வியாழன், 29 அக்டோபர், 2020

ஒத்தையா இரட்டையா?  இதுவா அதுவா?

"அதிகம்"

இன்னும் கொஞ்சம் சாதம்? என்றோ, இன்னொரு தோசை? என்றோ கேட்டால் வரும் வேகமான பதில் இதுதான்!  நானெல்லாம் 'போதும்' என்றோ, 'வேண்டாம்' என்றோதான் சொல்வேன்! 

இரண்டு தோசை சாப்பிட்டதும் வயிறு நிறைந்து விட்டதாம்.

"இன்னொரு தோசை"

"வேணாம்...  அதிகம்!"

"அரை தோசை...?"

"சரி சின்னதா ஒண்ணு போடு"

எப்பவும் வார்க்கும் அதே ஒரு கரண்டியில் தோசையின் சைஸ் சின்னதாக்கப்பட்டு வார்த்து போடப்பட்டது.

"போதும்...  சரியான அளவு... நான் எப்பவுமே அளவாதான் சாப்பிடுவேன்"

இது இப்போதல்ல, அவ்வப்போது நான் வீட்டில் காணும் காட்சி.  தோசை என்றில்லை...  சப்பாத்தியும்.

மூன்று சப்பாத்தி சாப்பிட்டதும் சின்னதாய் ஒரு சப்பாத்தி!  அதாவது அதே அளவு உருண்டை.  அப்பளம் மட்டும் சின்னதாய்.  

வீட்டில் எப்போதும் மாவு உருண்டைகள் ஒரே அளவினதாய்த்தான் இருக்கும்!

ஒரு முறை நான் கொஞ்சம் பெரிய சைஸ் அப்பளமாய் இட்டு விட்டேன்.  "ஹையோ...    ரொம்ப அதிகம்...   பெரிய சப்பாத்தி! ரெண்டு சாப்பிட்டதுமே வயிறு ரொம்பி ஓவரா போச்சு!"  நீண்ட நேரம் திண்டாடிக் கொண்டிருந்தார்.

எடுத்துச் சொல்லி அலுத்து விட்டது.  எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்!  இல்லையா!

இதில் இரண்டு விஷயங்கள் நான் கவனித்திருக்கிறேன்.  போதுமா என்று கேட்டாலோ, இன்னும் வேண்டுமா என்று கேட்டாலோ "ஒரே வார்த்தை, "அதிகம்" என்று மட்டும்தான் வரும்!  போதும் என்று அர்த்தம்.  

இன்னொரு விஷயம், 'காபி இப்போ ஒரு டோஸ் கொடுக்கவா' என்று கேட்கப்படும்போது "வேண்டாம்" என்று பதில் வரும்.  ஆனால் சம்பந்தப்பட்ட நபர் அருகில் வந்து டம்ளரை எடுப்பார்!  அதாவது வேண்டாம் என்று வாய் சொன்னாலும் வேண்டும் என்று அர்த்தம்!  இரட்டை நிலை!

என் பாஸ் கூட இது போல இரட்டை நிலையில் அடிக்கடி பேசுவார்.  

"உங்களுக்கு தோசை போட்டுடவா?   சப்பாத்தி இல்லை.  வேணும்னா மாவு பிசைந்து இடணும்""  

"ஓகே..  தோசையே போட்டுடு "  

"இல்லை சப்பாத்தியே போட்டுடவா?"

"ஏதாவது ஒண்ணுப்பா..."

"காப்பியா டீயா?  காப்பின்னா ஈஸி..


"சரி, காப்பியே கொடு"

"இல்லை, டீ போட்டுடவா...   ஒரு நிமிஷம்தான் ஆகும்"

"ஏதோ பண்ணு"

தானும் ஒரு நிலையில் நில்லாமல், எதிராளியையும் குழப்பிக்கொண்டு.....!!

========================================================================================

உங்க அபிப்ராயம் என்ன?  கொஞ்சம் சொல்லுங்களேன்....

பொன்னியின் செல்வனைப் படிக்கும்போது வந்தியத்தேவனும், அருண்மொழிவர்மனும், குந்தவையும், வானதியும், நந்தினியும் நினைவுக்கு வருகிறார்கள்.  கல்கி கவனத்துக்கு வருவதில்லை.

அதே போலதான் சாண்டில்யன், நா பா, போன்ற எழுத்தாளர்களும்.

ஆனால் படிக்கும்போது எழுத்தாளரை நினைக்க வைக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர் சுஜாதா.  அப்புறம் பாலகுமாரன்.  ஏன், தி ஜானகிராமனைக் கூட அப்படிச் சொல்லலாம்.

இதில் எது உசத்தி?  அல்லது எது சரி?  படிக்கும்போது கதை மாந்தர் நினைவில் இருக்கவேண்டுமா?  அதைப் படைத்தவரா?

==============================================================================================

கையெழுத்துப் பகுதி!

ஜீவி ஸார்...

கீதா அக்கா..  இது பற்றிய விளக்கத்தை கீதா அக்கா கொடுப்பார்கள்.


=======================================================================================================

ஃபேஸ்புக்கில் ஒரு சிறுகவிதை  இருந்தேன்.  அதற்கு அங்கு துரை செல்வராஜூ ஸார் பதில் சொல்லவில்லை என்றாலும் எனக்கு வாட்ஸாப்பில் கீழ்க்காணும் கவிதையை அனுப்பி இருந்தார்.  அது இன்னமும் வராததால் சென்று வாரம் தேடியும் இருந்தார்.  எனவே இன்று நீளமான பதிவாகி விடுமோ என்று தோன்றினாலும் அதையும் பகிர்கிறேன்!



துரை செல்வராஜூ சார் கவிதை :

நீலவானம்​
பச்சைப் புற்கள்
​படர்ந்த ​மரம்
மஞ்சள் பூக்கள்
கரிய நிழல்...
ஒற்றைப் பாதையில்
பற்றி நடக்க - தமிழ்
பற்றி நடக்க - கரம்
பற்றி நடக்க 
ஒற்றைச் சுருளாய்
கற்றைக் குழலாள்...
நெற்றிப் பிறையில் 
மின்மினி போல
மின்னும் திலக
முகத்தாள்..
சொல்லும் கவிதை
வரிகளுக் கெல்லாம்..
உயிரைத் தருகிற
நிறத்தாள்.
உயிரினில் புகுந்து
உயிராய் ஆன
அகத்தாள்..
கவிதை இதுவென
காலம் காட்டிய
அகத்தாள்..
வானின் கீழாய்
தோன்றும் கதிராய்
உதித்தாள்..
கடற்கரை மணலில்
காலடித் தடமாய்
கவிஞன் மனதில்
தகித்தாள்..
கனவுகள் இல்லா
கண்களுக் குள்ளே
கற்பனைக் கனியாய்
தித்தித்தாள்..
போதும் கவி
போதும் என
புன்னகையில் முகம்
பதித்தாள்...
ஃஃஃ

==================================================================================================


தினமலரிலிருந்து எடுத்த ஒரு சுவாரஸ்யம்!



தன் பெற்றோர், நடிகர்ராமராஜன் - நடிகை நளினி பற்றி, அவர்களின் வாரிசு, வழக்கறிஞர் அருணா: 

அப்பா, அம்மா இருவரும் அதிகம் படிக்கவில்லை. அதனால், நானும், என் தம்பியும், அதிகம் படிக்க வேண்டும் என, அம்மா விரும்பினாங்க. ஆனால், அப்பாவுக்கு, படிப்பு பற்றி பெரிதாக எந்த எண்ணமும் கிடையாது.அவருக்கு, கிராமத்து ஆட்கள் பின்பற்றும் மரியாதை, பழக்க வழக்கங்களை, நாங்கள் பின்பற்ற வேண்டும் என்பது தான் எண்ணம்.

அப்பாவுக்கு, நாங்கள், 'வணக்கம்' என்று தான் சொல்ல வேண்டும் என, விரும்புவார். 'ஹாய், குட்மார்னிங்' என்ற வார்த்தைகள் எல்லாம் வேண்டாம் என்பார்.அதுபோல, 'ஆன்டி, அங்கிள்' என்று கூப்பிடக் கூடாது; மச்சான், சித்தி, அத்தை, மாமா, சித்தப்பான்னு தான் கூப்பிடணும் என்பார்.

இத்தனை வயதுக்கு பிறகும், அப்பாவின் வெகுளித்தனம் இன்னும் மாறவில்லை. அப்பாவும், அம்மாவும் எதற்காக பிரிந்தனர் என்பது எங்களுக்கு இன்னும் தெரியாது. எங்கள் முன், அவர்கள் சண்டையிட்டதே இல்லை. இப்போதும் கூட, ஒருவரை மற்றொருவர் தப்பாக பேசுவதே இல்லை. விவாகரத்து வழக்கு, கோர்ட்டில் நடந்து, தீர்ப்பு வழங்கப்பட்ட போது, கோர்ட்டிலேயே அம்மா மயங்கி விழுந்துட்டாங்க. அப்பா தான், ஓடிப் போய் துாக்கி, மயக்கம் தெளிய வைத்துள்ளார். அதைப் பார்த்த நீதிபதி, ஆச்சரியம் அடைந்துள்ளார்.இருவரும் பிரிந்திருந்தாலும், ஒருவரை மற்றொருவர் நினைக்காத நாளே கிடையாது. 

'டிவி'யில் அப்பா நடித்த படங்கள், அம்மா நடித்த படங்கள் வந்தபடியே தான் இருக்கும். அதை பார்க்கும் இருவரும், அந்த காட்சிகள் பற்றி, தங்களுக்கு தெரிந்த தகவல்களை, எங்களுடன் பரிமாறிக் கொள்வர். நான் காதலித்து திருமணம் செய்துள்ளது போலவே, தம்பியும், காதலித்து தான் திருமணம் செய்துள்ளான்.

எனினும், பெற்றோர் ஆசிர்வாதங்களுடன், அவர்களின் அனுமதியுடன் தான் திருமணம் செய்து கொண்டுள்ளோம். அப்பா, கார் ஓட்டுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். மிகவும் நிதானமாக கார் ஓட்டுவார். அவரின் விதவிதமான கலர் சட்டைகள், எனக்கு மிகவும் பிடித்தமானவை. எம்.ஜி.ஆர்., போல வாழ வேண்டும் என, ஆசைப்பட்டவர் அப்பா. நிறைய சம்பாதித்தார்; நிறைய பேருக்கு, ஏராளமாக உதவி செய்துள்ளார். எனினும், பணம், சொத்து என, நிறைய சேர்த்து வைக்கவில்லை. அப்பாவும், அம்மாவும் இப்போதும் உழைத்து தான் சாப்பிடுகின்றனர்.அம்மாவை யாராவது, நளினின்னு கூப்பிட்டால், இப்பவும் பிடிக்காது. மிசஸ் ராமராஜன்னு சொன்னால், ரொம்ப ஜாலியாக ஆகிடுவாங்க!

