Friday, April 16, 2010

எங்கள் கணினி அறிவு யாருக்கு வரும்?

அந்த வாரத்தில் தன பெயருக்கு வந்திருந்த கடிதங்களை ஆவலுடன் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார், அமிர்தகடேசன். வேலை கேட்டு வந்திருந்த கடிதங்கள், நலம் விசாரித்து வந்திருந்த உறவினர் கடிதங்கள், 'உடனே இதை நகல் எடுத்து ஒன்பது பேருக்கு அனுப்பாவிட்டால் பெரும் நஷ்டத்தை சந்திப்பீர்கள்' என்று ஒரு பயமுறுத்தல் கடிதம். அன்புள்ள மாமா அவர்களுக்கு என்று ஆரம்பித்து ...... நீங்க நிச்சயம் உதவி புரிவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் .... என்று முடிந்த ஓரிரு கடிதங்கள்.

எல்லாவற்றையும் பார்த்துப் படித்துக் கொண்டே வந்தவர், ஒரு பிங்க் கலர் கடிதத்தைப் படித்ததும், பெருத்த சத்தத்துடன் சிரித்தார்.

"ஐயா இது 'எங்கள்' வங்கியின் கணினி தங்கள் சமூகத்திற்கு அனுப்புகின்ற நினைவுறுத்தல் கடிதம். தாங்களின் ஐந்து வருட கணக்குகளை ஆய்வு செய்ததில், தங்களிடமிருந்து எங்களுக்கு ௦ பூஜ்யம்  ருபாய்  ௦பூஜ்யம்  பைசா பாக்கி இருக்கிறது என்று தெரியவந்துள்ளது. இந்தத் தொகையை நீங்கள் இந்தக் கடிதம் கண்ட ஒரு மாதத்திற்குள் செலுத்தவும். இல்லையேல் எங்கள் வங்கி தாங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்."

அதைக் கிழித்துப் போட்டுவிட்டு, பிறகு அதைப் பற்றி மறந்தே போனார், அமிர்து. அடுத்த வாரம், மீண்டும் அதே கடிதம், தேதி மாற்றத்துடன். அதை கிழித்துப் போடும் முன் யோசனை செய்து அதை பத்திரமாக எடுத்து வைத்தார்.

அடுத்த வாரம் மீண்டும் அதே கடிதம். இந்த டார்ச்சரில் இருந்து மீள - அமிர்து ஒரு யுக்தி மேற்கொண்டார். தன காசோலைப் புத்தகத்தை எடுத்தார். அதில் பூஜ்யம் ரூபாய் பூஜ்யம் பைசாவிற்கு ஒரு காசோலை எழுதி அதை 'எங்கள்' வங்கிக்கு குரியர் மூலமாக அனுப்பிவைத்தார். 

மறுவாரம் - மீண்டும் ஒரு பிங்க் கலர் கடிதம். ரசீது வந்திருக்கிறதோ என்று ஆவலுடன் பிரித்துப் படித்தார், அமிர்து.

"ஐயா தாங்கள் அனுப்பிய செக் கிடைத்தது. துரதிருஷ்டவசமாக - ஐந்து பைசாவிற்குக் கீழே உள்ள எந்தத் தொகையையும் செக் மூலமாக ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே தங்கள் கணக்கில் பாக்கி உள்ள தொகை ஆகிய பூஜ்யம் ரூபாய் பூஜ்யம் பைசாவை உடனே எங்கள் வங்கியில் நேரே வந்து கவுண்டரில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும். இல்லையேல் தங்கள் மீது நடவடிக் ......"

எனவே வாசகர்களே - யாராவது ஒருவர், 'கம்பியூட்டரைக் கண்டுபிடித்தவன் யாரடா?' என்றோ அல்லது 'எங்கள்' வங்கிக்கு எந்த பஸ் போகும்?' என்றோ பற்களை நற நறத்துக்கொண்டே வந்து உங்களைக் கேட்டால், பதில் ஏதும் சொல்லாமல், அங்கிருந்து ஓடிவிடுங்கள்.     

