயன் பர்க்.  அடுத்து வந்த, நல்லவனாக மாறிய  பயங்கரவாதி வான் கோல்டிஸ்.



இது 1946 இல் படமாகவும் வந்தது.  Is Paris burning? என்கிற பெயரில்.

=========================================================================================

இப்போது பத்திரிகைகளுக்கு இந்த மாதிரி வேலைகளிலிருந்து விடுதலை!  சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்!  அவர்களை பற்றி செய்தி வெளியிட்டால் படிக்கவும் ஆட்கள் இல்லை.  அவர்களும் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.  கொரோனா...!

ஆனால் பொதுவாக பத்திரிகையாளர்கள் பரபரப்பு வேண்டி எப்படித் தலைப்பு கொடுப்பார்கள் என்பதெல்லாம் நமக்கும் தெரியும்!





===================================================================================

படத்தைப் பார்த்து எழுதிய நாலு வரி!  அதிரா தளத்தில் படத்தைப் பார்த்துக் 'கவிதை' எழுதியது போல...




==========================================================================================

அப்போது போட்ட புதிரும் அதற்கு சுடச்சுட வந்த கமெண்ட்டும்! 






=========================================================================================

சென்ற வாரம் பேனாவில் ஏதாவது எழுதி புகைப்பபடமெடுத்து அனுப்பச் சொல்லி இருந்ததற்கு வந்த வரவுகள்...   நன்றி நெல்லை, பானு அக்கா, கேஜிஜி, வல்லிம்மா ஏகாந்தன் ஸார்..


நெல்லைத்தமிழன்...


அடுத்த இரண்டும் பானு அக்கா..






வல்லிம்மா...



ஏகாந்தன் ஸார்..


======================================================================================================

பேஸ்புக்கில் நான் கேட்ட சில சந்தேகங்களும்  பதில்களும்!







147 கருத்துகள்:

  1. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. கவிதை ஒன்றைக் காணவில்ல..
    கார்முகிலே பார்த்தாயா?..
    கைப் பிரதி எழுதுதற்கு
    கரு மையைத் தாராயோ!..

    கார்குழலில் பூ முடித்த
    கருங்குவளைக் கவிதை..
    கண் கொண்டு கண்டிருந்தால்
    பூத்து வரும் கவிதை...

    கண்டால் நீ சொல்லிவிடு..
    கவிதை இதைத் தந்து விடு
    கவி மொழியாள் நடந்து வர
    கார்முகிலே பந்தல் இடு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸூப்பர்.. சில சமயங்களில் வேறு சில விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டி வந்து விடுகிறது!  சீக்கிரமே கவிதா வருவாள்!

      நீக்கு
    2. எப்படியோ...   இன்று உங்கள் கவிதை வந்து விட்டது பாருங்கள்!

      நீக்கு
    3. கௌதமன் சார், கவனியுங்கள். மேலே துரைசாரின் கவிதை தீபமின்னிலாவில் ப்ரகாசிக்கவேண்டும்!

      நீக்கு
    4. அருமையான க்விதை! ஏகாந்தன் சார் சொல்றாப்போல் தீபாவளி மின்னிலாவில் வரட்டும். வாழ்த்துகள்.

      நீக்கு
    5. இந்தக் கவிதையை தீப மின்னிலாவில் பதிவு செய்வதற்கு முன் மொழிந்த அன்பின் ஏகாந்தன் அவர்களுக்கும் வழி மொழிந்த அன்பின் அக்கா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம். ஸ்ரீராம். இன்னும் வருகிறவர்களுக்கும்


    இந்த நாளும் எல்லா நாடளும் நன்மையாகணும்.

    பதிலளிநீக்கு
  4. கையெழுத்துகளில், அன்பு முரளி, ஏகாந்தன் சார், கௌதமன் ஜி,
    பானுமா எல்லோருமே அழகாக எழுதி இருக்கிறார்கள்.

    நானும் ஒழுங்காக எழுதி இருக்கலாம். இன்னோரு தடவை
    நன்றாக எழுதுகிறேன்:)

    காலையில் கனவின் தாக்கத்தில் எழுந்திருப்பது
    எல்லோருக்குமே இருக்குமோ.
    அதே போல ஒரு பாடலும் மனதில் ஓடுவதும்
    எனக்கும் எங்கள் மகளுக்கும் உண்டான பழக்கம்.!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் ஏதோ ஒரு பாட்டு எப்பவும் ஓடிக்கொண்டிருக்கும். அது எங்கே இருந்து உள்ளே வந்தது என்று தெரியாமல் திகைப்பேன். வந்தது போலவே பிறகு மறைந்துவிடும் - வேறொரு பாட்டுக்கு வழி விட்டு!

      நீக்கு
    2. ஏதோ ஒரு பாட்டு. என் காதில் கேட்கும்! பாட்டே இருக்கே மா.

      நீக்கு
    3. என்னுடைய அவஸ்தை எப்படியென்றால் நல்ல தலைவலி சமயத்தில் ஏதாவது பாட்டின் ஒரு வரி பிடித்துக் கொள்ளும்.   கொடுமையான அவஸ்தை!  மறக்க நினைத்தாலும் மறுபடி மறுபடி மனதில் ஓடும்!

