வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

வெள்ளி வீடியோ : திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து வெள்ளை மலர் சிரிப்பில் பிள்ளை வருவான்

 TMS குரலில் இன்றைய தனிப்பாடல்..

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட
இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அரகர சிவசுத மால்மருகா என
அனுதினம் ஒருதரமாகிலும் - உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுடர்மிகு வடிவேலா !


==========================================================================================

எம் ஆர் ராதா ஒரு லட்ச ரூபாய் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு கொடுத்து விட்டு தான் காசு வாங்காமல் நடித்துக் கொடுத்தாராம்.

சிவாஜிக்குப் பொருத்தமான கதை என்று நமக்கே தோன்றும். ஆரூர் தாஸ் அவர்களும் முதலில் சிவாஜியை அணுகி இருக்கிறார். நல்ல கதை என்று ஒப்புக்கொண்ட சிவாஜி பதிலேதும் சொல்லாமல் காலம் தாழ்த்த, எம் ஜி ஆரிடம் வந்தார்களாம்.

தயாரிப்பாளர் கே கே வாசு தயாரித்த ஒரே படம் இதுதானாம். யார் அந்த வாசு என்று தெரியவில்லை. படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி சக்ஸஸ் ஆனது!

ஒரிஜினலாக 1921 ல் சார்லி சாப்ளின் தானே முதன்முதலாக இயக்கி நடித்த The Kid என்கிற கைச்சுவைப் படத்தைத் தழுவி, ஆனால் அழுமூஞ்சிப் படமாக எடுத்திருந்தனர்.

பாடல்கள் வாலி. இசை எம் எஸ் விஸ்வநாதன். இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு. எம் ஜி ஆர், சரோஜா தேவி, எம் ஆர் ராதா சௌகார் நடித்துள்ள படம்.

என்ன படம்? உங்களுக்கே தெரியும்!

செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே

செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

திங்கள் முகமெடுத்து
செவ்வாய் இதழெடுத்து
வெள்ளை மலர் சிரிப்பில்
பிள்ளை வருவான்
திங்கள் முகமெடுத்து
செவ்வாய் இதழெடுத்து
வெள்ளை மலர் சிரிப்பில்
பிள்ளை வருவான்
தத்தும் நடை நடக்க
தண்டை குரல் கொடுக்க
சித்தம் குளிர வைக்க முத்தம் தருவான்

செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
ஆரிரரோ ஆரிராரோஆரிரரோ ஆரிராரோ
ஆரிரரோ ஆரிராரோஆரிரரோ ஆரிராரோ.

 
 
 
 
புதன்கிழமை அன்று இந்தியா நிலவில் - அதுவும் இதுவரை யாருமே முயற்சித்திராத, இருளான நிலவின் தென்பகுதியில் காலை வைத்தது. அந்தப் பெருமையான நிகழ்வைக் கொண்டாடும் வகையில் ஒரு பாடல்..  சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற பூமியில் இருப்பதும் வானத்தில் பரபபதும் அவரவர் எண்ணங்களே' பாடல்..
 

44 கருத்துகள்:

  1. முதல் பாட்டு என் மனதுக்குப் பிடித்த பாட்டு. டி எம் எஸ் மாதிரி குரல் எனக்கு மேலெழுவதில்லெ. நல்ல பகிர்வு.

    இரண்டாவது பாடல் சோக உணர்வைத் தட்டி எழுப்புவது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமா பாடல்களுக்கும், பகுதி பாடல்களுக்கும்தான் என்ன ஒரு வேறுபாடு காட்டி இருந்தார் TMS..

      இரண்டாவது பாடல் சோகம் அல்ல.. அமைதியான தாலாட்டு.

      நீக்கு
  2. மூன்றாவது பாடல் கொண்டாட்டம்.

    எப்படியோ.. எபியும் அந்த வரலாற்று நிகழ்வை எழுதிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா....  ஹா..   ஹா...   நான் கூட சும்மா இருந்திருப்பேன்.  KGG தான் இந்தப் பாட்டை வெள்ளிக்கிழமை பகிரலாம் என்றார்.  ஏற்கெனவே பகிர்ந்துள்ள பாடல்களுடன், ஏற்கெனவே பகிர்ந்திருந்த இந்தப் பாடலையும் நாளின் சிறப்பு, பொருத்தம் கருதி இணைத்தேன்!

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்.

    இன்றைய வெள்ளி பாடல்கள் அருமை. முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். டி. எம். எஸ் அவர்களின் அருமையான குரலில் இனிமையான ஒரு பக்தி பாடல்.

