சனி, 4 டிசம்பர், 2021

தானத்தில் சிறந்ததது...    / - நான் படிச்ச கதை 

 கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த சுசீந்தர்: 

வயல்ல சரியான சமயத்துல களை எடுக்கணும். ஆனா அந்த நேரத்துல ஆளை தேடி அலையிறதே பெரும் வேலையா இருக்கு. அதனால வேலை செய்ய முடியாம, மகசூல் இழப்பு வரைக்கும் போயிடுது. இதுக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சு தான், வீட்டுல கிடைக்குற மரக்கட்டை, கட்டுக் கம்பி மட்டும் வச்சு, களை பறிக்கும் கருவியை செய்தேன்.

கையில் பிடிக்கும் அளவுக்கு 7 அடி நீள கம்பு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். 6 அடி நீளத்தில் மற்றொரு கம்பை எடுத்து, இரண்டையும், ஆங்கில, 'டி' எழுத்து வடிவில் இணைத்து, உறுதித்தன்மைக்காக, 'வி' வடிவ சட்டம் கொண்டு இரண்டு கம்புகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பின், 3 அடி நீளத்தில் மூன்று கட்டுக் கம்பிகளை எடுத்து, 6 அடி நீளம் கொண்ட கம்பின் மீது வைத்து இரண்டாக மடித்து இறுக்கமாக முறுக்கி விட வேண்டும். முனைப்பகுதியை மட்டும் சற்று படர்ந்த நிலையில் வைக்க வேண்டும். இப்படி தேவையான அளவு கம்பிகளை அந்த கம்பு முழுதும் வைத்தால் போதும். அதுவே இறுதியான வடிவம். அதைக் கொண்டு நாற்று நடவு செய்த வயலில் வைத்து, களை பறிக்கலாம்.இதை இழுக்க ஒரு ஆள் போதும். ரொம்ப சுலபமான வேலை. இந்த கருவியை வைச்சு ஒரு ஆள் ஒரு நாளைக்கு, 2 ஏக்கர் வரை களை எடுக்கலாம். வேலையாளுங்கள நம்பியிருக்க வேண்டிய தேவையில்லை. 1 ஏக்கருக்கு ஒருமுறை களையெடுக்க, 2,500 ரூபாய் வரை கூலி செலவாகும். அந்த செலவை இந்த கருவி மிச்சப்படுத்துது. கட்டுக்கம்பிங்க வாங்க, 50 ரூபாய் இருந்தா போதும். வீட்டுல கிடைக்குற பொருட்களை வச்சு, இதை நாமளே தயார் செய்துடலாம். இரும்புக் குழாய்ல வெல்டிங் வச்சும் இதை தயார் செஞ்சும் பயன்படுத்தலாம். பாலிதீன் குழாயில இந்த கருவியை செய்யும் போது, குழாயை சேமிப்பு கலனாக மாத்தி, அதுல இடுபொருளை நிரப்பி நேரடியாக அதை பயிருக்கு கொடுக்க முடியும். சீனா மாதிரியான நாடுகள்ல சங்கிலியை பயன்படுத்தி, இது மாதிரியான கருவியை செஞ்சு உபயோகிக்கிறாங்க.


 
ஆனா அது மாதிரி நாம செய்றதுக்கு அதிக செலவாகும். அதனால, சுலபமான முறையில இதை செய்திருக்கேன்.வயலில் தண்ணி நிற்கும் போது தான், இந்த கருவி மூலம் களை எடுக்க முடியும். களை எடுக்க பயன்படு வதோடு மட்டுமல்லாமல், இலை சுருட்டுப்புழு பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கும். மேலும், இந்த கருவியை பயன்படுத்தும் போது இதில் உள்ள கம்பிகள், 1 அங்குல ஆழத்துல தரையை கீறிட்டு போகும். அதனால களைகள் வேரோட வந்துடும். விளைச்சலுக்கு காற்றோட்டமான சூழ்நிலை உருவாகும். அதோட நுண்ணுாட்ட சத்துக்கள் மறுபடியும் கிளறிவிடும். இக்கருவியால் பயிருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை!தொடர்புக்கு: 99526 37722
======================= ====================

அருப்புக்கோட்டை:


மனிதருக்கு கட்டாயம் இருக்க வேண்டியது நிதானம். அதை விட முக்கியமானது அன்னதானம்.