      நீக்கு
    4. உண்மைதான் - ஜுரம் / தலைவலி இருக்கின்ற நேரத்தில் சிலசமயம் ஏதேனும் ஒரு பாட்டோ அல்லது விளம்பர பாடலோ - நம் மனதில் திரும்பத் திரும்ப வந்து கொடுமை செய்யும். நான் அதை அனுபவித்திருக்கிறேன். அதை மாற்றுவதற்கு நல்ல வழி, அந்த இடத்தில் இருக்காமல் வேறு எங்காவது சென்று - நம் மனதை divert செய்வதுதான். அந்தப் பாடல் சுழன்று சுழன்று நம்மைத் தாக்குவதால் நம் உடல் நிலைமை மேலும் மோசமாகும். செல்போன் - கணினி இல்லாத காலத்தில் நான் அப்படி கஷ்டப்பட்டதுண்டு. இப்போது diversion route மிகவும் எளிதாகிவிட்டது.

      நீக்கு
    5. ’நல்ல’ தலைவலியின் சமயத்தில்தானே ஸ்ரீராம்!
      பாட்டைக் கேட்கலாமே. அல்லது பக்கத்திலிருப்போர் பொறுத்துக்கொள்வாரெனின் பாடியும் பார்க்கலாம். தலைவலி ஓடிவிடும், அல்லது வேறொரு இடத்துக்கு இடம்பெயர்ந்துவிடும்..!

      நீக்கு
    6. அந்த நேரத்தில் நமக்கே அலலது எனக்கே அந்தப் பொறுமை எல்லாம் இருக்காதே ஏகாந்தன் ஸார்.  கடுப்பாகவும், கொடுமையாகவும் இருக்கும்.  அதுவும் அந்தக் கொரோனா நேரத்தில் வண்டஹ் தலைவலி...   அம்மா....டி!

      நீக்கு
    7. // நேரத்தில் வண்டஹ் தலைவலி./

      *வந்த 

      நீக்கு
  5. கவிதையாகவே பின்னூட்டம் இட்டுவிட்டாரே
    அன்பு துரை.
    அடேங்கப்பா. தமிழ்க் கவி மகள் நடக்கக்
    கார்மேகமா. சிறப்பு.

    பதிலளிநீக்கு
  6. சுறாவுக்கு சுளுக்கா'' ஆஹா. என்ன ஒரு கற்பனை.:)

    பதிலளிநீக்கு
  7. உங்கள் புதிருக்கு விடை என்ன ஸ்ரீராம். தலை சுற்றுகிறது!!!!

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. கொரில்லா சார் என்ன நினைக்கிறாரோ. :)

    பதிலளிநீக்கு
  10. 1946 இல் வந்த படமா. ரொம்பப் பொறுமை ஸ்ரீராம் உங்களுக்கு.!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா !! அப்போ நான் என் முன் ஜன்மத்தில் இருந்தேன்!

      நீக்கு
    2. வல்லிம்மா... நானும் 55ம் வருடங்கள் ரேஞ்சில் வந்த படங்களை ஹாலில் தைரியமாகப் பார்ப்பேன். (ரேட்டிங் அதிகமாக உள்ளவை). தயக்கமில்லாமல், படக் என சீன் வந்துடுமோ என்ற பதட்டம் இல்லாமல் பார்க்கலாம்.

      நீக்கு
    3. படித்த விவரம் பற்றித் தேடும்போது படம் பற்றிய விவரம் தெரிந்தது அம்மா.  நான் படம் பார்க்கவில்லை.

      நீக்கு
    4. படம் 44 ஆம் ஆண்டில் வரலை. 66 ஆம் ஆண்டிலோ என்னமோ வந்த நினைவு. படம் வெளியான தகவல் பற்றி ஸ்ரீராம் சொன்னதில் தப்பு இருக்குனே நினைக்கிறேன். எதுக்கும் விக்கி விக்கிப் பார்க்கிறேன்.

      நீக்கு
    5. ஏனெனில் சம்பவங்கள் 44 இல் நடந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். அதன் பின்னரே இரண்டாம் உலக யுத்தம் முடிஞ்சிருக்கணும். அதன் பின் விளைவுகளில் தானே இந்திய சுதந்திரமே கிடைச்சது! விக்கிலே போய்ப் பார்க்கணும். பின்ன்ன்ன்ன்ன்ன்ன்னர்.

      நீக்கு
    6. // தகவல் பற்றி ஸ்ரீராம் சொன்னதில் தப்பு இருக்குனே நினைக்கிறேன். //

      எனக்கென்ன தெரியும்?  நானே அங்கே விக்கியில் பார்த்துதானே சொன்னேன்!

      நீக்கு
    7. Is Paris Burning? (French: Paris brûle-t-il ?) is a 1966 epic war film about the liberation of Paris in August 1944 by the French Resistance and the Free French Forces during World War II.
      நேத்திக்கு விக்கிக்குப் போக மறந்துட்டேன். இப்போ உங்க பதில் பார்த்துப் போனேன். தப்பாய் எடுத்துக்க மாட்டீங்களே? இப்போ எனக்கு நேரம் சரியில்லை! :))))


      The film was released in France on October 26, 1966 and in the United States on November 10, 1966. It received general positive reviews, and was the fourth most popular movie of the year in France in 1966.[2]

      நீக்கு
  11. நல்ல வரலாற்றுத் தகவல். முகநூல் பதிவுகளின் தொகுப்பும் அருமை. எழுதி அனுப்பிய அனைவரின் கையெழுத்தும் நன்றாக இருக்கிறது..நானெல்லாம் சான்சே இல்ல.. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தேன்மதுரத்தமிழ் கிரேஸ்..//

      வெகு நாட்களுக்குப் பின் வந்திருக்கின்றீர்கள்..