    இரண்டாவது, மூன்றாவது பாடல்களும் அடிக்கடி கேட்டதுதான். இன்றைய பாடல் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்.  மூன்று பாடல்களுமே கேட்டிருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி.

      நீக்கு
  5. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. பொதிகை மலை உச்சியில் புறப்பட்ட தென்றலைப் போல இன்றைய பாடல்கள்..

    இனிமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  8. இன்று பகிர்ந்த மூன்று பாடல்களும் மிக அருமையான பாடல்கள்.
    கேட்டு மகிழ்ந்தேன்.

    எல்லா கோவில் விழாக்களில் இந்த முதல் பாடல் ஒலிக்கும்.எங்கள் வீட்டில் இந்த பாடல் கேசட்டில் பதிவு செய்து வைத்து இருந்தோம், அடிக்கடி கேட்போம். சுடர்மிகு வடிவேலன் எல்லோருக்கும் நலம் அருள பிரார்த்திக்கிறேன்.

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்ட
    ஆய்வு குழுவில் என் மகனுடன் படித்த பெண் இருக்கிறார். ஆவர் தன் குழுவுடன் வெற்றியை கொண்டாடிய படத்தை எனக்கு அனுப்பி மகிழ்ந்தான் மகன், நான் அவருக்கு வாழ்த்துகளை சொல்ல சொன்னேன்.
    மயிலாடுதுறை கல்லூரிக்கு( A.V.C College of Engineering )அந்த படங்களை அனுப்பி மகிழ்ந்தான்.

    இன்று தங்கை வீட்டு வரலக்ஷ்மியை தரிசிக்க போக வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.  உங்கள் மகனுடன் படித்த பெண் இந்த சாதனைக்குழுவில் இருபிப்பது மகிழ்ச்சி.  எங்கள் வாழ்த்துகளையும் சொல்லுங்கள்.

      நானும் பாஸும் வரலக்ஷ்மி விரதத்துக்கு கேஜிஎஸ் வீடு செல்கிறோம்.

      நீக்கு
  9. சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
    சுவையான அமுதே செந்தமிழாலே

    உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா!..

    பதிலளிநீக்கு
  10. சொல்லாத நாளில்லை...

    என்னில் காங்கோ நினைவுகளை மேலெழுப்பியது. அங்கு 2011-ல் கட்டப்பட்டிருந்த முதல் ஹிந்து கோவிலில், சனிக்கிழமை காலை பஜன் நடக்கும். கலர் கலராக ப்ரசாதங்கள் தொடரும்.. அதில் கலந்துகொண்டு அடிக்கடி பாட நேர்ந்த பாடல்களில் ஒன்றான இதன் வரிகளில் இப்போது எதிரில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..  மீட்டெடுத்த நினைவுகள்.  

      //இதன் வரிகளில் இப்போது எதிரில்...//

      மத்லப்? 

      நீக்கு
    2. முருகன் வந்துவிடவில்லை!
      டைப்போ.. இதன் வரிகள் இப்போது எதிரில் (ஸ்க்ரீனில்) .. என்றிருந்திருக்கவேண்டும்.

      நீக்கு
  11. திங்கள் முகமெடுத்து
    செவ்வாய் இதழெடுத்து
    வெள்ளை மலர் சிரிப்பில்
    பிள்ளை வருவான்
    தத்தும் நடை நடக்க
    தண்டை குரல் கொடுக்க
    சித்தம் குளிர ஒரு
    முத்தம் தருவான்..

    அடடா!..

    பதிலளிநீக்கு
  12. பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
    இருக்கும் இடம் எதுவோ
    நினைக்கும் இடம் பெரிது
    போய்வரும் உயரமும்
    புதுப் புது உலகமும்
    அவரவர் உள்ளங்களே
    நெஞ்சில் துணிவிருந்தால்
    நிலவுக்கும் போய்வரலாம்!..

    ஆகா!..

    பதிலளிநீக்கு
  13. அருமையான பாடல்கள்...

    மூன்றாம் பாடல் மிகவும் பிடித்தது... கேட்பொலியாக பயன்படுத்தியுள்ளேன்...

    பதிலளிநீக்கு
  14. மூன்று பாடல்களும் கேட்டு ரசித்து பாடல்கள்.

    பெற்றால்தான் பிள்ளையா பாடல் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பொருத்தமானது.

    கடைசி பாடல் எவ்வளவு டூப்பாக எடுத்து இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதைக்கு இந்தப் பாடல் காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டிருக்கும்!

      நீக்கு
  15. 'இருளான நிலவின் தென்பகுதியில்: --

    பெண்கள் முகத்தையே நீலவாக்கி வர்ணிக்கிறார்களே --
    இப்படி சொல்லீட்டீங்களே,
    அவர்களுக்கு கோபம் வராதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்காக, அவர்களின் கருங்கூந்தலை மனதில் இறுத்தி, "இருளான நிலவின் வடபகுதியில்'னு கவிதை எழுதிட முடியுமா?