ஒருவருக்கு வயிறார உணவை அளித்தாலே மனம் நிம்மதி பெறும். இதை பலர் அனுபவத்தில் உணர்ந்துள்ளனர். 'போதும்' என்ற சொல்லே அன்னதானம் செய்பவர்களுக்கு போதுமான செல்வத்தை கொடுக்கும் என்பார்கள். அன்புடனும் கருணையுடனும் செய்யும் அன்னதானங்கள் நம்முடைய அடுத்த பிறவி வரை பலனை கொடுக்கும்.

அன்னதானம் செய்பவர்கள் வாழ்வில் பசியே வராது. கடவுளின் பரிபூரண ஆசியும் கிடைக்கும்.


இத்தகைய அன்னதானத்தை அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியை சேர்ந்த பாபு ஆண்டு முழுவதும் 365 நாட்களும் இடைவிடாது செய்து வருகிறார். ஆதரவற்றவர்களுக்கும், உணவு கேட்டு வருபவர்களுக்கும் அவ்வப்போது உணவு வழங்கி வந்த இவருக்கு, ஆண்டு முழுவதும் மதிய உணவு வழங்கலாமே என்ன எண்ணத்தால் அவரது இடத்திலே தினம் மதிய வேளையில் 40 முதல் 60 பேர்களுக்கு உணவை பொட்டலமாக வழங்கி வழங்கி வருகிறார்.

பண்டிகை காலங்களில் சேலை, வேட்டிகள் வழங்குகிறார். தி.மு.க.,வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள இவர், ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்ற உதவிகளையும் செய்து வருகிறார்.அன்னதானத்தை இடைவிடாமல் செய்ய வேண்டும் என்பது தான் என் குறிக்கோள் என்கிறார் பாபு.  இவரை பாராட்ட, 95786 69999ல்அழைக்கலாம்.


= = = =


= = = = =



====================================================================================================


நான் படிச்ச கதை

- ஜீவி -


'எஸ்.ரா.' என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு ஆகச் சிறந்த படிப்பாளியாகத் தான் வாசகர் உலகிற்கு அறிமுகமானார்.   அவர் தம் வாசிப்பு, பயண அனுபவங்களால் கட்டமைக்கப்பட்டது.  தான் வாசித்த நூல்களை வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் மற்றவர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டதை பிரமிப்பாய் வாசித்தவர்களும் தங்களிடமும் தொற்றிக் கொண்ட அவர் படிப்பறிவை  நேசிக்கத் தலைப்பட்டார்கள்.  நவீன இலக்கியத்திற்கான பங்களிப்பாக இவர் மூலம் தெரிய வந்த சங்கதிகள் எக்கச்சக்கம்.



ஒரு படைப்பாளியாக புத்திலக்கியத்தை படைக்க அவர் முன் வந்த பொழுது ஏற்கனவே ஒரு தேர்ந்த வாசகராக அவர் அறிமுகமாகியிருந்தது அனுகூலமாயிற்று.  'எஸ்.ரா. கதை கூட எழுதுகிறாரே'-- என்று அதுவே ஒரு சேதியாயிற்று.   கட்டுரைகள் எழுதுபவர் எப்படி கதைகள் எழுதுகிறார் என்று உன்னிப்பாக கவனிக்கவும், கவனித்ததை பல்வேறு தளங்களில் பகிர்ந்து கொள்ளவும் சிலர் தலைபட்டனர்.

இதோ எஸ்.ரா. எழுதிய புதினம் ஒன்று என் பார்வையில் உங்கள் வாசிப்பிற்காக.  

யாமம்

ஒன்றிற்கு ஒன்று தொடர்பில்லாத நான்கு கதைகளை ஒன்று சேர்க்க முடியுமா?..  ஒற்றை அம்சம் ஒன்றை அந்த நான்கு கதைக்குள்ளும் ஊடாடி இருக்கும்படி செய்ய முடியுமா?

முடியும் என்பது போல இந்த சவாலான காரியத்திற்கு எடுத்துக் காட்டாக வெளிவந்த எழுத்தாளர் எஸ்.ரா. அவர்களின் 'யாமம்' புதினத்தை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது.

