வெள்ளி, 24 டிசம்பர், 2021

வெள்ளி வீடியோ : மீன் கடிக்கும் மெல்லிதழை நான் கடித்தால் ஆகாதா...

 இன்று சித்திர பாடல்களின் தொகுப்பு.  நிறைய பாடல்கள் இருந்தாலும் என் தெரிவில் சில பாடல்கள்.  வெவ்வேறு பாடகர்கள் பாடிய சித்திர பாடல்கள்.

வெண்ணிற ஆடை படம் பற்றி முன்னரே இரு பாடல்கள் பகிர்ந்தபோது பேசி இருக்கிறோம்.  எனவே நேரடியாக பி பி ஸ்ரீனிவாஸ் குரலில் பாடலுக்குச் சென்று விடலாம்!  

ஸ்ரீதர் இயக்கத்தில் 1965 ல் வெளியான இந்தப் படம்தான் ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த், மூர்த்தி ஆகியோருக்கு முதல் படம்.  ஸ்ரீகாந்தின் இயற்பெயர் ராஜாவெங்கட்ராமன்.

முதலில் அப்பா வேடத்தில் இந்தப் படத்தில் மேஜர் நடிக்க மறுத்தார் என்பது உபரித் தகவல்.

காட்சியில் ஸ்ரீகாந்தும், வெண்ணிற ஆடை நிர்மலாவும்.

சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி
சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி

நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ

சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி

கன்னி இதழ் மீது தென்றல் படும் போது
அதில் இல்லாத சுவை இருக்கும்
அந்த சுகம் வேறு சொந்தம் கொள்ளும் போது
அதில் பொல்லாத பயம் இருக்கும்

மேனி என்னும் மேடை மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா
மேனி என்னும் மேடை மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா

அது மாறி விட்டால் இந்த மேனியிலே
ஒரு தேனாறு ஓடும் இல்லையா
இடை தானாக வாடும் இல்லையா

பாலிருக்கும் கிண்ணம் மேல் இருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம் இல்லையோ
பாலிருக்கும் கிண்ணம் மேல் இருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம் இல்லையோ

அந்தக் கோலம் எல்லாம் இதழ் மீது வந்தால்
இன்பம் கோடான கோடி இல்லையோ
அதைக் காணாமல் போவதில்லையோ




அடுத்து டி எம் எஸ் குரலில் சித்திரப்பாடல்!  இந்தப் பாடல் பார்த்ததும்தான் அல்லது கேட்டதும்தான்  இந்தப் பாடலைப் பகிரலாமே என்று தோன்றியது.  அப்படி  எண்ணியபோதுதான் மற்ற பாடகர்களின் சித்திர பாடலையும் பகிர எண்ணம் வந்ததது!  டி எம் எஸ் பாடிய சித்திர பாடல்களில் 'சித்திரம் பேசுதடி', 'சித்திரச் சோலைகளே', பாடல்களும் அணிவகுப்பில் இருந்தாலும் என் தெரிவில் இந்தப் பாடல்.

அன்பைத்தேடி..  முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1974 ல் வெளிவந்த படம்.   கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.  சிவாஜி, ஜெயலலிதா நடித்த படம்.  படத்தில் மேஜர், சோ, மனோரமா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் உண்டு. 

இதில் ஒரு வித்தியாசமான வேடத்தில் சிவாஜி நடித்திருப்பார்.  காட்சியில் கனவுப் பாடல்.  சிவாஜி-ஜெயலலிதா.  டி எம் எஸ் ஜெயலலிதா குரலில் பாடல்.