=====================================================================================================

கண்ணதாசனும் புதுமைப்பித்தனும் 


மதுரை மாவட்டம் சின்னமனூரில் தமிழ்த் தொண்டர் மாநாட்டில் பெரும் புலவர் திரு சோமசுந்தர பாரதியார்,  திரு நாரண துரைக் கண்ணன்,  சைவப் பெரியார் சரவண முதலியார், செந்தமிழ்ச் செல்வர் தேவநேயப் பாவாணர் ஆகியோருடன் மேடையில் பேச ஏற்பட்ட அனுபவத்துக்கு இரண்டு வருடங்களுக்குப் பின் சென்னை முல்லைப் பதிப்பகத்தில் சிறுகதை மன்னர் புதுமைப் பித்தனைச் சந்தித்தேன்.

அப்போது நடந்து கொண்டிருந்த ஒரு பத்திரிகையின் பெயரைச்சொல்லி, "அதை வாங்கி நடத்தலாம் என்றிருக்கிறேன்" என்றேன்.

அதற்கு அவர் கீழ்க் கண்டவாறு சொன்னார்:

"பலகாலம் ஒரு விலைமகள் குடியிருந்த வீட்டில் திடீரென்று ஒரு குடும்பத்தைக் கொண்டுபோய்க் குடிவைத்தால்,. வழக்கமாக வருகிறவன் கதவைத் தட்டாமல் போகமாட்டான்.  அதுபோல், நடக்கும் பத்திரிகையை வாங்கி, அதில்  கிடக்கும் ஊழலில் சிக்கிக் கொள்ளாமல், புதிதாகவே ஒன்றை ஆரம்பி"

இந்த அறிவுரை எனக்குப் பயன்பட்டது.

அந்த நாளில் புதுமைப்பித்தனிடம் ஒரு நண்பர் கடன் வாங்கி இருந்தார்.  நீண்டநாள் வரை அதைத் திருப்பித் தரவில்லை. அவருக்கு புதுமைப்பித்தன் இப்படி எழுதினார்.

"தம்பிக்கு, நலம்.  நட்பு என்பது ஒருவழிப் பாதையல்ல.  பணத்தைத் திருப்பி அனுப்பவும்."

ஆங்கில எழுத்தாளர்களைவிட தமிழ் எழுத்தாளர்களிடம் நகைச்சுவை அதிகம்.

- கண்ணதாசன், 1970 களில் குமுதத்தில் எழுதியது. -

====================================================================================================

பொக்கிஷம் :


--------------

172 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம்.

    அனைவரும் என்றும் உடல் நலத்துடன் இருக்க
    இறைவனிடம் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா...   வாங்க...   இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. என்ன ஒரே அடியாய் க் கலாய்க்கிறீர்கள் :)
    முதலில் சொன்னது யாரை.
    அதிகம் என்று சொல்பவரும் பாஸ் தானா.

    எல்லாவீட்டிலயும் நடக்கக் கூடிய சங்கதிதான்.
    என்னன்னால், எங்க வீட்ல டீ செல்லுபடியாகாது!!!!
    தங்கவேலு கலாட்டா நினைவுக்கு வருது.
    காப்பி வேணுமா, எதுக்கு வீணா, வீட்ல சாப்பிட்டு வந்திருப்பீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் சொல்லி இருப்பது பாஸின் அம்மா!  கலாய்க்கவில்லை.  நிஜம்!!
      தங்கவேலு கல்யாணப்பரிசு கலாட்டா மறக்க முடியாதது.  கோபு ஸார் கைவண்ணம்!

      நீக்கு
  3. உங்கள் கவிதையை முன்பு படித்தேன்.
    துரையின் கவிதையில் தமிழ்
    நடனமாடுகிறது.
    மிக இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா.  என் கவிதை பேஸ்புக்கில் சில நாட்களுக்கு முன் வந்ததது!  அதைப் பார்த்துவிட்டு அவர் அனுப்பியது அவர் கவிதை!

      நீக்கு
  4. பிரமிக்க வைக்கிறது அவரது நடை. பிரவாகத் தமிழ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அதுதான் அப்போதே இதை எபியில் வெளியிடுவது என்று தீர்மானம்ஸ் செய்தேன்.

      நீக்கு
  5. கண்ணதாசன் புதுமைப் பித்தன் சந்திப்பும் பேச்சும் மிக அருமை.
    அதே போல என்.எஸ். பெருமாளின்
    கவியும் மிக அழகு.
    இப்படி எல்லாம் எழுத கோடித்தவம் புரிந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ன்.எஸ். பெருமாளின்
      கவியும்//

      எம் எஸ் நாடார்?   அது அவர் படித்ததைப் பகிர்ந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. மன்னிக்கணும் பா. எம் எஸ்.நாடார். எம்எஸ் எழுதியதும் பெருமாள் வந்து விட்டார.!

      நீக்கு
  6. புதுமைப் பித்தனிடம் கடன் வாங்கிய நண்பர்
    பரிதாபம் தான். அதை இவர் திருப்பிக் கேட்ட அழகு
    மிக அருமை.

    ராமராஜன் ,நளினியின் மகளின்
    அன்பு வியக்க வைக்கிறது.
    நன்றாக இருக்கட்டும்.
    சில பிரிவுகள் தவிர்க்க முடியாமல் போகிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரிசையாக வாசித்துக் கொண்டு வந்தாலும், நடுவில் கையெழுத்தை விட்டு விட்டீர்களோ?

      நீக்கு
    2. ஆமாம் மா. அழகாக எழுதி இருக்கிறார். ஒரு எழுத்தாளரின் கையெழுத்தை இப்போதுதான் பார்க்கிறேன். பவர்ஃபுல்.

      நீக்கு
    3. கீதாவின் பட்சிராஜா மந்திரம் விஷ ஜந்துக்கள் அண்டாமல் இருக்க சொல்வது. நன்றி மா.

      நீக்கு
    4. ஆம் அம்மா...   அவரும் சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
    5. அப்படியா வல்லி? ஆனால் பகிர்ந்தவர் விஷ நோய்களும் அண்டாமல் பாதுகாக்கச் சொல்லலாம் என்றார். அதான் எல்லோருக்கும் பயனளிக்குமே எனப் பகிர்ந்தேன்.

      நீக்கு
    6. அன்பு கீதாமா,
      விஷ ஜந்துக்களுள் இந்தக் கிருமிகளும் அடக்கமே.
      நம் நாச்சியார் கோவில் கல் கருடன்
      முகமே நினைவுக்கு வருகிறது. மிக நன்றி மா.

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.எல்லோருடைய வாழ்க்கையிலும் இனி நல்லதே நடக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. என்னுடைய கையெழுத்தையும் வெளியிட்ட ஸ்ரீராமுக்கு நன்றி. இந்த ஸ்லோகம் (மந்திரம்) கருடனை நினைத்துச் சொல்லப்பட்டது. இதை தினமும் 108 முறை பாராயணம் செய்தால் விஷ நோய்கள் அண்டாது என்று சொல்வார்கள். இந்தக் கால கட்டத்திற்குத் தேவையான ஸ்லோகம் என்பதால் அனைவரும் சொல்ல வேண்டிப் பகிர்ந்தேன். இங்கேயும் கொடுக்கிறேன், எழுத்துப் புரியவில்லை என்றால்? ஸ்லோகத்தைத் தப்பாய்ச் சொல்லக் கூடாது அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடியலில் குளித்து முடித்து விட்டு விளக்கேற்றி வணங்கிய பின் -

      எபி வழியாக கருட மந்திரம்...
      மிகவும் மகிழ்ச்சி...

      வியாழனன்று கருட மந்திர உச்சாடனம் நல்லது என்று படித்திருக்கிறேன்..

      இதில் மிகச் சிறிய கருத்து ஒன்று பிறகு சொல்கிறேன்..

      நன்றியக்கா..

      நீக்கு
    2. பாஸ் நான்கு நாட்கள் சொன்னால் மனப்பாடம் செய்து விடுவார்.  அலுவலகத்தோழி ஒருவர் சிருங்கேரி மடத்திலிருந்து வந்த கொரோனா ஸ்லோகம் ஒன்றை அனுப்பி இருந்தார்.  இப்போது பஸ் தினசரி அதை மனப்பாடமாய்ச் சொல்வார்.

      நீக்கு
    3. ம்ம்ம்ம்? நான் கூடக் கொரோனா ரக்ஷ கவசம் அனுப்பின நினைவு. ஒருவேளை உங்களை விட்டுட்டேன் போல! :(

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. பாஸின் அம்மா விஷயத்தில் அவங்க சொல்வது சரி என்றே எனக்குத் தோன்றுகிறது. அவங்க வயசு, ஜீரண சக்தி! இரண்டையும் யோசிக்கணும். ஆனால் அதே சமயம் காஃபி, தேநீர் எப்போ வேணாலும் எடுத்துக்கறது சகஜமான ஒன்றே! நீர் ஆகாரம் தானே! பாஸுக்கும் இது இருப்பதில் ஆச்சரியமே இல்லை. அம்மாவைப் போலத் தானே பெண்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் உடல் வியாதி கூட! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்ல வந்தது அவர் "போதும்"  அல்லது "வேண்டாம்" என்று சொல்லாமல் "அதிகம்"  என்கிற வார்த்தையை அதற்கெல்லாம் உபயோகிப்பது பற்றிதான்!  இன்னொன்று உங்களிடம் கேட்கப்படும் ஆப்ஷன்களுக்கு அவர்களுக்கு சிரமம் தரவேண்டாம் என்று நினைத்து அவர்கள் எபப்டிக் சொல்கிறார்களோ அப்படிச் சொன்னால் அவர்களே மறுபடி மற்றொன்றையும் மறுபடி குறிப்பிட்டு, அதையே தருவது...     ரொம்பக் குழப்பறேனோ!

      நீக்கு
    2. ஹிஹிஹிஹி, இப்போத் தான் தலையைப் பிய்ச்சுக்க ஆரம்பிச்சிருக்கேன். :))))

      நீக்கு
  11. எங்க வீட்டில் இந்தக் காஃபி, தேநீர் மட்டும் காலை/மாலை ஸ்டான்டர்ட். காலை எனில் காஃபி தான். மாலை தேநீர் தான். எப்போவானும் மாலைக் காஃபி என மாறும். ஆகவே எதுக்கும் கேட்டுப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுவில் கொஞ்ச நாள் நாங்களும் அப்படி இருந்தோம்!

      நீக்கு
  12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  13. எழுத்து என்பது எழுத்தாளர் படைத்த கற்பனை உலகில் நம்மை சஞ்சரிக்க வைத்து அனுபவிக்கச் செய்வது. அப்போது கற்பனை உலகம் மறைந்து எழுத்தாளர் நினைவுக்கு வந்தால் அவர் எழுத்தில்தான் குறை என்பது என் அபிப்ராயம்.

