Saturday, March 17, 2018

அமுத சுரபியும் ஆட்டோ தெய்வங்களும்

1)  இப்படியும் பல ஆட்டோ ஓட்டுநர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?  பாராட்ட வேண்டாமா?  ஆட்டோவில் பயணி தவறவிட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையை ஆட்டோ ஓட்டுநர் முத்துராஜ் (65) நேர்மையாக ஒப்படைத்தார். அவரது செயலைப் பாராட்டி போலீஸ் அதிகாரிகள், சக ஓட்டுநர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


2)  சென்ற வாரம் ராமகாரியம் பார்த்தோம் அல்லவா?  இந்த வாரம் அமுத சுரபி...

3)  இதுவும் ஒரு ஆட்டோ ஓட்டுநர் சம்பந்தப்பட்ட செய்தி..  இது மும்பையில்.  அமித் குப்தாவைப் பாராட்டுவதா?  சரளா மேடத்தைப் பாராட்டுவதா? கஞ்சமென்ன, இருவரையும் பாராட்டுவோம்.
4) ........  ஆண்களும்,பெண்களுமாக அங்கே சுமார் ஐம்பது பேர் திரண்டு நிற்கின்றனர்.இவர்கள் யாருமே இறக்கிவைக்கப்பட்ட பிரேதங்களுக்கு சொந்தமில்லதாவர்கள், சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நீண்ட நாள் கேட்பாரற்று வைக்கப்பட்டிருந்த பிரேதங்களைத்தான் இவர்கள் அடக்கம் செய்ய வந்திருக்கின்றனர்......  சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் காஞ்சி பெரியவர் மீது மிகவும் பக்தி கொண்டவர்.அவரது உத்திரவின்படி ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்யும் பணியினை மேற்கொண்டார்.....


  

43 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ஓடோடி வந்துட்டேன் வணக்கம் வைக்க

கீதா

துரை செல்வராஜூ said...

வாழ்க..

Thulasidharan V Thillaiakathu said...

ஹை மீ ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஒ......தேம்ஸ் நதிக்கரையாரின் காதில் இது ஒலித்திட.....ஹா ஹா

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரைசெல்வராஜு அண்ணா, கீதாக்கா, பானுக்கா....

கீதா

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் கீதா ரெங்கன்.

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

Thulasidharan V Thillaiakathu said...

ஏஞ்சல் ஈஸ்டர் வருஅதால் பிஸி போல.....

கீதா

துரை செல்வராஜூ said...

தொண்டுள்ளம் கொண்ட தூயோர்களுக்கு பணிவான வணக்கங்கள்...

நல்லோர்களால் நாடு நலம் பெறட்டும்...

ரிஷபன் said...

மனம் நெகிழும்/வணங்கத் தூண்டும் செய்திகள்
நல்லோர் வாழ்க

Thulasidharan V Thillaiakathu said...

ஆட்டோ ஓட்டுநர் முத்துராஜை நாமும் பாராட்டுவோம்....

மும்பை ஆட்டோ ஓட்டுநர் அமித்குப்தா வையும் பாராட்டுவோம் ...என்றால் சரளா அவர்களின் ப்ரதிஉபகாரம் அடுத்து ஓ போட வைத்தது!!! இப்படி ஒரு மனம் வேண்டுமே சும்மா அந்த நேரத்திற்கு ஏதோ பாராட்டி கொடுத்ஹ்துவிட்டுப் போகாமல் குழந்தைகளின் படிப்பிற்கு உதவுவது....வாவ்!!! ஹேட்ஸ் ஆஃப் சரளா மேடம்!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அமுத சுரபி அமுத சுரபியேதான்....அதுவும் கூட்டாகச் சேர்ந்து தயாரிக்கும் போது செலவு குறையும் தான்...இது எல்லாருக்கும் பொருந்தும்..(கூட்டுக்குடும்பத்திற்கும்!!!! ஆனால் அதான் போயே போச்சே!!) இப்படிச் செய்வதும் குடும்பம் போன்றுதானே!! உணவு மட்டும் அல்லாமல் ஆதரவற்றவர்களின் ஈமச்சடங்குகளையும் நிறாய்வேற்றுவதற்கு மனமார்ந்த பாராட்டுகள்!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அமுதசுரபியின் "ஒளி" ஆதரவற்றோர் ஈமக்கிரியை பார்த்துவிட்டு வந்தால் அடுத்த செய்தியும் அப்படியானது....பாலவாக்கத்து ஸ்ரீதர் மற்றும் அக்குழுவின் சேவை பாராட்டிற்குரியது...ஆனால் படங்கள் தான் மனதை என்னவோ செய்துவிட்டது!! கண்ணில் என்னை அறியாமல் நீர்...என்னென்னவோ மனதில் நினைவுகள்.....எண்ணங்கள்...உடனே இறைவனிடம் சென்று பிரார்த்தனையும்!!!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அமுத சுரபியும் ,ஆட்டோ ஓட்டுனர்களும் மிக அருமை என்றால் இறுதி காரியம் செய்யும் குழுமத்துக்கு என் மனப் பூர்வமான வணக்கங்கள்.
இனிய செய்திகளுக்கு மிக நன்றி ஸ்ரீராம்.