அது கிழக்கிந்திய கம்பெனியார் இந்தியாவில் வியாபாரம் என்கிற பெயரில்  நுழைந்த காலம்.  பிரான்சிஸ் டேயை நமக்குத்  தெரியும்.  கம்பெனியார் சென்னையில் கோட்டையைக் கட்டிக் கொள்ள இடம் தேடும் பொழுது இன்றைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இருக்கும் நிலப்பரப்பு அவனைக் கவர்கிறது.  இந்த கால கட்டம் தான் 'யாமம் புதினத்தின் கதைக்காலம்.

இந்தப் புதினத்தில் அத்தராகிய வாசனைத் திரவியம் அந்த ஒற்றை அம்ச  வேலையைச் செய்கிறது.

அப்துல் கரீம் அத்தர் தயாரிப்பவர்.  அவர் தயாரிக்கும் அத்தரின் டிரேட் மார்க் பெயர் 'யாமம்'.  திருமண வைபவ சமையலறைக் கூடங்கள் போல. என்ன காரணத்தினாலோ வழிவழி வந்த வழக்கம் போல அத்தர் தயாரிக்கும் தொழில் ரகசியம்,  அந்தக் குடும்பத்தின் ஆண் சந்ததியினரின்  பொறுப்பாகிப் போகிறது. கறாராக அந்த தயாரிப்பு  வேலைகளில் பெண்களுக்கு இடமில்லை என்பது கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட விஷயம்.  இந்தக்  கண்டிப்பான விதி முறையே ஒரு விதத்தில் இந்த 'யாமம்' முதல் கதையை வழி நடத்திச் செல்வதற்குப் பாதை போடுகிறது.

அப்துல் கரீமின் யாமம் அத்தர் ஊரெல்லாம் கொண்டாடும் வாசனைத் திரவியம்.  கிழக்கிந்திய கம்பெனி வெள்ளைக்காரர்களிலிருந்து லோக்கல் ஆசாமிகள் வரை மனசைக் கொள்ளை கொண்ட சரக்கு அது.   விதி அத்தர் ரூபத்தில் விளையாடுகிறது.

அப்துல் கரீமிற்கு மூன்று துணைவியர்.  இருந்தும் ஆண் சந்ததி இல்லை. அதனால் அடுத்த தலைமுறைக்கு தொழில் ரகசியத்தைக் கற்பித்து 'யாமம்' அத்தர் தொழிலை வளர்த்தெடுக்க முடியாமல் ஆகிறது.  அந்த  ஏக்கம் அவரை படாத பாடு படுத்துகிறது.  அவரது யாமம் பிராண்டு அத்தர் தொழிலே அழிந்து போய் விடுமோ என்ற மனக்கவலை குதிரை ரேஸ் வரை அவரைக் கொண்டு போய் விடுகிறது.

சொத்தெல்லாம் கரைந்த நிலையில் அவர் ஊரை விட்டே போய் விடுகிறார். வசதிக் களிப்பில் வாழ்ந்த துணைவியர் வறுமையில் அல்லலுற்று சாம்பிராணி
தயாரித்தல்,  மீன் வியாபாரம் என்று அலைக்கழிக்கப் படுகின்றனர்.மூவரில் ஒருவர் காலரா நோய்க்கு இரையாகிறார்.  இப்படியாக ஒரே குடும்பத்தில் இணைந்திருந்தவர்கள் தமக்குள் மூண்ட சச்சரவுகளில் சிக்கி சிதறிப் போகின்றனர்.

இனி பாக்கியிருக்கிற மூன்று கதைகளின் நாயகர்கள் பத்ரகிரி. கிருஷ்ணப்ப கரையாளர், மற்றும் சதாசிவப் பண்டாரம்.  சில பெயர்களைக் கேட்டாலே அந்தப் பெயர் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகள் நம் நினைவுக்கு வரும்.  அப்படியான இதற்கு முன்  வேறு விதங்களில் நாம் கேட்டோ அறிந்தோ இருந்த பெயர்களை தன் கதைகளில் உபயோகப்படுத்துவது எஸ்.ரா.வின் வழக்கமாகத் தெரிந்து அப்படியான பெயர்கள் சம்பந்தப்பட்ட நமக்குத்  தெரிந்திருக்கும் நிகழ்வுகளை நினைப்பில் கொண்டு வரவும் செய்கிறது.

