புதன், 8 டிசம்பர், 2021

இந்த மந்திரத்தைச் சொன்னால் - - - - !

 

கீதா சாம்பசிவம் : 

1. மொபைலை அவசரத்துக்குப் பயன்படுத்துவீர்களா? அல்லது எப்போதுமே அதில் ஆழ்ந்திருப்பீர்களா?

# நானும் மொபைல் அதிகம் "பார்க்கிற" ஜாதிதான்.  என் வயசில் வேறு நடவடிக்கைகள் சௌகரியமாக இல்லாததும் சுற்றம் நட்புடன் தொடர்பைக் கண்காணித்தவாறு இருக்க ஆசையும்தான் காரணம். 

& வாரத்தில் ஒரு நாளாவது மொபைலைத் தவிர்த்து வேறு விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் .. சட்டைப் பையில் இருக்கின்ற மொபைல் ஃபோன் ' கீ சா' மொழியில் மௌனமாக, 'கிர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர்' என்றதும் இடது கை தன்னிச்சையாக மொபைலை எடுத்து, கண்ணருகே கொண்டு வந்துவிடுகிறது!  

2. நாம் அழைத்தால் பிசி, பிசி என்னும் நண்பர்களில் பலரும் முகநூலில், குழுமங்களில் ஆர்வமாகப் பங்கெடுத்துக் கொண்டு இருப்பார்கள். அப்போ எப்படி நேரம் கிடைக்குது அவங்களுக்கு? அல்லது அங்கே நேரம் செலவாகிவிடுவதால் நம் அழைப்பைப் புறக்கணிக்கிறார்களா?

# ஓரிரண்டு முறைக்கு மேல் ஒருவர் தொடர்ந்து தான் பிசியாக இருப்பதாகச் சொல்லி நம் அழைப்பைப்  புறக்கணிக்கிறார் என்றால் "சரி சௌகரியப்படும்போது என்னைக் கூப்பிட்டுப் பேசு" என்று சொல்லி வைத்துவிட வேண்டும்.  அவர் திரும்ப நம்மை அழைக்கிறார் என்றால் அவர்மேல் அதிருப்திப் பட வேண்டியதில்லை.  நாமும் சும்மா சும்மா தேவையில்லாதபோதெல்லாம் போன் செய்து "இன்னிக்கி என்ன சமையல் " என்பது போன்ற கேள்விகள் கேட்காமல் இருப்பது நல்லது.

3. முகநூல் குழுமங்களில் உங்களை அதிகம் ஈர்த்தது எது? மொபைலில் முகநூலில் குழுமங்களில் மூழ்கி இருப்போருக்குத்தான் பதில் சொல்ல முடியும். ஶ்ரீராம், கௌதமன் சார் இருவரும் பதில் சொல்வார்களோ?

# நான் அதிகம் முகநூல் பக்கம் செல்லாத நபர். எனவே இதற்கு என்னிடம் விடை இல்லை. 

& நான் முகநூல் குழுமங்கள் எதிலும் நேரம் அதிகம் செலவழிப்பது இல்லை. அதிக உறுப்பினர்கள் உள்ள 'மத்யமர்' குழுவின் (எ பி க்கும் பரிச்சயமான சில நண்பர்களின்) பதிவுகளை அவ்வப்போது படிப்பது உண்டு. மின்நிலா மு நூ குவின் பதிவுகளை அடிக்கடி பார்ப்பதுண்டு. மற்றபடி சுவாரஸ்யமான பதிவுகள் எழுதுபவர்கள் என்ற வகையில் சிலரின் பதிவுகளை மட்டும் விடாமல் படிப்பது உண்டு.   

4. நேற்று ஒரு குழுமத்தின் வாட்சப்பில் ஒரு பெண்மணி இரவு ஒன்றரை வரை மொபைலில் ஏதோ "கேம்" விளையாடிக் கொண்டிருப்பது அவர் வழக்கம் என்று சொல்லி இருந்தார். தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு இது அவசியமா?

# இந்த மொபைல் கேம் விளையாடுவது என்பது பழக்கம் சார்ந்தது.  சில சமயம் மன உளைச்சலுக்கு உள்ளானோர் கேம் அதிகம் ஆடுவதையும் பார்த்திருக்கிறேன்.  நிச்சயம் இது நல்லது இல்லைதான். இந்த மாதிரி எண்ணங்களை முன்னிட்டு நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொள்வது நம்மளவில் மட்டும்தான் சாத்தியம்.