      ந்லம் வாழ்க..

      நீக்கு
    2. வருக தேன்மதுரத்தமிழ்...   நல்வரவு.

      நீக்கு
  12. நெல்லையின் கையெழுத்து மணி.. மணி..! திருமதிகள் பானுமதி, வல்லிசிம்ஹன் ஆகியோரோடு கௌதமன் சாரின் கையெழுத்தும் காணக் கிடைத்ததில் சந்தோஷம்.

    ஏனைய பிரபலங்களான கீதா சாம்பசிவம், கீதா ஆர், கோமதி அரசு,கமலா ஹரிஹரன்,ஏஞ்சல், அதிரா, துரை செல்வராஜு, கில்லர்ஜி, டிடி, ஜீவி சார், ஸ்ரீராம் என இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்களே பேனாவில் இங்க் போட்டுக்கொண்டு, அல்லது பால்-பென்னில் ரீஃபில் மாற்றிக்கொண்டு.. அவர்களது கையெழுத்துச் சித்திரங்களையும் பார்க்கணுமே! ஒருவேளை, ஒவ்வொரு வியாழனிலும் இரண்டு, மூன்றாக வருமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுப்பினால் வெளியிடுவோம் !

      நீக்கு
    2. நன்றி ஏகாந்தன் ஸார்!

      இன்றே அனுப்பி வைக்கிறேன்.

      நீக்கு
    3. ஓ...    கேட்கும் நானும் எழுதி இருக்கலாம் என்று ஏகாந்தன் ஸார் சொன்ன பிறகு தோன்றுகிறது.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      அனைவரின் கையெழுத்தும் நன்றாக படிக்க தெளிவாக உள்ளது. அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். நானும் எழுதி அனுப்ப ஆசையாக இருக்கிறது என நினைத்தேன்.( நினைத்தவுடன் அது நன்றாக இருக்காது என என் மனசாட்சி இடித்தது.) ஏனென்றால் எழுதுகோல் வைத்து எழுதி பல வருடங்கள் ஆகிவிட்டது. இன்று ஏகாந்தன் சகோதரரும் என்னையும், மறுபடி நினைக்க வைத்து விட்டார். இது வியாழனில் மறுபடியும் தொடருமா? அனுப்புகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. ஆஹா.. அனுப்புங்க.. அனுப்புங்க..

      நீக்கு
    6. ஏ அண்ணன் உங்களுக்கு மறதி அதிகம் கர்ர்:)).. என் கை எழுத்துத்தான் இங்கின வெளியிட்டு.. அதற்கு நீங்கள் கை எழுத்துச் சாஸ்திரம் கூடச் சொல்லிக் குளிர வைத்தீங்களே அதை மறந்திட்டீங்களே... அது போகட்டும் நான் செய்து தந்த கீரை வடையாவது நினைவில் இருக்கோ:))?.

      நீக்கு
    7. உங்க கையெழுத்து, சாஸ்திரம் பாத்தது மறக்கலே! இந்த வியாழனுக்கு ஏன் ஸ்பெஷலா வரல - என்பதே கேள்வி !

      நீக்கு
    8. @ஏ அண்ணன்
      ///இந்த வியாழனுக்கு ஏன் ஸ்பெஷலா வரல - என்பதே கேள்வி !///
      ஹையோ இன்று அதிரா வந்ததே ஒரு ஸ்பெசல்தான் ஹா ஹா ஹா.... நேற்றும் இன்றும் விடுமுறையென்பதால் வந்தேன்... பழைய போஸ்ட் எதுவும் தெரியாது... நாட்டில் என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை:)... தெரிஞ்சிருந்தால் ஏதும் எழுதி அனுப்பியிருப்பேன்... இல்லாமலும் இருக்கும்:)...

      நீக்கு
    9. ஆமாம், முன்பு சமையல் பதிவில்(திங்கள்) என் சிறு வயது கையெழுத்துப்பார்த்து சாஸ்திரம் சொன்னார்கள் ஏகாந்தன்.

      நீக்கு
    10. எல்லோர் கையெழுத்தும் நன்றாக இருக்கிறது.

      நீக்கு
  13. Is Paris burning? படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். இப்போது கூடுதல் செய்தி அறிந்தேன். நண்பர்களின் கையெழுத்துகளைப் பார்க்கும்போது மன நிறைவு. கையெழுத்துப் பழக்கம் விட்டுபோகக் கூடாது என்பதற்காக அவ்வப்போது நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் திம்மி 1/8க்கு அளவில் ஒரு பக்கத்தில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல நல்ல வழக்கங்களை கைக்கொண்டிருக்கிறீர்கள் முனைவர் ஸார்.

