வெள்ளி, 26 மே, 2023

வெள்ளி வீடியோ :: மார்கழியில் மாயவனும் தை மாசியிலே நாயகனும்

கிருஷ்ண கானத்தில் நாம் இதுவரை இங்கு பகிராத அடுத்த பாடல் கோகுலத்தில் ஒருநாள் ராதை..

கண்ணதாசன் பாடல்..  இசை MSV.  P. சுசீலா குரல்.  ஊடலும் தாபமும் பாடலில் எப்படி வழிந்தோடுகிறது பாருங்கள்  


கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
    கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
    ஏனடி ராதா என்று என்னடி சேதி என்று
    ஏனடி ராதா என்று என்னடி சேதி என்று
    ஸ்ரீ நந்த பாலன் வந்தான் தானொரு
    ஆனந்த ராகம் தந்தான்
    கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
    ஏனடி ராதா என்று என்னடி சேதி என்று
    ஸ்ரீ நந்த பாலன் வந்தான் தானொரு
    ஆனந்த ராகம் தந்தான்

கோபியர் தம்மைத் தொட்டு கொஞ்சிய கைகள் எந்தன்
    கூந்தலைத் தொட வேண்டாம்...ஆ....ம்
    கோபியர் தம்மைத் தொட்டு கொஞ்சிய கைகள் எந்தன்
    கூந்தலைத் தொட வேண்டாம்
    நான் கோடியில் ஒன்று அல்ல
    கோவிலின் பெண்மை என்னைக் கொஞ்சிட வர வேண்டாம்
    கோவிலின் பெண்மை என்னைக் கொஞ்சிட வர வேண்டாம்
    இனி என் கோலமும் கெட வேண்டாம்

    கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
    ஏனடி ராதா என்று என்னடி சேதி என்று
    ஸ்ரீ  நந்த பாலன் வந்தான் தானொரு
    ஆனந்த ராகம் தந்தான்   

ராதையின் ஊடலுக்கும் கீதை படித்த கண்ணன்
கோதையை வசியம் செய்தான்
ராதையில் ஊடலுக்கும் கீதை படித்த கண்ணன்
    கோதையை வசியம் செய்தான்
    கோதையை வசியம் செய்தான்
    அங்கு சோலை யமுனை வெள்ளம்
    துள்ளி எழுந்து அவள் மேனியைத் தொடவும் செய்தான்
    அங்கு சோலை யமுனை வெள்ளம்
    துள்ளி எழுந்து அவள் மேனியைத் தொடவும் செய்தான்
    கண்ணன் நீண்டொரு கலகம் செய்தான்  


=======================================================================================

சென்ற வாரம் சொன்ன அதே ஏன் திரைப்படத்திலிருந்து இன்று மற்றுமொரு பாடல். பாடல் கண்ணதாசன்.  இசை R D ​பர்மன்.  அபப்டிதான் சொல்ல வேண்டும் ஏனென்றால் (படத்தின் பெயரே ஏன் தானே?!)

இந்தப் படம் வெளிவந்தது 1970 ல்.  1968 ல் வெளிவந்தது படோசன் என்கிற ஹிந்தித் திரைப்படம்.  உங்களுக்கெல்லாம் தெரியும், இதைத்தான் தமிழில் நாம் அடுத்த வீட்டுப்பெண் என்று பார்த்தோம்.  இது 1960 ல் வெளிவந்த படம்.  ஆம், 1960.  இதன் ஒரிஜினல் ஒரு பெங்காலி படம்.  அது 1952 ல் வந்தது.​

ஹிந்தியில் வந்த இந்த டியூன் ஏன் படத் தயாரிப்பாளருக்கு பிடித்துப் போயிருக்க வேண்டும். ஒரிஜினல் பெண்குரல்.  லதா​ மங்கேஷ்கர் பாடியது.  கேட்க விரும்புபவர்கள் அதை இங்கே கேட்கலாம்.  

அதையும் கட்டாயம் கேளுங்கள் என்றே சிபாரிசு செய்வேன்.  ஆனால் இங்கு S P பாலசுப்ரமணியம் குரலிலும் பாடலை ரசியுங்கள்.  அவருடன் பாடுபவர் சரளா. 

வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே

வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் தங்கையின் கோவிலிலே
அண்ணனுக்கு பெண் பார்க்க வரும் அண்ணியை என் கண் பார்க்க
அஹ ஹஹஹா..
அஹ ஹஹஹா ஹா.ஹாம்ம்.ம்ம்.

