ஞாயிறு, 5 டிசம்பர், 2021

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 11.

 

மலையும், இலையும் - -



மரமும் செடியும் - -



வானும் நிலமும் - - -





படம் எடுப்பவரை எடுத்த படம் ! 


கீரிப்பாறை வந்துவிட்டோம் - - 


அடையாறு ஆலமரம்தான் விசேஷமா - நான் கூடத்தான் ! என்கிறது கீ பா ஆ ம 
 


மலையும் காரும் - - -


கம்பம் சாய்ந்திருக்கிறதா அல்லது காமிரா கோணம் அப்படி உள்ளதா? 


இந்த ஆடுகள்தான் கம்பத்தை முட்டி மோதி சாய்த்துவிட்டனவோ? 


அங்கேயும் எருக்கை உண்டு போலிருக்கு - -  


வயர் சுருட்டலுக்கு கம்பம் பூச்செண்டு கொடுப்பது போல இல்லை? 
 

அட ! வாழை மரம் கூடவா அங்கே இருக்கு! 



வாழையைக் கும்பிடுகிறாரா ! 


ஓ ! படம் எடுக்கிறாரா !! 


தொடர்ச்சி அடுத்த வாரம் 

= = = =

68 கருத்துகள்:

  1. ஆஹா, ஒவ்வொரு ஞாயிறும் இந்தப் பதிவு எனக்காகக் காத்துட்டு இருக்கே/

    பதிலளிநீக்கு
  2. அதுக்குள்ளே யாரும் எட்டிப் பார்க்கலை போல! அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மீண்டும் இன்னொரு லாக் டவுன் இல்லாமல் நாட்கள் நன்றாகக் கழியப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. படங்களும் அதற்கான விவரணைகளும் அருமை. அதிலும் அந்தக் கம்பம் மின் வயர் சுருட்டலுக்குப் பூக்கள் கொடுக்கும் கற்பனை அபாரம்.

    பதிலளிநீக்கு
  4. வாழை எங்கேயும் உண்டே! அதிலும் மலை வாழை நிச்சயமா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! நான் திண்டுக்கல் பகுதியில் மட்டும்தான் மலை வாழை உண்டு என நினைத்திருந்தேன்.

      நீக்கு
    2. ஹிஹிஹி, ருசியும் வாசனையும் எப்படினு தெரியலை. திண்டுக்கல் சிறுமலைப்பழத்துக்குத் தனி வாசனை உண்டு. எங்க பக்கம் சம்பந்தி வீட்டுக்கு வாழைப்பழம் வாங்கிச் சென்றால் பூவன் பழம், ரஸ்தாளி, கற்பூர ரஸ்தாளி, பச்சைப்பழம் ஆகியவை மட்டம். மலைவாழைப்பழம் தான் வாங்கிப் போவோம்.

      நீக்கு
    3. மலைகளிலே வளர்ந்தாலே மலை வாழை என நான் நினைக்கிறது சரியா? தப்பா? புதன் கேள்வி எல்லாம் இல்லை. ஆகவே உடனே பதில் சொல்லிடுங்க.

      நீக்கு
  5. அதே போல் எருக்கும் நிச்சயம் இருக்கும். அம்பேரிக்காவில் பார்த்த நினைவு இல்லை. ஆனால் அங்கே வாழை நிறையப் பயிரிடுகின்றனர். அநேகமாகக் கோயில்களில் கட்டாயமாய் வாழை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. இன்னுமா எல்லோருக்கும் தூக்கம்? எழுந்திருங்கப்பா! தனியா எத்தனை நேரம் நானே பேசிக்கறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் சகோதரி

      நான் அப்போதே ஐந்தரை மணிக்கே தூக்கம் கலைந்து வந்து விட்டேன். அப்போது இங்கு எவருமில்லை. ஒரு வணக்கம் வைத்து விட்டு, சகோதரி கீதா ரெங்கனின் பதிவுக்கு சென்றிருக்க வேண்டும். அங்கு சென்றவுடன் அவருடனேயே பயணம் சென்றதில் இங்கு தாமதம். அதனால் உங்களுக்கு துணையாக வர இயலவில்லை. மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. ஹாஹாஹா, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த கமலா ஹரிஹரனுக்கு நன்றி.