5. இப்போதெல்லாம் நேரடியாகப் பேசிக் கொள்வதை விட மொபைல் மூலம் அழைத்தாலே பலரும் பேசுகின்றனர். இது பொதுவாக மக்கள் மனதில் எந்தவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும்?

# நேரடியாகப் பேசுவது என்றால் ஒருவர் இருக்கும் வீடு அல்லது ஊருக்குச் செல்ல வேண்டி வரும்.  அதற்கு பதிலாக மொபைலில் பேசுவது தவறில்லையே. உள்ளூரில் நண்பர் சுற்றத்தார் இருப்பின் நடந்து சென்று சந்திக்கக் கூடிய தூரமாகவும் இருப்பின் அவ்வப்போது சென்று பார்த்து வருவது வரவேற்கத் தக்கது என்றாலும் அடுத்தவரின் வசதி சூழ்நிலை குறுக்கே வருகிற  அபாயம் இருக்கிறது. "வர முடிஞ்சா வாயேன் பேசலாம்" என்று அழைக்கும் ஸ்தானத்தில் இருப்பவர்களுடன் ஏற்பாடு செய்து கொண்டு சந்திக்கலாம். 

6. முகநூல் குழுமங்களில் ஒரு பதிவு போட்டுவிட்டு அதற்கு "லைக்ஸ்" "கருத்துகள்" வாங்குவதில் பலரும் போட்டி போடுகிறார்களே! அது சரியா?

# கேட்டுப்பெறும் கைத்தட்டலுக்கு மதிப்பில்லை. ஆனால் கிட்டத்தட்ட எல்லாருமே நேராகவோ மறைமுகமாகவோ செய்கிறார்கள். 

& சரியில்லை. இந்த விஷயத்தில், நான் எப்பவுமே 'கடமையை செய், பலனை எதிர்பாராதே' கோலகைதான். ஏதேனும் பதிவு எழுதவேண்டும் என்று நினைத்தால், போட்டுவிடுவேன். அதற்கு வரும் like பற்றி அலத்திக்கொள்வதில்லை. கமெண்ட்ஸ் எழுதுபாவர்களுக்கு தேவையானால் பதில் அளிப்பதுண்டு. 

7. என் பதிவை வெளியிடவில்லை, ஆனால் அதே கருத்துள்ள இன்னொருத்தர் பதிவை ஏன் தடை செய்யலை என்றெல்லாம் பிரச்னைகள் வருதே! எப்படிச் சமாளிக்கின்றனர்?

# தெரியவில்லை.  பெரிய நிறுவனங்கள் தொடர்பாக நமக்கு அவ்வளவு தெரிய வாய்ப்பில்லை. 

& மற்றவர் கருத்து, என்னுடைய கருத்தை பிரதிபலிப்பது போல இருந்தால், வரவேற்பேன். கருத்துதான் முக்கியம் - அதை நாந்தான் சொல்லவேண்டும் என்கிற அவசியம் இல்லை.  

8. அந்த வாரத்தின் சிறந்த பதிவு என ஓர் குழுமம் தன் வாசகர்களுக்குக் கொடுத்து வருகிறது. அந்தக்குழும நண்பர்களுக்கும் அதை வாங்குவதே லட்சியமாக இருக்கிறது. இதைப்பார்த்தால் சிப்புச் சிப்பாய் வரலை?

# நம்முடைய எங்கள் கூட ஒரு சிறு குழுதானே .  இதில் வாதப்  பிரதிவாதங்கள் வராமலா இருக்கிறது ?  பாராட்டை விரும்புவது மனித இயல்பு.  தனி மனிதரிடமிருந்தோ அல்லது சிறு பெரும் குழுவிலிருந்தோ பெறுவதற்கு மக்களின் ஆசை புரிந்துகொள்ளக்கூடியதுதான். 

9. இதை எல்லாம் படித்துவிட்டுப் பின்னர் விமரிசிக்கும் என்னைப் பற்றி என்ன சொல்வது?

