செவ்வாய், 24 அக்டோபர், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : அழகு ரதம் பிறக்கும் - கோமதி அரசு - சீதை 24



     இந்த வார கேட்டு வாங்கிப்போடும் சீதை ராமனை மன்னிக்கும் தொடரில் திருமதி கோமதி அரசு மேடம் எழுதி இருக்கிறார்.  


===================================================================


அழகு ரதம் பிறக்கும்!
கோமதி அரசு

பத்மா, பழனி இருவரும் மிக  மகிழ்ச்சியாக தங்கள் மணநாளைக் கொண்டாடினர். பத்மாவின் மாமியார் ஆசிர்வாதம் செய்யும் போது சீக்கிரமாய்ப்  பேரனைப் பெற்றுக் கொடு பத்மா என்று ஆசீர்வாதம் செய்தார்கள்.


பழனிக்கும் பத்மாவிற்கும் அந்த ஆசை இருந்தது . திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.


ஒரு பெண் குழந்தை பிறந்து வளரும் போதே, எதிர்பார்ப்புகளும் சேர்ந்தே வளர்கின்றன.  குழந்தைப் பருவம் மாறி,  கன்னியாக மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அப்புறம் அவளை நல்ல வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. தன் குலம் தழைக்க   அவர்களின் அன்பின் அடையாளமாய் ஒரு புது மலரை எதிர்ப்பார்ப்பது     என்று தொடரும் எதிர்பா ர்ப்புகள்  மனித இயல்பு. 


இப்படித்தான் பத்மாவிடம் எல்லோரும் எதிர்பார்த்தனர்.



பத்மாவின் பெற்றோர்  அவள் குழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டார்கள். பத்மா  தாத்தா, பாட்டி, சித்தப்பா, அத்தையின் அன்பான வளர்ப்பில் வளர்ந்தாள்.  அத்தை வீட்டு மாமாவுக்கு ஊர் ஊராக மாற்றல் ஆகும்.   விடுமுறைக்கு அத்தை வீடு போவாள்,  மாமா அந்த ஊரில் உள்ள சிறப்பான இடங்களை அவளுக்குச் சுற்றிக் காட்டுவார்.  விடுமுறை நாட்களை அத்தை குழந்தைகளுடன் கழித்து வந்த அனுபவங்களைத் தாத்தா, பாட்டி, சித்தப்பாவிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து, அடுத்த விடுமுறையை எதிர்பார்த்துக்  காத்து இருப்பாள் , அத்தை குழந்தைகளும் பத்மா மதினி வரும் நாளை எதிர்பார்த்து இருப்பர்.



தாத்தாவும், பாட்டியும்  இறைவனிடம் சென்றுவிட்டார்கள், பத்மா பள்ளிப் படிப்பை முடித்த சமயம்.   அதன் பின் அத்தை வீட்டிலேயே இருந்து தட்டச்சு கற்றுக் கொண்டு அத்தைக்கு உதவியாக இருந்தாள்.
அத்தை வீட்டு மாமாவும் பத்மாவைத் தன் மூத்த மகளாகப் பாசத்தைக் காட்டி வளர்த்தார்.


 அத்தையும், மாமாவும் நல்ல வரன் பார்த்து  திருமணம் முடித்து வைத்தார்கள். பத்மாவின் சித்தப்பாவிற்கும், பத்மாவிற்கும்  ஒரே நாளில் திருமணம் நடந்தது. சித்தி கருவுற்றாள் பத்மா மாமியாரின்  எதிர்பார்ப்பும் வளர்ந்தது . இரண்டு பேருக்கும் ஒண்ணா திருமணம் ஆனது -உன் சித்திக்குக் குழந்தை பிறக்கப் போகிறது, உனக்கு ஒன்றும் காணோம்  என்று பேசினார்கள். , வீட்டுக்கு வரும் உறவினர்களும்  கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.