    அழகிய சிற்பத்தைப் பார்த்து இந்தக் கல் என்னவாயிருக்கும், எங்கு கிடைத்திருக்கும், முழுக்கல்லை உபயோகித்திருப்பார்களா இல்லை வேறு சிற்பம் செய்ய எடுத்த கல்லால் செதுக்கியிருப்பார்களா என மனம் போனால் சிற்பத்திலும் அதைப் பார்க்கும் ஆசாமியிலும் குறை இருக்கிறது என்றே பொருள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை எழுதுவதில் சில யுக்திகள் உண்டு. சிலவற்றை உரையாடலிலும், பல விஷயங்களை காட்சிப் படுத்ததுவதிலும் கொண்டு செல்ல வேண்டும். காட்சிப் படுத்துதல் திறமையான எழுத்தாளர் எழுதியிருந்தால், அவர் மனத்தில் தோன்றும் காட்சிகளை அப்படியே நாம் படிக்கும்போது புரிந்துகொள்ளலாம். ஆனால் உரையாடல்கள் அப்படி அல்ல - எழுதுபவர் வித்தியாசமான புதுமை சிந்தனைகள் கொண்டவர் என்றால், அவர் சொல்லியிருப்பதை, அவரை நினைத்தபடி யோசித்தால்தான் புரிந்துகொள்ள இயலும்.
      சுஜாதா எழுதியிருந்த ஒரு கதையில் ..
      " சின்ன வயதில் எனக்கு அப்பென்டிசிடிஸ் ஆபரேஷன் எங்கே செய்தார்கள் என்று காட்டட்டுமா? " என்று கேட்டாள்.
      " எங்கே காட்டு? "
      " இங்கேயிருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு அந்த ஹாஸ்பிடல் - போகலாமா " என்று உரையாடல் வரும்.
      இதைப் படிக்கும்போது, எழுத்தாளர் ஞாபகம்தான் நிச்சயம் வரும்!

      நீக்கு
    2. நடிப்பிலும் இப்படிச் சொல்லலாம்.  சிவாஜி கணேசன் நினைவுக்கு வருவாரா, பிரெஸ்டிஜ் பத்மநாப அய்யர் நினைவுக்கு வருவாரா?  வீரபாண்டிய கட்டபொம்மன், வ வு சி என்றால் அவர்கள் நினைவுக்கு வருகிறார்களா, சிவாஜி நினைவுக்கு வருகிறாரா?!!

      நீக்கு
    3. ஸ்ரீராம் சொன்ன ஒவ்வொன்றிலும் சிவாஜி தான் நினைவுக்கு வருவார். அப்படி வரக்கூடாது என்பதே என் கருத்து. மிகச் சில படங்களில் மட்டுமே அந்த நடிகரோ, நடிகையோ மறைந்து கதாபாத்திரம் மட்டும் மனதில் பிரகாசிக்கும். அப்படி இருக்கும் படங்களே அபூர்வம்! தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக! கன்னடம், மலையாளம், மராட்டியில் பார்க்க முடியும்.

      நீக்கு
  14. துரையின் கவிதை எப்போதும் போல் அழகுத்தமிழில் கொஞ்சும் கவிதை. உங்கள் கவிதை யதார்த்தம். இரண்டுமே சிறப்பு. ராமராஜனின் மகள் சொல்லி இருப்பதை எங்கோ/எதிலோ/எப்போவோ படிச்சேன். நினைவில் இல்லை. ஆனால் ஆச்சரியமாக இருந்தது.
    சின்னமனூர் என்றால் என் நினைவில் சித்தப்பா தான் வருவார். எனக்குப் பிடித்த ஊர்களில் ஒன்று. அங்குள்ள பூலாநந்தீஸ்வரர் கோயில் கல்வெட்டுக்கள் சின்னமனூர்ச் செப்பேடுகள் எனப் புகழ் பெற்றவை. பொக்கிஷப் பகிர்வும் ஏதோ பத்திரிகையில்(?) படிச்சேனோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னமனூர் என்றதும் எனக்கு உடனே நினைவுக்கு வருவது சர்க்கஸ்தான்!!   அதன் போஸ்டரில் யானைகள் பிரதானமாக இருக்கும்!

      துரை செல்வராஜூ ஸார் கதையாகட்டும், கவிதையாகட்டும் கலக்கல் மன்னன்.  கேட்கணுமா?

      நீக்கு
  15. திரு ஜீவி அவர்களின் கையெழுத்துத் தெளிவாக உள்ளது. சித்தப்பாவின் எழுத்துப் படிக்கக் கஷ்டம். இஃகி,இஃகி, ஆனால் நான் படிச்சுத் தட்டச்சிடுவேன். :)))) டைப்ரைடிங்க் கத்துக் கொண்டதிலே இது ஒரு பலன். விதம் விதமான கையெழுத்துக்களைப் படிக்கலாம். கஷ்டமாக இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அப்பாவின் கையெழுத்தும் படிக்க மிகவும் சிரமமாக இருக்கும்.  அவர் மகன்...   என் கையெழுத்தும் அப்படிதான்!

      நீக்கு
  16. ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ரூபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி ப்ரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹூ பராக்ரமாய, பக்ஷிராஜாய, ஸர்வ வக்ர நாசாய, ஸர்வ தோஷ, ஸர்ப்ப தோஷ, விஷ ஸர்ப்ப, விநாசநாய ஸ்வாஹா!

    இந்த கருட மந்திரத்தைத் தினம் 108 முறை ஜபிக்க வேண்டும் எனவும், தீராத வினைகள், நோய்கள் தீரும் எனவும் முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதை நானும் இங்கே பகிர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  இதை காபி பேஸ்ட் செய்துகொண்டேன் -   பாஸிடம் காட்ட...

      நீக்கு
    2. ..பாஸிடம் காட்ட...//

      பாஸிடம் காட்டி பர்மிஷனுக்காகக் காத்திருங்கள்..
      கருடன் காத்திருப்பாரா !

      நீக்கு
    3. பாஸ் தான் பக்தி செக்ஷன் கவனித்துக் கொள்கிறார்!  அதுதான்!

      நீக்கு
  17. இன்றைய பதிவில் எனது கவிதை..
    மகிழ்ச்சி..
    இதையும் தொகுத்து/தொடுத்து வழங்கிய ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  18. //அம்மாவை யாராவது, நளினின்னு கூப்பிட்டால், இப்பவும் பிடிக்காது. மிசஸ் ராமராஜன்னு சொன்னால், ரொம்ப ஜாலியாக ஆகிடுவாங்க//

    அப்புறம் விவாகரத்து எதற்கு ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதத்தான் நானும் கேக்க நெனச்சேன்!..

      ( விட்டா நம்மளக் கிறுக்கனா
      ஆக்கிடுவாங்கே!..)

      நீக்கு
    2. ஒரே இடத்தில் சேர்ந்திருந்தால் வரும் பிரச்சனைகளை சமாளிக்கப் பிரிந்து விட்டார்கள் போல...   விலகி இருந்தால் மனதில் சில பழைய இனிய நினைவுகள் ஞாபகத்துக்கு வரும் போல...

      நீக்கு
    3. கோடி ரூபாய் ஆர்டிஸ்ட் (முதல்ல ஆண்கள்ல கோடி ரூபாய் வாங்கினவர், கமலஹாசனுக்கு அவ்வளவு பொறாமை) அந்த கரகாட்டக்காரனுக்குப் பிறகு மதுரையில் மிகப் பெரிய தியேட்டரையே அவர் விலைக்கு வாங்கிவிட்டார். ரொம்ப சம்பாதித்தார். ராமராஜன் பின்பு கொஞ்சம் அகலக்கால் வைத்து கடனில் சிக்கிக்கொண்டார். அது குடும்பத்தை பாதிக்கக்கூடாது என்பதற்காக இந்தப் பிரிவு.

      நீக்கு
    4. இவர் கோடி ரூபாய் வாங்கினாரா என்று தெரியாது!  ஆனால் மதுரையில் நடனா நாட்டியா  தியேட்டரை வாங்கினார்.  அப்புறம் அது டாக்டர் போஸ் வாங்கி விட்டார் என்று நினைவு.

      நீக்கு
    5. கோடி ரூபாய் வாங்கினார் என்றே கேள்விப் பட்டேன். இவர்களைப் போல நடிகை ரேவதி அவர் கணவர் சுரேஷ் மேனன் இருவரும் பிரிந்தாலும் நட்புடன் இருப்பதாகச் சொல்வார்கள். ரேவதி சமீபத்தில் ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார். அதனால் தான் அவர் நடித்த ஒரு சில தொலைக்காட்சித் தொடர்கள் வரவில்லை என நம்ம ரங்க்ஸின் நியூஸ்!

      எழுத்தாளர் ஞானி(இப்போது இல்லை) அவர் மனைவி பத்மாவதி இருவரும் கூடப் பிரிந்து விவாகரத்து வாங்கினப்புறமும் தினமும் சந்திப்பு, பேச்சு வார்த்தை, கூட உட்கார்ந்து சாப்பிடுவது எல்லாமும் உண்டு. பத்மாவதியை "மா பத்மாவதி" என்னும் பெயரிலேயே அழைப்பார்கள்.

      நீக்கு
    6. ரேவதி தகவல் மற்றும் பிரபஞ்சன் பற்றிய தகவல் புதிது.

      நீக்கு
    7. grrrrrrrrrrrrrrrrrrrrrrr Not Pirabanjan. Njani Sankaran! எழுத்தாளர் ஞானி

      நீக்கு
  19. உண்மைதான் . எழுத்தாளரை மேம்படுத்தினால் மரத்தில் மறைந்த மாமத யானை கதைதான். கல்கியைப பற்றி நீங்கள் சொன்னது மிக சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவன் கதைகளும் எழுத்தாளரை நினைவூட்டும். எழுத்து நடை அப்படி. பிவிஆர் உரைநடையிலேயே கதையையும் கொண்டு போவார். அதிலேயே வர்ணனைகளும் வரும். "சென்ட்ரல்" ஒன்று போதுமே! தற்சமயம் "நரசிம்மாவின்" நாவல்கள் எல்லாம் நம்மை மறந்து போகச் செய்து விடுகின்றன. சமீபத்தில் தான் அவருடைய காலச்சக்கரம் நாவலை மறுபடி படித்து நினைவூட்டிக் கொண்டேன்.

      நீக்கு
    2. ஆமாம்...    நரசிம்மாவின் கதைகள் கவர்ந்து இழுக்கின்றன.  பெரும் புகழ் பெற்று  வருகிறார்.

      நீக்கு
  20. வாசித்தேன் அருமை...!
    கவிதையை மிகவும் ரசித்தேன்...

    நான் பூந்தோட்ட கவிதைக்காரன்...

    பதிலளிநீக்கு
  21. //
    தானும் ஒரு நிலையில் நில்லாமல், எதிராளியையும் குழப்பிக்கொண்டு...//

    இங்கேயும் அதே நிலைதான்... எதோ என்விட்டில் நடந்ததை பார்த்து எழுதியது போல இருந்தது... ஒரு வேளை எல்லா வீட்டு பெண்களும் இப்படித்தானோ?

