வியாழன், 12 நவம்பர், 2020

சௌக்கியமா?

"நல்லா இருக்கீங்களா? 
ஹலோ...   எப்படி இருக்கீங்க?  

"பார்த்து நாளாச்சு?"  ஹவ் ஆர் யூ?"

இதெல்லாம் நாம் யாரையாவது சந்திக்கும்போதோ, நம்மை யாராவது சந்திக்கும்போதோ ஆரம்பிக்கும் உரையாடல்.  மிகவும் சம்பிரதாயமான உரையாடல்தான் இது.

பெரும்பாலும் இதற்கு  "நான் நல்லாருக்கேன்...   நீங்க எப்படி இருக்கீங்க?' என்றுதான் பதில் சொல்வோம் / வரும்.  அதுதான் முறையும் கூட.

சிலர் இருக்கிறார்கள்.  இந்தக் கேள்விக்காகவே காத்திருந்தது மாதிரி "அதை ஏன் கேட்கறீங்க?  இரண்டு நாளா இடுப்பு வலி...  மூன்று நாளா முதுகு வலி..." என்று தொடங்கி விடுவார்கள்.    உரையாடலை வேறு திசையில் கொண்டு போக முடியுமா என்ன?  நெடுநாட்களுக்குப் பின் சந்தித்தவர் வேறு ஒன்றும் பேசமுடியாமல் இதையே (சங்கடத்துடன்) தொடர வேண்டியிருக்கும்.

அருகிலிருப்பவர்கள் சங்கடத்துடன் நெளிந்தாலோ, ஏதாவது சொன்னாலோ "இதில் என்ன இருக்கு?  அவர் கஷ்டத்தைச் சொல்றார்...  சொல்லுங்க நீங்க.." என்று ஊக்குவிப்பவர்களும் இருக்கிறார்கள்.  

என்னுடன் பணிபுரிந்த பெண்மணி ஒருவர் இருந்தார்.  அவர் பல வருடங்களுக்கு முன்னரே ஓய்வு பெற்று அந்தமான் சென்று விட்டார்.  சமீபத்தில் வெங்கட் அந்தமான் பயணக்கட்டுரை எழுதியபோது கூட எனக்கு அவர் ஞாபகம்தான் வந்தது.  அவர் பெயருக்கும் குணத்துக்கும் சம்பந்தமே இருக்காது.  

அவரிடம் யாரும் 'எப்படி இருக்கீங்க?' என்று கேட்கக் கூட வேண்டாம்.  தினசரி காலை முகமன் கூறும்போதே தொடங்கி விடுவார்.  "இந்தக் குறுக்கு வலி போகவே மாட்டேங்குது தம்பி..."  

ஒரு நாளைக்கு ஒரு வியாதி.   இவரின் இன்னொரு வழக்கம் எந்தெந்த வங்கியில் கடன் கிடைக்குமோ, அந்தந்த வங்கியிலிருந்தெல்லாம் கடன் வாங்கியிருந்தார்.  திரும்பிக் கொடுத்ததாய் இன்றுவரை சரித்திரமில்லை.  எப்படிதான் விசாரிக்காமல் கொடுத்தார்களோ!  இப்போதும் அவர் அட்ரஸ் கேட்டு தபால்கள் வந்த வண்ணம் உள்ளன!

சில இடங்களில் தன்னிடம் யாரும் அதிகம் பேசுவதில்லை என்கிற உணர்வு கொண்ட பெரியவர்கள் இருப்பார்கள்.  அவர்கள் பெரும்பாலும் இப்படித்தான் புலம்பத்தொடங்குவார்கள். 

இதனாலேயே நிறைய இடங்களில் வீட்டுக்கு வரும் உறவுகள், நட்புகள் அந்த வீட்டிலுள்ள பெரியவர்களை மரியாதையாக ஓரிரு வார்த்தை கேட்டுவிட்டு ஜாக்கிரதையாக நகர்ந்து விடுவார்கள்!