இரண்டாவதான பத்ரகிரி கதையோடு சேர்ந்தது,  அவர் தம்பி திருசிற்றம்பலம் கதையும்.  இளம் வயதிலேயே தாயைப் பறி கொடுத்த சகோதரர்கள்.  சித்தியின் வளர்ப்பில் வளர்ந்தவர்கள்.  பத்ரகிரி நில அளவை சம்பந்தப்பட்ட குழுவில் பணியாற்றியவர்.  அவர் மனைவி விசாலாட்சி.  கணிதத்தில் அபார தேர்ச்சி பெற்ற திருசிற்றம்பலம் தன்  மேற்படிப்புக்காக இலண்டன் செல்ல நேரிடுகிறது.  போகும் முன் தன் மனைவி தையல்நாயகியை அண்ணனின் பாதுகாப்பில் விட்டு விட்டுப் போகிறான்.  விசாலாட்சியும், தையல் நாயகியும் அக்கா - தங்கை போல நெருக்கம் கொள்கின்றனர். பத்ரகிரிக்கும் தையல் நாயகிக்கும் கூட நெருக்கம் தான். ஆனால் இது ஆண்-பெண் அவரவர் தேவைகளின் பூர்த்திக்காகக் கொண்ட வேறு விதமான நெருக்கம்.  இதை சகித்துக் கொள்ளாமல் விசாலாட்சி வெறுப்புடன் தன் ஊருக்கு பயணமாகிறாள்.  பத்ரகிரி--தையல்நாயகி உறவின் தீவிரத்தில் அவர்களுக்கு  ஒரு குழந்தை பிறக்க சமூகக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட பிரச்னைகளின் அழுத்தத்தில்  தையல்நாயகி உளச்சிதைவு கொள்கிறாள்.

அடுத்து கிருஷ்ணப்பக் கரையாளரின் கதை.  பெருத்த செல்வந்தரான அவருக்கு உறவு  முறைகளோடு சொத்துத் தகராறு,  அதற்கான மன உளைச்சல்.  அவர் வாழ்க்கையில் குறுக்கிடும் எலிசபெத்.  அவரின் எலிசபெத் மீதான ஈடுபாடு அவருக்கு சொந்தமான வனப்பு மிக்க மேல் மலைச் சொத்தை அவள் பெயருக்கு எழுதி வைக்க நேரிடுகிறது.

அதற்கடுத்து சதாசிவப் பண்டாரத்தின் கதை.  ஆன்மீகத் தேடல் கொண்ட இவரை ஒரு நாய் வழி நடத்துகிறது.  அதன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் அதன் பின்னால் இவர்.  ஒரு நாள் அது மலையோர கிராமம் ஒன்றில்  கனகா என்னும் தனித்திருக்கும் பெண்ணின் வீட்டின் முன் தங்குகிறது.   ஆக, சதாசிவத்திற்கும் அந்த இடமே தங்கலாகிறது.   தங்கலுக்காக அந்த வீட்டில் எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்.  ஒரு நாள் இரவு கனகா அவர் அருகாமையை நாடுகிறாள்.  கனகாவிடமிருந்து  கிளம்பும் மரிக்கொழுந்து வாசனை அவரை உன்மத்தம் கொள்ளச் செய்கிறது.  இருவரும் கொண்ட  உறவின் விளைவாய் கனகா கர்ப்பம் தரிக்கிறாள்.

குழந்தை பிறக்கும் நேரத்தில் அந்த நாய்க்கு என்ன ஆயிற்றோ?..  அது தன் தங்கலை  முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறது.  ஆக, பண்டாரமும் நாயைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்ப வேண்டியதாகி விடுகிறது.  வழக்கம் போல தன்னை வழி நடத்தும் நாயைப் பின் தொடரும் பண்டாரம் மடத்து அறை ஒன்றில் தன்னையே சிறைப்படுத்திக் கொண்டு மாயமாகிறார்.  பண்டாரம் காற்றில் கரைந்ததாய் ஊர் கதை சொல்கிறது.