பத்மா தன் அத்தையிடம் சொல்லி வருந்தினாள் . அத்தை,  "உனக்கு   குழந்தை பிறக்கும்...  மகிழ்ச்சியாக இரு, மனதில் கவலையுடன் இருக்கக் கூடாது,  இறைவனுக்கு எப்போது கொடுக்க வேண்டும் என்று தெரியும் அப்போது கொடுப்பார்" என்று ஆறுதல் படுத்தினார்.


 அவள் அத்தைக்கு  அடுத்து அடுத்து குழந்தைகளைக் கொடுத்த ஆண்டவன் அவளுக்கு ஒன்றைத் தர மறுப்பது ஏன் என்றே தெரியவில்லை பத்மாவிற்கு.  வேண்டும் வேண்டும் என்பார்க்குக் கொடுக்காமல், வேண்டாம் என்பவர்களுக்குக் கொடுப்பது  இறைவனின் விளையாட்டு தானே!


ஆண்டுகள் சென்றது, யார் என்ன பிரார்த்தனை செய்யச் சொன்னாலும், செய்தாள்.  பக்கத்துவீட்டு  அனுபவம் மிக்க  பெண்மணி வாழைப்பழத்தில் பிள்ளைப் பூச்சியைப் பிடித்து உள்ளே விட்டு அது வெளி வந்தவுடன் அந்த பழத்தை உண்ணச் சொன்னார், முகம் சுளிக்காமல் அதையும் செய்தாள் பத்மா. சஷ்டி விரதம் இருந்தாள் "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் " -இது பழமொழி ." சஷ்டி விரதம் இருந்தால்  கருப்பையில் கரு உருவாகும் என்பதை அப்படி முன்னோர் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.


 வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும், பலித்துக்   கருவுற்றாள் பத்மா உற்றார், உறவினர் அக்கம் பக்கம் எல்லோரும் மகிழ்ந்தனர் .
பதமாவிற்கும், பழனிக்கும்  ஒரு  சினிமாப் பாடல் பிடித்துப் போனது. அது;-
 'அழகு ரதம் பொறக்கும், அது அசைந்து அசைந்து நடக்கும் ' 
கற்பனையில், திளைத்தனர், ஆனந்தக் களிப்பில் மிதந்தனர்.


 தகுந்த காலத்தில் பெண் குழந்தை  பிறந்தது, தனக்குச் சாந்தி அளிக்கப் பெண் பிறந்தாள் என்று 'சாந்தி' என்று பெயர்  சூட்டினாள்.  குடும்பவழக்கப்படி மாமியார் பேர் வைத்தாள். அவள் பெரியவர்கள் பேர் சொல்லி அழைக்க முடியாதே(மரியாதைக் குறைவு ஆகிவிடும்) அதனால்   சாந்தி  என்று அழைத்து மகிழ்ந்தாள்.


 மலடி என்ற பேரை கொடுக்காமல்  குழந்தையைக் கொடுத்துப் பின் குழந்தைக்குக் கடுமையான காய்ச்சலையும்  கொடுத்து அந்தப் பிஞ்சுக் குழந்தையைத்  தன் பக்கம் எடுத்துக் கொண்டார் இறைவன். பத்மா, துடித்தாள்! துவண்டாள்!  'குழிப் பிள்ளை மடியில்' என்று  வந்தவர்கள் ஆறுதல் சொன்னார்கள்.


அத்தை குழந்தைகளைத் தன் குழந்தைகளாக நினைந்து ஆறுதல் அடைந்தாள்.  இரண்டு மூன்று வருடங்களில்  மீண்டும் கருவுற்றாள்.  அவள் கணவர் பிரவசத்திற்குப் பத்மாவை  அத்தை வீட்டுக்கு அனுப்பும் போது, "பத்மா! இந்த முறை  மகன் பிறப்பான்.நான் பட்டுப்புடவையுடன் வருகிறேன்" என்று வழி அனுப்பினான்.