எனக்குத் தெரிந்த நட்பில் ஒருவர் மாதத்துக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்த்து விடுவார்.   தேவை இருக்கிறதோ, இல்லையோ...  அவரைப் பார்த்து வரிசையாக புகார்கள் சொல்லாவிட்டால் நிமமதியே இருக்காது அவருக்கு.  அப்படி மருத்துவரிடம் அழைத்துப் போகாவிட்டால் தங்கள் கதை கந்தல் என்று நண்பரும் மாதமொருமுறை வழக்கமாக செல்லும் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்து விடுவார்.  மருத்துவரும் காது குடைந்துகொண்டே இவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொள்வார்.  

காசு கொடுத்தாலும் காது கொடுத்துக் கேட்பதற்கு ஒரு ஆள் இருக்கிறதே என்கிற நிம்மதி பரவும் இவரிடம்.  

என் உறவில் ஒருவர் சற்றே வித்தியாசமானவர்.  "எப்படி இருக்கீங்க?" என்று கேட்டதும் "நல்லாயிருக்கேன்..." என்று பதில் வரும்.

சில நொடிகள் தாமதித்து "அப்படிதான் சொல்லணும் இல்லையா?  ஏதோ நானா இருக்கக் கண்டு இப்படி வளைய வரேன்....  அவ்வப்போது ஜுரம் வருது.  பல் வலி...  பல் ஆடுது...   காலெல்லாம் வலி...   தூக்கமே வரமாட்டேங்குது போங்க...  எல்லோரும் தூங்கறாங்க..  நான் முழிச்சுக்கிட்டிருப்பேன்..." என்று தொடர்வார்.

பகலெல்லாம் இன்ஸ்டால்மெண்டில் தூங்குபவர்.   தூங்கியதையும் ஒத்துக்கொள்ள மாட்டார்.  வயதானால் தூக்கமும், பசியும் குறைவது இயற்கை என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார்.  அவர் மகன் அவரிடம் "இப்படி வந்தவர்களிடம் இப்படியா பேசுவது?  அவர்கள் ஸம்ப்ரதாயமாகத்தானே கேட்டார்கள்?  நல்லாயிருக்கேன்னு சொல்லிட்டு நிறுத்த வேண்டியதுதானே?  என்ன நினைத்துக் கொள்வார்கள்?" 

"போடா...   என்னையும் மதிச்சு ஒருத்தர் கேட்கிறார்கள்...   என் குறையை நான் யாரிடம்தான் சொல்ல?" என்பார்.

என்னிடம் இப்படி நலம் விசாரிப்பவர்களிடம் நான் இப்படி எதுவும் சொல்வதில்லை - இதுவரை!  வயதானால் எப்படியோ!

===================================================================================================



வீரபாண்டிய கட்டபொம்மனை மற்ற பாளையக்காரர்களின் கண் எதிரே (அவர்களுக்கெல்லாம் எச்சரிக்கையாம்...  பயமுறுத்தி வைக்கிறானாம்) கயத்தாறில் புளியமரத்தில் 16-10-1799 ல் தூக்கிலிட்டதும் அந்த ஆங்கிலேய தளபதி மற்ற பாளையக்காரர்களுக்கு ஒரு ஆணை பிறப்பித்தான்.

"பாளையக்காரர்கள் யாரும் எந்த விதமான கோட்டையையும் இனி கட்டக் கூடாது.  வெடிகுண்டு, துப்பாக்கிகள் முதலிய கருவிகளை யாரும் வைத்திருக்கக் கூடாது.  அவற்றை உற்பத்தி செய்யவும் கூடாது.

ஈட்டி, துப்பாக்கி, வேல், வாள், வல்லயம் முதலிய படைக்கலங்களைக் குடிமக்களில் எவரும் வைத்திருக்கக் கூடாது, வைத்திருந்தால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும்.  ஒரு ஜமீனிலுள்ள குடி மக்களுடைய நல்ல நடத்தைக்கு அந்த ஜமீன்தாரே பொறுப்பாவார்.  குடியானவர் யாராவது ஆயுதங்களை வைத்துக்கொண்டு ஆங்கில அரசுக்குத் தொல்லை தந்தால் அவர் கொல்லப் படுவார்.  அந்தக் குடியானவரை வைத்திருந்த ஜமீன்தாரும் தன் ஜமீனை இழந்து கம்பெனியாரால் தண்டிக்கப் படுவார்"

இது ஜான் பானர்மேன் கயத்தாறில் வைத்து 21-10-1799 ல் பிறப்பித்த ஆணை.