# இயல்பான ஆர்வம் சுறுசுறுப்பு மிக்க நபர் என்று சொல்வோம். 

10. என்னால் எல்லோரையும் போல் முகநூலிலோ, வாட்சப்பிலோ ஆழ்ந்து போக முடியலை. அவ்வப்போது முக்கியமான செய்திகள் வந்திருக்கானு பார்ப்பதோடு சரி. நண்பர்களின் பதிவுகள் என் டைம்லினில் வந்திருந்தால் படிப்பேன். இல்லைனா தேடிக் கொண்டு போவதில்லை. ஏன்? என்ன காரணமாக இருக்கும்?

# நேரம் இல்லை அல்லது ஆர்வம் இல்லை.  வேறு என்ன இருக்கமுடியும் ?

நெல்லைத்தமிழன் : 

Many more happy returns of the day - அப்படீன்னாக்க அர்த்தம் என்ன?

# That happy birthday should return year after year for many happy years.

இந்த மந்திரத்தைச் சொன்னால் பணம் கொட்டும், இந்த மந்திரத்தை சூரியனைப் பார்த்து தினமும் மூன்று முறை சொன்னால் நாம் அப்படி ஆயிடுவோம் இப்படி ஆயிடுவோம் என்று பல்வேறு மந்திரங்கள் அது சம்பந்தமான செய்திகள் வாட்சப்பில் வருதே. அனுப்பறவங்க அதை முயற்சித்துப் பார்த்திருப்பார்களா? நீங்கள் இதையெல்லாம் நம்பறீங்களா?

$ அது பலிக்காததற்கு 1000 காரணம் சொல்வார்கள். 1950 களில் குண்டூசி பேசும்படம் போன்ற பத்திரிக்கைகளில் 2 ரூபாய்க்கு மாய மோதிரம் விளம்பரம் போலதான் இதுவும்.

# சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்வையாளர்களைக் கவர அதி தீவிர முயற்சிகள் பலவும் மேற்கொள்ளப் படுவதை அதிகம் பார்க்க முடிகிறது.  இதில் லாபம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.  இந்த மாதிரி இதைச் செய் அதைச் செய் என்று ஆசை காட்டும் செய்திகள் இந்த யுக்திகளில்  ஒரு வகை.  எனக்கு இதில் எல்லாம் ஆர்வம் கிடையாது.

& " வாட்சப்பானாம் அவதிதாம் - துர்மார்கானாம் சமுதாயஹே  அனுதினாம்ஸம்  - மூடமதே - திர்க்கின்சஹா திரிகால சம்பூர்ண மந்த்ர புஷ்பானாம் தீமஹி, நேத்ர ரக்ஷிதாம் லோகானாம் சர்வ ஆமய சம்ரட்சனாம் சதா சர்வ வல்லபே " இந்த மந்திரத்தை நாள் தோறும் மொபைலைப் பார்த்து, மைனஸ் மூன்று முறைகள் சொல்லிவந்தால் .. .. ..   ' மந்திரம் சொல்லிவந்தால் இப்படி ஆயிடுவோம், அப்படி ஆயிடுவோம் ' என்பது போன்ற வாட்ஸ் அப் செய்திகள் நமக்கு வராது ! 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

ஹிந்தி படங்கள் பார்க்கிறார்கள், வட நாட்டு உணவை விரும்பி உண்கிறார்கள், அணிவது வட நாட்டு உடைதான், பெயர் வடமொழிதான், திருமணங்களில் வடக்கத்திய பழக்கங்கள் - ஆனால் ஹிந்தி படிக்க மட்டும் ஏன் சுணக்கம்?

# தன்னம்பிக்கை குறைவு.

& எல்லாவற்றையும் ஆதரித்தாலும் - எதிர்ப்பதற்கு ஏதேனும் ஒன்றாகிலும் இருந்தால்தானே சுவாரசியமாக இருக்கும்! அதனால்தான். 

டைம் காப்ஸ்யூல்(time capsule) எனப்படும் காலப்பெட்டகத்தை புதைக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் அதில் எவற்றையெல்லாம் வைப்பீர்கள்?