      நீக்கு
    2. Lorry Colllins/Dominique Lappierre எழுதின புத்தகம். புத்தகம் படிச்சிருக்கேன். பல்லாண்டுகள் முன்னர்.

      நீக்கு
    3. ஜம்புலிங்கம் சார், அவ்வப்போது தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதிவைப்பது -நல்ல வழக்கம் உங்களுடையது.

      நானும் அவ்வப்போது அன்-ரூல்ட் நோட்டுகளில் சிறுகவிதைகள் எழுதிவைப்பதும், சித்திரங்கள் சிலவற்றை மனம்போனபோக்கில் வரைந்து பார்ப்பதும் இன்னமும் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். என்னிடம் பேனாக்களின் கலெக்‌ஷனே (என்னையறியாமலே) சேர்ந்திருக்கின்றன. பணியிலிருக்கையில் பாஸ்ப்போர்ட், டாக்குமெண்ட்களில் பச்சை நிறத்தில் கையெழுத்திடுகையில், ப்ராப்பர் ப்ராண்டின் ஃபைபர் டிப் பேனா வாங்கிவைத்திருப்பேன் - பச்சையிலும் கிளிப்பச்சையா, ஆலிவ் க்ரீனா எனச் சோதித்துப்பார்த்து வாங்குவேன்! -ஆஃபீஸில் க்ரீன், ப்ளாக், ரெட் எனப் பேனாக்கள் அளிக்கப்பட்டாலும். என்னுடைய ஸ்டேஷனரியைத் தனியாக வைத்திருப்பது வழக்கம்.

      இப்போதும்கூட ஒரு இன்லண்ட் லெட்டரோ, என்வலப்போ எழுதி நண்பர்களுக்கு அனுப்ப முடிந்தால் மகிழ்வேன். அதாவது சம்பந்தப்பட்ட நண்பருக்கு கையெழுத்துக் கடிதம் பெற்றுப் படிக்க விருப்பம் இருக்கவேண்டும், அவருக்கும் இதெல்லாம் பிடிக்கவேண்டுமே இந்தக் கீ-போர்டு காலத்திலும்.. இந்த மாதிரி விஷயங்களில் நான் கொஞ்சம் old-fashioned, little crazy !

      நீக்கு
    4. கடிதக் காலங்கள் தனி சுவாரஸ்யம் ஏகாந்தன் ஸார்...   எங்கள் வீட்டில் நிறைய கடித்த ஸ்பெஷலிஸ்ட்கள் இருந்தார்கள்.  என் அப்பா இன்லெண்டின் பக்க பிளாப்புகளிலும், ஏன், முகவரி எழுதும் இடங்களில் கூட எழுதுவார்!

      நீக்கு
    5. என் அப்பா தனக்கு வந்திருக்கும் கடிதங்களை என்னைப் படித்துப்பார்க்கச் சொல்வார். சில விஷயங்களை, சில உறவுகளைப்பற்றிச் சொல்வார். பதிலெழுதுகையில் என்னைக் கூப்பிட்டு இன்லண்ட் எழுதச்சொல்வார். கையெழுத்து சுமாராக, தெளிவாக இருக்கும் என்பதால்! வீட்டில் இன்லண்ட் ஸ்டாக் இருக்கும்!

      நீக்கு
    6. என் அப்பா 'ஒரு' என்று எழுதினால் என் உறவுகள் அனைவரும் அதை 36 என்று படிப்பார்கள்.  கொஞ்சம் புரிந்து கொல்வது கஷ்டம்.  ஆனால் நிறைய எழுதுவார்.  மாமாக்களிடமிருந்தோ வேறு உறவுகளிடமிருந்தோ கடிதங்கள் வந்தால் நாங்கள் நாங்கள் எல்லோரும் பதில் கடிதத்தில் அவரவர் கையெழுத்தில் எழுதுவோம்!  இன்லேண்ட், கார்டுகள் எப்போதும் ஸ்டாக்கில் இருக்கும்!

      ஒருமுறை அவர் ஒரு உறவை இடிச்ச புளி என்று எழுதப்போக களேபரமாகி விட்டது. கொஞ்ச நாட்களுக்கு கடிதங்கள் சூடாய் இருந்தன!

      நீக்கு
  14. உலகமகாயுத்தம்பற்றி, குறிப்பாக இரண்டாவதின் பின்புலத்தில், நிறைய ஹாலிவுட் படங்கள் வந்துள்ளன - The Great Escape, Casablanca, Schindler's List, Stalingrad, The Bridge on the River Kwai, The Dirty Dozen, Black Book ..இப்படி. பெரும்பாலானவை நன்றாக எடுக்கப்பட்ட, இயக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள். கிட்டத்தட்ட எல்லாமே காசை அள்ளிக் குவித்தன என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் தந்ததற்கு நன்றி.

      நீக்கு
    2. நான் படம் வழியாக இந்த சம்பவத்தை அணுகவில்லை ஏகாந்தன் ஸார்...   சம்பவம் வழியாக படம்!  அதைப் பற்றித் தேடியபோது கிடைத்த விவரம்.

      நீக்கு
  15. கையெழுத்து பிரதிகள் அருமையாக இருக்கிறது...