யாருக்கு யார் ஆணை பிறப்பிப்பது?!

அதே சமயம் கட்டபொம்மனுக்கு தூக்கிலிடப்படும் ஆணை பிறப்பிக்கப் பட்டபோதும், குறிப்பிட்ட புளியமரத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டபோதும் கலங்காத கட்டபொம்மனின் மனோதிடம் பற்றியும், காட்டிக்கொடுத்த மற்ற இரு பாளையக்காரர்களைப் பார்த்த ஏளனப்பார்வை குறித்தும்  சென்னை கவர்னர் எட்வர்ட் கிளைவ் என்பவனுக்கு அனுப்பிய அறிக்கையில் உண்மையை மறைக்காமல் சொல்லியிருந்திருக்கிறான் இதே பானர்மேன்.

- படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்திலிருந்து...  

================================================================================================

இந்தப் படத்துக்கு இன்னும் சில கவிதை முயற்சிகளும் செய்திருந்தேன்.  ஐந்தை மட்டும் செலெக்ட் செய்து இங்கு பகிர்கிறேன்!


ஓடுவதற்குத்
தயாராகி விட்டோம்.
செல்ல(த்தான்) இடமில்லை.
நிற்குமிடம் தெரியவில்லை.

இனி
வானில்தான்
தேடவேண்டும்
மனிதங்களை.
இளமை
இருக்கும்வரைதான்
காதலும் காமமும்..
தொலையுமுன்
ஓடிவிடுவோம் வா..


அரிவாளோடு வருமுன்
ஆகாயத்தில் கலப்போம்
வந்து விடு.
இதென்ன ஆற்றங்கரையா..
கடற்கரைம்மா...
கல்லே இல்லை..
எப்படித் துவைப்பேன்
உன் துணிகளை?
நீயே வந்து பார்..
வா..
 

======================================================================================================

படித்ததிலிருந்து......

காகிதத்தைப் பார்த்தால் கழுதைக்குச் சாப்பிடத் தோன்றுகிறது.  கவிஞனுக்கோ எழுதத்தோன்றுகிறது.

மனித வாழ்க்கை - கர்ணனுக்குள்ள கையைக் கொடுத்துவிட்டு குசேலனுக்குள்ள பையைக் கொடுத்து விடுகிறான் இறைவன்.

வானம் நமது எல்லையல்ல.  நாம் பார்க்கிற நட்சத்திரங்கள் பறித்து விளையாட வேண்டிய பகல்நேரக் கனகாம்பரங்கள்

தன்னைத் தாழ்வாக நினைக்கிறவன் குள்ளமாகிப் போவான்.  மனிதன் தன்னை நீட்டிக் கொள்ளவேண்டும்; நிமிர்த்திக் கொள்ள வேண்டும்.

-வலம்புரி ஜான்.

=================================================================================================

வல்லிம்மாவுக்கு பந்தபாசம் படத்திலிருந்து சில பாடல்கள் பிடிக்கும்.  ஆமாம், அந்தப் படம் எப்படி?  அப்போது என்ன விமர்சனம் வந்தது?  படிக்க முடிகிறதா?



=================================================================================================

'அஸ்கு புஸ்கு ...  இப்படி எல்லாம் என்னை ஏமாற்ற முடியாது' என்று சொல்லிக்கொண்டு இந்த வாரம் விடைபெறலாம்!


93 கருத்துகள்:

  1. வியாழன் கதம்பம் அருமை. கவிதையில் "அரிவாளோடு வருமுன்" பொருத்தமாக இருந்தது.

    நீங்க எப்படி இருக்கீங்க?