ஆக,  யாமம் அத்தர் வாசனை போதையில் ஆரம்பித்த கதை திரிபு கொண்டு காமமாக நாவல் நெடுக பதிந்து கிடக்கிறது.  இரவின் ரகசியம்,  வாசனைகளின் சுகந்தம் ஆகிய எல்லாமுமே காமத்தீயைக் கொழுந்து விட்டு எரிய செய்கிறது.  காமம் தான் கதையாகிய இந்த நிகழ்வுகளை கட்டிப் போட்ட சரடு.   வாரிசு தேவைக்காக, தனிமையை நிரப்புவதற்காக, இச்சைக்காக,  பரிதாபத்திற்காக என்று காமம் வெவ்வேறு காரணங்களுக்காக தீர்வாகத்  தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது.   அதனால் சம்பந்தப்பட்டவர்கள்  அடைந்த இழப்புகளும் அதிகம்.

ஒன்றைப் பெறுவதற்காக இன்னொன்றை  இழந்தது ஏதேதோ அதற்கான கணக்குகளைக் கொண்டு நேராகின்றன.  நாவலில் தையல்நாயகி கற்பை, கிருஷ்ணப்ப கரையாளர் சொத்தை, சதாசிவம் பந்தத்தை, திருசிற்றம்பலம் தன் சுகத்தை என்று இழப்புகள் பட்டியல் போடப்படுகின்றன.

எதற்காக எது நடக்கிறது என்று நடப்பதற்கு முன்பு தெரியாது. ஆனால் நடந்து முடிந்த பின் நடந்ததின் விளைவை வைத்து இதனால் தான் இது நடக்கிறது போலும் என்று தெரிந்து கொள்வது தான் ஞானம்.  அந்த ஞானம் பெறாதவர்களால் நடந்தவைகளின் பின்னணயில் நடப்பவைகளையும் புரிந்து கொள்ள முடியாது.

புதினத்திற்கு  யாமம்  என்று பெயரிட்டிருந்தாலும் காமம் தான் கதையின் ஓட்டத்திற்கு அச்சாணியாக இருக்கிறது.

மொத்ததில் காமம்  ஒரு  தீ..  அதன் கதகதப்பை நாடியோரை அது சுடாது விடாது.  யாமம் நாவல் தெரிவிக்கும் நீதியும் அதுவே.  என்றாலும் தம் எழுத்தால்
நாலாந்தர கதைகளைப் போல காமத்தீயை  வாய்ப்பிருந்தும் விசிறி விசிறி  அனலைக்  கிளப்பாமல்  எஸ்ஸார் அடக்கி வாசித்திருக்கிறார்.    அதற்காகவே அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

காமம் தேனும் கூட...  காமத்தை சுகிப்பவன் தேனில் விழுந்த  ஈயாகிறான்.  மாந்துகிறேன் பேர்வழி என்று ஒரு கிண்ண மேற்பரப்பில் உட்கார்ந்த ஈ, அந்தத் தேனில் விழுந்தே கிடப்பது றெக்கைகள் நனைந்து பிசுபிசுத்துப் பறக்க முடியாத நிலையையும் உருவாக்கலாம்.    தேனில் அமிழ அமிழ அந்தக் கிண்ணத்திலிருந்தே அதனால் வெளியேற முடியாதபடிக்கு  அதனை முழ்கச் செய்யலாம்.  ஈ பறப்பதற்காக படைக்கப்பட்ட ஒன்று.   தேனில் மூழ்குவதற்காக அல்ல.  வெளியே வர வேண்டும்.  வந்து றெக்கை படபடத்துப் பறக்க வேண்டும்.

தேனையும் ஈயையும் கற்பனையில் உருவாக்கிய எழுத்தாளனும்  தான் படைத்த ஈயைப் போல தேனிலேயே விழுந்து கிடக்கக் கூடாது.  தேவைக்குத் தேனும் இருந்தாலும் ஈயை வெளியேற்ற வேண்டிய பொறுப்பும் அவனுக்கு உண்டு.  விழுந்து கிடந்தால் ஈக்கும் அவனுக்கும் வித்தியாசமில்லாமல் போகும்.