    பதிலளிநீக்கு
  22. ஹாய் ஹாய் எல்லாருக்கும் வணக்கம். நலம்தானே எல்லோரும்?!

    வேலை வந்திருக்கிறது என்பதால்.நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது ஆஜர் வைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   வாங்க கீதா...   நலமா?

      நீக்கு
    2. அடடே... இவங்களை எப்போவோ பார்த்திருக்கிறேனே. இவங்களையா இல்லை இவங்க பாஸையா?

      நீக்கு
    3. வாங்க தி/கீதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மெல்ல மெல்ல வந்து எட்டிப் பாருங்க!

      நீக்கு
    4. ஸ்ரீராம் நான் நலமே! என்ன வேலை வந்துவிட்டதில்லையா அதான் அப்பப்ப...

      நெல்லை ஹா ஹா ஹா ஹா என்னாது !! ஹான் கரெக்டுதான் கரெக்டுதான்...!! ஹிஹிஹிஹி

      கீதாக்கா ஆமாம் அப்பப்ப வரேன் இன்று கொஞ்சம் நேரம் கிடைக்கிறது அதான் வந்துவிட்டேன். உங்களுக்கும் ஆஜர் வைச்சேன்!!

      கீதா

      நீக்கு
    5. வணக்கம் சகோதரி

      நலமா? எப்படியிருக்கிறீர்கள்.? தங்களது வலைத்தள வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இனி இந்த மாதிரி அடிக்கடி வாருங்கள். உங்கள் கருத்துரைகள் இல்லாமல், அனைவரின் பதிவுகளும் களை கட்ட இயலாது சற்று சோம்பல்படுகின்றன. வருகைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    6. வாராது வந்த மாமணியும் உண்டோ இன்று!

      நீக்கு
    7. வேலை வருவது சகஜம் தான். இருந்தாலும் இப்படியா?..

      வாங்க.. வாங்க..

      நீக்கு
  23. ஸ்ரீராம் முதல் பகுதி வாசித்து சிரித்துவிட்டேன்.

    பார்த்திருக்கிறேன்.

    //எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்! இல்லையா!//

    அதே அதே. அது மட்டும் நம்ம கையில இருந்திருச்சுனா அப்புறம் ஏது பிரச்சனை, ஸ்ரீராம்! சொல்லுங்க!!!

    நான் ஒத்தையா ரெட்டையா போடுவது பெரும்பாலும் வீட்டிற்கு வரும் நெருங்கிய நட்புகள் உறவுகளிடம். எனவே அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிடுவது. ஏதேனும் ஒன்று என்று சொன்னால் நெருங்கியவர்கள் என்றால் நமக்கே தெரியும் இல்லை என்றால் அடுத்து ஒரு கேள்வி கேட்பேன் உரிமையுடன்!! ஹா ஹா ஹா உங்கள் விருப்பம் என்னனு க்ளியரா சொல்லிடுங்கன்னு.
    குடும்பத்தவர்களிடம் கேட்பதற்கானத் தேவையே பெரும்பாலும் இருந்ததில்லை/ இருப்பதில்லை. யார் என்னென்ன விரும்புவாங்கனு தெரியும் என்பதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்திருக்கும் விருந்தினர்களிடம் இந்த விளையாட்டு விளையாடுவது கிடையாது.  அவர்களுக்கு நாங்கள் கொடுப்பதுதான்!!!

      நீக்கு
    2. எங்க வீட்டில் வீட்டு ஆட்களுக்கே உபசாரம் செய்து தான் எதையும் கொடுக்கணும் என்பதால் எனக்கு இந்தப் பிரச்னை எல்லாம் கிடையாது.ரங்க்ஸ் அலுவலகம் போனதும் மத்தவங்களுக்குச் சாப்பிடத் தட்டு/இலை போட்டுவிட்டுக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கணும். மனசு இரங்கி/இறங்கி மெதுவா வருவாங்க அரை மனசா!

      நீக்கு
    3. இங்கு பாஸ் மகன்களை சாப்பிடக் கூப்பிட்டு அலுத்து விடுவார்!.

      நீக்கு
  24. எல்லோர் வீட்டிலும் பாஸ்கள் ஒன்று போலத் தான். முடிவு எடுப்பதோ என்னவோ அவர்கள் தான். ஆனால் நாம் சொல்லித் தான் அந்த முடிவு எடுத்ததாக ஒரு பாவனை.

    ஆமாம் கதைகள் பலவிதம். எழுதுபவர்களும் பலவிதம். கல்கி, சாண்டில்யன், புதுமைப்பித்தன், நா பார்த்தசாரதி போன்றவர்கள் கற்பனையும் கொஞ்சம் சேர்த்து அந்த காலகட்டத்திற்கு நம்மை கொண்டு சேர்த்துவிடுகிறார்கள். அதனால் அந்த கதை மாந்தர்கள் நினைவில் நிற்கிறார்கள். கதையைக் காட்டிலும் கதை மாந்தர்களின் குணாதிசயங்களை விரிவாக எழுதினர். ஆகவே கதை மாந்தர்கள் என்றும் நினைவில் நிற்பவர் ஆயினர். இவர்களுக்கு இணையாக சாவியையும் சொல்லலாம். (கேரக்டர்)
    சுஜாதா பாலகுமாரன் இந்திரா பார்த்தசாரதி போன்றோர் வருணணைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நிகழ்வை குறிப்பால் உணர்த்தும் சொல் ஆட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் கதை மாந்தர்களை விட  நடை பிரபலமானது. அந்த நடையே அவர்களை நினைவு கூற வைக்கிறது. 

    இவ்வாறு வேறுபாடின்றி இரண்டும் கலந்த கதைகள் சிலவற்றையேனும் ஜெயகாந்தன் எழுதி இருக்கிறார் என்பது எனது கருத்து. சில நேரங்களில் சில மனிதர்கள், யாருக்காக அழுதான், ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் போன்ற கதைகளை சொல்லலாம். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   எல்லா இடத்திலும் அப்படித்தானா?  ஒரு சின்ன ஆறுதல்!

      எழுத்தாளர்கள் இப்போதெல்லாம் குணாதிசயங்களையோ வர்ணனைகளையோ நீட்டி முழக்கினால் வாசகர்கள் ஸ்கிப் செய்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.  சாண்டில்யன் கதைகளிலேயே நிறைய பாராக்களை விட்டு விட்டுதான் படிப்பேன்.
        ஜெயகாந்தன் உண்மையிலேயே தனிரகம்.  அவரும் நினைவுக்கு வருவார்.  கோகிலா, ஜோசப், லலிதா, சாரங்கன்களும் நினைவுக்கு வருவார்கள்!

      நீக்கு
    2. ஜெயகாந்தனின் எழுத்துநடை, சொல்லும்பாணி தனி.. சில கேரக்டர்கள் ஸ்ட்ராங்காக மனதில் சம்மணம்போட்டு உட்கார்ந்துகொள்வார்கள்!

      நீக்கு
  25. என் பாட்டி ஏதேஷ்டம் என்பார். கூட ஒன்று வேண்டுமா என்றாலும் நோ என்றால் நோ தான். எப்போதேனும் கூட ஒரு தோசையோ சப்பாத்தியோ, கேட்டாலும் நாம் போட்டாலும் அதைப் பார்ப்பார் கனமாக இருப்பது போல் இருந்தால் கிள்ளிப் போடச் சொல்லுவார். முழுவதும் போட்டுக் கொள்ள மாட்டார்.

    அப்பாவும் ரொம்ப ஸ்ட்ரிக்ட். நானும். எங்கு சென்றாலும்.

    அதுவும் உங்க வீட்டுக்கு வந்தாலும் சுதந்திரமாக அடுக்களைக்கே வந்திடுவேனே!!!! பாஸ் கிட்ட எச்சரிக்கை கொடுத்துகிட்டே இருப்பேனே!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிள்ளிப்போடலாம்.  அதே சப்பாத்தியையே உருட்டி சின்னதாக்கிக் கொடுத்தால்?!!! 
       
      இன்னும் ஒன்றே ஒன்று சாப்பிடலாம் என்று தோன்றும்போது நிறுத்தி விடவேண்டும் என்று அம்மா சொல்வார்.   அதைத்தான் நான் கடைப்பிடிக்கிறேன்.

      நீக்கு
    2. //இன்னும் ஒன்றே ஒன்று சாப்பிடலாம் என்று தோன்றும்போது நிறுத்தி விடவேண்டும் என்று அம்மா சொல்வார். //

      எஸ் அதே தான் ஸ்ரீராம் நானும்.

      கீதா

      நீக்கு
    3. ஹிஹிஹி...   சமயங்களில் நிறுத்தாமல் சாப்பிட்டதும் உண்டு!

      நீக்கு
    4. நான் அப்படீல்லாம் நிறுத்துவதில்லை. ஆனா நிஜமாகவே, ஒன்றோ அல்லது இரண்டோ சாப்பிட்டுவிட்டு உடனே தட்டை அலம்பி இடத்தைக் காலிசெய்துவிட்டால், surprisingly வயிறு கனமில்லாமல் ஆனால் போதுமான அளவு சாப்பிட்ட திருப்தி கிடைப்பதை உணர்ந்திருக்கிறேன்.

      நீக்கு
    5. நாங்க எப்போவுமே ஸ்டான்டர்ட். சப்பாத்தி/ஃபுல்கா எனில் 3, தோசை 3 இடலி நாலு, ரவாதோசை 3(பெரிசா இருக்கும், சமயங்களில் இரண்டோடு நிறுத்திப்போம்.) அடை ஒன்றரை! 3 அடை வார்த்துட்டு ஆளுக்கு ஒன்றரை எடுத்துப்போம். இல்லைனாச் சின்னதா (கனமில்லாமல்) ஆளுக்கு இரண்டு எப்போதேனும்.

      நீக்கு
    6. நான் சப்பாத்தி தோசை இட்லி எது என்றாலும் ஐந்து!

      நீக்கு
    7. பிறந்த தேதி அல்லது கூட்டு எண் ஐந்தோ ! ஆலு பராட்டாவும் ஐந்தா?

      நீக்கு
  26. ஜீவி அண்ணா கீதாக்கா இருவரது கையெழுத்தும் நன்றாகப் புரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. உங்கள் கவிதையும் அதன் எக்ஸ்டென்ஷன் கவிதை நம்ம துரை அண்ணாவின் கவிதையும் அட்டகாசம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. வணக்கம். இன்றைய பதிவின் பகுதிகளை மிகவும் ரசித்தேன். குறிப்பாக பொக்கிஷம்.