    பழைய படத்தின் விமர்சனம் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  16. வான் கோல்டிஸ் - அறிந்திராத செய்தி. படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். நல்லது நினைத்துச் செய்யும் காரியங்கள், பொதுப்புத்திக்கு நல்லதாகத் தென்படணும் என்ற அவசியமில்லை.

    கட்டிய சாக்குக்குள் மூச்சுத் திணறிய சோவியத் மக்களின் வாழ்க்கையை புதிய பாதைக்குத் திருப்ப முயற்சித்த கோர்பசேவ் நினைவுக்கு வருகிறார். அவருக்கும் மிஞ்சியது கெட்ட பெயர் தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கும் பொறுமையில் படம் இருக்குமா என்று தெரியவில்லை, நெல்லை.

      நீக்கு
  17. எனக்குப் பிடித்தது ஏகாந்தன் சார் கையெழுத்து. அதிராவின் கையெழுத்தும் அழகாக இருக்கும். சிலர் அச்சுக் கோர்த்தது போல எழுதுவார்கள். மற்றவர்களும் தங்கள் கையெழுத்தில் எழுதி அனுப்புவார்கள்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும்வரை தொடரும்.  ஒரேயடியாக வெளியிடாமல் ஒன்றிரண்டாக வெளியிடுகிறேன்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் என்னையும் கேட்டிருந்தார். நான் தான் மறந்துட்டேன். அடுத்த வாரத்துக்குள் நினைவாய் அனுப்பப் பார்க்கிறேன்.

      நீக்கு
    3. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

      நீக்கு
    4. //ஸ்ரீராம் என்னையும் கேட்டிருந்தார். நான் தான் மறந்துட்டேன்.//

      இந்தப் பகுதியே நீங்கள் போட்ட கமெண்ட்டை வைத்து உருவானதுதான் கீதா அக்கா.    எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஒரு வியாழனில் பகிர்ந்தபோது நீங்கள் இன்னமும் பழைய பாணியில்தான் எழுதுகிறீர்கள் என்று சொல்லி இருந்தீர்கள்.  அப்போது உதித்ததுதான் இந்த ஐடியா!  அப்போதே சொல்லி இருந்தேன்.

      நீக்கு
  18. 2013ல் ஶ்ரீராமின் வெட்டிச் சிந்தனைகளுக்குக் கிடைத்த நேரம் இன்று கிடைக்கவில்லையே... மீனுக்கு வேர்க்கிறதோ இல்லையோ... ஆறு மாதங்களுக்குப் பின் நேற்று சென்னையில் இருந்தபோதுதான் வேர்த்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்டிச்சிந்தனை அவ்வப்போது வரும்.  வந்த வேகத்திலேயே மறைந்து விடுகிறது!!!

      நீக்கு
    2. நான் 'மீனுக்கு வேர்குமா...'என்ற பகுதியைச் சொன்னேன். ரொம்ப பிரகாசமா இல்லை.

      அதுசரி... கிசுகிசுக்கு பதிலைக் காணோமே

      நீக்கு
  19. நம் நாட்டு இந்திரா காந்தியும் என் நினைவுக்கு வந்தார்.

    நெல்லை, அந்தக் காலத்து சோவியத் மக்களின் நிலையை அறிய மாக்ஸிம் கார்க்கியின் நூல்களை நீங்கள் வாசிக்க
    வேண்டும், நீங்கள். ஒரு காலத்தில் தேவையான கட்டுப்பாடுகள் பிறிதொரு காலத்தில் தேவையில்லாமல் போகிறது. ஸ்டாலின் காலம் வேறே, கோர்பசேவ் கால நிலை வேறே. சொல்லப்போனால் காலம் தான்
    ஸ்தூலமாக அந்தந்த நேரத்துத் தன் தேவைகளின் நிறைவேற்றத்திற்கான சூழ் நிலைகளையும் உருவாக்குகிறது. தலைவர்களைக் கூட அந்த நிறைவேற்றத்திற்காக காலமே உருவாக்கி உபயோகப்படுத்திக் கொள்கிறது. ஒரு நேரத்துத் தேவைக்காக ஒருவர் என்றால் இன்னொரு நேரத்து தேவைக்காக இன்னொருவர். இப்படியாக.
    தனி மனிதர்களின் குணாம்சங்களைக் கூட அந்தக் காலம் தான் தீர்மானிக்கிறது. திரேதா யுகத்து நியாயங்கள் இப்பொழுது எடுபடாது போவது அதனால் தான். இராம ராஜ்யம் அமைய வேண்டுமானால் இராமராஜத்திற்கான தேவையும் காலச் சூழலும் அமைய வேண்டும்.
    அதர்மம் கட்டுக்குள் அடங்காமல் எல்லை மீறிப் போகும் போது தர்மத்தை நிலை நாட்ட நான் அவதாரம் கொள்வேன் என்ற கிருஷ்ண பரமாத்மாவின் உபதேசமும் இது தான்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை எழுதியிருப்பதற்குக் கீழே இந்த பதில் வந்திருக்க வேண்டும்.  இல்லையா ஜீவி சர்?

      நீக்கு
    2. நெல்லை பார்வையில் என் பெயர் பட்டாலே படித்து விடுவார் என்றாலும் தொடர்ந்த சிந்தனைப் போக்கை அவருக்கேத் தெரிந்த காரணங்களால் வெளிப்படுத்துவதைத் தவிர்த்து விடுவார். அதனால் எங்கெழுதினாலும் ஒன்றே.