18 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

ஒன்று தெரியுமோ?

இந்த மாதிரி டகல்பாஜி வேலை, சிந்தனை, தர்க்கமெல்லாம் மனிதனுக்கு மட்டும் தான் வரும்! மெஷினுக்கு வராது!

அப்பாதுரை said...

வங்கிக் கணினி வணக்கத்துடன் எழுதிக்கொண்டது:
இப்படி உங்களுக்கு அறிக்கை அனுப்ப வைத்தவர்களையல்லவா கேட்கவேண்டும்? விப்ரோக்காரர்களையும் டிசிஎஸ் ஐபிஎம் காரர்களையும் கேளுங்கள். அவர்கள் எழுதிய பாடாவதி புரோகிராம் தான் இந்தப் பாடு படுத்துகிறது. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே?

வங்கிக் கணினி வணக்கத்துடன் கேட்டுக்கொள்வது:
அமிர்தகடேசனா? அந்தப் பெயரைக் கேட்டாலே இன்னும் இது போல் கடிதமனுப்பத் தோன்றுகிறதே சுவாமி?

கிருஷ்ணமூர்த்தி said...

அப்பாதுரை சார்!

சூப்பர்! அப்பாதுரைன்னு பேர் இருந்தாக்கூட இந்த மாதிரித் தபால் வருமாமே!

சாய்ராம் கோபாலன் said...

//விப்ரோக்காரர்களையும் டிசிஎஸ் ஐபிஎம் காரர்களையும் கேளுங்கள். அவர்கள் எழுதிய பாடாவதி புரோகிராம் தான் இந்தப் பாடு படுத்துகிறது.//

இரண்டு மூன்று வாரங்களுக்கு முன் லேப்கார்ப் (Labcorp) என்று மருத்துவ பரிசோதனை மையம் எனக்கும் ௦.1 சென்டுக்கு செக் அனுப்பி உள்ளார்கள். அதை அனுப்பிய கவர் பைசா, தபால் செலவு (41 சென்ட்). அதை என் வங்கியில் டெபாசிட் செய்ய நான் காரில் ஐந்து மெயில் பெட்ரோல் செலவு செய்து போகவேண்டும் வேறு ?

இதே போல் காரணமே இல்லாமல்

- நான் நடக்கும்போது நீங்கள் ஊற்றிவைத்த தண்ணீரினால் நான் வழுக்கி விழுந்தேன்
- நீங்கள் உங்கள் கடையில், "கார் பார்க்" ஏரியாவில் எடுக்காத snow வினால் நான் வழுக்கி விழுந்தேன்
- இந்த பிசாத்து ஒரு சென்ட்டை அனுப்பவில்லை என்று எவனாவது multi-million $ கேட்டு கேஸ் போடுவானோ என்று பயமும்
- இதை ஆளைவைத்து வேலை செய்ய சொன்னால் அவனுக்கு சம்பளம் அது இது என்று ஆகுமே என்றும்
- சிஸ்டம் / process என்ற பெயரில் ஆகும் கூத்து
- Wall ஸ்ட்ரீட் முதலீட்டார்களை சந்தோஷ படுத்தவும்

ஆகும் வினை இது.

"விப்ரோக்காரர்களையும் டிசிஎஸ் ஐபிஎம்" சாப்ட்வேர் எழுத சொன்னால் மட்டும் ஆகாது.

நாராயணா நாராயணா !!

சாய்ராம் கோபாலன் said...

மெயில் - Read as Mile

meenakshi said...