    பதிலளிநீக்கு
  29. நளினி ராமராஜன் கதை வித்தியாசமான ஒன்றுதான். இது போன்று சில எனக்குத் தெரிந்த சர்க்கிளிலும் இருக்கிறது. அதாவது டிவோர்ஸ் என்றாலும் கூட அதன் பின்னும் நல்ல நட்பு மெயிண்டைன் செய்வது உதவிக் கொள்வது இருவருமே மறுமணம் செய்து கொள்ளாமல் தனி தனியாக வாழ்வது என்று. இதில் டிவோர்ஸ் என்று கோர்ட்டுக்குப் போகாமல் பிரிந்து இது போன்று வாழ்பவர்களும் உண்டு. ஹையோ இங்கு துறு துறுன்னு எழுத வருது...இந்தக் கருவில் ஒரு கதை ஒன்று பாதியில் ஆனா நான் எப்ப எழுதி முடிப்பேனோ என்பதால் சொல்ல வேண்டாம் என்று நினைத்து சொல்லிட்டேன். ஹா ஹா ஹா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆத்திரம், பொறாமை இல்லாமல் அப்படி நட்பு தொடர்வது கஷ்டம்தான்!

      நீக்கு
    2. //நல்ல நட்பு மெயிண்டைன் செய்வது உதவிக் கொள்வது இருவருமே மறுமணம் செய்து கொள்ளாமல் தனி தனியாக வாழ்வது என்று. இதில் டிவோர்ஸ் என்று கோர்ட்டுக்குப் போகாமல் பிரிந்து// - இது என்னடா டுபாக்கூர் என்றுதான் என் மனசில் தோணுது. பசங்கன்னா, பெற்றோர் இருவரும் அட்ஜஸ்ட் செய்துதான் இருக்கணும். தனித் தனியா, ஆனால் நட்பா..... என்ன மாதிரியான உதாரணம் இது என்று என் மனசுல தோணுது. நிஜத்துல இரு தனித் தனி மனிதர்களா ஒரே கூரையில் வாழ முடியலை போலிருக்கு

      நீக்கு
    3. ஒருவேளை இரண்டு கூரை, இரண்டு குடும்பம், ஜீவனாம்சம் என்று வருமான வரி அடஜஸ்ட்மெண்ட்டோ...   ராமராஜனின் இன்றைய நிலையைப் பார்த்தால் அப்படியும் தோன்றவில்லை!

      நீக்கு
  30. /// படிக்கும்போது கதை மாந்தர் நினைவில் இருக்கவேண்டுமா? அதைப் படைத்தவரா? ///
    மொத்தத்தில் கரு தேவையில்லை...!

    // ஃபேஸ்புக்கில் ஒரு சிறுகவிதை இருந்தேன். //
    ஃபேஸ்புக்கில் ஒரு சிறுகவிதையாக மாறி விட்டீர்களே...!
    இருவரின் வரிகளும் ஆகா...!

    ராமராஜன் - மண் மனம் மாறாதவர்...

    மற்ற பகுதிகள் சுவாரஸ்யம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரு இலலாமல் கதை இல்லையே DD?


      ஹா...  ஹா...  ஹா...    'பகிர்ந்து' என்கிற வார்த்தையை காணோம்!  காக்கா தூக்கிக்கொண்டு போய்விட்டது போல!

      நன்றி DD.

      நீக்கு
    2. நானும் கவனிச்சாலும் காலம்பரச் சொல்லலை. :)

      நீக்கு
  31. ஆனால் படிக்கும்போது எழுத்தாளரை நினைக்க வைக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர் சுஜாதா. //

    எனக்கும் இப்படி ஏற்பட்டதுண்டு. பொசெ வாசிக்கும் போது கதை மாந்தர்கள் தான் மனதில் இருப்பார்கள். வர்ணனைகள், குணாதிசயங்கள் எல்லாம் வரும் போது நம் கண் முன்னே விரியும். அது நாம் கதையினூடே போய்விட்டோம் என்பது அல்லவா. கதையினூடே நம்மையும் அழைத்துச் செல்வது என்பது அது எழுத்தாளரின் வெற்றி அல்லவா!

    இருந்தாலும் சுஜாதா அத்தனை வர்ணனை செய்ய மாட்டார். மிகவும் குறைவு அதுவும் ஓரிரு வரிகளில் சொல்லிவிடுவார். இல்லையா அவரது வெற்றி வார்த்தைகள் நடை அப்படியே நிகழ்வைச் சொல்லிப் போவது. ... சுவாரசியமான பிரயோகம். அட! இது தனி ஸ்டைல்.

    இப்போது வர்ணனைகள் அதிகம் இருந்தால் செல்லுபடியாகாது என்றே தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வர்ணனைகளுக்கு சாண்டில்யன்தான்!  ஒரு அத்தியாயத்தின் பல பாராக்கள் வர்ணனையில் போய்விட, கதை பத்து வரிதான் மிஞ்சும்!

      நீக்கு
  32. பூனை வாசனை அடிச்சிச்சே!!! கூடவே பூனையின் செக் அவங்க வாசனையும்!!!!

    ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  33. ஸ்ரீராம்... ஐயங்கார்களிடம் ஒரு பழக்கம் உண்டு. இன்னொரு ஸ்வீட் பாக்கெட் வேணுமா என்று கேட்டால், யதேஷ்டம் என்பார்கள். கொடுத்ததே போதுமே, அதிகம் என்பது அர்த்தம். அதன் தமிழ்ப்படுத்தல், 'அதிகம்'. அதாவது இதுவரை சாப்பிட்டதே அதிகம், கொடுத்ததே அதிகம் என்று அர்த்தப்படுத்திக்கணும்.

    பொதுவா அப்படிச் சொல்லியாச்சுன்னா, இன்னும் வேணுமா (உணவு விஷயத்தில்) என்று கேட்கப்படாது, வேண்டாம். காரணம், மனசு போதும்னு சொன்ன பிறகும், மத்தவங்க வேணுமா என்று திரும்பத் திரும்ப கேட்கும்போது நப்பாசையில், சரி ஒண்ணு போடுங்க என்று சொல்லிடுவோம், அது நிஜமாகவே நமக்கு லிமிட்டுக்கு அதிகமாயிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிகிறது நெல்லை.   மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு போதும் என்று நினைப்பவர்களைக் கெடுக்கிறோம்..   இன்னும் சாப்பிடச் சொல்லி!

      நீக்கு
    2. நெ.த. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், யதேஷ்டம் என்பது அனைவரும் பயன்படுத்தும் ஒரு சொல். என் அப்பாவின் சித்தி இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார். ஆனால் எங்க பிறந்த வீட்டுப்பக்கம் போதும்னு சொன்னால் நிறுத்திடுவோம். கல்யாணம் ஆகி வந்து இந்த விஷயத்தில் (இப்போவும் சிலரிடம்) நிறையக் கஷ்டப்பட்டிருக்கேன். மாமனார் நாலு தோசை சாப்பிட்டதும் போதும்னு சொல்லவே நான் போடுவதை நிறுத்திட்டுப் பின்னர் வாங்கிக் கட்டிக் கொண்டேன். பின்னர் தான் புரிந்தது அவங்க போதும் என்றால் இன்னும் வேண்டும் என அர்த்தம் என்பது. போதும்னு நிஜமாவே உணர்ந்தால் அதையும் சொல்ல மாட்டாங்க. இலையை விட்டு எழுந்திருப்பாங்க. அப்போ நாம புரிஞ்சுக்கணும்.

      நீக்கு
    3. கீசா மேடம்.... எப்படியோ ஒவ்வொரு பதிவிலும் உங்களை வம்புக்கு இழுத்துவிட முடிகிறது. என்னைலாம் பலதடவை சாப்பிடச் சொன்னால்தான் நான் சாப்பிடுவேன். என் நண்பன் அவர்கள் வீட்டுக்கு வரவழைத்திருந்தான். அவங்க அம்மா, 2 அடி குறுக்களவுள்ள-சுற்றளவில்லை, குறுக்களவு தோசைக்கல்லில் (தனியாக பெரிய கரி அடுப்பில் அது இருந்தது. ) ரவா தோசை வார்த்தார். என்னிடம் இரு தடவை கேட்டான். நான் தயங்கி வேண்டாம் என்று சொல்லிட்டேன். என் பாலிசி, அடுத்தவர் பலமுறை கேட்டால்தான் சாப்பிடுவது. அவன் பாலிசி, இருமுறைக்கு மேல் யாரையும் வற்புறுத்தக்கூடாது என்பது. ஹாஹா

      நீக்கு
    4. கீதாக்கா ஹைஃபைவ்! ஹையோ யாரேனும் போதும்னு சொல்லி நாம நிறுத்திட்டோம்னா அது தப்பாகிவிடுகிறது ஒரு சிலரிடம். நான் நிறுத்திவிடுவேன் அவர்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்று. நன்ராகப் பழகுபவர் என்றால் கூட ஒரு தடவை கன்ஃபெர்ம் செய்து கொள்வேன் நிச்சயமாகவா? லாக் ஹோ ஜாயேகா!!!!! என்று ஆனால் சிலரிடம் அப்படியும் இல்லை நீ நிறைய தடவை கேட்கணும் தட்டிலும் கொண்டு போட வேண்டும் என்று சொல்லுவாங்க. உனக்குப் பரிமாறத் தெரியலை. நீ பரிமாற வராதே என்று. எனக்குத் தர்மசங்கடமாகிவிடும். சில சமயம் அப்படிப் போடப்படுவது வீணாகும். இலையில் வீணாக்குவது பிடிக்காத ஒரு விஷயம். என் தனிப்பட்டக் கருத்து. எதற்கு வீணாக்க வேண்டும்? வலியக் கொண்டு இலையில் போட வேண்டும்? டேபிள் மேனர்ஸ் என்று பலது பேசப்படுகிறது. இப்படியான டேபிள் மேனர்ஸ் முக்கியமில்லையோ? உணவு வீணாவது ஒன்று மற்றொன்று ஒருவரைச் சிரமப்படுத்துவது. இலையில் இருப்பதை வீணாகாமல் சாப்பிட வேண்டும் என்ற கொள்கை உடையவரிடம் இலையில் வலுவில் திணித்தால் அவருக்குச் சிரமமாகத்தானே இருக்கும்?

      ஆமாம் கீதாக்கா சிலர் போதும் என்றோ கையை இலை/தட்டின் மீதோ காட்டி போதும் என்று சொல்லவே மாட்டாங்க. நாம் கொஞ்சம் போட்டு விட்டு இன்னும் கொஞ்சம் போடலாமா என்றால் தலையை ஆட்டுவதும் மிகவும் குழப்பமாக இருக்கும். வாய் திறந்து சொல்லவே மாட்டாங்க. நான் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டேன்.