சித்திர மண்டபத்தில்
சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்

அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ
அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ

கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன்
அது கட்டிய வட்டங்களோ இல்லை கொட்டிய முத்தங்களோ
கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன்

செம்பொன் மேனி திருச்சபையில் சேவை செய்ய வந்தேன்
செம்பொன் மேனி திருச்சபையில் சேவை செய்ய வந்தேன்
சிவந்த பவளப் பெட்டியில் எந்தன் தேவை கொள்ள வந்தேன்

கும்ப கலசம் மின்னும் அழகு கோயில் கட்டி வைத்தேன்
கும்ப கலசம் மின்னும் அழகு கோயில் கட்டி வைத்தேன்
குளிர குளிர ஆடும் வண்ணம் அருவி கொட்டி வைத்தேன்
சுவைக்க சம்மதமா
இது மறைக்கும் மந்திரமா

இலைகள் மூடும் கனிகள் உண்டு போதை கொள்ள வந்தேன்
இலைகள் மூடும் கனிகள் உண்டு போதை கொள்ள வந்தேன்
இடையில் ஆடும் நடன சாலை பாவம் காண வந்தேன்
சுகம் உலாவும் சொர்க்க லோகம் நானும் கொண்டு வந்தேன்
சுகம் உலாவும் சொர்க்க லோகம் நானும் கொண்டு வந்தேன்
தொடரத் தொடர எங்கோ செல்லும் ஞானம் கொண்டு வந்தேன்
சுவைக்க சம்மதமா
இது மறைக்கும் மந்திரமா




பஞ்சு அருணாச்சலம் எழுதி, எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1978 ல் வெளிவந்த திரைபபடம் 'காற்றினிலே வரும் கீதம்'.  இந்தப் படத்தில் இளையராஜா அதன் டைட்டில் சாங் எனப்படும் 'காற்றினிலே வரும் கீதம்' பாடலை புதிவிதமாக ஒலிப்பதிவு செய்திருப்பார்.   1974 ல் ஹிந்தியில் வெளியான 'ஆப் கி கசம்' படத்தின் டைட்டில் சாங்கில் ஆர் டி பர்மன் இதே உத்தியைப் பயன்படுத்தி இருப்பார்.  அதாவது பல்லவியின் ஈற்றடி மறுபடி மறுபடி வருவதுபோல.  ஆர் டி பர்மன் பாடல் முடியும்போது மட்டும் அப்படி வருமாறு அமைத்திருப்பார். இளையராஜா பல்லவி பாடும் ஒவ்வொரு முறையும் அப்படி வருமாறு அமைத்திருப்பார்.

ஆனால் இன்று நாம் பார்க்கப் போவது அந்தப் படத்தில் இடம்பெற்ற 'சித்திர' பாடல்!  ஜெயச்சந்திரன் கோரஸுடன் பாடிய இந்தப் பாடல் அந்தக் காலத்தில் ரொம்பப் பிரபலம்.  அதுவும் ஆரம்பத்திலும் நடுவிலும் வரும் தையரே தையா தையரே தையா ரொம்பவும் ஹிட்!


இந்தப் பாடல் மிக அபூர்வமான 'சாவித்ரி' ராகத்தில் அமைந்த பாடலாம்.  இப்படி ஒரு ராகம் பெயரையே நான் இப்போதுதான் கேள்விப்பப்படுகிறேன்!  திரையிசையில் இந்த ராகத்தில் தமிழில் எண்ணி நாலே நாலு பாடல்கள்தான் வல்லுநர்களால் சொல்ல முடிகிறது.  அதில் இரண்டு இளையராஜா.  இந்தப் பாடல், அப்புறம் புன்னகை மன்னன் படத்தில் வரும் 'கவிதை கேளுங்கள் ' பாடல்.  மூன்றாவது 'அழகன்' படத்தில் இடம்பெற்ற 'துடிக்கிறதே நெஞ்சம்' பாடல்.  மரகதமணி இசை.  நான்காவது டி ஆர் இசையில் ரயில் பயணங்களில் வரும் ஜெயச்சந்திரன் பாடிய 'வசந்த காலங்கள்' பாடல்.  இந்தத் தகவலை சிமுலேஷன் பக்கத்தில் படித்தேன்.  இந்தப் பாடல் என் வெள்ளி லிஸ்ட்டில் இருக்கிறது!  ஒருநாள் பகிர வேண்டும்!