 அத்தை , மாமா, அவர்கள் குழந்தையிடம் தன் அத்தானின் எதிர்பார்ப்பைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள்.


 பிரசவ அறைக்குப் போகும்முன் "குழந்தை பிறந்தவுடன் அத்தானுக்குப்   போன் செய்து விடுங்கள்" என்று அத்தை மாமாவிடம்  சொல்லி மலர்ந்த முகத்துடன் சென்றாள்.


குழந்தை பிறந்தான் பழனியின் எதிர்பார்ப்புப்படி, ஆனந்த வெள்ளத்தில் அத்தை, மாமா, பத்மா அகம் மகிழ்ந்தனர். பழனிக்குச் செய்தியைச் சொல்லி விட்டு  அனைவருக்கும்   தனக்குப் பேரன் பிறந்து இருக்கிறான் என்று இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். பத்மாவை தன் மூத்த  குழந்தையாக நினைத்த மாமா.


பழனி பத்மாவையும்  குழந்தையையும் பார்க்கத் துடித்துக் கொண்டு இருந்ததில்  பத்மாவிற்கு கொடுத்த வாக்கை மறந்தான் , பட்டுப்புடவை வாங்கவில்லை. வெறுங்கையுடன்  வந்தான்.  


ஆனால் பத்மா  வருத்தப் படவில்லை, கோபப்படவில்லை,  அவளுக்கு  மகன் பிறந்த பூரிப்பில் முகம் மலர்ந்து இருந்தது.   தனக்குக் குழந்தை பிறந்த  மகிழ்ச்சியைவிட பட்டுப்புடவை ஒன்றும் பெரிதல்ல என்ற மன நிலையில் இருந்தாள்.  " சீதை ராமனை மன்னித்து விட்டாள்"


தமிழ்மணம்.

50 கருத்துகள்:

  1. சீர்மிகு செவ்வாய்..
    நாளும் நலம் பெருகட்டும்..

    பதிலளிநீக்கு
  2. சஷ்டி விரத காலத்தில்
    கதையிலும் அதன் பிரதிபலிப்பு..

    அழகான கதை.. இனிய நடை..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  3. தாய்க்கும் குழந்தைக்கும் ஆசிகள்.

    பதிலளிநீக்கு
  4. கந்த சஷ்டி விரத ஆரம்பம் பார்த்தேன். அதே போல உங்க கதையிலும்
    வருகிறது. பொறுமை உடையவர் பூமி ஆள்வார் என்ற சொல் நிரூபணம்
    ஆகிறது. நல்ல கதை கோமதி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. சஷ்டி விரத காலத்தில் சரியாக கதையை வெளியிட்ட ஸ்ரீராமுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அருமையாக கதையின் நகர்வு சென்றது புடவையை வைத்து மன்னிப்பை கொண்டு வந்தது நன்று.

    குழந்தையைவிட பட்டுப்புடவை பெரிது இல்லைதான்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.
    கதை எழுத வராது எனக்கு உங்களை போல்!
    ஸ்ரீராம் கேட்டுக் கொண்டதற்காக எழுதினேன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. திருமிகு கோமதி அரசு அவர்களுக்கு, வணக்கம்...

    தனித்துவமாக இருக்கின்றது தங்களது கைவண்ணம்... ஒவ்வொருவரிடமும் அலாதியான கற்பனை ஊற்று..

    மேலும் சிறக்க அம்பிகை அருள்வாளாக..

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.
    பத்மாவின் மனம் முழுவதும் அவள் மகன் தான்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்
    மீண்டும் வந்து கருத்து சொல்லி வாழ்த்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. சகோதரி கோமதி கதை மிக நன்றாக மென்மையாக இருக்கிறது. வாழ்த்துகள்....

    கீதா: கோமதிக்கா கதை முழுவதும் உங்கள் மனம் பிரதிபலிக்கிறது. மென்மையான பாசிட்டிவ் மனம்...சுடு சொற்களற்ற....அழகான குடும்பம்...