      கீதா

      நீக்கு
    5. என் பிறந்த வீட்டில் அதுவும் மாமாக்கள் வீடுகளில் கீதாவைப் பரிமாறக் கூப்பிடு, சரியாகப் பண்ணுவா என்பார்கள். புக்ககத்தில் நேர்மாறாக அவளைப் பரிமாறச் சொல்லாதே என்பார் என் மாமனார். போடத் தெரியாது என்பார். இங்கே வேண்டாம்னாலும் போட்டே ஆகணும். எங்க வீட்டில் கேட்டுவிட்டுப் பின்னரே போடணும், அதே போல் காய்கள் பரிமாறிவிட்டுச் சாதம் போடும்போது தட்டில் எடுத்து வரும் சாதம் மொத்தத்தையும் இலையில் போடக் கூடாது என்பது எங்க வீட்டு வழக்கம். ஆகவே கொஞ்சமாய்த் தான் கொண்டு வருவோம், ஆனால் புக்ககத்தில் சாதம் முதலிலேயே கொஞ்சமாய் வைத்தால் சாப்பிட உட்கார்ந்திருப்பவருக்கு என்ன தோணும்? என்பார்கள்.

      நீக்கு
    6. புகுந்த வீட்டில் மொத்த ஆதரவையும் பெறுவது என்பது ஒரு சிலருக்கே வாய்க்கிறது.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம்.  மேலும் அந்தக் காலத்தில் இப்படி எல்லாம் கமெண்ட் செய்ததுபோல் இந்தக் காலத்தில் செய்ய முடியாது என்று தோன்றுகிறது.

      நீக்கு
  34. என் கணவர் கண்டு பிடித்து விடுவார் இரண்டு தோசை வைத்த பின் அடுத்து சின்னதாக என்று சொல்வார்கள், அதே அளவு மாவில் சின்ன அளவாய் செய்து கொடுத்தால் அவர்களுக்கு தெரிந்து விடும் அந்த தோசை கனமாக இருக்குமே! இன்னும் கொஞ்சம், சின்னதாக என்ற கெஞ்சல் எல்லாம் எடுபடாது.

    சிலர் கதைகளில் கதை மாந்தர்களும், சிலஎழுத்தாளர்கள் எழுதுவதில் அவர்கள் எழுத்து பாணியும் நினைவு வருவதை தவிர்க்க முடியாது.

    ஜீவி சாரின் கையெழுத்தும் உயிரின் ஓசையை உணர்ந்து கொள்ள விட வேண்டியதும் அருமை.

    கீதா அவர்களின் எழுத்தும் அருமை அந்த கருட மந்திரம் நானும் படிப்பேன்.

    உங்கள் இருவர் கவிதையும் நன்றாக இருக்கிறது.

    தினமலரிலிருந்து எடுத்த ஒரு சுவாரஸ்யம்!

    நானும் முன்பு படித்து இருக்கிறேன். அன்பான குழந்தைகள்.


    கண்ணதாசனும் புதுமைப்பித்தனும் பகிர்வு நன்றாக இருக்கிறது.

    பொக்கிஷ பகிர்வும் அருமை.
    கதம்பம் அருமை.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா...
      ஹா...  ஹா...  ஹா...   ஆமாம் கனமாக இருபப்தை வைத்து கண்டு பிடித்து விடலாம்.  அனைத்தையும் படித்து, வரிசையாகக் கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  35. பொக்கிஷம் இரண்டும் அருமை. மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  36. //என் பாஸ் கூட இது போல இரட்டை நிலையில் அடிக்கடி பேசுவார். // - இதுல உங்க புரிதல்தான் தவறு. அவங்களுக்கு இரண்டில் எது செய்வது என்று குழப்பம். மனதுக்குள் பட்டிமன்றம் நடத்தாமல் இன்னொருவரிடம் சொல்லுகிறார். அவ்ளோதான். அவர் நிஜமாகவே உங்கள் விருப்பம் என்ன, அதன்படி செய்யலாம் என்பதற்காக கேட்கிறார் என நீங்க நினைக்கறீங்க. அப்படி இருக்காது.

    நானும் தளிகை மெனு பசங்கள்ட, மனைவிகிட்ட சொல்லுவேன், பேசுவேன். ஆனால் நான் அன்று/அப்போ என்ன செய்யப்போகிறேன் என்பது கிச்சன் நிலைப்படியைத் தாண்டும்போது மனதில் உதிப்பது/கடவுள் சொல்வதுதான் என்று சொல்லிடுவேன்.

    இந்த விளக்கம் இன்னும் குழப்புதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்ன செய்யப்போகிறேன் என்பது கிச்சன் நிலைப்படியைத் தாண்டும்போது மனதில் உதிப்பது/கடவுள் சொல்வதுதான் என்று சொல்லிடுவேன்//

      இதனுடன் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...   அப்போது கிச்சனில் என்னென்ன அவைலபில் என்பதையும் பொறுத்தது!

      நீக்கு
    2. இல்லை ஸ்ரீராம்.... எனக்கு என்ன என்ன இருக்குன்னு தெரியும். நாந்தான் எல்லாம் வாங்கிவருவது. நாளைக்கு மோர்க்குழம்பு, சேப்பங்கிழங்கு கரேமது என்று நினைத்திருப்பேன். கிச்சன் நிலைப்படி தாண்டும்போது மாறிச் செய்துவிடுவேன். அதை உள்ளுணர்வு/கடவுளின் ஆக்ஞை என்று நான் நினைத்துக்கொள்வேன். நிஜமாகவே இப்படித்தான். (இது டிஃபனுக்குப் பொருந்தாது. சமையலுக்குத்தான்)

      அதனால இதைப் பண்ணு என்று சாப்பாட்டில் சொன்னாலும், உள்ள நுழைந்தபிறகு நிறையதடவை மாறிவிடும்.

      நீக்கு
    3. நம்ம வீட்டில் இந்தப் பிரச்னையே இல்லை. நம்ம சர்வாதிகாரி சொல்வது தான்! இன்னிக்குப் பாருங்க, சுண்டைக்காய்க் குழம்பு வைக்க நினைச்சுக் கடைசியில் தேங்காய்ச் சாதம், கத்திரிக்காய்க் கறி, எலுமிச்சை ரசம் பண்ணினேன். :))))))

      நீக்கு
    4. நெல்லை...    சில வருடங்களுக்கு முன்னர் நான்  தி நகர் சென்று காய்கறிகள் வாங்கி வருவது வழக்கம்.  அப்புறம் மெல்ல மெல்ல இவை குறைந்துபோய் என்ன எப்போது கிடைக்கிறதோ அதுதான் என்று ஆகிப்போனது.  பெரும்பாலும் நான் உள்ளே சென்று பார்க்கும்போது எனக்குத்தேவையானது அங்கு இருக்காது.

      நீக்கு
    5. தேங்காய் சாதம், கத்தரிக்காய் கறியா...   காம்பினேஷன் ஒத்துவருமா?!!!

      நீக்கு
    6. வரலை தான், நம்ம சர்வாதிகாரி சொன்னால் அதைத் தானே பண்ணலாம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  37. ரொம்ப நாளைக்குப் பிறகு காமாட்சி அம்மா பதிவு போட்டிருக்காங்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி/கீதா, கொஞ்ச நாட்களாகவே பழைய "தொட்டில்" பதிவுகளை மீள் பதிவாகக் கொடுக்கிறாங்க. முகநூலில் நான் அடிக்கடி பார்க்கிறேன். படித்துக் கருத்தும் சொல்றாங்க.

      நீக்கு
    2. ஓஹோ! மீள் பதிவா? அவங்க ப்ளாக்ல இரண்டு நாள் முன்ன போட்டிருப்பது இன்று வலைப்பக்கம் வந்ததால் தெரிந்தது.

      கீதா

      நீக்கு
    3. ஆமாம்...  பேஸ்புக் மூலமாக நானும் அவ்வப்போது காமாட்சி அம்மாவின் பதிவுக்கு சென்று வருகிறேன்.  மேலும் காமாட்சி அம்மா என்னிடம் சொன்னது, அவர்கள் நம் தளத்துப் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறார்கள் என்று.

      நீக்கு
  38. நேற்றைய பதிவில் திரு.கௌதம் ஜி அவர்களது கேள்வி ஒன்று...

    துறவிகளில் ஆண் துறவி சிறந்தவரா..
    பெண் துறவி சிறந்தவரா?.. என்று...

    யாராக இருந்தாலும்...

    அதானே!.. சந்நியாசி/ சந்நியாசினி..
    தபஸ்வி/ தபஸ்வினி!..

    வடமொழியில் இப்படி வார்த்தைகள் கிடைக்கின்றன.. ஆனால் -

    தமிழில்!?..
    துறவி/...... !?..
    துறவிக்கு ஞானப்பால் மட்டுமே!..

    மாங்காய்ப் பால் மாந்தி மந்தித்திருப்போர்க்கு
    தேங்காய்ப் பால் எதற்கடியோ குதம்பாய்
    தேங்காய்ப் பால் எதற்கடியோ!..

    வேறஎதாவது இனைவுக்கு வந்தால் கம்பேனி பொறுப்பல்ல!...

    ஆக,
    துறவியோ.. துறவினியோ... இருவரில்
    துறவறம் தான் சிறந்தது.. என, ஏழரையான் பட்டி பஞ்சாயத்து தீர்ப்பளிக்கிறது..

    பதிலளிநீக்கு
  39. // இனைவுக்கு..//

    நினைவுக்கு என்று தட்டச்சு செய்ய -
    ஏழரையானபட்டித் தீர்ப்பு அது வேலையைக் காட்டி விட்டது...

    பதிலளிநீக்கு
  40. என்உ ம்றவினர் தோசை வார்த்துக்கொடுக்கும்போது நாட் அவுட் என்றால் இன்னும் வேண்டும் ன்று அர்த்த்ம் நண்பர் ஒருவர் வேண்டாம் என்ரலும் போட வேண்டும் மிகவும் சங்கோஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் சங்கோஜத்துடன் நிறைய சாப்பிடுவேன்!   ஹா..  ஹா..  ஹா...   நன்றி ஜி எம் பி ஸார்.

      நீக்கு
  41. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பம் அருமை. முதல் தொகுப்பின் உங்கள் எண்ணங்களின் அலசல் சிறப்பு.

    இதில் "வேண்டாம், போதும்" என்ற வார்த்தைகள் நல்லவையாக இல்லையென்பதால்,"இன்னமும் கொஞ்சம்" என்ற உபசரிப்பு வார்த்தைக்கு "அதிகம்.. யதேஷ்டம்" என்ற பதில் வார்த்தைகளை அந்தக்காலப் பெரியவர்கள் கூறி வந்தார்கள்.

    எங்கள் பாட்டியும் இந்த மாதிரி சொல்லும் வார்த்தைகள் தீர்க்கமாக இருக்க வேண்டுமென நினைப்பவர்கள். அபசகுனமாக வார்த்தைகளை தப்பித்தவறி கூட வாயிலிருந்து வரக்கூடாது என நினைப்பார்கள். வீட்டில் ஏதாவது குறிப்பிட்ட சாமான்களை சமைக்கும் தருணத்தில் டக்கென்று "அந்த சாமான் வீட்டில் இல்லை"யென்பதை சொல்லாமல்,"அது நிறைந்திருக்கிறது" என நாசூக்காக குறிப்பிட்டு சொல்லச் சொல்வார்கள்.