காற்றினிலே வரும் கீதம் படத்தில் முத்துராமன் கவிதா நடித்திருக்கிறார்கள்.  பஞ்சு அருணாச்சலத்தின் பாடலுக்கு இசை இளையராஜா.  வரிக்கு வரி வரும் 'தையாரே  தைய்யா' ஒரு புதுமை.  நடுநடுவே வரும் 'ஏ குரிய ஏலவாளி தண்டேலாவாளம்..' வரிகளுக்கு என்ன அர்த்தமோ...  மலையாளமோ..  ஞான் அறியில்லா!  ஆனால் சுகமான பாடல்.

தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா..
தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா..

தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா..
தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா..

சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
தைய்யார தைய்யா
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
தைய்யார தைய்யா 
ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யா.தைய்யார தைய்யா

சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
தைய்யார தைய்யா
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
தைய்யார தைய்யா

தைய்யார தைய்யா.தைய்யார தைய்யா
தைய்யார தைய்யா.தைய்யார தைய்யா

மைய்யை இட்ட கண்ணாலே மையல் கண்ட நேரம்
மொத மொதலா தொட்டேனே வாய்க்கா கரையோரம்
சாயாமல் சாய்ந்தாளே மார்பிலே

அள்ளி கட்டும் கண்டாங்கி அரை கொறையா ஒதுங்க
அலுங்காம அணைத்தாளே வெதுவெதுப்ப மயங்க
மஞ்சள் கொண்ட கைக்காரி மயக்கி விட்டள் என்னை
ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்

போய் வரவா என்றாலே ஏக்கதுடன் பார்ப்பா
நான் திரும்பி வரும் வரைக்கும் கரையினிலே நிற்பா
உணவில்லை உறவில்லை வாடுவாள்

என் முகத்தை பார்த்ததுமே துள்ளி துள்ளி வருவா
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளி தருவா
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத் தங்கம் போலே
ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யா.தைய்யார தைய்யா




அடுத்து தலைவர் எஸ் பி  பாலசுப்ரமணியம் பாடிய பாடல் என்பதாலேயே முதலிடத்தில் இதைப் பகிர்கிறேன்.  புதுச்செருப்பு கடிக்கும் படம்.

இதுவும் 1978 ல் வெளிவந்த வெளிவராத படம்தான்.  பாடலை எழுதியிருப்பவர் ஜெயகாந்தேனே.  இசை எம் பி ஸ்ரீநிவாசன்.

அவரது இந்தக் கதையைப் படிக்க வேண்டும் என்றால் இங்கே சென்று படிக்கலாம்.  

படம் வெளிவரவில்லை என்று நினைக்கிறேன்.  பாடல் பிரபலம்.

சித்திரப் பூ சேலை.சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி எழில் மூடி வரும் முழு நிலவோ
மூடிவரும் முழு நிலவோ.
சித்திரப் பூ சேலை.

மீன் கடிக்கும் மெல்லிதழை நான் கடித்தால் ஆகாதா
தேனின் ருசி தெரிந்தவன் நான் தேனீயாய் மாறேனா
சித்திரப் பூ சேலை.

மஞ்சள் பூசும் இடமெல்லாம் என் மனம் பூசல் ஆகாதா
கொஞ்சம் என்னை குங்குமமாய் குழைத்தெடுத்தால் வாரேனா
சித்திரப் பூ சேலை.

படிக்கட்டில் ஏறி வரும் பாதத்தெழில் பார்ப்பதற்கு
படிக்கட்டின் இடையிலே ஓர் பலகையாய் மாறேனா
சித்திரப் பூ சேலை..