      நீக்கு
    3. /காலம் தான் ஸ்தூலமாக அந்தந்த நேரத்துத் தன் தேவைகளின் நிறைவேற்றத்திற்கான சூழ் நிலைகளையும் உருவாக்குகிறது// - இது சரியான அனுமானம்தான்.

      நீக்கு
  20. நெல்லை மாதிரி கோட்டுக்கு நடுவே எழுதும் பழக்கம் எனக்கும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரிகளுக்கு இடையே படிக்கும் பழக்கம்?!!

      நீக்கு
    2. நான் ஹிந்தி, க்ரந்தம், வட்டெழுத்து, சமஸ்கிருதம் படிக்க ஆரம்பித்த பிறகு கோட்டில் எழுதுவதில்லை (என்ன எழுதினோம் என்பதை கோடு கலைத்துவிடுகிறது, தேவநாகரில மேல கோடு போடுவதை சரியாக சரி பார்க்க முடிவதில்லை. என் அண்ணனுக்கு என் அப்பா போல அழகிய கையெழுத்து. 7ம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் நடந்த கையெழுத்துப் போட்டியில் அவனிடம் தோற்றிருக்கிறேன். என் கையெழுத்து சுமார்தான். (ஆனால் ஓவியம் வரையும் பழக்கத்தால் ஒரு ஒழுங்கோடு எழுதுவேன்) அதுவும் மனசு போகும் வேகத்திற்கோ இல்லை வேகவேகமாக நான் ரெசிப்பி எழுதினாலோ, அதைப் படிப்பதற்குள் நான் திணறிவிடுவேன்.

      நீக்கு
  21. முகநூலில் எழுதியவைகளும் அருமை...

    படிக்கும் காலத்தில் எதையும் ஒருமுறை எழுதிப் பார்க்கும் ஞாபகமும் வந்தது (- கிடைக்கும் வெற்று தாள்களில்...)

    ஒரு வரி எழுதிப் பார்த்தேன்... அழகோ அழகு... ஆமாம், ஐயன் ஓலைச் சுவடியே பரவாயில்லை போல...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...

      வாங்க DD...   எழுதி அனுப்புங்களேன்.  முகநூலில் எழுதியபோது அங்கு பத்து லைக்ஸ் கூட வராது!

      நீக்கு
  22. பால் பாயிண்ட் பேனா புதிதாய் வாங்கும் பொழுது நன்றாக எழுதுகிறதா என்று செக் பண்ண ஏதாவது எழுதிப் பார்ப்பதுண்டு. அதற்காகவே கடைகளில் ஒரு பேடில் கிளிப் செருகி பேப்பர் வைத்திருப்பார்கள். அந்த மாதிரி தருணங்களில் பெரும்பாலோர் தன் பெயரைத் தான் எழுதிப் பார்ப்பார்கள் என்று மனோதத்துவ ஆய்வு ஒன்று உண்டு.

    நானோ இந்த மாதிரி சமயங்களில் கண்ணதாசன் என்றோ தமிழ்வாணன் என்றோ தான் எழுதிப் பார்ப்பது வழக்கம். அதை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு, என்னை வினோதமாகப் பார்த்த கடைக்காரர்களும் அந்நாட்களில் உண்டு. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிதாய் ஒரு பேனா வாங்குகிறீர்கள்..  உடனே பக்கத்திலிருந்து ஒரு பேப்பரை உருவி அதில் அந்தப் பேனாவால்...

      என்ன எழுதுவீர்கள்?  

      என்று சில மாதங்களுக்கு முன்னால் வியாழன் பகிர்வொன்றிலேயே கேட்டிருந்தேன்!  

      நான் எப்போதும் ஓம் என்று எழுதுவேன்.

      நீக்கு
    2. உலகம் (சிவமயம்) என்பதன் குறியீடாகிய ' உ' என்பதனை எழுதுவேன்...

      நீக்கு
    3. பிள்ளையார் சுழி போடுவேன்.

      நீக்கு
    4. சில மாதங்களுக்கு முன் இப்படி ஒரு கேள்வி வந்ததா! கவனிக்கலியே..

      நீக்கு
    5. முடிந்தால் தேடி லிங்க் தருகிறேன் ஏகாந்தன்ஸ் ஸார்.

      நீக்கு
  23. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல் 504

    கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
    ஒன்றுநன்று உள்ளக் கெடும் 109

    செய்ந்நன்றியறிதல் | அதன்பின்
    தெரிந்து தெளிதல் |

    பதிலளிநீக்கு
  24. நல்லதொரு விமரிசனம். புத்தகம் அளவுக்குப் படம் இருக்குமானு தெரியலை. இதே எழுத்தாளர்கள் எழுதினது தான் Freedom at Midnight புத்தகமும். வெளிவந்த சில மாதங்களிலேயே அபூர்வமாய்ப் படிக்கக் கிடைத்தது. படிக்கும்போது மனதில் தோன்றிய ஆத்திரம், கோபம், எரிச்சல், காந்தியின் மேல் ஏற்கெனவே குறைந்திருந்த மரியாதை முழுவதும் போனது அப்போத் தான்! அதன் பின்னர் மும்பைக் கடற்படை பற்றிய விபரங்கள் தெரிந்ததும் இன்னமும் கோபம் பொங்கியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் சுடச்சுட கிடைத்து படித்திருக்கிறீர்கள்.   பரவாயில்லையே...  