    பதிலளிநீக்கு
  2. அன்பு ஸ்ரீராம்.
    வியாழக்கிழமை குருவார அருள் நிறையட்டும். நன்மை தரும் செய்திகளே
    காதில் விழவேண்டும்.
    எல்லோரும் கவனமாக தங்களைக் காப்பாற்றிக் கொண்டு
    இறைவன் அருளில் நலமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. அட, ''பந்த பாசம்''
    எழுதியவர் காந்தனோ. இவருக்குப் பின்னால்
    யாரோ.
    எடுத்த பிறகுக் குறை சொல்ல எத்தனையோ பேர் இருக்கலாம்.
    இவரே நல்ல படம் குறுகிய செலவில்
    புதுமுகங்களை வைத்து எடுத்திருக்கலாம்.
    :)

    மிக நன்றி ஸ்ரீராம். எங்கே எடுக்கிறீர்கள் இந்தப்
    பக்கங்களை. 1962இல் வந்த படமா இது. நினைவில்லை.
    நாங்கள் எல்லாம் மிக ரசித்தோம்.

    பாடல்கள்,
    1, பந்தல் இருந்தால் கொடி படரும்,
    பாலம் அமைந்தால் வழி தொடரும்...
    2, இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்து வரும் சித்திரப்
    பெண்பாவை....
    3, நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ
    நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ....
    4, கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
    காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு....
    இவைகள் சட்டென்று நினைவில் வந்தவை.

    திரு காந்தனுக்கு இசை பிடிக்காதோ என்னவோ:)))))))))

    என் ஜன்மம் சாபல்யம் அடைந்தது. வாழ்த்துகள்.நன்றிகள்.!!!!!!!!!!!
    படம் எங்க திண்டுக்கல்லில் நன்றாக ஓடியது. பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்.
    as always.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // திரு காந்தனுக்கு இசை பிடிக்காதோ என்னவோ:)))))))))// அப்படித்தான் நானும் நினைக்கிறேன். காதலிக்க நேரமில்லை படத்தின் இசை பற்றி கூட அப்படித்தான் எழுதியிருந்தார் அவர்.

      நீக்கு
    2. ஒருவேளை அப்போது காந்தனுக்கு கவர் வந்து சேரவிலையோ என்னவோ!

      நீக்கு
    3. என்னது? காதலிக்க நேரமில்லை படப் பாடல்களை கேட்கும்படி இல்லையென்றாரா? நிச்சயமாக அவருக்கு ஏதோ பிரச்னை. இசை புரியவில்லை. 

      நீக்கு
    4. "சுடச்சுட" விமர்சனம் பண்ணியிருப்பார் போல...!

      நீக்கு
  4. குசலம் விசாரிப்பவர்களிடம்,
    இப்பதான் கொஞ்ச நாட்களாக
    நன்றாக இருக்கிறேன் என்று சொல்லத் தொடங்கி இருக்கிறேன்.
    உரிமை எடுத்துக் கொண்டு எல்லோரிடமும்
    வலி சொல்வது வழக்கமாக இருந்திருக்கிறது.

    இந்த வயதிலாவது மாற வேண்டாமா!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எப்பொழுது, யார் கேட்டாலும் " வழக்கமான உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் நன்றாக உள்ளேன் " என்று சொல்வது வழக்கம்.

      நீக்கு
    2. ஹா...   ஹா...  ஹா....  விவகாரமான போஸ்ட் போட்டு விட்டேனோ!

      நீக்கு
  5. பகலெல்லாம் இன்ஸ்டால்மெண்டில் தூங்குபவர். தூங்கியதையும் ஒத்துக்கொள்ள மாட்டார். வயதானால் தூக்கமும், பசியும் குறைவது இயற்கை என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார். அவர் மகன் அவரிடம் "இப்படி வந்தவர்களிடம் இப்படியா பேசுவது? அவர்கள் ஸம்ப்ரதாயமாகத்தானே கேட்டார்கள்? நல்லாயிருக்கேன்னு சொல்லிட்டு நிறுத்த வேண்டியதுதானே? என்ன நினைத்துக் கொள்வார்கள்?" //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////// hahahhahahahhahahahahhaaaaaaaaaaaaaaaaaaaaaaaa.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனோ நாம் எல்லோருமே நன்றாயிருக்கிறோம் என்று ஒத்துக்கொள்ள மறுக்கிறோமோ என்று தோன்றுகிறது!  காணப்பட்டு விடும் என்று பயப்படுகிறோமோ!

      நீக்கு
  6. இரண்டு நாளா இடுப்பு வலி...
    மூன்று நாளா முதுகு வலி...