Geetha Sambasivam said...

ஶ்ரீதர் பற்றி ஏற்கெனவே படிச்சிருக்கேன். மற்றவை புதுசு! பகிர்வுக்கு நன்றி.

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் பானு அக்கா.
காலை வணக்கம் கீதா அக்கா.

Thulasidharan V Thillaiakathu said...

சென்னையில் மழை
மனதில் மகிழ்ச்சி இழை
விரிந்தது குடையாய்!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

விண்ணிலிருந்து
மண்ணிற்கு
வாழ்த்துகள்
பன்னீர் துளிகளாய்
மழை
ஓசியில் ஏசி!!!

கீதா

ஸ்ரீராம். said...

எல்லா மழையும் மழையல்ல
கோடை மழையே மழை!

கீதாவை கவிஞி ஆக்கி இருக்கிறதே....

Thulasidharan V Thillaiakathu said...

ஹா ஹா ஹா ஹா...

எப்பவாச்சும் மூளைக்குள்ள பல்பு எரியும்....அதுவும் இப்ப கவிப்பேரரசு ஸ்ரீராமைப் பார்த்து மாணவியாகி பொயிங்குது.....(நெ த தான் இந்தப் பட்டம் ஸ்ரீராமுக்குக் கொடுத்தது.....அதனால தேம்ஸ் கவிதாயினி...கவிப்பேரரசு பொயிங்கக் கூடாது!!!)

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எல்லா மழையும் மழையல்ல
கோடை மழையே மழை! //

செம!!!! கவிஞரே!! என் ஆசானே!! ஹா ஹா ஹா ஹா

முதல் கோடை மழையில் நனையனும்னு நான் நினைத்துக் கொள்வதுண்டு....ஒவ்வொரு வருடமும் நனைவதுண்டு காத்திருந்து...இதோ இந்த வருடமும் நனைந்தேன் என் செல்லத்துடன்!!!!

கீதா

KILLERGEE Devakottai said...

நெகிழ்ச்சியான செய்திகள் நல்லவர்கள் இன்னும் சிலர் உண்டு நம்பிக்கை பிறக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

.(நெ த தான் இந்தப் பட்டம் ஸ்ரீராமுக்குக் கொடுத்தது.....அதனால தேம்ஸ் கவிதாயினி...கவிப்பேரரசு பொயிங்கக் கூடாது!!!)//

தேம்ஸ்ல குதிச்சுருவேன்னு போராட்டமும் செய்ய முடியாதாக்கும் பூஸார்.... ஏன்னா கில்லர்ஜியின் சிவதாமஸ் அலி தேம்ஸ் ஊரணியை வாங்கிவிட்டாராம்..!!!!

கீதா

ஸ்ரீராம். said...

//கவிப்பேரரசு ஸ்ரீராமைப் பார்த்து//

கீதா... விளையாட்டுக்கு கூட இப்படிச் சொல்லி உண்மையான கவிகளை அவமானப்படுத்த வேண்டாம்.

Thulasidharan V Thillaiakathu said...

எல்லா மழையும் மழையல்ல
கோடை மழையே மழை!

கீதாவை கவிஞி ஆக்கி இருக்கிறதே....//

நன்றி நன்றி நன்றி ஸ்ரீராம்!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கீதா... விளையாட்டுக்கு கூட இப்படிச் சொல்லி உண்மையான கவிகளை அவமானப்படுத்த வேண்டாம்.//

ஓகே ஓகே ஸ்ரீராம் புரிந்தது....ஸாரிப்பா!!!

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்...

நெ.த. said...

ஶ்ரீராம்... உங்கள் கவிதை குறளை அடிப்படையாக்க் கொண்டது.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு

உங்கள் கவிதை முழுமைபெற,

எல்லா மழையும் மழையல்ல எப்போதும்
கோடை மழையே மழை

அன்னதானத்தைப் பற்றிப் படிக்குந்தோறும் மனதில் நெகிழ்ச்சி.

நெ.த. said...

ஶ்ரீராம்... உங்கள் கவிதை குறளை அடிப்படையாக்க் கொண்டது.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு

உங்கள் கவிதை முழுமைபெற,

எல்லா மழையும் மழையல்ல எப்போதும்
கோடை மழையே மழை

அன்னதானத்தைப் பற்றிப் படிக்குந்தோறும் மனதில் நெகிழ்ச்சி.

நெ.த. said...

ஶ்ரீராம்.... கவிதை எழுதுபவர் எல்லோரும் கவிஞர்களே. இதில் இவர் பேரரசு இவர் சிற்றரசு என்று தரம் பிரிப்பானேன். கவிஞர் என்று சொல்வது பெருமிதமல்லவா? கம்பன் "கவிப்பேரரசு "என்று தனக்குத்தானே பட்டம் கொடுத்துக்கொள்ளாத்தனால் கவிஞன் இல்லையா? காலப் பெருவெள்ளத்தில் சிறந்த கவிதைகள் வெள்ளத்தை மீறி மேல்வரும், பக்தி இலக்கியங்கள், தமிழ்த் தொன்மைக் கவிதைகளைப்போல்.

