வெள்ளி, 8 ஜனவரி, 2021

வெள்ளி வீடியோ : நீர் கொண்டு போகின்ற கார்மேகமே, தூரல்கள் நீ போட தாகம் தீரும்...

 மகுடி!  

இதை வாசித்து பாம்பைப் பிடித்து விடுவார்கள் என்று நம்பி இருக்கிறேன்.  இதை வாசித்தால் எங்கிருந்தும் ஒளிந்திருக்கும் பாம்புகள் வந்துவிடும் என்று நம்பி இருக்கிறேன்.  ஆனால் சுவாரஸ்யமான வாத்தியம்தான் மகுடி.  அதை எப்படி செய்கிறார்கள் என்று பாருங்கள்.



அடுத்த வீடியோவில், பாவமாய் சோர்ந்து சோகத்துடன் அமர்ந்திருக்கும் பாம்பு.  அருகில் மகுடி வாசிப்பவர்.  சாதாரணமாய் வாசிப்பவர் அசைவைப் பொறுத்தோ, கை அசைவது, வாத்தியம் அசைவது, அசைவுகளைப் பொறுத்தோதான் பாம்பு தலையை ஆட்டும்.  அது இசைக்கு ஆடுவது போல நமக்குத் தோன்றும்.  "நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே என்று வித்தை காட்டலாம்.  இந்த வீடியோவில் அந்த வீரியமான பாம்பின் பரிதாப  நிலையைப் பாருங்கள்!




என்னது....!   வெள்ளி வீடியோவில் பாட்டுக்கு பதிலாக பாம்பைக் காட்டுகிறானே என்று பார்க்கிறீர்களா!

மகுடி...   1984   இல் வெளியான தமிழ்த் திரைப்படம்.  மோகன் -  நளினி நடித்த இந்தத் திரைப் படம் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை போல...   படச்சுருளை பாம்பு தூக்கிச் சென்று விட்டது போலும்...!  யு டியூபில், விக்கியில் எங்கும் விவரங்கள் கிடைக்கவில்லை.

ஆனால் அதனால் பெரிய பாதகமில்லை.  நமக்குத் தேவை அதிலிருந்து இரண்டு பாடல்கள்.  இரண்டே பாடல்கள்.  இனிமையான பாடல்கள்.  

இளையராஜா இசையில்.  , அதில் ஒரு பாடல் அவரது குரலிலேயே , இரண்டும் இன்றும் நினைவில் நிற்பவை.  பாடல்களை எழுதி இருப்பவர் வாலி.

முதலில் இளையராஜா குரலில் வரும் தெம்மாங்கு பாடல்.  

கரட்டோரம் மூங்கில் காடு 
காட்டச்சுத்தி வண்டு பறக்குது 
ரீங்காரம் போட்டுக்கிட்டு 
மூங்கிலையும் வண்டு தொளைக்குது 
வண்டு தொளச்ச ஓட்ட வழியே காத்தும் அடிச்சா 
புது சத்தமும் கேக்குது என்ன சத்தம் அது 
என்னை இழுக்குது ஆகமொத்தம் 

தொட்டாப் புடிக்கும் அந்த 
துடிகாரன் போட்ட கம்பி 
சீமையிலே சேதி சொன்னா 
இங்க வந்து பேசுதில்லே 
மாடுகன்னு மேயுதடி 
மணியோசை கேக்குதடி 
ஓசதான் கேட்டுதான் 
ஊர்க்குருவி பாட்டுப் படிக்கும் 

அண்ணன் அடிச்சா அக்கா இருக்கா அழுவாத 
அக்கா அடிச்சா அத்தை இருக்கா அழுவாத 
அத்தை அடிச்சா அம்மா இருக்கா அழுவாத ..  

அந்த அம்மாவே அடிச்சுபுட்டான்னு அழுவறியாடா கண்ணா  

கவலைப்படாத ராசா 

என் பாட்டு இருக்கு அழுவாத 
அதைக் கேட்டு உறங்கு பொழுதோட 

தெக்கே அடிச்ச மழ 
வடக்கால தெச திரும்பி 
ஊசியலக் காட்டுக்குள்ள 
ஓடையில பாயுதடி 
ஓடத்தண்ணி தளும்பையில 
அலையோசை கெளம்பையில 
ஓசதான் கேட்டுதான் 
பாக்குமரம் பாட்டுப் படிக்கும் 




மகுடி என்கிற பெயருக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தமோ..   யாருக்குத் தெரியும்?  வழக்கம்போல படம் பார்க்கவில்லையே...  மேலே கேட்ட பாடல் ஒருவகை இனிமை என்றால் அடுத்து கேட்க இருக்கும் பாடல் இனிமையோ இனிமை.  எஸ் பி பி - ஜானகி குரலில் வரும் பாடலில் பாடலுக்கு இடையில் வரும் இசையும் சரி, பாடல் டியூனும் சரி..  மிக இனிமை.  என்ன ராகத்தில் அமைந்திருக்கிறது என்று கீதா ரெங்கன் கேட்டால் சொல்லக்கூடும்.  நீலக்குயில் என்று ஆரம்பிக்கும் சில பாடல்கள் இருக்கின்றன.  அதில் முதலிடத்தில் இருக்கும் பாடல். எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

கபகரிசா ரிஸசதச.. 
கபகரிசா ரிஸசதச....