    இரண்டாவதாக, இரு மனநிலை என்பது நம் அனைவருக்கும் இருப்பதுதானே..! நீங்கள் தேனீர் கேட்டு, காஃபிக்கு சரியென்றதும், "நமக்காக தேனீரை நிராகரித்து காஃபிக்கு ஒத்துக் கொண்டாரோ" என்ற பச்சாதாப எண்ணம் உங்கள் பாஸுக்கு வந்திருக்கும். இதனால் உடனே "ஒரு நிமிடத்தில் தேனீரே போட்டுத் தருகிறேன்." எனச் சொல்லியிருப்பார். எங்கள் வீட்டிலும்,இது அடிக்கடி நிகழ்வதுதான்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கமலா அக்கா...    அபசகுனமாக வேண்டாம் என்று சொல்ல வேண்டாம் என்று யதேஷ்டம், அதிகம் வார்த்தைகள் உபயோகிக்கிறார்கள் என்பது நல்ல  கருத்து.  அந்தக் காலத்தில்தான் எவ்வளவு நல்ல வார்த்தைகளை பேசி இருக்கிறார்கள்...  பாஸிடம் கமலா அக்காவும் நீங்கள் அவருக்கு ஆதரவாக வோட் போட்டிருக்கிறீர்கள் என்று சொல்லி விடுகிறேன்!

      நீக்கு
  42. வணக்கம் சகோதரரே

    எழுத்தாளர்கள் பற்றி நீங்கள் கூறுவது உண்மைதான். சில கதைகளில் அதன் கதாபாத்திரங்களை மனதில் ஆழமாக சென்று அமர வைக்கும் திறனுடைய வகையில் எழுதுவது அக்கால கதாசிரியர்களின் திறமையென்பதை மறுக்க முடியாத ஒன்று. சில கதைகளில் நம் மனமானது அதன் எழுத்தாள பாணியை முதலில் ஜீரணித்து அதை ரசிக்க வைத்து விடும் வழக்கமுடையவை.

    தாங்கள் கவிதையும், அதற்கேற்ற படமும் மிகவும் ரசிக்க வைத்தன. கவிதைக்கு தன் பதிலாக, மறு கவிதையை புனைந்த சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் திறமையை எண்ணி வியக்கிறேன். இரு கவிதைகளும், சிறப்பான அழகு தமிழ் கொஞ்சம் கவிதைகள். இரு கவிகளுக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

    கையெழுத்துப் பகுதியில், சகோதரர் ஜீவி அவர்களின் கையெழுத்தும், சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் கையெழுத்தும் அழகாக உள்ளது. இந்த கருடன் ஸ்லோகம் நானும் இனி மனப்பாடம் செய்கிறேன். எனக்கு "குங்குமாங்கித வர்ணாய" என்ற கருடன் ஸ்லோகந்தான் தெரியும்.

    ராமராஜன் மகள் கூறிய செய்தி எனக்குப் புதிது. இரு மனங்களும் பிரிவுக்குப் பின்னும், இன்னமும் ஒன்றியிருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.

    கண்ணதாசன் பகிர்ந்ததை ரசித்தேன். அனைத்தும் நன்றாக உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதாசிரியர் விஷயத்திலும் நீங்கள் சொல்லி இருப்பது சரி.  நம் மனதுக்கு ஒத்த எழுத்துகளை மனம் ஏற்றுக்கொள்கிறது.  அனைத்தையும் ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  43. இன்று வியாழன்.. எபி பக்கம் ஏன் வரவில்லை இதுவரை?

    காலையிலிருந்து வெ.சா., தஞ்சை ப்ரகாஷ், சூர்யகுமார் யாதவ், கில்ஜிட், காஷ்மீரின் ’அந்த’ பகுதியை இந்தியாவில் சேர்த்துக் காட்டிய சௌதி அரசின் வரைபடம், ஃப்ரெஞ்ச் அதிபருக்கெதிராக இஸ்லாமியர்கள் அணிதிரட்டல்?, ஜெர்மனியில் வளர்ந்து பெருகும் கொரோனா, அபிநந்தன் க்ரைஸிஸின்போது இந்தியா விட்ட மிரட்டலில், கைகால் நடுங்கிய பாக் தளபதி பாஜ்வா, வானதிக்கு பதவி..குஷ்புவுக்கு ரூட் க்ளியரா, தேஜஸ்வி யாதவ் சேர்க்கும் கூட்டம், பாஸ்வானின்பிள்ளை தாக்குப்பிடிப்பாரா, மாமல்லனின் புதுக்கதை அமேஸானில், சிஎஸ்கே .. கேகேஆரின் சான்ஸைக் கெடுத்துவிடுமோ!, ஆஸ்திரெலியா டூர் அணியில் நாலு தமிழர்கள், படிக்கலை ஏன் சேர்க்கலை - இப்படி ஏகப்பட்டது ஓடிக்கொண்டிருந்தால் என்னதான் செய்வது?

    சுவாரஸ்யமாக இருக்கிறது எபியின் இன்றைய பதிவு. அரை மணிநேரத்தில் சிஎஸ்கே-கேகேஆர் ஆரம்பமாகுது.. மெல்லத் திரும்பி இரவிலோ, நாளைக்காலையிலோ பின்னூட்டுவோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்று வியாழன்.. எபி பக்கம் ஏன் வரவில்லை இதுவரை?//

      ஓ...   இதிலிருந்து நான் அறிவது மற்ற வாரங்களில் முன்னரே படித்து விடுவீர்கள் என்பது.  இந்த வாரம்தான்  தாமதம்.


      //சுவாரஸ்யமாக இருக்கிறது எபியின் இன்றைய பதிவு. //

      நன்றி!

      இன்றைய மேட்ச்சால் சி எஸ் கேவுக்கு பத்து பைசா பிரயோஜனம் கிடையாது.  கோல்கத்தாவுக்காவது உதவினால் சரி!  டிகே சொதப்புகிறார்.  டிகேயும் அஷ்வினும் உரையாடிய ஒரு யு டியூப் உரையாடல் சுவாரஸ்யமாக இருந்தது.  ரஸ்ஸல் பற்றி எல்லாம் பேசி இருப்பார்.

      நீக்கு
  44. படப்பிரதியில் என் கையெழுத்தைப் படிக்க ஓரிரு இடங்களில் எனக்கே தடுமாறுகிறது. வாசித்து நன்றாக இருக்கிறது என்று குறிப்பிட்ட அன்பர்களுக்கு நன்றி.

    77 வயதில் நடுக்கமுறாத கையெழுத்து என்பதைக் குறிப்பிட மறந்து விட்டேன். வயதாக வயதாக கையெழுத்தில் ஒரு கிறுக்கல் வந்து விடுவது உண்மை தான். இளம் வயதில் என் தமிழெழுத்து இன்னும் அழகாய் இருக்கும். அப்பொழுதெல்லாம் கதைகளை வெள்ளைத் தாளில் ஒரு பக்கம் மட்டுமே எழுதி பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்புவதே வழக்கம். கையெழுத்துப் பிரதி என்றே அதை அழைப்பது பத்திரிகை உலகின் வழக்கமாகவும் இருந்திருக்கிறது.

    ஏகாந்தன் ஸார் சொன்னதும் எழுதி ஸ்ரீராமிற்கு அனுப்பியதை மறந்தே போய் விட்டேன். இன்று அதை பிரசுரித்ததில் எபி ஆசிரியர்களுக்கு நன்றி. இது ஒரு புதுமையான யோசனை தான். ஏகாந்தன் ஸார் குறிப்பிட்டவர்களில் பாக்கி இருப்பவர்களும் எழுதி அனுப்பினால் இந்த புதுமையில் ஒரு கிக் இருப்பதை நாம் எல்லோருமே அனுபவிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அந்தக் காலத்தில் அப்பாவும் ஒரு பக்கம் மட்டுமே எழுதி நிறைய கையெழுத்துப் பிரதிகள் பல பத்திரிகைகளுக்கு அனுப்புவார்!    நிறுத்தி நிதானமாக எழுதி இருப்பார்.

      உங்கள் கையெழுத்தையும் அனுப்பி கௌரவித்ததற்கு நன்றி ஜீவி ஸார்.

      நீக்கு
  45. கவிதை செய்திகள் என சிறப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  46. வல்லிம்மாவுக்கு பயங்கர ஞாபக சக்தி.

    //என்.எஸ். பெருமாளின்
    கவியும் மிக அழகு.//

    எம்.எஸ் நாடார் என்று வாசித்து விட்டாரே தவிர அவர் நினைவில் அது எம்.எஸ்.பெருமாளாக பதிந்து என்.எஸ்.பெருமாளாக தட்டச்சு ஆகியிருக்கிறது.

    எம்.எஸ். பெருமாள் பெயரை அந்நாட்களில் வானொலி நிகழ்ச்சிகளில் கேட்ட நினைவு அப்படியே அவர் மனசில் பதிந்திருக்கிறது. சுகி சுப்ரமணியத்தின் மகன் அவர். வானொலி இளைய பாரதம் நிகழ்ச்சியில் பெயர் பெற்ற பெயர். சிறந்த எழுத்தாளரும் கூட. கலைமகள் பத்திரிகையில் இவர் எழுதிய குறுநாவல் 'வாழ்க்கை அழைக்கிறது' தான் திரைக்கதைக்கான மாற்றங்களைப் பெற்று கே.பி.யின் 'அவள் ஒரு தொடர்கதை' ஆயிற்று.

    இப்பொழுதும் வல்லிம்மாவின் ஞாபகசக்தியை நினைத்தால் வியப்பாகத் தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   அப்படியா?   சுகி சிவம் அவர்களின் மூத்த சகோதரரா அவர்?  சில சமயங்களில் நம் ஆழ்மனதில் இருபாபுவை நமாமி அறியாமல் வெளியே வந்துவிடும்.  அதுபோலவேதானே தவறான எழுத்துகளில் எழுதப் பட்ட வார்த்தைகளைக் கூட நம் மூளை சரியான முறையில் படிப்பது?  

      வல்லிம்மாவின் ஞாபக சக்திக்குப் பாராட்டுகள்.

      நீக்கு
  47. இந்த வாரம் ஜீவி சார், கீதாஜியின் கையெழுத்துகள் வந்து வியாழனைச் சிறப்பிக்கின்றன. Both are legible. வார்த்தைகளினிடையே சரியாக இடம்விட்டுத் தொடரும் எழுத்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கையெழுத்தை வைத்து முன்னர் ஒருமுறை ஏதோ பலன் சொன்னதாக நினைவு...  இப்போது சொல்லவிலையே?

      நீக்கு
    2. ஆமா இல்ல? ஏகாந்தன் சார் என் கையெழுத்தை வைச்சு ஜோசியம் சொல்லுவீங்கனு எதிர்பார்த்தேனே! ஆனால் இதை விட இன்னும் நன்றாகவே எழுதுவேன். இது திடீரென வந்த நினைவில் எழுதி அனுப்பியது. அவசரக்கோலம் அள்ளித்தெளித்தாற்போல்!

