அரை நிமிடம் படியுங்க, இரண்டு நிமிடங்கள் சிந்தியுங்க; உடனே கடைபிடியுங்க.
பாடம் ஆறு: எங்கள் Blog வலைப் பதிவில், சென்ற வாரம் நாங்கள் நடத்திய வோட்டெடுப்பு - 'தீபாவளிக்கு நீங்கள் வாங்குவது' -- என்ற தலைப்பு - அதில் வழக்கமான தீபாவளி சமாச்சாரங்களோடு - போட்டி போட்டு, அதிக வோட்டுகள் வாங்கிய ஒரு வார்த்தை "வாழ்த்து". அதுதான் இன்றைய பாடம். வாழ்த்து பெறுங்கள்; வழங்குங்கள். எங்கெல்லாம் வாழ்த்துப் பெறமுடியுமோ அங்கெல்லாம் வாழ்த்து பெறுங்கள். எங்கெல்லாம் வாழ்த்து வழங்க முடியுமோ அங்கெல்லாம் வாழ்த்து வழங்குங்கள். ஆத்மார்த்தமாக வணங்கிப் பெறுங்கள். மனதார - எல்லோர் காதுக்கும் கேட்கும்படி, வாழ்த்துங்கள். நான் நடை பயிலும் தெருக்களில் - ஏதேனும் கல்யாண மண்டபம் கண்ணில் பட்டால், அங்கு திருமணம் நடைபெறும் நாட்களில், வாசலில் மணமகன் பெயரும், மணமகள் பெயரும் - கண்ணில் படும்படி வைத்திருப்பதைப் படிப்பேன். படித்துவிட்டு, அவர்கள் இருவரும், பன்னெடுங்காலம் எல்லா வளமும் பெற்று, ஆரோக்கியமாக, சந்தோஷமாக வாழவேண்டும் என்று மனதிற்குள் வாழ்த்தி என் நடையைத் தொடருவேன். நீங்களும் இதை செய்து பாருங்கள்.
(தொடரும்)
சத்தமா - எல்லோருக்கும் கேக்கறாப்புல வாழ்த்துகிறேன் - "வாழ்க நீங்க - வலையுலகில் என்றும், எல்லா வாசகர்களும் பெற்று!!
பதிலளிநீக்கு:: வாழ்த்தும் வாய்::
காலையில் அருமையான சிந்தனையோடு என் நாள் தொடங்குகிறது.நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குதீபாவளி பற்றி இரண்டு பதிவுகளும் பார்த்தேன்.இப்போ எல்லாம் ஞாபகங்கள் மட்டும்தான் எங்கள் தீபாவளி.உங்கள் தீபாவளி சந்தோஷமாய் போச்சா !