      நீக்கு
  25. எல்லோருடைய கையெழுத்துமே நன்றாக இருக்கின்றன. நெல்லை இரு கோடுகளுக்கு நடுவில் எழுதி இருக்கார். நான் இப்போல்லாம் அவ்வப்போது மளிகைசாமான் பட்டியல் தயாரிப்புக்கு எழுதுவதோடு சரி! ஸ்ரீராமுக்காக எழுதிப் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு போல, உங்களின் மளிகைசாமான் பட்டியல் வெளிவரட்டுமே இங்கு !

      நீக்கு
    2. எழுதி அனுப்புங்க அக்கா...    வியாழன்கள் களை கட்டட்டும்.

      நீக்கு
    3. //உங்களின் மளிகைசாமான் பட்டியல் வெளிவரட்டுமே இங்கு !// - வெறும் மளிகைச்சாமான்கள் லிஸ்டில் நமக்கு எதுவும் கிடைக்காது. அனுப்பின மளிகைச் சாமான்கள் லிஸ்ட், அப்புறம் அதை வைத்து மாமா வாங்கிவந்த பொருட்களின் லிஸ்ட் இந்த இரண்டும் ஒரு சிறுகதைக்கான கருவைக் கொடுக்குமோ? ஒரு உதாரணத்துக்கு...காய்கறி போன்ற லிஸ்ட்

      கொடுத்த லிஸ்ட் வாங்கிய லிஸ்ட்
      பறங்கிக்காய் இளம் பிஞ்சு 1/2 கிலோ பூசனிக்காய் 1 1/2 கிலோ
      புடலங்காய் 250 கிராம் கத்தரிக்காய் 2 கிலோ

      இப்படி இருக்குமோ?

      நீக்கு
    4. இங்கே பறங்கி, பூஷணிப் பிஞ்சு, கொட்டை எல்லாம் அப்படியே விலை. எடை போடுவதில்லை. கீற்றுப் போட்டால் நாம் கேட்கும் பணத்துக்கு ஏற்றபடி கீற்றுப் போடுவார்கள் பத்து ரூபாய்க்குக் கீற்றுக் கேட்டால் அதற்கேற்ப வெட்டிக் கொடுப்பார்கள். பறங்கி , பூஷணி எல்லாம் இவ்வளவு வாங்கி நான் என்ன பண்ணுவது? ஒரு சின்னப் பறங்கிக் கொட்டையே நாலைந்து நாட்கள் வந்துடும். துவையல், அடைக்குப் போடுவது, சாம்பார், ஓலன் என்று பண்ணித் தீர்க்கணும். பூஷணி ஒன்றரைக் கிலோ! கல்யாணமா என்ன? 2 கிலோ கத்திரிக்காய் சமாராதனைக்கா?

      நீக்கு
  26. எப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள் சிந்தனை சிற்பியோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...   ஹா...  ஹா......    அப்பப்போ தோன்றுவதுதான் ஜி எம் பி ஸார்...

      நீக்கு
  27. ஆஆஆஆஆஆஆஆஆ இண்டைக்கு நான் தான் 100 ஆவது நொட் கெள அண்ணன்...
    ஹிட்லர் கதை நன்று... ஹிட்லர் நின்ற இடத்தில நானும் போய் நின்று படமெடுத்தேனாக்கும்..

    என் குரு பிரணாயாமம் பண்ணுகிறாராக்கும்:) அவரைப்போய் டிசுரேப்புப் பண்ணாதீங்கோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நானும் போய் நின்று படமெடுத்தேனாக்கும்..// - பாம்புன்னா படமெடுக்கும்?

      நீங்களாவது ஹிட்லர் நின்ற இடம். நான் இராஜராஜ சோழன் நின்ற இடங்களில் எல்லாம் pictures எடுத்திருக்கேன். ஏன்... கிருஷ்ணர், பீஷ்மர், அர்ச்சுனன் போன்றவர்கள் நின்ற இடங்களிலும். ஹாஹா

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நீங்க குடுத்து வச்சனீங்க நெ தமிழன்:)... நான் அங்கு கண்ணதாசன் அங்கிள் வீட்டு திண்ணையிலாவது இருந்து ஒரு படம் எடுக்கோணும்..

      நீக்கு
  28. ஹையோ ஆண்டவா... ஏதாவது எழுதுங்கோ எண்டால், அப்பகூட நெ தமிழனுக்குச் சாப்பாடு பற்றிய நினைவுதான் ஹா ஹா ஹா ருசி பற்றி எழுதுகிறார் ஹையோ ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).. ஆனா ஏன் கோட்டிலயே எழுத மாட்டாராமே:)) கோட்டுக்கு நடுவிலதான் எழுதுவேன் என அடம்புய்க்கிறார் ஆனா வாழ்க்கையில மட்டும் கோடு போட்டு அதன்படி வாழ்பவராக இருக்கிறார்:)).. கை எழுத்து அச்சடித்ததுபோல அழகாக அனைத்தும் ஒரே சீராக இருக்கிறது:)..