# மொபைல், விவேக சூடாமணி , திருக்குறள், சில இசைப் பதிவுகள், எனது சிற்றுரை.

& என்னுடைய பெண்ணும், அவளுடைய தோழிகளும் பதின்ம வயதில், எங்கள் வீட்டு முன்புற தோட்டப் பகுதியில்,  சில காகிதங்களில் ஏதேதோ எழுதி, சிறிய பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் போட்டு அதை மண்ணில் ஆழமாகப் புதைத்து வைத்தார்கள். பிறகு அதைப் பற்றி அவர்கள் மறந்து போனார்கள். நானும், என் மனைவியும் கூட அதைப் பற்றி மறந்துபோனோம். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து, வீட்டை விரிவாக்கம் செய்ய மண்ணைத் தோண்டியபோது, கிடைத்த அந்த பிளாஸ்டிக் டப்பாவை , தோண்டியவர்கள் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள். டப்பா, உள்ளே இருந்த பேப்பர், கட்டியிருந்த ட்வெய்ன் நூல் எல்லாம் சரியாக இருந்தது. ஆனால் டப்பாவின் உள்ளே செம்மண்ணும் தண்ணீரும் புகுந்து, எழுதப்பட்டிருந்த எழுத்துகள் எதையும் படிக்க இயலாதபடி மறைத்து இருந்தது.   

டைரி எழுதும், கணக்கு எழுதும் பழக்கங்கள் உண்டா?

# இல்லை. 

& அட! என்னைப் பார்த்து டைரி எழுதும் பழக்கம் உண்டா என்று கேட்டுவிட்டீர்களே! ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்கி, ஒவ்வொரு நாளும் நிச்சயம் டைரியில் ஏதேனும் எழுதாமல் இருக்கமாட்டேன் - பிப்ரவரி பதினேழு வரை! 

கணக்கு எழுதும் பழக்கம்  சில வருடங்கள் முன்பு இருந்தது. இப்போதெல்லாம் எல்லாமே ஆன்லைன் டீலிங் என்பதால் - எல்லா செலவுகளும் பாங்க், அமேசான், பே டி எம், போன்றவற்றின் statement பார்த்தால் தெரிந்துவிடும். 

= = = =

இந்த வாரம் இந்தப் பதிவை முழுவதுமாகப் படித்தவர்கள் எல்லோரும் முக்காலிக்கு எவ்வளவு கால் என்று கருத்துரையில் குறிப்பிடவும். 

= = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்கள் : 

1) 

2)

3) 

 


= = = =
மின்நிலா எண்பத்து ஒன்றாவது வார இதழை, உங்கள் மொபைல் / கணினியில் படிக்க சுட்டி : இதோ இங்கே 


= = = = =


75 கருத்துகள்:

  1. பின்னுட்டம் இல்லாமல் பார்ப்பதே அதிசயம்

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் எல்லோருக்கும்..

    //& மற்றவர் கருத்து, என்னுடைய கருத்தை பிரதிபலிப்பது போல இருந்தால், வரவேற்பேன். கருத்துதான் முக்கியம் - அதை நாந்தான் சொல்லவேண்டும் என்கிற அவசியம் இல்லை. //

    நல்ல கருத்து. இதற்கு நல்ல மனப்பக்குவம் பெற்றிருந்தாலொழிய இது சாத்தியமில்லை. வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா... நான் எல்லாம் யாரோ என்னவோ சொல்லிட்டுப் போங்க என்னும் மே ம பெ அ எ மா ராகம்!

      நீக்கு
    2. நான் எல்லாம் யாரோ என்னவோ சொல்லிட்டுப் போங்க//

      ஸ்ரீராம் இதுவும் நல்ல விஷயம் தான்!!! ரியாக்ட் பண்ணாமல் இருப்பது என்பது ரொம்பக் கடினமான விஷயம்! இதற்கும் பக்குவம் அவசியம்தான். வாழ்த்துகள் ஸ்ரீராம். மனப்பக்குவத்திற்கு.

      மொத்தத்தில் இரண்டு கருத்துமே எதிர்வினையாக ரியாக்ட் பண்ணாமல் இருப்பதைச் சொல்வது.

      கீதா

      நீக்கு
    3. மே ம பெ அ எ மா = மேதகு மந்திரி பெறுகின்ற அலோவன்ஸ் என்ன மாதிரி ??