    வாழ்த்துக்கள் கோமதிக்கா

    பதிலளிநீக்கு
  14. கதை நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப சிம்பிளா இருக்காங்க பத்மா.. குழந்தைக்கு ஒரு செட் துணி தனக்கு ஒரு செட் புடவை வாங்கிட்டு வந்து மறு காரியம் பாருன்னு சொல்லி அப்புறம் மன்னிச்சிருக்கலாம். :-). (எப்படியும் மன்னிச்சாகனுமே.. இல்லையின்னா ஸ்ரீராம் விடமாட்டாரே)

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் துளசிதரன் , கீதா, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி துளசிதரன்.

    கீதா, உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் துரை சார், வாழ்க வளமுடன்.
    பத்மா அமைதியான அன்பான பெண் தவமாய் தவமிருந்து குழந்தை பெற்று இருக்கிறாள் அதனால் அவளுக்கு அது அப்போதைக்கு எதுவும் தோனவில்லை அப்புறம் கேட்பாளோ! என்னவோ!
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. 'குழிப் பிள்ளை மடியில்'என்று சொல்லப் படும் காரணம் புரிந்தது :)

    பதிலளிநீக்கு
  21. @ கோமதி அரசு:

    பட்டுக்குட்டியைப் பெற்ற பெண்ணுக்குப் பட்டுப்புடவை ஞாபகம் வருமா என்ன? சரிதான்.
    ஆனால் ஸ்ரீராமின் ’மன்னிப்பு’ கண்டிஷன் துரத்த, வேகமாக ஓட்டிவிட்டீர்கள் என்று தெரிகிறது !

    பதிலளிநீக்கு
  22. புடவை வாங்கி வருகிறேன் என்ற கணவரின்சொல் மறந்தே போயிருக்கும். குழந்தை செல்வத்தின் முன் எதுவுமே தோன்றாது. நல்ல மன்னிப்பு. நடைமுறை ஸம்பவங்கள். அருமை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் பகவான்ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ஏகாந்தன், வாழ்க வளமுடன்.
    பட்டுக்குட்டியை பெற்ற பெண்ணுக்கு பட்டுப்புடவை நினைவு வராது தான்.
    அருமையான கருத்து நன்றி.

    பதிலளிநீக்கு
  25. தெளிந்த நீரோடையாக ....

    இதமான கதை...

    நன்றி கோமதி அம்மா..

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான் பத்மாவிற்கு மறந்தே போய்விட்டது.
    அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. ஒரு சிறு கதை இப்படித்தான் இருக்க வேண்டுமோ கேட்டுவாங்கிப் போடும் கதையில் சீதை ராமனை மன்னித்துக் கொண்டே இருக்க வேண்டும் அது இப்போது எங்கள் ப்ளாகின் தர்மம் ஆகிவிட்டது

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் அனுராதா பிரேம்குமார, வாழ்க வளமுடன்.
    உங்கள் இதமான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    தலைப்பு ஏற்ற கதைதானே ? எனக்கு தெரிந்த மாதிரி எழுதி இருக்கேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. அழகான குடும்பக்கதை கோமதி அக்கா ..நம் நாட்டில் இந்த பெண் குழந்தை மற்றும் அதன் வளர்ச்சி எதிர்பார்ப்புக்கள் நமது சமூகம் என அழகா சொல்லி சென்ற விதம் அருமை .


    //வேண்டும் வேண்டும் என்பார்க்குக் கொடுக்காமல், வேண்டாம் என்பவர்களுக்குக் கொடுப்பது இறைவனின் விளையாட்டு தானே!//

    இந்த விஷயத்தில் எனக்கும் கடவுள் மீது கொஞ்சம் வருத்தமுண்டு என்னசொல்ல எல்லாம் இறைவன் செயல் .