      நீக்கு
  7. எல்லோருடைய குறட்டை சப்தங்களும் சேர்ந்து காதைத் துளைக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் காலை நான்கே முக்காலுக்கே எழுந்தாகிவிட்டது. காலைக்கடன்கள் முடிந்து, சுவாமி கும்பிட்டு, நடைப் பயிற்சி முடிந்து, இப்போதான் இங்கே வந்தேன்.

      நீக்கு
    2. 6 1/4க்கு எழுந்துட்டு இந்த கீசா மேடம் பண்ணற ரவுசு தாங்கலை. காலையிலேயே எழுந்து வேலைகளை முடித்துவிட்டு, நடைப்பயிற்சிக்குப் போயிட்டு பிறகு ஹோட்டலில் சாம்பார் இட்லி சாப்பிட்டுட்டு வருகிறேன். அதுக்குள்ள 9 கி.மீ நடந்தாச்சு.

      ஆனால் ஞாயிறு எனக்கு எபில வேலை இல்லை. ஹா ஹா

      நீக்கு
    3. நெல்லை எத்தனை தரம் சொல்லி இருக்கேன்! ஆறேகாலுக்குக் கருத்துப் போட்டேன்னா அப்போத் தான் எழுந்திருந்தேன்னு அர்த்தம் இல்லைனு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    4. இத பார்றா... தான் வார்த்தால் தோசையாம். மத்தவங்க வார்த்தால் அது குழிப்பணியாரமாமே...

      நீக்கு
    5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))

      நீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. மலையும் முகடும்
    வானும் நிலமும்
    மரமும் செடியும்
    இலையும் தழையும்
    நீரும் மீனும்
    கீரியும் பாறையும்

    எபியும் நாங்களும்!..

    பதிலளிநீக்கு
  11. அப்பாடா ஒரு வழியா கீரிப்பாறைக்கு வந்தாச்சு. பாறை இருக்கு. ஆனால் கீரியைத்  தான் காணோம். தலைப்புக்கள் கில்லெர்ஜீ தந்தவையா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இந்த வார கீ.பா.எ. படங்கனைத்தும் பசுமையுடன் கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகாக உள்ளது. முதல் படம் அவ்வளவு அழகாக உள்ளது. போட்டி போடும் வண்ணம் படத்திற்கேற்ற கற்பனை வாக்கியங்களும் அருமை. ரசித்தேன். ஆலமரம் அழகாக உள்ளது. அதைப்பார்த்தே எவ்வளவு நாட்களாகி விட்டது. அடையாறு ஆலமரத்தையும் மறக்க முடியாது.

    அந்த இரு ஆடுகளும் பாவம்.. இந்த வயர் சருட்டலுக்கு போட்டிப் போட்டு பூங்கொத்து தருவதற்காக அந்த சாய்ந்த மின்கம்பமும் முயற்சித்திருக்கிறது. ஆனால், நாங்கள் முட்டி மோதி சாய்த்திருக்கலாம் என எங்கள் மேல் பழிச்சொல் வருகிறதே.. இதைத்தான் "பாவம் ஓரிடம்.. பழி ஓரிடம்" எனச் சொல்கிறார்களோ என அந்த இரு ஆடுகள் பேசிக் கொள்கின்றனவோ ..? ஹா.ஹா.ஹா. என் கற்பனை இது.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா இல்ல! ஆலமரத்தைப் பற்றிச் சொல்ல விட்டுப் போயிருக்கு. ஆலமரம் அழகோ அழகு. அடையாறோடு போட்டி!

      நீக்கு
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லாப் பதிவுகளும் பயணம் பற்றியே இருக்கின்றன.