ஏகாந்தன் Aekaanthan ! said...

நல்லவர்கள் நாலைந்துபேர் நாட்டில் இருப்பது நன்றாக இருக்கிறது. சேவைசெய்வோர் மேலும் மேலும் தேவைப்படுகிறார்கள் நாம் வாழும் உலகத்தில்.

ஏகாந்தன் Aekaanthan ! said...

அதிரடி, அப்பாவி, ஆஷா, சூப்பர் ஷெஃப், மருத்துவர், கன்சல்டண்ட், கவி, கவிதாயினி – விமானந்தாங்கிப் போர்க்கப்பல்களைப்போல் பட்டந்தாங்கிய ஸ்பெஷலிஸ்ட்டுகள் அதிகமாகி பயமுறுத்துகிறார்கள் எங்கள் ப்ளாகில். மந்திரவாதி, மாயாவி என்றெல்லாம்கூட வந்துவிடுவார்களோ ஒரு நாள்!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

ஆட்டோ ஓட்டுனரின் செயல் சிறப்பானது. சுயநலமில்லா அவர் செயல் பாராட்டத்தக்கது.

வருமானம் பாராமல் ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட அமுத சுரபியின் நல்ல உள்ளங்கள் போற்றப்பட வேண்டியவை.

ஆதரவற்ற ஆன்மாக்களை கடைத்தேற்றும் பணி செய்பும் அற்புதமான மனிதர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.

நல்ல மனங்களை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.
நல்லெண்ணம் கொண்ட இவர்களால்தான் இன்னமும் நாட்டில் அந்தந்த பருவத்திற்கு தப்பாமல் மழை பெய்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

அதிரடி, அப்பாவி, ஆஷா, சூப்பர் ஷெஃப், மருத்துவர், கன்சல்டண்ட், கவி, கவிதாயினி – விமானந்தாங்கிப் போர்க்கப்பல்களைப்போல் பட்டந்தாங்கிய ஸ்பெஷலிஸ்ட்டுகள் அதிகமாகி பயமுறுத்துகிறார்கள் எங்கள் ப்ளாகில். மந்திரவாதி, மாயாவி என்றெல்லாம்கூட வந்துவிடுவார்களோ ஒரு நாள்!//

ஹா ஹா ஹா ஹா! ஏகாந்தன் அண்ணா ஹையோ இப்படி ஐடியாவே கொடுத்துட்டீங்களே!!! கடைசி வரியைச் சொன்னேன்!!! பாருங்க அடுத்த வாரம் அந்த அவதாரம் வந்தாலும் வந்துரும்!! தேம்ஸ்லருந்து!!!ஹா ஹா ஹா

கீதா

கோமதி அரசு said...

முதல் செய்தி நானும் தொலைக்காட்சியில் பார்த்து போட்டோ எடுத்து வைத்தேன் ஏதாவது சமயம் பகிரலாம் என்று.
அமுதசுரபி செய்தி அருமை.ஏழைகளை தேடி சென்று அதுவும் முதியவர்களுக்கு என்பது மேலும் நல்ல செய்தி.
ஆதரவரற்ற அமரர்கள் இறுதி ஊர்வலத்தை நடுத்தும் நல்ல உள்ளங்கள் வாழ்க!
மனித நேயம் மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அனைவருக்கும் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.
உங்களுக்கு நன்றி.

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ கீதா: ..வந்தாலும் வந்துரும்! தேம்ஸ்லருந்து! //

ஓ, தேம்ஸ்! அங்கிருந்து எந்த ஏவுகணை எப்போது புறப்படுமோ யார் கண்டது!

Thulasidharan V Thillaiakathu said...

ஓ, தேம்ஸ்! அங்கிருந்து எந்த ஏவுகணை எப்போது புறப்படுமோ யார் கண்டது!//

ஹா ஹா ஹா ஹா ஹா அதானே!!

கீதா

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்

Asokan Kuppusamy said...

அனைவரையும் பாராட்டலாம் மிக்க நன்றி

Bhanumathy Venkateswaran said...

நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்களை சந்தித்திருக்கிறேன், முதியோர்களுக்கு உணவளிப்பவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அஸ்வமேத யாகத்திற்கு இணையான அனாதை பிரேத சம்ஸ்காரம்..மனதை நெகுழ்த்தி விட்டது. வணங்குகிறேன்.

athira MBBS, MRC...., Consultant. :) said...

நான் இன்று இங்கு எதனையும் படிக்கவில்லை .:)... பிக்கோஸ் ஒரு பெரிய சேஜரி :) ல பிஸியா இருக்கிறேன்:)... என்பதனை இந்த தேம்ஸ்கரை ஆலமர கிழக்குப்பக்க விழுதின் மேல் அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்:)...

துரை செல்வராஜூ said...

3.35!?.....

‘தளிர்’ சுரேஷ் said...

மா”மனிதர்களுக்கு” வந்தனங்கள்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!