      நீக்கு
  3. Many more happy returns of the day - அப்படீன்னாக்க அர்த்தம் என்ன?//

    தமிழில் அழகான பொருள் இருக்கிறதே. பல்லாண்டு மகிழ்வுடன் வாழ்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்டியா?//

      ஸ்ரீராம் ஏன் சரியில்லையா? நீடுழி மகிழ்வுடன் வாழ்க! இதையும் சொல்லி அல்லது பல்லாண்டு மகிழ்வுடன் வாழ்க! என்று அடித்து வைத்ததை காப்பி பேஸ்ட் செய்யும் போது இரண்டாவது மட்டும் வந்துவிட்டது.

      ஜுனூன் தமிழ்ல சொல்லணுமோ?

      கீதா

      நீக்கு
  4. இந்த மந்திரத்தைச் சொன்னால் பணம் கொட்டும், இந்த மந்திரத்தை சூரியனைப் பார்த்து தினமும் மூன்று முறை சொன்னால் நாம் அப்படி ஆயிடுவோம் இப்படி ஆயிடுவோம் என்று பல்வேறு மந்திரங்கள் அது சம்பந்தமான செய்திகள் வாட்சப்பில் வருதே. அனுப்பறவங்க அதை முயற்சித்துப் பார்த்திருப்பார்களா? நீங்கள் இதையெல்லாம் நம்பறீங்களா?//

    ஆசிரியர்களின் பதிலில் சொல்லியிருப்பது போல் இது பிஸினஸ் ஆகியிருக்கிறது என்பது மிகவும் சரியே.

    வியாபாரத்தைத் தவிர்த்து பார்த்தால், குடும்பங்களில், சுற்றத்தில், நட்பு வட்டத்தில் நலவிரும்பிகள் சொல்வதை வைத்துப் பார்த்தால்....நடக்கிறதா இல்லையா என்பதை விட இது நம்பிக்கையைத் தூண்டும் விதத்தில் ஒரு பாசிட்டிவ் நோக்கில் சொல்லப்படுவது. நம்பிக்கைதானே வாழ்க்கை. இல்லை என்றால் மனம் நெகட்டிவாகப் போய் மன உளைச்சலுக்கு ஆளாவது மனித இயல்பு. மனம். மனிதன் மிகவும் சாதாரணமானவன்.

    இதில் இரண்டு வகை. இதை நம்பிச் செய்பவர்கள் ஒரு பாசிட்டிவ் அப்ரோச்சுடன் இருப்பவர்கள் சொல்லும் போது முழு நம்பிக்கையில் இருப்பது மனம் தளராமல் இருக்க உதவும் நடந்தால் மகிழ்வார்கள். இதைச் செய்தால்தான் நடந்தது என்றும் சொல்லப்படும். (ஆனால் அது அப்படி அல்ல. சொல்லியும் நடக்க வேண்டும் என்று இருந்தால் மட்டுமே நடக்கும் என்பது வேறு விஷயம். ஆனால் நம்பிக்கை) நடக்கவில்லை என்றால் சொல்லிட இருக்கிறது போன ஜென்மத்துக் கர்மா, பாவ புண்ணியக் கணக்கு. மனதைத் தேற்றிக் கொண்டு சமாதானப்படுத்திக் கொண்டுவிடலாம்

    அடுத்த வகை அதைச் சொல்லி/செய்து நினைத்தது நடக்கவில்லை என்றால், விரக்தி. நம்பிக்கை இழப்பு. மன உளைச்சல். அட போ இதெல்லாம் சுத்த ஹம்பக். நம்மை மீறிய சக்தி எதுவும் இல்லை குறிப்பாக இறை எதிர்ப்பு என்ற மனப்பான்மைக்குச் செல்வது. இது எக்ஸ்ட்ரீம். (இதில் ஆன்மீகத்தையும், இறை நம்பிக்கை பக்தியையும் தொடர்புபடுத்திக் குழப்பிக் கொண்டு)

    இதை எல்லாம் கடந்து அடைவது Higher Consciousness! இதை அடைவது மிகவும் கடினம். எதிலுமே பற்றற்று இருந்தால் மட்டுமே அடையமுடியும்.