அமிர்தகடேசன் அவர்களை (இப்படி ஒரு பெயரை இதுவரைக்கும் கேள்விபட்டதே இல்லையே! ஒருவேளை கணேசனைதான் கணிபொறி கடேசன்னு மாத்திடுச்சா??) '0' ருபாய் நோட்டு இல்லாததால, ஒரே ஒரு கள்ள நோட்டு அடிச்சு, அதை கொண்டு போய் கட்டிட்டு, கையோட ரசிது வாங்கிண்டு வர சொல்லுங்க. அவர் படற அவதிக்கு இதுதான் சரியான முடிவு. வங்கியிலேயும் எதையும் பாக்காம உடனே ரசிது போட்டு குடுத்துடுவாங்க. அவங்கள பொருத்தவரைக்கும் account tally ஆகணும், அவ்வளவுதான்.

Chitra said...

:-) Good one!

வானம்பாடிகள் said...

வசூலுக்கு ஆட்டோ அனுப்பப் போறாங்க:))

சைவகொத்துப்பரோட்டா said...

ஹையோ........ஹையோ.............:))

ராமன் said...

பலப் பல வருடங்களுக்கு முன்னால், கணிப் பொறி பில்கள் வர ஆரம்பித்த காலத்தில் டைஜஸ்டில் வந்த ஜோக்கை நினைவு கூர்கிறேன்:

ஒரு அம்மையார் தன் பில்களுக்கு சரியாக செக் எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறையும் “ நீங்கள் அதிகம் கட்டி விட்டீர்கள்” அல்லது “ குறைவாகக் கட்டி இருக்கிறீர்கள்” என்று பதில் வந்து கொண்டே இருக்க, கோபமாக கம்பெனி நிர்வாகத்துக்கு ஒரு தபால் போட்டார். மிகச் சில நாட்களிலேயே பதில் வந்தது:

“ அம்மணி, நீங்கள் இதுகாறும் தேதியைக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். தயவு செய்து தொகையை கட்டவும்”

சில ஃபாரங்கள் இப்படி குழப்பமாக இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? சர்னேம் அல்லது லாஸ்ட் நேம் என்ன என்று கேட்டு சிக்கல் படுத்தும் பல படிவங்க்ள் என்னை தலை சுற்ற வைத்திருக்கின்றன.

அப்பாதுரை said...

அப்பாதுரையை இன்றிலிருந்து டப்பாதுரைனு மாத்திக்க வேண்டியது தான், கிருஷ்ணமூர்த்தி சார். நல்ல வேளை, சொன்னீங்களே.

Ananthi said...

//"ஐயா தாங்கள் அனுப்பிய செக் கிடைத்தது. துரதிருஷ்டவசமாக - ஐந்து பைசாவிற்குக் கீழே உள்ள எந்தத் தொகையையும் செக் மூலமாக ஏற்றுக் கொள்ள இயலாது.//

superrrrrrrrrrrr போங்க..
மனுசன நம்பறத விட கம்ப்யூட்டர் தான் நம்புவாங்க.. :D :D

பட்டாபட்டி.. said...

இந்த மாறி ஒரி வங்கிலதான் வேலை செய்ய வேண்டும் என் நெடுநாள் ஆசை சார்.. அட்ரஸ் ப்ளீஸ்..ஹா..ஹா

பொன்மலர் said...

nice post
http://ponmalars.blogspot.com
http://mycutestills.blogspot.com

LK said...

//இப்படி ஒரு பெயரை இதுவரைக்கும் கேள்விபட்டதே இல்லையே! ஒருவேளை கணேசனைதான் கணிபொறி கடேசன்னு மாத்திடுச்சா??)//
ullathu.. ithu sivanin peyar

புலவன் புலிகேசி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா ..... சூப்பர்...

Madhavan said...

ச்சே.. 'ஒரு' ரூபாய்னு இருந்துச்சினா.. போய் கட்டிட்டு ஒரு கும்புடு போட்டுகினு வந்துரலாம்..
'ஐந்து' பைசா எங்கிட்டு கெடைக்கும்....?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!