    அப்புறம் இந்த பிள்ளைப்பூச்சியை பார்க்கும்போது ஒரு குட்டி குழந்தை பாயில் படுத்திருப்பது போலவே தோணும் எனக்கு
    எங்க வீட்டுக்கு ஊரில் வரும் இரவில் அம்மா சொல்வார் பார்த்து மெதுவா அதுக்கு வலிக்காம இலையில் எடுத்து செடி மேல் விட சொல்வாங்க ..
    அதை வாழைப்பழத்தில் விடுவது எப்படி அக்கா hole போடுவார்களா பழத்தில் ?
    பிள்ளையை விட பட்டுப்புடவை முக்கியமில்லையே :)
    அழகான குடும்பத்தை தந்ததற்கு நன்றிக்கா

    பதிலளிநீக்கு
  31. பட்டான ரோஜா மலர்ந்த பின்னே பட்டு...ல்லாம் வெட்டுதான் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  32. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கோமதி அக்கா... கோமதி அக்கா.... கோமதி அக்காவை இன்றுதான் பார்க்கிறேன்ன்ன்ன்ன்... சாந்தமா இருக்கிறீங்க....

    நான் இதுக்கு மேல பேச மாட்டேன்ன்ன் ஜாமீஈஈ:).. பிறகு நீ கண்படுத்திப்போட்டாய் எனச் சிலர்:) வம்புக்கு வருவினம்:)... நில்லுங்கோ கதை படிச்சிட்டு வாறேன்...

    பதிலளிநீக்கு
  33. ஹா ஹா ஹா ரொம்ப சீரியஸ் ஆக்கிக்கொண்டு போய் முடிவில் ஒரு சேலையை வத்து டுவிஸ்ட் வைத்து ... ராமனை மன்னிக்கப் பண்ணிட்டீங்களே....

    எனக்கு படிக்கப் படிக்க நெஞ்சு பக்குப் பக்கென்றது... பத்மாவுக்கு ஏதும் ஆகியிருக்குமோ என... நல்லவேளை நல்ல முடிவு...

    இருப்பினும் கோமதி அக்கா, பேச்சுப் பேச்சா இருக்கோணும்:) எனக்கு வாக்குக் கொடுத்திட்டால் அதை மீறுவது பிடிக்காது:)... அதனால பட்டுச்சேலையை வாங்கி வந்துவிட்டுக் குழந்தையைத் தூக்கச் சொல்லுங்கோ:).. அல்லது சேலை வாங்காததுக்கு நியாயமான காரணம் சொல்லும்படி கேட்கச் சொல்லிப் பத்மாவிடம் சொல்லி விடுங்கோ..:).

    பதிலளிநீக்கு
  34. இம்முறை சீராம கதை இல்லைபோல என நினைச்சேன் தலைப்புப் பார்த்து:).

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் ஏஞ்சலின் , வாழ்க வளமுடன்.
    பிள்ளைபூச்சியை நிறைய பேர் பார்த்து இருக்க மாட்டார்கள். நீங்கள் பார்த்து அதை குழந்தையுடன் ஒப்புமை சொன்னது அழகு.

    அதனால்தான் அந்த பாட்டி வாழைபழத்தில் துளையிட்டு பூச்சியை உள்ளே விட்டு வெளிவர செய்து கொடுத்தார்கள் போலும்!

    வயிற்றில் புழு, பூச்சிகூட உண்டாகவில்லையா என்று கேட்கும் வழக்கம் முன்பு இருந்தது .


    புள்ளைபூச்சியை மடியில் கட்டியது போல் எல்லாம் அந்தக்கால பெரியவர்கள் பேசுவார்கள்.
    அன்பான

    உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    கதையை படித்து அதன் முடிவையும் கண்டு பிடித்து விட்டீர்கள் . அதி புத்திசாலி. குழந்தை மனம் கொண்ட அதிராவிற்குள் நடந்து இருப்பதை உணரும் தன்மையும் இருக்கிறது.