அண்ணனுக்கு பெண் பார்க்க வரும் அண்ணியை என் கண் பார்க்க
என் தங்கையின் துணையை நான் பார்க்க அந்த இன்பத்தை நீ பார்க்க
நீ வருவாயா வேல் முருகா

மார்கழியில் மாயவனும் தை மாசியிலே நாயகனும்
அஹ ஹஹஹா..அஹ ஹஹஹா ஹா.ஹா.ஓஹ்ஹோ
மார்கழியில் மாயவனும் தை மாசியிலே நாயகனும்
திருநாளுக்கு வருகின்ற விருந்தினர்கள் அவர் பாவையின் உறவினர்கள்
நீயும் வருவாயா வேல் முருகா

முன்னவனோ ஆலமரம் தம்பி முளைத்து வரும் தென்னைமரம்
எங்கள் தோட்டத்தில் இன்று மூன்று மரம் எங்கள் வாழ்வே அன்பு மாயம்

நீ வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கையின் கோவிலிலே

27 கருத்துகள்:

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. முதல் பாடல் அடிக்கடி கேட்டப்பாடல்.
    அடுத்த பாடல் வானொலியில் அடிக்கடி கேட்டப்பாடல்.
    போன பதிவில் இந்த பாடலை நன்றாக இருக்கும் என்று சொல்லி இருந்தேன் என்று நினைக்கிறேன். பாடலை கேட்டு இந்த படத்தை
    youtube ல் தேடி பார்த்தேன், படம் நன்றாக இல்லை. படம் சோகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  போன வாரமே சொல்லி இருந்தீர்கள்.  நானும் அடுத்த வாரம் இந்தப் பாடல்தான் என்று சொல்லி இருந்தேன்.  நான் படம் பார்த்து ரிஸ்க் எடுக்கவில்லை!

      நீக்கு
  5. முதல் பாடல் நிறைய தடவை கேட்டதுண்டு.

    இரண்டாவது பாடல் கேட்ட நினைவே இல்லை. பாடல் காட்சி காமிக்கலாக இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்சி பெரும்பாலும் காமெடிதான்.  பாடலை ரசிப்ப்பதில் தடங்கல் கொடுக்கும்.  கானம் எப்படி?  தலைவர் குரல் எப்படி?

      நீக்கு
  6. இரண்டு பாடல்களுமே அடிக்கடி கேட்டு ரசித்தவை..

    அதிலும் முதல் பாடல் தனி ரகம்.

    கிருஷ்ண கானத்தின் பாடல்களில் குருவாயூருக்கு வாருங்கள்.. - பாடலை
    இங்கே கேட்க ஆவல்..

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரண்டுமே அற்புதமான பாடல்கள். இரண்டையுமே அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் மறுபடியும் கேட்டு ரசித்தேன்.

    முதலாவது பாடல் தெய்வீகத்தில் மனதை உருக்குமென்றால், இரண்டாவது பாடல் பாசத்தால் மனதை உருக்கும். எஸ். பி. பியின் குரல் வளத்தில் அண்ணனின் பாசம் மனதை மகிழ்விக்கிறது. இந்தப்பாடல் இலங்கை வாணொலியில் கேட்டு, கேட்டு நானும் உடன் சேர்ந்து பாடி மகிழ்ந்திருக்கிறேன். எங்கள் அண்ணாவை நினைத்து பழைய நினைவுகள் மனத்துள் தோன்றின. கூடவே கண்ணீரும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நேற்று பதிவுலகம் வர இயலவில்லை. மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... உங்கள் அண்ணன் நினைவு வந்து விட்டதா.... கிரேட்... நல்ல பாடல்.

      நீக்கு
  9. இரண்டு பாடல்களுக்காகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம் இரண்டு பாடல்களுமே நிறைய கேட்டிருக்கிறேன். முதல் பாடல் கோயில் உபயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் உபயம்?    வேறெங்கும் கேட்டதில்லையா?

      நீக்கு
  11. இரண்டாவது பாடல் எஸ்பிபி குரல் இளம் வயதுக் குரல். குரல் நடிகருக்காகக் கொஞ்சம் மாற்றிப் பாடுகிறார் என்று தோன்றுகிறது. தொண்டையை விரித்து! ஆனால் அந்தக் குரல் எப்படிப் பாடினாலும் ஈர்க்கும் குரல்.

    பாடலை விட குரல்தான் பிடித்திருக்கிறது, முன்பு ரசித்த பாடல்தான். இப்போது பல ஆரத்திப் பாடல்கள் இந்த ராகத்தில் கேட்டுகேட்டு அதுவும் இப்படியே ஆரம்பம் இருக்கிறதா....கேட்டு கேட்டு ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  12. தலைவரின் ஹம்மிங்க் மற்றும் ஒஹொவில் அவரது இயல்பான கிமிக்ஸ் ...ரசனையான ஒன்று. ....முகத்தில் Bhபாவம் என்பாங்க ஆனால் இவர் குரலிலேயே Bhபாவம் சொட்டும்!! உணர்வு பூர்வமாகப் பாடுபவதில் தலைவரை அடிச்சிக்க முடியாது என்பது என் கருத்து!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. முதலில் சுசீலாம்மாவின் ஹம்மிங்க் வேறு ஏதோ ஒரு பாடல் எம் எஸ் வி இசை? அதில் கேட்ட நினைவு. ஆனால் வழக்கம் போல் பாடல் நினைவில்லை!

    ஸ்ரீராம், இதுவுமே நீங்க ஆர் டி பர்மன் இசைன்னு சொல்லிருக்கலைனா நான், எம் எஸ் வி என்றே நினைத்திருப்பேன்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம் எஸ் வி இல்லை...  டி ஆர் பாப்பா...   டி  ஆர் பாப்பா ஆர் டி பர்மன் டியூனை காபி அடித்திருக்கிறார்!

      நீக்கு
  14. இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன். பிடித்தமான பாடல்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!