முக்காலும் துணி மறைத்து நீ மூலையிலே போய் நின்று
உன் சொக்காயை இடுகையில் நான் சொக்காகி மூலைச் சுவராகி
முன்னின்று பாரேனா

சித்திரப் பூ சேலை சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி எழில் மூடிவரும் முழு நிலவோ
மூடிவரும் முழு நிலவோ 
சித்திரப் பூ சேலை

59 கருத்துகள்:

  1. இனிய மார்கழி காலை வணக்கம் அனைவருக்கும்.
    என்றும் ஆரோக்கியம் உடன் இருக்க அமைதி நம்முடன் உறைய
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. சித்திரப் பாடல்கள் எல்லாமே அற்புதம். நல்ல இசையும் சொற்களும் நிறைந்த
    கவிதை வரிகள்.
    சித்திரமே சொல்லடி பாடல் வெளி வந்த போது
    அதாவது வானொலியில் .... எல்லாமே புதுமை நிறைந்த படமாகப்
    பார்க்க,கேட்கப் பட்டது.

    படம் வந்த புதிதில் ஏகப்பட்ட சர்ச்சைகள்.
    கொஞ்ச நாட்களில் சூடு பிடித்தது என்று நினைக்கிறேன்.

    ஸ்ரீகாந்த் மிகத் துடிப்பாக
    நடித்திருப்பார்.
    ஒரு கதா நாயகி தலைவியானார். இன்னோரு
    பெண் நடனத்தோடு வாழ்க்கையை நடத்திவருகிறார்.

    ஆஷா என்ற சைலா ஸ்ரீ ஆனாரோ.
    பாடலுக்கு நன்றி. ட்விஸ்ட் நடனம் வந்த புதிது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா..இணையம் இல்லாததால் கணினியில் பதில் சொல்ல முடியாத்தால் சுருக்கமாகவே இன்றைய பதில்கள.!

      நீக்கு
  3. சித்திர மண்டபத்தில் பாடல்,
    செல்வி ஜயலலிதாவின் குரலில் இனிமை.

    திருச்சியில் கேட்ட பாடல் . படம் பார்க்கவில்லை.
    சில பாடல்களைக் கேட்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.:)

    நடித்தவர்கள் பாவம் தான். பார்த்த நாமும் பாவம்:)
    இதே ஜோடியின் பொட்டு வைத்தமுகமோ எத்தனை நன்றாக
    இருக்கும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அன்பைத் தேடி படம் பார்த்தேன், ரசித்தேன் அம்மா!!!

      நீக்கு
  4. சிமுலேஷன் என்ற பதிவைப் பார்த்தே நாட்களாகிறது:)

    சாவித்ரி என்று ஒரு ராகமா.
    அருமை!!!
    சித்திரச் செவ்வானம் பாடல் மிக அற்புதமானது.
    எப்பொழுது வேண்டும் என்றாலும் ரசிக்கலாம்.
    ரசிப்பேன்.

    எத்தனை தடவை கேட்டாலும் அந்த நடுவில் வரும் ஏ குரியா
    புரிவதே இல்லை.
    இதே போல கடல்மீன்கள் படத்திலும்
    தாலட்டுதே வானம் பாட்டிலும்வரும்
    கேட்டிருக்கிறீர்களா. நன்றி மா.

    பதிலளிநீக்கு
  5. சித்திரப் பூ சேலை , கொஞ்சம் எஸ் டி பர்மன் சாயல் அடிக்கிறது.

    படிக்கட்டில் ஏறி வரும்,பாதங்கள். நல்ல கற்பனை.எஸ்பிபி
    பாடி யிருப்பது
    அசத்துகிறது.எம் பி ஸ்ரீனிவாசன் இசை கொஞ்சம்
    மெதுவாகக் கேட்க வேண்டும்.:)
    சின்னஸ் சின்ன மூக்குத்தியாம் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ் டி பர்மன் சாயலா? அட.. எனக்கும் சின்னச் சின்ன மூக்குத்தியாம் பாடல் நினைவுக்கு வந்தது.