    ஹா.. ஹா.. ரைமிங் ஸூப்பர்

    பதிலளிநீக்கு
  7. வீர பாண்டியக் கட்டபொம்மனைக் கண்ணில் கொண்டுவந்து நிறுத்தியவர் நம் நடிகர் திலகம்.
    அந்தக் கடைசி வசனமும், புளியமரத்தை நோக்கி நடக்கும்
    நடையையும் மறக்க முடியுமா?

    சரித்திரத்தை எழுதி வைத்தானே பானர்மென்.
    இல்லாவிட்டால் அதுவும் தெரிந்திருக்காது.
    அட்டூழியம் செய்ய வந்தவர்கள்
    எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோய் மியூசியத்தில் வைத்து விட்டனர்.

    உருப்படியாக கட்டபொம்ம ராஜாவுக்கு சிலை வைத்தார் சிவாஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் நானும் என் அண்ணனும், மாறி மாறி கட்டபொம்மனாகவும், ஜாக்சன் துரையாகவும் வசனம் பேசுவோம்.

      நீக்கு
    2. ஒருவகையில் பானர்மேனைப் பாராட்டத்தான் வேண்டும். கட்டபொம்மன் வசனத்தைப் பேசாதவர் யார்? 

      நீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    நலம் வாழ்க என்றென்றும்...

    பதிலளிநீக்கு
  9. இதென்ன ஆற்றங்கரையா..
    கடற்கரைம்மா...
    கல்லே இல்லை..
    எப்படித் துவைப்பேன்
    உன் துணிகளை?
    நீயே வந்து பார்..
    வா.. //////இருப்பதிலியே இதுதான் யதார்த்தம்.
    மற்ற நான்கு கவிதைகளும் காதலர்கள்.
    இவர்கள் கணவன் மனைவி:)

    பதிலளிநீக்கு
  10. ///////தன்னைத் தாழ்வாக நினைக்கிறவன் குள்ளமாகிப் போவான். மனிதன் தன்னை நீட்டிக் கொள்ளவேண்டும்; நிமிர்த்திக் கொள்ள வேண்டும்./////////////////////////////
    அருமையான கருத்து. திரு வலம்புரி ஜானுக்கு நன்றி.
    அவரை மறந்து விடாமல் இருக்க
    அவர் எழுத்துகளைப் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இதில் வ ஜா கருத்தில் உடன்பாடு இல்லை.

      நீக்கு
    2. வலம்புரி ஜானின் சில வார்த்தைகள் வசீகரமாக இருந்தன.  கொஞ்சம் படித்துக் கொண்டிருந்த அந்தப் புத்தகத்தை எங்கேயோ வைத்து விட்டேன்.  தேடிக்கொண்டிருக்கிறேன்!

      நீக்கு
  11. மஹாராஜா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.

    முத்தான ஜோக்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஹாராஜா என்றால் பந்திக்கு முந்து, படைக்கு பிந்து என்று இருக்கவேண்டுமா!

      நீக்கு
    2. மகாராஜாவை யாரும் ஏமாற்ற முடியாது!!!

      நீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. வந்திருக்கும் நண்பர்களுக்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும் நல்வரவு, காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் நல்லனவையாக இருக்கவும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  14. "காந்தன்" விமரிசனம்? அப்போக் கல்கியில் வெளிவந்த விமரிசனமா இது? பந்தபாசம் படம் பெயர் நினைவில் இருக்கு. மற்றபடி பாடல்கள் எல்லாம் நினைவில் இல்லை. கேட்டால் நினைவுக்கு வரலாம். ஓடிப் போகும் காதலர்களுக்கு எழுதின கவிதைகளில் கடைசிக் கவிதை தான் ரொம்பப் பொருத்தம்னு என்னோட கருத்து. இஃகி,இஃகி,இஃகி/
    வலம்புரி ஜான் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரோ? அடிக்கடி பகிர்கிறீர்கள். கட்டபாண்டிய வீர பொம்மனைப் பற்றிப் படிச்சதும் கை துறுதுறு! அடக்கு! அடக்கு! என எனக்கு நானே சொல்லிக் கொண்டு அடக்கிக் கொள்கிறேன்.