நவீன இலக்கியம் என்பதும் சதாசர்வ காலமும் தேனில் ஈயை மூழ்கடித்து மூழ்கடித்து ஈயை முடக்கக் கூடிய வேலை அல்ல.

பிரிட்டிஷார்  வருகையின் கால கட்டத்தை இந்த 'யாமம்' சித்திரத்தைத் தீட்ட படுதாவாக எஸ்.ரா. உபயோகப்படுத்திக் கொண்டதும்,  அங்கங்கே வந்து வந்து சுவையூட்டிய சரித்திர நிகழ்வுகளின் பின்னணியில்  'யாமம்'  வாசித்தது அதி அற்புத அனுபவமாயிற்று.

54 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. பதிவின் தகவல்கள் வழக்கம் போல அருமை..

    நல்லோர் வாழ்க நலங்கொண்டு..

    பதிலளிநீக்கு
  4. அன்ணா ஜீவி அவர்களின் விமர்சன களம் ஆகா!..

    ஜீராவில் விழுந்த ஜீ பூம்பா போல!.. - ஆகி விட்டது மனம்..

    பதிலளிநீக்கு
  5. தேனிலும் மகரந்தத்திலும் புரண்டாலும் தேனீ - தேனில் ஆழ்வதில்லை..

    சாதாரண ஈயின் பாடு தான் பரிதாபம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பீ! மலரின் மென்மை மெத்தை மடியில் அமர்ந்து வாகாக தேனை உறிஞ்சுவதற்கு தேனீக்களுக்கு மட்டும் உறிஞ்சு குழலைக் கொடுத்தது இறைவனின் ஓரவஞ்சனையோ?..
      இல்லை.. இல்லை.. மகரந்த சேர்க்கையே தேனீக்களின் மூலமாகத்
      தான் என்று வழி வகுத்த இறைவன் படைப்பின் ரகசிய சலுகை போலும் அது!

      நீக்கு
  6. இந்நேரம் வரைக்கும் யாரும்
    வரக் காணோமே!..

    பதிலளிநீக்கு
  7. வல்லியம்மா ..
    நலமாக இருக்கின்றீர்களா!...

    பதிலளிநீக்கு
  8. எஸ்.ரா.வின் கடீடுரைளை வாசித்திருக்கிறேன். முதல் முறையாக அவருடைய நிமித்தம் என்னும் கதையை படித்துக் கொண்டிருக்கிறேன். முடித்தால் கூட ஜீ.வி.சார் போல இவ்வளவு சிறப்பாக அதை எழுத முடியுமா என்பது சந்தேகமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் யூட்யூப் பேச்சுக்களைப் பார்க்கும் பொழுது மகிழ்ந்து நானும்
      நினைத்துக் கொள்வது தான். இந்தப் பகுதியில் தான் எழுதியிருக்கிறீர்களே!
      எழுத எழுதப் பழகி விடும். சிவ சங்கரியை பற்றி ஒரு தடவை நீங்கள் பிரஸ்தாபித்த ஞாபகம். அல்லது வேறு யாரையாவது எடுத்துக் கொள்ளுங்களேன். கவிதை, கட்டுரை என்று வாசிக்கும் எதையும் வெரைட்டியாக எழுத ஆரம்பித்தால் இந்த பகுதி சூடு பிடித்து விடும்.
      செவ்வாய், வியாழன் போல சனிக்கிழமையும் அமைந்து விடும்.
      சொல்லவே வேண்டாம். திங்கள் தனிக் காட்டு ராஜா! (இல்லை, ராணி) :))

      நீக்கு
  9. களையெடுக்க உதவும் கருவியை கண்டு பிடித்திருக்கும் விவசாயிக்கு அதற்கு பேன்ட் உரிமை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியுமா?
    புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ் மறப்பெண்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். இது சிறுத்தையிடமிகுந்து தன் குழந்தையை மீட்ட மராட்டிய வீர மங்கை. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ பானுமதி வெங்கடேஸ்வரன்

      // புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ் மறப் பெண்களை.. //

      இப்படியெல்லாம் நடந்திருக்கும் என்றே நம்புகின்றேன்...