      நீக்கு
  6. எல்லாமே ரசித்த பாடல்களே ஜி அடிக்கடி இலங்கை வானொலியில்...

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம்.. நேற்று உங்களைப் பார்க்கவில்லையோ?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      ஆமாம். நேற்று பதிவுலகம் வர இயலவில்லை. மழை விட்டாலும், இந்த குளிரில் சில உடல் உபாதைகள். ஆனால் நேற்று இரவு அமர்ந்து உங்கள் பதிவை பார்த்து படித்து ரசித்தேன்.உடன் கருத்திடவும் முடியவில்லை அசதியில் உறங்கி விட்டேன்.

      மழை, வெள்ளம், பயண திசைமாற்றம், மண்டபத்தின் சில குறைபாடுகள் இவற்றினூடே தங்கள் வீட்டு மஹாலக்ஷ்மியுடன் தாங்கள் வீடு திரும்பியதாக நீங்கள் திருப்தியுடன் விவரித்திருந்தை மிகவும் ரசித்தேன். அதுதானே வேண்டும் நமக்கு. மற்ற பகுதிகளும் நன்றாக இருந்தன. எப்போதும் போல் வியாழன் கதம்பம் அருமை.

      நேற்று என்னை காணவில்லையே என்று விசாரித்திருக்க உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. விசாரித்திருந்த என்று திருத்திப் படிக்கவும்.

      நீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய சித்திர பாடல்கள் அனைத்தும் அருமை. அதற்காக நீங்கள் தொகுத்து தந்த விபரங்கள் அதனினும் அருமை. இதில் சில பாடல்கள் நிறைய தடவை கேட்டு ரசித்திருந்தாலும், அனைத்துப் பாடலையும் கேட்டு விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. 1 & 2 : | மேனி - இடை |

    OK OK :

    3 : ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
    தைய்யார தைய்யா...!
    தைய்யார தைய்யா...!

    4 : கேட்டு எவ்வளவு நாளாச்சி...! வரிகளுக்கு ஏற்ப காட்சிகள் எடுத்ததால் தணிக்கையில் நீக்கி இருக்கலாம்...!

    பதிலளிநீக்கு
  11. ஜெயகாந்தன் என்றால் சொல்லக் கூடாதா என்ன?

    ஆற்று நீரில் கன்னியர் நீராடும் பொழுது மீன் அவரது மெல்லிதழைக் கடிக்குமா தெரியவில்லை. ஆனால் அதே காரியத்தை மனித ஜாதிக்கு பொறுத்திச் சொல்லும் போது கடித்தலைத் தவிர்த்து கவ்வினால் ஆகாதா என்றிருந்தால் யதார்த்தமாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. கடிப்பதற்கு என்ன ஊத்தப்பமா என்று கேட்டிருந்தால நெல்லை ஹஹ்ஹஹா என்றிருப்பார். ;))

      நீக்கு
    3. நெல்லை இந்தப் பதிவை பகிஷ்காரம் செய்து விட்டார்!!

      நீக்கு
  12. இதான் திரைப்படத்திற்கு பாடல் எழுதுவோருக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.

    சித்திரமே சொல்லடி.. பாடலில் தென்றலின் தீண்டலை எடுத்தாண்டு எவ்வளவு இயல்பாய் இயற்கையாய் கண்ணதாசன் இதே சிட்சுவேஷனை ஜமாய்த்திருக்கிறார் என்று நினைத்துப் பார்க்கத்தான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.். உண்மை. ஆனாலும் ஜேகே பாடல் எனக்கு SPB க்காகவே பிடிக்கும்.

      நீக்கு
  13. ஸ்ரீராம் சித்திரை செவ்வானம் பாட்டு உடனே தெரிஞ்சுடுச்சு. அழகான பாட்டு சாவித்ரி ராகம்...ச்சே என் சான்ஸ் போச்சு!!! நீங்களே சொல்லிட்டீங்க!! ஹாஹாஹாஹா

    சாவித்ரி பிறந்த வீடு ஹிந்துஸ்தானி வீடு. புகுந்த வீடு கர்னாடக சங்கீதம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. எனக்கென்ன தெரியும்? அங்கே சொல்லி இருந்தார்கள்!