      நீக்கு
    3. கோலம் என்பது கோலம். அள்ளித்தெளித்தது மாடர்ன் ஆர்ட் !

      நீக்கு
  48. கீதாம்மாவின் ஞாபகசக்தியோ இன்னொரு வகைத்தானது.

    இவருக்கும் நாம் குறிப்பிடும் எது பற்றியும் படித்தால் அது பற்றிய தன் ஞாபகங்களை பின்னூட்டங்களில் பதியாமல் விடமாட்டார். இப்படிப் பதிவது கட்டுரைகளுக்கோ, பதிவுகளுக்கோ வெகு அழகாக இருக்கும். ஆனால் கதைகளில் எழுத்தாளர் அந்தக் கதையின் நிகழ்வுக்காக எழுதும் எது பற்றியாவது தன் நினைவுக்களை தன் போக்கில் பகிர்ந்து கொள்வார். அது துண்டாக கதைக்கு சம்பந்தப்படாமல் தனித்துத் தெரியும்.

    உதாரணமாக எனது சமீபத்திய 'மாய நோட்டு' கதையில் அடுத்த பகுதியில் 'குதிரை ரேஸுக்காக கிண்டி போன பொழுது' என்று ஒரு வரி வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே கிண்டி ரேஸைப் பற்றி 'அது சூதாட்டம் போன்றது.. ரேஸூக்குப் போய் யாரும் உரும்பட்டதாக என் நினைவில் இல்லை, குதிரை மேல் பணம் கட்டி விளையாடும் அசட்டுத்தனம் இது' என்று கிழிகிழியென்று கிழித்து விடுவார். 'அட, கதைப் போக்குக்காக வந்த ஒரு நிகழ்வு தானே என்று விட்மாட்டார்.

    இத்தனையும் எழுதி 'என் அனுபவம் இது என்றால் இந்தக் கதையிலோ' என்று தன் அப்பிராயங்களைச் சொல்லி அதை கதையின் நிகழ்வு எதற்காகவாவது சம்பந்தப்படுத்தி எழுதினார் என்றால் பொருத்தமாக அழகாக எடுபடும். வாசிப்பவருக்கும் பிடிபடும். ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டார். இது அவரது பாணி.

    இத்தனைக்கும் நடுவில் ஒரு வேடிக்கை இருக்கிறது. பின்னூட்டங்களின் எண்ணிக்கை எகிறும் ஆனந்தம் சிலருக்கு உண்டு...

    அதைப் பற்றி இன்னொரு நேரத்தில் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவருக்குத் தோன்றுவது போல இன்னொருவருக்கு கற்பனை இருக்காது.  ஒரு பாடலில் பல ராகங்கள் என்று ஒரு பட்டு வரும்.  அதுபோல ஒரு பாடலைக் கேட்கும் பலரும் அவரவர் மனத்திற்கேற்ப பொருள் கொள்வார்கள்.  அது போல ஒரு விஷயத்தைப் படிப்பபவர்கள் அவர்கள் மனதில் தோன்றுவதை உடனே எழுதுவதும் ஒரு ஒரு மகிழ்ச்சி, சுவாரஸ்யம் இல்லையா?

      நீக்கு
    2. //உதாரணமாக எனது சமீபத்திய 'மாய நோட்டு' கதையில் அடுத்த பகுதியில் 'குதிரை ரேஸுக்காக கிண்டி போன பொழுது' என்று ஒரு வரி வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே கிண்டி ரேஸைப் பற்றி 'அது சூதாட்டம் போன்றது.. ரேஸூக்குப் போய் யாரும் உரும்பட்டதாக என் நினைவில் இல்லை, குதிரை மேல் பணம் கட்டி விளையாடும் அசட்டுத்தனம் இது' என்று கிழிகிழியென்று கிழித்து விடுவார். 'அட, கதைப் போக்குக்காக வந்த ஒரு நிகழ்வு தானே என்று விட்மாட்டார்.// கவலையே படாதீங்க. நான் ரேஸ்கோர்ஸையே இன்று வரை பார்த்தது இல்லை. ஆகையால் நீங்க தைரியமா அதைப் பத்தி எழுதலாம். நான் எந்தக் கருத்தும் சொல்ல மாட்டேன். ரூபாய் நோட்டு மாற்றுவது பற்றி உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்த மாதிரி நானும் அதை மாற்றுவது பற்றித் தான் என் அனுபவங்களைச் சொன்னேன். இது கதைக்குச் சம்பந்தமே இல்லை என்பதே எனக்கு இப்போத் தான் புரிந்தது. நன்றி சுட்டிக்காட்டியமைக்கு.

      நீக்கு
  49. ஸ்ரீராமின் குறுங்கவிதைக்கு துரைசாரின் நெடுங்கவிதை துணைவருகிறதோ!

    நண்பனுக்கு புதுமைப்பித்தனின் குறுமடல்.. பணம் கிட்டியிருக்குமா என்பது சந்தேகமே..

    ராமராஜனுக்குப் பக்கத்தில் ஆரது ஆண்ட்டி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி.  

      பணம் கிடைக்காது என்று தெரிந்தபின் வந்த விரக்தியில் வந்த வார்த்தைகளாய் இருக்கலாம்.  நேற்று இதே போல எனக்கு ஒரு அனுபவம்...!

      நீக்கு
    2. //ராமராஜனுக்குப் பக்கத்தில் ஆரது ஆண்ட்டி?// :)))))))))))))))))))))))))) vi.vi.si.vi.vi.si vi.vi.si

      நீக்கு
  50. தங்கள் பெற்றோர் பற்றி வழக்கறிஞர் அருணாவின் பகிர்தல் பிரமாதம். சொல்லப் போனால் ஒரு கதைக்கான கரு.
    சினிமா உலகு பற்றிய எதிர்மறையான செய்திகளையே கேட்டுப் பழகிய மனத்திற்கு
    அழகான சித்திரமாய் அமைந்த பதிவு அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  இதேபோல பார்த்திபன் சீதா தம்பதியினரையும் சொல்லலாம்.

      நீக்கு
    2. எல்லா வயசிலும் ’கலியாணம்’ ரொம்ப அவசியமாப் படுதா இதுகளுக்கு?! ஏற்கனவே ஒரு பெண்’மணி’ நாலஞ்சு செஞ்சுகிட்டதோடு, ரன்னிங் காமெண்ட்ரிவேற கொடுத்துக்கிட்டு அலயுது.
      இதுகளயெல்லாம் பாத்துட்டு நமது வாலிப, வாலிபிகளும்..

      நீக்கு
  51. தம்பி துரையின் கவிதையைப் படித்த பொழுது சில வரிகளைத் திருத்த கை துருதுருத்தது. நன்றாக அமைந்தவைகளைக் கூட செம்மை படுத்தப் படுத்த அதன் அழகு மேலும் கூடும் என்று சொல்வார்களே, அந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
    நடுவில் சமீபத்தில் என் வாசிப்புக்கு அறிமுகமான கவிதாயினி மாலா மாதவனின்
    மரபுக் கவிதைகளின் தாக்கம் வேறு.
    இதுவும் நன்று, அதுவும் நன்று என்றாலும்.. என்றாலும்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ ஸார் திறமையானவர்.  பாராட்டுக்குரியவர்.  நீங்கள் இங்கு சில பதிவுகள் படிப்பதில்லை என்பதால் உங்களுக்குத் தெரிந்திருக்குமோ இல்லையோ...   அவர் பாடல்களுக்கு இசையை அமைத்து ஒரு குறும்படத்தில் இடம்பெற்ற தகவல் அவர் சொல்லி இருந்தார்...

      நீக்கு
  52. ஸ்ரீராமின் கவிதையும் அந்த ஓவியமும் ஒன்றை ஒன்று விஞ்ச போட்டி போடுகிறது.

    'கருணாநிதியின் வசனத்தால் சிவாஜியின் நடிப்பு சிறக்கிறதா, இல்லை சிவாஜியின் நடிப்புத் திறனால் கருணாநிதியின் வசனங்கள் மிளிர்கிறதா என்பது ஒன்றை ஒன்று பிரித்துப் பார்க்க இயலாத ஒன்று' என்று மனோகரா திரைப்படத்திற்கு குமுதம் எழுதிய விமர்சனம் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  53. நான் அறிந்த வ்ரையில் தமிழ் எழுத்தாளர்களில் மணி மணியான கையெழுத்திற்குச் சொந்தமானவர் மணிவண்ணன் (நா.பா) தான்.
    ஜெயகாந்தனின் கையெழுத்தும் குண்டு குண்டாக அழகாக இருக்கும்.
    ரொம்பவும் கோழிக்கிறுக்கலாய் இருப்பது கி. ராஜேந்திரன் கையெழுத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ...   கையெழுத்தை எல்லாம் பார்க்க எப்படி வாய்ப்பு கிடைத்தது?

      நீக்கு
    2. முத்துமுத்தான கையெழுத்தைக் கடைசிக்காலம்வரை கொண்டிருந்தவர் எழுத்தாளர் வல்லிக்கண்ணன். எழுத்தாளர்களோடு கடிதத் தொடர்பில் தொடர்ந்து இருந்தவர். வண்ணநிலவன், வண்ணதாசன் போன்றோருக்கு அவர் எழுதிய கடிதங்களை screen shots-ஆக வெளியிட்டாலும் படிக்க சுவாரஸ்யம், பார்க்கக் குளிர்ச்சியாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இப்படி இன்னும் எழுத்தாளர்கள் இருக்கக்கூடும். சுஜாதா ஒரு கோழிகிண்டல் !

      நீக்கு
  54. ஒத்தையா ரெட்டையா மனமொன்றிப் புரிந்தது. எங்க வீட்டிலும் இதே கதை தான்.

    நாலு தோசைக்கு அப்புறம் 'இன்னொண்ணு போட்டுடட்டுமா?' என்ற கேள்வி வரும் பொழுது பாத்திரத்தில் மீதம் எவ்வளவு மாவுக்கரைசல் இருக்கிறது என்று ஒரு பார்வை பார்த்து விட்டுத் தான் வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பேன்.

    "இன்னொண்ணு போட்டுக்கோங்கோ. எனக்கு சாதம் இருக்கு..." என்ற பதில் நான் மீத மாவுக்கரைசலைப் பார்க்கும் பொழுது அனிச்சையாய் வரும்.

    செவ்வாய்க் கிழமை இரவுகளில் மட்டும் இதுவே உல்டாவாய் மாறுபடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாவுக்கரைசலைப் பார்ப்பதைவிட வயிற்றுக்கு கரைச்சலைப் பார்த்துச் சொல்லலாமோ!   ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு
  55. கண்ணதாசன் புதுமைப்பித்தன் சந்திப்பும் பேச்சும் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!