    நானெல்லாம் யார் கேட்டாலும் எனக்கு என்ன வந்தது! நல்லாத்தானே இருக்கேன் என்று சொல்வேன். மாமா தான் வரவங்க கிட்டே எல்லாம் மாமிக்கு முடியலை. என்றே சொல்லுவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  15. சரி, முடிஞ்சா மத்தியானமா வரேன். கஷ்டம் தான். இருந்தாலும் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    நலம் விசாரிப்பு அலசல் நன்றாக உள்ளது. சி(ப)லருக்கு"எப்போதடா தன்னைப்பற்றி கேட்கப் போகிறார்கள் என்ற தாக்கம்" வலிகளின் அதிகப்படியான உபாதையாலோ, இல்லை, சுற்றி அமைந்துள்ள உறவுகளின் புறக்கணிப்பாலோ இயற்கையாகவே வந்து விடுகிறது. என்ன செய்வது? அவர்களை எந்த பரீட்சை வைத்தும் திருத்தவே முடியாது. ஹா. ஹா.

    இனி (என்னிடமோ ,இல்லை நான் பிறரிடமோ ) நலம் விசாரிக்கும் போது இந்தப்பதிவும் கண் (மனக்கண்) முன்னே ஓடும்.:) அந்தளவிற்கு நலம் விசாரித்தல் அலசல் சூப்பராக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இனி (என்னிடமோ ,இல்லை நான் பிறரிடமோ ) நலம் விசாரிக்கும் போது இந்தப்பதிவும் கண் (மனக்கண்) முன்னே ஓடும்.:)//

      ஹா...  ஹா...  ஹா...

      //சூப்பராக உள்ளது.//

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    ஒரு படத்துக்கு ஐந்து கவிதை மழைகளை சிறப்பாக தந்துள்ளீர்கள். அனைத்துமே நன்றாக இருக்கின்றன. எல்லாவற்றையும் ஒவ்வொரு கோணத்தில் ரசித்தேன். நாலும். ஐந்தும் படத்திற்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. பந்தபாசம் படத்தின் பாடல்கள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்று விமர்சனம் செய்துள்ள காந்தன் அப்போது ஏதாவது பிரச்னைகளில் இருந்திருக்கக் கூடும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவர் வராத பிரச்னைதான்...  வேறென்ன!

      நீக்கு
    2. பலருக்கு சொல்லப்பட்ட ‘கவர்’ வந்ததேயில்லை. இந்த காலகட்டத்தில் சிலருக்கு வாயெல்லாம் பல்லாக முதலாளிகளால்/தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட்ட ’செக்’குகள் வரிசையாக ‘பௌன்ஸ்’ ஆகியதை பிறகே அறிந்தார்கள் - உதாரணம்: நா.முத்துக்குமார்.

      நீக்கு
    3. கவிஞருக்கு கொடுக்கப்படும் செக் / கவர் வேறு...  விமர்சகர்களுக்கு, நிருபர்களுக்கு கொடுக்கபப்டும் கவர் வேறு!

      நீக்கு
  19. இங்கே எல்லாம் ஹவ் ஆர் யூ என்று கேட்டடு கொண்டே போய்க் கொண்டிருப்பார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நின்றால் புலம்பத் தொடங்கி விடுவார்கள் என்று அறிந்திருக்கிறார்கள்!

      நீக்கு

  20. சிலர் ஹவ் ஆர் யூ என்று என்னிடம் கேட்டால் பதிலுக்கு சோ ஃபார் குட் என்று சொல்லிவிடுவேன் அதுதான் என் பழக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை கொஞ்சம் offensive ஆக எடுத்துக்கொள்பவர்கள் உண்டு. ('அப்போ நான் வந்ததால் இனிமேல் good இல்லை என்கிறீர்களா ----- ')

      நீக்கு
    2. இதை நான் இங்கே வேலை பார்க்கும் இடத்தில் மேனேஜரில் இருந்து சக ஊழியர்கள் மற்றும் கஸ்டர்மர்கள் வரை சொல்வதுண்டு இது வரை யாரும் தப்பாக எடுத்து கொண்டதில்லை பலரும் நீ சொல்வது சரி அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது அல்லவா என்று சொல்லி செல்லுவார்கள்

      நீக்கு
    3. என் நண்பர் ஒருவர் "நல்லா இருக்கேன்...  அஸ் ஆல்வேஸ்"  என்பார்!