சரிகபகரி கபகரி சரிசா.
சரிகபகரி கபகரி சரிசா.

கபதப கபகரி சரிகபதா ....
கபதப கபகரி சரிகபதா ....

தபதபதப...
கபதபதப....
தபதபதப...
கபதபதப....

நீலக்குயிலே உன்னோடு நான்  பண்பாடுவேன் 
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன் 
இந்நாளிலே, சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே.. 
உள்ளம்.. பாமாலை பாடுதே...

நீலக்குயிலே உன்னோடு நான்  பண் பாடுவேன் 
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன் 
இந்நாளிலே, சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே.. 
உள்ளம்.. பாமாலை பாடுதே...

அதிகாலை நான் பாடும் பூபாளமே  
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு..
நாள்தோறும் நான் பாடும் தேவாரமே 
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு..

ஆகாயம் பூமி, ஆனந்த காட்சி   
சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி

திசைகளில் எழும் புது  இசை அமுதே.. வா.. வா.....

நீர் கொண்டு போகின்ற கார்மேகமே,  
தூரல்கள் நீ போட தாகம் தீரும்...

நதி பாயும் அலையோசை சுதியாகவே 
நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்...  
மலர்கூட்டம் ஆடும்,  மலைச்சாரல் ஓரம்...   
பனிவாடை காற்று பல்லாண்டு பாடும்   
செவிகளில் விழும்  சுர லய சுகமே...வா. வா...


53 கருத்துகள்:

  1. அதிகம் பேசப்படாத படத்தைப் பற்றி அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் நன்மையும், இனிமையும், ஆரோக்கியமும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. படத்தோட பெயரே கேட்டதில்லை. நினைவு வைச்சுண்டு தேடி எடுத்துப் பாடல்களைப் பகிர்ந்ததுக்கு நன்றி. மத்தியானமாப் பாட்டைக் கேட்கணும். போயிட்டு அப்புறமா வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதானே வேண்டாங்கறது.... பத்தாயிரம் தமிழ் திரைப்பங்கள்ல, நீங்க பார்த்த பதினைந்து படங்களில் ஒன்று இடம்பெறணும்னு நினைப்பது டூ டூ மச் இல்லையோ?

      நீக்கு
    2. பாடல்களை வைத்துதான் படம் நினைவில் இருக்கும்.  அந்த வகையில்தான் படம் பெயர் நினைவில் இருக்கிறது.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல்கள் இரண்டும் அருமை. ஏற்கனவே நிறைய தடவைகள் இந்த இரு பாடல்களையும் கேட்டு ரசித்திருக்கிறேன். இரண்டாவது பாடல் வரிகள் பார்த்ததுமே பாடல் நினைவுக்குள் ஓட ஆரம்பித்து விட்டது. முதல் பாடலும் அடிக்கடி கேட்டிருக்கிறேன் என்பது பாடல் கேட்டதும் புரிந்து விட்டது. இரண்டையும் இப்போதும் கேட்டு ரசித்தேன். ஆனால் படம் இதுதான் என அவ்வளவாக நினைவில்லை.

    அருமையான பாடல்களை தந்தது மட்டுமின்றி அந்தப் படத்திற்கு பொருத்தமாக சில செய்திகளையும் தொகுத்து தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். அந்த வீடியோக்களையும் பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    என்றும் ஆரோக்கியத்தோடு இருக்க இறைவன் அருள வேண்டும்.

    மகுடி படம் நினைவிருக்கிறது.
    பாடல்கள் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் பார்த்த நினைவு.
    பாடல்கள் இரண்டுமே அருமையானவை.

    இளையராஜவுக்கேத்த சுகமான இசை. முதல் பாடல்.

    ராதா, மோகன், ராதா விஜயகாந்த் என்று படங்கள் வந்து கொண்டிருந்த காலம்.



    பதிலளிநீக்கு
  7. நளினி மோகன் ஜோடியும் பிரபலம். நீலக்குயிலே
    உன்னோட நான். மிக மிக இனிமை.
    கேட்டுக் கொண்டே இருக்கலாம்/.
    மிக நன்றி ஸ்ரீராம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா...  இரண்டு பாடல்களுமே நன்றாய் இருக்கும் என்றாலும் இரண்டாவது ரொம்ப நல்லாயிருக்கும்.