      நீக்கு
    2. //இப்படியெல்லாம் நடந்திருக்கும் என்றே நம்புகின்றேன்...// அதில் என்ன சந்தேகம்? நிச்சயம் நடந்துதானிருக்கும். சில வருடங்களுக்கு முன்பு மலைப்பாம்பு விழுங்கத் துவங்கிய தன் பேரனை அதனிடமிருந்து மீட்ட ஒரு பெண்ணை பற்றிய செய்தி ஜூனியர் விகடனில் வந்தது.

      நீக்கு
  10. @ ஜீவி அண்ணா..

    // மகரந்த சேர்க்கையே தேனீக்களின் மூலமாகத்தான் என்று வழி வகுத்த இறைவன் படைப்பின் ரகசிய சலுகை போலும் அது!..//

    தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்று ஔவையார் வியப்படைந்த மாதிரி -

    தேனீக்களின் பெருமையும் பெரிது தான்!..

    அறுகோணச் சிற்றறைகளை வடிவமைக்கும் தேனீ இயற்கையின் ரகசியம்.. அதிசயம்..

    தேன் உப்பு - இவையிரண்டும் தானும் கெடாது.. தன்னைச் சேர்ந்தவைகளையும் கெட விடாது..

    குழந்தை முதல் தெய்வம் வரை தேனே!!. என்று கொஞ்சப்படுவதும் அதனால் தான்..

    நம்முடம்பில் ஒளிந்திருக்கும் மூலங்களுள் உப்பு வெளிப்படை..

    தேன் (அமிர்தம்) மறைபொருள்.. தானடங்கிய தவத்தினால் மட்டுமே
    சித்திக்கும்.. தித்திக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேன் (அமிர்தம்) மறைபொருள்.. தானடங்கிய தவத்தினால் மட்டுமே
      சித்திக்கும்.. தித்திக்கும்..// சுருங்கச் சொல்லி விளங்க வைத்து விட்டீர்கள். _/\_

      நீக்கு
  11. தேன் என்று வரும் திரைப் பாடல்கள் கூட ஏராளம்.. அத்தனையும் அழகானவை..

    தேன் சிந்துதே வானம்
    உனை எனை தாலாட்டுதே!..

    - என்ன நினைத்துக் கொண்டு எழுதி வைத்தார் கவியரசர்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேன் உண்ணும் வண்டு - சூப்பர் பாடலை ஸ்ரீராம் வெளியிடணும்னா அவருக்கு 60 வயதாவது ஆயிருக்கணும். பார்ப்போம்.

      தேனே தென் பாண்டி மீனே, தேன் தித்திக்கும் தேன்.... பாடல்களை எழுதுங்க

      நீக்கு
  12. அன்பின் ஸ்ரீராம்..
    அடுத்தடுத்து வரும் பதிவுகளில்
    தேன் - பாடல்களில் ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கலாமா!?..

    பதிலளிநீக்கு
  13. தேன் ஆன பாடல்களுக்கெல்லாம் மகுடம் -

    பார்த்தேன்.. சிரித்தேன்!..

    ஆகா...
    தேனே.. தமிழ்த் தேனே!..

    பதிலளிநீக்கு
  14. அருப்புக்கோட்டை மனிதர் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துவோம். (கில்லர்ஜி அருப்புக்கோட்டையை தேவக்கோட்டை என்று படித்திருப்பாரோ !)

      நீக்கு
  15. அனைத்தும் நல்ல செய்திகள். நல்ல விமரிசனம். என்றாலும் எஸ்.ரா.வின் எழுத்து என்னை அவ்வளவா ஈர்த்தது இல்லை. ஆரம்ப காலங்களில் விகடனில் வந்தப்போ (இப்போ உள்ள விகடன் அல்ல எல்லாவற்றிலும் பழைய விகடன்) பல ஆண்டுகள் ஆகின்றன. பாலகுமாரன், எஸ்.ரா.ஜெயமோகன் ஆகியோரைப் படித்து!

    பதிலளிநீக்கு
  16. களை எடுக்கும் மிஷின் எப்படி வேலை செய்கிறது என்பது புரியவில்லை. ஒரே வரிசையில் நாற்று இருந்தால், இடையில் வரும் களையை அது நீக்கலாம். ஆனால் வரிசையிலேயே வரும் களையை எப்படி நீக்கும்னு தெரியலை.