    ஆனால் மனிதர்கள் பாவம். குடும்ப வாழ்வில் பல பிரச்சனைகளைக் கடக்க ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கொண்டு கடக்கத்தானே விழைவான். அது ஒரு ஓடமாக பயன் கொடுக்கிறதென்றால் இருந்துவிட்டுப் போகட்டுமே. ஒரு வேளை மனம் நல்லவழியில் திசை திரும்பலாம்.
    .
    கீதா

    பதிலளிநீக்கு
  5. முக்காலிக்கு முக்கால் கால். எங்க வீட்டில் அப்படித்தான்.

    படக்கருத்து: ஐஸ், ஐஸ், ஐஸ்

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  7. எங்கள் வீட்டில் முக்காலி இல்லாததால் எத்தனை கால்கள் என்று எண்ண முடியவில்லை(எ..ப்..பூ..டி..?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை - இரண்டு என்று சொல்லிவிட்டு, எங்கள் வீட்டு முக்காலிக்கு ஒரு கால் உடைந்து போயிட்டது என்று சொல்லாமல் விட்டீர்களே!

      நீக்கு
    2. அட! இப்படி ஒன்று இருக்கா?!

      நீக்கு
  8. முக்காலி - என் நெருங்கிய நட்பு, உறவு வட்டத்தில் முயலுக்கு மூன்று கால் என்று வாதிடுபவர்களைச் சொல்வது!!!!! முக்காலி வந்திடுச்சு அப்புறம் டிஸ்கஸ் பண்ணலாம் என்று எங்களுக்குள் ரகசியக் குரலில் சொல்லிக் கொள்வோம்.

    எங்கள் வீட்டில் முக்காலிகள் ஓரிரண்டு இருக்கின்றன!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இந்த வாரம் இந்தப் பதிவை முழுவதுமாகப் படித்தவர்கள் எல்லோரும் முக்காலிக்கு எவ்வளவு கால் என்று கருத்துரையில் குறிப்பிடவும். //

    கௌ அண்ணா பதிவை முழுசா படிக்காமல் கடைசில இந்த மாதிரி ஏதாவது சொல்லப்பட்டிருக்கானு ஸ்க்ரோல் செஞ்சு பாத்துட்டு சொல்லிட்டுப் போய்டலாம்ல?!?!?! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  10. பா.வெ! வெகு ஜன மக்கள் ஹிந்தியை தம் அன்றாட வாழ்க்கை உபயோகத்திற்கு கொண்டு வருவதை அவ்வளவு சுளுவாகவா நினைக்கிதீர்க்ச்ள்?

    பதிலளிநீக்கு
  11. ஹிந்தி தெரிந்த வடக்கத்தியருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் பெரும் பாலும் பிரச்னையே இல்லை.. ஓரளவு சமாளித்து விடலாம்.

    பதிலளிநீக்கு
  12. ஆங்கிலம் தெரிந்த வடக்கத்தியரும் இந்தியில் தான் பேசுவேன் என்று அடம் பிடிக்கும் பொழுது தான் ஹந்தி தெரியாத அப்பாவி மக்கள் அவஸ்தைக்குள்ளாகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  13. இப்போதெல்லாம் நேரடியாகப் பேசிக் கொள்வதை விட மொபைல் மூலம் அழைத்தாலே பலரும் பேசுகின்றனர்.

    கீசா. மேடம் சொல்வது உண்மை.

    பா.வெ. மேடம் அவர்களின் முதல் கேள்வி சூப்பர்.

    பதிலளிநீக்கு
  14. கேள்வி/பதில்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் என் கேள்விகளுக்கு # மட்டுமே பெரும்பாலும் பதில் சொல்லி இருப்பதால் மத்தவங்களுக்குத் தெரியலை போல! ஹிஹிஹிஹிஹி! அப்பாடா! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. # சொன்னதே சரி என்று தோன்றியதால் மற்றவர்கள் சாய்சில் விட்டுவிட்டார்கள்.

      நீக்கு
  15. ரோபோ பிடுங்கல் தாங்கலை. போகட்டும். கீ.சா.மொழி என அங்கீகாரம் கொடுத்ததுக்கு நன்னியோ நன்னி கௌதமன் சார்.

    பதிலளிநீக்கு
  16. எட்டுக்கால்ப் பூச்சிக்கு எத்தனை கால்னு எப்படிக்கண்டுபிடிப்போமோ அப்படியே முக்காலிக்கும் எத்தனை கால்கள்னு கண்டுபிடிச்சுச் சொல்லிடுவோம். நாங்க யாரு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எட்டுக்கால் பூச்சியின் கால்களை எண்ணுவதைவிட - முக்காலியின் கால்களை எண்ணுவது சுலபம் அன்றோ!