      நீக்கு
    2. கவிஞர்களுக்கு கார்க்குழல் என்றால் கருமேகம் நெல்லை.
      வழவழ முகம் என்றால் மதி வதனம் தான். சொல்லப் போனால் மாதரே நிலவின் அச்சுப் பிரதி தான் கவிஞர்களுக்கு.
      தமிழ் சினிமாக்களில் தியாகராஜ பாகவதர் காலத்திற்கு முன்பிருந்தே வழிவழி வந்த வழக்கம் இது.

      நீக்கு
    3. வதனமே சந்த்ர பிம்பமோ மதன சரோஜமோ
      நிலவே முகம் பார்த்து
      முகத்தில் முகம் பார்க்கலாம்
      ஸ்ரீராம் இதுபோல நிறையச் சொல்லுவார்

      நீக்கு
    4. தியாகராஜ பாகவதர் படத்தில் TMS குரலில் ஒரு பாடல்...  "வானில் முழு மதியைக் கண்டேன்..  வனத்திலொரு பெண்ணைக்கண்டேன்..  வானின் முழுமதியைப் போலே மங்கை அவள் வதனம் கண்டேன்...".

      நீக்கு
  16. மூன்று பாடல்களும் கேட்டிருக்கிறேன் அருமையான பாடல்கள் .
    சந்திரனில் இந்தியாவின் வெற்றிக்கு பாராட்டுகள். மென்மேலும் ஆய்வுகள் சிறப்புற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. முதல் பாடல் ரசித்துக் கேட்ட பாடல். ஊரில் கோயில் ஸ்பீக்கரில்!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. செல்லக் கிளியே மெல்லப் பேசு பாட்டும் ரசித்த பாடல். முதல் பாடலுக்கும் இந்தப் பாடலுக்கும் வித்தியாசம் பாத்தீங்களா ஸ்ரீராம்? அதாவது டி எம் எஸ் பாடும் விதத்தில். இப்பவும் கேட்டுக் கொண்டே தட்டுகிறேன்.

    என்ன அழகான அழுத்தமான உச்சரிப்பு!!! பாடல் தொடக்கத்தில் சீன் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது!!!! எம் ஜி ஆரின் முக பாவனைகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்தமாகச் சொல்லாதீர்கள்.  எம் ஜி ஆர் ரசிகர்கள் சண்டைக்கு வந்து விடப்போகிறார்கள்!

      நீக்கு
  19. சந்திராயன் வெற்றி சந்தோஷமான தருணம் - எனக்கு இப்படி எல்லாம் தோன்றியது. பௌர்ணமி சமயம் நிலவு அங்கு எப்படி இருக்கும்னு நம்ம சந்திராயன் சொல்லுமோ? அதே போல அமாவாசையின் போது? ஆனா 14 நாள் தான் அதன் ஜீவிதமாமே அங்கு!

    நிலவே என்னிடம் நெருங்காதேன்னு சொன்னா நிலா சொல்லும் அதான் நீங்களே வந்தாச்சே நெருங்கியாச்சே அப்புறம் என்னனு கேக்குமோ?

    நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓஒடிவா...அதெல்லாம் வேண்டாம் நீ அங்கிட்டே இரு நாங்க அப்பப்ப வந்து பாத்து குசலம் விசாரிச்சுக்குவோம். இன்னும் சில தோணிச்சு. அதெல்லாம் அப்பால

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைக்கு அங்கு ஒருநாளான நம் 14நாளில் பயங்கர வெப்பம் இருக்கும் என்று தெரிகிறது. "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்..  நெருப்பாய் எரிகிறது?" என்று சந்திராயன் பாடும்.  இரவானதும் பயங்கர குளிர் வந்ததும் உறைந்துபோய் நிலவே நீ சாட்சி என்று பாட ஆரம்பித்து விடும்!

      நீக்கு
    2. "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது?" என்று சந்திராயன் பாடும். இரவானதும் பயங்கர குளிர் வந்ததும் உறைந்துபோய் நிலவே நீ சாட்சி என்று பாட ஆரம்பித்து விடும்!//

      ஆஆஆ!!! நான் அப்பாலனு வைச்சிருந்தது இதுதான்!!! ...நீங்க சொல்லிட்டீங்க போங்க!!! சரி இருந்தாலும் ஹைஃபைவ்!

      இன்னும் சில இருக்கு அப்பால....சில்லு சில்லாய்ல....ஆனா எழுத டைம் பார்த்துட்டுருக்கேன்.

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!