      நீக்கு
  21. இந்த வார தொகுப்பு கொஞ்சம் சிறியதோ? கவிதைகள் பிரமாதம். நீங்கள் ஒரு ஆசுகவிதான்! கவிதை சும்மா கொட்டுகிறதே! 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறுகிப்போச்சோ...   ஆனால் அதுதான் நல்லது!  இல்லையா?


      ஹா..  ஹா...  ஹா...   நான் லூசுகவி!   நன்றி பானு அக்கா!

      நீக்கு
  22. இந்த நலம் விசாரிப்பதை பற்றி ஒரு வியாசமே எழுதலாம். ஓமானியர்களுக்கு தினமும் "கேஃப் ஆலக்?(ஹவ் ஆர் யூ)" என்று விசாரிக்க வேண்டும். டெலிபோனிலும் அப்படி விசாரித்துவிட்டுதான் உரையாடலை தொடங்குவார்கள். அது அவர்களுக்கே போர் அடிக்குமோ என்னவோ, சில சமயம் " "கேஃப் ஆலக்?" என்றால் கோபமாக 'bad' என்பார்கள் .
    சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள், ஒரு பிரிட்டிஷ்காரனிடம்,"ஹவ் ஆர் யூ?" என்றால் பதிலுக்கு அவனும் ஹவ் ஆர் யூ? என்பான் சரியாகப் போய் விடும். ஒரு அமெரிக்கனிடம்  கேட்டால் "fine என்பான், which is a lie"  இதே கேள்வியை இந்தியனிடம் கேளுங்கள்," ஓடறது, சல்தா ஹை , நடக்குன்னு, கோயிங் ஆன், புல்லிங் ஆன் " என்றெல்லாம் விதம் விதமாகி கூறுவார்கள். நம்மில் நன்றாக இருக்கிறேன், என்று சொல்பவர்கள் குறைவு. என் சிநேகிதி ஒருத்தி எப்போதும்,"நன்னா இருக்கோம் பானு" என்பாள். அவள் அப்படி கூறுவது எனக்கு மிகவும் பிடிக்கும் அதற்காகவே அவளிடம் அடிக்கடி டெலிபோனில் பேசுவேன்.    

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. என் நண்பர் ஒருவரும் - என்னைப் பற்றி அவ்வாறே சொன்னார்.

      நீக்கு
    2. அப்படி நல்ல வார்த்தைகள் கேட்பதையே விரும்புகிறோம்...   நல்ல பழக்கம்.

      நீக்கு
  23. //கட்டபொம்மனுக்கு தூக்கிலிடப்படும் ஆணை பிறப்பிக்கப் பட்டபோதும், குறிப்பிட்ட புளியமரத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டபோதும் கலங்காத கட்டபொம்மனின் மனோதிடம் பற்றியும், காட்டிக்கொடுத்த மற்ற இரு பாளையக்காரர்களைப் பார்த்த ஏளனப்பார்வை குறித்தும்  சென்னை கவர்னர் எட்வர்ட் கிளைவ் என்பவனுக்கு அனுப்பிய அறிக்கையில் உண்மையை மறைக்காமல் சொல்லியிருந்திருக்கிறான் இதே பானர்மேன். // அந்த ஏளனப் பார்வையை அப்படியே காட்டியிருப்பார் சிவாஜி. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் சொன்னால் - கீ சா 'அடக்கு --- அடக்கு ' என்பார்.

      நீக்கு
    2. உண்மையில் நான் இன்னும் அந்தப் படம் பார்க்கவில்லை.  எனவே அந்தக் காட்சி எனக்குத் தெரியவில்லை.

      நீக்கு
    3. இப்படியெல்லாம் இருந்தும்
      இவரெல்லாம் ஒரு நடிகரா.. என்று
      நடிகர் திலகத்தைப் பார்த்து ஊளையிட்ட நடிகர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்..

      சிவாஜி திரைப்பட விளம்பரங்களில் சாணியடித்து மகிழ்ந்த தமிழகத்து விசிலடிச்சான் குஞ்சுகளையும் பார்த்திருக்கிறோம்...