    அன்னதானம் மிகவும் பெரிய பொறுப்பு. பாராட்டணும்.

    இரவில் எலுமிச்சை நீர்... முயற்சி செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையிலும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான வெந்நீரில் அரை எலுமிச்சைச் சாறு பிழிந்து லேசாக உப்புச் சேர்த்துத் தேன் விட்டுக் கலக்கிக் குடித்துப் பாருங்கள். சும்மாவானும் நான்கு/ஐந்து நாட்கள் செய்துட்டு விடக் கூடாது. குறைந்த பட்சம் ஆறு மாசமாவது தொடர்ந்து குடிக்கணும். நிச்சயம் பலன் தெரியும்.

      நீக்கு
    2. அன்னாசிப் பழத்தையும் சாறு எடுத்துக் கொண்டு அதில் வறுத்த ஓமத்தைப் பொடி செய்து சேர்த்துக் கொண்டு உப்பு அல்லது சாட் மசாலா சேர்த்துக் காலை வேளையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வரலாம். இரண்டு முறைகளிலும் நிச்சயமாய் எடை குறையும்.

      நீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  18. இந்த வார நல்ல செய்திகள் எல்லாம் அருமை.
    வயலில் களை எடுக்கும் சாதனம், அன்னதானம் செய்பவர், குழந்தையை சிறுத்தையிடமிருந்து காத்தவர் எல்லாம் அருமையான செய்திகள்.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

    எலுமிச்சை குறிப்பு பயனுள்ளது.

    பதிலளிநீக்கு
  19. ஜீவி சார் அவர்களின் படித்த கதை பகிர்வு, மற்றும் கதை விமர்சனம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒதுக்காமல் வாசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  20. சுசீந்தர் செய்த கருவியின் படம் அவர் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர் சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும் போது எப்படிக் களை எடுக்க முடியும் அதைக் கொண்டு என்று தோன்றுகிறது. நாற்றும் கூட வந்துவிடாதோ..

    அன்னதானம் - க்ரேட்..

    சிறுத்தையோடு போராடி!! ஆ நிஜம்மாவே தைரியம்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சொல்லி இருப்பதைப் பார்த்தால் எனக்கும் நாற்றுக்களும் கூட வந்துடுமோனு சந்தேகம் இப்போவும் இருக்கு. நேரில் பார்த்தால் தான் புரியும்.

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  21. இரவில் எலுமிச்சை நீர் குடிப்பதுண்டு. முன்பு காலையில் குடித்து வந்தேன். தற்போது இரவில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. நல்ல செய்திகள்.
    புலியுடன் போராடி குழந்தையை மீட்ட அன்னை போற்றுதற்குரியவர்.

    பதிலளிநீக்கு
  23. நேற்று ஜீவி அண்ணா எழுதியிருக்கும் தனக்குப் ப்டித்த கதை பற்றி இங்கு குறிப்பிட முடியாமல் போனது.

    கதைக்களம் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கிறது.

    அதை ஜீவி அண்ணா கதை என்ன சொல்கிறது என்பதைச்சொல்லிவிட்டுத் தன் கருத்துகளைச் சொன்ன விதம் அழகாக இருக்கிறது. நுணுக்கமான வெளிப்படுத்தல்கள். காமம் என்பது கதையில் வந்தால் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் வித்தைக்காரன் போலத்தான். கொஞ்சம் நழுவினாலும் விரசமாகிவிடும் அபாயம்தான். அதை எஸ்ரா சரியாகக் கையாண்டு இருக்கிறார் என்று தெரிகிறது.

    எஸ் ராவின் சின்ன கதைகள் ஓரிரண்டு வாசித்திருக்கிறேன். கட்டுரைகளும் ஒரு சில அதுவும் கூட அங்குமிங்குமாய்தான் முழுவதும் வாசித்ததில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. நான் படிச்ச கதை/கவிதைகள்/கட்டுரை -- என்ற இந்தப் பகுதிக்கு நீங்களும் எழுதலாமே?..

    புறந்தள்ளி விடாமல் வாசித்து கருத்துச் சொன்னமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!