    ஶ்ரீராம் கேட்ட கதைக்கு இந்த முடிவு. ஶ்ரீராம் தளத்தில் மகிழ்ச்சயாக இருக்கட்டும் பத்மா.

    கருத்துக்கு நன்றி அதிரா.


    என் தளத்தில் மீதியை போடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் அசோகன் குப்புசாமி, வாழ்க வளமுடன்.

    பட்டுரோஜா வந்தபின் பட்டு எதற்கு? அதன் பட்டு கைகளின் அணைப்பில் கிடைக்கும் இன்பத்தை விடவா பட்டு இன்பம் தரும் ?

    உங்கள் அழகான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  38. ஏற்கனவே சின்ன கதை. அதை இன்னும் குறுக்கி ஒரு பக்கக் கதையாக்கி விட்ட உங்கள் திறமை பளிச்சிட்டது.

    குழந்தை பிறந்தான்-- என்ற இரண்டே வார்த்தைகளில் பிறந்தது ஆண் குழந்தை என்று தெரியப்படுத்திய அழகும் பிரமாதம். பட்டுப்புடவை ஒட்டாமல் போய் விட்ட உணர்வு ஏற்படுகிற தருணத்திலேயே சீ.ரா.ம. என்ற ஆக்ஞைக்கு ஏற்ப பட்டுப்புடவையை சமாச்சாரத்தை ஒட்டியும் விட்டீர்கள்.

    அதே போலத் தான் அழகு ரதம் சினிமாப் பாட்டைத் தலைப்பில் உபயோகித்த்துக் கொண்ட திறமையும்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    அந்த காலத்தில் 68, 69 என்று நினைக்கிறேன் 'கற்பூரம்' பட பாடல் எனக்கு பிடித்த பாடல்.
    "அழகுரதம் பொறக்கும் அது அசைந்து அசைந்து நடக்கும்"
    அறம் விழுந்து விடுவதை பற்றி கூட எங்கள் ப்ளாக் தளத்தில் விவாதிக்க பட்டது.
    இந்த பாட்டும் அப்படித்தான் கதாநாயகன் பின் வ்ருவதை முன்பே பாடலாக பாடிவிடுவார்.
    என்னிடம் கதை கேட்ட போது எனக்கு எழுத வராது என்று மறுத்தேன் ஸ்ரீராமிடம்.
    என் உறவினர் வாழ்க்கையை கதை ஆக்கி விட்டேன்.

    நீங்கள் கதையை சில இடங்களை குறிப்பிட்டு பாராட்டியது மகிழ்ச்சியை அளிக்கிறது.
    நீங்களும், ஸ்ரீராமும் வாசகர்களை கதை ஆசிரியர்களாக மாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
    எனக்கு முன்பு எழுதியவர்கள் எழுத்துக்கு முன் என் எழுத்து நிற்க முடியாது.

    என்றாலும் அன்பு நட்புகள் பாராட்டும், வாழ்த்துக்களும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

    உங்கள் கருத்துக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  41. கதை நன்று கோமதிம்மா. ஏஞ்சலின் கேட்டது போன்றே எனக்கும் ஐயம், எப்படி வாழைப்பழத்தில் பூச்சியை விடுவார்கள் என்று..உங்கள் பதில் பார்த்து அறிந்துகொண்டேன். பட்டுக்குட்டிக்கு முன்னால் பட்டாவது புடவையாவது :)
    பகிர்விற்கு நன்றி ஸ்ரீராம் சகோ

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் தேன்மதுரதமிழ், வாழ்க வளமுடன்.
    நலமா?
    உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  44. பொறுமையின் பலன் அழகு சிறப்பு sis ( தாமதம் ஆக்கிவிட்டது நேற்று நெட் பிராப்லெம் )

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் பூவிழி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  46. வணக்கம் ராமலஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!