      யாரோ ஒரு அரசியல் பிரமுகர்(!)
      வாத்தியார் கட்டபொம்மனாக நடித்திருந்தால் பானர்மேனைத் தூக்கில் போட்டிருப்பார் என்று பினாத்திய அவலத்தையும் கேட்டிருக்கிறோம்...

      நீக்கு
  24. கதம்பத்தில் படத்திற்கான கவிதை முயற்சி வரிகள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது...!

    பதிலளிநீக்கு
  25. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  26. "இனி வானில்தான் தேடவேண்டும் மனிதங்களை.!" அருமை!!
    பந்த பாசம்! எத்தனைஅ ருமையான படம்! சிவாஜி, ரங்கராவ், ஜெமினி எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். அந்த ' நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ?'பாடலை மறக்க முடியுமா? சீர்காழியின் குரல் அத்தனை இனிமையாக இருக்கும்! ஆனந்த விகடனில் வந்த விமர்சனமா இது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மனோ சாமிநாதன் மேடம்.    ரெங்காராவின் இயல்பான சந்திப்பு எனக்கும் ரொம்பவும் பிடிக்கும்.

      நீக்கு
    2. காந்தன் விகடனில் எழுதியதில்லை. அதோடு புத்தகத்தின் நீளமும் கல்கியின் அளவு.

      நீக்கு
  27. ..எப்படி துவைப்பேன் உன் துணிகளை..//

    ஆண் கையைப் பிடித்தோடும் அந்த அழகி, அவனுடைய துணி துவைக்கக் கல் தேடுபவள் போலவா தெரிகிறாள் உங்களுக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நைச்சியமாய்ப் பேசிதான் காரியம் சாதிக்கவேண்டும் ஏகாந்தன் ஸார!!

      நீக்கு
  28. ஒரு சம்பாஷணை ஊர்வ்ம்பு செய்ய சௌக்கியமா என்று நம் ஊரில் துவங்குவது வழக்கம் ஆங்கிலெயர்கள் வெதர் பற்றிக் கேட்டு துவங்குவர் ஹோட்டலில் டிஃபன்சாப்பிடு கிறிர்களா என்று அபத்தமாக விசாரிப்பதும் சம்பிரதாயமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தியேட்டரில் பார்க்கும்போது படம் பார்க்க வந்தீங்களா? என்று கேட்பது போல...! நன்றி ஜி எம் பி ஸார்.

      நீக்கு
  29. சில சமயங்களில் வயதானவர்களுக்கு இம்மாதிரி ஸம்பாஷணைகள் வடிகால்களாக அமைவதற்கு வாய்ப்பு கள் உள்ளது. வியாதிகளின் பட்டியல்தான் அது.அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காமாட்சி அம்மா.. நீங்க சொல்றதும் சரிதான்.

      நீக்கு
    2. நான் எவர் gகிரீன் என்றுதான் சொல்வது வழக்கம் அன்புடன்

      நீக்கு
  30. கவிதை ரசனை.
    ராஜா ஜோக் செம ....ஹா...ஹா

    பதிலளிநீக்கு
  31. கலங்காத கட்டபொம்மனின் மனோதிடம் பற்றியும், காட்டிக்கொடுத்த மற்ற இரு பாளையக்காரர்களைப் பார்த்த ஏளனப்பார்வை குறித்தும் சென்னை கவர்னர் எட்வர்ட் கிளைவ் என்பவனுக்கு அனுப்பிய அறிக்கையில் உண்மையை மறைக்காமல் சொல்லியிருந்திருக்கிறான் இதே பானர்மேன்.

    உயிரைத் துச்சமாய் மதித்த வீரம்

    பதிலளிநீக்கு
  32. கதம்பம் அருமை.
    நலமா என்று கேட்டால் இவ்வளவு கேட்க வேண்டுமா!

    கவிதைகள் அருமை. படம் விமர்சனம் , சிரிப்பு என்று பதிவு நன்றாக இருக்கிறது.
    பந்தபாசம் பாடல்கள் நன்றாக இருக்கும் அவர் பாடல் நன்றாக இல்லை என்கிறாரே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!