      நீக்கு
  8. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
    எங்கெங்கும் நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  9. இன்றைய இரண்டு பாடல்களுள்
    எனக்கு மிகவும் பிடித்தது -
    நீலக் குயிலே... - தான்!..

    டேப் ரெகார்டரை ( 2 in 1 ) நான் தொகுத்த ஒலி நாடாக்கள் எல்லாவற்றிலும் இந்தப் பாடல் இருக்கும்..

    இதனோடு சேர்ந்த இன்னொரு பாடல் -
    இதயம் ஒரு கோயில். அதில்
    உதயம் ஒரு பாடல்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எந்த வயசுல? திருமணம் ஆன காலங்களிலா அல்லது அதற்கு முந்தைய காலங்களிலா? அந்த நீலக்குயிலை கதையில் சந்திப்போமா?

      நீக்கு
    2. சந்திக்கலாம் தான்..

      ஆனால் எபியில் சந்திக்க இன்னும் ஒரு வருடம் வரை ஆகலாம்.. இப்போதே ஜூலைக்கு அப்பாலும் பட்டா போடப்பட்டிருக்கிறது..
      சில வேதனைகளால் இரண்டு மாதங்களாக எதுவும் புதிதாக எழுத இயல வில்லை...

      நீக்கு
    3. சோதனைகள்தான் படைப்பாளிக்கு நிறைய எழுத ஊக்கம் கொடுக்கும் துரை செல்வராஜு சார்.... துயரங்கள் விரைவில் தீரட்டும்.

      நீக்கு
    4. நானும் ஒன்றிரண்டு பாடல்களை ஒலிநாடாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பதிந்து வைத்திருக்கிறேன்.

      நீக்கு
    5. உங்கள் துயரங்கள் யாவும் தீர நெல்லைத்தமிழனுடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    6. //இப்போதே ஜூலைக்கு அப்பாலும் பட்டா போடப்பட்டிருக்கிறது..//

      :-)

      நீக்கு
  10. அனைவருக்கும் காலை வணக்கம். பாடல்கள் கேட்டிருக்கிறேனா என்பது கெட்டால்தான் தெரியும். மேல் விவரங்களுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கெட்டால்தான் தெரியும்??

      நீக்கு
    2. கேட்டாச்சா?  எப்படி இருந்தது பானு அக்கா?

      நீக்கு
    3. அச்சச்சோ! என்ன ஒரு விபரீத ஸ்பெல்லிங் மிஸ்டேக்!!??

      பாடல்கள் இரண்டுமே கேட்ட ஞாபகம் இல்லை.  நீலக்குயில் பாடல் நன்றாக இருக்கிறது. ஸ்ரீராம் இப்படிப்பட்ட அபூர்வ பாடல்களைத் தேடி, விவரங்களோடு பகிர்வதை பாராட்டத்தான் வேண்டும். நளினி,நதியா, ரேவதி போன்றவர்கள் மோகனோடும், சுரேஷோடும் நிறைய நடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மோகனுக்கு கிராமத்தான் வேடம் பொருந்தவில்லை. 

      நீக்கு
  11. நீலக்குயிலே உன்னோடுதான் பாடலும் என் சோக்க் கதையைக் கேளு தாய்க்குலமே பாடலும் ஒரே ராகமா? கீதா ரங்கனுக்கு யார் தந்தி அடிப்பது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ' நீலக்குயிலே உன்னோடு..' பாடல் ரசிக ரஞ்சனி ராகம். என் சோகக் கதையைக் கேளு பாடல் - அந்த ராகம் இல்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. உங்களுக்கான பதில் வந்து விட்டது நெல்லை!

      நீக்கு
  12. இரண்டு பாடல்களுமே சிறப்பான பாடல்கள். கேட்டு ரசித்த பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  13. கரட்டோரம் மூங்கில் காடு - பாடல் கேட்டு பல நாள் ஆச்சி...!

    இனிமையான பாடல்கள்...

    பதிலளிநீக்கு
  14. இப்போத் தான் இரண்டு பாடல்களையும் முதல் முறையாய்க் கேட்டேன். நீலக்குயிலே பாடல் ராகத்தில் வேறே ஏதோ பாடலும் இருக்கோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கோ?  ரசிகரஞ்சனி ராகத்தில் ஏதாவது பாடல்கள் அமைக்கப்பட்டிருந்தால் இருக்கலாம் கீதா அக்கா!

      நீக்கு
    2. தென்றல் வந்து என்னை தொட்டது......

      நீக்கு
  15. மகுடி செய்யப்படும் விதம் பற்றிய காணொளி நன்றாக இருக்கிறது. அந்தப் பாம்பு ஏன் அப்படி கேராக இருக்கிறது? 

    பதிலளிநீக்கு
  16. இரண்டு பாடல்களும் இனிமை.முதல் பாடல் இப்பொழுதுதான் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  17. அருமையான பாடல்கள்
    நீலக் குயிலே பாடலை பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!