      நீக்கு
    2. முக்கால் அப்படீன்னாக்க 3/4தான் இல்லையோ? ரொம்ப மெத்தப்படிச்ச அறிவுஜீவிகள் 3 x 1/4 = 3/4 என்பதான் மூணு கால் கொண்டதற்கு முக்காலின்னு பேர் வச்சிருப்பாங்களோ?

      அப்படீன்னாக்க மனுசனுக்குப் பேர் எட்டுகாலியா?

      நீக்கு
    3. நெல்லை, மூன்று காலம் - முக்காலம், மூன்று கனி - முக்கனி, மூன்று கண் உடையவர் - முக்கண்ணன் என்று சொல்வது போலதான் இதுவும் முக்காலி! தொகைச்சொல் - மூவேந்தர், மூவிடம், நாற்றிசை என்பது போல். (உங்களுக்குத் தெரிந்ததுதானே தமிழ் ப்ரொஃபஸர் நெல்லை!!!! )

      நான் தமிழில் டி அல்லோ என்று சொல்பவர் வராததால் ஹாஹாஹா நான் இங்கு...ஹாஹாஹா!

      கீதா

      நீக்கு
  17. பட்டுக்கை, பட்டுவிரல்குட்டிப் பாப்பாங்கல்லாம் அழகோஅழகு. கீழே இருக்கும் நம் முன்னோருக்கும் அவர் குட்டி அழகோ அழகு. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு இல்லையோ!

    பதிலளிநீக்கு
  18. பா.வெ.யின் முதல் கேள்வியையே ஓர் பதிவாகச் சில ஆண்டுகள் முன்னர் எழுதினேன். ஒருவருக்கொருவர் அழைத்துக்கொள்வதும் "ஜி" போட்டுத்தான். ஆனால் ஒரு விஷயம் நிச்சயமாய்ச் சொல்லணும். கடந்த 20 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வட இந்தியர்கள்/சாமானியர்கள் தமிழகத்தில் வந்து சேர்ந்திருப்பதால் ரியல் எஸ்டேட், பின்னலாடைத் தயாரிப்புக் கம்பெனிகள், ஒரு சில ஓட்டல்கள், இன்னும் சில கம்பெனிகளில் அநேகமாக ஊழியர்கள் ஹிந்தி தெரிந்தே வைத்திருக்கிறார்கள். ஹிந்தி பேசும் தமிழர்கள்(ஹிந்தி படிக்காமலேயே) சதவீதம் அதிகரித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. அதே மாதிரி தான் தமிழ் பேசும் வடகத்திக்காரர்களும். செளகார்பேட்டை ஏரியா உள்ளங்கை நெல்லிக்கனி.
    தேவைகளின் அடிப்படையில் எந்த மொழியம் பயில முடிவது இயற்கையின் நியதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூரில் உள்ள ஒரு (கல்கத்தா) நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சௌகார்பேட்டை - என்று சொல்லமாட்டார் - அது சவுக்கிதார்பேட்டை என்கிறார். அதாவது ஸ்ரீகிருஷ்ணர் - பார்த்த சாரதியாக - கையில் சாட்டையுடன் இரதம் ஓட்டியதால், அவரை சவுக்கிதார் என்று குறிப்பிடுகிறார்கள், வட இந்தியர்.

      நீக்கு
    2. அட! சவுக்கார்பேட்டைன்னு ஒரு சினிமாவே வந்திருக்கே! இந்த விஷயம்லாம் ஸ்ரீராமிற்குத் தான் அத்துபடி...

      நீக்கு
  20. நேரடியாகப் பேசுதல்/மொபைல் மூலம் அதாவது வாட்சப் போன்றவற்றின் துணை கொண்டு பேசுவது - இரண்டாவது சுலபம். எப்போ freeயோ அப்போ பதில் சொல்லலாம். யோசித்து பதில் எழுதலாம்

    இப்போ இருக்கும் ஜெனெரேஷனுக்கு பொறுமை நஹீன்

    பதிலளிநீக்கு
  21. பெரும்பாலும் பஞ்சாபியர் அதிலும் சீக்கியர் ஆங்கிலம் பேசுவார்கள். உ.பி,, பிஹார், மேற்கு வங்க மக்கள் அவரவர் தாய்மொழியிலேயே பேசுவார்கள். ஹிந்தி புரிந்தாலும் வங்காளம் பேசினால் வங்காளிகளுக்கு சந்தோஷம் ஆகிவிடும். அவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவசியம் நேர்ந்தால் தவிரப் பேசுவதில்லை.