    பசுமை இனிமை. எல்லோரும் என்றும் ஆரோக்கியம் அமைதியுடன்
    இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. சாதாரண படங்களும்,அசாதாரணமான வாசகங்களும்.

    பதிலளிநீக்கு
  15. ஐயோ போச்சு. கீசாக்கா வோட "சாப்பிடலாம் வாங்க" வேறே எங்கேயோ கூட்டி செல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கரெக்டாத் தான் போகிறது. உங்க கணினி சரியில்லை.

      நீக்கு
    2. இப்போவும் போய்ப் பார்த்தேன். சரியாத் தான் இருக்கு. அப்போவும்/இப்போவும்/எப்போவும்

      நீக்கு
    3. நெருப்புநரி (firefox) குழப்பம். சரியாகிவிட்டது.

      நீக்கு
    4. ஓஹோ! நான் க்ரோம் தான். எப்போவானும் க்ரோம் திறக்கலைனா மைக்ரோசாஃப்ட் எட்ஜ்.

      நீக்கு
  16. 1. கீரியும் பாறையும் என்று ஏன் ஒரு படம் கூட இல்லை?

    2. கீரிப்பாறை -- பெயர் வரக் காரணம் என்னவோ?

    பதிலளிநீக்கு
  17. இந்த வார மின் நிலா என்றால் ஞாயிறு to ஞாயிறுவா?

    ஒரு ரகசியம்: இந்த வார மின் நிலாவின் கடைசி பக்கத்தில் ஒரு விசேஷம் உண்டு. அடுத்த ஞாயிறு
    வரை காத்திருக்க வேண்டாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபுரியா? கொஞ்சம் கஷ்டப்பட்டால் நீங்களே கண்டுபிடிச்சிடலாம்.

      நானே சொல்லிடலாம். ஆனா 'நானே பார்த்து விட்டேன். சொல்லவில்லை. அவ்வளவு தான்' என்று கீதாம்மா பின்னாடி வந்து
      சொல்லுவாங்களே'ன்னு கொஞ்சம் பொறுக்கலாம். அவங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்க்கலாம். என்ன சொல்றீங்க?

      நீக்கு
    2. நான் 2,3 வாரங்களாக மின் நிலா பார்க்கவில்லை!:( இந்த வாரம் வந்ததைத் தவறுதலாக டெலீட் செய்திருக்கேன். முகநூலிலும் வரமாட்டேங்கிறது. கௌதமன் சார், கொஞ்சம் என்னனு பாருங்க!

      நீக்கு
  18. ஆலமரம் படத்திற்குக் கீழே வரும் 4 படங்களும் அழகு. மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகு! எங்க ஊர்லருந்து கீரிப்பாறை காளிகேசம் பொதிந்திருக்கும் மலையைப் பார்த்துட்டு இப்ப மலைக்கே வந்தாயிற்று!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. வயர் சுருட்டலுக்கு கம்பம் பூச்செண்டு கொடுப்பது போல இல்லை? //

    அதே. அந்தக் கம்பம் ஒன்றை மட்டும் நீட்டிவிட்டு இன்னும் இரண்டை தன் பின்னால் தோளில் அம்பு வைத்திருப்பது போல் இரு தோளிலும் வைத்திருக்கிறது போல் இருக்குதானே!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. மலையும் பசுமையும் என கண்ணுக்கு குளிர்சியான படங்கள்.

    கீரிப்பாறை எங்கள் ப்ளாக்கை விடுவதாக இல்லை :)) பச்சை நிறம் மனதை ஒட்டிக் கொள்ளுமே .

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  22. //வயர் சுருட்டலுக்கு கம்பம் பூச்செண்டு கொடுப்பது போல இல்லை? //
    ஆமாம், அருமை.


    படங்களுக்கு கொடுத்த வாசகங்கள் அருமை.
    கீரிப்பாறையை மறக்கவே முடியாது அந்த அளவுக்கு பார்த்துக் கொண்டு இருக்கிறோம். பசுமை ! பசுமை! அழகு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!