    பானு அக்கா தொடுத்து எழுதுறா தமிழை...

    அனைத்திலும் படுமோசமானது தி கிரேட் கிங்.. தலைமை ஆசிரியர் கெள அண்ணனின் கை எழுத்து ஹா ஹா ஹா.. நீங்க உண்மையில் ஒரு டொக்டராகியிருக்க வேண்டியவர் கெள அண்ணன்:))..

    வல்லிம்மாவின் கை எழுத்து அழகாக ஆனா மிக குட்டியாக இருக்கு.. எங்கள் சின்னவரின் கை எழுத்தும் இப்படித்தான் மிகக் குட்டி..

    ஏ அண்ணனுக்கு மங்கையர் நடமாட்டம் கூடி விட்டதுபோலும்:).. ஹா ஹா ஹா கை எழுத்து சீராக சரிவாக இருக்கு...

    ஸ்ரீராமுக்கு வரும் சந்தேகங்கள் வாழ்க்கையில ஆருக்கும் வந்திருக்காது:), இனியும் வராது:))...

    தண்ணீரில் மீன் அழுதால்
    கண்ணீரை ஆரறிவார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்ரீராமுக்கு வரும் சந்தேகங்கள் வாழ்க்கையில ஆருக்கும் வந்திருக்காது:), இனியும் வராது:))...//

      ஆமாம் அதிரா...   வறண்டு விட்டது!


      கையெழுத்து பாணியை அலசி இருக்கிறீர்கள்.  ஜோசியம்?

      நீக்கு
  29. // அனைத்திலும் படுமோசமானது தி கிரேட் கிங்.. தலைமை ஆசிரியர் கெள அண்ணனின் கை எழுத்து) ::::(((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு காரணம் பேப்பரில் எழுதுவதை பல வருடங்களாக விட்டிருப்பீர்கள். நான் கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து பேப்பரில் எழுதியபோது கஷ்டப்பட்டிருக்கேன் (அப்போலாம் கையெழுத்து போடவும், ஓரிரு வார்த்தைகளில் குறிப்புகள் மட்டும்தான் எழுதுவேன்)

      நீக்கு
    2. நானும் பேப்பரில் எழுதி கனகாலமாச்சு!

      நீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பம் அருமை. நாற்பத்து ஆறில் படமாக வந்த கதை நன்றாக உள்ளது. அப்போதே வில்லன்கள் திருந்தியதாக வந்த சம்பவங்களை பார்க்கும் போது நல்லவர்கள் எங்கும் என்றும் உள்ளார்கள் எனத் தெரிகிறது.

    கவிதை அருமை. "நாமும்,இந்த மனிதர்கள் மாதிரிதானே தெளிவாக யோசிக்கிறோம். எதற்காக நம் கருத்துக்களை மட்டும் சரியென இவர்களுக்கு ஏற்றுக் கொள்ளத் தெரியவில்லை" என நம் மூதாதையர் யோசிக்கிறாரோ என்னவோ..! ஹா.ஹா.

    "மீன்களுக்கு வேர்க்குமா" என்ற ரீதியில் எழுதிய அனைத்தும், அதற்கு வந்த பதில்களும் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

    கையெழுத்து பிரதியில் அவரவர்கள் எழுதிய கருத்துக்கள் நன்றாக உள்ளன.

    புதிர்தான் புரியாத புதிராக உள்ளது. இதையும் நீங்கள் சற்று என் ம. ம. க்காக தெளிவுபடுத்தியிருக்கலாம். அனைத்தும் நன்றாக உள்ளன பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே வல்லிசிம்ஹன் அவர்களுக்கு விடையை சொல்லியிருக்கிறார் ஸ்ரீராம்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      விடை தெரிந்து கொண்டேன். நன்றி

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  31. தண்ணீரில் மீன் அழுதால்
    கண்ணீரை ஆரறிவார்...

    - கவிதாயினி அல்லிராணீ அதிராவா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது டி.ராஜேந்தர் எழுதிய பாடல். அமலா நடித்தது. தண்ணீரிலே மீன் அழுதால், கண்ணீரைத்தான் யார் அறிவார், தனிமையிலே நீ அழுதால், உன் மனதை யார் அறிவார்..மனமே மனமே' என்று வரும். மைதிலி என்னைக் காதலி என்ற படம். நான் எம்.எஸ்.ஸி படித்தபோது வெளிவந்த படம். இந்தப் படத்திற்கான நடிகையாக அமலாவைத் தேர்ந்தெடுத்து அவர் சம்மதித்து ரெடியாக 3 வருடங்கள் காத்திருந்தாராம், அப்போதைய திறமையாளரான டி.ராஜேந்தர்

      நீக்கு
    2. சே சே சே பாருங்கோ ஏ அண்ணன்.... அதிராவைப் புகழ்ந்திட்டீங்கள் எண்டு:)... என்னா ஸ்பீட்டா ... அதுவும் விபரங்களோடு ஓடி வந்திருக்கிறார் நெ டமிலன்:)... நான் ஜொன்னனே எனக்கு எடிரி வீட்டுக்குள்ளயேதேன்ன்ன்ன்:)..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!