    பதிலளிநீக்கு
  22. சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் கேள்வி மிகவும் சரியே. (ஆனால் நானும் ஹிந்தி கற்றுக் கொண்டதில்லை.)

    நெல்லைத் தமிழனின் இரண்டாவது கேள்வி கோயில்களே வியாபரத்தலமாக மாறி வருவதை நினைவுபடுத்துகிறது. அப்படியிருக்க கோயில்களுக்குப் பரிகாரங்கள் வேண்டிச் செல்பவர்களைக் காப்பிட்டலைஸ் செய்ய இதுவும் ஒரு வியாபாரம்தான்.

    என்றாலும் இறைவனை மனமார, நம்பிக்கையுடன் துதித்தால் கண்டிப்பாக நல்லது நடக்கும் என்பதில் நான் அதி தீவிர நம்பிக்கை உடையவன். அப்படிக் காலம் தாழ்ந்தாலோ அல்லது நடக்கவில்லை என்றாலும் அதுவும் இறைவனின் சித்தம் என்று கொள்பவன். எல்லாமே இறைவனின் சித்தம் எனும் நம்பிக்கை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  24. அனைத்து கேள்விகளும், பதில்களும் அருமை.
    குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது போல அனைத்து ஜீவராசிகளுக்கும் குழந்தைகளிடம் காட்டும் அன்பு ஒரே மாதிரி இருக்கும். பூ போல மலர்ந்து சிரிக்கும் குழந்தை அழகு.



    பதிலளிநீக்கு
  25. மூன்று படங்களும் அழகு. மூன்றாவது படத்தை ரொம்பவே ரசித்தேன்.

    சமீபத்தில் மூன்றாவது படத்து மூதாதையர்கள் குட்டிகளை வளர்க்கும் வீடியோசானல்கள்/யுட்யூப் எனக்குத் தெரிந்து 3...இருக்கின்றன. செம ஜாலியா இருக்கும். இதுங்க பண்ணும் அட்டகாசம். உடை எல்லாம் உடுத்திக் கொண்டு அவற்றை வளர்ப்பவர் - அம்மா - விடம் சமத்துக்குழந்தைகளாக லூட்டி அடிக்கும் அழகு பார்த்து மனம் சிரித்து ரிலாக்ஸ் ஆகும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  26. இந்த லைக்ஸ், கமெண்ட்ஸ் பெரிய குழப்பம். மத்யமரில் சிலர் 'ம்' என்று எழுதி பதிவிட்டாலே முன்னூறு கமெண்ட்ஸ், ஐநூறு லைக்ஸ் வந்துவிடும். போஸ்ட் ஆஃப் த வீக் விருது வாங்கிய பதிவுகளை சீண்ட ஆளிருக்காது. ஆனால் எப்போதுமே கிளாஸ் என்பதற்கும், மாஸ் என்பதற்கும் வித்தியாசம் உண்டே. மாஸ் ஆக இருப்பது ஒரு வரம்.

    பதிலளிநீக்கு
  27. //இதை எல்லாம் படித்துவிட்டுப் பின்னர் விமரிசிக்கும் என்னைப் பற்றி என்ன சொல்வது?//
    இஃகி இஃகி இஃகி

    பதிலளிநீக்கு
  28. படங்களுக்கு என் பதில்: உலகம் அழகு குழந்தைகள் கையிலிருந்தால்.

    பதிலளிநீக்கு
  29. முக்காலி எங்கள் வீட்டில் இல்லை.நாற்காலி உண்டு :)

    ரோஜா மலர் போல குழந்தைகள்.

    பதிலளிநீக்கு
  30. எங்கள் வீட்டில் நாற்காலிதான் இருக்கிறது அதன் ஒரு கால் உடைந்து உள்ளதால் அதை எப்படி அழைக்க வேண்டும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!