      நீக்கு
  14. சித்திரை செவ்வானம் கேட்டு பல நாட்களாகிவிட்டது.

    என்ன இசை...நீங்கள் சொல்லியிருக்கும் கவிதை கேளுங்கள்!! யெஸ்ஸு

    எனக்கு ஆச்சரியம் டி ஆர் சங்கீதம் பயின்றவர் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாம் நல்ல ராகம், மெட்டில் இருக்கும். அவர் திறமையும் வியக்க வைக்கிறது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. முதல் இரு பாடல்களும் கேட்டதும் மெட்டு தெரிந்துவிட்டது. கேட்ட பாடல்கள்! இ வா உ.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. சித்திரை மண்டபத்தில் - ஜெயலலிதா குரம் ஆசெம்!!! ரொம்ப நல்லா பாடுவார் என்பது தெரியும்...இதில் சுசீலா குரலோ என்று நினைக்கும் படி....நிஜமாகவே திறமைசாலி!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. சித்திரம் பாடல்கள் என்றதும் டக்கென்று நினைவுக்கு வந்த பாடல் சித்திரம் பேசுதடி!! நீங்களும் சொல்லியிருக்கீங்க இந்தப் பாடலை

    கீதா

    பதிலளிநீக்கு
  18. சித்திரைப் பூ ....சேலை - செம பாட்டு! கேட்டிருக்கிறேன் ரசிக்கும் பாடல்.

    சேலைன்னு சொல்ற இடம் எஸ்பிபி குரல்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. சித்திர பாடல்கள் என்பதை சித்திரை பாடல்கள் என்று படித்து விட்டு, சித்திரை பிறக்க இன்னும் நாட்கள் இருக்கின்றதே? தை முதல் நாள் தமிழ் வருடப் பிறப்பு என்பதை எதிர்த்து பதிவா?என்றெல்லாம் எண்ணங்கள்...மனது எத்தனை வேகமாக ஓடுகிறது!

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல்களில் மூன்று பாடல்களை அடிக்கடி வானொலியில் கேட்டுள்ளேன். வெண்ணிற ஆடை படம் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். மற்ற படங்களை பார்த்ததில்லை.

    பாடகர் ஜெயசந்திரன் குரலினிமையில் அடிக்கடி கேட்ட "சித்திர செவ்வானம்" பாடலை இன்றுதான் காட்சியில் பார்க்கிறேன். காட்சி அவ்வளவாக ரசிக்கவில்லை. பாடல் அவரது (ஜெயசந்திரன்) குரலில் அருமை. அதில் நடுநடுவில் வரும் வரிகள் படகோட்டுபவர்களின் பாஷையோ? ஆனால் பாடல் இனிமை.

    கடைசி பாடல் எஸ்.பி.பி குரல் இனிமையில் அமையோ அருமை. அதுவும் இன்றுதான் கேட்டேன். புது செருப்பு (படமும்) கடிக்கத்தான் செய்யுமென படம் வெளி வரவில்லையோ? நாவல் வெளிவந்தது தெரியும். படத்தின் கதையை சென்று படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. அத்தனை பாடல்களும் இனிமை!
    ஜெயசந்திரன் பாடியிருக்கும் 'சித்திரை செவ்வானம் சிரிக்கக் கண்டேன்...' பாடலின் வரிகளை மாற்றி நகைச்சுவையாக என் சகோதரி பாடுவார்.

    பதிலளிநீக்கு
  22. ஜெயகாந்தன் சினிமாக்குப் பாடல் எழுதியது - ஓ இது அவர் எழுதிய கதை இல்லையா...

    கதையை சுட்டிக்குப் போய் வாசிக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!